இதயத்தின் ஒலிகள் புரிந்துவிடில் மனிதற்கு மொழியே தேவை இல்லை

சில சமயங்களில் எதுமே் கேட்க விருப்பமில்லை.ஒலிகளை குறைத்துக்கொள்ள ஆர்வம் மேலிடுகிறது.
தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பெரும் ஊர்தியின் ஓசை,தற்போது விசைப்பலகையில் வார்த்தைளை தட்டிக்கொண்டிருக்கும் சத்தம்,மௌனமாக இருப்பது போல் பாசாங்கு செய்துக்கொண்டு மெலிதாக பிண்ணனியில் ஒலித்துக்கொண்டிருக்கும் ஹீட்டரின் சத்தம்.இவை தவிர வேறு ஒலிகள் கேட்கவில்லை.அவ்வப்போது உடல் அசைவினால் ஏற்படும் மெல்லிய சத்தங்கள் மட்டுமே இந்த வழக்கமான சத்தங்களில் இருந்து வேறு படுகிறது.
இவை தவிர முழுவதும் மனதின் சத்தங்கள் தான்.பார்த்த படித்த பேசிய விஷயங்களின் எண்ணங்கள் கனீரென்று மனதில் இருந்து ஒலிக்க ஆரம்பிக்கின்றன.
"இதயத்தின் ஒலிகள் புரிந்துவிடில் மனிதற்கு மொழியே தேவை இல்லை" என்ற பாடல்வரிகள் தான் ஞாபகம் வருகின்றன.

இதை கேட்க முடியாமல் தானே மொழிகள் வார்த்தைகள் என்ற சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டோம்.எண்ணங்களை முழுவதுமாக வெளிப்படுத்தும் வார்த்தைகள் எங்கேயாவது கண்டிருக்கிறோமா?? அப்படியே இருந்தாலும் அதை முழுமையாக உபயோகித்து நாம் நினைத்ததை அப்படியே வெளிப்படுத்தும் தேர்ச்சி யாருக்கேனும் இருக்குகிறதா???? வெறும் வார்த்தைகளில் அடைக்க எண்ணி எத்தனை எண்ணங்களை மடித்து கத்தரித்து முடமாக்கி இருக்கிறோம்.அப்படி செய்தும் அதை தெளிவாக வெளிப்படுத்த முடிக்கிறதா? நான் சொல்லும் வார்த்தை எனக்கான அர்த்தத்தோடு!! ஆனால் அவை ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம்,ஒவ்வொரு புரிதல்கள்,அவரவரின் பிரச்சினைகள்,சந்தேகங்கள்,கோபங்கள்,அனுபவங்களை பொருத்து மாறுபட்டுக்கொண்டு.குழப்பங்கள்,சாடல்கள்,மறுதலிப்புகள்,சண்டைகள்!! மேலும் வார்த்தைகள்,மேலும் மேலும் வார்த்தைகள்,மேலும் குழப்பங்கள்,மேலும் வார்த்தைகள்!!சொல்லாடலின் விளையாட்டுகளில் கேலிப்பொருளாகிவிடும் கருத்துப்பறிமாற்றங்கள். வார்த்தைகளின் பலவீனத்தால் தோற்கடிக்கப்படும் எண்ணங்கள்.

