Taare zameen par - அம்மா பாட்டு

நான் சமீபத்தில் மிகவும் ரசித்த பாட்டு!
திரைஅரங்கில் இந்த பாட்டு ஓடும் போது என் கண்களில் கண்ணீர்.
இந்த படத்தின் விமர்சனத்தை நம்ம குசும்பன் அண்ணாச்சி கூட போட்டிருக்காரு.

தாயை பிரிந்திருக்கும் அனைவருக்கும் இந்த பாட்டை கேட்கும் போது தொண்டை அடைத்திருக்கும் என்பது எனது யூகம்.
பாடலின் மெட்டு,சங்கர் மஹாதேவனின் குரல்,அசத்தலான வரிகள்,இவையனைத்தும் பாட்டில் மிக அருமை.

நீங்களும் தான் கேட்டு பாருங்களேன்!! :-)



யூட்யூப் பாக்க முடியாதவங்க எல்லாம் பாட்டை இங்கிட்டு போய் கேட்டுக்கோங்க!! :-)

படம் : தாரே சமீன் பர் (நட்சத்திரங்கள்,பூமியின் மேல் )
இசை:சங்கர் எஹ்சான் லாய்
பாடகர்: சங்கர் மஹாதேவன்

இந்தி பாடல் வரிகள்(மொழி பெயர்ப்புடன்)

Main Kabhi Batlata Nahin
Par Andhere Se Darta Hoon Main Maa
Yun To Main,Dikhlata Nahin
Teri Parwaah Karta Hoon Main Maa
Tujhe Sab Hain Pata, Hain Na Maa
Tujhe Sab Hain Pata,,Meri Maa
(நான் யாருகிட்டேயும் சொன்னது இல்லை
ஆனா எனக்கு இருட்டை கண்டால் ரொம்ப பயம் ,அம்மா.
நான் வெளியிலே எதுவும் காட்டிக்கறது இல்லை,
ஆனா உன் மேல எனக்கு நிறைய அன்பு அக்கறை இருக்கு அம்மா.
உனக்கு எல்லாமே தெரியும்தானே அம்மா??
உனக்கு இது எல்லாம் தெரியும்தானே, என் அம்மா)

Bheed Mein Yun Na Chodo Mujhe
Ghar Laut Ke Bhi Aa Naa Paoon Maa
Bhej Na Itna Door Mujkko Tu
Yaad Bhi Tujhko Aa Naa Paoon Maa
Kya Itna Bura Hoon Main Maa
Kya Itna Bura Meri Maa
(கூட்டத்துல என்னை தனியா விட்டு போய்டாதமா
என்னால விட்டுக்கு திரும்பி வர கூட முடியாது
இவ்ளோ தூரம் என்னை தள்ளி அனுப்பாத அம்மா
அப்புறம் உனக்கு என்னை மறந்தே போயிட போகுது
நான் என்ன அவ்வளவு கெட்டவனா அம்மா??
நான் என்ன அவ்வளவு கெட்டவனா,என் அம்மா)

Jab Bhi Kabhi Papa Mujhe
Jo Zor Se Jhoola Jhulate Hain Maa
Meri Nazar Dhoondhe Tujhe
Sochu Yahi Tu Aa Ke Thaamegi Maa
(எப்போவெல்லாம் ஊஞ்சலிலே
அப்பா என்னை பலமா தள்ளி விடுவாரோ
அப்போவெல்லாம் என் கண்ணு உன்னையே தேடும்
நீ வந்து என்னை தாங்கி பிடிச்சுப்பேன்னு)

Unse Main Yeh Kehta Nahin
Par Main Seham Jaata Hoon Maa
Chehre Pe Aana Deta Nahin
Dil Hi Dil Mein Ghabraata Hoon Maa
Tujhe Sab Hai Pata Hai Naa Maa
Tujhe Sab Hai Pata Meri Maa
(அவரு கிட்ட நான் அதை சொல்ல மாட்டேன்
ஆனா உள்ளுக்குள்ள நடுங்கிடுவேன்
முகத்துல அது காட்டிக்க மாட்டேன்
ஆனா மனசளவுல ரொம்ப பயந்துருவேன் அம்மா)

