படங்கள் ப்ளிக்கரில் இருந்து தொடுக்கப்படுவதால்,ப்ளிக்கர் தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளில் இந்த படங்கள் பார்க்க முடியாது!
மன்னிக்கவும் :(
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
படங்கள் ப்ளிக்கரில் இருந்து தொடுக்கப்படுவதால்,ப்ளிக்கர் தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளில் இந்த படங்கள் பார்க்க முடியாது!
மன்னிக்கவும் :(
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
இன்று காலை சற்றே போர் அடிக்க,பக்கத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு என் கேமராவை தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டேன்.
அங்கே தான் இந்த பூக்களை கண்டேன்.முன்பெப்பொழுதும் பார்க்காத பூக்கள்..
உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?? ;)
![]() |
![]() |
இது என்னை மாதிரி புகைப்பட பதிவர்களுக்கு(for photobloggers)
உடனே எதுக்கு பக்கத்தை மூட போறீங்க??
நீங்களும் கொஞ்சம் படிச்சு வைங்க.வருங்காலத்துல எப்போவாவது உதவியா இருக்கும்.. :)
முதல்ல கீழே இருக்கற ரெண்டு படத்தையும் பாத்துக்கோங்க...
நம்ம குரோம்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கீழே தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயிலின் படம்.
இதுல பாத்தீங்கன்னா மொத படம் கொஞ்சம் சின்னதா இருக்கும்,இரண்டாவது படம் பெரியதாக இருக்கும்.எனக்கு பதிவில் படம் போட்டாலே பெரியதாக இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் பார்க்க வசதியாகவும் புகைப்படத்தை முழுமையாக ரசிக்கவும் முடியும். நமது தமிழில் புகைப்படக்கலை போட்டிக்காக பலரின் பதிவிற்கு் சென்று பார்க்கும்போதெல்லாம் இதை உணர்ந்திருக்கிறேன்
ப்ளிக்கரில்(flickr) இருந்து நேரடியாக பதிவில் காண்பித்தால் img tag-இல் width,height ஆகியவற்றை கொடுத்து நமது இஷ்டப்படியான அளவிற்கு காண்பிக்கலாம்.ஆனால் வளைகுடா நாடுகளில் ப்ளிக்கர் தளம் தடை செய்யப்பட்டுள்ளது.இதனால் பதிவில் அங்கிருந்து படத்தை காண்பிக்காமல் ப்ளாக்கர் மூலமாக நேரடியாக பதிவில் வலையேற்றுவது தான் நாம் அனைவரின் வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் இப்படி செய்தாலே முதல் படத்தை போல சிறியதாக பதிவில் தோன்றுகிறதே!!
என்ன பண்ணலாம்???
நாம் வழக்கமாக படத்தை ப்ளாக்கரில் வலையேற்ற என்ன செய்வோம்??
பதிவை edit செய்யும் இடத்தில் கீழ்கண்ட பொத்தானை அழுத்துவோம்.
இதை அழுத்தியவுடன் கீழ்கண்ட பாப் அப் ஜன்னல் திறக்கும்.
இதில் உங்கள் படத்தை தேர்ந்தெடுத்து விட்டு "Upload image"என்ற எழுத்துக்களை அழுத்திவிடுவோம் அல்லவா??
இப்பொழுது வலையேற்றப்பட்ட படம் நமது பதிவில் எப்படி தெரிகிறது என்று பார்ப்போம்.நமது பிளாக்கர் எடிட்டரில் இரண்டு tabகள் இருக்கும். ஒன்று "Edit HTML",இன்னொன்று "Compose".
நாம் படத்தை வலையேற்றிய பின் compose tab-இல் படம் தெரியும் ஆனால் Edit HTML சென்று பார்த்தால் கீழ்கண்டவாறு நிரல்கற்றை(Code Piece) உருவாகி இருக்கும்.
மேலே பார்த்தீர்கள் என்றால் இந்த நிரலியில் இரு முறை JPG இணைப்புகள் இருப்பதை பார்க்கலாம்.
என்னங்க?? இது வரைக்கும் தெளிவாத்தானே இருக்கு??
நல்லது!! இனிமே நம்ம படம் பெருசா தெரியறதுக்கு என்ன பண்ணனும்னு பாப்போம்.
நாம ப்ளாக்கருல படத்தை வலையேற்றினாலும் அது உங்களின் கூகிள் பிகாசா ஆல்பத்தில் தான் சேமிக்கப்படுகிறது.அதாவது உங்கள் பிக்காசா ஆல்பத்திற்கு நீங்கள் சென்று பார்த்தீர்கள் என்றால் உங்களின் வலைப்பூவின் பேரோடு ஒரு ஆல்பம் இருப்பது தெரியும்.அதில் நீங்கள் உங்கள் வலைப்பூவில் வலையேற்றிய படங்கள் அனைத்தும் இருப்பதை பார்க்கலாம்(உங்கள் பிக்காசா ஆல்பத்திற்கு செல்ல உங்கள் ஜிமெயில் மின் அஞ்சல் பக்கத்தில்,மேற்பகுதியில் உள்ள "Photos" என்ற இணைப்பை சொடுக்கினாலே போதும்).
