ஒச்சப்பனோடு ஒரு நாள்

ஒச்சப்பன் (Oochappan)எனப்படும் ஹெங்க்.
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர்.
இவரு இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்தியாவிற்கு வேலை நிமித்தமாக வந்திருந்தாரு.
வந்தவரு தமிழ்நாட்டை கண்டவுடன் காதல்.
அதுல இருந்து வருசா வருஷம் இந்தியாவுக்கு வந்து ஒரு 3-4 நாலு மாசம் தங்கியிருந்து உருண்டு பொறண்டு படம் பிடிக்கறாரு.
இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று இவர் படம் பிடித்திருந்தாலும்,தமிழ்நாடு குறிப்பா மதுரைல தான் இவரு நிறைய படம் எடுத்திருக்காரு.
இவரு அளவுக்கு அழகா தமிழ்நாட்டை வேறு எவரும் படம் புடிச்சு நான் பார்த்ததில்லை.இவரின் ஜல்லிக்கட்டு  படங்களை பார்த்து வாயை பொளந்தவன் கொஞ்சம் நேரத்திற்கு மூடவேயில்லை.
தெருப்புகைப்படக்கலை எனப்படும் street photography-ல அண்ணாத்த லெஃப்ட் டர்ன்,ரைட் டர்ன்,யூ டர்ன் எல்லாம் போட்டு வித்தை காட்டுவாரு.
அவரை பாக்கனும்,அவரு கூட படம் எடுக்கனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை!! அந்த ஆசை சமீபத்தில் நிறைவேறியது.
அவர் சமீபத்தில் மாமல்லபுரம் வந்திருந்த போது அவரை சென்று சந்தித்தேன்.அப்படியே பக்கத்திலிருக்கும் திருக்கழுகுன்றம் சென்று அங்கும் சில படம் படங்கள் பிடித்தோம்.அப்பொழுது எடுத்த படங்கள் சில...

ஒச்சப்பன் எனபது இவரு மொத மொதல்ல இங்கிட்டு பாத்த ரிக்‌ஷா டிரைவர் ஒருத்தரோட பெயர்.அந்தப்பெயரையே இவரு புனைப்பெயரா வெச்சுக்கிட்டாரு

இவருதான் ஊச்சப்பன்


திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் குளத்துடன்


என்னோட தம்பி

இது போல ஒரு அக்கா இருந்தா நல்லாத்தான் இருக்கும்ல??..

கட்டத்துக்குள்ள கோபுரம்


இன்ஸ்டண்ட் காபி மாதிரி நொடிப்பொழுதில் ஒரு வெளிர் புன்னகை

எப்படி சின்ன பசங்களால மட்டும் டக்கு டக்குன்னு உண்மையான புன்னகை பூக்க முடியுதோ தெரியல..

குளத்தடி குளியல்


கோபுர தரிசனம்


என்ன சொல்லுதாரு இவரு??

ஏதாச்சும் மக்களை படம் எடுத்தா,எடுத்தவுடனே அதை அவரு யாரை எடுத்தாரோ அவிங்க கிட்ட காட்டுவாரு.அப்படி காட்டும் போது என்ன சொல்லுறாருன்னு புரியாம முழிக்கும் ஒரு இளைஞர் :)

4 comments:

ஆயில்யன் said...

குளத்தடி குளியல் செம சூப்பரா இருக்கு !

//இவரு அளவுக்கு அழகா தமிழ்நாட்டை வேறு எவரும் படம் புடிச்சு நான் பார்த்ததில்லை///

பிளிக்கர்ல உருண்டு புரண்ட போது சில படங்கள் பார்த்திருக்கேனோன்னு ஒரு சந்தேகம் வந்துச்சு :)))

சூப்பரா தமிழ்நாட்டு வண்ணங்களை கேமரா கவிதையாய் சொல்லியிருக்காரு...!

இராம்/Raam said...

ஹீரோ,

அவரு பேரு ஒச்சப்பன்.... ஊச்சப்பன் இல்லை... :)))

மாத்திருங்க..

படமெல்லாம் பட்டாசா இருக்கு.. :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இப்படியும் ஒருவரா? அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Anonymous said...

படங்களை நான் பார்த்து முடிப்பதற்கே அரை நாள் ஆயிற்று.

எத்தனை நாளாக மதுரையை சுற்றினாரோ தெரியவில்லை.

மிக நல்ல அறிமுகத்திற்கு நன்றி! அறிமுகங்கள் இன்னும் தொடரட்டும்.

Related Posts Widget for Blogs by LinkWithin