சைதையில் நடந்த புகைப்பட நடைபயணத்தை பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.
இந்த முறை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை நடந்த நடை பயணத்தில் இருந்து சில படங்கள்
திருவல்லிக்கேணி - காமராஜர் சாலை..சில படங்கள்
10-ஆவது சென்னை புகைப்பட நடைப்பயணம்
Chennai Photowalk என்று அழைக்கப்படும் சென்னை புகைப்பட நடைப்பயணம் அவ்வப்போது நடந்து வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.புகைப்பட ஆர்வலர்கள் ஓரிடத்தில் குடி அங்கே படங்கள் பிடிப்பது இந்த நிகழ்ச்சியின் சாராம்சம்.சென்ற தடவை போயிருந்த போது எடுத்த படங்களை இங்கே போட்டிருந்தேன்,இந்தப்பதிவில் சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சின்னமலை வரை நடைபெற்ற பயணத்தின் போது எடுத்த படங்களை காணலாம்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
பி.கு: படங்கள் ப்ளிக்கரில் இருந்து தொகுக்கப்பட்டிருப்பதால்,ப்ளிக்கர் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் தெரியாது..
மன்னிக்கவும் :(
வாழ்க்கை
புரிதல் இன்றி, உலகை கண்டு
பரிவு இல்லா, தனலில் வெந்து
எதற்கு பிறந்தோம்,எதனால் உழன்றோம்,
எதற்கு சிரித்து, எங்கு வீழ்ந்தோம்
எதையும் அறியும் ஆற்றல் இன்றி
உலக வாழ்வில் தினமும் ஓட்டம்
பிறவித்தேடல் தனியே தேடி
விடையே இன்றி குழப்பம் மூடி
விழுந்து புரண்டு நிமிர்ந்து பார்த்தால்
உலகம் உருண்டு தொலைவிலிருக்கும்
தனிமை இனிமை,பழகிப்பார்த்து
வெறுமை கொடுமை,சகித்துப்பார்த்து
விழிகள் மூடி,ஒளிந்து ஓடி
விலக நினைத்து,துவண்டு வாடி
கேள்வி கேட்டு,பரிதவித்து
முடிக்க நினைத்து,முயன்றும் கூட
முடிவு ஒன்று,பிறக்கும் வரையில்
முடிய மறுக்கும் நெடிய பயணம்
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் ஆலயம் - மாடம்பக்கம் - சில படங்கள்
நெடுநாட்களாகவே நான் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த கோயில் இது. மாடம்பாக்கம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
10-ஆவது நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டு தற்போது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினறால் பரமரிக்கப்பட்டு வருகிறது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
பி.கு: படங்கள் ப்ளிக்கரில் இருந்து தொகுக்கப்பட்டிருப்பதால்,ப்ளிக்கர் தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் தெரியாது..
மன்னிக்கவும் :(