Main Kabhi Batlata Nahin
Par Andhere Se Darta Hoon Main Maa
Yun To Main,Dikhlata Nahin
Teri Parwaah Karta Hoon Main Maa
Tujhe Sab Hain Pata, Hain Na Maa
Tujhe Sab Hain Pata,,Meri Maa
(நான் யாருகிட்டேயும் சொன்னது இல்லை
ஆனா எனக்கு இருட்டை கண்டால் ரொம்ப பயம் ,அம்மா.
நான் வெளியிலே எதுவும் காட்டிக்கறது இல்லை,
ஆனா உன் மேல எனக்கு நிறைய அன்பு அக்கறை இருக்கு அம்மா.
உனக்கு எல்லாமே தெரியும்தானே அம்மா??
உனக்கு இது எல்லாம் தெரியும்தானே, என் அம்மா)

பி.கு: எனக்கு தெரிஞ்ச வரைக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு செஞ்சிருக்கேன்,ஆங்கில மொழிபெயர்ப்பு வேணும்னா இங்கிட்டு போய் பாருங்க!

பனி சூழ்ந்த ஆன் ஆர்பர்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க ஊருல கன்னா பின்னான்னு பனி கொட்டிச்சுன்னு பதிவு ஒன்னு போட்டிருந்தேன்.
அன்னிக்கு பெய்த பனியில ஊரு முழுக்க ஒரே வெள்ளையும் சொள்ளையுமா இருக்குது மக்களே!!
போன வருஷம் கூட ஒரே நாள்ல இவ்வளவு பனி பெய்யாததால ஊரு முழுக்க இப்படி குழுமியிருக்கும் பனியை பாத்துட்டு என்னால சும்மா இருக்க முடியல!!
அதான் செல்போன்ல கொஞ்சம் சுட்டேன். நான் தான் ரொட்டிய தவிர எத சுட்டாலும் உங்க கிட்ட காட்டியே பழக்கப்பட்டுட்டேனே ,அதான் முழுக்க முழுக்க பனி படர்ந்த பிரதேசத்தை பார்க்க புதிதாக இருக்கும் என்று எடுத்தவையெல்லாம் உங்கள் பார்வைக்கு!!பனி பெய்து இரண்டு நாட்கள் ஆன அப்புறம் கூட எப்படி தரையே தெரியாம கம்பளி மாதிரி பனி போர்த்திகிட்டு இருக்குது பாருங்க!! :-)
ரோட்டுல இருக்கற பனி எல்லாம் இங்கிட்டு அரசாங்கம் ஒழுங்க ஒதுக்கி வெச்சிருவாங்க!
இதுல ஆங்கிள் சரியில்ல,அதுல லைட்டிங் சரியில்ல,நீயெல்லாம் PIT-ல என்ன பண்ணுறன்னூ எல்லாம் கலாய்க்க கூடாது. செல்போன்ல கையில் கடைச்சது எல்லாம் சும்மா எடுத்தேன்!! சரியா?? :-)

ந.கு(நடு குறிப்பு! ஹி ஹி) : படங்கள் மேலே க்ளிக்கி பெருசாக்கி பாத்துக்கோங்கப்பு!!













தொலைந்து போன நட்பு

ராஜேஷை முதன் முதலாக ஒரு புகைப்படத்தளத்தில் தான் பார்த்தேன்.படங்கள் எல்லாம் சும்மா கண்ணில் ஒற்றிக்கொள்வது போல எடுத்து வைத்திருந்தான்.அப்பொழுது அவனை பாராட்டி மறுமொழி அளிக்கப்போய் தான் அவன் தமிழில் பதிவெழுதுபவன் என்று தெரிந்துக்கொண்டேன்.அவனின் தமிழ்ப்பதிவை சென்று பார்த்தால் கட்டுரைகள் ஒவ்வொன்றும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.அவன் மேல் எனக்கு இருந்த மதிப்பு சில நாட்களிலேயே கிடு கிடு என்று உயர்ந்துக்கொண்டு சென்றது.இப்படியாக பின்னூட்டத்திலேயே கதைத்து விட்டு சில நாட்களில் மின் அஞ்சல் முகவரிகள் பறிமாறிக்கொண்டோம்.இவனை பார்த்து நானும் ஒரு பதிவு ஆரம்பித்து வைத்தேன்.எந்தன் ஆரம்ப கால முயற்சிகளில் உறுதுணையாக இருந்து என் பதிவுகளை படித்து அதில் முன்னேற்ற வழிகளையும் ஆலோசனைகளயும் அவன் தந்தான்.

