ராஜேஷை முதன் முதலாக ஒரு புகைப்படத்தளத்தில் தான் பார்த்தேன்.படங்கள் எல்லாம் சும்மா கண்ணில் ஒற்றிக்கொள்வது போல எடுத்து வைத்திருந்தான்.அப்பொழுது அவனை பாராட்டி மறுமொழி அளிக்கப்போய் தான் அவன் தமிழில் பதிவெழுதுபவன் என்று தெரிந்துக்கொண்டேன்.அவனின் தமிழ்ப்பதிவை சென்று பார்த்தால் கட்டுரைகள் ஒவ்வொன்றும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.அவன் மேல் எனக்கு இருந்த மதிப்பு சில நாட்களிலேயே கிடு கிடு என்று உயர்ந்துக்கொண்டு சென்றது.இப்படியாக பின்னூட்டத்திலேயே கதைத்து விட்டு சில நாட்களில் மின் அஞ்சல் முகவரிகள் பறிமாறிக்கொண்டோம்.இவனை பார்த்து நானும் ஒரு பதிவு ஆரம்பித்து வைத்தேன்.எந்தன் ஆரம்ப கால முயற்சிகளில் உறுதுணையாக இருந்து என் பதிவுகளை படித்து அதில் முன்னேற்ற வழிகளையும் ஆலோசனைகளயும் அவன் தந்தான்.
சில நாட்கள் கழித்து அவனை உரையாடியில் தொடர்பு கொண்டேன்.பல திறமைகள் கொண்டவனாக இருந்தாலும் மிகவும் பணிவாக பேசினான். உரையாடுவதற்கும் ஒரு இனிய நண்பனாக அவன் தென்பட்டான்.இணைய உலகில் வலம் வர ஆரம்பித்த சில நாட்களிலேயே எனக்கு கிடைத்த இந்த நல்ல நண்பனை எண்ணி நான் பூரித்து போனேன்.இப்படி எங்கள் நட்பு வளர்ந்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் அவன் காணாமல் போனான்.
அவனின் பதிவுகளில் புதிய இடுகைகள் எதுவும் இடப்படவில்லை,அவன் புகைப்படத்தளத்திலும் புதிய படங்கள் இல்லை.உரையாடியிலும் அவனை பார்க்கமுடியவில்லை,மின் அஞ்சல் அனுப்பினாலும் பதில் ஏதும் இல்லை.எனக்கு அவனுக்கும் தெரிந்த பொதுவான இணைய நண்பர்களிடம் விசாரித்துப்பார்த்தேன்.அவர்களுக்கும் என்னை போல அவன் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை. அவனின் தொலைப்பேசி எண் கூட என்னிடத்தில் இல்லை,வீட்டு முகவரியும் என்னிடம் கிடையாது.சிறிது நாட்கள் குழம்பினேன்,திரும்ப வருகிறானா என்று அவன் பதிவுப்பக்கத்திற்கு அவ்வப்போது சென்று பார்த்தேன்,பின் சில நாட்களில் மறந்து போனேன்.
