இந்த பிரபஞ்சம் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மிக மிகப்பெரியது.
இதில் எண்ண முடியா அளவுக்கு நட்சத்திரங்களும்,கிரகங்களும்,அண்டங்களும் நிறம்பியுள்ளன!!
இவ்வளவு பெரிய பேரண்டத்தில் ஒரு மூலையில் மிக மிகச்சிறிய ஒரு நீலப்புள்ளி உண்டு.அதில் உலவும் சிறு உயிர்கள் தான் நாம். நம் வாழ்க்கை,இயற்கை,பிரபஞ்சம்,படைப்பு இப்படி பல்வேறு விஷயங்கள் பற்றி புரியாமல் வியந்திருக்கிறேன்.
அந்த வியப்பின் பரிமாணங்களே, வானுக்குள் விரியும் அதிசயங்கள் எனும் தொடர்.
இப்படிப்பட்ட என் யோசனைகளுக்கு தீனியாக,என் வியப்பின் தோழனாக நான் பார்க்கும் ,கேட்கும்,படிக்கும் சில விஷயங்கள் அமைவதுண்டு.
அப்படி நான் ரசித்த ஒரு நிகழ்படம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்! :-)
பூமியின் குறிக்கோள் என்ன??
Labels:
விண்வெளி
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ரொம்ப விஷயம் இன்னும் சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன். தொடர்ந்து பதிவுகள் வர, நானும் தொடர்ந்து வர விழைகிறேன்.
இந்த "நூலை"ப் பிடித்து, உங்க "வானுக்குள் விரியும் அதிசயங்கள்"ம் படித்தேன். எளிமையாக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" எனக்கு பிடித்த பாடல்!
"பேரிடி கோட்பாட்"டை "நூல் கோட்பாடு" இன்னும் விரிக்கிறது என்று அறிந்திருப்பீர்கள். இதை இன்னும் பல்கலைக் கழகங்களில் வருங்கால நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதன் சம்பந்தமாக வேறு செய்தி படித்துக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் அடுத்த வாரத்துக்குள் தெரிந்த வரை பதிய ஆவல்.
தொடருங்கள், வாழ்த்துக்கள்.
என்ன பிரச்சனையோ கடைசி 2 நிமிடங்கள் பார்க்கமுடியவில்லை.
நல்ல சலனப்படம்.
வின்வெளி ரகசியங்களை மட்டும் பார்க்க/படிக்க ஏன் அலுக்கமாட்டேன் என்கிறது?
@தருமி
வாங்க தருமி!
ஏதோ தொடரை தொடர்வதில் கொஞ்சம் ஆர்வம் விட்டுப்போச்சு,ஆனா விண்வெளி மீது எனக்கு உள்ள மோகம் கொஞ்ச நஞ்சமல்ல,அதனால மூட் வந்தா திடீர்னு ஏதாவது சுவாரஸ்யமான விண்வெளி தலைப்போடு பதிவு போட்டுருவேன்! :-)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)
///நானும் தொடர்ந்து வர விழைகிறேன்.
//
that makes two of us!!! ;)
@கெக்கேபிக்குணி!!
நீங்கள் சொல்லும் நூல் கோட்பாடு பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது,ஆனால் சுவாரஸ்யமான தலைப்பாகத்தான் இருக்கும் போல இருக்கிறது!!
தேடிப்பார்க்கிறேன்!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி! :-)
@வடுவூர் குமார்
///என்ன பிரச்சனையோ கடைசி 2 நிமிடங்கள் பார்க்கமுடியவில்லை.
நல்ல சலனப்படம்.///
என்ன பிரச்சினைன்னு தெரியலையே குமார்!! :-(
//வின்வெளி ரகசியங்களை மட்டும் பார்க்க/படிக்க ஏன் அலுக்கமாட்டேன் என்கிறது?
///
உங்களுக்கு அப்படித்தானா?? :-)
லிங்கை பாக்க முடியல... வீட்டில போய் முயற்சி செய்து பாக்குறேன்....
//பூமியின் குறிக்கோள் என்ன?? //
குறிக்கோள் தெரியலை. ஆனால் தூணைக்கோள் இருப்பது தெரியும்.
உயிருள்ள கோள் என்று பூமிக்கு மற்றொரு பெயரும் உண்டு. அதாவது பிரபஞ்சம் பற்றி அறிவுள்ள ஒரே கோள் பூமிதானாம்.
//இந்த பிரபஞ்சம் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மிக மிகப்பெரியது//
அதே சமயம் கற்பனைக்கு எட்டாத சிறிய அளவிலும் திகைக்க வைக்கும். (IBM's Powers of Ten. Hope u can find in youtube or some other server)
-பாபு
ஏன் எதற்கு என்ற கேள்விய அதிகப்படுத்திடுச்சி...
இதன் தொடர்ச்சிய ஏன் போடல..
எல்லாருமே..யூடூயுப் போய் பாக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்...
அதயும் பாக்குறேன்..
தம்பி CVR இங்க உங்களை கூப்பிடுராங்க
Post a Comment