வார்த்தைகள் இல்லையென்றால் உலகில் குழப்பங்கள் இல்லை.கண்களை பார்த்து மனதில் இருப்பதை அறிய முடிந்தால் உலகில் 85% செயல்பாடுகளுக்கு தேவையே இருக்காது என்று தோன்றுகிறது.குழப்பங்களும் குழப்பங்களை களைவதற்குமான தேடல்களும் தான் பலரின் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு சென்றுக்கொண்டிருக்கிறது.குழப்பங்கள் தீர வார்த்தைகளும்,வார்த்தைகளால் குழப்பங்களும்,அதை தீர்ப்பதற்கான தேடல்களும். வெளிப்பாடுகளின் அர்த்தம் புரியாமல் பறந்து விரிந்து செல்லும் தேடல்கள்களோடு.புரிதல் என்பதையே புரிந்துக்கொள்ளாமல், வார்த்தைகளால் இதயத்தின் ஓசையை கேட்கவிடாமல் இரைச்சல் எழுப்பிக்கொண்டிருக்கிறோம். சற்றே அமைதி காத்து உங்களை சுற்றி உள்ள ஒலிகளை கவனித்தது உண்டா??
மின்னஞ்சல்,அரட்டை,பேச்சு,பாட்டு,இசை ஏதுமில்லாமல் உங்களை சுற்றி என்னென்ன ஒலிகள் உள்ளன என்று பட்டியல் போட்டிருக்கிறீர்களா???அவ்வாறு செய்யும் போது ஒரு இரண்டு வயது குழந்தையை போல உங்கள் மனது உங்களிடம் பேசுவதை கேட்டிருக்கிறீர்களா?? வார்த்தைகளின் அலங்காரங்கள் இல்லாமல்,அதன் குழப்பங்கள் இல்லாமல் உங்கள் மனது உங்களிடம் பேசும்.அவரவர் மனதோடு பேச யாருக்கும் வார்த்தைகள் தேவையில்லை. நமது மனதை புரிந்துக்கொள்ளாமல்,அதன் கதறல்களை கேட்காமல் மற்றவர்களின் வெளிப்பாடுகளை பதிவுகளை வார்த்தைகளால் புரிந்துக்கொள்ள முயல்வதில் அர்த்தமே இல்லை.

வார்த்தை இல்லாத புரிதல் பழக பழக,உங்களையே நீங்கள் புரிந்துக்கொள்ளலாம்.உங்கள் பயங்கள்,சந்தேகங்கள்,பாசாங்குகள்,ஆசைகள் ஆகியவற்றை முழுமையாக உணர்ந்துக்கொள்ளலாம்.போகப்போக பிறரிடம் அவருக்குத்தெரியாமலே அவரின் மனதோடு பேச துவங்கிவிடலாம்.உங்கள் மனதோடு பேசி நண்பராகி விட்டதால்,பிறரின் மனதுடன் பேசுவது சுலபமாகிவிடும்.வார்த்தைகள் மூலம் புரிந்தும் புரியாமலும் ஒருவர் வெளிப்படுத்தும் போது,சிரித்துக்கொண்டே அவரின் மனதோடு அவருக்கே தெரியாமல் நீங்கள் பேசத்துவங்கலாம்.வார்த்தைகளற்ற சம்பாஷனைகளை நாம் பழக பழக குழப்பங்களும் குறையும்.
கருத்து பறிமாற்றமற்று வெறும் பேச்சில் மட்டுமே குழுமியிருக்கும் நம் வாழ்வில் புதுமையான புரிதல்களும் பூபூக்கலாம்.
உங்கள் மனதோடு வார்த்தைகளற்று உரையாட தயாரா??



பி.கு:என்ன எழுதவேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல் மனதில் தோன்றியதை எல்லாம் அப்படியே எழுதியதின் விளைவுதான் இந்தப்பதிவு!
இதற்கு அர்த்தம் புரிந்து,உங்களின் யோசனைக்கு தீனியாக இருந்தால் சந்தோஷம்!!
இல்லனா பையன் ஏதோ ஒளரிட்டு போறான்னு ஃப்ரீயா விடுங்க!! :-)

27 comments:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

வார்த்தைகள் இல்லாமல் மனிதனும் மற்ற மிருகங்களை போல் உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தான் பிறகு வார்த்தைகள் தொன்றியபின் அந்த கலையை மனிதன் மிகவே இழந்துவிட்டான்!

வடுவூர் குமார் said...

ஃபிரியாகவெல்லாம் விட முடியாது. :-)

Dreamzz said...