பிக்காசா ஆல்பத்திற்கு போயாச்சா?? அதில் உங்கள் வலைப்பூவின் ஆல்பத்தை தேடிக்கண்டுபிடித்தாயிற்றா?? நல்லது! இப்பொழுது நீங்கள் சமீபத்தில் உங்கள் இடுகையில் வலையேற்றிய படத்தை தேடிப்பிடித்து திறந்துக்கொள்ளுங்கள்.
1.)இப்பொழுது நீங்கள் இந்த படம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் இணைப்பை கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் நெருப்புநரி உலாவியை (Firefox) பயன்படுத்துபவராக இருந்தால் படத்தின் மீது ரைட் க்ளிக் செய்து "Copy image location" என்ற ஆப்ஷனை சொடுக்கினால் போதும்.படத்தின் இணைப்பு உங்கள் clip board-இல் சேர்ந்துவிடும்.
மற்ற உலாவிகளில்(IE etc etc) படத்தின் மீது ரைட் க்ளிக் செய்து Properties எனும் ஆப்ஷனை சொடுக்குங்கள். இப்பொழுது திறக்கும் ஜன்னலில் Address(URL) எனும் சொல்லிற்கு பக்கத்தில் இருக்கும் உங்கள் படத்தின் உரலை காபி செய்து கொள்ளுங்கள்.
2.)இப்பொழுது நாம் முன்பு பார்த்தோமே நிரலி,அதில் இரண்டு இடங்களில் JPG இணைப்பு உள்ளது என்று சொன்னேன் அல்லவா. இதில் இரண்டாவதாக இருக்கும் இணைப்புக்கு பதிலாக நாம் காபி செய்து வைத்திருக்கும் இணைப்பை ஒட்டி விடுங்கள்!
அவ்வளவுதான்!!
இப்பொழுது compose tab-இல் சென்று பார்த்தாலே படம் பெரியதாக தெரியும்! அதே போல பதிவை publish செய்த பிறகும் உங்கள் வலைப்பூவில் பெரியதாக தெரியும்.
இது தற்போது கொஞ்சம் முட்டி மோதி நான் தெரிந்துக்கொண்ட workaround.ஆர்வமிருப்பவர்கள் நிரலியில் உள்ள img tag-இல் width மற்றும் height-ஐ மாற்றி உங்கள் படங்களின் அளவு எந்த அளவு மாறுபடுகிறது என்று விளையாடிப்பார்க்கலாம்.
இதை விட சுலபமான வழி இருந்தால் பின்னூட்டத்தில் அறிவிக்கவும்!!
எப்படியோ!! இனிமே நம்ம தமிழ்ப்பதிவர்கள் பக்கங்கள் சின்னதா படங்கள் இருக்கக்கூடாது.நல்லா தெளிவா பெருசா பளிச்சுனு இருக்கனும்...
என்ன நான் சொல்றது...
சரியா?? ;)
****************************************************************************
முதன் முறை பார்த்ததில் இருந்து குரோம்பேட்டை மேம்பாலத்தை படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எண்ணி இருந்தேன்..
சமீபத்தில் தான் சந்தர்ப்பம் அமைந்தது.எடுத்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு இங்கே...
மீதிஎனது ப்ளிக்கர் பக்கத்தில்.. :-)
நேற்று ஞாயிற்றுக்கிழமை (13-ஆம் ஜூலை) புனித தோமையார் மலையில் 9-ஆவது சென்னை புகைப்பட நடைபயணம்(9th Chennai Photowalk) நடைபெற்றது.
அதில் அடியேனும் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது!!அப்பொழுது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு..
மேலும் படங்களை பார்க்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
நன்றி! :-)
Without style=width:100%
With style=width:100%
சமீபத்தில் நண்பர்களோடு மகாபலிபுரத்திற்கு படம் எடுக்க சென்றிருந்தேன்.
அப்பொழுது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு!
மீதி படங்களை இந்த ப்ளிக்கர் தொடுப்பிற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம்..
ரொம்ப நாளைக்கு முன்னாடி தொலைந்து போன லென்ஸ் மூடியை நேற்றுதான் வாங்க முடிந்தது
வரும் வழியில் வேளச்சேரியில் எடுத்த சில படங்கள் சில பார்வைக்கு...
சமீப காலங்களில் சென்னையில் அதீத வளர்ச்சியடைந்த பகுதிகளில் வேளச்சேரியும் ஒன்று.
நான் அயல்நாட்டில் இருந்த சமயத்தில் தனிமையான நேரங்களில் இந்தியா ,சென்னை பற்றிய செய்திகள்,படங்கள் பார்க்க வேண்டும் போல இருக்கும்.அப்படி பார்க்க நினைப்பவர்களுக்கு ,இணையத்தில் பார்ப்பதற்கு ஏதாவது ஒரு தளம் வேண்டும் என்று பல சமயங்களில் யோசித்ததுண்டு.
இந்தியா வந்த பிறகு இப்படி பல இடங்களுக்கு சென்று படங்கள் எடுத்து இணையத்தில் வலையேற்ற வேண்டும் என்று நினைத்ததுண்டு.அந்த எண்ணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை!
மேலும் இது போன்று படங்கள் எடுத்தால் கண்டிப்பாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்... :)
விஜயநகரில் இருந்து குருநானக் காலேஜ் வரை இருக்கும் சாலை. வேளச்சேரி பைபாஸ் சாலை என்று சொல்கிறார்கள்!! ஒரு காலத்தில் இங்கிட்டு மிகச்சிறிய சாலை தான் இருக்கும்(அதுக்கும் முன்னாடி ஒன்னுமே இருக்காது,ஆனா அது வேற விஷயம்).ஆனால் இப்பொழுது நல்ல அகலமான மற்றும் தரமான சாலையாக மாறியிருக்கிறது.இந்த சாலையில் ஒரு சில பேருந்து வழித்தடங்கள் மட்டுமே செல்கின்றன.ஆனால் மற்ற வாகனங்கள் இதில் செல்வதால் வேளச்சேரி மெயின்ரோடில் பெருமளவு நெரிசல் குறைக்கப்படுகிறது.வாகன ஓட்டுனர்களுக்கும்,குறுகலான வேளச்சேரி மெயின் ரோடில் போவதற்கு பதில் ,நல்ல அகலமான இந்த சாலையில் போவது நிம்மதியாக இருக்கிறது.
இது வேளச்சேரி மேம்பாலம்.கீழே வேளச்சேரியில் இருந்து புனித தோமையார் மலை வரை ரயில் தண்டவாளங்கள் செல்லும்.இந்த மேம்பாலத்தில் இருந்து வேளச்சேரி ரயில் நிலையத்தை காணலாம்.இதில் போனால் வண்டி நிறைய ஆட்டம் எடுக்கும் !! பெரிதாக பள்ளம் மேடு இல்லாவிட்டாலும் சாலை சமமாக போடப்படாதடால் இப்படி இருக்கிறது என நினைக்கிறேன்.
வேளச்சேரி ரயில்நிலையம்.இந்த ரயிநிலையம் வந்த பிறகு விரைவு ரயில் திட்டம் சற்றே உபயோகமாகியிருக்கிறது என்று சொல்லலாம்.புனித தோமையார் மலை வரை ரயில்கள் செல்ல ஆரம்பித்தவுடன் இது மேலும் சிறப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்னும் பேருந்துகள் தொடர்பு போன்ற விஷயங்கள் சீரமைத்தால் மேலும் மக்கள் உபயோகப்படுத்துவார்கள் என்று நம்பலாம்!! ரயில்களில் தற்போது அவ்வளவாக கூட்டமில்லை என்று நினைக்கிறேன்(தாம்பரம் கடற்கரை இரயில்களோடு ஒப்பிடும்போது)ரயில்களின் கால அட்டவணையை இங்கு பார்க்கலாம்.
வேளச்சேரி மேம்பாலத்தின் இன்னொரு படம்! ஒரு மாதிரி புகை மாதிரி தெரிவது காலைப்பணி அல்ல.இது குப்பைகளை எரிப்பதால் வரும் புகை.இந்தப்பகுதியில் ஆதி முதலாகவே ஒரு குப்பை கொட்டும் கூடம் உண்டு.இங்கே அவ்வப்போது குப்பையை எரித்து விடுவதால் சாலையில் புகை சூழ்ந்துக்கொள்ளும்.இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் சாலையில் போவோரின் உடல்நிலை பாதிப்பு பற்றி அதிகாரிகள் அவசியம் யோசிக்க வேண்டும்.
மேபாலத்தின் இன்னொரு படம்!! பார்ப்பதற்கு நேப்பியர் மேம்பாலம் போல் உள்ளது அல்லவா?? :-)
இது வேளச்சேரி சாலையை ஒட்டியுள்ள சதுப்புநிலப்பகுதி. ஆங்கிலத்தில் Pallikaranai marsh என்று கூறுவார்கள். இங்கு கடல் கடந்து பல அறிய பறவைகள் (migratory birds) வந்து செல்லும்.ஆனால் சுற்றியுள்ள மாற்றங்களைத்தாண்டி இந்த இயற்கை சதுப்புநிலப்பகுதி எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை.சமீபத்தில் சமூக ஆர்வலர்களின் முயற்சியால் இந்த இடம் பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டேன்.