Chicago - திரைப்பட விமர்சனம்

Singing in the rain படத்தை பார்த்ததில் இருந்து Musicals எனப்படும் படவகை மேல் ஒரு தனி மரியாதை மற்றும் ரசிப்பார்வம் ஏற்பட்டது.
அந்த படத்தை பற்றி நான் எழுதியிருந்த விமர்சனத்திலேயே American in Paris மற்றும் Chicago ஆகிய இரு படங்களை பற்றி நண்பர் கே.ஆர்.எஸ் குறிப்பிட்டிருந்தார்.American in Paris என்னை அவ்வளவு கவரவில்லை என்றாலும் ,இன்று பார்த்த Chicago திரைப்படம் என்னை இந்த பதிவு எழுத தூண்டிவிட்டது.

சிறந்த திரைப்படம் உட்பட ஆறு ஆஸ்கர் விருதுகளை அள்ளிச்சென்ற இந்த படத்தில் Richard Gere,Catherine Zeta Jones,Renee Zellweger அகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் பரவிய ஜாஸ் கலாசாரத்தை பற்றியும் அதனால் மக்களிடையே இருந்த celelbrity craze பற்றியும் மிக அழகான விமர்சனமாக இந்த படம் நம் கண் முன்னே விரிகிறது.

Musicals எனப்படும் பாடல்களுக்கு முக்கியத்துவம் தரும் மேடை நாடங்களில,் நடிக்க வாய்ப்ப்பு தருகிறேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றும் தன் கள்ளக்காதலனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுகிறார் கதாநாயகி ராக்ஸி ஹார்ட் (Roxie Hart-Renee Zellweger). ஜெயிலில் அடைபட்டிருக்கும் போது இருவேறு கொலைகள் செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருக்கும் வெல்மா கெல்லி (Velma Kelly - Catherine Zeta Jones) எனும் புகழ்பெற்ற மேடைபாடகி/நடிகையை சந்திக்கிறார். ஜெயிலின் வார்டனின் துணையோடு சிகாகோ நகரின் புகழ்பெற்ற வக்கீலான பில்லி ஃப்லின் (Billy Flynn - Richard Gere) என்பவறை தன் வழக்கை நடத்த ஒப்பந்தம் செய்கிறார். மக்களின் நாடித்துடிப்பை அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து வைத்திருக்கும் அந்த வக்கீல் மக்கள் ஆதரவை பெற ஊடகங்களின் உதவியோடு ஒரு புனித பிம்பத்தை ராக்சியை சுற்றி எழுப்புகிறார்.இதனால் வெல்மா கெல்லிக்கு இருக்கும் முக்கியத்துவம் குறைகிறது.
இந்த நிலையில் வேறு ஒரு கொலை வழக்கில் மக்களின் கவனம் திரும்புவதை கண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புது செய்தியை அவிழ்த்து விடுகிறார ராக்ஸி்.இதன் மூலம் ஊடகங்களின் கவனம் இவர் மேல் திரும்பிவிடுகிறது. இப்படி ஒன்றின் மேல் ஒன்றாய் பொய்யும் புரட்டும் சேர்ந்துக்கொண்டே போக ராக்சியால் விடுதலை ஆக முடிகிறதா??வெல்மாவால் தன் மேல் மக்களின் கவனத்தை திரும்பவைக்க முடிகிறதா?? மக்களின் நட்சத்திர மோகம் எந்த அளவுக்கு உண்மையையும் நியாயத்தையும் மழுங்கடிக்கக்கூடியது என்ற பல கேள்விகளை சிறப்பாக விவரிக்கிறது இந்த படம்.