சில நாட்கள் கழித்து அவனை உரையாடியில் தொடர்பு கொண்டேன்.பல திறமைகள் கொண்டவனாக இருந்தாலும் மிகவும் பணிவாக பேசினான். உரையாடுவதற்கும் ஒரு இனிய நண்பனாக அவன் தென்பட்டான்.இணைய உலகில் வலம் வர ஆரம்பித்த சில நாட்களிலேயே எனக்கு கிடைத்த இந்த நல்ல நண்பனை எண்ணி நான் பூரித்து போனேன்.இப்படி எங்கள் நட்பு வளர்ந்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் அவன் காணாமல் போனான்.

அவனின் பதிவுகளில் புதிய இடுகைகள் எதுவும் இடப்படவில்லை,அவன் புகைப்படத்தளத்திலும் புதிய படங்கள் இல்லை.உரையாடியிலும் அவனை பார்க்கமுடியவில்லை,மின் அஞ்சல் அனுப்பினாலும் பதில் ஏதும் இல்லை.எனக்கு அவனுக்கும் தெரிந்த பொதுவான இணைய நண்பர்களிடம் விசாரித்துப்பார்த்தேன்.அவர்களுக்கும் என்னை போல அவன் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை. அவனின் தொலைப்பேசி எண் கூட என்னிடத்தில் இல்லை,வீட்டு முகவரியும் என்னிடம் கிடையாது.சிறிது நாட்கள் குழம்பினேன்,திரும்ப வருகிறானா என்று அவன் பதிவுப்பக்கத்திற்கு அவ்வப்போது சென்று பார்த்தேன்,பின் சில நாட்களில் மறந்து போனேன்.

அதற்கு பின் மாதங்கள் சிறகை விரித்து கொண்டு பறந்து சென்றது.எத்தனை நட்புகள் பாராட்டுகள்.இணையத்தில் பல பேரை பழக்கப்படுத்திக்கொண்டேன்.பலர் வந்தார்கள்,என் பதிவை பார்த்தார்கள் சென்றார்கள்.என் பதிவு பல விதங்களாக அங்கீகாரங்களை வாங்கிக்குவித்தது.இதற்கு எல்லாம் முழுமுதற்காரணம் ராஜேஷ் தானே என்று நான் எண்ணாத நாள் இல்லை.முடிந்தவரை ஏதாவது மூத்த பதிவர்களிடம் பேச நேர்ந்தால் ராஜேஷை பற்றி விசாரிப்பது எனக்கு பழக்கமாகிவிட்டது.ஆனால் யாருக்குமே அவன் எங்கு சென்றான் ,அவனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