அதற்கு பின் மாதங்கள் சிறகை விரித்து கொண்டு பறந்து சென்றது.எத்தனை நட்புகள் பாராட்டுகள்.இணையத்தில் பல பேரை பழக்கப்படுத்திக்கொண்டேன்.பலர் வந்தார்கள்,என் பதிவை பார்த்தார்கள் சென்றார்கள்.என் பதிவு பல விதங்களாக அங்கீகாரங்களை வாங்கிக்குவித்தது.இதற்கு எல்லாம் முழுமுதற்காரணம் ராஜேஷ் தானே என்று நான் எண்ணாத நாள் இல்லை.முடிந்தவரை ஏதாவது மூத்த பதிவர்களிடம் பேச நேர்ந்தால் ராஜேஷை பற்றி விசாரிப்பது எனக்கு பழக்கமாகிவிட்டது.ஆனால் யாருக்குமே அவன் எங்கு சென்றான் ,அவனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
இப்படியாக ஒரு ஒன்பது மாதங்கள் ஓடி விட்டிருந்த நிலையில் உரையாடியில் திடீரென அவன் உட்புகுந்தான்!!! எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.சிறிது நேரம் ஆனந்தத்தில் கை கால் எதுவும் ஓட வில்லை. அவன் வேலை நிமித்தம் லண்டனில்் இருந்ததாகவும் ,இந்த நேரத்தில் அவனின தாயாருக்கு பெரும் பிணி தொற்றிக்கொண்டது என்றும்,இதற்காக அவன் இந்தியா திரும்பி சென்றதாக தெரிவித்தான்.அம்மாவின் உடல் நிலை நிமித்தமாக மருத்துவமனைக்கு அலைதலிலும்,தந்தை இல்லாத காரணத்தால் கல்லுரி செல்லும் தனது தங்கையை பார்த்துக்கொள்வதிலுமே நேரம் சென்று விட்டதாகவும்.பதிவுக்காக பிரத்தியேகமாக இந்த மின் அஞ்சல் கணக்கை ஏற்படுத்தியிருந்ததால்,இந்த ஒன்பது மாதங்களாக இதை திறக்கவேயில்லை என்றும் கூறினான்.சில மாதங்களுக்கு முன்பு அம்மாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்ததால்்,தங்கையின் படிப்பும் முடிந்து திருமணமும் சிறப்பாக நடந்தேறியதாம்,அதனால் இப்பொழுது அம்மாவை கூட்டிக்கொண்டு திரும்ப லண்டன்் வந்துவிட்டதாக தெரிவித்தான்!!! "ரொம்ப சந்தோஷம்!! அப்பொழுது முன்பைப்போல பதிவுகள் போட்டு பட்டையை கிளப்புவீர்களா??" என்று கேட்டதற்கு "நிச்சயமாக"என்றான் சிரிப்பான்களோடு.
இவனின் திரும்பலுக்கு பின் அதே தரத்தோடும் வேகத்தோடும்,பதிவுலகில் எழுதித்தள்ளிக்கொண்டிருந்தான்.இவனின் வருகையால் எங்கள் பதிவர் வட்டத்தில் உள்ள எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம்.திரும்பவும் இவனால் எங்களின் எழுத்து வாழ்க்கை களை கட்டியது.முன்பை விட அவனிடம் நான் சிறிது அதிகமாகவே நட்பு பாராட்டினேன். இழந்து பின் சேர்ந்த நண்பன் என்பதால் இவனின் இருப்பை முழுக்க முழுக்க பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன்.அவன் என்னிடம் அவ்வளவாக தன்னை பற்றி சொல்லாவிட்டாலும் நான் என் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் அவனிடம் பகிர்ந்துக்கொண்டேன்!! எங்களின் நட்பு நாளுக்கு நாள் நெருக்கமாகிக்கொண்டே போனது.இந்த நெருக்கத்தின் காரணமாக வெகு நாட்களாக நான் காதலித்து வரும் காதலியை பற்றியும் சொன்னேன்!! இது வரை நான் என் பெற்றொரிடம் கூட சொல்லாமல் வைத்திருந்தேன்.இவன் இந்த விஷயத்தில் அக்கறை எடுத்து விசாரித்து வந்தான். பெண்ணை பற்றியும்,எங்கள் காதல் பற்றியும்,இதை நாங்கள் வெற்றியாக்க தீட்டியிருக்கும் திட்டங்கள் பற்றியும் நிறைய கேள்விகள் கேட்பான்.ஆனால் ஆரம்பத்திலிருந்ததை விட இவனின் பழகும் விதத்தில் சற்றே மாற்றம் வந்ததாக எனக்கு பட்டது.ஆனால் அது என்ன என்று என்னால் தெளிவாக கூற முடியவில்லை.இந்த நிலையில் தான் அவனின் மின் அஞ்சல் முகவரியி லிருந்து இந்த கடிதம் வந்தது.
"அன்புள்ள பிரகாஷ்,
நல்லா இருக்கியா?? உன்னை போல ஒரு நண்பன் கெடைச்சதுக்கு நான் ரொம்ப குடுத்து வெச்சிருக்கனும்,ராஜேஷும் தான்!!என்ன குழப்பறேன்னு பாக்கறியா??? ஒரு கதை சொல்றேன்,கேட்டுகறியா??.
