முன்பு வந்த இரண்டு விமானங்களை விட இந்த விமானம் சிறிது சொகுசாகவே இருந்தது. இந்த விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கு முன்னாடியும் ஒரு சின்னத்திரை பெட்டி பொருத்தப்பட்டிருந்தது!அதில் படங்கள் , விமானப்பாதை செய்திகள், விளையாட்டு போன்ற பல விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறம்பி இருந்தன.இதை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எனக்கு கிடைத்திருந்த இருக்கை ஜன்னல் இருக்கை!!
விமானத்தில் வந்திருந்த என் நிறுவனத்தை சேர்ந்த இருவரில் ஒருவரை சந்தித்து கொண்டேன். டிட்ராய்ட் சென்றவுடன் ஓட்டலுக்கு ஒன்றாகவே செல்லலாம் என்று அவரிடம் உடன்பாடு செய்து கொண்டேன்.
நாலாபுறமும் நீங்காது நிறைந்திருந்த நீல வர்ணத்தை உரிமையாக உரசிக்கொண்டே என் விமானம் அட்லான்டிக் பெருங்கடலை கடந்து கொண்டு இருந்தது. விமானத்தில் என்னிடம் நிறப்புவதற்கு இரண்டு படிவங்கள் கொடுக்கப்பட்டன. முதல் படிவத்தின் பெயர் I-94. இதில் நான் அமெரிக்கா சென்றவுடன் தங்கப்போகும் இடம் (அப்பொழுது தங்க இடம் ஒன்றும் பார்க்கவில்லை , குத்து மதிப்பாய் என் நண்பரின் விலாசத்தை கொடுத்தேன்) போன்ற விஷயங்களை கேட்டிருந்தார்கள். அடுத்தது நீல நிறத்தில் இருந்த ஒரு படிவம்.இதில் நீங்கள் ஏதாவது விலை உயர்ந்த பொருள் எடுத்து செல்கிறீர்களா?,நீங்கள் மண், செடி,கொடி,மிருகங்கள் போன்ற ஏதாவது எடுத்து செல்கிறீர்களா ?போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அந்த படிவங்களை நிறப்பி முடித்து விட்டு என் முன்னால் இருந்த சின்னத்திரையில் நான் சில படங்களை பார்த்துக்கொண்டு இருந்தேன். எனக்கு அசைவூட்ட படங்கள் (animation movies) என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் “Toy story” மற்றும் “A Bug’s life”ஆகிய படங்களை பார்த்து ரசித்தேன். பிறகு “Fun with Dick and Jane” என்ற ஜிம் கேரியின் படம் ஒன்றையும் பார்த்தேன். ஜிம் கேரியின் படம் எதுவாக இருந்தாலும் ஒரு முறையேனும் கண்டிப்பாக பார்க்கலாம்!! என்ன நான் சொல்வது சரிதானே!!
சில சமயங்களில் வெள்ளை மேகங்களில் பிரதிபலித்த சூரியனின் வெளிச்சத்தை தாங்க முடியாமல் ஜன்னல் கதவை மூடியே வைத்திருந்தேன்.விமானம் கானடா நாட்டின் நிலப்பறப்பில் நுழைந்த பிறகு கீழே பறந்து விரிந்த காடு,மலை,மரம் மற்றும் பல இயற்கை காட்சிகள் என் கண்ணுக்கு விருந்தளித்தது. இப்படி இனிதே கழிந்த பயணத்தின் கடைசியில் விமானம், டிட்ராய்டின் மேகக்கூட்டங்களிடம் சிறிது ஓடிப்பிடித்து விளையாடிவிட்டு, பிறகு சமத்து குழந்தை போன்று ஓடுதளத்தில் சத்தமில்லாமல் இறங்கியது.
விமானத்திலிருந்து வெளியே வந்ததும் என் நிறுவனத்திலிருந்து அந்த விமானத்தில் வந்திருந்த இரண்டு நண்பர்களோடு சேர்ந்து கொண்டேன்.பிறகு நாங்கள் அனைவரும் குடிநுழைவு முகப்பு (Immigration counter) உள்ள பகுதிக்கு சென்றோம். மனிதனால் புன்னகை கூட செய்ய முடியும் என்பதே அறியாதவர் போல் இருந்த ஒரு நடுத்தர வயது குண்டு பெண்மணி அங்கு என்னை சற்று ஏற இறங்க பார்த்தார்.
