இன்று காலை பனி படர்ந்த சாலைகளை பார்த்த வுடன் மனதில் அளவிட முடியா மகிழ்ச்சி. அலுவலகம் கிளம்ப நேரம் ஆகிவிட்ட போதிலும் புகைபடக்கருவியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி விட்டேன்.
அப்பொழுது கண்ட காட்சி தான் இது. உடனே எனக்கு பாரதியின் கவிதை தான் நினைவுக்கு வந்தது!! :)
---------------------------------------------------
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
- மகாகவி சுப்ரமணிய பாரதி
7 comments:
CVR, தமில் ப்ளாக் எழுதுரீங்கன்னு ஒரு வார்த்தை சொல்ல கூடாதா??
தொடர்ந்து நிறைய பதிவுகள் எழுதுங்க!! வாழ்த்துக்கள்!!
பாரதியின் கவிதையோடு பதிவை ஆரம்பித்திருக்கிறீர்கள்!!
CVR, உங்களுக்கு பிடித்த வலைபதிவுகளில் என் பதிவினையும் சேர்த்திருப்பது, எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் உள்ளது, நன்றி!!
இந்த போட்டா தான் இப்ப நம்ப டெஸ்க் டாப் பேக்கிரவுண்டு.
ரொம்ப சந்தோஷம் வெங்கட்ராமன்!! :-)
படம் நல்லா வ்ந்திருக்கு, உங்க கவிதையும் பொருத்தம் தான். ஆனால் பாரதி பாடினதோட அர்த்தமே வேறே. தன் மனமாகிய காட்டில் "இறை உணர்வு" என்ற சிறிய பொறியை வைக்கிறார். அது அவர் மனத்தைச் சுட்டுப் பொசுக்கிக் காடு வெந்து தழல் ஆகி மனம் பரிசுத்தம் ஆகி இறையொளி பரவுகிறது. பொறி என்னமோ சின்னது தான். அதைத் தான் "தழல் வீரத்தில் மூப்பென்றும் குஞ்சென்றும் உண்டோ?" எனக் கேட்கிறார். அந்தச் சின்னப் பொறியின் தாக்கம் எவ்வளவு பெரிது? கெட்ட என்னங்களாகிய காட்டை அழித்துச் சுத்தம் செய்து "உள்ளொளி" பரவ இடம் கொடுக்கிறது. இது தான் எனக்குச் சொல்லப் பட்ட அர்த்தம். ஒரு சிறு துளி இறை உணர்வே போதும் நம் மனக்காட்டைச் சுத்தம் செய்ய. இதுதான் அவர் சொல்கிறார்.
@கீதா
வாங்க கீதா மேடம்!!
கவிதைக்கு மிக அருமையாக விளக்கம் கொடுத்திருக்கீங்க.
வெளியில் கிளம்பிய போது மரங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் சூரியனை பார்த்தவுடன் எனக்கு இந்த கவிதை தோன்றியது.
கருத்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)
இந்த கவிதையை நினைவு படுத்துவது போல் நான் எடுத்த வேறு ஒரு புகைப்படம் இதோ!! :-)
http://www.flickr.com/photos/seeveeaar/420500614/
Post a Comment