சறுக்கிய செருக்கு (எதுகை மோனைக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல!! :P)

நடக்க தெரியாமல் கடைசியாக தரையில் விழுந்தது எப்பொழுது என்று ஞாபகம் இருக்கிறதா??
கால் தடுக்கி விழுந்த அனுபவத்தை சொல்ல வில்லை ஐயா,நடக்கவே தெரியாமல் விழுந்த அனுபவித்ததை சொல்கிறேன்!!
குழந்தை பிராயத்தில் எப்பவாவது இருக்கும் என்று சொல்கிறீர்களா??
நேற்று வரை நானும் அதைத்தான் சொல்லி இருப்பேன்.ஆனால் இன்று முதல் என் பதில் டிசெம்பெர் 10 2006 என்றுதான் இருக்கும்!!
ஏன் என்கிறீர்களா??
இன்றுதானே பனி சறுக்கல் செய்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இரண்டு மணி நேரம் பற்பல கோணங்கலில் விழுந்து கொண்டு இருந்தேன்!! :)

பாழாய் போன ஆசை யாரை விட்டது!!அமைதியாய் ஆர்க்குடுடன்(orkut) அடங்கி போகும் என் வாரஇறுதி இந்த தடவை எனக்கு வித்தியாசமாக கழிந்தது. இங்கு மிசிகன் பல்கலைகழகத்தில் உள்ள ஒரு பனிசறுக்கு மைதானத்துக்கு இன்று என் நண்பர்களுடன் சென்றேன்.
வெறும் ஏழு டாலர்கள் தான் கட்டணம் என்று வேறு கூறி என்னை உசுப்பேத்தி விட்டனர் நண்பர்கள். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டே தான் என் வாழ்க்கை ரணகளம் ஆகிக்கொண்டு இருக்கிறது என்பது உலகறிந்த விஷயம் ஆயிற்றே.

இப்படியாக வீட்டில் தூங்கிகொண்டிருக்க வேண்டிய நான் நகரின் மைய்யப்பகுதி ஆன Downtown-ர்க்கு இழுத்து வரப்பட்டேன்!! :)


கட்டணம் செலுத்தியதும் என் கால் அளவுக்கு ஏற்றார்போல் இரண்டு கால்சறுக்கு காலணிகள் கொடுத்தார்கள். அதை அணிந்து கொண்டு எழுந்து நின்றால், பாதங்கள் ஒரு பக்கமாய் நிக்கவில்லை. அறுபத்து எட்டு கிலோகிராம் கொண்ட ஒரு ஐந்து அடி ஏழு அங்குலம் உயரம் உள்ள் இளைஞன் 2 மில்லிமீட்டர் அகலத்தில் எப்படி சமநிலையை தக்க வைக்க முடியும்?? கால்கள் இங்கும் அங்கும் ஒருக்களித்துக்கொண்டு இருந்தன!!!
எப்படியோ கதகளியும் பரதநாட்டியமும் ஆடிக்கொண்டே பனிச்சறுக்கு அரங்குக்கு பயணப்பட்டேன். அங்கு சிறியவர்களும் பெரியவர்களுமாய் ஒரு ஐம்பது பேர் சறுக்கிக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் லாவகத்தை ரசித்துக்கொண்டே அரங்கிற்க்குள் காலை வைத்தேன். காலை வைத்ததுதான் தாமதம் , இரண்டு கால்களும் இங்கிலாந்துக்கு ஒன்று ஈக்க்வடாருக்கு ஒன்று என்று வெவ்வேறு திசையில் சறுக்கிகொண்டு சென்றது!!
சிறிது நேரத்தில் பழகிக்கொண்டு விடும் என்று பார்த்தால் நிமிடத்துக்கு நிமிடம் மோசமாகிக்கொண்டுதான் போனது!!!
போதாத குறைக்கு இரண்டு வயது குழந்தை முதல் அனைவரும் ஜெட் வேகத்தில் எனைசுற்றி சீறிப்பாய்ந்து கொண்டு இருந்தனர்!!! அதுவும் குட்ட பாவாடை போட்ட ஒரு எட்டு வயது குட்டி தேவதை ஒன்று "அட!! உனக்கு பனிச்சறுக்கு கூட பண்ண தெரியாதா" என்பது போல் ஏளனமாக பார்த்துச்சென்றது!!.


