இதழில் கதை எழுதும் நேரமிது

கானா பிரபா அண்ணாச்சியோட இந்த பதிவை பார்த்தில் இருந்து மனசு முழுக்க இந்த பாட்டுதான்!!
எனக்கு மிகவும் பிடித்தமான பாட்டு,அதிலும் பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அலமாரியில் இடமின்றி கச்சிதமாக அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களை போல் வார்த்தைகளை அழகாக மெட்டிற்குள் அடுக்கியிருக்கும் பாடலாசிரியரை என் மனம் பாராட்டாத நாளே கிடையாது!!
மிக மிக அழகான வரிகள் கொண்ட பாடல்!! கூடவே எஸ்.பி.பி யின் துல்லியமான உச்சரிப்போடு கூடிய இனிமையான குரல்,சின்னக்குயில் சித்ராவின் தேன்குரலோடு சேர்ந்து தெவிட்டாத விருந்து படைத்து விடும்!! :-)
நான் என் நண்பர்களிடம் பல முறை,தமிழ் திரையிசை என்பது அள்ள அள்ள குறையாத பொக்கிஷம் என்று சொல்லுவதுண்டு.அந்த பொக்கிஷ மலையில் கடைந்தெடுத்த முத்துச்சரம் இந்தப்பாடல் என்று தைரியமாக சொல்லலாம்.இனிக்கும் இசை விருந்தை ருசித்து மகிழுங்கள்!! :-)


Get Your Own Music Player at Music Plugin

வீடியோ பார்க்க முடிந்தவர்கள் இந்த பாட்டு படமாக்கிய விதத்தையும் கண்டு களிக்கலாமே!! :-)



படம் :உன்னால் முடியும் தம்பி
பாடல் :இதழில் கதை எழுதும்
குரல் :எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா
பாடல் வரிகள்:புலமைப்பித்தன்
இசை : இளையராஜா

(ஆண்)
இதழில் கதை எழுதும் நேரமிது (2)
இன்பங்கள் அழைக்குது ஆ....

பெண்
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆ....
மனதில் சுகம் மலரும் மாலையிது

(ஆண்)
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே (2)
இருகரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது

(இசை....)

(ஆண்)
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக் கண்டு
ஏதோதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்

பெண்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்

(ஆண்)
இனிய பருவமுள்ள இளங்குயிலே (2)
ஏன் இன்னும் தாமதம் மன்மத காவியம் என்னுடன் எழுது

பெண்
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது

(ஆண்)
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒருமுறை தழுவடி

பெண்
காலம் வரும்வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே

(ஆண்)
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ

பெண்
மாலை மணமாலை இடும் வேளைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்

(ஆண்)
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ....

பெண்
மனதில் சுகம் மலரும் மாலையிது

(இசை....)

(ஆண்)
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே

பெண்
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா

(ஆண்)
அழகைச் சுமந்து வரும் அழகரசி (2)
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

பெண்
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது

(ஆண்)
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன்; கணை வந்து மார்பினில் பாயுது

பெண்
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது

(ஆண்)
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது

பெண்
மோகம் நெருப்பானதும் அதைத் தீர்க்கும்;
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆ....

(ஆண்)
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ....
இதழில் கதை எழுதும் நேரமிது


பி.கு:பாடலின் வரிகள் இந்த தளத்தில் இருந்து வெட்டி ஒட்டியது

18 comments:

கானா பிரபா said...

ஆஹா ஆஹா வலையில் சிக்கிய இதயம் இதழில் கதையெழுதும் நேரமோ ;-)

Anonymous said...

//ஆஹா ஆஹா வலையில் சிக்கிய இதயம் இதழில் கதையெழுதும் நேரமோ ;-)//

சிவிஆர் "அண்ணா" நீங்க ஒரு மார்கமாகதான் இருக்கீங்க.என்னமோ நடக்குது ஒன்னுமே புரியல்லை.
//தமிழ் திரையிசை என்பது அள்ள அள்ள குறையாத பொக்கிஷம் என்று சொல்லுவதுண்டு//
தமிழ் திரையிசை மட்டுமா?
"தமிழும்" கூடதான் ;)தமிழரசியை சொல்ல வில்லை

CVR said...

@கானா பிரபா
அடடா!! நீங்க போட்ட பதிவோட பாதிப்புதான் இது அண்ணாச்சி!! :-)


@துர்கா
பாட்டு நல்லா இருக்குன்னு போட்டேன் ,அதுலையும் டேமேஜ் பண்ண பாக்குறீங்களே யகோவ்!! :-((

VIKNESHWARAN ADAKKALAM said...

//காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மணமாலை இடும் வேளைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்//

பாட்டு சூப்பர்பா... இந்த வரிய பார்திங்களா... கொஞ்சம் 'கில்பான்சியா' இருக்குல....

நாகை சிவா said...

சூப்பர் பாட்டு

சூப்பர் வரிகள்

சூப்பர் குரல்கள்

இந்த படமே சூப்பர் படம் ஆச்சே...

Baby Pavan said...

நானும் பதிவு பாத்துட்டேன்

இம்சை அரசி said...

படமே அட்டகாசமான படம் CVR :)))
loved this movie... தலைவர் கலக்கி இருப்பாரு :)))

Arunkumar said...

enakkum pudicha paatu idhu..
recenta avalo kettadhille so dankees for the song n lyrics..

//
"தமிழும்" கூடதான் ;)தமிழரசியை சொல்ல வில்லை
//
repeate...

CVR said...

@விக்னேஷ்
:-)
சிருங்கார ரசம் இருந்தாலும் விரசமில்லாமல் வரிகளை எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார் பாடலாசிரியர்!! :-)

@நாகை சிவா
நீங்க சொல்லுறது சரிதான் அண்ணாச்சி.எல்லாமே சூப்பராக அமைந்த பாடல் இது.

@குழந்தை பவன்
சந்தோஷம்!! :-)

@இம்சை அரசி
யாருங்க தலைவரு?? நடிகர் கமலா?? :-)

@அருண்குமார்
எந்த பதிவு போட்டாலும் ஓட்டனும் முடிவு பண்ணிட்டீங்களா??? :-P

காட்டாறு said...

கலக்கல் பாட்டு. பாட்டும், படமும், கமல் நடிப்பும் சூப்பர்.

Dreamzz said...

paatu kettukitte irukken..ippo

Dreamzz said...

//சிவிஆர் "அண்ணா" நீங்க ஒரு மார்கமாகதான் இருக்கீங்க.என்னமோ நடக்குது ஒன்னுமே புரியல்லை.//
ROFL!

ambi said...

சிவிஆர், பாட்டு, இசை எல்லாம் சூப்பர், அதுல எங்களுக்கு ஒரு சந்தேகமும் இல்லை.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை!னு ஒரு பழமொழி இருக்காமே? அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா? :)

எப்படியோ, பல்லு இருக்கறவன் பக்கோடா திங்கறான்!னு சொல்ல வர, அதானே! :p

CVR said...

@காட்டாறு
உண்மைதான் காட்டாறு!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :-)

@ட்ரீம்ஸ்
ஒரே சிரிப்பாத்தான் இருக்கு போல??
ஹ்ம்ம்ம்ம்

@அம்பி
நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு சத்தியமா புரியல அண்ணாச்சி!! :-ஸ்

ஆயில்யன் said...

//நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒருமுறை தழுவடி
காலம் வரும்வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ//
அடுத்தடுத்து வந்து விழும் வரிகளில்

சூரியனின் (எப்.எம்) இனிய (நடு)இரவுகளில் மனம் உற்சாகத்தில் குதூகலிக்கும் இனிய பாடல்களுள் இதுவும் ஒன்று

Manivannan said...

CVR,
Arumaiyaana varigal. As usual SPB,Chitra combination super. SPB maathiri Tamil ucharipu ippo irukira padagargalkitta iruka maatenguthu..(of course there are exceptions)

sri said...

Romba nalla padam, udhyamurthy (writer) gyabagam vandhiruchi.
This is a fav song for a important girl in my life, so its fav for me too. Thanks for making me remember

Bee'morgan said...

வாவ்.. CVR.. அழகான பாடல் வரிகள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.. இந்த பாட்டு என்னோட all time favourite.. :)
பாட்டு மாதிரியே, பாட்டுக்கு முன்னாடி நீங்க ரொம்பவும் சிலாகித்து எழுதியிருப்பதும் அருமையா இருக்கு..
//
அலமாரியில் இடமின்றி கச்சிதமாக அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களை போல் வார்த்தைகளை அழகாக மெட்டிற்குள் அடுக்கியிருக்கும் பாடலாசிரியரை என் மனம் பாராட்டாத நாளே கிடையாது!!
//
:) :)

Related Posts Widget for Blogs by LinkWithin