இப்படியாக ஒரு ஒன்பது மாதங்கள் ஓடி விட்டிருந்த நிலையில் உரையாடியில் திடீரென அவன் உட்புகுந்தான்!!! எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.சிறிது நேரம் ஆனந்தத்தில் கை கால் எதுவும் ஓட வில்லை. அவன் வேலை நிமித்தம் லண்டனில்் இருந்ததாகவும் ,இந்த நேரத்தில் அவனின தாயாருக்கு பெரும் பிணி தொற்றிக்கொண்டது என்றும்,இதற்காக அவன் இந்தியா திரும்பி சென்றதாக தெரிவித்தான்.அம்மாவின் உடல் நிலை நிமித்தமாக மருத்துவமனைக்கு அலைதலிலும்,தந்தை இல்லாத காரணத்தால் கல்லுரி செல்லும் தனது தங்கையை பார்த்துக்கொள்வதிலுமே நேரம் சென்று விட்டதாகவும்.பதிவுக்காக பிரத்தியேகமாக இந்த மின் அஞ்சல் கணக்கை ஏற்படுத்தியிருந்ததால்,இந்த ஒன்பது மாதங்களாக இதை திறக்கவேயில்லை என்றும் கூறினான்.சில மாதங்களுக்கு முன்பு அம்மாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்ததால்்,தங்கையின் படிப்பும் முடிந்து திருமணமும் சிறப்பாக நடந்தேறியதாம்,அதனால் இப்பொழுது அம்மாவை கூட்டிக்கொண்டு திரும்ப லண்டன்் வந்துவிட்டதாக தெரிவித்தான்!!! "ரொம்ப சந்தோஷம்!! அப்பொழுது முன்பைப்போல பதிவுகள் போட்டு பட்டையை கிளப்புவீர்களா??" என்று கேட்டதற்கு "நிச்சயமாக"என்றான் சிரிப்பான்களோடு.

இவனின் திரும்பலுக்கு பின் அதே தரத்தோடும் வேகத்தோடும்,பதிவுலகில் எழுதித்தள்ளிக்கொண்டிருந்தான்.இவனின் வருகையால் எங்கள் பதிவர் வட்டத்தில் உள்ள எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம்.திரும்பவும் இவனால் எங்களின் எழுத்து வாழ்க்கை களை கட்டியது.முன்பை விட அவனிடம் நான் சிறிது அதிகமாகவே நட்பு பாராட்டினேன். இழந்து பின் சேர்ந்த நண்பன் என்பதால் இவனின் இருப்பை முழுக்க முழுக்க பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன்.அவன் என்னிடம் அவ்வளவாக தன்னை பற்றி சொல்லாவிட்டாலும் நான் என் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் அவனிடம் பகிர்ந்துக்கொண்டேன்!! எங்களின் நட்பு நாளுக்கு நாள் நெருக்கமாகிக்கொண்டே போனது.இந்த நெருக்கத்தின் காரணமாக வெகு நாட்களாக நான் காதலித்து வரும் காதலியை பற்றியும் சொன்னேன்!! இது வரை நான் என் பெற்றொரிடம் கூட சொல்லாமல் வைத்திருந்தேன்.இவன் இந்த விஷயத்தில் அக்கறை எடுத்து விசாரித்து வந்தான். பெண்ணை பற்றியும்,எங்கள் காதல் பற்றியும்,இதை நாங்கள் வெற்றியாக்க தீட்டியிருக்கும் திட்டங்கள் பற்றியும் நிறைய கேள்விகள் கேட்பான்.ஆனால் ஆரம்பத்திலிருந்ததை விட இவனின் பழகும் விதத்தில் சற்றே மாற்றம் வந்ததாக எனக்கு பட்டது.ஆனால் அது என்ன என்று என்னால் தெளிவாக கூற முடியவில்லை.இந்த நிலையில் தான் அவனின் மின் அஞ்சல் முகவரியி லிருந்து இந்த கடிதம் வந்தது.

"அன்புள்ள பிரகாஷ்,
நல்லா இருக்கியா?? உன்னை போல ஒரு நண்பன் கெடைச்சதுக்கு நான் ரொம்ப குடுத்து வெச்சிருக்கனும்,ராஜேஷும் தான்!!என்ன குழப்பறேன்னு பாக்கறியா??? ஒரு கதை சொல்றேன்,கேட்டுகறியா??.

