ப்ளாக்கர் பதிவில் படத்தை பெரியதாக தெரிய வைப்பது எப்படி???

இது என்னை மாதிரி புகைப்பட பதிவர்களுக்கு(for photobloggers)

உடனே எதுக்கு பக்கத்தை மூட போறீங்க??

நீங்களும் கொஞ்சம் படிச்சு வைங்க.வருங்காலத்துல எப்போவாவது உதவியா இருக்கும்.. :)



முதல்ல கீழே இருக்கற ரெண்டு படத்தையும் பாத்துக்கோங்க...











நம்ம குரோம்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கீழே தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயிலின் படம்.



இதுல பாத்தீங்கன்னா மொத படம் கொஞ்சம் சின்னதா இருக்கும்,இரண்டாவது படம் பெரியதாக இருக்கும்.எனக்கு பதிவில் படம் போட்டாலே பெரியதாக இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் பார்க்க வசதியாகவும் புகைப்படத்தை முழுமையாக ரசிக்கவும் முடியும். நமது தமிழில் புகைப்படக்கலை போட்டிக்காக பலரின் பதிவிற்கு் சென்று பார்க்கும்போதெல்லாம் இதை உணர்ந்திருக்கிறேன்



ப்ளிக்கரில்(flickr) இருந்து நேரடியாக பதிவில் காண்பித்தால் img tag-இல் width,height ஆகியவற்றை கொடுத்து நமது இஷ்டப்படியான அளவிற்கு காண்பிக்கலாம்.ஆனால் வளைகுடா நாடுகளில் ப்ளிக்கர் தளம் தடை செய்யப்பட்டுள்ளது.இதனால் பதிவில் அங்கிருந்து படத்தை காண்பிக்காமல் ப்ளாக்கர் மூலமாக நேரடியாக பதிவில் வலையேற்றுவது தான் நாம் அனைவரின் வழக்கமாக இருந்து வருகிறது.



ஆனால் இப்படி செய்தாலே முதல் படத்தை போல சிறியதாக பதிவில் தோன்றுகிறதே!!

என்ன பண்ணலாம்???



நாம் வழக்கமாக படத்தை ப்ளாக்கரில் வலையேற்ற என்ன செய்வோம்??



பதிவை edit செய்யும் இடத்தில் கீழ்கண்ட பொத்தானை அழுத்துவோம்.







இதை அழுத்தியவுடன் கீழ்கண்ட பாப் அப் ஜன்னல் திறக்கும்.





இதில் உங்கள் படத்தை தேர்ந்தெடுத்து விட்டு "Upload image"என்ற எழுத்துக்களை அழுத்திவிடுவோம் அல்லவா??



இப்பொழுது வலையேற்றப்பட்ட படம் நமது பதிவில் எப்படி தெரிகிறது என்று பார்ப்போம்.நமது பிளாக்கர் எடிட்டரில் இரண்டு tabகள் இருக்கும். ஒன்று "Edit HTML",இன்னொன்று "Compose".





நாம் படத்தை வலையேற்றிய பின் compose tab-இல் படம் தெரியும் ஆனால் Edit HTML சென்று பார்த்தால் கீழ்கண்டவாறு நிரல்கற்றை(Code Piece) உருவாகி இருக்கும்.







மேலே பார்த்தீர்கள் என்றால் இந்த நிரலியில் இரு முறை JPG இணைப்புகள் இருப்பதை பார்க்கலாம்.



என்னங்க?? இது வரைக்கும் தெளிவாத்தானே இருக்கு??

நல்லது!! இனிமே நம்ம படம் பெருசா தெரியறதுக்கு என்ன பண்ணனும்னு பாப்போம்.



நாம ப்ளாக்கருல படத்தை வலையேற்றினாலும் அது உங்களின் கூகிள் பிகாசா ஆல்பத்தில் தான் சேமிக்கப்படுகிறது.அதாவது உங்கள் பிக்காசா ஆல்பத்திற்கு நீங்கள் சென்று பார்த்தீர்கள் என்றால் உங்களின் வலைப்பூவின் பேரோடு ஒரு ஆல்பம் இருப்பது தெரியும்.அதில் நீங்கள் உங்கள் வலைப்பூவில் வலையேற்றிய படங்கள் அனைத்தும் இருப்பதை பார்க்கலாம்(உங்கள் பிக்காசா ஆல்பத்திற்கு செல்ல உங்கள் ஜிமெயில் மின் அஞ்சல் பக்கத்தில்,மேற்பகுதியில் உள்ள "Photos" என்ற இணைப்பை சொடுக்கினாலே போதும்).