:) நல்லா தான் யோசிக்கிறீங்க :)

உண்மை தான்... உள்ளங்கையை போலே உள்ளமும் இருந்து விட்டால் :)

என்ன செய்ய!!! இருப்பதை வைத்து அட்ஜெஸ்ட் கரோ ஜீ!

Dreamzz said...

and btw, அருமையான பாடல்!

வடுவூர் குமார் said...

வாழ்க்கை முறையே நுட்பமானது தான் அதில் ஒலிக்கு பெரும் பங்கு இருக்கே!!
புரியலை இல்லை!!
எனக்கும் தான். :-)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

நமக்கு என்று ஒரு நாளில் நம்மில் எத்தனைபேர் ஒதுக்குகிறோம்!! அவ்வாறு ஒதுக்கும்போது மனதின் வார்த்தைகளற்ற பேச்சை கவனிக்கலாம் இல்லையா CVR :)

நாடோடி இலக்கியன் said...

// வெறும் வார்த்தைகளில் அடைக்க எண்ணி எத்தனை எண்ணங்களை மடித்து கத்தரித்து முடமாக்கி இருக்கிறோம்.அப்படி செய்தும் அதை தெளிவாக வெளிப்படுத்த முடிக்கிறதா? நான் சொல்லும் வார்த்தை எனக்கான அர்த்தத்தோடு!! ஆனால் அவை ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம்,ஒவ்வொரு புரிதல்கள், அவரவரின் பிரச்சினைகள், சந்தேகங்கள்,கோபங்கள்,அனுபவங்களை பொருத்து மாறுபட்டுக்கொண்டு. குழப்பங்கள்,சாடல்கள்,மறுதளிப்புகள்,
சண்டைகள்!! //

அருமையா சொல்லியிருக்கீங்க.

கானா பிரபா said...

நல்லா சொல்லியிருக்கீங்க, என்ன சொல்றதுன்னே தெரியல ;)

வார்த்தை வந்த பின்பு தானே மொழிப்போர் வந்தது.

CVR said...

@சதீஷ்
///வார்த்தைகள் இல்லாமல் மனிதனும் மற்ற மிருகங்களை போல் உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தான் பிறகு வார்த்தைகள் தொன்றியபின் அந்த கலையை மனிதன் மிகவே இழந்துவிட்டான்!////
மிகச்சரி!
தொடர்பு கொள்ள மொழிகள் என்ற மிகச்சிறந்த சாதனத்தை கண்டுபிடித்துவிட்டோம் என்கிற இற்மாப்பு நம்மை நம் மனங்களுடன் உரயாடும் கலையை இழக்கச்செய்து விட்டது!! :-)

//நமக்கு என்று ஒரு நாளில் நம்மில் எத்தனைபேர் ஒதுக்குகிறோம்!! அவ்வாறு ஒதுக்கும்போது மனதின் வார்த்தைகளற்ற பேச்சை கவனிக்கலாம் இல்லையா CVR :)////
என்னைப்போல தனிமை விரும்பிகளுக்கு இதைப்போன்ற சந்தர்ப்பங்கள் அவ்வப்போது அமைவதுண்டு!! :-)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி! :-)

@வடுவூர் குமார்
///ஃபிரியாகவெல்லாம் விட முடியாது. :-)////
இதுக்காக அபராதம் எல்லாம் கட்டணுமா பின்ன??? :P

//வாழ்க்கை முறையே நுட்பமானது தான் அதில் ஒலிக்கு பெரும் பங்கு இருக்கே!!////
சரிதான்!!
ஒலியே வேண்டாம்னு சொல்லல,ஆனா ஒலியை மட்டுமே நம்பி நம் மற்ற உணர்வுகளை கண்டுக்கொள்ளாமல் போக வேண்டாமே! :-)
இது உங்களுக்கு புரியுதா?? :-))))

