நான் சமீபத்தில் மிகவும் ரசித்த பாட்டு!
திரைஅரங்கில் இந்த பாட்டு ஓடும் போது என் கண்களில் கண்ணீர்.
இந்த படத்தின் விமர்சனத்தை நம்ம குசும்பன் அண்ணாச்சி கூட போட்டிருக்காரு.
தாயை பிரிந்திருக்கும் அனைவருக்கும் இந்த பாட்டை கேட்கும் போது தொண்டை அடைத்திருக்கும் என்பது எனது யூகம்.
பாடலின் மெட்டு,சங்கர் மஹாதேவனின் குரல்,அசத்தலான வரிகள்,இவையனைத்தும் பாட்டில் மிக அருமை.
நீங்களும் தான் கேட்டு பாருங்களேன்!! :-)
யூட்யூப் பாக்க முடியாதவங்க எல்லாம் பாட்டை இங்கிட்டு போய் கேட்டுக்கோங்க!! :-)
படம் : தாரே சமீன் பர் (நட்சத்திரங்கள்,பூமியின் மேல் )
இசை:சங்கர் எஹ்சான் லாய்
பாடகர்: சங்கர் மஹாதேவன்
இந்தி பாடல் வரிகள்(மொழி பெயர்ப்புடன்)
Main Kabhi Batlata Nahin
Par Andhere Se Darta Hoon Main Maa
Yun To Main,Dikhlata Nahin
Teri Parwaah Karta Hoon Main Maa
Tujhe Sab Hain Pata, Hain Na Maa
Tujhe Sab Hain Pata,,Meri Maa
(நான் யாருகிட்டேயும் சொன்னது இல்லை
ஆனா எனக்கு இருட்டை கண்டால் ரொம்ப பயம் ,அம்மா.
நான் வெளியிலே எதுவும் காட்டிக்கறது இல்லை,
ஆனா உன் மேல எனக்கு நிறைய அன்பு அக்கறை இருக்கு அம்மா.
உனக்கு எல்லாமே தெரியும்தானே அம்மா??
உனக்கு இது எல்லாம் தெரியும்தானே, என் அம்மா)
Bheed Mein Yun Na Chodo Mujhe
Ghar Laut Ke Bhi Aa Naa Paoon Maa
Bhej Na Itna Door Mujkko Tu
Yaad Bhi Tujhko Aa Naa Paoon Maa
Kya Itna Bura Hoon Main Maa
Kya Itna Bura Meri Maa
(கூட்டத்துல என்னை தனியா விட்டு போய்டாதமா
என்னால விட்டுக்கு திரும்பி வர கூட முடியாது
இவ்ளோ தூரம் என்னை தள்ளி அனுப்பாத அம்மா
அப்புறம் உனக்கு என்னை மறந்தே போயிட போகுது
நான் என்ன அவ்வளவு கெட்டவனா அம்மா??
நான் என்ன அவ்வளவு கெட்டவனா,என் அம்மா)
Jab Bhi Kabhi Papa Mujhe
Jo Zor Se Jhoola Jhulate Hain Maa
Meri Nazar Dhoondhe Tujhe
Sochu Yahi Tu Aa Ke Thaamegi Maa
(எப்போவெல்லாம் ஊஞ்சலிலே
அப்பா என்னை பலமா தள்ளி விடுவாரோ
அப்போவெல்லாம் என் கண்ணு உன்னையே தேடும்
நீ வந்து என்னை தாங்கி பிடிச்சுப்பேன்னு)
Unse Main Yeh Kehta Nahin
Par Main Seham Jaata Hoon Maa
Chehre Pe Aana Deta Nahin
Dil Hi Dil Mein Ghabraata Hoon Maa
Tujhe Sab Hai Pata Hai Naa Maa
Tujhe Sab Hai Pata Meri Maa
(அவரு கிட்ட நான் அதை சொல்ல மாட்டேன்
ஆனா உள்ளுக்குள்ள நடுங்கிடுவேன்
முகத்துல அது காட்டிக்க மாட்டேன்
ஆனா மனசளவுல ரொம்ப பயந்துருவேன் அம்மா)
Main Kabhi Batlata Nahin
Par Andhere Se Darta Hoon Main Maa
Yun To Main,Dikhlata Nahin
Teri Parwaah Karta Hoon Main Maa
Tujhe Sab Hain Pata, Hain Na Maa
Tujhe Sab Hain Pata,,Meri Maa
(நான் யாருகிட்டேயும் சொன்னது இல்லை
ஆனா எனக்கு இருட்டை கண்டால் ரொம்ப பயம் ,அம்மா.
நான் வெளியிலே எதுவும் காட்டிக்கறது இல்லை,
ஆனா உன் மேல எனக்கு நிறைய அன்பு அக்கறை இருக்கு அம்மா.
உனக்கு எல்லாமே தெரியும்தானே அம்மா??
உனக்கு இது எல்லாம் தெரியும்தானே, என் அம்மா)
பி.கு: எனக்கு தெரிஞ்ச வரைக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு செஞ்சிருக்கேன்,ஆங்கில மொழிபெயர்ப்பு வேணும்னா இங்கிட்டு போய் பாருங்க!