பிக்காசா ஆல்பத்திற்கு போயாச்சா?? அதில் உங்கள் வலைப்பூவின் ஆல்பத்தை தேடிக்கண்டுபிடித்தாயிற்றா?? நல்லது! இப்பொழுது நீங்கள் சமீபத்தில் உங்கள் இடுகையில் வலையேற்றிய படத்தை தேடிப்பிடித்து திறந்துக்கொள்ளுங்கள்.



1.)இப்பொழுது நீங்கள் இந்த படம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் இணைப்பை கண்டுபிடிக்க வேண்டும்.

நீங்கள் நெருப்புநரி உலாவியை (Firefox) பயன்படுத்துபவராக இருந்தால் படத்தின் மீது ரைட் க்ளிக் செய்து "Copy image location" என்ற ஆப்ஷனை சொடுக்கினால் போதும்.படத்தின் இணைப்பு உங்கள் clip board-இல் சேர்ந்துவிடும்.

மற்ற உலாவிகளில்(IE etc etc) படத்தின் மீது ரைட் க்ளிக் செய்து Properties எனும் ஆப்ஷனை சொடுக்குங்கள். இப்பொழுது திறக்கும் ஜன்னலில் Address(URL) எனும் சொல்லிற்கு பக்கத்தில் இருக்கும் உங்கள் படத்தின் உரலை காபி செய்து கொள்ளுங்கள்.



2.)இப்பொழுது நாம் முன்பு பார்த்தோமே நிரலி,அதில் இரண்டு இடங்களில் JPG இணைப்பு உள்ளது என்று சொன்னேன் அல்லவா. இதில் இரண்டாவதாக இருக்கும் இணைப்புக்கு பதிலாக நாம் காபி செய்து வைத்திருக்கும் இணைப்பை ஒட்டி விடுங்கள்!

அவ்வளவுதான்!!

இப்பொழுது compose tab-இல் சென்று பார்த்தாலே படம் பெரியதாக தெரியும்! அதே போல பதிவை publish செய்த பிறகும் உங்கள் வலைப்பூவில் பெரியதாக தெரியும்.



இது தற்போது கொஞ்சம் முட்டி மோதி நான் தெரிந்துக்கொண்ட workaround.ஆர்வமிருப்பவர்கள் நிரலியில் உள்ள img tag-இல் width மற்றும் height-ஐ மாற்றி உங்கள் படங்களின் அளவு எந்த அளவு மாறுபடுகிறது என்று விளையாடிப்பார்க்கலாம்.

இதை விட சுலபமான வழி இருந்தால் பின்னூட்டத்தில் அறிவிக்கவும்!!



எப்படியோ!! இனிமே நம்ம தமிழ்ப்பதிவர்கள் பக்கங்கள் சின்னதா படங்கள் இருக்கக்கூடாது.நல்லா தெளிவா பெருசா பளிச்சுனு இருக்கனும்...

என்ன நான் சொல்றது...

சரியா?? ;)



****************************************************************************

பிற்சேர்க்கை
****************************************************************************

இந்த பதிவிற்கு வந்த வீராவின் பின்னூட்டம்

-------------------------------



எனக்குத் தெரிந்த எளிய வழி:



ப்ளாக்கரில் படத்தை பதிவேற்றும் போதே படம் எந்த அளவில் (சிறிது அல்லது பெரிது) வர வேண்டும் என்று கேட்கும். நாம் அதில் தேர்வு செய்வடஹிப் பொறுத்து, ப்ளாக்கர் நமது படத்தை அளவு மாற்றம் செய்து நமது பதிவில் இணைக்கும். அது மட்டுமில்லாது, இணைத்த படத்தின் மீது சுட்டும் போது, முழு அளவிலான படத்திற்கு செல்லுமாறு இணைப்பையும் கொடுக்கும்.