உனக்கு ரொம்ப நாளா ஒரு காதலி இருக்கறது போல ராஜேஷுக்கும் சின்ன வயசுல இருந்து ஒரு காதலி உண்டு.அவனோட பக்கத்து வீட்டுல இருந்த பொண்ணு!! அவன் கூடவே பள்ளிக்கூடத்துக்கும் காலேஜுக்கும் போன பொண்ணு.அவன் அம்மா கூடவும் தங்கச்சி கூடவும் எப்பவும் பழகிட்டு இருந்த பொண்ணு.அவனின் மிக நெருங்கிய தோழி அவதான்.ரெண்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வெக்கனும்னு ரெண்டு பேர் வீட்ல கூட மனசுலையே பேசி வெச்சிகிட்டாங்கன்னா பாத்துக்கோயேன்.அவங்க ரெண்டு பேரு நடுவுல எந்த ரகசியமும் இருந்தது கிடையாது.ஒருத்தர் மனசுல என்ன இருக்குன்னு இன்னொருத்தருக்கு புரியும்.இப்படி அவங்க வளர்ந்தாங்க!! அப்புறம் அவனுக்கு லண்டனில் வேலை கிடைச்சுது!! வந்துட்டு அவன் இணையத்திலும் நிறைய எழுத்துப்பணிகளில் ஈடுபட்டான்.ஆனா அவனோட எடுத்துக்களுக்கு பின்னாடி இருந்தது எல்லாம் அந்த பொண்ணுதான்.ரெண்டு பேரும் கலந்தாலோசித்த அப்புறம் தான் அவன் பதிவே எழுத ஆரம்பிப்பான்.எழுதிட்டு அவ சரின்னு சொன்னாதான் பதிவுல பிரசுரிப்பான்.இப்படி அவனோட எழுத்து,எண்ணம்,நண்பர்கள்,வேலைகள் எல்லாம் அவளுக்கு அத்துப்படி!! உன்னை பற்றி கூட அவன் தன்னோட காதலி கிட்ட சொல்லியிருக்கான்.இந்த மாதிரி சமயத்துல தான் அவன் அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதா அவனுக்கு செய்தி வந்தது.விழுந்தடிச்சுகிட்டு இந்தியாவுக்கு பயணப்பட்டான்.அவன் விமானத்துல போய் இறங்கி வீட்டுக்கு போகற வழியில ஒரு சாலை விபத்துல இறந்துட்டான்.

இந்த செய்தி கேட்டு அவனோட அம்மாவும் மருத்துவமனையிலேயே இறந்துட்டாங்க!! அவனோட தங்கை அவனோட காதலி வீட்டுல தான் அதுக்கு அப்புறம் தங்கினா.அவளோட படிப்பு முடிஞ்சதும் அவளை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செஞ்சு வெச்சாங்க!! ஆனா அவனோட காதலிக்கு தான் உலகமே புரியல!! அவளோட வாழ்க்கையாவே நெனைச்சிட்டு இருந்த அவளோட காதலன் இறந்து போய்ட்டான். கொஞ்ச மாசத்துக்கு அவளால,அவன் இறந்துட்டான்றதையே நம்ப முடியல!! இந்த பைத்தியக்கரத்தனத்துல எப்படி இவளை காப்பாத்தறதுன்னு அவளோட வீட்ல யோசிச்சிட்டு இருந்த போது அவளுக்கு லண்டன்ல வேலை பாக்கற சந்தர்ப்பம் கிடைச்சுது!! மனசுக்கு மாற்றமா இருக்கும்னு அவங்க வீட்டுலையும் அவளை அனுப்பி வெச்சாங்க.லண்டன் வந்தவ எதேச்சையா ராஜேஷோட மின் அஞ்சலில் உட்புகுந்தாள்,அப்போ ராஜேஷின் பதிவுலக நண்பர்கள் எல்லாம் அவளை பிடிச்சுக்கிட்டாங்க!! எல்லோருக்கும் இவ்வளவு பெரிய கதைய எப்படி சொல்லுறதுன்னு தெரியாம இவளும் நான் தான் ராஜேஷ்னு பொய் சொன்னா!! ஓரு மாற்றமா இருக்குமேன்னு ராஜேஷின் பதிவுகளில் எழுத ஆரம்பிச்சா!!

