கண்ணிழந்த மாணவன் போல்....

கல்லூரியில் நாமெல்லாம் பாடத்தை என்றைகாவது கவனித்திருக்கிறோமா??
இவர்கள் ஏதாவது எடுக்கட்டும் நாம் பின்பு பார்த்துக்கொள்ளலாம்!! பிறகு வீட்டிற்குச்சென்று பார்த்துக்கொள்ளலாம் அல்லது தேர்வுக்கு முன் படித்துக்கொள்ளலாம் என்று விட்டு விடுவோம் அல்லவா??
வகுப்பில் ஆசிரியர் நடத்துவது தவிர நாம் பாடத்தை படிக்க வசதியே இல்லையென்றால்??? யாராவது படித்துக்காண்பித்தால் மட்டுமே பாடத்தை மறுபடியும் கிரகிக்க முடியும் என்ற நிலையிருந்தால் எப்படி இருக்கும்???

போன பதிவில் கூறியது போல இன்று கண்பார்வையற்றோருக்கான படித்தல் அமர்வுக்கு(reading session) சென்றிருந்தேன்.வள்ளுவர் கோட்டத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் வாரா வாரம் இப்படி நடக்குமாம்,கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டு சென்ற போது நண்பர் சொல்லிக்கொண்டு வந்தார்.நான் முந்தைய பதிவில் ஒரு கண்பார்வையற்றோருக்கான பள்ளிக்கு செல்லப்போவதாக கூறியிருந்தேன்!
அது தவறு!

நான் சென்றது ஒரு சாதாரண பள்ளியில் நடைபெறும் கண்பார்வையற்றோருக்கான படித்தல் அமர்வு.பள்ளியினுள் நுழைந்ததும் ஒரு அரங்கத்தில் ஆங்காங்கே 2-3 பேர்களாக கூட்டம் கூட்டமாக மக்கள் அம்ர்ந்திருப்பதை கண்டேன்.சிறியவர் பெரியவர் என்ற பேதம் இன்றி பல தன்னார்வலர்கள் இந்த படித்தல் அமர்வுக்கு வந்திருந்தார்கள்!! ஏதோ ஒரு சாய் அமைப்பு வாராவாரம் இந்த அமர்வை வாரா வாரம் நடத்துகிறது.அந்த சங்கத்தின் அங்கத்தினர்கள் பரவலாக இதில் ஈடுபட்டாலும் தற்போது நிறைய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்த அமர்வில் கலந்துக்கொள்ளுகிறார்களாம்.ஒவ்வொருவரும் ஒரு மாணவரை தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடநூல்களை வைத்துக்கொண்டு படித்துக்காட்டிக்கொண்டு இருந்தார்கள்.இந்த மாணவர்கள் கல்லூரியில் B.A,B.Ed,M.Phil என படிப்பவர்கள்.கணிதம்,அறிவியல் போன்றவை இவர்கள் புரிந்துக்கொள்வது கடினம் என்பதால் பெரும்பாலனவர்கள் மொழி,இலக்கியம்,வரலாறு போன்ற பாடங்களை படிப்பவர்கள்.கண் பார்வை உள்ள மாணவர்களுடன் சேர்ந்து சாதாரண கல்லூரியில்,எல்லோருக்கும் உள்ள பாடத்திட்டதை தான் இவர்களும் படிக்கிறார்கள்.
இதே பள்ளியில் சுமார் 17 வருடங்களாக இந்த நிகழ்ச்சி நடந்துக்கொண்டு வருகிறது.மாணவர்களுக்கும் அவர்களுக்கு படித்துக்காட்டுபவர்களுக்கும் இதை நடத்தும் அமைப்பினர் தண்ணீர்,காபி,டீ கொடுத்து இளைப்பாற்றுகின்றனர்.

