பனி விழும் நகர்வலம்

என்ன மக்களே !! நல்லா இருக்கீங்களா???
ரொம்ப நாளா பதிவே ஒன்னும் போடல.ஒரு ஆங்கில கதை எழுதற வேலையில மும்முரமா இருந்துட்டேன்.எதுக்கு தேவையே இல்லாம எதையோ சொல்றனு கேக்கறீங்களா??? எல்லம் ஒரு விளம்பரம்தான்!!!!
இப்படியே விட்டா நம்மள எல்லோரும் மறந்திடுவாங்கன்னு நெனச்சேன்!!அதான் ஒரு பதிவ போடலாம்னு!!
உன்னை எல்லாம் நியாபகம் வெச்சாதானே மறக்கறதுக்கு .அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு புரியுது. சரி சரி!! அதெல்லாம் சும்மா அடிச்சி விடறதுதான்!!! கண்டுக்காதீங்க!!

நான் பொறந்தது கோயம்முத்தூரா இருந்தாலும் வளர்ந்தது எல்லாமே சென்னை தாங்க. மருந்துக்கு கூட குளிர் இல்லாத ஊர்.
தமிழ்மணத்துல ஜாதீய பேச்சு இல்லைன்னு சொல்றவன கூட நம்பலாம் ஆனா சென்னையில குளிரிச்சு அப்படின்னு யாரவது சொன்னா அவன விட்டு ஒரு பத்து இன்ச்சு தள்ளியே நிக்கனும்.
வெயிலுனா வெயிலு அப்படி ஒரு வெயிலு.எங்க பாத்தாலும் வெயிலு எப்ப பாத்தாலும் வெயிலு.இப்படி வெயில பார்த்து பார்த்து அலுத்து போய்தான் நான் “வெயில்” படத்த கூட பார்க்கல.கொஞ்ச நாள் பெங்களூர்ல இருக்கச்சே கூட சென்னை வந்தா “இங்கே என்ன சுத்தமா குளிரே இல்ல.பெங்களுர் வந்து பாருங்க தெரியும்” அப்படினு கன்னா பின்னானு பீலா விடுவேன். அதை யாரோ சாமி கிட்ட போட்டு குடுத்துட்டாங்க போல.
பிறக்க ஒரு ஊர்,பிழைக்க ஒரு ஊர். தமிழ்நாட்டு இளைஞர்களின் நிலைமைக்கு நான் மட்டும் விதி விலக்கா என்ன.
ரெண்டு வருஷமா கன்னா பின்னானு கம்ப்யூட்டர உடைக்கறத பொறுக்க முடியாம “எலே!! நீ இங்க நெட்டி முறிச்சது போதும்!! மொதல்ல இடத்தை காலி பண்ணு!! நீ பன்ற தல வேதனை தாங்க முடியல” அப்படின்னு ரயிலேத்தி ,அதாவது ஃப்ளைட் ஏத்தி இங்க அனுப்பி விட்டுட்டானுங்க!! வந்த புதுசில எல்லாம் ஒழுங்கா தான்யா இருந்திச்சு. நான் வந்தது ஏப்ரல் அப்படிங்கறதுனால வந்ததிலிருந்து ஒரே வெயிலு தான்!!! நாம தான் சென்னை அக்னி நட்சத்திர வெயிலிலேயே மத்தியான நேரத்துல காலில செருப்பு கூட இல்லாம பௌலிங் போட்ட மாவீரன் ஆச்சே!!! இந்த வெயில் எல்லாம் எம்மாத்திரம் அப்படின்னு எறுமை மாடு மாதிரி உறைக்காம இருந்திட்டேன்.
ஒரு டிசம்பர் வந்த அப்புறமாதாங்க இந்த குளிர் ஆரம்பிச்சுது!!! அப்போ கூட மொத நாள் பனி கொட்டுறத பாத்துட்டு அப்பாவியா பாத்து ரசிச்சுட்டு இருந்தேன்.
நாள் ஆக ஆக தான் தெரிஞ்சுது இதோட அழகுக்கு பின்னாடி எவ்ளோ குரூரம் இருக்குனு!! போக போக தெனமும் பனி கொட்ட ஆரம்பிச்சிட்டுது!! எப்பவுமே பனி கொட்டின நாளோட அதுக்கு அடுத்த நாள்தான் குளிரு அதிகமா இருக்கு!! வீட்டுக்கு வந்து ஹீட்டர போட்டா சூடு ஏர்றதுக்கு ஒன்றரை மணி நேரம் ஆகுது!!! நாம இந்த எலி எல்லம் பொந்துகுள்ள போய் ஒழிஞ்சிக்கரா மாதிரி போர்வைய போத்திகிட்டு எந்திரிக்கறதே இல்ல!! ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு அப்புறம் மெதுவா வெளிய வர்ரது.