அவனுக்கும் அவளுக்கு ஒரே எண்ண ஓட்டம் இருந்ததால,அவளால யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி அவனைப்போலவே எழுத முடிஞ்சுது.அவனின் நண்பர்களிடத்திலும் அவள் அவ்வளவா ஒட்டுதல் இல்லாம இருந்ததால யாரு கிட்டேயும் அவ்வளவா பேச கூட மாட்டா,அதனாலா யாரும் சந்தேகப்படல.ஆனா உன்கிட்ட மட்டும் தான் அவ ஓரளவிற்கு நெருக்கமா பழகினா.நாளாக நாளாக உன் கூட அவளின் நட்பு அதிகமாகி ஒரு விதமான அதிகப்படியான அன்பு உருவாக ஆரம்பிச்சுது!!! அதை காதல்னு எல்லாம் சொல்லி நான் கொச்சைபடுத்த மாட்டேன்,ஆனா சாதாரணமான நட்பா என்னால அது வகைப்படுத்த முடியாது.இந்த சமயத்துல தான் உன்னோட காதல் பத்தி அவளுக்கு தெரிய வந்தது!! தனக்கு பிடித்த எல்லாவற்றையுமே கடவுள் தன்னிடமிருந்து பிரித்துக்கொண்டு போவதாலும்,தன்னால் உனக்கு பிரச்சினைகளும் குழப்பங்களும் தான் வரும் என்று தோண்றுவதாலும் உன்னிடம் இருந்து தொடர்பை நிறுத்திக்கொள்ள அவள் முடிவு செய்து விட்டாள்!! இது தான் இந்த கணக்கு வழியாக அவள் அனுப்பும் கடைசி கடிதம்.இதன் பின் இந்த கணக்கை அவள் அழித்துவிடுவாள்! இதனால் ராஜேஷின் பதிவும் அழிந்துப்போய் விடும்!!

அவளும் இதையெல்லாவற்றையும் மறந்து விட்டு ஒரு புது வாழ்க்கையை தொடங்குவாள்.இது குழப்பமில்லாமல் தெளிவாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு தான்!! நீ எதற்கும் கவலைப்படாதே!! இறைவன் உனக்கு ஒரு அருமையான துணையையும்,அன்பான நண்பர்கள் பலரையும் உனக்கு அளித்திருக்கிறார்,எல்லாம் நல்ல படியாக நடக்கும்!! என் வாழ்த்துக்களும்,வேண்டுதல்களும் எப்பொழுதும் உனக்கு உண்டு!
இப்படிக்கு,
ராஜேஷாய் நடித்த ராஜேஷின் காதலி (பெயர் வேண்டாமே)

நான் திக்பிரம்மை பிடித்தவன் போல கணிணி திரையை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

பி.கு:எனக்கு பொதுவா சிறுகதை எல்லாம் எழுத வராது மக்களே.ஏதாச்சும் எழுத ஆரம்பிச்சா வளவளன்னு இழுத்துக்கிட்டே போகும்!! இந்த கருவை நான் ரொம்ப நாளா யோசிச்சு வெச்சிருந்தேன்!!சமீபத்தில் நண்பர் ஒருவருடன் இணையத்தில் உரையாடிக்கொண்டிருந்த போது இதை சிறுகதையாக இதை எழுதிப்பாக்கலாம்னு தோன்றியதின் விளைவாக ஒரு சிறு முயற்சி!! முடிஞ்ச வரைக்கும் ஆங்கில கலப்பு இல்லாம வேற எழுதனும்னு முயற்சி பண்ணி இருக்கேன்!எப்படி இருக்குன்னு பாத்து சொல்லுங்க!! :-)

எங்கும் பனி மழை பொழிகிறது

இங்கிட்டு நேத்து மதியத்துல இருந்து அநியாயத்துக்கு பனி பொழிவு!! இன்னமும் பெய்துக்கொண்டிருக்கிறது!!