உனக்கு ரொம்ப நாளா ஒரு காதலி இருக்கறது போல ராஜேஷுக்கும் சின்ன வயசுல இருந்து ஒரு காதலி உண்டு.அவனோட பக்கத்து வீட்டுல இருந்த பொண்ணு!! அவன் கூடவே பள்ளிக்கூடத்துக்கும் காலேஜுக்கும் போன பொண்ணு.அவன் அம்மா கூடவும் தங்கச்சி கூடவும் எப்பவும் பழகிட்டு இருந்த பொண்ணு.அவனின் மிக நெருங்கிய தோழி அவதான்.ரெண்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வெக்கனும்னு ரெண்டு பேர் வீட்ல கூட மனசுலையே பேசி வெச்சிகிட்டாங்கன்னா பாத்துக்கோயேன்.அவங்க ரெண்டு பேரு நடுவுல எந்த ரகசியமும் இருந்தது கிடையாது.ஒருத்தர் மனசுல என்ன இருக்குன்னு இன்னொருத்தருக்கு புரியும்.இப்படி அவங்க வளர்ந்தாங்க!! அப்புறம் அவனுக்கு லண்டனில் வேலை கிடைச்சுது!! வந்துட்டு அவன் இணையத்திலும் நிறைய எழுத்துப்பணிகளில் ஈடுபட்டான்.ஆனா அவனோட எடுத்துக்களுக்கு பின்னாடி இருந்தது எல்லாம் அந்த பொண்ணுதான்.ரெண்டு பேரும் கலந்தாலோசித்த அப்புறம் தான் அவன் பதிவே எழுத ஆரம்பிப்பான்.எழுதிட்டு அவ சரின்னு சொன்னாதான் பதிவுல பிரசுரிப்பான்.இப்படி அவனோட எழுத்து,எண்ணம்,நண்பர்கள்,வேலைகள் எல்லாம் அவளுக்கு அத்துப்படி!! உன்னை பற்றி கூட அவன் தன்னோட காதலி கிட்ட சொல்லியிருக்கான்.இந்த மாதிரி சமயத்துல தான் அவன் அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதா அவனுக்கு செய்தி வந்தது.விழுந்தடிச்சுகிட்டு இந்தியாவுக்கு பயணப்பட்டான்.அவன் விமானத்துல போய் இறங்கி வீட்டுக்கு போகற வழியில ஒரு சாலை விபத்துல இறந்துட்டான்.
இந்த செய்தி கேட்டு அவனோட அம்மாவும் மருத்துவமனையிலேயே இறந்துட்டாங்க!! அவனோட தங்கை அவனோட காதலி வீட்டுல தான் அதுக்கு அப்புறம் தங்கினா.அவளோட படிப்பு முடிஞ்சதும் அவளை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செஞ்சு வெச்சாங்க!! ஆனா அவனோட காதலிக்கு தான் உலகமே புரியல!! அவளோட வாழ்க்கையாவே நெனைச்சிட்டு இருந்த அவளோட காதலன் இறந்து போய்ட்டான். கொஞ்ச மாசத்துக்கு அவளால,அவன் இறந்துட்டான்றதையே நம்ப முடியல!! இந்த பைத்தியக்கரத்தனத்துல எப்படி இவளை காப்பாத்தறதுன்னு அவளோட வீட்ல யோசிச்சிட்டு இருந்த போது அவளுக்கு லண்டன்ல வேலை பாக்கற சந்தர்ப்பம் கிடைச்சுது!! மனசுக்கு மாற்றமா இருக்கும்னு அவங்க வீட்டுலையும் அவளை அனுப்பி வெச்சாங்க.லண்டன் வந்தவ எதேச்சையா ராஜேஷோட மின் அஞ்சலில் உட்புகுந்தாள்,அப்போ ராஜேஷின் பதிவுலக நண்பர்கள் எல்லாம் அவளை பிடிச்சுக்கிட்டாங்க!! எல்லோருக்கும் இவ்வளவு பெரிய கதைய எப்படி சொல்லுறதுன்னு தெரியாம இவளும் நான் தான் ராஜேஷ்னு பொய் சொன்னா!! ஓரு மாற்றமா இருக்குமேன்னு ராஜேஷின் பதிவுகளில் எழுத ஆரம்பிச்சா!!