இது போன்ற நிகழ்ச்சியை பார்க்கும் போதே ஒரு வித்தியாசமான மனநிலைக்கு மனம் சென்று விடுகிறது!! இவர்கள் எப்படி படிக்கிறார்கள் என்றே என்னால் கற்பனை செய்துப்பார்க்கமுடியவில்லை.நான் முன்பே சொன்னது போல் வகுப்பில் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும்போதே முடிந்தவர புரிந்துக்கொள்ள வேண்டும்.அதன் பின் இது போன்ற படித்தல் அமர்வில் கேட்டுக்கொண்டால் தான் உண்டு!!சில மாணவர்கள் இந்த படிப்பர்கள் வாசிக்க,அதை ப்ரெயில் எழுத்துக்களில் பதித்துக்கொண்டு ,பின்னர் படிக்க உபயோகித்துக்கொள்வார்கள்.
சிலர் B.Ed எல்லாம் படிப்பதால் அவர்களின் பாடத்திட்டத்தின் படி சார்ட் எல்லாம் செய்ய வேண்டும்.அதையும் இது போன்று அமர்வுகளுக்கு வருபவர்களே செய்துக்கொடுப்பார்கள்.மற்றவர்கள் படிக்கும் அதே பாடத்திட்டம்தான் இவர்களுக்கும்,எந்த மாறுதலும் கிடையாது.
இதைத்தவிர தேர்வு நேரங்களில் இவர்கள் சொல்லுவதை எழுத ஆள் பிடிக்க வேண்டும்.அதற்கு தகவல் தொழில்நுட்ப தொழிலில் இருக்கும் இளைஞர்கள் நிறைய பங்களிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.எழுத முடியாவிட்டாலும் தேவையை பற்றிய மின்னஞ்சல்களை தன் நண்பர் வட்டத்துக்கு அனுப்பி வைத்து இவர்களுக்கு எழுத்தர்களை திரட்ட உதவுகிறார்கள்.
எனது நண்பர் வெகு நாட்களுக்குப்பின் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால் அவரின் பழைய நண்பர்களையும்,அவர் படித்தர்/எழுத்தராக இருந்து உதவிய சில மாணவர்களையும் சந்தித்துக்கொண்டிருந்தார்.நானும் அவரின் பின் சென்றுக்கொண்டிருந்தேன்.இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கும் சங்கத்தின் அமைப்பாளர் ஒருவரின் அனுமதி பெற்று நான் படம் பிடிக்க ஆரம்பித்தேன்!! ஆனால் பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகள் சிலர் பள்ளிக்கூடத்தினுள் படம் எடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டதால்,இரண்டு படங்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை(அந்த இரண்டு படங்க்களைத்தான் இந்தப்பதிவில் போட்டிருக்கிறேன்).17 வருடங்களாக இடம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்,நீங்கள் படம் எடுக்கப்போய் இனிமேல் வேண்டாம் என்று சொல்லிவிடப்போகிறார்கள் என்று ஒருவர் கிலியை கிளப்ப,கேமராவை பைக்குள் போட்டுக்கொண்டேன்.
தான் திரும்பவும் வெளிநாடு சென்றுவிடப்போவதால்,என் நண்பர்,என்னுடைய தொலைப்பேசி எண்ணை தன் நண்பர்களிடம் கொடுத்துவிட்டார்.இனிமேல் எழுத்தர்கள் திரட்ட என்னையும் தொடர்புக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.எனது நண்பர் வட்டத்திலும் இந்த தகவலை அளித்து இந்த முயற்சியில் உதவலாம் என்று நினைக்கிறேன்.

வீட்டிற்குத்திரும்பி வந்தவுடன் கப்பி நிலவரிடமிருந்து எழுத்தர்கள் திரட்டலுக்கான ஒரு தளத்தின் சுட்டி ஒன்றும் கிடைத்தது.
தேர்வுகள் பெரும்பாலும் வாரநாட்களில் நடக்கும் என்பதால் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் எழுத்தராக நினைத்தால் சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது!!
இன்னும் இந்த முயற்சிகளை பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு இந்தத்தகவலை முடிந்தவரை சேர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிறைந்தது.

பி.கு:என்னை இந்த அமர்வுக்கு அழைத்துச்சென்ற நண்பரின் வலைபதிவில் இருந்து இரண்டு இடுகைகளை இங்கே பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன்.

வாழ்கை அவ்வளவு சுலபம் இல்லை, ஆனா போராடணும்!

என் முகத்தை எனக்குக் காட்டியவர்கள்

27 comments:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//கல்லூரியில் நாமெல்லாம் பாடத்தை என்றைகாவது கவனித்திருக்கிறோமா??
இவர்கள் ஏதாவது எடுக்கட்டும் நாம் பின்பு பார்த்துக்கொள்ளலாம்!! பிறகு வீட்டிற்குச்சென்று பார்த்துக்கொள்ளலாம் அல்லது தேர்வுக்கு முன் படித்துக்கொள்ளலாம் என்று விட்டு விடுவோம் அல்லவா??
//

உண்மைதான் இந்த எண்ணம் தான் எனக்கும் இருந்தது கல்லூரி நட்களில்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

நான் பள்ளியில் படித்து கொண்டிருந்த காலங்களின் என் வகுப்பாசிரியர் ஒருவர் பர்வையற்றோர் ஒருவருக்கு எழுத்தராக இருந்தார். அவரை பற்றி சில ஆச்சரியமான விசயங்களை என் ஆசிரியர் கூறிக்கேட்டிருக்கிறேன்!

நல்ல விசயம் பண்றீங்க! நல்லா பண்ணுங்க...

ஏதாவது உதவிகள் என்னால் அகலாம் என்றால் கண்டிப்பாக தெரிவியுங்கள்!

sri said...

Thank you very much, May god bless you with all that you want in life!

பிரேம்ஜி said...

