அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - முன்னுரை

தமிழ் வலைபதிவு உலகத்தை கண்டு மலைச்சுப்போய் இருக்கேங்க. எத்தனை பதிவர்கள்,எத்தனை வலைபூக்கள்,எவ்வளவு சுவையான பதிவுகள்!! அப்பப்பா, நினைச்சாலே தல சுத்துது!!
எனக்கு சின்ன வயசுல இருந்து தமிழ் ரொம்ப புடிக்கும். மூனாவது வரைக்கும்தான் தமிழ் படிச்சேன்ங்கறதுனால தமிழ்ல எழுத அவ்வளவா பழக்கம் இல்ல.
நம்ம தமிழ்ல எழுத்துப்பிழை அதிகமா இருக்கே அத சரி பண்ணணும்னுதான் வலைபதிவ ஆரம்பிச்சேன். அத சிறப்பா செய்யனும்னு பொதுவா மத்த பதிவுகள பார்க்க ஆரம்பிச்சேன். பார்க்க பார்க்க ஒரே சந்தோசமா போச்சு!!
அப்போதான் தமிழ்பதிவுகள் , தமிழ்மணம் , தேன்கூடு போன்ற வலைதளங்கள் பற்றி தெரிய வந்தது!!

அதுக்குள்ள புகுந்து ஒவ்வொரு பதிவையும் பாத்தா,ஒவ்வொருத்தங்க எவ்வளவு அழகான எழுதறாங்கன்னு தெரிஞ்சுது!! :)
நெஞ்சை நெகிழ வைக்கும் கதை/கவிதைகளும் பாத்தேன், வெறுப்பை உமிழ்ந்து வருத்தத்தை தரும் பதிவுகளையும் பார்த்தேன்.நகைச்சுவை ததும்பும் துனுக்குகளையும் பார்த்தேன்,தினம் நடக்கும் நிகழ்வுகள எளிமையா அழகா எழுதப்பட்ட பல படைப்புக்களை பார்த்தேன்.

இத பாத்த வுடனே நாமளும் எதாவது சுவையா எழுதி தள்ளனும்னு ஆசை தொத்திக்கிச்சு!! :)
ஆசை இருந்தா மட்டும் போதுமா,திறைமையும் நேரமும் இருக்கனும்ல!! நான் போன வருசம் எல்லாம் ஆங்கிலத்துல சில கதைகள்,கவிதைகள்னு சொல்லிட்டு கொஞ்சம் எழுதிட்டு இருந்தேன். அது நின்று போய் பல நாட்கள் ஆச்சு.அதுவும் தவிர கவிதைனு சொல்லிட்டு அப்பப்போ எதையோ தமிழ்ல கிறுக்கிட்டு இருந்தேன்!! :)

அது எல்லாத்துடைய திரட்டல்தான் என்னுடைய இந்த வலைதளம்.
ஆனா உருப்படியா எதுவும் எழுதுனது இல்ல!! அதுவும் தமிழ்ல எனக்கு தட்டச்சு தெரியாதுங்கறதுனால தத்தி தத்தி எதாவது தட்டினாதான் உண்டு!!! ஒரு பதிவை போடறதுக்கே பல மணி நேரம் ஆகுது!! :(

இருந்தாலும் 'எண்ணித்துணிக கருமம்,துணிந்தபின் எண்ணுவதென்பது இழுக்கு" அப்படிங்கற தமிழர் மொழிக்கு ஏத்தா போல நானும் களத்துல இறங்கிட்டேன்!! :)
தொடக்கமா நான் இங்க வந்த புதுசில எழுதின "Ann Arbor post" அப்படிங்கற பயணக்குறிப்பை தமிழாக்கம் பண்ணலாம்னு திட்டம்!!உங்களுக்கு எல்லாம் பிடிக்கறா மாதிரி இருக்கனும்னு கடவுள வேண்டிக்கிட்டு ஆரம்பிக்கறேன்!! :)

எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும்!! :)

பின்குறிப்பு: ஆன் ஆர்பர் (Ann Arbor) என்பது நான் தற்போது வசிக்கும் ஊரின் பெயர்!! :)

அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1

9 comments:

Divya said...

CVR, உங்கள் 'Ann Arbor' பதிவின் தமிழாக்கத்தை பதிவிடுங்கள்!

நீங்க ரொம்ப நல்லா தமிழில் எழுதுறீங்க, தொடர்ந்து எழுதுங்கள்!!

உங்கள் பதிவினை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்!
தொடர்ந்து நிறைய பதிவுகள் தமிழில் எழுத வாழ்த்துக்கள்!!

[ போட்டோவில் இருப்பது யார் என்று குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்!]

CVR said...

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி திவ்யா.
புகைபடத்தில் இருப்பது வேரு யாரும் அல்ல நான்தான்!! :)

சேதுக்கரசி said...

ஆன் ஆர்பர்னா.. மிசிகன் பல்கலைக்கழக மாணவரா? :-) தமிழ்மண உதவிப் பக்கம் பார்த்து தமிழ்மணத்தில் முழுமூச்சாய் குதியுங்கள். வாழ்த்துக்கள்.

CVR said...

நான் படிக்கவில்லை மேடம் இங்கு வேலை செய்து கொண்டு இருக்கிறேன். :)
என் நிறுவனத்தின் ஆன்சைட் வேலைக்காக இப்பொழுது இங்கு வந்துள்ளேன். அடுத்த வருடம் இந்தியா திரும்பி விடுவேன்.
எனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் மேடம்!! :D

வெட்டிப்பயல் said...

மக்களே,
இவர் அட்டகாசமா எழுத கூடியவர்...
ஒரு வருஷத்துக்கு முன்னாடி இவருடைய கதைகளை நான் விடாம படிப்பேன்...

தொடர் கதை ஸ்டைல்ல தினமும் ஒரு பதிவுனு போடுவார்... நமக்கெல்லாம் இனி நல்ல தீனிதான்...

ஏமாத்த மாட்டீங்களே CVR!!!

(தமிழ்லயும் பிரிச்சி மேயறீங்க...)

CVR said...

மிக்க நன்றி பாலாஜி!
முன்பு போல் திரும்பவும் பரவலாக எழுத ஆசைபடுகிறேன்!!
நினைவாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!! :)

sravan said...

nee enna onna ezhudhu nanba, nan padikaren :D

CVR said...

மிக்க நன்றி நண்பா!! :)

தஞ்சாவூரான் said...

மூணாப்பு மட்டும் தமிழ் படிச்சுட்டு, இவ்வளவு நல்லா தமிழ் எழுதுறீங்க! வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்க..

Related Posts Widget for Blogs by LinkWithin