@ட்ரீம்ஸ்
//வாழ்க்கை முறையே நுட்பமானது தான் அதில் ஒலிக்கு பெரும் பங்கு இருக்கே!!////
சரிதான்!!
ஆனா இருக்கறதையே உணர்வது இல்லைன்னு தானே இந்த பதிவே!! ;)

@நாடோடி இலக்கியன்
//அருமையா சொல்லியிருக்கீங்க.///
நன்றி நாடோடி இலக்கியன்!! :-)

@கானா பிரபா!!
//வார்த்தை வந்த பின்பு தானே மொழிப்போர் வந்தது.////
அது சரி தான்!! ஆனா மனிதன் போர் செய்ய இதெல்லாம் வெறும் சாக்கு தான் என்பது என் எண்ணம் ,ஆனா தனி தலைப்பாக போய்விடும்!!
:-)

எழில்பாரதி said...

நல்ல பதிவு....

//வார்த்தைகள் இல்லையென்றால் உலகில் குழப்பங்கள் இல்லை//

நிச்சயமான உண்மை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட என்ன ஒரு ஞானம்ப்பா.. இந்த வயசிலேயே...

என்ன ஒன்னு நீங்க மனசுல தோணியதெல்லாம் அப்படியே வார்த்தையால போட்டு நிரப்பிட்டீங்களேன்னு பார்த்தேன் ... வார்த்தையில்லாம உரையாடியதை பதிவாக்கமுடியாதேன்னு தான் இப்படி செய்திருப்பீங்க சரி சரி ஓகேய் ஒகேய்.. :))

ilavanji said...

இதெல்லாம் ஒரே ஒரு விசயத்துக்குதான் அறிகுறி!

நேரம் கூடிருச்சு போல! வீட்டுல பேச்சை ஆரம்பிக்கப்பு :)

Aruna said...

//நான் சொல்லும் வார்த்தை எனக்கான அர்த்தத்தோடு!! ஆனால் அவை ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம்,ஒவ்வொரு புரிதல்கள்,அவரவரின் பிரச்சினைகள்,சந்தேகங்கள்,கோபங்கள்,அனுபவங்களை பொருத்து மாறுபட்டுக்கொண்டு.குழப்பங்கள்,சாடல்கள்,மறுதலிப்புகள்,சண்டைகள்!! மேலும் வார்த்தைகள்,மேலும் மேலும் வார்த்தைகள்,மேலும் குழப்பங்கள்,மேலும் வார்த்தைகள்!!//

இது ஒன்று மட்டும் எல்லோருக்கும் புரிந்து விட்டால் சண்டை ஏது?CVR?சச்சரவு ஏது மனதில் தோன்றியதை எல்லாம் அப்படியே எழுதியதின் விளைவுதான் இந்தப்பதிவு!...அப்பிடித் தெரியவில்லை....ரூம் போட்டு யோசித்து எழுதினா மாதிரி இருக்கு...CVR

அன்புடன் அருணா

G.Ragavan said...

நல்லா யோசிச்சிருக்க. சுருக்கமாச் சொன்னா சென்னை நாயை பாரீஸ்ல விட்டா பிரெஞ்சு நாயோட பேசுறதுக்கு அது எந்த மொழியையும் கத்துக்க வேண்டியதில்லை. லொள்லொள்ளே எல்லா நாய்களுக்கும் புரியும். அதே லொள்லொள்ள வெச்சுக்கிட்டு அந்தச் சென்னை நாய் நெதர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்த்திரேலியா, எகிப்து, கிரேக்கம்னு சுத்தீட்டு வந்துரும். நமக்குத்தான் பெரும்பாடு.

கவியரசர் ரொம்ப அழகாச் சொல்வாரு....

பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா?

Divya said...

\\"இதயத்தின் ஒலிகள் புரிந்துவிடில் மனிதற்கு மொழியே தேவை இல்லை"\\

:))

ரொம்ப நல்லாயிருக்கு பதிவு!

Deepa said...

