செல்போன் சித்திரங்கள் சில

வணக்கம் மக்களே,
ரொம்ப நாள் கழிச்சு செல்போன் படங்கள் சில உங்கள் பார்வைக்கு.
செல்போனில் எடுத்ததால் பிக்செல்(pixel) தரம் குறைந்திருக்கும்.அதுவும் இல்லாமல் நான் பிற்தயாரிப்பு(post production) செய்கிறேன் பேர்வழி என்று நோண்டியதில் மேலும் குறைந்து விட்டது.வழக்கம்போல் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளுங்கள்! :-)மேலே இருக்கறது எங்க அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் வாசலிலே இருக்கற பலகை. வெளி வாகனங்களை நிறுத்தினால் அலேக்கா தூக்கிட்டு போயிருவோம்,அதுக்கு காசும் வண்டியின் உரிமையாளர்கள் தான் தரணும் அப்படின்னு டீஜெண்டா சொல்லியிருக்காய்ங்க!


எங்க ஆபீஸு சாப்பிடும் கூடத்தில் (Atrium) சாப்பிட்டு விட்டு கதைக்கும் போது என்னுள் ஒளிந்திருக்கும் புகைப்பட கலைஞன் அங்கே இங்கே நோட்டம் விட ஆரம்பித்து விடுவான். அப்பொழுது தலையை மேல் நோக்கி திருப்புகையில் பக்கத்தில் இருக்கும் விளக்கும்,தலைக்கு மேல் இருக்கும் கண்ணாடி கூரையும் இப்படியாக தெரிந்தது!!! விட்டு வைக்க முடியுமா??? :-)


எங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் நூலகத்துக்கு நான் அடிக்கடி நடந்து சென்று வருவது வழக்கம். போகும் வழியில் உள்ள இந்த மேம்பாலத்தின் மேல் நின்றுக்கொண்டு கீழே போய் வரும் வாகனங்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. இந்த படத்தில் நிழலாக நிற்பது நான் தான் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா?? :-)

எங்க சாப்பாட்டு கூடத்தின் மேல் உள்ள கண்ணாடி கூரை!! நான் முன்பே குறிப்பிட்டது போல ,விட்டு வைக்க முடியாத அழகு!! அதான் சுட்டு விட்டேன்! :-)

ஒரு மாலை நேரத்தில் எங்கள் ஊர் விமான நிலையத்தின் (சும்மா பேருக்கு ஒன்னு இருக்குங்க!) பக்கத்தில் இருந்து மேகங்களின் விளையாட்டால் கவரப்பட்டு எடுத்தது!!

வரட்டா?? :-)

24 comments:

MyFriend said...

போன்ல எடுத்த படம்மாதிரியே தெரியலை. ரொம்ப அழகா வந்திருக்கு விஞ்ஞானி.. :-)

வடுவூர் குமார் said...

நல்ல படங்கள்- முதலிரண்டும்.
சமீபத்தில் தோட்டத்தில் எடுத்த படங்களை போடலாம் என்றுள்ளேன்.
முடிந்தால் பாருங்கள்- கருத்து சொல்லுங்கள்.

cheena (சீனா) said...

புகைப்படக்கலை என்பது ஒரு அரிய கலை. இப்படங்களை சாதாரணமாகப் பார்த்து நன்றாக இருக்கிறது எனப் பாராட்டலாம். ஆனால் இக்கலையை அறிந்த நிபுணர்களின் விமர்சனமே தங்களுக்கு மனத்திருப்தியை அளிக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல படங்கள்.. பிக்செல் தரம் பத்தி எல்லாம் அப்பறம் இருக்கட்டும்.. முதல்ல எடுக்க தகுந்த இடமெல்லாம் எதுன்னு ஒரு பாடம் இந்த செல்போன் சித்திரம்.. எங்கே போனாலும் உள்ளே இருக்க கலைஞனோ கலைஞியோ முழிச்சிக்கிட்டுருக்கனும்.... ;)

CVR said...

@மை ஃபிரண்ட்
வாழ்த்துக்களுக்கு நன்றி மை ஃபிரண்ட்.

@வடுவூர் குமார்
பதிவு போட்ட அப்புறம் கண்டிப்பா வந்து பக்கறேன் அண்ணாத்த!! வாழ்த்துக்களுக்கு நன்றி
:-)

@சீனா
நிபுனர்களின் கருத்துகள் திருப்தி அளிக்கும் ,ஆனால் நண்பர்கள் பார்த்து பிடித்திருக்கிறது என்றால் அந்த திருப்தியும் தனி தான்!! :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனா!! :-)

@முத்துலெட்சுமி
நீங்க சொல்லுறது சரிதான் அக்கா. எங்கே போனாலும் நம்மை சுற்றியுள்ள விஷயங்களின் அழகை பாராட்ட முடிந்தால் அதுதான் கலையின் தொடக்கம்! :-)

கோபிநாத் said...

போட்டோ ஞானி சீ.வி.ஆர்

எல்லா படமும் நல்லாயிருக்கு..அதிலும் 3வதுபடம் ரொம்ப நல்லாயிருக்கு..வாழ்த்துக்கள் :)

ALIF AHAMED said...

