குறும்பின்றி அமையாது உலகு - 1

மாலை நேரம்!!
மெல்லிய சூரிய ஒளி கிச்சு கிச்சு மூட்ட அவனின் விளையாட்டை தாங்க முடியாமல் கடல் கன்னி சினுங்கிக்கொண்டிருந்தாள்.அவளின் சிரிப்பும் துள்ளலும் அலையாய் மோத ,ஒரு குழந்தையின் விளையாட்டை ரசிக்கும் தந்தையை போல மணற்பறப்பு புன்னகைத்துக்கொண்டு தாங்கிக்கொண்டிருந்தது.இவ்வளவு புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும் இந்த கடலுக்கு யாரிடமிருந்து வந்திருக்கும் என்று யோசித்த படி கீழ்வானத்தை பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர்.
சுந்தர்.உயரம் 5"7" ,சற்றே ஒல்லியான தேகம்,மருத்துவத்துறையில் முதுகலை படிக்கும் ஒரு சராசரி இளைஞன். அவனின் வயதில் பெரும்பாலானோருக்கு் பிடித்திருக்கும் நோயால் அவனும் பீடிக்கப்பட்டிருந்தான்.
ஆம்!! அவனும் காதல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்!!

அட இது யாரது??
என்ன வேகம்?என்ன துடிப்பு??
என்ன நளினம்??என்ன அமைதி??

இது எல்லாம் சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்தீருக்கிறீர்களா??
இல்லையா??

அப்போ நீங்க ஆனந்தியை பார்த்ததில்லை போல!! யாரது ஆனந்தியா??
இதோ வேக வேகமாக சுந்தரை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறாளே ஒரு தேவதை,அவள் தான்......
அப்போ....
ஆமாம்!! குடுத்து வெச்ச பையன்!! வேற என்ன சொல்ல??


"சாரிடா கண்ணா கொஞ்சம் லேட் ஆயிடுச்சு"
சுந்தர் பதிலளிக்கவில்லை!! அவளின் வாசத்தில் இருந்து இன்னும் அவன் மீளவில்லை என்பது தான் காரணம்.எவ்வளவு கோபம் இருந்தாலும் அவளை பார்த்தவுடன் எப்படி குழைந்து விடுகிறான் என்று அவன் யோசித்து பார்த்திருக்கிறான்.
எல்லாம் பேரமோன்ஸ் (pheromones) செய்யும் மந்திரஜாலம் தான் என்று தெரிந்துக்கொள்ள அவனுக்கு பெரிதாக நேரம் பிடிக்கவில்லை.மருத்துவ மாணவன் அல்லவா??

"அப்பா கூட பேசினியா??"என்றான், அவளின் ஒற்றை முடியை காதினிடுக்கில் சேர்த்துவிட முயன்றுக்கொண்டு.

அவனின் விரலிடம் இருந்து விலகி ,தானாகவே அந்த முடியை காதில் சுருட்டிக்கொண்டாள் ஆனந்தி.
தன் கைப்பைய்யை பக்கத்தில் இருத்திவிட்டு ஒரு விதமான குறும்புப்புன்னகையுடன் சுந்தரை பார்த்தாள்!!

அவன் சடாரென நிமிர்ந்து உட்கார்ந்தான்!! "அடிப்பாவி!! சொல்லிட்டியா???? சொல்லவே இல்லை!!!"

"ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு தான் சொல்லல" என்றாள் தோள்களை குலுக்கிக்கொண்டே!!!

"உன்ன அப்படியே......." என்று இரண்டு கைகளையும் குவித்து அவள் முகத்தின் அருகே எடுத்துச்சென்றவன் "கள்ளி..." என்று சொல்லிவிட்டு நிறுத்திக்கொண்டான்.

அவனிடம் இருந்து பொய்யாக விலகிச்சென்றவள் "இன்னைக்கு காலையில தான் சொன்னேன்!! சொல்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு " என்றாள் தனது கீச்சுகுரலில்.

"சூப்பரு!! என்ன சொன்னாரு??"

"சூப்பரா!! இனிமே தான் அய்யாவுக்கு இருக்கு பூஜை......இதுக்கு நான் எவ்வளவு பாடு பட்டேன் தெரியுமா??"