பின்
உங்களின் தொழில் என்ன?
உங்களின் நிறுவனத்தின் பெயர் என்ன?
நீங்கள் இங்கே எந்த ஊரில் தங்க போகீறிர்கள்??
என்று சில கேள்விகளை கேட்டுவிட்டு என் I-94 படிவத்தை என் அமெரிக்க விசா பக்கத்தின் எதிர் பக்கத்தில் ஊசியால் குத்தி கொடுத்தார்.
பின்பு என் பயணபெட்டிகளை பொறுக்கி கொண்டு சுங்கச்சாவடிக்கு சென்றேன்.என்னிடம் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் அங்கு இருந்த அதிகாரி என்னிடம் பெரிதாக கேள்விகள் ஒன்றும் கேட்க வில்லை.
“பெட்டிக்குள் என்ன இருக்கிறது??”
“துணிமணிகள் மற்றும் சில பாத்திரங்கள்”
“ஏதாவது உணவு பொருட்கள் எடுத்து வந்திருக்கிறீர்களா”
“இல்லை”
“சாப்பாடிற்கு என்ன செய்வீர்கள்?? இங்கு வாங்கிக்கொள்வீர்களா??”
“ஆமாம்”
“சரி!! உங்கள் வாசம் இன்பமயமாக அமைய என் வாழ்த்துக்கள்”
“நன்றி”
அவ்வளவுதான்!!!
எல்லா சோதனையும் முடிந்தாகிவிட்டது!!! கனவுகள் நினைவாகும் ஊர் என கூறப்படும் அமெரிக்கா நாட்டில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது!!!!விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றால் முழுமையாக வேறு நாடு,வேறு மக்கள்,வேறு தட்பவெட்பம்,வேறு நடைமுறைகள்!!! இதெல்லாம் நினைத்து பார்க்கும் போதே சற்று வித்தியாசமாக இருந்தது. என் நண்பர்களுக்கு சோதனை முடியும் வரை காத்திருந்து விட்டு அவர்களுடன் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றேன்.
அங்கு ஒரு விமானத்திலிருந்து இறங்கி வரும் பயணிகளின் போக்குவரத்து தேவைகளை பார்த்துகொள்வதற்க்காக நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் எங்களை அணுகினார்.நாங்கள் எத்தனை பேர்,எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டு அறிந்துகொண்டு எங்களுக்காக ஒரு வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்தார். ரயில் நிலையங்களில் தொல்லை கொடுத்தும், அநியாய பணம் கேட்டு தகறாறு செய்தும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் பல ஆட்டோகாரர்களை கண்டிருந்த என் கண்களில், ஆனந்த கண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருகி வந்தது!!கண்ணிரை துடைத்துக்கொண்டு வாகனத்தில் பயணப்பட்டேன்.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா முதன் முறை வரும் அனைவரையும் முதலில் கவர்வது இங்கு உள்ள சாலைகளாக தான் இருக்கும் என நினைக்கிறேன். நல்ல அகலமாக , மேடு பள்ளம் இல்லாத மற்றும் சுத்தமான சாலைகள் மீது எங்கள் வண்டி சீரான வேகத்தில் சென்று கொண்டு இருந்தது(இந்த சாலைகளின் மேலே உள்ள மோகத்தினால் தான்,பிறகு ஒரு தரம், தலை கால் புரியாமல் காரை அதி வேகமாக ஓட்டி இங்கு உள்ள மாமாவிடம் மாட்டிக்கொண்டேன் என்பது வேறு கதை!! )
ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் சீராக வெட்டி வைக்கப்பட்ட புல்தரை அலங்காரம்,நீண்ட அகன்ற சாலையில் ஒரே வேகத்தில் சீரான இடைவெளி விட்டு சென்று கொண்டு இருந்த வாகனங்கள், இவை அனைத்தையும் பார்த்து என் மனதில் குதூகலம் தொற்றி கொண்டது!! நான் போய் சேர வேண்டிய ஊரான ஆன் ஆர்பர் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டிய ஆசை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டு இருந்தது!!!
