நாமக்கல் பயணக்குறிப்புகள் - 1

இந்தக்கதையை பலரிடம் சொல்ல வேண்டி வரும் என்று தெரிவதால் தனிப்பதிவாகவே போட்டுரலாம்னு......
வரேன் வர மாட்டேன் அப்படின்னு வெளையாட்டு காட்டிக்கிட்டே இருந்த இளவஞ்சி அண்ணாச்சி,கடைசி நேரத்துல வேறு வேலை இருப்பதால் நாமக்கல் வர முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் டிக்கெட் முன்னமே எடுத்து விட்ட படியால் இருவரும் ஒன்றாக பஸ் ஏறி விடலாம் என்று முடிவு செய்தோம்.தாம்பரத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த நேரத்தில் நகரங்களின் வளர்ச்சியில் இருந்து புகைப்படக்கலை வரை நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம்.இளவஞ்சி அண்ணாச்சியுடன் பேசுவது என்றால் எப்பொழுதுமே இனிமையான அனுபவம் தான்.

இப்படியாக 10:30க்கு எதிர்பார்க்கப்பட்ட பேருந்து 11:15க்கு வரும்வரை அண்ணாச்சியுடன் மொக்கை போட்டுக்கொண்டிருந்தேன்.பேருந்தில் ஏறியதும் சிறிது நேரத்திலேயே சொர்க்லோகம் சென்று விட்டேன்.காலையில் அவர் ராசிபுரத்தில் இறங்கும் போது கூட சற்றே தூக்கக்கலக்கத்தோடு தான் கையசைத்தேன். பின்பு இளங்காலை வெளிச்சத்தில் கிராமப்புர அழகை ரசித்தபடியே நாமக்கல் வந்து சேர்ந்தேன்.அங்கிருந்து ஆட்டோ பிடித்து வாங்கிலி ஓட்டலுக்கு வந்தேன்.அங்கே வெங்கி(இம்சை),நந்து,மோகன் தாஸ் ஆகியவர்கள் தங்கியிருந்தார்கள்.


அவர்கள் எழுந்துகிளம்பியபின் நேராக நாமக்கல் சிபி வீட்டிற்கு சென்று விட்டோம்.அங்கு ஜீவ்ஸ் அண்ணாச்சியும் சேர்ந்துக்கொள்ள எங்கள் குழு கலை கட்ட அரம்பித்தது.
அண்ணியின் கையினால் மெத்தென்ற இட்டிலியும் சுவையான கெட்டிச்சட்டினியும் பரிமாறப்பட,அவை போன இடம் தெரியவில்லை.

பிறகு நான்,வெங்கி,நந்து மற்றும் ஜீவ்ஸ் காரில் ஏறிக்கொள்ள கொல்லிமலைக்கு பயணப்பட்டோம்.சிபியும் மோகன் தாசும் பஸ்ஸில் வந்து சேர்ந்துக்கொள்வதாக திட்டம்.
போகும் வழியில் ஒன்றிரண்டு இடங்களில் இறங்கி படம் பிடித்தபடி பயணம் கலகலப்பாக சென்றது.
மேலே சென்ற பின் ஒரு அறையை பார்த்துக்கொண்டு சிறிது உண்ட கலக்கத்திற்கு அடிமையானோம்.
பிறகு நாங்கள் ஆறு பேரும் (நான்,ஜீவ்ஸ்,நந்து,மோகன் தாஸ்,வெங்கி மற்றும் நாமக்கல் சிபி) ஊர் சுற்ற காரில் கிளம்பினோம்.இத்தனை பேரையும் ஒரு தம்மாத்தூண்டு சாண்ட்ரோ காரில் ஏற்றிக்கொண்டு காடு மலை எல்லாம் திறமையாக ஓட்டிய வெங்கிக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள்.
முதலில் நாங்கள் சென்றது அரப்பளீஸ்வரர் கோவில்.சிறிய கோவில் என்றாலும் அமைதியாக தெய்வீகத்தன்மையுடன் இருந்தது.
அதன் பின் பக்கத்தில் இருந்த ஆகாச கங்கை நீர்விழுச்சிக்கு செல்ல எத்தனித்தோம்.பெரிய நீர்விழுச்சிக்கு 4:30க்கு பின் யாரையும் அனுமதிக்க மாட்டார்களாம் அதனால் பக்கத்தில் சிறிய நீர்விழுச்சிக்கு செல்லும் பாதையில் நுழைந்தோம்.கீழே சிறிது இறங்கிச்சென்ற பின் அங்கே ஒரு சிறு அருவியில் சில பேர் குளித்துக்கொண்டிருந்தார்கள்.அங்கேயே எங்கள் முக்காலிகளை விரித்துக்கொண்டு எங்கள் அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டோம். நாங்கள் செய்யும் அலப்பரையை பார்த்து ஒரு உள்ளூர்காரர் சற்றே தள்ளிச்சென்றால் இன்னும் அழகான நீர்விழுச்சி தெரியும் என்று அழைத்துச்சென்றார்.
அவர் பின் சற்று நேரம் சென்ற பின் சொன்னார்போல் மிக அழகான இயற்கை காட்சி எங்கள் கண் முன் விரிந்தது.ஆனால் போகும் வழி சற்றே கவனமாக செல்ல வேண்டிய வழி என்பதை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.
இத்தனை அழகான இயற்கை காட்சியை பார்த்துவிட்டு எனக்கு தலை கால் புரிய வில்லை.உடனடியாக முக்காலியை விரித்துவைத்து,எனது புகைப்படப்பெட்டியில் இந்த அழகை சேமிக்க முயற்சிக்க ஆரம்பித்தேன்.