அவனுக்கும் அவளுக்கு ஒரே எண்ண ஓட்டம் இருந்ததால,அவளால யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி அவனைப்போலவே எழுத முடிஞ்சுது.அவனின் நண்பர்களிடத்திலும் அவள் அவ்வளவா ஒட்டுதல் இல்லாம இருந்ததால யாரு கிட்டேயும் அவ்வளவா பேச கூட மாட்டா,அதனாலா யாரும் சந்தேகப்படல.ஆனா உன்கிட்ட மட்டும் தான் அவ ஓரளவிற்கு நெருக்கமா பழகினா.நாளாக நாளாக உன் கூட அவளின் நட்பு அதிகமாகி ஒரு விதமான அதிகப்படியான அன்பு உருவாக ஆரம்பிச்சுது!!! அதை காதல்னு எல்லாம் சொல்லி நான் கொச்சைபடுத்த மாட்டேன்,ஆனா சாதாரணமான நட்பா என்னால அது வகைப்படுத்த முடியாது.இந்த சமயத்துல தான் உன்னோட காதல் பத்தி அவளுக்கு தெரிய வந்தது!! தனக்கு பிடித்த எல்லாவற்றையுமே கடவுள் தன்னிடமிருந்து பிரித்துக்கொண்டு போவதாலும்,தன்னால் உனக்கு பிரச்சினைகளும் குழப்பங்களும் தான் வரும் என்று தோண்றுவதாலும் உன்னிடம் இருந்து தொடர்பை நிறுத்திக்கொள்ள அவள் முடிவு செய்து விட்டாள்!! இது தான் இந்த கணக்கு வழியாக அவள் அனுப்பும் கடைசி கடிதம்.இதன் பின் இந்த கணக்கை அவள் அழித்துவிடுவாள்! இதனால் ராஜேஷின் பதிவும் அழிந்துப்போய் விடும்!!
அவளும் இதையெல்லாவற்றையும் மறந்து விட்டு ஒரு புது வாழ்க்கையை தொடங்குவாள்.இது குழப்பமில்லாமல் தெளிவாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு தான்!! நீ எதற்கும் கவலைப்படாதே!! இறைவன் உனக்கு ஒரு அருமையான துணையையும்,அன்பான நண்பர்கள் பலரையும் உனக்கு அளித்திருக்கிறார்,எல்லாம் நல்ல படியாக நடக்கும்!! என் வாழ்த்துக்களும்,வேண்டுதல்களும் எப்பொழுதும் உனக்கு உண்டு!
இப்படிக்கு,
ராஜேஷாய் நடித்த ராஜேஷின் காதலி (பெயர் வேண்டாமே)
நான் திக்பிரம்மை பிடித்தவன் போல கணிணி திரையை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன்.
பி.கு:எனக்கு பொதுவா சிறுகதை எல்லாம் எழுத வராது மக்களே.ஏதாச்சும் எழுத ஆரம்பிச்சா வளவளன்னு இழுத்துக்கிட்டே போகும்!! இந்த கருவை நான் ரொம்ப நாளா யோசிச்சு வெச்சிருந்தேன்!!சமீபத்தில் நண்பர் ஒருவருடன் இணையத்தில் உரையாடிக்கொண்டிருந்த போது இதை சிறுகதையாக இதை எழுதிப்பாக்கலாம்னு தோன்றியதின் விளைவாக ஒரு சிறு முயற்சி!! முடிஞ்ச வரைக்கும் ஆங்கில கலப்பு இல்லாம வேற எழுதனும்னு முயற்சி பண்ணி இருக்கேன்!எப்படி இருக்குன்னு பாத்து சொல்லுங்க!! :-)
தொலைந்து போன நட்பு
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
தொடர்ச்சியாய் படிக்கத்தூண்டும் எழுத்து நடை,அருமை,வாழ்த்துகள் நண்பரே!!!
அட!
சூப்பர் அண்ணாத்த. நல்ல கதை!அருமையான நடை!! :)
அருமையாகயிருக்கிறது சிவிஆர்!
தொலைந்த நட்பு மீண்டும் தொலைந்துப் போனதோ!!
நீங்களும் முதல் தடவையா? நீங்களும் ஆங்கிலக் கலப்பில்லாமலா? :))
வாங்கய்யா வாங்க!!
கதை நல்லா இருக்கு, ஆனா நச் கொஞ்சம் குறைவா இருக்கோன்னு தோணுது. அந்த ராஜேஷ் இறந்துட்டான்னு நினைச்சேன். ஆனா இந்த முடிவு கொஞ்சம் ஏமாற்றம்தான்.
ராஜேஷ் சகோதரி - அதுதான் இவன் காதலி அப்படின்னு ஒரு ட்விஸ்ட் வெச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
@நாடோடி இலக்கியன்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !!
@கப்பி
நன்றி பா! :-D
@திவ்யா
ஆமாம் என்ன செய்ய!! :-)
@கொத்தனார்
வாங்க!
இது மாதிரி பின்னூட்டம் வருமோன்னுதான் பயந்துட்டு இருந்தேன். :-)
இது நச் போட்டிக்காக எழுதப்பட்டது அல்ல!! எழுதி முடித்த பின் நச் போட்டிக்கு அனுப்பலாமா என்று தான் நினைத்தேன்,ஆனால் இதில் நச் போதாது என்று விட்டு விட்டேன்.நான் எழுதும் போதே நச் பற்றி எல்லாம் யோசிக்காமல் எழுதியது,அதனால் இதில் நச் இல்லாததில் எனக்கு வருத்தம் இல்லை.
போட்டிக்கு நச் வைத்து எழுதும் அளவிற்கு எனக்கு திறமை கிடையாது! :-)
//ராஜேஷ் சகோதரி - அதுதான் இவன் காதலி அப்படின்னு ஒரு ட்விஸ்ட் வெச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.///
அது வேறு கதையாகி போயிருக்கும்.நண்பனின் தங்கை காதலியாவது காலம் காலமாய் பார்த்துக்கொண்டு வருவது.நான் இந்த கதை மூலம் சொல்ல வந்த பரிமாணங்கள் வேறு!! :-)
\\இதில் நச் இல்லாததில் எனக்கு வருத்தம் இல்லை.
போட்டிக்கு நச் வைத்து எழுதும் அளவிற்கு எனக்கு திறமை கிடையாது! :-)\\
தன்னடக்கத்தின் மறுபெயர் சிவிஆரோ???
உங்களுக்குள்ள் திறமையிருக்கு சிவிஆர்,
இந்த கதை வேணா போட்டிக்குத் தேவையான 'நச்' இல்லாமல் இருந்திருக்கலாம்,
ஆனா எவ்வளவு அழகா சம்பவங்களை குழப்பங்கள் இல்லாமல் விவரிச்சிருக்கிறீங்க, அதுவே உங்கள் திறமைக்கு சான்று!!!
@திவ்யா!!
அடடா!!
என்னத்த சொல்ல!
இந்த பேச்சை வளர்க்க வேண்டாம்!! :-D
"நம்மளை இன்னுமா இந்த ஊரு நம்பிட்டு இருக்கு"ன்னு வடிவேலு ரேஞ்சுக்கு பொலம்பத்தான் தோணுது!!
நன்றி திவ்யா!!
:-)
//நான் இந்த கதை மூலம் சொல்ல வந்த பரிமாணங்கள் வேறு!! :-)//
நமக்கு இந்த பரிமாணம் பின்நவீனத்துவன் எழவெல்லாம் புரியறதில்லீங்க. படிச்சேன் கருத்து சொன்னேன் அம்புட்டுதான். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. ஆட்டையைப் போடுங்க.
@கொத்தனார்
///நமக்கு இந்த பரிமாணம் பின்நவீனத்துவன் எழவெல்லாம் புரியறதில்லீங்க. ///
எனக்கும் தான் அண்ணாச்சி!
பின்நவீனத்துவம்னா பின்னாடி திரும்பி பாத்துட்டு,பின்னாடி என்னத்த நவீனத்துவம் வேண்டி கெடக்குன்னு கேக்கற ஆசாமி நானு!! :-D
I wanted to write about internet friendship and how one person can be mistaken for another!!
இதுல நண்பனனின் தங்கை,காதலி அப்படின்னு எல்லாம் போட்டா typical கதையாகிடும் அண்ணாச்சி!!
நான் தப்பா ஒன்னும் எடுத்துக்கல,நான் கொஞ்சம் வேகமா பேசியிருந்தா மாதிரி இருந்துச்சுன்னா மன்னிச்சிடுங்க!
I never meant to sound rude! :-)
Again this is another disadvantage of written communication in internet!! :-)
நல்ல கதை.
நான் ஏதோ, உங்க சோகக் கததான் சொல்றீங்களோன்னு நெனச்சேன்.
நல்ல வேள, கதையாப் போச்சு.
:)
நண்பரே !! கதை அருமை - அழகு தமிழ் - எளிய சொற்கள் - தெள்ளிய நீரோட்டம்.
இந்த "நச்" - இதை பத்தி எல்லாம் கவலை பட வேணாம்.
இருந்தாலும் பிரகாஷின் காதலி தான் ராஜேஷின் காதலியோ - ஒரு தலைக் காதலோ - அதனால் தான் மறுபடியும் பிரிவோ - இப்படி எல்லாம் (இதுக்குப் பேரு நச்சா?) - எண்ணங்கள் ஓடியது.
புகைப்படத்தளம் - மறுமொழி - பதிவெழுதுபவன் - தமிழ்ப்பதிவு - (சுவாரஸ்யம் தமிழா ?) - மின் அஞ்சல் - உரையாடி - சிரிப்பான்கள் -
சுவையான சொற்கள்.
//ஆரம்பத்திலிருந்ததை விட இவனின்
பழகும் விதத்தில் சற்றே மாற்றம் வந்ததாக எனக்கு பட்டது.ஆனால் அது என்ன என்று என்னால் தெளிவாக கூற
முடியவில்லை//
இவ்வரிகள் திருப்பத்திற்கு ஒரு முன்னோடியா ?
வளர்க - தொடர்க - வாழ்த்துகள்
Asathiteenga CVR :))) Kalakala ezhudhi irukkeenga.. ippadi ellam ezhudhittu appuram vandhu enkitta irundhu perusaa ellam edhirpaakadheengannu sonna naanga vutruvoma :P
நடை நன்றாக உள்ளது. ஆனால் கதை இயல்பானதாக இல்லை.
முற்றிலும் தமிழுக்குப் பாராட்டுக்கள். :)
@சர்வே
நன்றி அண்ணாச்சி!!
இது மாதிரி எல்லாம் நடக்கற சாத்தியம் ரொம்ப கம்மி அண்ணாச்சி! :-)
@சீனா
விரிவான பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சீனா!! :-)
@ஜி3
திரும்பவும் சொல்றேன்,என் கிட்ட இருந்தெல்லாம் ரொம்ப எதிர்பார்க்காதீங்க!! :-)
@அரைபிளேடு
//ஆனால் கதை இயல்பானதாக இல்லை. ///
இது மாதிரி எல்லாம் நடக்குமா என்று கேட்கிறீர்களா??
இது improbable but not impossible ரகத்தில் சேரக்கூடிய கதை.
Facts are stranger in fiction! We never know!! :-)
கதை பழசு களம் புதுசு..
நல்லாவே இருந்தது. வாழ்த்துக்கள் ....
nalla eluthi irukinga sir... konjam bored adiciduchi... ana korvaiya eluthi irukinga...
அருமையான எழுத்து நடை சிவி...;))
வாழ்த்துக்கள் ;))
நல்ல கதை.. மெலிதான நடை.. ரொம்ப நல்லா வந்து இருக்கு CVR
gud one, i don read short/long stories in blog, but tiz one was kinda intriguing.
keep it up.
superuuuuu...
நல்ல கதை. நல்லா எழுதீருங்க சீவியார். எல்லாரும் விரும்பி உங்க கதையைப் படிக்கிறாங்கன்னு தெரியுது. ரொம்ப நல்லது. தொடரட்டும் இது.
ந.ஒ.க:
ம்ம், நல்லாத்தான்யா வருது..
@நாகை சிவா
வித்தியாசமா எழுதியிருக்கோம்னு நெனைச்சிட்டு இருந்தா,அந்த நெனப்புல மண்ணை வாரி போட்டுட்டீங்களே அண்ணாச்சி!! :-D
@விக்னேஷ்வரன்
//konjam bored adiciduchi... ana korvaiya eluthi irukinga..///
நீங்க இப்போ பாராட்டறீங்களா,இல்லை நல்லா இல்லன்னு சொல்றீங்களா?? :-D
ஹாஹா!!
எதுவா இருந்தாலும் கருத்துக்கு நன்றி அண்ணாச்சி!! :-)
@கோபிநாத்
நன்றி பா!!
@ட்ரீம்ஸ்
தாங்ஸு!! B-)
@ஷ்ரவன்
Thanks Dude!! :-)
@K4K
வாங்க அண்ணாச்சி!! என்ன இப்போ எல்லாம் அவ்வளவா பாக்க முடியல?? ;)
@ஜிரா
//நல்ல கதை. நல்லா எழுதீருங்க சீவியார். எல்லாரும் விரும்பி உங்க கதையைப் படிக்கிறாங்கன்னு தெரியுது. ரொம்ப நல்லது. தொடரட்டும் இது///
ஆனா நீங்க என்ன நெனைக்கறீங்கன்னு சொல்லலியே அண்ணாச்சி!! ;)
@இளா
வாங்க தல!
வாழ்த்துக்களுக்கு நன்றி! :-)
ore vaarthai....
attakaasam...
It seems like there are always some real life stories behind every story of urs.
Niraya sirugathai padichi iruken but I feel sirugathikaana ilakanangal unnoda kathaila missing. It looks more of an essay. Hope u dont mistake for this comment.
நல்லாயிருந்தது.... :)
அண்ணா நீங்க என்ன கதை எழுதினாலும் அது அப்படியே நிஜமாக இருக்கு...நீங்க அண்ணாவா இல்லை அண்ணியா?சந்தேகமாக இருக்கே :))
உட்கார்ந்து யோசிக்கிறதோ!...
ரொம்ப நல்லாயிருக்கு!
உங்கள் எழுத்து பணி தொடரட்டும்...
நல்ல கதை..மனம் கனக்கிறது..நட்பு மீண்டும் தொலைந்து விட்டதே..
@ஜி
வாங்க வாங்க!!
உங்களை போன்ற கதாசிரியர்கள் கிட்ட இருந்து இந்த மாதிரி வார்த்தைகள் வருவதெல்லாம் கேட்க சந்தோஷம் தான்!! :-P
நன்றி! :-)
@Nalini
//It looks more of an essay. Hope u dont mistake for this comment.///
No problems!!
I appreciate your comment!
Thanks :-)
@இராம்
நன்றி அண்ணாச்சி!! :-)
@துர்கா
//.நீங்க அண்ணாவா இல்லை அண்ணியா?சந்தேகமாக இருக்கே :))///
நான் தான் பதிவுலகை விட்டு போகவே இல்லையே யக்கோவ்!! என்னை தவிர வேற யாரு இருக்க முடியும்?? ;)
@இவன்
//ரொம்ப நல்லாயிருக்கு!
உங்கள் எழுத்து பணி தொடரட்டும்...//
நன்றி அண்ணாச்சி!! :-)
@பாசமலர்
///நட்பு மீண்டும் தொலைந்து விட்டதே..////
சில சமயம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு வலி தரக்கூடிய முடிவுகளை நாம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது!
என்ன செய்ய!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)
//
SurveySan said...
நல்ல கதை.
நான் ஏதோ, உங்க சோகக் கததான் சொல்றீங்களோன்னு நெனச்சேன்.
நல்ல வேள, கதையாப் போச்சு.
:)
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
//
துர்கா|thurgah said...
அண்ணா நீங்க என்ன கதை எழுதினாலும் அது அப்படியே நிஜமாக இருக்கு...நீங்க அண்ணாவா இல்லை அண்ணியா?சந்தேகமாக இருக்கே :))
//
துர்கா குட் கொஸ்டியன் ஐ லைக் இட்
ஆனா இதுக்கு சிவிஆர் பதில் ஒத்துக்கறா மாதிரி இல்லியே!!
Jus happen to be here, see u have created a fan!
Very good story, I thought its about you. Konjam "gokulam" sayal therinja madhiri erukku, erundhalum nalla erukku.
ungay nadai romba saralama naturala erukku. thodarndhu padippen :)
Post a Comment