சாப்ட்வேர் தொழிலும்,குடும்ப வாழ்வும்

“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்று ஒரு பழமொழி உண்டு. இது இப்போதைய நடைமுறையில் கணிணி வல்லுனர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏன் என்று கேட்கிறீர்களா??
கணிணி வல்லுனர்களின் குழந்தைகள்தான் தாய் தந்தை கேட்பாரின்றி தனியே வளரும் நிலைமை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது!!
புரியவில்லையா???

இந்த சாப்ட்வேர் தொழில் செய்பவர்களில் பல நிறை குறைகளை பற்றி நாம் நிறைய கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சமீப காலமாக என்னை பெரிதும் பாதித்த விஷயம் என்னவென்றால்,இந்த தொழிலால் நம் மக்களின் குடும்ப வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் பற்றியது.

கணிணி வல்லுனராக பணியாற்றினால்,ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி,வெளிநாடு சென்று பணி புரியும் சந்தர்ப்பம் அவ்வப்போது வரும்.ஆன்சைட் எனப்படும் இந்த சந்தர்ப்பம் கிடைக்க வேலைக்கு சேர்ந்த புதிதில் அனைவரும் மிக ஆவலாக இருப்பார்கள்.காரணம் இந்தியாவை தவிர வேறு ஒரு நாட்டில் வாழ்ந்து வேலை செய்யும் ஒரு வித்தியாசமான அனுபவம் பெறவும் மற்றும் ஆன்சைட்டில் கிடைக்கும் அதிக்கப்படியான சம்பளமும் தான். இந்த ஆவல் புரிந்துக்கொள்ள கூடியது தான். அதுவும் வெளிநாடு சென்று வருவது குறிப்பாக ஆண்களுக்கு கல்யாண சந்தையில் மதிப்பை உயர்த்தும் நிகழ்வாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. மாப்பிள்ளை கண்டிப்பாக ஒரு முறையாவது வெளிநாடு சென்றிருக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே மணமகன் தேவை விளம்பரங்களில் சில சமயங்களில் பார்த்திருக்கிறேன்.

கல்யாணம் ஆவதற்கு முன் பெரிதாக வரவேற்கபடும் இந்த ஆன்சைட், திருமணம் ஆனதும் பல பேருக்கு தொல்லையாக அமைந்து விடுகிறது. அதுவும் கணிணி வல்லுனர்களில் பலர் இந்த சாப்ட்வேர் துறையிலே மாப்பிள்ளை/பெண் தேர்ந்தெடுப்பதால் இந்த தொல்லை இரட்டிப்பாகிறது. நான் இருக்கும் இடத்தில் என் மேலாளர் ஒருத்தரை தவிர கல்யாணமான அத்தனை பேரும் பிரம்மச்சாரிகளாக தான் வாழ்ந்து வருகிறார்கள். மேலாளரின் மனைவி வேலைக்கு போகாமல் இல்லத்தரசியாக இருக்கிறார்,மற்ற அனைவரின் மனைவிமார்களும் இந்தியாவில் வேலைக்கு செல்கின்றனர்.
அதுவும் இருவரும் கணிணி துறையில் உள்ளவர்கள் என்றால் இருவரும் வெவ்வேறு வெளிநாடுகளில் இருக்கும் நிலையும் பல சமயங்களில் உருவாகிறது.
திருமணம் ஆகி பல மாதங்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமலே வாழும் சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு தெரிந்த ஒரு தம்பதியினர் திருமணம் ஆகி ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.கணவன் மலேசியாவில் ஆன்சைட்டில்,மனைவி சென்னையில் ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை
என்ன செய்வது?? இருவரும் வேறு வேறு கம்பெனி வேறு!!

ஒரே கம்பெனியில் இருந்தால் வெளிநாட்டில் ஒரே ஊரில் மாற்றல் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் சிலரும் உண்டு. ஆனால் அது சாதாரண விஷயம் இல்லை, மேலிடம் வரை சிபாரிசு பெற்று , வாய்ப்பு இருக்கிறதா என்று கண்ணீல் விளக்கெண்ணை வைத்து தேடி,நண்பர்கள், மற்ற ப்ராஜெக்டில் வேலை செய்பவர்களிடம் பேசி, விவாதித்து சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவும் எவ்வளவு நாளைக்கு என்று தெரியாது, நாளைக்கே கணவனுக்கோ மனைவிக்கோ மாற்றல் ஆகி விட்டால் திரும்பவும் பிரிய வேண்டியதுதான். என்றைக்கு பிரிவோமோ என்று எதிர்பார்த்துக்கொண்டே காலத்தை தள்ள வேண்டும்.