எங்கள் வழிகாட்டி அனைவரையும் அழைத்துக்கொண்டு சற்று தள்ளி சென்று விட்டார்.இவர்கள் எல்லாம் சென்ற பிறகு நான் என் கேமரா பொருத்தப்பட்ட முக்காலியை தூக்கிக்கொண்டு அவர்கள் சென்ற வழியே சென்ற போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.ஈரமில்லாத பகுதிகளாக பார்த்துக்கொண்டு நான் தாண்டி தாண்டி சென்றுக்கொண்டிருந்த போது ஒரு இடத்தில் பாசி வழுக்கி தொபுக்கடீர் என்று விழுந்தேன்.முட்டியில் நேரடியாக அடி பட்டு வின் வினென்று வலிக்க ஆரம்பித்து விட்டது. அதோடு முக்கியமாக முக்காலியுடன் கூடிய என் கேமாராவும் கீழே தண்ணீரில் விழுந்து விட்டது.இதே சற்றி தள்ளி விழுந்தால் இறக்கத்தில் புரண்டு போய் அதோ கதியாகி இருப்பேன்.கேமராவும் சற்றி தள்ளி விழுந்திருந்தால் எங்கேயோ பிடிக்க முடியாமல் உருண்டு போய் ,மிக அதிக அளவில் நஷ்டமேற்பட்டிருக்கும்.
எனக்கு வலியோடு எழுந்திருக்க கூட முடியவில்லை. யாராவது தூக்கிவிடுவார்களா என்று பார்த்தால் எல்லோரும் கீழே இறங்கி குளித்துக்கொண்டிருக்கிறார்கள். பிறகு நானே எழுந்து நொண்டி நொண்டி அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் அமர்ந்துக்கொண்டேன்.என்னுடைய முக்காலி கேமரா எல்லாவற்றையும் மடித்து பையினுள் வைக்க ஆரம்பித்துவிட்டேன்.அப்பொழுது என்னுடைய லென்ஸ் மூடி ஒன்று கீழே உருண்டோடி எங்கோ மறைந்துக்கொண்டது.பட்ட காலிலே படும் என்று இதைத்தான் சொல்லுவார்கள் போல.


