வண்ணம் கொண்ட வெண்ணிலவே...

எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.இன்றைக்கு கூட திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தேன்...
நீங்களும் கேட்டு மகிழுங்கள்...


Get Your Own Hindi Songs Player at Music Plugin

வண்ணம் கொண்ட வெண்ணிலவே (சிகரம்)
பாடல்: வண்ணம் கொண்ட வெண்ணிலவே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை

(வண்ணம்)

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை

(வண்ணம்)

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்

(வண்ணம்)

பி.கு: அது சரி..நிலவுக்கு எங்கே வண்ணம் இருக்கு??அது வெள்ளையாத்தானே இருக்கு?? சரி சரி..அதான் கவிதைக்கு பொய் அழகுன்னு டிஸ்கி போட்டு வெச்சிட்டாய்ங்கள்ள.. :P

8 comments:

SathyaPriyan said...

excellent song. My favourite too. Music composer is also SPB.

Movie is also excellent.

இரா. வசந்த குமார். said...

white contains all of the colour spectrum... ;-)

Deiva said...

my favourite song too. Thanks for posting

Sundar Padmanaban said...

தலை பாட்டுதானே - ஆயிரம் வாட்டி கேக்கலாம்! அருமையான பாட்டு!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே-ன்னா - நிலா வெக்கத்துல செவந்திருக்குன்னு அர்த்தம்யா! :-)

கோபிநாத் said...

எனக்கும் பிடித்த பாட்டு ;))

ஆ! இதழ்கள் said...

தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை...

தேவி வந்து சேர்ந்துவிட்டால்...

என்ற வரிகளில் இசையிலும் மெட்டிலும் குரலிலும் மட்டுமல்ல நம் மனதிலும் ஓர் spark எழுந்து கரைவதை உணரமுடியும்.

Anonymous said...

Hi Great song. Thanks for posting.
You really made my day!!!!
Chandra

Nisha Magalinggam said...

simply superb song yar! 1 of the best 80's song..

Related Posts Widget for Blogs by LinkWithin