///உங்கள் மனது உங்களிடம் பேசுவதை கேட்டிருக்கிறீர்களா?? ///
Million dollar question
//வார்த்தைகளற்ற சம்பாஷனைகளை நாம் பழக பழக குழப்பங்களும் குறையும்.///

அதனால்தானோ குழந்தகளிடம் பழகும்பொது... உண்மையாகவே... மனம்-விட்டு சிரிக்க முடியுது

ஷாலினி said...

//"இதயத்தின் ஒலிகள் புரிந்துவிடில் மனிதற்கு மொழியே தேவை இல்லை" //

manithar oruvarukoruvar pesa mozhi thevai aana oruvarukoruvar purinthu kolla mozhi kandipa thevai illa :)

i once had 2 friends who were deaf and dumb by birth, chance se illa , avangaloda na pazhagina naatkal were the best days in my life :) so much peaceful and lovely days!!

ஷாலினி said...

//எண்ணங்களை முழுவதுமாக வெளிப்படுத்தும் வார்த்தைகள் எங்கேயாவது கண்டிருக்கிறோமா?? //

ithey pola than sila vuragugalukkum peru enna nu theriyaama thavikorom.

ஷாலினி said...

//புரிதல் என்பதையே புரிந்துக்கொள்ளாமல், வார்த்தைகளால் இதயத்தின் ஓசையை கேட்கவிடாமல் இரைச்சல் எழுப்பிக்கொண்டிருக்கிறோம். //

100% unmai!!

ஷாலினி said...

//வார்த்தை இல்லாத புரிதல் பழக பழக,உங்களையே நீங்கள் புரிந்துக்கொள்ளலாம்.உங்கள் பயங்கள்,சந்தேகங்கள்,பாசாங்குகள்,ஆசைகள் ஆகியவற்றை முழுமையாக உணர்ந்துக்கொள்ளலாம்.போகப்போக பிறரிடம் அவருக்குத்தெரியாமலே அவரின் மனதோடு பேச துவங்கிவிடலாம்.உங்கள் மனதோடு பேசி நண்பராகி விட்டதால்,பிறரின் மனதுடன் பேசுவது சுலபமாகிவிடும்.//

thinanum sirithu neram amaithiyaaga kan moodi meditation pannaley pothum....ithellam saathiyam agaum. Self-Realization,is a must for a steady,confusionless, happy life :)

ஷாலினி said...

lovely post CVR, Good one!

Sanjai Gandhi said...

அட அட.. அண்ணாச்சி.. எதோ ஒரு தேர்ந்த அறிஞரின் சொற்பொழிவை கேட்டது போன்ற ஒரு அழகான உணர்வு... அருமையான பதிவு... :)

Swamy Srinivasan aka Kittu Mama said...

kavi nayathoodu semaya solli irukkeenga..superb post...

vaarthai vandha piragu dhaan ulagil unarchigalin velippaadugal theriya vandhana...

oru kuzandhayin mazalai kooda iniyadhu..adhil oru raagam irukkiradhu..manidha udal iyanga inru vaarthai thevai padugiradhu..

appadi paesa mudiyaamalum, kangal theriyaamalum irukkum makkalukku kadavul yaen ippadi thandanai kodukka vaendum theriyavillai

ஜி said...

:)))

sri said...

Edha padichittu ungalukku varthaye ellamal comment podanammnu try panren mudiyalai :)

Supera erukku thalaiva, ungalukku ulla enna enna innum podhanji erukkonnu yosikka thonudhu.

Anonymous said...

motthathil arumaiyana pathivu cvr

nalla sinthanai ppa unakku

ovvoru line aa point out pannee koora thonalai - so mothathil..
nalla kaiaadal.

J J Reegan said...

// உங்கள் மனதோடு பேசி நண்பராகி விட்டதால்,பிறரின் மனதுடன் பேசுவது சுலபமாகிவிடும் //

நிச்சயமான உண்மை...

Related Posts Widget for Blogs by LinkWithin