எந்த ஒரு சிறப்பான படத்தை எடுத்துக்கொண்டாலும் அந்த படத்தின் திரைக்கதை சிறப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. இந்த படத்தின் மிகப்பெரிய பலமும் இதன் திரைக்கதைதான். அதுவும் பாடல்களூம் கதையும் அழகாக பின்னிப்பிணைந்து செல்வது மிக ரசிக்கும்படியாக இருந்தது. அதுவும் ராக்ஸி தன் கணவரை பற்றி பாடுவதாக வரும் பாடல்(Funny Honey) வரும்பொழுது ,ராக்ஸி கைது செய்யப்படும் காட்சி படமாக காட்டியிருக்கும் விதம் என்னை பெரிதும் கவர்தது. ராக்சியின் சிறையில் உள்ள வேறும் சில கைதிகளும் அவர்கள் சிறைக்கு வந்த கதையையும் விளக்கும் பாடலின் (Cell Block Tango) ஆரம்பம் அதி அற்புதம்.இதேபோல் நன்றாக கற்பனை செய்யப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கும் பாடல்கள் தான் இந்த படத்தை நாம் சலிப்பு வராமல் பார்க்க உதவுகிறது. அதுவும் கதையின் திருப்பங்கள் மிக வேகமாகவோ,மிக மெதுவாகவோ இல்லாமல் சரியான வேகத்தில் செல்வதால் பாடல்களுடன் சேர்ந்த திரைக்கதை இந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது.

படத்தில் நடிகர் நடிகைகளின்் ஆட்டம் ஜீன் கெல்லியின் படங்களை ஒப்பிடும்போது ஓன்றுமே இல்லை என சொல்லலாம். ஆனால் நடிப்பும் வசனங்களும் ,அவற்றை அவர்கள் சொல்லும் விதமும் மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.
இந்த உலகமே ஒரு சர்க்கஸ் தான் எல்லாமே ஷோ பிசினஸ்,நீ எதற்கும் கவலை படாதே என்று பில்லி ராக்சியிடம் சொல்லும்போது நம் மனதிற்குள் ஆயிரம் கேள்விகளையும் எண்ணங்களையும் எழுப்பி விடுகிறார் இயக்குனர்்.
உன்னுடன் நான் வேலை செய்ய முடியாது ,ஏனென்றால் நான் உன்னை வெறுக்கிறேன் என்று ராக்சி சொல்கிறார்.நீ என்னை வெறுக்கலாம்,ஆனால் உலகத்தில் ஒரு தொழிலில் ஒன்றாக வேலை செய்ய தான் அது ஒரு பிரச்சினை யாக இருக்காது,அதுதான் ஷோ பிஸினஸ் என்று வெல்மா புன்னக்கைத்துக்கொண்டே சொல்வது நான் மிகவும் ரசித்த இன்னொரு காட்சி.ஷோ பிஸினசாகிப்போன இந்த உலகில் அன்பும் கோபமும் தேவைக்கேற்ப தான் அமைகிறது என்று நம்மை பார்த்து கேலி செய்யும் காட்சி அது. அதுமில்லாமல் கதையில் வரும் பாத்திர அமைப்பு ஒவ்வொரு பாத்திரங்களையும் நம் இதயத்தில் செதுக்கி வைத்து விடுகிறது. ராக்சியின் கணவர் பாத்திர அமைப்பும்,அவருக்கான பாடலும்,கதையின் முடிவில் அவரை பற்றி ஒன்றுமே குறிப்பிடாமல் விடுவதும் nice touch. எப்பவும் பிரச்சினை செய்கிறவர்களையும்,செய்தியில் இருப்பவரையும் பற்றி தான் இந்த உலகம் (நாம்) கவலைப்படும் என்றும் விளம்பரம் தேடாமல் அமைதியாக இருப்பவரை (அவருக்கு கஷ்டம் இருந்தாலும்) உலகம் கண்டுக்கொள்ளாது என்று நமக்கு உணர்த்துவதாக இது பட்டது.

ஒரு ம்யூசிகலில் வரும் பாடல்கள் பற்றி எழுத ஆரம்பித்தால் பதிவு நீஈஈஈஈஈஈஈஈஈண்டூகொண்டே போய்விடும் என்று "Singing in the rain" பதிவு எழுதிய பின் தெரிந்துக்கொண்டேன்.பாடல்கள் பற்றி சொல்லவேண்டும் என்றால் எல்லாமே ஒரே மாதிரியான வழமையான ஜாஸ் பாடல்கள். இசை பெரிதாக நம்மை கவராவிட்டாலும் பாடல்கள் எடுத்த விதம் நிச்சயமாக நம்ம கவரும்,அதுவும் கதையின் வெளிப்பாடாக ,திரைக்கதையோடு பாடல்கல்களை கலந்திருக்கும் விதமும்் மிக அருமை.
மொத்தத்தில் ம்யூசிகல் ரசிகர்களுக்கு Chicago ஒரு சிறந்த கலை விருந்தாக அமையும் என்பது என் கருத்து

13 comments:

குசும்பன் said...