படம்:வெங்கி(இம்சை)
அதற்குள் நான் ஏதோ தனியே செய்துக்கொண்டிருப்பதை பார்த்து எங்கள் வழிகாட்டி மேலேரி வந்து என்னை ஜாக்கிரதையாக மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்றார்.கீழே வந்த பின் ஜீவ்ஸ் அண்ணாச்சி கேமராவில் இருந்து பேட்டரியை எடுத்து,அதை நன்றாக உதறி என் கைக்குட்டையில் மடித்து வைத்தார்.மற்றும் இரண்டு லென்ஸ்களில் தண்ணீர் புகுந்திருப்பதை கவனித்து அதையும் கொஞ்சம் உதறி நீரை வெளியேற்ற முயற்சிகளை செய்தார்.கொஞ்சம் தூசு சேர்ந்துக்கொண்டாலே விளையாட்டு காட்டும் எஸ்.எல்.ஆர் கேமராவில் தண்ணீர் எல்லாம் புகுந்துக்கொண்டு விட்டதே என்று எனக்கு பக்கென்று ஆகிவிட்டது. ஒரு வாரத்திற்கு கேமராவை வெயிலில் உலர்த்துமாறும் அதன் பின் தேவைப்பட்டால் கேனன் டீலரிடம் சென்று சரி செய்ய முயற்சிக்கலாம் என்றும் ஆறுதல் கூறினார்.வெயிலில் உலர்த்த இதென்ன வத்தலா அல்லது வடகமா?? தவிர எஸ்.எல்.ஆர் கேமரா எல்லாம் பழுது பார்க்க வேண்டும் என்றால் சொத்தில் பாதியை அடகு வைக்க வேண்டுமே என்றெல்லாம் நான் கணக்கு போட ஆரம்பித்து விட்டேன்.

அதை விட திங்கட்கிழமை விடுப்பு எல்லாம் எடுத்து விட்டு வந்து இப்படி படம் பிடிக்க முடியாமல் வத்தல் உலர்த்த வைத்துவிட்டார்களே என்று செம கடுப்பு வேறு.எதுவாக இருந்தாலும் சென்னை சென்றவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டாலும்,கேம்ரா சரியாகுமா,எவ்வளவு செலவாகலாம் என்று சிறிது குழப்பம் மனதில் இருந்துக்கொண்டே இருந்தது.

அங்கேயே எல்லோரும் படம் பிடித்துக்கொண்டிருக்க,நான் சும்மாவேனும் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தேன்.நடு நடுவில் யாராவது படம் எடுத்தால் இது சரியில்லை,அதை மாத்துங்க அப்படி இப்படியென்று இலவசமாய் உபதேசங்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தேன்.

கடைசியில் இருட்டாக எல்லோரும் கடையை கட்டிக்கொண்டு கிளம்பினோம்.ஓட்டல் வந்து சேர்ந்த போது களைப்போடு தூக்கமும் சேர்ந்துக்கொண்டது.சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு கட்டிலில் ப்ளாட் ஆகிவிட்டேன். வெளியில் "நீரின்றி அமையாது உலகு" என்று குடிமக்கள் கொண்டாடிக்கொண்டிருக்க,நான் போர்வையை இழுத்துப்போர்த்துக்கொண்டு தூங்குவது போல் பாவனை செய்ய ஆரம்பித்தேன்.சில நிமிடங்களில் உண்மையான தூக்கம் என்னை தொற்றிக்கோன்டது.
அடுத்த நாள் காலை ..........
-தொடரும்

பி.கு:சிவன் கோவில் படத்துல ஒருத்தர் ஏதோ காலை வெட்டிகிட்டு இருக்காறே...அது என்னன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.. ;)

38 comments:

ஷைலஜா said...

நாந்தான் ஃப்ஸ்ட் போல?:)
தூங்கறதுக்கு முன்னாடி இங்கவந்து படிச்சிட்டேன்...


//அதோடு முக்கியமாக முக்காலியுடன் கூடிய என் கேமாராவும் கீழே தண்ணீரில் விழுந்து விட்டது.//

அச்சச்சோ வேலூர்ல எப்டில்லாம் அந்த மண்டபத்துல குனிஞ்சி வளைஞ்சி எடுத்தீங்க அப்போ ஒண்ணும் ஆகலையே?

