வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு வார இறுதியின் சோம்பேரித்தனத்தில் மூழ்கி இருக்கையில் மை ஃபிரண்டின் இந்த பதிவை பார்த்தேன். நம்ம படிச்ச பள்ளிக்கூடம் ,வகுப்பு டீச்சருங்க பெயர எல்லாம் எழுதனுமாம். நமக்கும் ஞாபக சக்திக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது. அப்படியே பாஸ் சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு பார்த்தேன் ,இருந்தாலும் ஒரு முயற்சி செஞ்சிடலாமே அப்படின்னு களத்துல இறங்கியாச்சு.
LKG - மேரி மிஸ்
UKG - எனக்கு சொல்லி கொடுத்த டீச்சர் பேரும் நியாபகம் இல்லை,அவங்க முகமும் நியாபகம் இல்லை. ஆனா அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என்பது மட்டும் நியாபகம் இருக்கு. நானும் எங்க அம்மாவும் ஸ்கூலுக்கு போய்ட்டு இருக்கும்போது அவங்க பஸ்ல இருந்து பார்ப்பாங்க. ஸ்கூல் இருக்கர பஸ் ஸ்டாப்-க்கு முந்தைய ஸ்டாப்லயே இறங்கி எங்க கூட பேசிட்டு வருவாங்க.
ஒன்றாவதுல இருந்து மூன்றாவது வரை - அஜய் குமார் மாஸ்டர், கணக்கு வாத்தியார், தமிழ் டீச்சர் (பெயர் மறந்து போச்சு)
நான்காவதில் இருந்து பத்தாவது வரை:
ஆங்கிலம் - எமிலி வெர்கீஸ்
அறிவியல் - விமலா ராணி
கணிதம் - நிறைய பேரு இருந்தாங்க,யாருமே ஞாபகம் இல்லை. ஆனா ஆறாவதில் ஒருத்தங்க நல்ல உருட்டு கட்டை வெச்சிட்க்கிட்டு ஓங்கி அடிப்பாங்க,அவங்க பேரு ஞாபகம் இல்லை.
இந்தி - ராதா மேடம்,அவங்களுக்கு அப்புறமா வந்தவங்க பேரு ஞாபகம் இல்லை
வரலாறு - பெயர் ஞாபகம் இல்லை. என்னையும் என் ஊரையும் நிறைய கேலி செய்து என்னை கேலிப்பொருள் ஆக்கி விடுவார்.அதனால் அவரை எனக்கு அவ்வளவாக பிடிக்காது.
பூகோலம் - ரெபெக்கா
பதினொன்றாவது / பனிரெண்டாவது
ஆங்கிலம் - இவாஞ்சலின்
கணிதம் - கவிதா மேடம்
வேதியியல் - கனேஷ் சார்
இயற்பியல் - அவர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று படித்திருக்கிறோம்,ஆனால் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை.
இந்தி - பெயர் ஞாபகம் இல்லை
கணிணி அறிவியல் – பேசினால் காதில் கூட கேட்காத அளவுக்கு மென்மையாக பேசுவார் , பழகுவார். பெயர் ஞாபகம் இல்லை
பாதிக்கு மேல் ஞாபகம் இல்லை என்றுதான் எழுதி இருக்கிறேன். மன்னித்து விடுங்கள் மை ஃபிரண்ட்.:-)
உள்ளேன் டீச்சர்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஒரு வழியா கொசுவர்த்தியை சுத்தியாச்சு போல
உங்களை பின்னோக்கி பார்க்க வச்சதால உங்க போஸ்ட் எங்களுக்கு விருந்து..
பழைய நினைவுகள் உங்களுக்கு விருந்து. எப்படி இருக்கு இப்போ மனநிலை??
நன்றி மை ஃபிரண்ட்
:-)
//எனக்கு சொல்லி கொடுத்த டீச்சர் பேரும் நியாபகம் இல்லை,அவங்க முகமும் நியாபகம் இல்லை. ஆனா அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என்பது மட்டும் நியாபகம் இருக்கு. நானும் எங்க அம்மாவும் ஸ்கூலுக்கு போய்ட்டு இருக்கும்போது அவங்க பஸ்ல இருந்து பார்ப்பாங்க. ஸ்கூல் இருக்கர பஸ் ஸ்டாப்-க்கு முந்தைய ஸ்டாப்லயே இறங்கி எங்க கூட பேசிட்டு வருவாங்க.//
உங்களைப் பிடிச்ச டீச்சர் கூட ஞாபகம் இல்லையா?
//உருட்டு கட்டை வெச்சிட்க்கிட்டு ஓங்கி அடிப்பாங்க,அவங்க பேரு ஞாபகம் இல்லை.//
இவர்தானே முக்கியமான ஆள்!இவரையும் மறந்துட்டீங்க!
நீங்க இந்தி எல்லாம் கத்துகிட்டீங்களா!?
@துர்கா
//உங்களைப் பிடிச்ச டீச்சர் கூட ஞாபகம் இல்லையா?//
ஆமாம் மேடம்,UKG-ல சொல்லி கொடுத்த டீச்சர்,சுத்தமா மறந்து போயிடுச்சு!! :-)
//இவர்தானே முக்கியமான ஆள்!இவரையும் மறந்துட்டீங்க! //
ம்ம்ம்ம் ... இப்போ யோசிச்சு பாத்தா அவங்க பேரு சந்திரகலாவோ என்னமோன்னு நியாபகம் வருது!! :-)
//நீங்க இந்தி எல்லாம் கத்துகிட்டீங்களா!? //
ஆமாம் மேடம்,நான் முன்றாவது வரை மட்டுமே தமிழ் படித்தேன். அதற்கு பின் 12-ஆவது வரை பள்ளிக்கூடத்தில் இந்தி தான்! :-)
Post a Comment