சில படங்கள் உங்கள் பார்வைக்கு!! :-)

















சின்ன வயசுல மழை பத்தி ஒரு தமிழ் ரைம்ஸ் படிச்சிருக்கேன்.அதுல ஒரு வரி வரும்.
"பார் முழுதும் வீட்டுலே,
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டுமே பாடுமே
தண்ணீரிலே ஆடுமே"
அப்படின்னு வரும்!! அதே மாதிரி இங்கிட்டு எல்லரும் க்வார்ட்டர் அடிச்ச்சிட்டு குப்புற படுத்திட்டு இருக்கும் போது,நான் பாட்டுக்கு லூசு மாதிரி இந்த பனிப்பொழிவுல வெளியிலே போய் படம் எடுத்துட்டு இருந்தேன்.

படம் எல்லாம் நல்லா இருக்கா?? :-)

இதழில் கதை எழுதும் நேரமிது

கானா பிரபா அண்ணாச்சியோட இந்த பதிவை பார்த்தில் இருந்து மனசு முழுக்க இந்த பாட்டுதான்!!
எனக்கு மிகவும் பிடித்தமான பாட்டு,அதிலும் பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அலமாரியில் இடமின்றி கச்சிதமாக அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களை போல் வார்த்தைகளை அழகாக மெட்டிற்குள் அடுக்கியிருக்கும் பாடலாசிரியரை என் மனம் பாராட்டாத நாளே கிடையாது!!
மிக மிக அழகான வரிகள் கொண்ட பாடல்!! கூடவே எஸ்.பி.பி யின் துல்லியமான உச்சரிப்போடு கூடிய இனிமையான குரல்,சின்னக்குயில் சித்ராவின் தேன்குரலோடு சேர்ந்து தெவிட்டாத விருந்து படைத்து விடும்!! :-)
நான் என் நண்பர்களிடம் பல முறை,தமிழ் திரையிசை என்பது அள்ள அள்ள குறையாத பொக்கிஷம் என்று சொல்லுவதுண்டு.அந்த பொக்கிஷ மலையில் கடைந்தெடுத்த முத்துச்சரம் இந்தப்பாடல் என்று தைரியமாக சொல்லலாம்.இனிக்கும் இசை விருந்தை ருசித்து மகிழுங்கள்!! :-)


Get Your Own Music Player at Music Plugin

வீடியோ பார்க்க முடிந்தவர்கள் இந்த பாட்டு படமாக்கிய விதத்தையும் கண்டு களிக்கலாமே!! :-)



படம் :உன்னால் முடியும் தம்பி
பாடல் :இதழில் கதை எழுதும்
குரல் :எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா
பாடல் வரிகள்:புலமைப்பித்தன்
இசை : இளையராஜா

(ஆண்)
இதழில் கதை எழுதும் நேரமிது (2)
இன்பங்கள் அழைக்குது ஆ....

பெண்
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆ....
மனதில் சுகம் மலரும் மாலையிது

(ஆண்)
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே (2)
இருகரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது

(இசை....)

(ஆண்)
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக் கண்டு
ஏதோதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்

பெண்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்

(ஆண்)
இனிய பருவமுள்ள இளங்குயிலே (2)
ஏன் இன்னும் தாமதம் மன்மத காவியம் என்னுடன் எழுது

பெண்
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது

(ஆண்)
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒருமுறை தழுவடி

பெண்
காலம் வரும்வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே

(ஆண்)
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ

பெண்
மாலை மணமாலை இடும் வேளைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்

(ஆண்)
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ....

பெண்
மனதில் சுகம் மலரும் மாலையிது

(இசை....)

(ஆண்)
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே

பெண்
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா

(ஆண்)
அழகைச் சுமந்து வரும் அழகரசி (2)
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

பெண்
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது

(ஆண்)
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன்; கணை வந்து மார்பினில் பாயுது

பெண்
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது

(ஆண்)
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது

பெண்
மோகம் நெருப்பானதும் அதைத் தீர்க்கும்;
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆ....

(ஆண்)
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ....
இதழில் கதை எழுதும் நேரமிது


பி.கு:பாடலின் வரிகள் இந்த தளத்தில் இருந்து வெட்டி ஒட்டியது

Related Posts Widget for Blogs by LinkWithin