நான், இந்த இணைப்பில் உள்ள படத்தின் முகவரியை பிரதியெடுத்து, என் பதிவில் ஒட்டி விடுவேன். உதாரணமாக,



a href="http://www.blogger.com/Original%20Image%20Url" img src="http://www.blogger.com/Re-sized%20image%20URL" /a

(முழுமையான உரலுக்கு பின்னூட்டத்தை பார்க்கவும்,இது பதிவில் தெரிய வேண்டுமே என்பதற்காக கத்தரிக்கப்பட்ட நிரல் தூண்டு)

இப்படி இருக்கும், ப்ளாக்கரின் நிரல். இதில "original image url" -ஐ பிரதியெடுத்து "Re-sized image URL" -க்குப் பதிலாக ஒட்டி விட்டால் வேலை முடிந்தது! :-)



ஆனால், உங்களின் படமானது, வலைபதிவின் அகலத்தை விட பெரியதாக இருந்தால், அதை மாற்ற எளிய வழி, கீழ்க்கண்ட நிரலைப் பார்க்கவும்:



img src=Image URL style="width: 100%;"



இதில் "style="width:100%;" என்பதை மட்டும் இணைத்து விட்டால், உங்கள் வலைப்பதிவின் நீள அகலத்துக்கு ஏற்ப படமானது தன்னை மாற்றிக் கொள்ளும்!

************************************************************************************



இதில் இவர் குறிப்பிட்டிருக்கும் style="width:100%;" எனும் tag-ஐ தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்.இதை வைத்து நான் சேர்த்த படம் எப்படி இருக்கிறது என்பதை பாருங்கள்.



இப்பொழுது நான் என்ன செய்தேன் என்பதை சொல்லிவிடுகிறேன்.அதற்கு முன் நான் பயன்படுத்தப்போகும் இணைப்புகளுக்கு நாமகரணம் செய்து விடலாம்..அப்பொழுதுதான் குழுப்பம் இல்லாமல் இருக்கும்.

முன்பு நான் குறிப்பிட்ட நிரல் துண்டில் இரண்டு JPG இணைப்புகள் இருந்தன அல்லவா,அதில் முதல் இணைப்பை Link A என்றும்,இரண்டாவது இணைப்பை Link B என்றும் அழைப்போம்.

பிக்காசா ஆல்பத்தில் இருந்து நான் ஒரு இணைப்பை காபி செய்யச்சொன்னேன் அல்லவா,அதை Link C என்று அழைப்போம்.



இப்பொழுது நான் வீரா கொடுத்த நிரல் துண்டில் Original URL எனும் இடத்தில் Link A-வையும்,Image URL எனும் இடத்தில் Link C-ஐயும் பொருத்தி விட்டேன்.கூடவே இதில் style="width: 100%;" tag-ஐயும் பொருத்தி விட்டேன்.



Link C-இல் இருக்கும் படம் முழுமையான படம் கிடையாது.அது பக்கம் வேகமாக தெரிய வேண்டும் என்பதற்காக சிறியதாக்கப்பட்ட படம்.அதனால் அதை Original URL இடத்தில் போட வில்லை.அப்படி போட்டால் படத்தை சொடுக்கினால் பெரியதாக தெரியாது.படம் சிறியதாக இருப்பதால்,style="width: 100%;"-இல் போட்டதற்கே பக்கத்தில் படத்தின் தரம் குறைந்து காணப்படுகிறது :(



Link A-இல் இருக்கும் படம் பெரிய அளவிலான படம் என்றாலும் அதை Image URL இடத்தில் போட்டால் பதிவில் தெரியாது(ஏன் என்று தெரியவில்லை).அதற்காகத்தான் தேடிப்பிடித்து பிக்காசா ஆல்பத்திலிருந்து Link C-ஐ காபி செய்துக்கொண்டு வருகிறோம்.



HTML-இல் வேலை செய்ய ஆர்வமும் பொறுமையும் இருக்கும் பட்சத்தில் வீரா சொன்ன நிரல் தூண்டை வெட்டி ஒட்டி படம் சேர்க்கலாம். இல்லையென்றால் ப்ளாக்கர் தரும் நிரலியிலேயே Link C-ஐ மட்டும் Image URL-ஆக போட்டு விட்டு பின் அதில் இருக்கும் style tag-இற்கு பதிலாக style="width: 100%;" போட்டுவிட்டால் படம் பக்கம் முழுதும் விரிந்து பெரியதாக தெரியும்.