"ஆமாம்...நீதான் சொல்லாமையே பயந்துட்டு இருந்தியே !! உன்னை சொல்ல வெக்கறதுக்கு நான் எவ்வளவு பாடு பட வேண்டி இருந்தது"

"பின்ன!! அம்மா இல்லாத என்னை தனியா வளர்த்தவராச்சே!! அவரு மனசு கஷ்டப்பட்டா என்னால தாங்க முடியாது அதனால சரியான நேரம் பார்த்து தானே் சொல்ல முடியும்"

"சரி சரி!! சொன்னியே அதுவே பெரிய விஷயம் தான் !! எப்படி ஆரம்பிச்ச??"

"மொதல்ல அவரு நம்பவே இல்லை!! நான் முன்ன எல்லாம் நான் ஒருத்தரை லவ் பண்றேன்னு சொல்லிட்டு கடைசியில ஒரு குரங்கு போட்டோ காமிச்சு ஏமாத்துவேன்...ஹி ஹி....அதனால மொதல்ல கொஞ்ச நேரம் அவரு கிட்ட நான் உண்மை சொல்லுறேன்னு நம்ப வெக்கவே நேரமாயிடுச்சு"

"ஹா ஹா ஹா!! அப்புறம் என்ன?? இவனுக்கு அந்த குரங்கே பெட்டெர்னு சொன்னாரா??"

"ஹா ஹா... அப்புறம் உங்க போட்டோ காட்டினேன்,நாம எப்படி மீட் பண்ணோம்னு சொன்னேன்,உங்க படத்தை காட்டினேன்,பையன் ரொம்ப சின்ன பையனா இருக்கானேன்னு சொன்னாரு"

"அது சரி"

"என்னது சரி!! பையன் பாக்கறதுக்குதான் இப்படி,ஆனா பழகினா தெரியும் சேதின்னு உண்மையை சொல்லிட்டேன்"

"ஓஹோ!! அப்போ நாம கிஸ் பண்ணதையும் சொல்லிட்டியா???"

"அட பாவி!! நாம என்னிக்கு கிஸ் பண்ணோம்??? இந்த வார கடைசியில உன்னை பாக்கறதுக்காக எங்க வீட்டுக்கு வர சொல்லியிருக்காரு அப்போ இது மாதிரி தத்து பித்துன்னு உளறி வைக்காதீங்க..."

"எனக்கு அதெல்லாம் தெரியாது!! உங்க அப்பா கிட்ட நாம கிஸ் பண்ணோம்னு சொல்லியே தீருவேன்" என்றான் அவன்,கண்களில் குறும்புத்தனம் மின்ன.

"அடேய்.....என் செல்லம்ல.....கண்ணுல்ல!! ரொம்ப விளையாடாதேடா செல்லம்..."என்று அவளும் கொஞ்ச ஆரம்பித்து விட்டாள்.
இதற்குத்தானே அவனும் இப்படி பேச்சை தொடங்கினான். இனிமேல் அவங்களுக்குள்ள நடக்கறது எல்லாம் நமக்கு வேண்டாம் மக்கா,ஒரே கில்பான்ஸா இருக்கும்,அதனால நாம அவங்களை தனியா விடுவோம்.

உங்களுக்கே விஷயம் புரிஞ்சு போயிருக்கும்னு நினைக்கறேன்.தன்னுடைய காதலை தன் அப்பாவிடம் சொல்லிவிட்டாள் ஆனந்தி.தாய் இல்லாத பெண் என்று செல்லமாக வளர்த்தவர் அவளின் தந்தை மணிகண்டன்.அவரும் சுந்தரை பார்க்க அந்த வார இறுதிக்கு தன் வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அப்பொழுது என்ன ஆகிறது என்று பார்க்கலாமா??


***********************************************************************

தி.நகரின் அந்த குடியிருப்பு பகுதியில் வேர்க்க விருவிருக்க நடந்துக்கொண்டிருந்தான் சுந்தர்.வியர்வை இளங்காலைச்சூரியனால் ஏற்பட்டதா அல்லது அவனின் மனதினுள் ஏற்பட்டிருக்கும் பயத்தினாலா் என்று எனக்கு தெரியவில்லை.
பயம் எதற்கா??