Taare zameen par - அம்மா பாட்டு
Labels:
இசை,
பாடல்வரி,
மொழிபெயர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
ஹிந்தி தெரியாத எங்களுக்கு தமிழ் மொழி பெயர்த்ததுக்கூ நன்றி. தமிழில் படிக்கும்போதுஊட வரிகள் அழகா இருக்கு. :-)
//ஹிந்தி தெரியாத எங்களுக்கு தமிழ் மொழி பெயர்த்ததுக்கூ நன்றி. தமிழில் படிக்கும்போதுஊட வரிகள் அழகா இருக்கு. :-)//
repeatu!
and the music is really melodious..
நல்ல மெலோடி, பாடல் வரிகள் (தமிழிலும்) நல்லா இருக்குங்க.
ஆமாம் CVR நிச்சயமாக மனதை உருக்கும் பாடல் இது. மிகவும் நன்றி தமிழ் பெயர்ப்புக்கு.
அழகான பதிவு :-) நன்றி.. நானும் சீக்கிரம் பார்க்க வேண்டும்..
ஒரு பாட்டு பாடுடி
எந்தப்பாட்டயா?
அம்மா பாடுமே.... அப்படி சிவாஜி டயலாக் உடனும் போல இருக்கு கவிஞரே.
ஒரு ஆலோசனை இந்த மெட்டை வச்சு கரயோக்கியில் தமிழில் பாடிப் போடலாமே?
nice!!!!!!!!!!
நேற்றுதான் படம் பார்த்தேன். அந்த பாதிப்பு மனதிலிருப்பதால் பாடல் கேட்கும்போதே மனதை உருக்குகிறது. பாடலை இட்டதற்கு நன்றி
@மை ஃபிரண்ட்
உண்மைதான் மை ஃபிரண்ட்!
படத்தின் பாடல்கள் எல்லாம் மிக அருமை!
வரிகளும் கூட தான்!! :-)
@ட்ரீம்ஸ்
நன்றி! :-)
@மதுரையம்பதி
பாடல் உங்களுக்கும் ரசிக்கும்படியாக இருந்ததில் மகிழ்ச்சி! :-)
@குசும்பன்
நான் இந்த பதிவை போட தூண்டியதே உங்கள் பதிவு தான்!
உங்களுக்கு தான் நான் முதலில் நன்றி சொல்லனும்
@Bee'Morgan
படத்தை பர்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் அண்ணாச்சி! :-)
@கானா பிரபா!!
அண்ணாச்சி!!
தமிழர்கள் மீது உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி??? :-(
:-P
@ஜெசீலா
நன்றி ஜெசீலா
@சுல்தான்
நானும் இன்றைக்கு இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் திரும்பவும் கேட்டேன்.மிக இனிமையாக இருந்தன.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சுல்தான்!! :-)
மொழி பெயர்ப்புக்கு நன்றி சிவிஆர்
நல்ல பாட்டு சிவிஆர்...நன்றி ;)
CVR,
Ippo thaan mudhal thadavai ketten. Arumai aana padal, Arumai aana varigal. Paatu ezhuthinadhu yaaru nu potrunda innum nalla irundhirukum
நன்றி! :)
பாடல் இனிமை = மொழி பெயர்ப்பு அருமை - நன்றி
ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல. மொழிப்பெயர்ப்பு அருமை. சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாம இருந்தது. இப்போ புரியுது. நன்றி. நீங்க இந்த பாட்டுக்கு மட்டும் தான் அழுதீங்களா? பரவா இல்லையே...நான் எல்லாம் எத்தனை வாட்டீன்னு கணக்கு பண்ணல;)
@கோபிநாத்
//
நல்ல பாட்டு சிவிஆர்...நன்றி ;)////
ஆமாம் அண்ணாச்சி!
உங்களுக்கு பிடித்தமையில் நன்றி!! :-)
@மணி
பாடலை எழுதியவர் பெயர் "ப்ரஷூன் ஜோஷி"
பதிவில் சேர்த்து விடுகிறேன்!! :-)
@கப்பி
:)
@சீனா
நன்றி சீனா
@சத்தியா
//நீங்க இந்த பாட்டுக்கு மட்டும் தான் அழுதீங்களா? பரவா இல்லையே...நான் எல்லாம் எத்தனை வாட்டீன்னு கணக்கு பண்ணல;////
இந்த பாட்டிற்கு கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வந்தது! இதற்கே கூட வந்தவர்கள் ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள்! :-)
இந்த ஞாயித்துக் கிழமை தான் இந்தப் படத்தைப் பாத்தேன். பெங்களூருல் இன்னும் தியேட்டரில் ஓடுது. மிக அருமையான பாட்டு. சத்தியமா பாட்டைப் பாக்கும் போது உங்க பதிவு தான் ஞாபகத்துக்கு வந்தது. அப்போ கமெண்ட் போடலை. உங்க மொழிபெயர்ப்பு ரொம்ப அருமை.
//Bheed Mein Yun Na Chodo Mujhe
Ghar Laut Ke Bhi Aa Naa Paoon Maa
Bhej Na Itna Door Mujkko Tu
Yaad Bhi Tujhko Aa Naa Paoon Maa
Kya Itna Bura Hoon Main Maa
Kya Itna Bura Meri Maa//
இந்த வரிகளைக் கேட்ட போது ஊத்தோ ஊத்தோன்னு ஊத்துது. கண்ட்ரோலே பண்ண முடியலை.
Post a Comment