தம்பி விமர்சனம் நன்றாக இருக்கிறது!!!

Anonymous said...

high school musicals
and hairspray.If got time see these two movies :P

இராம்/Raam said...

கேத்தரினை தான் படத்திலே ரொம்பவே பிடிச்சிருந்தது... :)

ILA (a) இளா said...

ஆஸ்கார் வாங்கினதாலே இந்த படத்தை பார்க்க இன்னும் தயக்கமாவே இருக்கு. உங்க விமர்சனம் கொஞ்சம் தைரியத்தை கொடுக்குது பார்ப்போம், பார்த்துதான் வைப்போமே

Sridhar V said...

அருமையான விமர்சனம். நான் பார்த்து நிரம்ப நாட்கள் ஆகிவிட்டது. மறுபடி பார்க்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

The phantom of the Opera பார்த்திருக்கிறீர்களா? அற்புதமான நடனங்கள் மற்றும் பாடல்கள்.

நான் முதன்முதலாக பார்த்த ம்யூசிக்கல்ஸ் - My Fair Lady. இப்பொழுது பார்த்தாலும் அலுக்காது.

தமிழில் பார்த்த ம்யூசிக்கல் - 'Shri வள்ளி' :-)

SurveySan said...

"he had it coming" paattu amakkalamo amakkalam.

Jailil irukkum ovvoru pennum thangal kolai anubavaththai solvadhu super lyric. migavum rasiththen.

-----
If you catch him cheatin' you shouldn't yell either
Run up on him quietly, took him out silently
It might sound cruel, but you gotta love the irony
So explain that, just came back off a trip
And I come home to this, please
He ain't followed the guidelines
So forgive me Your Honour,


he ran into my knife five times
...

he had it coming....
----

கப்பி | Kappi said...

தலைவி கேத்தரினுக்காகவே மூணு நாலு முறை பார்த்திருக்கோமுல்ல :)))

நல்ல விமர்சனம்!! அடுத்தடுத்த விமர்சனங்களை எதிர்நோக்கி....

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஜீன் கெல்லி படங்களோட சேர்த்து அவரோட திரைப்பட போட்டியாளர் ஃப்ரெட் அஸ்டெயர் (Fred Astaire) படங்களையும் பாருங்க. எனக்கு ஃபன்னி ஃபேஸ் ரொம்ப பிடிக்கும். அதுக்கு Audrey Hepburnஉம் முக்கிய காரணம். ;)

Fred Astaire புதிய புதிய நுணுக்கங்களை முயற்சி செய்துகொண்டிருந்த ஆள்.

அப்படியே ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு..


முக்கியமாக மர்லன் பிராண்டோ பிடிக்கும்னா,

Guys and Dolls பாருங்க. மர்லன் பிராண்டோ நடிச்ச பாத்திரம் கிடைக்கணும்னு விரும்பியிருந்தாலும் படத்தில் இருக்கும் இன்னொரு பாத்திரத்தில் நடித்த ஃப்ராங்க் சினாட்ராவையும் பார்க்கலாம். மர்லன் பிராண்டோ அவரே பாடி நடிச்சிருப்பார்.

-மதி

CVR said...

@குசும்பன்
நன்றி அண்ணாத்த! :-)

@துர்கா அக்கா
நன்றி அக்கா! எப்பயாச்சும் கண்டிப்பா பாக்கறேன்! :-)

@இராம்
இந்த படத்துல எல்லாம் கேத்தரினுக்கு ரொம்ப வயசாகிப்போச்சு அண்ணாத்த!
கேதரின் ஜீடா ஜோன்சை பாக்கனும்னா
"The Mask of Zorro " பாருங்க!!!
அட்டகாசமா இருப்பாங்க!! அவங்களை விட்டு கண்ணை எடுக்க முடியாது.

@இளா
கண்டிப்பா பாருங்க இளா!! உங்களுக்கு இந்த படம் பிடிக்க என் வாழ்த்துக்கள்.

@ஸ்ரீதர் வெங்கட்
பெயர்களுக்கு நன்றி ஸ்ரீதர்,என் பட்டியலில் இவைகளை குறித்து வைத்துக்கொள்கிறேன்.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

@சர்வேசன்
ஆமாம் சர்வேசன்,பாடல்களின் வரிகளோடு படத்தில் அவ்வப்போது வரும் சில வசனங்களும் செம நச்!
நன்றாக ரசித்துப்பார்த்தேன்.

