எங்கேயோ கேட்ட குரல்


வாழ்க்கையில பல சமயங்களில் ,நடக்கும் சில நிகழ்வுகள் முன்பு எப்பயாவது நடந்தது போல இருக்கும்,ஆனால் எப்போன்னு தெரியாது!!
ஆங்கிலத்தில் இதற்கு "டேஜா வூ"(Deja Vu) என்ற ஒரு ப்ரென்சு மொழி சொல்லை பயன் படுத்துகிறார்கள்!!

இப்போ அதுக்கு என்னங்கற??னு கேக்கறீங்களா??
அது ஒன்னும் இல்லீங்க,இன்னைக்கு "டேஜா வூ" அப்படின்னு ஒரு படம் பாத்தேன். அது பத்தி ஒரு பதிவு போடலாம்னு ஒரு சின்ன ஆசை!!
அதான்!!!

அமெரிக்காவில் ந்யூ ஒர்லியன்ஸ் (New Orleans) நகரத்தில் , படை வீரர்களை ஏற்றிச்செல்லும் ஒரு பயணப்படகில் ஒரு குண்டு வெடித்து அதனால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் இழக்கிறார்கள். இதை புலனாய்வு செய்யும் FBI நிறுவனம் டக் கார்லீன்(Doug Carlin- Denzel Washington) எனப்படும் ATF (Alcohol Tobacco Firearms) அதிகாரியின் துணை கொண்டு துப்பறிய முனைகிறது.வெளி உலகத்துக்கே தெரியாத ஒரு சக்தி வாய்ந்த தொழில்நுட்பக்கருவியின் உதவியோடு இந்த சதியின் பிண்ணனியில் இருப்பது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் டக் கார்லீன் வெற்றி பெறுவாரா என்பதே கதை.

டென்ஸல் வாஷிங்டன் பற்றி உங்கள் யாருக்கும் சொல்ல வேண்டியது இல்லை என நினைக்கிறேன்.ஹாலிவுட் பட உலகில் திரை இருப்பு (screen presence) ஏகோபித்தமாய் கொட்டிக்கிடக்கும் வெற்றிப்பட நடிகர்களில் இவரும் ஒருவர்!! கதையின் ஒவ்வொரு பிம்பத்திலும் அவருக்கே உரித்தான நடிப்பு மற்றும் உடல் அசைவுகளால் படத்தை தொய்வில்லாமல் நகர்த்திச்செல்ல உதவுகிறார். கதாநாயகி பாலா பாட்டன்-க்கு (Paula Patton , பாலாவின் பாட்டன் அல்ல!!) படம் முழுக்க பெருசா வேலை இல்லை.
படம் அவங்க கதாபாத்திரத்தையே ஒட்டி நகர்ந்தாலும் கூட படம் முழுக்க உடம்புல எல்லாம் ரத்தகாயம் ரண்காயத்தோட பாவமா ஓடரதே அவங்க வேலையா இருக்கு!!

படத்துல வர வேறு சில கதாபாத்திரங்களுக்க்கும் பெருசா ஒன்னும் வேலை இல்ல!!
பெருசா வேலை இல்லாட்டாலும் அவங்க அவங்க தன்னோட பாத்திரத்த கச்சிதமா பண்ணியிருக்காங்க!




படத்தோட கேமரா வேலை வெகு அற்புதமா அமைஞ்சிருக்கு!! பாலத்துல டென்ஸல் வாஷிங்டன பான் பண்ணி ஃபோகஸ் பண்ணும்போதும் சரி,காரில் துரத்தும் காட்சி மாதிரி விறுவிறுப்பான சீனுக்கும் சரி, காமெராவ நல்லாவே உபயோகப்படுத்தியிருக்காங்க. அதுவும் படப்பிடிப்புக்கு ஏத்தா மாதிரி பின்னணி இசையும் நல்ல வேகமா அமைஞ்சிருக்கு. படத்தொகுப்பும் நல்லா இறுக்கமா பண்ணியிருக்கறதுனால படம் எப்பவுமே மெதுவா போகல!!!
கதை ,திரைக்கதை பத்தி பேச ஆரம்பிச்சா அதுக்குன்னே ஒரு பதிவு போட்டுரலாம்!!
காலப்பயணம் மாதிரி விவகாரமான சமாச்சாரம் இருந்தாலே திரைக்கதை தெளிவா குழப்பமில்லாமல் இருக்கணும்,ஆனா இந்த படத்துல அவங்களே நம்மல குழப்பிட்டு,தானும் தெளிவா குழம்பி இருக்காங்க!!