ரொம்ப நல்ல விஷயம்.

SathyaPriyan said...

Great work. Keep it up.

Divya said...

\இன்னும் இந்த முயற்சிகளை பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு இந்தத்தகவலை முடிந்தவரை சேர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிறைந்தது.\\

முயற்சிக்கு வாழ்த்துக்கள் சிவிஆர்!!

\\வகுப்பில் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும்போதே முடிந்தவர புரிந்துக்கொள்ள வேண்டும்.அதன் பின் இது போன்ற படித்தல் அமர்வில் கேட்டுக்கொண்டால் தான் உண்டு!\\

படிப்பில் நாம் காட்டும் மெத்தனம் எவ்வளவு தவறானது என்று உணர முடிந்தது.

உங்கள் முயற்சிக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்!!

Dreamzz said...

:)

ரொம்ப நல்லவங்க நீங்க!

Dreamzz said...

//
உண்மைதான் இந்த எண்ணம் தான் எனக்கும் இருந்தது கல்லூரி நட்களில்!//

நான் ப்ராஜெக்ட் கூட அப்டி தான் செய்வேன் :D

மெளலி (மதுரையம்பதி) said...

வீக்கெண்ட்-ல ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க.....பெங்களூரில் இந்த மாதிரி அமைப்பு எங்கிருக்கிறதுன்னு தெரிந்து சொல்ல முடியுமா?

CVR said...

@சதீஷ்
//ஏதாவது உதவிகள் என்னால் அகலாம் என்றால் கண்டிப்பாக தெரிவியுங்கள்!///
கண்டிப்பாக சதீஷ்!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! :-)

@ஸ்ரீவத்ஸ்
வாழ்த்துக்களுக்கு நன்றி!! எதுக்கு இம்புட்டு எமோஷனல் ஆகறீங்க தல?? :-)

@பிரேம்ஜி
ஆமாங்க,இது நாலு பேருக்கு தெரிஞ்சா சந்தோஷம்! :-)

@சத்தியப்பிரியன்
நன்றி தல!!

@திவ்யா
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி திவ்யா! :-)

@ட்ரீம்ஸ்
அட!!ஏதோ ஒரு புண்ணியவான் வர சொன்னாறேன்னு போனேன்,போய்ட்டு வந்து அதையே பதிவா போட்டேன்!! இதுக்கு எதுக்கு பா இம்புட்டு பில்ட் அப்பு தர!! :-)

@மதுரயம்பதி
இப்போதைக்கு என்னிடத்தில் இது பற்றி தகவல்கள் இல்லை!
நண்பரிடம் கேட்டு ,இருந்தால் சொல்கிறேன்.
நன்றி!! :-)

எழில்பாரதி said...

நல்ல விஷயம்!!!!
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்!!!!

peeveeads said...

சிவிஆர் கலக்கிட்டீங்க. நன்றி.
நல்ல கருத்துக்கு மதிப்பளிக்க்றேன்.

Please let me know.. if i can help you guys on something.

யாத்ரீகன் said...

nice initiative thala.... keep it spreaded..

http://yaathirigan.blogspot.com/2007/02/blog-post.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல முயற்சி..
இது போன்ற தகவலை முன்பு பத்திரிக்கை ஒன்றில் கூட படித் தேன்.. குட்டிப்பையன் பெரியவனானப்பறம் இங்கு அருகில் எதாவது இடம் இப்படி இருந்தால் நாமும் ஆங்கிலத்தில் எதாவது எழுதித்தரலாமே ...என்று தோன்றும்.

M.Rishan Shareef said...

அன்பின் சீவிஆர்,

இவர்களுக்கு உதவவேண்டும் என ஆர்வம் மிகுந்தாலும் வேற்று நாடொன்றில் தொழில்புரிந்து கொண்டு நேரில் உதவுவது எனக்கு சாத்தியமற்றதாக இருக்கிறது.

இது சம்பந்தமான மின்னஞ்சல்கள்,வலைத்தளங்களை அனுப்பிவையுங்கள்.நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

விழிப்புலனற்றவர்களுக்கும்,சாதாரணமானவர்களுக்கும் ஒரே பாடத்திட்டம்,பரீட்சை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
இதனை மாற்றமுடியாதா?

புகைப்படங்களுக்கும்,இந்தப்பதிவுக்கும் நன்றி நண்பரே :)

ஆயில்யன் said...

நான் படித்த போது என்னுடனே படித்த கண்பார்வையற்ற மாணவரின் ஞாபகம்தான் வந்தது! எங்களைவிட அதிக மதிப்பெண்களில் எடுத்த அந்த மாணவருக்கு கண்பார்வை இல்லையே தவிர அவ்வளவு அருமையான படிப்பாளி!