என்னங்க?? புரிஞ்சதா???

இன்னைக்கு என் மனசுல ஒரு பெரிய குறையை அனைவருமாக சேர்ந்து களைந்துவிட்டோம் என்ற சந்தோஷமும் திருப்தியும் இருக்கு

பின்னூட்டமளித்து ஆதரவு தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி :-)



PS:After all this, i believe that tagging with pictures in flickr is the best option in terms of picture quality and ease!

So sad that its blocked in some Gulf countries! :-(

32 comments:

வெட்டிப்பயல் said...

Informative post...

Super thala...

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

மிக்க நன்றி திரு CVR அவர்களே !
தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது .
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

தலைப்பைப் பார்த்து ஆர்வத்தோட ஓடோடி வந்தேன். ஏன்னா நான் இதுக்காக பலவழிகளில முயற்சி பண்ணியிருக்கிறன். ஆர்வத்துக்கு தீனி நல்லாத்தான் கிடைச்சிருக்கு.

மிக்க மிக்க நன்றி. இது ஒரு குறைபாடாகவே இருந்தது. நீங்கள்தான் இப்போது தீர்த்து விட்டீர்களே.

Good Workaround.

மதுவதனன் மௌ.

பி.கு: இப்படியான பதிவுகளை திரட்டிகளில் குறித்த கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் புதுப்பித்துப் போடுவது அனைவருக்கும் உதவும். புதியவர்களுக்கும் உதவும்.

கோவை விஜய் said...

புகைப்படத்தை பெரிதாய் பதிவதர்கான தங்களின் கண்டுபிடிப்பை எல்லா ஒளிஓவியர்களும் புரியும் வண்ணம் தந்தற்கு நன்றி.

தி.விஜய்
please visit my blog
http://pugaippezhai.blogspot.com

வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 27 மறுமொழிகள் | விஜய்

மங்களூர் சிவா said...

/
வளைகுடா நாடுகளில் ப்ளிக்கர் தளம் தடை செய்யப்பட்டுள்ளது.
/

நான் photobucket.com எனும் தளத்தில் சேமித்து அதை ப்ளாகரில் பயன்படுத்துகிறேன். இந்த தளம் வளைகுடாவில் தடைசெய்யப்பட்டுள்ளதா???

Veera said...

எனக்குத் தெரிந்த எளிய வழி:

ப்ளாக்கரில் படத்தை பதிவேற்றும் போதே படம் எந்த அளவில் (சிறிது அல்லது பெரிது) வர வேண்டும் என்று கேட்கும். நாம் அதில் தேர்வு செய்வடஹிப் பொறுத்து, ப்ளாக்கர் நமது படத்தை அளவு மாற்றம் செய்து நமது பதிவில் இணைக்கும். அது மட்டுமில்லாது, இணைத்த படத்தின் மீது சுட்டும் போது, முழு அளவிலான படத்திற்கு செல்லுமாறு இணைப்பையும் கொடுக்கும்.

நான், இந்த இணைப்பில் உள்ள படத்தின் முகவரியை பிரதியெடுத்து, என் பதிவில் ஒட்டி விடுவேன். உதாரணமாக,

<a href="Original Image Url"><img src="Re-sized image URL" /></a>

இப்படி இருக்கும், ப்ளாக்கரின் நிரல். இதில "original image url" -ஐ பிரதியெடுத்து "Re-sized image URL" -க்குப் பதிலாக ஒட்டி விட்டால் வேலை முடிந்தது! :-)

ஆனால், உங்களின் படமானது, வலைபதிவின் அகலத்தை விட பெரியதாக இருந்தால், அதை மாற்ற எளிய வழி, கீழ்க்கண்ட நிரலைப் பார்க்கவும்:

<img src="image-url" style="width:100%;" />

இதில் "style="width:100%;" என்பதை மட்டும் இணைத்து விட்டால், உங்கள் வலைப்பதிவின் நீள அகலத்துக்கு ஏற்ப படமானது தன்னை மாற்றிக் கொள்ளும்!

Prakash G.R. said...

Or just use draft.blogger.com instead of blogger.com That is kind-of-beta version of blogger. The image insertion support is superb there :-)

You won't have any issues in accessing your existing blogs/settings from the that one.

கானா பிரபா said...