-ஆன் ஆர்பரிலிருந்து தொடரும்……
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - முன்னுரை
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 2
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 3
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 5
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 4
Labels:
நிகழ்வு,
பயணக்கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
எப்படியே அமெரிக்கா நாட்டில் காலடி எடுத்து வைத்துவிட்டிர்கள்.
1. \\விமானத்தில் வந்திருந்த என் நிறுவனத்தை சேர்ந்த இருவரில் ஒருவரை சந்தித்து கொண்டேன்.\\
எந்த ஊரு...
2. \\மனிதனால் புன்னகை கூட செய்ய முடியும் என்பதே அறியாதவர் போல் இருந்த ஒரு நடுத்தர வயது குண்டு பெண்மணி அங்கு என்னை சற்று ஏற இறங்க பார்த்தார்.\\
இவர்களை போன்றவர்களை நானும் பாத்திருக்கிறேன்...இவங்க தான் ரொம்ப அறிவிகள் என்ற நினைப்பு.
3. \ எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டிய ஆசை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டு இருந்தது!!!\\
எங்களுக்கும் தான்...
1. \\விமானத்தில் வந்திருந்த என் நிறுவனத்தை சேர்ந்த இருவரில் ஒருவரை சந்தித்து கொண்டேன்.\\
எந்த ஊரு...
இரண்டு பேரும் இந்தி!!! :)
2. \\மனிதனால் புன்னகை கூட செய்ய முடியும் என்பதே அறியாதவர் போல் இருந்த ஒரு நடுத்தர வயது குண்டு பெண்மணி அங்கு என்னை சற்று ஏற இறங்க பார்த்தார்.\\
இவர்களை போன்றவர்களை நானும் பாத்திருக்கிறேன்...இவங்க தான் ரொம்ப அறிவிகள் என்ற நினைப்பு.
இவர்களை போல் சில பேர் இருப்பதால் தான்,நன்றாக சிரித்து பேசுபவர்களின் அறுமை நமக்கு தெரிகிறது!! :)
3. \ எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டிய ஆசை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டு இருந்தது!!!\\
எங்களுக்கும் தான்...
அந்த ஆவல் வர வேண்டும் என்பதற்க்காகதான் அப்படி முடித்தேன்!! :)
கருத்துக்களுக்கு மிக்க நன்றி கோபிநாத்!! :)
Expressions unlimited :-)
நன்றி நளினி! :)
friend your are my blogging spirit and inspiration.......
நன்றி விஜய்!! :)
sooper appu .. oru vazhiya poi sendhutiya? nadathu.
yea, jim carrey is awesome. evlo dharava onna pakalam.
ipdilaam skeptical-a america poi serndha nee ippo evlo koothadikira .. njoi maadi :D
எல்லாம் இறைவன் செயல்!! :)
சீவீஆர் அவர்களே,
வேற்று நாட்டு பயணம் என்பது நம்மை போன்ற குலத்து மீன்களுக்கு
கடல் பிரவேசம் போல என்பதை நன்றாக விளக்கிவிட்டீர்கள்
தங்களது எழுத்துக்கள் மேலும் மேலும் மெருகேரிக்கொண்டே போகிறது
வாழ்த்துக்கள்..
தொடர்ந்து வரும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!! :)
பின்னூட்டம் இடலாம் என்றால் போன 2 நாட்களாக ஏதோ பிரச்சனை.
உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது.தொடருங்கள்.
தலைப்பை கொஞ்சம் எளிமைப்படுத்துங்கள்,நிறைய பேர் படிக்க வருவார்கள்.
அமெரிக்காவில் மரக்கறி சாப்பிட கஷ்டம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்,சில விபரங்கள் உங்கள் பதிவு மூலம் அறிந்துகொண்டேன்.
நன்றி வடுவூர் குமார்.
தலைப்பை எளிமையாக வைத்திருக்கலாமே என்று எனக்கும் தோன்றியது!
அடுத்த முறையில் இருந்து இதில் கவனமாக இருக்க பழகி கொள்கிறேன்.
Post a Comment