ஆனந்தியின் அப்பாவை பார்க்க போய்க்கொண்டிருக்கிறான் அல்லவா??அதான்....
அவர்களின் வீட்டைசென்று அடைந்த வுடன்,ஒரு ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து விட்டு,லேசாக வாயிற்கதவை திறந்து உள்ளே சென்றான்.சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்தால் ஆனந்தி.
"வா வா...உனக்காக தான் வெயிட்டிங்..." என்று சொன்னவள்,அவனை பார்த்து அப்படியே சொக்கி நின்றாள்.

முதன் நாள் பள்ளிக்கூடம் செல்லும் சிறுவனை போல தலையை வழித்து வாரிக்கொண்டு,நெற்றியில் சிறிய விபூதிக்கீற்றுடன் ஒரு விதமான ஞானப்பழத்தை போல காட்சியளித்தான் சுந்தர்.தன் குழந்தைக்கு தலை வாரிவிட்டு கட்டியனைத்துக்கொள்ளும் தாயை போல அவனை ஓடிச்சென்று கட்டிக்கொள்ள வேண்டும் போல இருந்தது ஆனந்திக்கு. அதற்குள் அவளின் தந்தை மணிகண்டன் வெளியே வந்துவிட்டார்.
பார்ப்பதற்கு ஜீன்ஸ் படத்தில் ஐஷ்வர்யா ராயின் தந்தையாக வரும் எஸ்.வி.சேகர் கதாபாத்திரத்தை போல இருந்தார்.அமைதியான முகம்,வெளிரிய நிறத்தில் பைஜாமா ஜிப்பா அணிந்திருந்தார்.சற்றே புன்னகைத்தபடி இருந்தாலும் முகத்தை பார்த்து அவரின் எண்ணங்களை அவ்வளவாக கணிக்க முடியவில்லை.
சுந்தர் இரு கை சேர்த்து "வணக்கம் சார்" என்றான். அவரின் புன்னகை சற்றே விரிவடைந்தது.தலையையும் சற்றே அசைத்தார்.அது அவனின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டது போலும்,அப்படியே அவனை உள்ளே அழைப்பது போலும் இருந்தது.


--- தொடரும்

26 comments:

நாதஸ் said...

காட்சிகளின் விவரிப்பு அருமை... பல குறும்புகளை எதிர்ப்பார்கின்றேன்... :)

கப்பி | Kappi said...

சொல்ல வேண்டியதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டேன்..வேறென்ன சொல்ல :)

KARTHIK said...

சிறுகதைனு போட்டுபோட்டு தொடரும்னு முடிச்சுட்டிங்கலே.

//காட்சிகளின் விவரிப்பு அருமை... பல குறும்புகளை எதிர்ப்பார்கின்றேன்... :)//

கோபிநாத் said...

நல்ல ஆரம்பம் தல ;))

\\ஐஷ்வர்யா ராயின் தந்தையாக வரும் எஸ்.வி.சேகர் கதாபாத்திரத்தை போல இருந்தார்\\

ஐய்ய்..சிரிப்பு மாமாவா! ;))

ஷாலினி said...

//"அப்பா கூட பேசினியா??"என்றான், அவளின் ஒற்றை முடியை காதினிடுக்கில் சேர்த்துவிட முயன்றுக்கொண்டு.

அவனின் விரலிடம் இருந்து விலகி ,தானாகவே அந்த முடியை காதில் சுருட்டிக்கொண்டாள் ஆனந்தி.//

romba nalla imagine panni ezhuthirukeenga.super!!

ஷாலினி said...

//எவ்வளவு கோபம் இருந்தாலும் அவளை பார்த்தவுடன் எப்படி குழைந்து விடுகிறான் என்று அவன் யோசித்து பார்த்திருக்கிறான்.
எல்லாம் பேரமோன்ஸ் (pheromones) செய்யும் மந்திரஜாலம் தான் என்று தெரிந்துக்கொள்ள அவனுக்கு பெரிதாக நேரம் பிடிக்கவில்லை.மருத்துவ மாணவன் அல்லவா??//

hahaha.. Gud..Gud ;)

Sanjai Gandhi said...

