சோகமான கோவளம் கடற்கரை

நேற்று முன் தினம் தந்தையுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள் கோவளம் கடற்கரைக்கு சென்றிருந்தேன். வீட்டை விட்டு கிளம்பும்வரை கொளுத்திக்கொண்டிருந்த வெயில் கடற்கரையை நெருங்க நெருங்க மேக மூட்டமாகி விட்டது :-(
எடுத்த படங்கள் அத்தனையும் ஒளி குறைந்து சோகம் நிறைந்தது போல் இருந்ததாக ஒரு உணர்வு. இருந்தாலும் சுக துக்கம் இரண்டையும் பகிர்ந்து கொள்ள தானே நண்பர்கள் அதான் இதையும் உங்களிடம் காட்டி விடலாம் என்று எண்ணம். அதுவும் இல்லாமல் ஒளி குறைந்த படங்கள் என்றால் உடனே கலை ரசனை நிறைந்தது (artistic) என்று சொல்லிக்கொள்ளலாம், அல்லவா ஹிஹி!!



23 comments:

Deepa said...

அருமை.. spectacular shots

SathyaPriyan said...

as usual excellent.........

CVR said...

@தீபா/சத்தியப்பிரியன்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே! :-)

கப்பி | Kappi said...

அருமை!!

ACE !! said...

sohama irukka maathiri theriyalaye :) santhoshama thaan irukku :D

CVR said...

@கப்பி பய
வாங்க தல! மொத முரையா பதிவுக்கு வந்திருக்கீங்க!!
வாழ்த்துக்களுக்கு நன்றி.

@சிங்கம்லே ACE
ஒளி குறைந்த படங்கள் என்பதால் அது சும்மா ஒரு பில்ட் அப்புக்கு சொன்னது!! :-D
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)

Jazeela said...

நல்ல இரசனை. ரொம்ப அழகா இருக்கு.

G.Ragavan said...

நல்லாயிருக்கு. அந்தப் பாறைல ஒத்தைல குத்தவெச்சிருக்குறது நீங்களா?

CVR said...

@ஜெஸிலா
தங்கள் முதல் வரவு நல்வரவாகட்டும்! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :-)

@ஜிரா
அது நான் இல்லை தலைவா!! யாரோ ஒருத்தரு தனியா சோகமா உட்கார்ந்திருந்தாரு! எடுக்கனும்னு தோனிச்சு,சுட்டுட்டேன்!! :-D
என்னுடைய self portraits சிலவற்றை flickr வலைதளத்தில் பதித்துள்ளேன்!! :-)

Anonymous said...

Excellent picture as usual. I love beaches.Excellent shots.Keep posting.

Rumya

Ronaldinho said...

Super appu

சுந்தர் / Sundar said...

அருமை !

But to tell the truth .. I was expecting more( Because I was already exposed to your flickr site ) . Anyway enjoyed the photos .

CVR said...

@Rumya
வாங்க ரம்யா!! படங்கள் உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி

@சரவணா
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சரவணா

@சுந்தர்
எனக்கும் படங்களில் அவ்வளவாக திருப்தி இல்லை,இருந்தாலும் எதற்கும் இருக்கட்டுமே என்று பதித்து வைத்தேன். என் கேமராவில் ஒளி குறைந்த நேரங்களில் படம் சரியாக வராது,அன்று மேகமூட்டமாக இருந்ததால் படங்கள் சிறப்பாக அமையவில்லை. எனது மற்ற புகைப்பட பதிவுகளை நேரம் இருந்தால் படித்துவிட்டு கருத்து கூறவும்!! :-)

Anonymous said...

உங்க ஊரு கடற்கரையில் மாடு எல்லாம் இருக்குமா?இதுவரைக்கும் கடற்கரை ஓரத்தில் நான் மாட்டை பார்த்தே இல்லை தம்பி.

CVR said...