@கப்பி
இராமுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும் கப்பி. Catherine Zeta Jones-னாலே "The Mask of Zorro" தான்.
அதுவுமில்லாமல் Antonio Banderas மற்றும் Anthony Hopkins ஆகிய இருவரின் திரை வசீகரமும் கூட பளிச்சுடும் படம் இது!!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

@மதி கந்தசாமி
பல புது பெயர்கள் சொல்லி இருக்கீங்களே!!
ரொம்ப நன்றி அக்கா! அடுத்த முறை படங்கள் தேர்ந்தெடுக்கையில் இவற்றை நினைவில் வைத்துக்கொள்கிறேன்! :-)

G.Ragavan said...

ஷிகாகோ படம் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க சொல்றதப் பாத்தா படத்தப் பாக்கலாம் போல இருக்குது...சரி பாத்துட்டாப் போச்சு.

அப்புறம் ஒரு வேண்டுகோள். Come Septemberனு ஒரு படம். எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். அந்தப் படத்தப் பத்தியும் அதுல நடிச்ச கதாநாயகி பத்தியும் எழுதுங்களேன். :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷோ பிஸினசாகிப்போன இந்த உலகில் அன்பும் கோபமும் தேவைக்கேற்ப தான் அமைகிறது என்று நம்மை பார்த்து கேலி செய்யும் காட்சி அது.//

:-))))))))))))))))))))
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலீங்க!
இருந்தாலும் அடியேன் சொன்னதையு ஒரு பொருட்டா எடுத்துப் பார்த்தீருக்கீங்க! அது உங்களைக் கவர்ந்தும் இருக்கே! மகிழ்ச்சி தான்!

வாழ்த்துக்கள்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

படத்தை விட, இதைக் கண் முன்னே நியுயார்க் ப்ராட்வே ஷோவில் பார்க்கும் போது, இசையும் கதையும் சேர்ந்து, ஒரு விதமான மயிர்க் கூச்செறியும் அனுபவத்தை ஏற்படுத்தும்! அவசியம் ஸ்டேஜ்ஜில் பார்க்கணும்!

அதுவும் சர்வேசன் சொன்னாரு பாருங்க,
சிறையில் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் கதையைப் பாடுவது!

அதுவும் இறுதியில் போட்டிப் பெண்கள் ராக்சியும் வெல்மாவு சேர்ந்து ஆடும் ஆட்டம்! இவை உச்சகட்டம்!

பாடல்களைப் பற்றி ஏன் அதிகம் சொல்லவில்லை CVR?
Queen Latifa பாடும் When You're Good to Mama, Mama is good to you...is a very nice number!

பொதுவா மியூசிக்கல்களில் நீண்ட ஆழமான Plot எல்லாம் வைக்க முடியாது! ஆனால் சிகாகோவில் காதல் ரசம் மட்டும் இல்லாது, சமூகம், கொலை, நீதிமன்றம், சிறை என்று பலதரப்பட்ட காட்சிகளை அமைத்தார்கள்! நகைச்சுவை காட்சிகளும் உண்டு!

இது மியூசிக்கல்களின் பரிணாம வளர்ச்சி என்று ஒரு சாராரும், சினிமாவை நோக்கி மியூசிக்கல்கள் போய் சீரழியும் போக்கு என்று இன்னொரு சாராரும் குறிப்பிட்டுக் கொண்டார்கள்!

மதி கந்தசாமி சொன்ன Guys and Dolls பாருங்க! அருமையான plot! கிரிமினல்கள், சூதாடிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட விறுவிறு மியூசிக்கல்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Come Septemberனு ஒரு படம். எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். அந்தப் படத்தப் பத்தியும் அதுல நடிச்ச கதாநாயகி பத்தியும் எழுதுங்களேன். :)///

ஜிரா
இத்தாலி நாட்டுப் பொண்ணு Ginaவைத் தானே சொல்லுறீங்க! ஜிராவின் விருப்பமே என் விருப்பமும் கூட! :-)))

நல்ல நகைச்சுவை. Non Stop Atlantic Flightகளில் காட்டப்பட்ட முதல் படம் என்றும் கேள்வி.

Related Posts Widget for Blogs by LinkWithin