//மெல்லிய சூரிய ஒளி கிச்சு கிச்சு மூட்ட அவனின் விளையாட்டை தாங்க முடியாமல் கடல் கன்னி சினுங்கிக்கொண்டிருந்தாள்//

அட அட.. எப்டி தல.. எப்டி... கலக்கிட்டிங்க போங்க :))

ஷாலினி said...

//முதன் நாள் பள்ளிக்கூடம் செல்லும் சிறுவனை போல தலையை வழித்து வாரிக்கொண்டு,நெற்றியில் சிறிய விபூதிக்கீற்றுடன் ஒரு விதமான ஞானப்பழத்தை போல காட்சியளித்தான் சுந்தர்.//

ABCD la vara shyam maariya :P

Dreamzz said...

//ஆமாம்!! குடுத்து வெச்ச பையன்!! வேற என்ன சொல்ல??//

இதுக்கு என்ன குடுத்து வைக்கனும்னு சொன்னீங்கனா, நாங்களும் கொடுத்து வைப்போம்...

CVR said...

@நாதஸ்
நன்றி அண்ணாச்சி!!
இன்னைக்கு ராத்திரி (EST) அடுத்த பகுதியை போட்டுரலாம்!! :-)

@கப்பி
வாப்பா!! எழுதறதுக்கு போர் அடிச்ச போது ஜி-டாக்குல வெளியில இருந்து ஆதரவு தந்ததுக்கு ரொம்ப நன்றி!! :-)

@கார்த்திக்
ரெண்டு பகுதிதான் அண்ணாச்சி!!
கொஞ்சம் பெருசா இருந்ததால ,பிரிச்சு போடலாம்னு பாத்தேன்.
அடுத்த பகுதி சீக்கிரமா போட்டுடறேன்!! :-)

@கோபிநாத்
வாங்க தல!!வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)

Dreamzz said...

//சொல்ல வேண்டியதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டேன்..வேறென்ன சொல்ல :)//

யோவ் கப்பி.. என்ன சொன்ன? எங்களுக்கும் சொல்லலாம்ல?

Dreamzz said...

//ஹா ஹா ஹா!! அப்புறம் என்ன?? இவனுக்கு அந்த குரங்கே பெட்டெர்னு சொன்னாரா??"//

தினமும் காலையில் கண்ணாடி பார்த்தால் இப்படி தான்!!! வேறென்ன சொல்ல!

k4karthik said...

//அப்போ நீங்க ஆனந்தியை பார்த்ததில்லை போல!! யாராது ஆனந்தியா??//

அம்மணி போட்டோவயும் போட்டிருந்த நல்லா இருந்த்ருக்கும்..

k4karthik said...

@dreamzz
//இதுக்கு என்ன குடுத்து வைக்கனும்னு சொன்னீங்கனா, நாங்களும் கொடுத்து வைப்போம்...//

ஹீ ஹீ ஹீ.. எப்படி இப்படி??

k4karthik said...

சீக்கிரமா குறும்பு பண்ண சொல்லுங்கப்பா....

CVR said...

@ஷாலினி
வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்!

//ABCD la vara shyam maariya :P//
இதெல்லாம் அவரவர் கற்பனையை பொருத்தது மேடம்!! ;)

@சஞ்சய்
வாங்க அண்ணாச்சி!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

@ட்ரீம்ஸ்
//
இதுக்கு என்ன குடுத்து வைக்கனும்னு சொன்னீங்கனா, நாங்களும் கொடுத்து வைப்போம்...////
அவ கிட்ட அவன் மனசை கொடுத்துட்டான்பா!!
நீயும் யாருகிட்டயாவது கொடுத்து வெச்சுக்கோ!! ;)

//யோவ் கப்பி.. என்ன சொன்ன? எங்களுக்கும் சொல்லலாம்ல?///
எதுக்கு?? அதான் என் கிட்ட சொல்லிட்டாருல்ல?? அது போதும்!! :P

//தினமும் காலையில் கண்ணாடி பார்த்தால் இப்படி தான்!!! வேறென்ன சொல்ல!///
யப்பா ராசா!! இம்புட்டு தெளிவா சொல்லுற?? சொந்த அனுபவமா?? :P

@கே4கே
அவ்வ்வ்வ்வ்வ்வ்
மொதல்ல உங்க குறும்பை சமாளிக்க முடியலையே அண்ணாச்சி!! :P
இன்னும் ஒரு பகுதி தான் ,அதனால பெருசா ஒன்னும் எதிர்ப்பார்க்காதீங்க!! :-)

Divya said...