இந்த நேரத்தில் என் நண்பர் ஈஸ்வர் அவர்களின் உதவியை நான் மறக்க கூடாது!!
மனுஷன்,அவரும் எப்படி எப்படியோ ஊக்குவிப்பும் ஆலோசனையும் கொடுத்து பார்த்தாரு!!
நமக்குதான் நிக்க கூட முடியலையே எங்க இருந்து சறுக்கரது!! :(


திடீர்னு ஜோடியா கைகோர்த்துகிட்டு போரவற்களை காட்டி,"நீ மட்டும் ஒழுங்கா சறுக்கினினா உன் காதலிக்கு இது மாதிரி சறுக்க சொல்லி கொடுக்கலாம்" என்று கூட சொல்லிப்பார்த்தார்!
"அதுக்கு முதலில் ஒரு காதலி வேண்டுமே,அதற்க்கு எதாவது வழி காட்டுங்க!!",என்று நான் சொன்னதும்! "ஏதேது!!விட்டா என் தொழிலையே மாத்திடுவயே"என்று சொல்லிவிட்டு அகன்றுவிட்டார்!! :)
போகிற போக்கைப்பார்த்தால் ஏதாவது காதலியை பிடித்து,அவள் எனக்கு கற்றுக்கொடுத்தால்தான் உண்டு போல இருக்கிறது என்று நொந்துக்கொண்டு,பக்கச்சுவற்றை பய்யப்பய்ய பிடித்துக்கொண்டு அங்குலம் அங்குலமாக நகர ஆரம்பித்தேன். இதுல ஒருத்தன் பின் பக்கமா சறுக்கிகிட்டு வேறு படம் போட்டுகிட்டு இருந்தான்.நடுவில இரண்டு முன்று பேர் நின்று துக்கம் விசாரிச்சுட்டு கண்டமேனிக்கு உபதேசம் கொடுத்துட்டு போயிட்டு இருந்தாங்க!!
இப்படியாக நான் தட்டு தடுமாறிகிட்டு இருக்கும் போது திடீர்னு ஏதோ சங்கு ஊதற சத்தம் கேட்டுது!


சுட்டும் முட்டும் திரும்பி பாத்தா ஒரு ஈ காக்கைய காணோம்!! என்னடா ஆச்சுன்னு திரு திருன்னு முழிசிட்டு நிந்துட்டு இருந்த போது!! திடீர்னு பின்னாடி கதவ திறந்துகிட்டு பெருசா ஒரு வண்டி உள்ள வந்தது!! நானும் ஈஸ்வர் உதவியோடு விழுந்து எழுந்துகிட்டு அரங்கை விட்டு வெளியே வந்தேன்.

நான் பண்ற சர்க்கஸ பாத்து வெளில காத்துகிட்டு நின்ன சின்னது பெருசு எல்லாத்துக்கும் ஒரே சிரிப்புதான்!! :)

தப்பிச்சோம் பொழச்சோம்னு ஒரு வழியா அரங்கத்தை விட்டு வெளில வந்துட்டு ஒரு ஓரமா போய் உட்கார்ந்தேன்!!





கொஞ்ச நேரம் கழித்து அந்த அரங்கை சுத்தம் செய்ய வந்த வண்டி தன் வேலையை முடித்துக்கொண்டு போச்சு!!