மொதல்ல அவங்க விளக்கம் தரும்போதே யாருக்கும் புரியவேகூடாதுன்னு கங்கனம் கட்டிக்கிட்டு ஏதோ டஸ்ஸு புஸ்ஸுனு உளர்ராங்க!!(அவங்க என்ன சொல்ல வராங்கன்னு எனக்கு யாரவது புரிய வெச்சா,புரிய வெச்சவங்களுக்கு . நீங்க ஒரு "மண்டை"-னு ஒரு பட்டம் வழங்கி ஒரு helmet பரிசாக வழங்கப்படும்).



அப்புறமா நிகழ்காலமும் பழங்காலமும் கலக்காம தனி தனியா இயங்கும்னு அவங்களே சொல்லிட்டு அதுக்கு மாறா திரைக்கதையை ஓட்டிகிட்டு போறாங்க!!

"Back to the future" படம் எல்லாம் பாத்திருந்தீங்கன்னா இந்த விஷயத்த எவ்வளவு நேர்த்தியா சொல்லலாம்னு உங்களுக்கே தெரியும்.

இந்த விஷயத்த மட்டும் கண்டுக்காம விட்டுட்டா,திரைகதையும் / இயக்கமும் நல்லா வேகமாதான் போகும்!!

கதைல ரொம்ப பெருசா ஒன்னும் திருப்பம் இல்லாட்டாலும் எதாவது நடந்துகிட்டே இருக்கறதுனால படம் அலுக்காம போகுது!!

மொத்தத்துல இது பார்க்க வேண்டிய படம்னும் சொல்ல மாட்டேன், பார்க்கவே முடியாத படம்னும் சொல்ல மாட்டேன் . அறிவுபூர்வமா ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம பார்த்தா கொடுத்த காசுக்கு நிம்மதியா பாத்து ரசிச்சுட்டு வரலாம்!! :)

6 comments:

கோபிநாத் said...

வணக்கம் CVR,
எனக்கும் ென்ஸல் வாஷிங்டன் படம்ன்னா உடனே பார்த்துடுவேன்.
அவரோட "Man on Fire" திரைப்படத்தை தமிழில் கூட வந்துள்ளது.

\\அறிவுபூர்வமா ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம பார்த்தா கொடுத்த காசுக்கு நிம்மதியா பாத்து ரசிச்சுட்டு வரலாம்!! :)\\

ஆகா மொத்தம் ென்ஸல் வாஷிங்டன்காவும், கேமராகாகவும் படத்தைப் பார்க்கலாம்.

CVR said...

நிச்சயமாக கோபிநாத்!!
பதிவுக்கு வருகை தந்ததற்க்கு நன்றி!! :)

Prabha said...

hi..enaku thamizh la type panna theriyala...so ...tanglish la type panren...
ungaloda review rumba perfecta irundadhu...naanum ithaiye feel panen...konjam logic elam vitutu padatha aprtha ..padathoda speed kaga vum..fiction kagavum..apram DENZEL kagavum kandippa parkalam...enbathu thaan enoda thaazhmaiyana karuthu..

CVR said...

மிகவும் சரி பிரபாவதி!! :)
பதிவுக்கு வருகை தந்த்தற்கு நன்றி!! :)

Ram said...

அருமையான விமர்சனம் சீவீஆர்.

"ற்"-ஐ தொடர்ந்து புள்ளி எழுத்து வரவே வராது. இனி வரும் பதிவுகளில் இந்த தவறை தவிர்க்கவும்!

CVR said...

மிக்க நன்றி ராம்!!
"ற்" பத்தி அனு அக்கா கூட காலையில சொன்னாங்க!
இனிமே இந்த தவறு வராம பாத்துக்கரேன்!! :)

Related Posts Widget for Blogs by LinkWithin