உரையாடல்களில் குறும்பு......அசத்தல்!

கதையின் நடை, கலக்கல்ஸ்!

அழகான தொடக்கம் சிவிஆர்!

கானா பிரபா said...

//அம்மணி போட்டோவயும் போட்டிருந்த நல்லா இருந்த்ருக்கும்.. //

ரிப்பீட்டு

தல

காமராவில் இருந்து கதை சொல்ல வந்திருக்கீங்க. சூப்பர்

G.Ragavan said...

குறும்பின்றி அமையாது உலகு... ம்ம்ம்.... தலைப்பு கலக்கலா இருக்கு... எனக்கு ரெண்டு டவுட்டுங்க..

1. அவங்க முத்தம் குடுத்தாங்களா இல்லையா?

2. அந்தப் பையன் ஏன் வேர்க்க விறுவிறுக்க நடந்து போறான்? சைக்கிளோ பைக்கோ இல்லையா?

CVR said...

@திவ்யா
வாழ்த்துக்களுக்கு நன்றி திவ்யா!

@கானா பிரபா
வாங்க அண்ணாச்சி!!
கதை எழுதறது நான் காமெரா தொடுவதற்கு முன்னமே பழக ஆரம்பித்தது அண்ணாச்சி!! :-)

@ஜிரா
1.)அவங்க உங்க அளவுக்கு இன்னும் வளரல அண்ணாச்சி!! பையன் சும்மா விளையாடறான்!! :-)
2.)சும்மா தான்!! பையனுக்கு நடக்கனும்னா பிடிக்கும்.தி.நகர்க்கு தான் நிறைய பேருந்துகள் இருக்கே அதான் எதுக்கு வண்டில போய் சுற்றுசூழலை பாதிப்படைய வைக்கனும்னு பஸ்ஸுலையே போய்ட்டான்!! :-)

இலவசக்கொத்தனார் said...

சிவீஆர், எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க. ஆனா எனக்கு என்னமோ இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணி இன்னும் க்ரிஸ்பா ஆக்கி இருக்கலாம் அப்படின்னு தோணுது. இப்போ நல்லா இல்லைன்னு சொல்ல வரலை. ஆனா இன்னும் பெட்டரா செய்யலாம் அப்படின்னு நினைக்கிறேன்.

CVR said...

@கொத்தனார்
ரொம்ப நாள் கழிச்சு எழுதறேன் என்பதால் ஏற்பட்ட slack என்று நினைக்கிறேன்.இதை எழுதும்போது கூட பல சமயங்களில் நிறுத்தி நிறுத்தி என்னை நிர்பந்தப்படுத்திக்கொண்டு தொடர்ந்தேன்.
ரொம்ப நாள் ஆச்சே ,ஏதாவது ஜாலியா எழுதி பாக்கலாம்னு என்று தோன்றியதால் அப்படியே எழுத ஆரம்பித்தேன்.
ஆனா எழுதும்போது எனக்கு Flow total-a இல்லை!!
திறமை அவ்வளவு தான் !
என்ன செய்யறது!! :-)
I really appreciate your comments!
Thanks :-)

sri said...

waiting for the next post

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கும் அந்த பையன் பாவம் ஏன் வேர்க்க விறுவிறூக்க நடக்கிறானேன்னு தான் தோணிச்சு... நல்ல பதில் கொடுத்திட்டீங்க.. நல்லா இருக்கு கதை..

நிவிஷா..... said...

குறும்புகள் ரசிக்கும்படியாக இருக்குங்க:)

நட்போடு,
நிவிஷா.

எழில்பாரதி said...

ரொம்ப நாள் பிறகு ஒரு குறும்பான பதிவோடு வந்திருக்கீங்க!!!

கதை ரொம்ப அழகா குறும்பா இருக்கு.....

வாழ்த்துகள்!!!

Related Posts Widget for Blogs by LinkWithin