உண்மையில் 2 வருஷமா என் மனசுக்குள் போட்டு புதைச்சு வச்சிருந்த சோகம் இது, கலக்கல் படங்களை என் பதிவுக்கு போட்டா எலி எச்சம் மாதிரிக் காட்டுதேன்னு கோபம் கோபமா வரும்.

இந்தப் பதிவு அதுக்கு விடை தேடிக் கொடுத்திருக்கு. ஆனா வழிமுறையை செஞ்சு பார்க்கும் பொறுமையை ஆண்டவன் கொடுக்க வேணும் ;-)

வீரசுந்தரும் இன்னுமொரு பயனுள்ள குறிப்பைக் கொடுத்திருக்கிறார்.

இதுக்குத் தான் சொல்றது உங்களை மாதிரிப் பெரியவங்க சகவாசம் வேணும்னு ;-)

நாதஸ் said...

Danksu Thala for the info.

இராவணன் said...

nice post da.thanks for sharing

CVR said...

@வீரா
விரிவான உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க்க நன்றி.
அதை பார்த்து இன்னும் கொஞ்சம் நோண்டியதில் கிடைத்தது இந்த பதிவில் போய் பார்க்கலாம்!
http://cvrintamil.blogspot.com/2008/07/blog-post_14.html
என்ன செய்தேன் என்று நாளை சொல்கிறேன்!!
இந்த பதிவு போட்டது நல்லதா போச்சு! நிறைய பேருக்கு இந்த பிரச்சினை இருப்பதும்,அதற்கான தீர்வுகளை அனைவரும் சொல்வதை கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.
கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி..
பொறுமையா நாளைக்கு மறுமொழி போடுகிறேன்.
இப்போ தூக்கம் வருது!! :-)

பிரேம்ஜி said...

மிக்க நன்றி CVR.

Ayyanar Viswanath said...

cvr
/உண்மையில் 2 வருஷமா என் மனசுக்குள் போட்டு புதைச்சு வச்சிருந்த சோகம் இது, கலக்கல் படங்களை என் பதிவுக்கு போட்டா எலி எச்சம் மாதிரிக் காட்டுதேன்னு கோபம் கோபமா வரும்./

repeateeee :))

thx cvr

வேளராசி said...

இப்படியான பதிவுகளை திரட்டிகளில் குறித்த கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் புதுப்பித்துப் போடுவது அனைவருக்கும் உதவும். மிக்க நன்றி திரு CVR அவர்களே !

P.V.Sri Rangan said...

வணக்கம் சி.வீ.ஆர்.,

தங்கள் படத்தை எனது கணினித்திரைக்கு-டெஸ்க்டொப் படமாக்கி வைத்திருக்கிறேன்.காரணம்:தாயகத்தின் ஏக்கம்.எனது குழந்தைகளுக்கு இதுதான் எங்கள் தேசம் என்றேன்.அவர்களுக்கு எனது தேசம்(ஈழம்) தெரியாது.அழகான தென்னை மரங்களும்.அந்த இரயிலும்,தண்டவாளமும் எனது மனதுக்கு இதமாக இருக்கிறது.சென்னைக்கு ஒருக்கால் வந்து இவைகளையும் நேரில் பார்க்க ஆசை.ஆனால்,நிதி நிலைமை கை கொடுப்பதாகவில்லை.

ஸ்ரீரங்கன்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வீரசுந்தர் வழியை இலகுவாக்கியிருக்கிறார். இறுதியா இலகுவான தீர்வு கிடைச்சிருக்கு.

நன்றி.

மதுவதனன் மௌ.

CVR said...

மக்களே!!
பதிவில் சில விஷயங்களை இப்பொழுது சேர்த்திருக்கிறேன்.
எல்லோரும் மறக்காம பிற்சேர்க்கையை ஒரு சுத்து படிச்சிட்டு கருத்து சொல்லுங்க!! :-)

CVR said...