//இதே சற்றி தள்ளி விழுந்தால் இறக்கத்தில் புரண்டு போய் அதோ கதியாகி இருப்பேன்.கேமராவும் சற்றி தள்ளி விழுந்திருந்தால் எங்கேயோ பிடிக்க முடியாமல் உருண்டு போய் ,மிக அதிக அளவில் நஷ்டமேற்பட்டிருக்கும்.
எனக்கு வலியோடு எழுந்திருக்க கூட முடியவில்லை. யாராவது தூக்கிவிடுவார்களா என்று பார்த்தால் எல்லோரும் கீழே இறங்கி குளித்துக்கொண்டிருக்கிறார்கள். பிறகு நானே எழுந்து நொண்டி நொண்டி அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் அமர்ந்துக்கொண்டேன்//

ச்சே பாவம்...

//வெயிலில் உலர்த்த இதென்ன வத்தலா அல்லது வடகமா?? தவிர எஸ்.எல்.ஆர் கேமரா எல்லாம் பழுது பார்க்க வேண்டும் என்றால் சொத்தில் பாதியை அடகு வைக்க வேண்டுமே என்றெல்லாம் நான் கணக்கு போட ஆரம்பித்து விட்டேன்.//

ஆமா ரொம்ப எக்ஸ்பென்சிவ் இல்லையா அதெல்லாம்? அடிமைப்பென் எம்ஜிஆர் மாதிரி அதை நீங்க ஊர் ஊரா தூக்கிட்டுப்போனதுக்கு த்ருஷ்டியாச்சோ?

//வெளியில் "நீரின்றி அமையாது உலகு" என்று குடிமக்கள் கொண்டாடிக்கொண்டிருக்க,...

>>நீர் இப்படி சொன்னா புரியாதா எங்களுக்கெல்லாம்?:) என்னவோ போங்க:)

//நான் போர்வையை இழுத்துப்போர்த்துக்கொண்டு தூங்குவது போல் பாவனை செய்ய ஆரம்பித்தேன்.சில நிமிடங்களில் உண்மையான தூக்கம் என்னை தொற்றிக்கோன்டது.
அடுத்த நாள் காலை ..........//

ம்ம் என்னாச்சு? படிக்க ஆவலுடன்
'ஷைலஜா'

இராம்/Raam said...

:)

2nd பார்ட் போடுங்க... :)

SathyaPriyan said...

அடடா இப்படி ஆகி விட்டதே. :-(

இப்பொழுது தங்கள் மூட்டு எப்படி இருக்கிறது?

கேமராவிற்கு ஏதாவது வேண்டுமானால் தெரியப் படுத்துங்கள். இங்கே வாங்கி யாராவது நண்பர்கள் இந்தியா வரும் பொழுது அனுப்பி வைக்க முயல்கிறேன்.

எச்சரிக்கையாக இருங்கள்.

SathyaPriyan said...

"Hair Dryer" பயன்படுத்தி சூடான வெப்பக் காற்றை அதன் மீது அடித்து பார்க்கலாம். நீரில் விழுந்த எனது அலைப் பேசியை அப்படி செய்து தான் சரியாக்கினேன்.

Boston Bala said...

ம்ம்ம்ம் (:

SanJai said...

//அதோடு முக்கியமாக முக்காலியுடன் கூடிய என் கேமாராவும் கீழே தண்ணீரில் விழுந்து விட்டது.//

உங்க டார்ச்சர் தாங்காம தற்கொலக்கு முயற்சி பண்ணி இருக்கு. :))

//அப்பொழுது என்னுடைய லென்ஸ் மூடி ஒன்று கீழே உருண்டோடி எங்கோ மறைந்துக்கொண்டது//

உங்க கிட்ட இருந்து தல தெறிக்க தப்பிச்சி ஓடி இருக்குனு சொல்லுங்க.. :)

SanJai said...

////அதோடு முக்கியமாக முக்காலியுடன் கூடிய என் கேமாராவும் கீழே தண்ணீரில் விழுந்து விட்டது.//

அச்சச்சோ வேலூர்ல எப்டில்லாம் அந்த மண்டபத்துல குனிஞ்சி வளைஞ்சி எடுத்தீங்க அப்போ ஒண்ணும் ஆகலையே?//

அப்போவே எதுனா ஆகி இருக்கனும்னு சொல்ல வறீங்களா? ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி? :)

////நான் போர்வையை இழுத்துப்போர்த்துக்கொண்டு தூங்குவது போல் பாவனை செய்ய ஆரம்பித்தேன்.சில நிமிடங்களில் உண்மையான தூக்கம் என்னை தொற்றிக்கோன்டது.
அடுத்த நாள் காலை ..........//

ம்ம் என்னாச்சு? படிக்க ஆவலுடன்
'ஷைலஜா//

இதுல என்ன ஆர்வம் உங்களுக்கு?... என்னடா இது.. இவங்க ஏகப்பட்ட போட்டோ புடிக்கிற கோஷ்டிக்கு ஏற்பாடு பண்ணி இருப்பாங்க போலனு ஒரிஜினல் கல்யாண போட்டோ கிராபர் எங்க காது பட பேசினத சொலவா போறார்.? :)எங்கள எல்லாம் பார்த்து பேயறைஞ்ச மாதிரி சுத்திட்டு இருந்தார். :P

இலவசக்கொத்தனார் said...

கால் பரவாயில்லையா இப்போ?

வெட்டிப்பயல் said...

தல,
இனிமே வெளியே போகும் போது கொஞ்சம் பார்த்து பத்திரமா போங்க.

இன்னைக்கு தான் என் ப்ராஜக்ட்ல இருக்கறவங்க எல்லாம் Long Weekendக்கு Accadia போகலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருந்தாங்க. அந்த பீச் எல்லாம் பார்த்த உடனே நீங்க வேகமா பாறை மேல ஏறினது தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு.

பாத்து பத்திரமா போயிட்டு வாங்க...

nathas said...

ரொம்ப வருத்தமா இருக்கு தல :(
கால் இப்போ எப்படி இருக்கு ?

நிஜமா நல்லவன் said...

கேமரா என்ன ஆச்சு?

ILA said...

கொல்லி மலையில் வழுக்கி விழுறது சகஜம். ஆனா உங்க பொட்டியோட விழுந்தா அது பாவம். சரி, பொட்டிக்கும் உங்களுக்கு இப்போ உடம்பு தேவலையா?

G.Ragavan said...

விழுந்த இடத்துல தோண்டீருந்தா பொதையல் கெடைச்சிருக்கமப்பா.. இப்பிடிக் கோட்டை விட்டுட்டியே.... என்ன பையன் நீ!!!!

ஒரு ரகசியம் சொல்றேன். எனக்கும்... இந்த பஸ்சுல ஏறுனதும் தூக்கம் வந்துரும். இப்பிடித்தான் கூர்க் போறதுக்கு நண்பர்கள் பஸ் ஏறுனோம். பஸ் பொறப்பட்டதும் நான் தூங்கீட்டேன். நடுவுல பஸ் டீக்கு நிப்பாட்டுன எடத்துல திரும்ப முழிச்சேன். பாத்தா பக்கத்துல கொட்டக் கொட்ட முழிச்சிக்கிட்டிருக்கான். தூங்குன்னு சொல்லீட்டு நான் தூங்கீட்டேன். காலைல பஸ் நிப்பாட்டுனப்பதான் முழிச்சேன். அவனுக்குக் கடுப்போ கடுப்பு. திரும்ப வர்ரப்ப என்னையத் தூங்க விடமாட்டேன்னு கடுஞ்சபதம் எடுத்தான். இதெல்லாம் நம்மளப் பதம் பாக்குமா.... பஸ் டுர்ர்ர்ர்ர்ர்ர்ரு... நான் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு...

கேமராவுக்கு ஏதாச்சும்னா ஓக்கே. நீ ஒழுங்கா வந்து சேந்ததே போதும். :)

Ramya Ramani said...

நீர்வீழ்ச்சி படம் மிக மிக மிக அருமை! உங்களுடைய நாள் காட்டிக்கிற்கு ஏற்ற படம்!

//பிறகு நானே எழுந்து நொண்டி நொண்டி அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் அமர்ந்துக்கொண்டேன்.//

அச்சச்சோ பத்திரமா படம் எடுங்க சிவிர்!

//சில நிமிடங்களில் உண்மையான தூக்கம் என்னை தொற்றிக்கோன்டது.
அடுத்த நாள் காலை ..........//

மேலும் நல்ல படங்களை எதிர்பார்கிரோம்

கப்பி பய said...

ம்ம்ம் :))

நந்து f/o நிலா said...

//"நீரின்றி அமையாது உலகு"//

ஜீவ்ஸ் கோச்சுக்கப்போறாரு CVR. அவர இப்படியா மாட்டி விடறது??

இலக்குவண் said...

மேல இருக்கிற நந்து ரொம்ப நல்லவருங்க...;))

நந்து f/o நிலா said...

உனக்கு தெரியுது லக்ஸ்மன். இந்த உலகுக்கு தெரியலியேப்பா.

வரலாறு முக்கியமில்லையா? அதான் இங்கே பதிவு பண்ணிட்டேன்

மதுரையம்பதி said...

அடப் பாவமே...கால் எப்படியிருக்கு இப்போ...

ஆமாம், காஸ்ட்லின்னு சொல்லிக் கேட்டிருக்கிகேன்.

மதுரையம்பதி said...
This comment has been removed by the author.
கயல்விழி முத்துலெட்சுமி said...

போன ட்ரிப் போட்டோ பாத்து நானே கண்ணுவச்சிருப்பேனோ..கேமிராவோட சேத்து வச்சு பாட்டியை திருஷ்டி சுத்த சொல்லுங்க.. :))
எப்படி இருக்கு முட்டி பரவாயில்லையா..

எல்லாத்தையும் கேமிரா கண்ணாலே பார்த்தா எப்படி கீழே மேலே பாக்கனும்.. ''

எம்.ரிஷான் ஷெரீப் said...

ஐயையோ..
இந்தப் பதிவை இப்பத்தான் பார்க்கிறேன் நண்பரே...

இப்போ எப்படியிருக்கீங்க?
கேமரா சரியாகிடுச்சா?

CVR said...

எல்லோருக்கும் தனித்தனியே பதில் தர முடியாமைக்கு மன்னிக்கவும்...
எனது உடல்நிலை பற்றியும் கேமரா பற்றியும் அக்கறையாக விசாரித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி.

கால் இரண்டு நாட்களில் சரியாகிவிட்டது!! அன்றைய தினம் வலி கொஞ்சம் இருந்தது,காலை நீட்டி மடக்க சிரமமாய் இருந்தது.அடுத்த நாள் வலி சற்று குறைந்தது!! அப்புறம் முழுவதுமாக சரியாகிவிட்டது!!
கேமரா பற்றி அடுத்த பதிவில் சொல்லுகிறேன்..... :)

துளசி கோபால் said...

அடக்கடவுளே.....
அடி ரொம்ப பலமில்லைதானே?

//வத்தலா வடகமா.......//

தேவுடா தேவுடா...இன்னிக்குத்தான் வடாம் பத்தி ஒரு பதிவு போட்டேன்.

டேக் கேர்.

Divya said...

Pictures are stunning asusuall!

\ஒரு இடத்தில் பாசி வழுக்கி தொபுக்கடீர் என்று விழுந்தேன்\

How are u ......r u ok now?

hope & wish u n ur 'udan pirappu' camera are fine:)))

[that 'thopukadeer' sound effect is nice....:))))]

Jeeves said...

//SathyaPriyan said...

"Hair Dryer" பயன்படுத்தி சூடான வெப்பக் காற்றை அதன் மீது அடித்து பார்க்கலாம். நீரில் விழுந்த எனது அலைப் பேசியை அப்படி செய்து தான் சரியாக்கினேன்.
//


DONT EVER TRY THIS WITH CAMERA UNLESS YOU PERMANENTLY WANNA LOOSE IT.

Jeeves said...

//நந்து f/o நிலா said...

//"நீரின்றி அமையாது உலகு"//

ஜீவ்ஸ் கோச்சுக்கப்போறாரு CVR. அவர இப்படியா மாட்டி விடறது??//


உண்மையும் உம்மையும் உலகமறியும் நந்து ;)

Jeeves said...

//Blogger நிஜமா நல்லவன் said...

கேமரா என்ன ஆச்சு?//

அடப்பாவி.. மூட்டுல அடிப்பட்டுச்சுன்னு ஒருத்தன் சொன்னா கேமரா என்னாச்சுன்னு கேக்கற

இதுல பேரு வேற நிஜமா நல்லவனாம்!!

ambi said...

//அடுத்த நாள் வலி சற்று குறைந்தது!! அப்புறம் முழுவதுமாக சரியாகிவிட்டது!!
கேமரா பற்றி அடுத்த பதிவில் சொல்லுகிறேன்//

நல்ல வேளை. உடம்பை பாத்துகுங்க அப்பு!

பாட்டரி இருந்தா தான் பிளாஷ் அடிக்க முடியும். :) (சுவர் இருந்தா தான்...னு எதுக்கு பழசையே சொல்லனும்?)

எம்.ரிஷான் ஷெரீப் said...

Dear CVR,

Please check this Article..
Sometimes this will be useful to u also..

http://rishanshareef.blogspot.com/2008/04/blog-post.html

மதுரையம்பதி said...

//ஜீவ்ஸ் அண்ணாச்சி கேமராவில் இருந்து பேட்டரியை எடுத்து,அதை நன்றாக உதறி என் கைக்குட்டையில் மடித்து வைத்தார்.மற்றும் இரண்டு லென்ஸ்களில் தண்ணீர் புகுந்திருப்பதை கவனித்து அதையும் கொஞ்சம் உதறி நீரை வெளியேற்ற முயற்சிகளை செய்தார்.//

ஆனாலும் ஜீவ்ஸ் அண்ணாச்சிக்கு மோசம்...உங்களுக்கு ஹெல்ப் ஏதும் பண்ணாம கேமராவ பாதுகாத்திருக்காரு பாருங்களேன்.. :)

கயல்விழி முத்துலெட்சுமி said...

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

பி.கு க்கான பதில் ...இது சண்டேசுவர நாயனாரின் கதை மேலே உள்ள லின்க்கில் விவரமாக இருக்கிறது.. :)

NewBee said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
போன ட்ரிப் போட்டோ பாத்து நானே கண்ணுவச்சிருப்பேனோ..கேமிராவோட சேத்து வச்சு பாட்டியை திருஷ்டி சுத்த சொல்லுங்க.. :))
எப்படி இருக்கு முட்டி பரவாயில்லையா..

//

வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்.

Take Care.

-இப்படிக்கு,

போன பதிவையும், நாட்காட்டிகளையும் படித்து/பார்த்துவிட்டு இதுவரை பின்னூட்டமே போடாத வண்டு.:D :D

பிரேம்ஜி said...

CVR! உடம்ப பார்த்துக்கோங்க!இப்ப பரவாயில்லையா?அருமையான புகைப்படங்கள்.நல்ல பயண கட்டுரை.

கோபிநாத் said...

:))

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)

SurveySan said...

இந்த கமெண்டு சூப்பரு.

//அதோடு முக்கியமாக முக்காலியுடன் கூடிய என் கேமாராவும் கீழே தண்ணீரில் விழுந்து விட்டது.//

/உங்க டார்ச்சர் தாங்காம தற்கொலக்கு முயற்சி பண்ணி இருக்கு. :))/

மங்களூர் சிவா said...

விழுந்து வாரரது எல்லாம் வீரனுக்கு ஜகஜம்.

தலை கல்யாண ரிசப்சன்ல எடுத்த போட்டோல்லாம் எங்க போடுங்க!

SathyaPriyan said...

//
Jeeves said...
/SathyaPriyan said...

"Hair Dryer" பயன்படுத்தி சூடான வெப்பக் காற்றை அதன் மீது அடித்து பார்க்கலாம். நீரில் விழுந்த எனது அலைப் பேசியை அப்படி செய்து தான் சரியாக்கினேன்.
/
DONT EVER TRY THIS WITH CAMERA UNLESS YOU PERMANENTLY WANNA LOOSE IT.
//
தகவலுக்கு நன்றி Jeeves. இனி எச்சரிக்கையுடன் இருக்கிறேன்.

Related Posts Widget for Blogs by LinkWithin