நம்ம நெலம இப்படி ஆகிப்போச்சேனு நான் நொந்துக்கிட்டு இருக்கிற சமயம் திடீர்னு கல கலனு பொண்ணுங்க சத்தம்!!என்னடா செய்தினு நிமிர்ந்து பாத்தா ஒரு பத்து இருபது பொன்னுங்க



என்னதுன்னு பாத்தா "Figure skating" எனப்படும் ஒலிம்பிக் விளையாட்டுக்காக பயிற்ச்சிக்கு பண்றாங்களாம்!
ஒவ்வொருத்திக்கும் உடம்பு சும்மா வில்லா வளையுது!!
நாம நிக்கவே ததிகினத்தோம் போட்டுகிட்டு இருக்கும்போது இவளுக கை காலு எல்லாம் தய்யா தக்கானு ஆட்டிகிட்டு ஆயிரம் மைல் வேகத்துல பறக்கராலுக!!
அதுவும் சில பேரு ஒத்த காலுல நின்னுகிட்டு பம்பரமா சுத்த வேர ஆரம்பிச்சிட்டாங்க!!


நான் இவங்களோட இந்த சாகசத்த பார்த்து திறந்த வாய் மூடல!!இத பாத்துட்டு,நான் பொன்னுங்கள பார்த்துட்டு ஜொள்ளு விடறதா நெனைச்சிகிட்டு நண்பர்கள் எல்லாம் என்னை கிளப்பிகொண்டு வந்து விட்டார்கள்!!
எது என்னவோ,என் வாழ்க்கையில் ,நடைபழகிய நாளில் இருந்து நிக்க கூட முடியாம நான் அவதிப்பட்ட இரண்டு மணி நேரம் இதுதான்!! :)

24 comments:

Unknown said...

Ha Ha Ha!!
Mr Ramanujam, Join the club.
http://shenbug.livejournal.com/13061.html

CVR said...

ஹ ஹா!!:)
உங்கள் அனுபவங்களை படித்தேன்!!

முதல் தடவை முயற்ச்சி செய்த அனைவருமே இது போலத்தான் அவதிபட்டிருப்பார்கள் போல இருக்கிறது!! :)

Karthikeyan Rajasekaran said...

சீவிஆர் அவர்களே...

தாங்களாவது எழுந்து நடக்க முயற்ச்சித்தீர்கள்..
என்னை போன்ற உதாவாகறைகள்....
நின்ற இடத்தில் இருந்து வேடிக்கை பார்த்து சீட்டி அடிக்கத்தான் லாயக்கு.. :)
நல்ல அனுபவம்....

CVR said...

இருந்தாலும் உங்களுக்கு தன்னடக்கம் ரொம்பவே அதிகம் கார்த்தி!! :)

Ezhil said...

Superb write-up, I enjoyed reading it

CVR said...

நன்றி எழில்ராஜ்!! :)

Anonymous said...

ஒவ்வொரு புது அனுபவமும் இப்படித்தான் இருக்கும். மீண்டும் முயர்ச்சி செய்க.

// பொன்னுங்கள பார்த்துட்டு ஜொள்ளு விடறதா நெனைச்சிகிட்டு //---இல்லேனா நாம விடரதில்லையா!!! இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் இல்ல

--krithika

CVR said...

உண்மையாகவே அவர்களின் பனிசறுக்கும் திறமையை பார்த்துதான் வாய் பிளந்து நின்றுருந்தேன் கிருத்திகா!! :)
வருகை தந்தமைக்கும் , வாழ்த்தூக்களுக்கும் மிக்க நன்றி!! :)

கணேசன் said...

சார்லஸ் டிக்கென்ஸின் பிக்விக் பேப்பர்ஸ் படியுங்கள். சருக்குதலை பற்றி அபாரமா அதிலே எழுதியிருக்கு.

கட்டபொம்மன்

CVR said...

சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிச்சயமாக படிக்கிறேன் கட்டபொம்மன். பதிவுக்கு வருகை தந்ததற்க்கு மிக்க நன்றி :)

Anonymous said...

man u r very very interestions..........

CVR said...