அதுவும் குழந்தை ஏதாவது பிறந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். தாய் ஒரு நாட்டில்,தந்தை ஒரு நாட்டில் என்று தாய் தந்தையரே பார்க்காமல் பாட்டியிடமும் உறவினர்களுடமும் வளரும் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஏற்கெனவே இந்த தொழிலில் குடும்பத்திற்காக நேரம் செலவிடவே முடியவில்லை என்ற பேச்சு ,இதில் இந்த தொந்தரவு வேறு. இதற்கு ஒரு முடிவே இருப்பதாகவே தெரியவில்லை. வேலையில் அனுபவம் கூட கூட வெளிநாடு செல்லும் சந்தர்ப்பங்கள் அதிமாகிக்கொண்டு தான் போகும்,அப்பொழுது மேலும் மேலும் பிரிவு தான் மிச்சம். இதில் குழந்தைகளின் நிலை என்ன என்று எனக்கு யோசிக்க தெரியவில்லை.

என்னை சுற்றி இருப்பவர்கள் இப்படி இருப்பதினால்தான் எனக்கு இப்படி தோன்றுகிறதா இல்லை உண்மையிலேயே இந்த ஒரு பிரச்சினை இருக்கிறதா என்று தெரியவில்லை. இதற்காகவே தான் சாப்ட்வேர் வேலை செய்யும் என் நண்பர் ஒருவர் கணிணி தொழில் செய்யும் யாரையும் திருமணம் செய்துகொள்வதில்லை என்று முடிவே செய்துள்ளார்.
என்னமோ மக்கள் சந்தோஷமாக இருந்தால் சரி.
என்ன நான் சொல்வது சரிதானே?? :-)

17 comments:

MyFriend said...

உங்களுடைய இந்த பதிவில் நிறைய விஷயங்கள் இருக்கு.. ஆன்சைட் என்பது (அதுவும் IT சைட்டில்) இங்கிருந்து வெளிநாடு போவது மிக குறைவு. இங்கேயே வெளிநாடு டைம்க்கு ஏற்றமாதிரி வேலை செய்வதுதான் அதிகம்.

அப்படி செல்பவர்கள் profesional peoplesதான் அதிகம். அவர்கள் செல்லும்போது, அவர்கள் குடும்பத்தையும் அழைத்துபோக அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அதனால், நீங்க இன்றைக்கு எழுதிய விஷயங்கள் எனக்கு புதிதாய் இருக்கு..

MyFriend said...

இப்படி எங்களுக்கு தெரியாத விஷயங்களையும் நிறைய எழுதுங்க சி.வி.ஆர்.. :-)

பொன்ஸ்~~Poorna said...

cvr, அப்படியே, இல்லத்தரசர்கள் கிடைக்காத, softwareஇல் வேலை செய்யும் தோழிகள் ஏதாச்சும் ஐடியா வச்சிருக்காங்களான்னு கேட்டு சொல்லுங்களேன்.. ;)

பொன்ஸ்~~Poorna said...

மிஸ் ஆகிட்டது, "இல்லத்தரசர்கள்" - within quotes :-D

CVR said...

எனக்கு தெரிஞ்சு நிறைய பேரு இப்படி கஷ்டப்படறாங்க மை ப்ரண்ட்!!
:-)

CVR said...

பொன்ஸ் அக்கா!!
உங்க காலடி படறதுக்கு என் பதிவு என்ன தவம் செஞ்சுச்சுன்னு தெரியலயே!!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்ல.கிடச்சுதுனா கண்டிப்பா சொல்றேன். நீங்களும் ஏதாவது யோசனை கிடைத்தால் சொல்லுங்கள்!! :-)

வெட்டிப்பயல் said...