கேமரா SAMSUNG மாதிரி இருக்கு..

அதுவும் sgh-t809 மாடல் ??


:)

CVR said...

@கோபி
நன்றி கோபி அண்ணே! :-)

@மின்னல்
என் செல்போன் மாடல் Samsung t809 அண்ணாச்சி! :-)

G.Ragavan said...

அடேங்கப்பா.....அடடா! எல்லாமே நல்லாருக்கு. ஆனா எனக்கு ரொம்பப் பிடிச்சது அந்த மேம்பாலத்துல நின்னு படம் பிடிச்சிருக்கியே. சூப்பரப்பு. விமான நிலையமும் நல்லாருக்கு.

G.Ragavan said...

இதப் பாத்தப்ப்புறம் ஒரு பட்டம் குடுக்கனும்னு தோணுச்சு. சுருக்கமா இனிமே புபு சிவிஆர்னு கூப்புடலாம்னு இருக்கேன்.

அதென்ன புபு? புகைப்படப் புலவர். :)

எங்க..மக்கள் எல்லாரும் சேந்து சொல்லுங்க புபு சிவிஆர் வாழ்க.

கானா பிரபா said...

புபு அல்லது காக (காமெரா கவிஞர்) சிவிஆர் கவனத்திற்கு

நீங்கள் இம்மாதிரிப் படங்கள் தொடர்ந்தும் எடுத்து எங்களுக்கு தொடர்ந்தும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி வருகின்றீகள், உங்கள் பணி தொடரட்டும் ;)

ஜி said...

:)))

cell phonela kooda sceneaa padam eduthirukeenga :)))

நாகை சிவா said...

கலக்கலா இருக்கு :)

G3 said...

நல்லாத்தான் படம் காட்டறீங்க ;)

G.Ragavan said...

// கானா பிரபா said...
நீங்கள் இம்மாதிரிப் படங்கள் தொடர்ந்தும் எடுத்து எங்களுக்கு தொடர்ந்தும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி வருகின்றீகள், உங்கள் பணி தொடரட்டும் ;) //

ஹா ஹா ஹா சரியாச் சொன்னீங்க பிரபா. இப்பல்லாம் காமெராவத் தொடவே யோசனையா இருக்கு. எல்லாம் இந்த புபு காகவால வந்த வினை.

Dreamzz said...

pics are nice :)

சதங்கா (Sathanga) said...

CVR,

'செல் சித்திரங்கள்' அனத்தும் அருமை.

2-ம் படம் simply cvr ... oooo... simply superb !!!

CVR said...

@ஜிரா
புபு,காக.....
அண்ணாத்த!!
என்னிய வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே???? :-)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)

@கானா பிரபா
மற்றவருக்கு தாழ்வு மனப்பான்மை தரும் அளவுக்கு இன்னும் உயர்வில்லை அண்ணா!! :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி :-)

@ஜி
கையில எந்த கேமரா கெடைச்சாலும் படம் காட்ட ஆரம்பிச்சிருவோம்ல!! :-P

@நாகை சிவா
நன்றி அண்ணாத்த

@G3
அதெல்லாம் நல்லாத்தான் பண்ணுவோம் யக்கோவ்!! :-D

@Dreamzz
Thanks Dreamzz! :-)

@சதங்கா
வாங்க சதங்கா!
படங்கள் உங்களுக்கு பிடித்திருந்தமையில் மகிழ்ச்சி!! :-)

ஜே கே | J K said...

படங்கள் நல்லா இருக்கு.

post production செய்ய ஒரிஜினல் படம் எவ்வளவு பிக்சல்ல வேனும்.

Raji said...

Mobile la edutha padam maadhiriyae illa ellam azhaga irukku:)

Iyappan Krishnan said...

unga cell phone la mattum thaan ippadi varumaa illa ellaar cell phone layum ippadi edukkalaamaa

( Jil Jil of TM style la padikkanum theriyuthaa )

JK
//
படங்கள் நல்லா இருக்கு.

post production செய்ய ஒரிஜினல் படம் எவ்வளவு பிக்சல்ல வேனும்.//


appadi onnum alavukol illai. crop pannanumna konjam athigam ( say around 3MP and above ? ) should be enough. maththapadi endha pugaippadamum PP kku ERRa pugaippadamEpu.pu & kE.ka - sariya sollirukkEnaa ?

CVR said...

@ஜேகே
உங்க கேள்விக்கு ஜீவ்ஸ் அண்ணாச்சி கச்சிதமா பதில் சொல்லிட்டாரு பாருங்க!! நான் சொல்ல நினைத்த பதிலும் இதுதான்!! :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி

@ராஜி
நன்றி ராஜி

@ஜீவ்ஸ்
உங்க பேச்சுக்கு மறு பேச்சு இருக்கா அண்ணாச்சி!!
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!! நான் சொல்ல விரும்பிய பதிலும் இதுவே தான்!!
நன்றி!! :-)

Anonymous said...

Excellent pictures. I really loved everything. You have an excellent talent.

Rumya

Ungalranga said...

cool photos first and last one are really superb....

Related Posts Widget for Blogs by LinkWithin