"interestions"??
"interesting"-னு அடிக்குபோது தப்பா அடிச்சிட்டீங்களா ?? :)

Shruthi said...

படிக்க சுவாரஸ்யமா இருந்தது

CVR said...

படித்ததற்க்கும் ,என்னங்களை பகிர்ந்த்தற்க்கும் மிக்க நன்றி ஷ்ருதி!! :)

Anonymous said...

CVR...too good man..nice blog

CVR said...

நன்றி சீனிவாசன்!! :)

Divya said...

வாவ், நகைச்சுவையுணர்களுடன் அழகான எழுத்து நடை,

ரசித்தேன், சிரித்தேன் !!


\"தப்பிச்சோம் பொழச்சோம்னு ஒரு வழியா அரங்கத்தை விட்டு வெளில வந்துட்டு ஒரு ஓரமா போய் உட்கார்ந்தேன்!!\"

நல்ல வேளை அரங்கத்தை விட்டு வெளியில் வந்ததும் உடனே வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை, இல்லீனா........'figure skating ' miss பண்ணியிருப்பீங்கள்..........!!!

CVR said...

உண்மைதான் திவ்யா!!:)
படித்ததற்கும் கருத்துகளை பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி :)

Anonymous said...

I laughed so hard after reading this post. Keep posting.

Revathy

CVR said...

நன்றி ரேவதி!! :-)

அபி அப்பா said...

சிவிஆர்! அதே அதே அதே எங்களுக்கு கிடைத்த அதே அனுபவம், சேம் பிளட்! எனக்கு இப்பத்தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு!:-))

G.Ragavan said...

பென்சில்வேனியா தெரியுமா? பென்சில் வேணும்யான்னு கேக்கலை. அமெரிக்கால ஒரு ஊரு பென்சில்வேனியா.

அந்தூர்ல பனிச்சறுக்கு. இப்படி உள்ளரங்க்கு இல்ல. மலை மேல. அடேங்கப்பா....எல்லாரும் கீழ இருந்து மேல போய் சர்ரு புர்ருன்னு வர்ராங்கப்பா.

நான் கீழ ரெண்டு பெரிய படைக் குச்சிகளைக் கால்ல மாட்டிகிட்டு புதையல் புதையலா எடுத்தேன். கூட வந்தவங்கள்ளாம் சொல்லிக்கொடுத்ததப் புரிஞ்சிக்கிட்டு சறுக்கப் போயிட்டாங்க. சொல்லிக் குடுக்க வந்தவரு எனக்குச் சொல்லித் தரவே முடியாதுன்னு கோவிச்சுக்கிட்டு போய்ட்டாரு. அவமானம். எவமானமா? எனக்கு அவமானம்யா...

அப்புறம் நானே எனக்குத் தெரிஞ்ச மாதிரி செஞ்சு பாத்தேன். அடடா...இப்ப ஓரளவு வருதே. அப்புறம் ஓரளவு பழகீருச்சு. அத்தோட நிறுத்தீருக்கலாம். விஞ்ச்சு ஏறி மேல போயி சறுக்குத் தொடங்கி..அடடா....நல்லா வருதேன்னு நெனைக்கும் போதே....வேகம் கூடி..பயந்து போயிட்டேன். பயந்ததும் தடுமாறீட்டேன். சரசரன்னு உருண்டு விழுந்துட்டேன். அப்புறம் எழுந்து எறங்கினேன். :)

CVR said...

@அபி அப்பா
உங்க அனுபவங்களையும் படிச்சேன் தல!!
மொதல்ல போகும் போது எல்லோருக்குமே இப்படு தான் ஆகும் போல!! :-)

@ஜிரா
அதுக்கும் நான் போயிருக்கேன் அண்ணா!!
அது ஒரு தனி அனுபவம்!! :-)

SurveySan said...

//"அட!! உனக்கு பனிச்சறுக்கு கூட பண்ண தெரியாதா"//

same pinch :)

Related Posts Widget for Blogs by LinkWithin