//இதற்காகவே தான் சாப்ட்வேர் வேலை செய்யும் என் நண்பர் ஒருவர் கணிணி தொழில் செய்யும் யாரையும் திருமணம் செய்துகொள்வதில்லை என்று முடிவே செய்துள்ளார்.
என்னமோ மக்கள் சந்தோஷமாக இருந்தால் சரி.
என்ன நான் சொல்வது சரிதானே?? :-)//

இது நண்பர் எடுத்த முடிவு மாதிரி தெரியலையே ;)

CVR said...

@வெட்டி
எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்களாம். இவ்வளவு வெறி பிடிச்சுட்டு அலைய கூடாது!! :D

கோபிநாத் said...

cvr நல்லா எழுதியிருக்கீங்க.....ஆனா வெட்டி சொல்லறதை பார்த்தா பல உள்குத்து இருக்கும் போல ;-))

என்னமோ நீங்க....ச்சீச்சீ....மக்கள் சந்தோஷமாக இருந்தால் சரி ;-)))

CVR said...

ஆகா!!
வெட்டி சொல்றதை எல்லாம் நம்பாதீங்க மக்களே!! அவரு நிறைய கதை எழுதற ஆசாமி!! :-)

Anonymous said...

படைப்பின் நோக்கம் தெரியாமல் இருக்கும் வரை, அனைவரும் அவர் அவர் விருப்பம் போல் வாழ்கைக்கு அர்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்பது எனது எண்ணம்!

குடும்பத்தில் ஒருவர் உழைப்பு பொருளாதாரத்திற்க்கு அடுத்தவர் உழைப்பு குடும்பத்திற்கு/குழந்தைக்கு என்பது எனது நோக்கம். - Babu

CVR said...

@பாபு
அவரவர் வாழ்க்கைக்கு சரியானதை தேர்ந்தெடுத்துக்கொள்ள அவரவருக்கும் உரிமை உண்டு!!

நான் கடைசியில் சொன்னதை போல "மக்கள் சந்தோஷமா இருந்தா சரி"
அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் வண்ணம் அமைத்துக்கொண்டால் நல்லது!! :-)

I would be glad if it works for you! :-)

Anonymous said...

@CVR:
//I would be glad if it works for you! :-) //

இந்த வாதம் நடைமுறைக்கு ஒத்து வருமா என்பது என்னோட மனைவி வரும் போது தான் தெரிய வரும்!

I have to convince her by saying that "Love is not looking each other but looking in same direction"

Let you know after my marriage :-)..

Nice to meet u CVR - Babu

CVR said...

@பாபு
//இந்த வாதம் நடைமுறைக்கு ஒத்து வருமா என்பது என்னோட மனைவி வரும் போது தான் தெரிய வரும்!//

இங்கேயும் அதே தான்!!
இப்பொழுது ரொம்ப பெருசாக வாய் நீளுகிறது,எல்லாம் கல்யாணம் ஆனால் தான் தெரியும்!! :-)

//Let you know after my marriage :-)..//
Please do! :-)

//Nice to meet u CVR - Babu//
The pleasure was mine!! :-)

Unknown said...

Hello CVR...

Ya thats true....
We have to earn a lot but at the same time...We never miss our family...Enna pannalam..???

CVR said...

@கமல் (சூப்பர் பேருயா இது!! :-D)
We cant have everything in life.
There is never enough money no matter what we do.

So, Get your family set and try to live within that,I guess.

I neither have the age nor the experience to profess anything!!
Just my 2 cents!!

அப்பா அம்மா இரண்டு பேர்ல ஒருத்தராவது ஊர் ஊரா சுத்தாம குழந்தை கூட இருக்கனும்கறது என்னுடைய தாழ்மையான கருத்து!! :-)

TBCD said...

//*CVR said...
அப்பா அம்மா இரண்டு பேர்ல ஒருத்தராவது ஊர் ஊரா சுத்தாம குழந்தை கூட இருக்கனும்கறது என்னுடைய தாழ்மையான கருத்து!! :-) *//

Objection your honour...

Rendu perumey kulanthai kooda than irukaanum.

Atha vida vera yennaya mukkiyamana vishayam irukka mudiyum..

indrai tholaithuvittu...nalayai theduvathil..azhinthu pogindrargal..

Related Posts Widget for Blogs by LinkWithin