@வெட்டி
நன்றி தல!
பல பேரு நல்ல உபயோகமான கருத்துக்களை சொல்லியிருக்காங்க பாருங்க! :-)

@பாஸ்கர்
வாங்க பாஸ்கர்! வாழ்த்துக்களுக்கு நன்றி

@மதுசூதனன்
பிற்சேர்க்கையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் மதுசூதனன்.Link C-ஐ style=width:100%-ஓடு போட்டால் படங்கள் அவ்வளவாக தெரியவில்லை!
After all this i believe that tagging with pictures in flickr is the best option in terms of picture quality and ease!
So sad that its blocked in some Gulf countries! :-(

@விஜய்
உங்கள் பதிவைப்பார்த்தேன்.பக் படங்கள் அற்புதமான காட்சியமைப்பு மற்றும் பான் செய்யப்பட படங்கள்!
வாழ்த்துக்கள்!! :-)

@மங்களூர் சிவா
எனக்கு அது தெரியாது அண்ணாச்சி!! நான் அந்த தளத்தை பயன் படுத்துவதில்லை! எனக்கு தெரிந்து Photobucket தடை செய்யப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன்.எதற்கும் வளைகுடா பதிவர் யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள் :)

CVR said...

@வீரா
உங்க பின்னூட்டம்தான் இந்த பதிவுக்கு ஒரு திருப்புமுனை!! :P
நல்ல தகவல்கள் பல சொல்லி நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்க வெச்சீங்க...
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!! :-)

@பிரகாஷ்
நீங்க சொன்னதுக்கு அப்புறமா டிராப்ட் ப்ளாக்கருக்கு போய் பார்த்தேன். இனிமே அதையே உபயோகிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.. :)

@கானா பிரபா
வாங்க தல!! பாத்தீங்களா?? மக்கள் எப்படி பிரச்சினை புட்டு புட்டு வெச்சி கலக்கிட்டாங்கன்னு!! உங்களை மாதிரி பெரியவங்க சகவாசம் இருக்கறது எங்களுக்கும் நல்லதுதான்.. ;)

@நாதஸ்
Check out the updates too :-)

@Laks
Thanks boss! Dont miss the updates!

@பிரேம்ஜி
வாங்க தல!! இனிமே பதிவுல படம் காட்டி கலக்கிருவீங்கள்ள?? ;)

CVR said...

@அய்யனார்
பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அய்யனார்.. :)

@வேளரசி
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வேளரசி! :-)

@ப.வி.ஸ்ரீரங்கன்
படம் தங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.நம்ம ஊரு படங்கள் வேண்டுமென்றால் எனது ப்ளிக்கர் தளத்தில் நிறைய கிடைக்கும்! நேரமிருக்கும்போது போய் பாருங்கள்!! :-)
உங்கள் நிதி நிலைமை சீரடைந்து வாழ்வில் வளம் பெருக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :-)

இவன் said...

பயனுள்ள தகவல் தல

Unknown said...

நன்றி CVR.
எனக்கு மிகப் பிரயோசனமான பதிவு இது. அடிக்கடி சொல்வீர்கள். இப்பொழுதுதான் தெளிவாகப் புரிந்துகொண்டேன் நண்பரே :)

ராமலக்ஷ்மி said...

மிக எளிதாக புரியும் வகையில் விளக்கியிருக்கிறீர்கள் CVR! என் இம்மாத பிட் பதிவில் முதல் படத்தை நீங்கள் சொன்னதுபோல வெற்றி கரமாக மாற்ற முடிந்தது. ஆனால் அடுத்த படங்கள்...எங்கே தவறு செய்கிறேன் என்று தெரியவில்லை..தெளிவற்று வந்ததால் பழைய சைசிலேயே விட்டு விட்டேன்.

//PS:After all this, i believe that tagging with pictures in flickr is the best option in terms of picture quality and ease!//

html பற்றி அதிகம் தெரியாத என் போன்றோருக்கு flickr பெட்டராக இருக்குமோ?

நந்து f/o நிலா said...

நல்ல போஸ்ட் CVR. இதே போல முழுபக்கத்துக்கும் படம் தெரிவது போன்ற டெம்ப்ளேட் தேடி தேடி அலுத்துப்போனேன்.

தற்செயலாக பதிவிற்கான html கோடில் S400 என்பதை S800 என்று மாற்ற படம் முழுபக்கத்துக்கு மாறியது.
உதாரணம்
http://nilakutti.blogspot.com/

ஆனால் வெகு சிலருக்குத்தான் முழு பக்க படம் தேவையாக இருக்கும்.

நாதஸ் said...