@துர்கா
எங்க ஊருல எல்லாம் மாடுகள் எங்கே வேணும்னாலும் இருக்கும்!! ரோடு,காடு,மேடு,பீச்சு!! எல்ல இடத்துலயும்!! :-)

இது அவ்வளவா சுற்றுலா தளமாக மாறாத ஊர்,அதனாலதான் இப்படி இருக்கு ஆனா பெசென்ட் நகர் மற்றூம் மெரீனா கடற்கரை எல்லாம் சுற்றுலா பயணிகள் பெரிதும் வரும் இடம்.

துளசி கோபால் said...

படங்கள் அருமையா இருக்கு.

பாவம், துர்கா. இப்படி ஒரு மாட்டுக்கே
மிரண்டால் எப்படி? :-))))

ஜி said...

enakku padame theriyala :-((((

CVR said...

@துளசி
வாங்க டீச்சர்.
ஒரு முறை நம்ம ஊருக்கு வந்தா தான் அக்காவுக்கு நம்ம ஊரு பத்தி தெரியும்!! :-D

@ஜி
உங்க கணிணியில் Flash player ஒழுங்காக பதிவாகியிருக்கிறதா என்று பாருங்க ஜி!! :-)

மு.கார்த்திகேயன் said...

நானும் இரண்டு தடவை கோவளம் கடற்கரைக்கு சென்றிருந்தேன் கரயை விட்டு சற்றுத் தள்ளியிருந்த பாறையில் அமர்ந்து நானும் எனது நண்பனும் அலையில் குளித்ததை உன் பதிவு எனக்கு ஞாபகப்படுத்திவிட்டது CVறR.. படங்கள் அருமை.. மூன்றாம் முறை போய் வந்ததை போல ஒரு உணர்வு :)

மு.கார்த்திகேயன் said...

அன்று எனது நண்பன் எனது கணினியை பயன்படுத்துயிருந்ததால் என்னால் கூகிள் டாக்கில் பேசமுடியல CVறR.. எப்போ மறுபடியும் இங்க வருவதாய் உத்தேசம்.. இரண்டு வார விடுமுறைதானே

CVR said...

@கார்த்தி
வாங்க கார்த்தி!! இன்னும் ஆணிகள் தொல்லை ஓயலையா??

//நானும் இரண்டு தடவை கோவளம் கடற்கரைக்கு சென்றிருந்தேன் கரயை விட்டு சற்றுத் தள்ளியிருந்த பாறையில் அமர்ந்து நானும் எனது நண்பனும் அலையில் குளித்ததை உன் பதிவு எனக்கு ஞாபகப்படுத்திவிட்டது CVறR.. படங்கள் அருமை.. மூன்றாம் முறை போய் வந்ததை போல ஒரு உணர்வு :) //

இது மாதிரி மலரும் நினைவுகள் ஏற்படுத்தனும்ங்கறதுதான் என் நோக்கமே!! படங்கள் உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

//எப்போ மறுபடியும் இங்க வருவதாய் உத்தேசம்.. இரண்டு வார விடுமுறைதானே //

திங்கட்கிழமை அன்னிக்கே வந்திட்டேன் தலைவா!! ஜெட்லாகினால் ஒரே களைப்பு அதான் பதிவு எதுவும் போடாமல் கப் சிப்பாக இருக்கிறேன்.! :-)

நளாயினி said...

நீங்கள் அங்கு போகும் போது உங்கள் மனநிலை சோகமாக இருந்திருக்கிறது. அல்லதுஏதோ மனசு பாரமாக இருந்திருக்கிறது. அது தான் உங்களிற்கு இந்த படங்களைப்பார்க்கிறபோது அப்படி இருந்திருக்கு. நீங்கள் சொன்னதால் நாமும் அதை பார்க்கிறபோது ஏதோ வெறுமையாக இருப்பதாக படுகிறது. அத்தனை சலனமற்று கிடக்கிறது படங்கள்.

CVR said...

@நளாயினி
என் பதிவுகள் பலவற்றை படித்து கருத்து தெரிவித்து இருக்கீங்க!!
ரொம்ப நன்றிங்க!! :-)

அன்னிக்கு மேகமூட்டமாக இருந்ததினால் படங்கள் எல்லாமே கொஞ்சம் தொய்வோடு அமைந்து விட்டது!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin