குறும்பின்றி அமையாது உலகு - 2 (நிறைவு பாகம்)

போன பாகம்

சுந்தர் இரு கை சேர்த்து "வணக்கம் சார்" என்றான். அவரின் புன்னகை சற்றே விரிவடைந்தது.தலையையும் சற்றே அசைத்தார்.அது அவனின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டது போலும்,அப்படியே அவனை உள்ளே அழைப்பது போலும் இருந்தது.


உள்ளே நுழையும்போது "என்ன சொல்றாரு" என்பது போல சுந்தர் கண்ணாலே அவரின் முதுகுக்கு பின்னால் கேள்வி கேட்க,"எனக்கு என்ன தெரியும்" என்பது போல் தோள்களை குலுக்கி விட்டு ஆனந்தி உதட்டை சுழித்தாள்.
"என்னப்பா?? வீடு எல்லாம் ஒழுங்கா கண்டு பிடிச்சாச்சா??" என்று கேட்டபடி இருக்கையை காட்டினார்.

"பிரச்சினை இல்லை சார்,முன்னமே ஒரு தடவை ஆன்ந்தியை சைட் அடிக்க இந்த பக்கம் வந்திருக்கேன் என்றான் சுந்தர்.
மணிகண்டன் சற்றே புருவத்தை உயர்த்த,ஆனந்தி திடீரென்று உரக்க சிரித்துக்கொண்டே "சுந்தர் இப்படிதான் ,அடிக்கடி ஜோக் அடிச்சிட்டே இருப்பாரு.இதுகூட ஜோக்கு தான்,இல்லையா சந்தர்ர்ர்ர்ர்ர்ர்" என சுந்தரை பார்த்து நறநறக்க.

"ஹி ஹி....ஆமாம் ஆமாம்....ஜோக்கு தான்....ஹி ஹி ஹி" சுந்தர் அசடு வழிந்தான்.

மணிகண்டனின் முகம் சற்றே இறுக்கம் குறைந்தது."வேர்க்க விருவிருக்க வந்திருக்கீங்க,நெற்றியில விபூதியெல்லாம் பூசியிருக்கீங்க,தம்பிக்கு தெய்வ பக்தி அதிகமோ" என்று கேட்டு வைக்க.

"அது சும்மா சீனுக்கு சார்,நான் பெருசா பக்திமான் எல்லாம் கிடையாது" என்று யதார்த்தமாக உளறி வைத்தான்.

"அப்போ சாமி எல்லாம் அவ்வளவா கும்பிட மாட்டீங்களா"என்று மணிகண்டன் சற்றே குரலில் கண்டிப்பு சேர கேட்டார்.

அப்பொழுதுதான் சுந்தருக்கு உறைத்தது.
"ஐ மீன்!! நான் சாமியெல்லாம் பாத்திருக்கேன்,ஐ மீன் கும்பிட்டிருக்கேன்.நான் கோவிலுக்கு எல்லாம் கூட போவேன்.வெள்ளிக்கிழமையெல்லாம் பொண்ணுங்க கூட வருவாங்களே,அந்த கோவிலுக்கு!! அதுக்காக பொண்ணுங்களை பாக்க தான் கோவிலுக்கு போவேன்னு இல்லை,அது பாட்டுக்கு சைட் பை சைட்!! அப்படின்னு நான் சொல்ல மாட்டேன்...ஹி ஹி" என்று இஷ்டத்துக்கு உளறிக்கொண்டு போனான்.

ஆனந்திக்கு கிலி பற்றிக்கொண்டது!!
"சுந்தர்!! இப்போதான் வந்திருக்கீங்க,கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க,நான் போய் உங்களுக்கு ஜூஸ் கொண்டு வரேன்்.வெயில்ல வேற வந்திருக்கீங்க,அதான் கொஞ்சம் மூளை...அதாவது களைப்பாக இருக்கீங்கன்னு சொல்ல வந்தேன்" அப்படியென்று ஆனந்தி சமயறைக்குள் ஓடி ஒளிந்துக்கொள்ள முற்பட்டாள்்.
போவதற்கு முன் மணிகண்டனின் பின்னால் நின்றுக்கொண்டு எல்லா அபினயங்களையும் காட்டி ஏதேதோ சொல்லிவிட்டு சென்றாள்.அறைக்குள் செல்லும் போது."முருகா!!! என்னை காப்பாத்து"என்று முனகிக்கொண்டே தான் போனாள்.

ஆண்கள் இருவரும் ஏதாவது பேசி கொண்டு ஒரு விதமான சமாதான நிலைக்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் அவர்களை தனியே விட்டு சென்றாளே தவிர,அவளுக்கு உள்ளுக்குள்பயம் குறைவதாய் இல்லை. சிறிது நேரத்தில் எலுமிச்சை சாறு பிழிந்து ஜூஸ் செய்து எடுத்துக்கொண்டு ஹாலுக்குள் செல்லும் போது இருவரும் ஏதோ வாதிட்டுக்கொண்டிருந்தார்கள்.

"நீங்க என்ன சொன்னாலும் சரி,என்னால ஏத்துக்க முடியாது.இது என் தனி மனித சுதந்திரத்துக்கு விடப்பட்டிருக்கும் சவால்"சுந்தர் கோபமா ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தான்.

"அதுக்காக காலம் காலமா கட்டிக்காத்துட்டு வர பாரம்பரியத்தை விட முடியுமா??எங்க குடும்பத்துல எல்லோரும் இதையே தான் பழக்கமா அனுசரிச்சிட்டு வரோம்"

"அதுக்காக நானும் அதை ஃபாலோ பண்ணனும்னு நீங்க எதிர்பார்க்கறது ரொம்ப தப்பு.இதை என்னால் ஏத்துக்கவே முடியாது" சுந்தரும் பதிலுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
ஆனந்திக்கு ஒன்றும் புரியவில்லை.
"அப்பா!! என்னாச்சு!! எதுக்கு ரெண்டு பேரும் சண்டை போடறீங்க??"என்றாள் பதட்டமாக.

"நீ சும்மா இரும்மா!! நீ இதுல தலையிடாத !! நாங்க என்ன நீங்க எல்லாம் நல்லா இருக்க கூடாதுன்னா சொல்றோம்??? எல்லாம் உங்க நல்லதுக்கு தானே?? இப்படி விதண்டாவாதமா பேசிட்டு இருந்தா எப்படி"
"சுந்தர்! என்ன ஆச்சு?? நான் எவ்வளவு பேசினாலும் பொறுமையா ஜோக் அடிச்சிட்டு இருப்பீங்க!! நீங்களே ஏன் இப்படி சண்டை போடுறீங்க??கொஞ்சம் பொறுமையா இருங்க ப்ளீஸ்" என்று ஆனந்தி நடுவில் சமாதானம் செய்ய முயன்றாள்்.

"என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு ஆனந்தி!! பெரிய மனுஷன்னு நானும் பொறுமையா தான பேசிட்டு இருந்தேன்,ஆனா போக போக பேசிட்டே போறாரு"என்றான் சுந்தர் ரோஷத்துடன்.
ஆனந்திக்கு அழுகையே வந்து விட்டது!! தன்னை உயிரினும்் மேலாக வளர்த்த தந்தை ,தன் மேல் அன்பும் பாசமும் வைத்து உருகி உருகி காதலிக்கும் சுந்தர்,இவர்கள் இருவரும் பேசி நல்ல நண்பர்கள் ஆவார்கள்,எந்த பிரச்சினையும் இன்றி திருமணமும் நடந்து விடும் என்று அவள் நினைத்திருந்தாள்.ஆனால் இவர்கள் இவ்வளவு தீவீரமாக சண்டை போடுவார்கள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
"சுந்தர் ப்ளீஸ் எனக்காக கொஞ்சம் நேரம் பொறுமையாக இருங்களேன்,அப்பா நீங்களும் ஏன் இப்படி சண்டை போடுறீங்க"என்று சொல்லிக்கொண்டே அவளின் அப்பவின் அருகில் உட்கார்ந்து அவரின் தோள் மீது கை வைத்தாள்.
அவளின் முகம் இதோ இப்பொழுதே அழ போகிறேன் என்று அறைக்கூவல் விடுவது போல இருந்தது.அவளின் கண்களில் கண்ணீர் சேர்ந்துக்கொண்டு எந்நேரமும் வழிந்துவிடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்தது.

அதை பார்த்ததும் சுந்தரின் முகம் உடனே இளகியது!!
"ஹே!!! ரிலாக்ஸ் டா நானும் அங்கிளும் சும்மா விளையாடிட்டு இருக்கோம்"என்றான்.

"அட!! சும்மா இருப்பா!! கொஞ்ச நேரம் இன்னும் விளையாடலாம்னு பாத்தா,அவ கொஞ்சம் கண்ணை கசக்கின உடனே மயங்கிட்டியே"என்றார் மணிகண்டன்,சிரித்துக்கொண்டே.

"என்ன பண்ணுறது அங்கிள்,அவ கண்ணுல தண்ணியை பாத்தாலே எனக்கு விளையாடவே மனசு வரல!! அவ மனசு கஷ்டப்பட்டா என்னால ஒரு நொடி கூட தாங்க முடியாது",என்றான் சுந்தர் புன்னகைத்தபடி.

"என்னா புள்ளையோ!! இப்படி இருந்தா என் பொண்ணு உன்னை ஏய்ச்சுபுடுவா பாத்து இருந்துக்கோ"என்றார் மணிகண்டன்,பலமாக சிரித்தப்படி.
இருவர் பேசுவது ஒன்றும் புரியாமல் முழித்துக்கொண்டே ,தந்தையை பார்த்தாள் ஆனந்தி.

"என்னமா பாக்கற?? உன் சுந்தர் சாதாரண ஆளு கிடையாது.முதல்ல என் கிட்ட சொல்லச்சொல்லி உன்னை ரொம்ப வற்புறுத்தி பாத்தான்,ஆனா நீ சொல்லுறதா இல்லை,அதான் நேர போய் அவங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டான்"என்றார்.
கண்களில் குழப்பத்துடன் சுந்தரை பார்த்தாள் ஆனந்தி.
"அவங்க அப்பா அம்மா சில வாரங்களுக்கு முன்னாலயே என்னை பாத்து பேசிட்டாங்க!! எதெல்லாம் பிரச்சினையா இருக்கும்னு நீங்க எல்லாம் பயந்துட்டு இருந்தீங்களோ,அதெல்லாம் நாங்க பெரிய விஷயமாவே பார்க்கல.
அவங்க பையனுக்கு ஏத்த மனைவியா நீ இருப்பன்னு அவங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை,அதே போல என் பொண்ணு சுந்தர் வீட்டுல சகல சந்தோஷத்தோட இருப்பாங்கறதுலா எனக்கும் சந்தேகம் கிடையாது.சரின்னு சட்டு புட்டுன்னு பேசி முடிச்சிட்டோம்" என்று தொடர்ந்தார் மணிகண்டன்,தன் மகளை அணைத்தபடி.

"உனக்கு சர்ப்ரைஸ்னா ரொம்ப பிடிக்குமேன்னு தான்,வெளியில சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்.உங்க அப்பாவும் என்னை மாதிரி விளையாட்டு புள்ளையா இருப்பாரு போல!! உடனே ஒத்துக்கிட்டாரு.இவ்வளவு நாளா உனக்கு தெரியாம நாங்க இந்த ட்ராமாவுக்கு அரேஞ்ச் பண்ணிட்டு இருந்தோம்!! இப்போ கூட எங்களுக்குள்ள என்ன சண்டைன்னு நெனைக்கற???தோசைக்கு தொட்டுக்க சட்னியை போட்டுக்கலாமா,இல்லை மொளகா பொடி போட்டுக்கலாமான்னு தான் சண்டையே!!! உங்க வீட்டுல எப்பவுமே சட்டினியைதான் போட்டுப்பீங்களாமே???? எங்க வீட்டுல உனக்கு மொளகா பொடி தான் தருவோம்னு சொன்னா ஒத்துக்க மாட்டேங்குறாரு" என்றான் சிரித்தபடி.

ஆனந்தியின் விழிகளில் இருந்து கண்ணீர்,ஆனால் அவள் உதடுகளில் இருந்த புன்னகை கொஞ்சம் கொஞ்சமா விரிவடைந்து பெரிய சிரிப்பாக மாறிக்கொண்டிருந்தது.
தன் மகளை மேலும் அணைத்தபடி மணிகண்டன் கண்ணை மூடிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தார்.
சிரிப்பினூடே "கள்ளா!! இரு உன்னை வெச்சுக்கறேன்" என்று சத்தம் கேட்காமல் உதடுகளால் சொல்லிக்காண்பித்தாள் ஆனந்தி.

"சரி சரி" என்று தலையை ஆட்டிக்கொண்டே கண்ணை அடித்து விட்டு,சிரித்துக்கொண்டே சோப்பாவில் சாய்ந்துக்கொண்டான் சுந்தர்.

-சுபம்

பி.கு:கதை பெரியதாக இருந்ததால் இரண்டு பகுதிகளாக போட்டேன்.ஆனா இது ஒரே பகுதியா எழுதப்பட்ட கதைதான்,ஒரே மூச்சிலே படிச்சா இவ்வளவு ஏமாற்றம் இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.
இரண்டு பாகங்களாக போட்டது படிக்கறவங்க மனசுல தேவை இல்லாத எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. :-(
மன்னிக்கவும்! :-)

18 comments:

G.Ragavan said...

எனக்கு ரெண்டு டவுட்டு

1. இட்டிலிக்குச் சாம்பார் ஊத்திக்க மாட்டாங்களா? என்ன குடும்பம்யா ரெண்டும்? சட்னி, சாம்பார் பொடி ஆகிய முச்சுவைகளையும் கலந்தடிக்கனும்ல.

2. அந்தப் பையன் என்ன வேலை செய்றான்? கல்யாணம் பண்ணா பொண்ண வெச்சிக் காப்பாத்துவானா? அதுக்குச் சம்பாத்யம்?

கப்பி | Kappi said...

:)

CVR said...

@ஜிரா
வாங்க அண்ணாச்சி!! :-)

1.)இட்டிலிக்கு என்ன வேணும்னாலும் ஊத்திக்கலாம்,ஆனா அவங்க சண்டை போட்டது தோசைக்கு என்ன தொட்டுக்கனும்னு.நீங்க வேணும்னா போய்ட்டு அவங்க சண்டையில கலந்துக்கோங்க!! :-)

2.) பையன் படிப்பை முடிச்சிட்டு மருத்துவத்துறையில் பணியாற்ற போறான்.அவனின் வேலை நிலவரம் குறித்து ஆனந்திக்கோ அவளின் அப்பாவிற்கோ எந்த வித சந்தேகமும் இல்லை.
கல்யாணம் என்ன இப்போவேவா பண்ண போறாங்க! இப்போதைக்கு பெற்றோர் கிட்ட பேசி சம்மதம் வாங்கியிருக்காங்க அவ்வளவு தான். :-)

இலவசக்கொத்தனார் said...

பையன் பேரு சுந்தரா இல்லை சந்தரா? :))

என்ன அவ்வளவு பில்ட் அப் குடுத்து இப்படி சப்புன்னு முடிச்சுட்டீங்க? என்னதான் சட்னி மிளகாய் பொடின்னாலும் கொஞ்சம் ருசி கம்மியாயிருச்சே!!

CVR said...

@கொத்தனார்
கதை பெரியதாக இருந்ததால் இரண்டு பகுதிகளாக போட்டேன்.ஆனா இது ஒரே பகுதியா எழுதப்பட்ட கதைதான்,ஒரே மூச்சிலே படிச்சா இவ்வளவு ஏமாற்றம் இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.
இரண்டு பாகங்களாக போட்டது படிக்கறவங்க மனசுல தேவை இல்லாத எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. :-(
My mistake :-)

sri said...

Your narration is good, but to be honest the punch is missing, try different subject ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா நல்லா திருப்பிட்டீங்களே...
பின்னூட்டகலாட்டாக்களும் சுவை..

நிவிஷா..... said...

அடடா....சிவிஆர், நீங்களுமா 'தொடர் கதை' களத்தில்??

முதல் பகுதியில் இருந்த குறும்பும் விறுவிறுப்பும் இரண்டாம் பகுதியில் இல்லை என்றாலும், நல்லாயிருந்தது:)))


நட்போடு,
நிவிஷா.

எழில்பாரதி said...

மிளகாய்பொடி சண்டை சூப்பர்....

வழக்கம் போல் கதை சூப்பர்!!!!

கோபிநாத் said...

\சுபம்
நல்லாருக்கு தல...;)))


\\பி.கு:கதை பெரியதாக இருந்ததால் இரண்டு பகுதிகளாக போட்டேன்.ஆனா இது ஒரே பகுதியா எழுதப்பட்ட கதைதான்,ஒரே மூச்சிலே படிச்சா இவ்வளவு ஏமாற்றம் இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.
இரண்டு பாகங்களாக போட்டது படிக்கறவங்க மனசுல தேவை இல்லாத எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. :-(
மன்னிக்கவும்! :-)\\

போன பதிவில் கப்பி என்ன சொல்லியிருப்பான்னு ஒர்அளவுக்கு யோசிக்க முடியுது ;))

Dreamzz said...

//கதை பெரியதாக இருந்ததால் இரண்டு பகுதிகளாக போட்டேன்.ஆனா இது ஒரே பகுதியா எழுதப்பட்ட கதைதான்,ஒரே மூச்சிலே படிச்சா இவ்வளவு ஏமாற்றம் இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.
இரண்டு பாகங்களாக போட்டது படிக்கறவங்க மனசுல தேவை இல்லாத எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. :-(/

haha.. ethuku ippadi oru disci?

Dreamzz said...

//2. அந்தப் பையன் என்ன வேலை செய்றான்? கல்யாணம் பண்ணா பொண்ண வெச்சிக் காப்பாத்துவானா? அதுக்குச் சம்பாத்யம்?/

enakku ore doubtu!

Dreamzz said...

kadhai nalla irukku thala :)

Divya said...

தொடர் கதை......அழகான குறும்புடன் ஆரம்பித்து,
சுபமாக முடித்துவிட்டீர்கள், அருமை சிவிஆர்!!

k4karthik said...

ஆக மொத்தம் குறும்பு பண்ணது சுந்தரோ, ஆனந்தியோ இல்ல.. நம்ம CVR தான்...

Unknown said...

இன்னும் கொஞ்சம் வர்ணனை சேர்த்திருக்கலாம்.
நல்லாருக்கு.

Ramya Ramani said...

கதை நல்லா இருக்கு.சுபமான முடிவு!மிக அருமை!

gayathri said...

itha part 2 patha neja kahtai mathiri irukke ennapa unga lover storye eluthitegala enna

Related Posts Widget for Blogs by LinkWithin