காலையில ஆபீஸ் போகனும்னா காரை எடுத்தமா போனமான்னு கிடையாது!! வெளில வந்தா எது நம்ம காரு-னே தெரியல.எல்லாமே வெள்ளையும் சொள்ளையுமா பனியில மறஞ்சிருக்கு.கஷ்டபட்டு கண்டு பிடிச்சா ஒரு பத்து நிமிஷம் மேல கட்டி இருக்கற பனி எல்லாம் ஒடச்சி ,கரைச்சு க்ளீன் பண்ணிட்டு தான் போக முடியும்!! ரோட்ல பனி படர்ந்தாலும் காலையில இவனுங்க க்ளீன் பண்ணி வெச்சுடராங்க. இருந்தாலும் அங்கங்க காரு சறுக்கிகிட்டு போய் நிறைய விபத்து.என் நண்பர்கள் ரெண்டு பேரே மாட்டிக்கிட்டு இருக்காங்க!! நல்ல வேளை யாருக்கும் அடி படவில்லை ஆனா கார் சுக்கு நூறு.

சரி இந்த பனியை படம் எடுத்து வீட்டுக்கு அனுப்பலாம்னா வெளில எங்க போறது?? ரெண்டு நிமிஷம் வெளில நிக்க முடியல!! ஒரு சமயம் ரெண்டு நாளா பனி இல்ல,அதுவும் உள்ள ஹீட்டர் இருக்கறதுனால வெளியில எவ்ளோ குளிர்னு சரியா தெரியாது!!! சரி நானும் வீரத்தோட காமெராவ மாட்டிக்கிட்டு கிளம்பிட்டேன். வெளில போனா ரெண்டு நாளா வெயில் காய்ஞ்சா மாதிரியா இருக்கு!!! காது எல்லாம் மறத்து போச்சு,விரல்கள் எல்லாத்துலையும் உண்ர்ச்சியே இல்ல!! சும்மா பேருக்கு ரெண்டு படம் எடுத்துட்டு வீட்டுக்குள்ள ஓடி வந்துட்டேன். உள்ள வந்து இணையத்துல பார்த்தா தட்பவெட்பம் -20 ங்கறான்!!! அட பாவிகளா ரெண்டு நாளா வெயில் காய்ஞ்சா உங்க ஊருல -20 தான் தட்பவெட்பமா அப்படின்னு வயித்திலையும் வாயிலையும் அடிச்சிக்கிட்டேன்.
இந்த குளிர் வந்த அப்புறம் வெளில எங்கேயும் போக முடியறது இல்ல!! குப்பையை எடுத்திட்டு போய் குப்பை தொட்டியில போடனும்னா கூட கோட்டு,ஷூ அப்படி இப்படின்னு ஒரு ராணுவ வீரன் மாதிரி கவச குண்டளங்கள் எல்லாம் மாட்டிகிட்டு தான் போகனும்!! இதெல்லாம் போட்டா கூட 5 நிமிஷத்துக்கு மேல வெளில நிக்க முடியாது!!! பின்ன என்னங்க!!! -20,-30 எல்லாம் சும்மாவா!! என் வாழ்க்கையில நான் +20-ஏ ரொம்ப குளிருனு நெனைச்சுக்கிட்டு இருந்த ஆளு!! இதெல்லாம் ரொம்ப ஓவரு!!!

ஆபீசுக்கு போகனும்னா வீட்டில இருந்து ஓடி போய் காருல உட்காரனும்,அப்புறமா காருல இருந்து ஓடி போய் ஆபீஸ்ல போய் ஒழிஞ்சிக்கனும்!!! இதே பொழப்பா போச்சு!!!

அடுத்த வாரம் -5 ஆக போகுதுன்னு சொன்ன வுடனே. அப்பாடா!! வெறும்(?!) -5 தானா!!! இவ்ளோ குளிர் கம்மியா!!! அப்படின்னு கேக்கர நிலைமை!!
சரி என் கஷ்டம் எனக்கு. படம் எல்லாம் பார்த்து ரசிச்சிக்கோங்க. அப்புறமா ஏதாவது விஷயத்தோட உங்கள சந்திக்கிறேன்.
என்ன வரட்டா??? :-)

Related Posts Widget for Blogs by LinkWithin