நம்ம வலைப்பதிவர் நண்பர் குசும்பனின் உறவினர் எங்க மயிலாடுதுறையில் சுமார் 15 வருடங்களாக இந்த மாதிரி கண்பார்வையற்ற மாணவர்களுக்கு படிப்புக்கு உதவியாய் இருந்து செய்ல்பட்டுவருகிறார் எனபது ஒரு உபரி செய்தி

VIKNESHWARAN ADAKKALAM said...

அண்ணாச்சி உங்களால் தான் நாட்டுள மழை பெயுது போல...

கோபிநாத் said...

நல்ல விஷயம் சிவிஆர்...வாழ்த்துக்கள் ;))

ரசிகன் said...

//இனிமேல் எழுத்தர்கள் திரட்ட என்னையும் தொடர்புக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.எனது நண்பர் வட்டத்திலும் இந்த தகவலை அளித்து இந்த முயற்சியில் உதவலாம் என்று நினைக்கிறேன்.//

நல்லது செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்:)
சேவை உள்ளத்திற்க்கு நன்றிகள்.

நிஜமா நல்லவன் said...

கப்பி நிலவர் அனுப்பிய ஸ்கிரைப் தளம் பற்றி இந்தவார ஆனந்த விகடன் வரவேற்பறையில் கூட வந்துள்ளது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சிவிஆர்!

CVR said...

@எழில்பாரதி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி எழில்பாரதி! :-)

@பீவீ
//Please let me know.. if i can help
you guys on something.//
Sure thing!! :-)

@யாத்திரீகன்
ஆஹா!!ஏற்கெனவே நீங்க எழுத்தராக இருந்திருக்கிறீர்களா??
சூப்பரு!!
நம்மால் முடிந்தவரை இந்த நலப்பணி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.. :)

@முத்துலெட்சுமி அக்கா
//குட்டிப்பையன் பெரியவனானப்பறம் இங்கு அருகில் எதாவது இடம் இப்படி இருந்தால் நாமும் ஆங்கிலத்தில் எதாவது எழுதித்தரலாமே ...என்று தோன்றும்./////
சூப்பரு!!
கண்டிப்பா செய்யுங்க அக்கா!!
அப்படி போனீர்கள் என்றால் அந்த அனுபவத்தையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.. :)

@ரிஷான் ஷெரீஃப்
பரவாயில்லை ரிஷான்!உங்களால் நேரடியாக முடியாவிட்டாலும் உங்களால் இயன்ற வரை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது மற்ற வழிகளிலோ உதவலாம்..

@ஆயில்யன்
வாங்க ஆயில்யன்!! சுவையான இரண்டு செய்திகளை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி!! :-)

@விக்னேஷ்வரன்
ஆகா!! ஏன் இந்த கொலை வெறி தல?? :-(((

@கோபிநாத்
வாழ்த்துக்களுக்கு நன்றி தல!

@ரசிகன்
நன்றி ரசிகன்! :-)

@நிஜமா நல்லவன்
வாங்க நல்லவரே!! நீங்க சொல்லுறது சரிதான்!! இந்த சுட்டியை அளிக்கும்போதே கப்பி இந்த விஷயத்தையும் சொன்னார்.. :)

Ramya Ramani said...

//இதே பள்ளியில் சுமார் 17 வருடங்களாக இந்த நிகழ்ச்சி நடந்துக்கொண்டு வருகிறது//

பாராட்டபட வேண்டிய விஷயம்!

//நான் முன்பே சொன்னது போல் வகுப்பில் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும்போதே முடிந்தவர புரிந்துக்கொள்ள வேண்டும்//

ரொம்ப கஷ்டம்! நம்முடைய மெத்தனத்தை நல்லா சுட்டிகாட்டீங்க!

நான் சில வாரங்கள் ஒரு Ear-Speak Challenged பள்ளிக்கு என்னுடைய நண்பர் மூலமாக சென்றேன்!

அவர்களுடைய புத்தி கூர்மையை கண்டு வியந்தேன் வியந்து கொண்டு இருக்கிறேன்!

கப்பி | Kappi said...

_/\_

ஜி said...

vaazthukkal Thala... India vanthathum naanum unga kooda joint adikka try panren :))

சத்யா said...

Nice effort. Valthukkal. vanakkangal.

Anonymous said...

hello sir,

All the best for you to continue this....

I need that place address, u simply mentioned near valluvarkottam. I need full contact details . It will be useful for me. i dont have any blogspot and all. Can u put the details in ur blog itself.

Thank u

CVR said...

வாழ்த்தளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி..

@Ranjani
This session was conducted at the YGP auditorium in the Padma sheshadri school at Valluvar kottam.
I was told that this session happens every sunday at 10.
Since there are exams happening,the last session would have happened,the week next to my visit.
And the sessions will restart only during July.
Thanks for your interest. :-)

Related Posts Widget for Blogs by LinkWithin