@ நந்து f/o நிலா -
//தற்செயலாக பதிவிற்கான html கோடில் S400 என்பதை S800 என்று மாற்ற படம் முழுபக்கத்துக்கு மாறியது.//

நன்றி நந்து. இந்த முறை மிகவும் எளிதாக இருக்கு. இப்போ என்னோட வலைப்பதிவை மாற்றி அமைத்து இருக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

நந்து f/o நிலா said...
//தற்செயலாக பதிவிற்கான html கோடில் S400 என்பதை S800 என்று மாற்ற படம் முழுபக்கத்துக்கு மாறியது.//

தற்செயலாக தாங்கள் கண்டு பிடித்த இவ்வழி ரொம்ப ரொம்ப சுலபமாக இருக்கிறது நந்து. பாராட்டுகளும் நன்றிகளும்.

//ஆனால் வெகு சிலருக்குத்தான் முழு பக்க படம் தேவையாக இருக்கும்.//

உண்மைதான். பெரும்பாலும் புகைப் படங்களை முன் நிறுத்தும் பதிவுகளுக்கு இம்முறை வெகு உபயோகமாக இருக்கும். உங்கள் பிட் பதிவு எல்லாம் பார்த்தேன் பெரிதாக்கப் பட்ட படங்களுடன். வெகு அருமை.

இதற்காக தான் செய்த முயற்சியை பதிவிட்டு, பலரின் அனுபவத்தையும் வெளிக் கொணர்ந்து நல்ல தீர்வையும் நந்துவின் மூலம் வர வழைத்த CVR-கும் நன்றி!

CVR said...

@இவன்
நன்றி இவன்! :-)

@ரிஷான்
வாங்க ரிஷான்! ஆமாம் ! ரொம்ப நாளாக நாம் அனைவருக்கும் இருக்கும் பிரச்சினைதானே!! இப்பொழுது பலரின் தகவல்களால் ஒன்றும்மேயில்லாமல் ஆகிவிட்டது! :-)

@ராமலக்ஷ்மி
பதிவில் குறிப்பிட்டது போல Link C-இல் உள்ள படம் அளவு குறைக்கப்ப்பட்ட படம் என்பதால் அதை நம் பதிவில் 100% காட்டும் போது படம் தெளிவில்லாமல் போய் விடுகிறது.
ப்ளிக்கரில் இருந்து டாக் செய்வதாக இருந்தால் புதிதாக ஒரு நிரலை வெட்டி ஒட்டி அதில் பாற்றங்கள் செய்ய வேண்டும்,ப்ளாக்கரிலேயே வலையேற்றினால் இருக்கற நிரலில் மாற்றம் செய்தால் போதுமானது.இரண்டும் சுலபத்தில் பழகிக்கொள்ளக்கூடியதுதான்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

@நந்து
சூப்பரு தல!!
தகவல்களுக்கு மிக்க நன்றி!! :-D

துளசி கோபால் said...

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.

என்னுடைய பதிவில் ஒரு சில படங்கள் நான் ஒன்னும் செய்யாமலேயே பெரிதாக்கிப் பார்க்கும் வகையில் (படத்தின் மேல் கர்ஸர் வச்சால்) 'கை ' காமிக்குது.

பல சமயங்களில் கை வருவதில்லை.

ஒருவேளை நம் படங்களையெல்லாம் பிக்காஸோவில் சேமிச்சு அப்புறம் அதை அங்கிருந்தோ அல்லது நம்முடைய படம் சேமிப்பில் கொண்டுவந்தோ வச்சு வலை ஏற்றினால் பிரச்சனை தீர்ந்ததோன்னு ஒரு எண்ணம்.

சதங்கா (Sathanga) said...

சி.வி.ஆர்.

பயனுள்ள பதிவு. இன்னும் முயற்சிக்கவில்லை. பட் எளிமையா தான் இருக்குமென நம்புகிறேன் :)) இதுபோல செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகள் பல.

Anonymous said...

அருமையான தகவல்
நன்றி
சுபாஷ்

Tech Shankar said...

சூப்பர்ங்கண்ணா.....

அன்புடன் அருணா said...

அட இதைப் படிக்காம விட்டுட்டேனே இவ்வ்ளோ நாளும்.....ரொம்ப உபயோகமான பதிவு.
அன்புடன் அருணா

Related Posts Widget for Blogs by LinkWithin