இரு கண்ணும் தூங்காமலே

இத்தனை நாளாக இந்த பாட்டை எப்படி கேட்காமல் விட்டேன் என்று தெரியவில்லை.
மிக மிக இனிமையாக மனதை வருடிவிடும் இசை!! ஹரிஹரன் மற்றும் சுஜாதாவின் குரலில் மாற்றி பாடப்படும் அழகான வரிகளில் மனம் கரைந்து போய் விடுகிறது.

பாடலை திரும்ப திரும்ப ஓட விட்டு பாடலின் ஓட்டத்தில் என்னை தொலைத்துவிட்டேன்!!
இது "காதல் வேதம்" எனும் ஆல்பத்தில் வெளிவந்த பாடலாம்! இந்த ஆல்பத்தின் எல்லா பாடலுமே நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள்! (பின்னூட்டத்தில் இந்த செய்தியை சொன்ன இவான் அவர்களுக்கு நன்றி! :-))

இன்னொரு பாட்டும் நன்றாகத்தான் இருந்தது.ஆனால் இந்த பாட்டை மிஞ்ச முடியாது!! வரிகளின் மென்மை மற்றும் கதகதப்பில் உங்களை மூழ்கடிக்க விருப்பட்டால் இந்த பாடலை ஓட விட்டு கண்களை மூடிவிட்டு உலகை மறந்துவிடலாம்.
வெறும் கிதார் ஆங்காங்கே வீணை மட்டுமே வைத்துக்கொண்டு ,மெட்டின் மேன்மையை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் இசை அமைப்பாளர். இசை அமைப்பாளர் பெயரை கேள்வி பட்டார்போலவே இல்லை!! என்ன கொடுமை சார் இது!! குறைந்தபட்சம் ஒன்றிரண்டு படங்களாவது அவருக்கு கிடைத்திருக்கலாம் :-(


என்னை போலவே உங்களுக்கும் உங்களுக்கும் இந்த பாட்டு அமைதியை தந்தால் மகிழ்ச்சி!! :-)


Get Your Own Music Player at Music Plugin


ஆல்பம் : காதல் வேதம்
பாடல் : இரு கண்ணும் தூங்காமலே
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா
இசை : ஜி.தேவராஜன் (யாருப்பா இவரு?? கலக்கியிருக்காரு))
பாடலாசிரியர் : வைரமுத்து


(பெண்)இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மெளனங்கள் தானே
காதலின் வேதம்

(ஆண்)இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மெளனங்கள் தானே
காதலின் வேதம்

(பெண்)இரு கண்ணும் தூங்காமலே

(ஆண்)உரையாடவே மொழி தேவையே
உறவாடினால் மொழி ஊமையே
மனதோடு தான் பல ஆசையே
விரல் பேசுமே பரி பாஷையே
விரல் பேசுமே பரி பாஷையே

(பெண்)இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மெளனங்கள் தானே
காதலின் வேதம்

(ஆண்)இரு கண்ணும் தூங்காமலே

(பெண்)ஓசையே கொஞ்சம் ஓய்வெடு
மௌனமே வந்து பாய் கொடு
வார்த்தையே நீ போய்விடு
மன்மதா உன் வில் எடு

(ஆண்)இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மெளனங்கள் தானே
காதலின் வேதம்

(பெண்)இரு கண்ணும் தூங்காமலே

(ஆண்)உடல் சேரும் இன்பம் ஏனடி
உயிர் தேடும் தேடல் தானடி
மொழி தீர்ந்து போகும் வேளையில்
மோட்சங்கள் தோன்றும் பாரடி
மோட்சங்கள் தோன்றும் பாரடி

(பெண்)இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மெளனங்கள் தானே
காதலின் வேதம்

(ஆண்)இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மெளனங்கள் தானே
காதலின் வேதம்

(பெண்)இரு கண்ணும் தூங்காமலே

10 comments:

இவான் said...

1998 அல்லது 1999இல் இந்த பாடல் வெளியானது என்று நினைக்கிறேன். இது படம் இல்லை. இது ஒரு ஆல்பம். இந்த ஆல்பத்தில் உள்ள எல்லா பாடல்களுமே மிக நன்றாக இருக்கும்.

கப்பி | Kappi said...

செமையா இருக்கு!! பகிர்வுக்கு நன்றி!!

cheena (சீனா) said...

வைரமுத்து - கேட்கவா வேண்டும் - காதல் ரச்ம் சொட்டச் சொட்ட பாடல் எழுதி இருக்கிறார். வாய் பேசாது, கண்கள் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது காதலின் உச்சம். நடுவில் விரல்கள் பேசும். அருமை அருமை.

Dreamzz said...

பாடல் அருமை.. நன்றாக இருக்குது தல!

G3 said...

//செமையா இருக்கு!! பகிர்வுக்கு நன்றி!!//

repeatae :)))

CVR said...

@இவான்
நன்றி இவான்!! பதிவில் சரி செய்து விட்டேன்! :-)

@கப்பி பய
நன்றி பா! :-)

@சீனா
உண்மைதான் சீனா!
வரிகளின் இனிமை இந்த பாட்டை மேலும் ரசிக்க வைக்கிறது!

@ட்ரீம்ஸ்
உனக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி!! :-)

@ஜி3
டாங்க்ஸு யக்கோவ்!! B-)

கானா பிரபா said...

தல

இது படம் அல்ல, ஆல்பம் என்று திருத்தவும், 98 ஆம் ஆண்டு வாக்கில் இந்த ஆல்பம் வந்திருந்தது.

ஜி.தேவராஜன் யாருப்பாவா? என்ன கொடுமை இது காமிரா?

மலையாளத்தில் பெரிய தல இவரு. துலாபாரம், அன்னை வேளாங்கன்னி போன்ற படங்களுக்கு இவர் தான் இசை. போன ஆண்டு தான் காலமானார்.

சின்னப் பையன் said...

இந்த காலத்திலே வரிகள் புரியற மாதிரி ஒரு பாட்டா...அருமை...அருமை...

d4deepa said...

Arumaiyana paadal varihal.ketkavum inimaiyaha irukkiradhu.

Anonymous said...

song super :)

Related Posts Widget for Blogs by LinkWithin