கலங்காதே தமிழா, தமிழுக்கு அழிவில்லை!!

முந்தைய இந்த பதிவை போல இதுவும் ஒரு மீள்பதிவு.முன்பு எப்பொழுதோ எழுதியதுஉங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.
பிடித்திருக்கிறதா இல்லையா என்று பின்னுட்டத்தில் தெரிவிக்கலாமே!! :-)

கலங்காதே தமிழா, தமிழுக்கு அழிவில்லை!!
--------------------------------------------
கலங்காதே தமிழா, தமிழுக்கு அழிவில்லை!!
நீர் பொங்கி கரை கடந்து நாடுகளை அழித்தாலும்
கட்டுமரங்களும் கப்பல்களும் இமயத்திலே சேர்ந்தாலும்
தமிழுக்கு அழிவில்லை , அதன் உணர்வுக்கு முடிவில்லை

காடு மலை யாவும்,காணாமல் போனாலும்
கண்களுக்கு எட்டாத தூரத்தில் விழுந்தாலும்
இங்கிலாந்தும் ஈக்வடாரும் இடித்து கொண்டு உடைந்தாலும்
தமிழ் இருக்கும் வளமாக, அதன் புகழ் இருக்கும் நலமாக

ஈரைந்து ஆயிரங்கள் வாழ்ந்துள்ளோம் இப்புவியில்
போர்களையும் கடலலையும் கண்டுள்ளோம் நம் விழியில்
சோதனைகள் பலவற்றை கடந்துள்ளோம் நம் காலால்
பகைவர்கள் எவர் இருந்தும் அழித்திடுவொம் நம் வாளால்

கவலை விடு, வற்றாத இளைஞர் படை நமக்குண்டு
குறை இன்றி தமிழ் மகளை வளர்த்திடுவோம் அதை கொண்டு
திக்கெட்டும் தமிழர் மொழி கதிரவன் போல் பரவட்டும்
ஒற்றுமையால் உயர்ந்திடுவோம் பிரிவினைகள் நொறுங்கட்டும்

சுற்றி உள்ள சூழ்நிலைகள் சங்கடங்கள் ஏற்படுத்தும்
எதிர் வரும் நாட்கள் பற்றி பீதி கொள்ள செய்து விடும்
சங்கடங்களை எதிர் கொள்வொம்,வெற்றி வரும் காத்திருப்போம்
எது வந்தாலும் குறை இல்லை,தமிழுக்கு என்றும் அழிவில்லை!!!

9 comments:

மு.கார்த்திகேயன் said...

இது அட்டென்டன்ஸ் CVR.. வீட்ல போய் படிச்சிட்டு மறுபடியும் வர்றேன்

CAPitalZ said...

இப்படி சொல்லிச் சொல்லித் தான் இருக்கிறோமே தவிர செய்யவேண்டியதுகளில் கோட்டை விட்டுட்டம்.


_______
CAPitalZ
அடடா

Dreamzz said...

அழகான கவித தல!

Dreamzz said...

//ஈரைந்து ஆயிரங்கள் வாழ்ந்துள்ளோம் இப்புவியில்
போர்களையும் கடலலையும் கண்டுள்ளோம் நம் விழியில்
சோதனைகள் பலவற்றை கடந்துள்ளோம் நம் காலால்
பகைவர்கள் எவர் இருந்தும் அழித்திடுவொம் நம் வாளால்//


நல்ல வரிகள்! :))
கவித சூப்பர்!

Anonymous said...

உள்ளேன் தம்பி

Anonymous said...

கவிதை வீரமாக விவேகமாக இருக்கின்றது.தமிழ் பற்று உள்ள தமிழன் இருக்கும் வரை தமிழுக்கு அழிவில்லைதான்.

CVR said...

@கார்த்தி
பொறுமையா படிச்சிட்டு சொல்லுங்க தலைவா!! :-)

@capitalz
//இப்படி சொல்லிச் சொல்லித் தான் இருக்கிறோமே தவிர செய்யவேண்டியதுகளில் கோட்டை விட்டுட்டம்.
//
இவ்வளவு அலுத்துக்காதீங்க தலைவ்ரே. எனக்கு தெரிந்து பல இளைஞர்களிடையே தமிழ் மேல் ஆர்வமும் அக்கறையும் இருக்கிறது.அதனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது

@dreamzz
//நல்ல வரிகள்! :))
கவித சூப்பர்! //
நன்றி தலைவரே

@துர்கா
//கவிதை வீரமாக விவேகமாக இருக்கின்றது.தமிழ் பற்று உள்ள தமிழன் இருக்கும் வரை தமிழுக்கு அழிவில்லைதான். //
நன்றி துர்காக்கா!! எனக்கு அந்த நம்பிக்கை தான்!! :-)

Anonymous said...

நாங்க எல்லாம் இருக்கும் பொழுது தமிழுக்கு அழிவு வந்துவிடுமா என்ன?

CVR said...

@Anonymous
நம்பிக்கையான வார்த்தைகளுக்கு நன்றி அனானி அண்ணா/அக்கா!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin