தேவர் மகன் படத்தில் நான் மிகவும் ரசிக்கும் காட்சி

நான் தமிழ் சினிமாவை பற்றி பெருமைப்பட வைக்கும் காட்சித்தொடர் இது.

நம் நாட்டுக்கு நம்மாலான கடமையை செய்வதற்கான தெளிவு தருவதாகவும் , “இந்த நாட்டுக்கு எவ்வளவு செஞ்சாலும் போறாது பா” என்று அங்கலாய்ப்பவருக்கு பதிலாகவும்,”சிங்கப்பூர்ல எல்லோரும் எப்படி இருக்காங்க தெரியுமா,அமெரிக்கால எல்லோரும் எப்படி இருக்காங்க தெரியுமா??நம்ம மக்கள் எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்!! இவங்களை திருத்தவே முடியாது”அப்படின்னு எதிர்மறையாக பேசும் போது மேற்கோள் காட்டவும்,நான் வெளிநாட்டில் இருக்கும் போது என்னை அறியாமல் எனக்கு தேசப்பற்றும்,மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை ஊட்டி என்னை உணர்ச்சிப்பெருக்க்காகிய காட்சித்தொடர் இது.

நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்.



இந்தக்காட்சியில் எதை பாராட்டுவது??? தமிழ்நாட்டின் இரு பெறும் மிகச்சிறந்த நடிகர்களின் நடிப்பையும்,வார்த்தை உச்சரிப்பையுமா??? அருமையான பிண்ணனி இசையையா?? ஒவ்வொரு வார்த்தையும் ஊசி போல் மனதில் பதிந்து சிந்திக்க வைக்கும் வசனத்தையா??இந்த அற்புதமான காட்சித்துண்டை
ரசிக்கும்படியான ஒளி ஓவியமாக்கியிருக்கும் காட்சியமைப்பயா???

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த காட்சியின் வசனங்களை கீழே கொடுத்துள்ளேன். எவ்வளவு பொருள் பொதிந்தவை என்று சற்றே நிதானமாக கேட்டு/படித்துப்பாருங்கள்..

*********************
சிவாஜி : டேய்!! சத்தி....நாந்தேன்...(கையை அசைத்து அழைக்கிறார்)

கமல் சிவாஜியை நோக்கி செல்கிறார்..அவர் பின்னால் நின்று கொள்கிறார்.

சிவாஜி:இங்கிட்டு வா..
கமல் சிவாஜியின் முன் சென்று நிற்கிறார்.

சிவாஜி: ஆஸ்பத்திரிக்கு போனீகளா??

கமல்: ஆமா ஐய்யா..

சிவாஜி: கோயில் கும்புடறதுக்கு இதா இருக்கேன்னு ச்ண்டை போட்டீகளே.இப்போ இந்த ஊரோட நெலமை புரிஞ்சுதா??

கமல்: நல்லாவே புரியுது.நான் செஞ்ச தப்பும் புரியுது..அதுக்கு தண்டனையா இந்த ஊர விட்டே போயிரலாம்னு இருக்கேன்

சிவாஜி துனுக்குற்று எழுகிறார்
சிவாஜி:ஊர...ஊர விட்டு போறீகளா??..ஹ..நடந்ததுக்கு பரிகாரம் தேடாம..ஊர விட்டு போறேன்னு சொல்லுறது கோழைத்தனும் இல்லை??

கமல்(உடனே):அதுக்காக....

சிவாஜி:அதுக்காக???

கமல்: அதுக்காக ..நடக்கற காட்டுமிராண்டித்தனத்தை வீரம்னு நெனைச்சுகிட்டு`இருக்கறது முட்டாள்தனம்.

சிவாஜி: இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல உங்கப்பனும் ஒருத்தந்தாங்குறத மறந்துறாத..

கமல்: அப்படி பாத்தா நானும்தான்ய ஒருத்தன்.ஆனா அதை நெனச்சு பெருமைப்பட முடியல.இரநூறு வருஷம் பின்தங்கியிருக்கற இந்த கிராமத்துல நான் படிச்ச படிப்பை எல்லாம் வேஸ்ட் ஆக்க விரும்பலைய்யா.

சிவாஜி:இரநூறு வருஷம் பின் தங்கிதான் போயிட்டோம் ஒத்துக்கறேன்.ரெண்டாயிரம் வருஷமா வேல்கம்பையும் அறுவாலையும் தூக்கிக்கிட்டுவெற்றிவேல் வீரவேல்னு சுத்திகிட்டு இருந்த பயக.நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சண்டைக்கு ஆள் வேணும்னு கேட்டப்போ,ஓடிப்போய் மொத வரிசைல நின்ன பய முக்காவாசிப்பய நம்ம பய தான்.திடீர்னு அவன வேல் கம்பை தூக்கிப்போட்டுட்டு விஞ்ஞானம் பேச வாடான்னா எப்படி வருவான்?? நீ படிச்சவனாச்சே...கூட்டிகிட்டு வா..அங்கே கூட்டிகிட்டு வா..ஆனா அந்தப்பய மெதுவாதான் வருவான்..மெதுவாதான் வருவான்.

கமல்:மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா??அதுக்குள்ள நான் செத்துருவேன் போல இருக்கே!!

சிவாஜி:போ...செத்துப்போ..நான் தடுக்க முடியுமா??...எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல.ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை. வெத வெதைச்ச வுடனே பழம் சாப்பிடனும்னு நெனைக்க முடியுமோ...இன்னைக்கு நான் வெதைக்கறேன்.நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ..அப்புறம் உன் பையன் சாப்பிடுவான்..அதுக்கப்புறம் அவன் பையன் சாப்பிடுவான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்.ஆனா வெத..நான் போட்டது.இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை!!!.


கமல்: ஆனா இந்த மண்ணுல தண்ணிக்கு பதிலா ரத்தத்தை ஊத்தர வரைக்கும் எத வெதச்சாலும் வெளங்காதைய்யா..என்ன விட்டுருங்கையா நான் போறேன்.
சிவாஜி ஆவேசமாகி கமலின் சட்டையை பிடிக்கிறார்.
பின்பு விடுகிறார்.

சிவாஜி: தாடியும் மீசையயும் வெச்சுகிட்டு,நெஞ்சு நிமிர்ந்து ஐயாவை பேசற வயசுல்ல..

கமல்..இல்ல...அப்படி இல்லைய்யா...

சிவாஜி: வேற எப்படி?? வேற எப்படின்னு கேக்கறேன்.தாயில்லாத பிள்ளையாச்சேன்னு ஊட்டி ஊட்டி வளத்தேன்ல.இது வரைக்கும் ஒரு வார்த்தை பேசியிருபேனா உன் கிட்ட ....ஒரு வார்த்தை...என்ன?...நான் என் கடமைய செஞ்சுப்புட்டேன்,நீ உன் கடமைய செஞ்சியா??நீ பெருசா லண்டன்ல படிக்கறதுக்காக இந்த பூமியை பொன்னா வெளைச்சு அமிச்சோமே..அந்த காட்டுமிராண்டிப்பயலுக்கு என்ன பண்ண நீயி!!?? ஏதாவது பண்ணு..அதுக்கப்புறம் வீட்டை விட்டு போ..ஓட்டல் வையு..ரெஸ்டாரண்ட்டு வைய்யி..அந்த தெலுங்கச்சிய கல்யாணம் பண்ணிக்க..பணம் சம்பாரி..என்ன இப்போ...போயேன்...

கமல்:நல்லது இங்கேயிருந்துதான் செய்யனும்னு இல்லைய்யா..வெளியிருந்தும் செய்யலாம்...நான் போறேன்யா..

சிவாஜி:போயிட்டு வரேன்னு சொல்லுங்களேன்.அந்த நம்பிக்கைதான் வீட்டுல உள்ளவங்களுக்கு முக்கியம்...த!! எங்கேய்யா கணக்குபுள்ள?? எலே யார்ரா அவன்..எங்கே கணக்குப்புள்ள??(கணக்குப்பிள்ளையை கூப்பிடுகிறார்..)

கணக்குப்பிள்ளை ஓடி வந்து பணிவாக : ஐயா..

சிவாஜி: இங்கே தான் இருக்கியா..ஐயா யாவாரமா வெளியூர் போறாங்களாம்..ரொம்ப நாள் இங்கே இருக்க மாட்டாங்களாம்.. அவருக்கு டிக்கெட் போடு

கணக்குப்பிள்ளை: ஒரு பத்துநாள் சென்று எடுக்கட்டுங்களா??

சிவாஜி:ஏண்டாப்பு..பத்து நாள் தங்க மாட்டீங்களா??...
கணக்குப்பிள்ளையை அனுப்பி விட்டு கமலை கிட்டே அழைக்கிறார்.

சிவாஜி:பத்து நால் இருக்க மாட்டீகளா??என் பையன பக்கத்துலையே வெச்சு பாக்கனும்ங்கற ஆசை எனக்கு இருக்காதா??நீங்க ஊரெல்லாம் சுத்திட்டு வரும்போது ஐயா போயிட்டேன்னா என்ன பண்ணுவீங்க??

கமல்:ஐயா நான்..உங்கள விட்டுட்டு போலீங்கைய்யா...அங்கே போய் பிசினெசெல்லாம் ஓகேன்னதும் ..உங்களையும்...கூட்டிட்டு போறேங்கைய்யா...

சிவாஜி:என்னையா??..(தலையை ஆட்டுகிறார்) இந்தக்கட்டை இங்கேயே வெந்து எரிஞ்சு சாம்பலாகி இந்த மண்ணுக்கு ஒரமாகுமே தவிர வெளியே வராது.இந்த மரத்தை வேரோட சாய்ச்சிடாதப்பு அம்புட்டுதான் சொல்லுவேன்.புரியுதா??..

கமல்: ஐயா நான் இந்த ஊருக்கு நல்லது ஏதாவது செய்வேன்யா...என்ன நம்புங்க..

சிவாஜி: உங்களத்தானே நம்பனும்!!இந்த வீட்டுல வேற யாரு இருக்கா நான் நம்பறதுக்கு........(அழுகிறார்)...போ...

கமல்:போகட்டுமாய்யா??

சிவாஜி:போ...

கமல் விலகி செல்கிறார்..போகும்போது மழை தண்ணீர் வழுக்குகிறது.

சிவாஜி:யப்பா மெல்ல...

கமல்: தண்ணீ...வழுக்....

என சொல்லிவிட்டு செல்கிறார்

கமல் போவதை சிவாஜி குனிந்து வாஞ்சையோடு பார்க்கிறார்.தூரம் சென்றதும் கமல் சிவாஜியை மறைந்திருந்து திரும்பி பார்க்கிறார்.சிவாஜி திரும்பிக்கொள்கிறார்.
அடுத்த காட்சி ஆரம்பமாகிறது.

**********************

மேலே ஒரு வார்த்தை கூட தேவையில்லாமல் இல்லை.ஒவ்வொரு வரிக்கும் ஒரு அர்த்தம் ஒரு மெசேஜ் உண்டு.
கடைசியில் ”உங்களத்தானே நம்பனும்!!இந்த வீட்டுல வேற யாரு இருக்கா நான் நம்பறதுக்கு” என்று சிவாஜி சொல்லும்போது எவ்வளவு திட்டினாலும் குறை கூறினாலும் நமது இளைய சமுதாயத்தை தானே நாம் நம்பியாக வேண்டும்..என்ன இருந்தாலும் அவர்கள் நம் பிள்ளைகள் தானே அவர்களை நல்வழிப்படுத்தி சரியான வழியில் போக வைப்பது தானே நாம் செய்ய வேண்டியது என்கிற செய்தியோடு அருமையாக முடித்திருப்பார் இயக்குனர்.

CLASSIC!!

23 comments:

சரவணகுமரன் said...

சூப்பர்...

அந்த பஞ்சாயத்து முடிஞ்சி கோபத்துல பேசிட்டு வருற காட்சியும் நல்லா இருக்கும்.

வெட்டிப்பயல் said...

//ஒரு பெறும் மிகச்சிறந்த நடிகர்களின் நடிப்பையும்//

iru peRum...

வெட்டிப்பயல் said...

Excellent Scene Thala.. ithai pathi pesanumna mani kanakula pesitu irukalam...

sari.. veetuku vanthu thamizhla typeran :)

ஒப்பாரி said...

my most fav scene.

ஆயில்யன் said...

//இன்னைக்கு நான் வெதைக்கறேன்.நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ..அப்புறம் உன் பையன் சாப்பிடுவான்..அதுக்கப்புறம் அவன் பையன் சாப்பிடுவான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்.ஆனா வெத..நான் போட்டது.இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை!!!.///


இந்த விசயம் எல்லாருக்கும் புரிஞ்சுருக்கு பட் யாருமே ரொம்ப அதிகம் அக்கறையோட பார்க்கப்படாத விசயம் :(

அண்ணாச்சி இன்னிக்கு இதே படத்துலேர்ந்து போற்றி பாடடி பெண்ணே (சோகம் ) பாட்டு கேட்டேன் படத்தை பார்க்கணும்ன்னு ஒரு நினைப்பு வந்திடுச்சு!

ஆயில்யன் said...

இதே படத்தில எனக்கு புடிச்ச பாட்டு “மாசற பொண்ணே வருக” (கானாகிட்ட கேட்டேன் பட் இதுவரைக்கும் ரெஸ்பான்ஸ் இல்ல!)

ரொம்ப சூப்பரா இருக்கும் திருமண காட்சியில வரும்ன்னு நினைக்கிறேன்

அருமையான சிந்திக்க வைக்கிற வசனங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணாச்சி!

நாகை சிவா said...

மிகவும் அருமையான காட்சி :)

சின்னப் பையன் said...

சூப்பர் காட்சி...

ஆ! இதழ்கள் said...

அலுவலகத்தில் வீடியோ பார்க்கமுடியவில்லை. ஆனால் நீங்கள் கேட்டு எழுதியிருக்கும் வசனம்... ஒவ்வொரு அசைவையும் காட்டியிருக்கிறது. அதுவும் ஒரு வீடியோவாகவே காட்சி தருகிறது. நீங்களாகவே கேட்டு எழுதியிருந்தால், அருமை.

அருமையான காட்சி...நன்றி பகிர்ந்தமைக்கு.

ராஜ நடராஜன் said...

தல!எப்படி இருக்கீங்க?சூடான பக்கம் வந்ததுக்கு வாழ்த்துக்கள்.நான் அப்பறமா திரும்ப வாரேன்.

கோபிநாத் said...

தல

சூப்பர் காட்சி தல...எத்தனை முறை இந்த காட்சியை பார்த்திருப்பேன் ;)

நீங்களே எல்லாத்தையும் சொல்லிட்டிங்க நீங்க சொன்ன எல்லாத்துக்கும் ஒரு பெரிய ரீப்பிட்டே ;))

ஜோ/Joe said...

தமிழ் சினிமா வரலாற்றில் இதை விட சிறந்த காட்சி வந்ததில்லை.

நடிப்புலக தலைவனும் அவர் வாரிசும்.

நா. கணேசன் said...

அன்பின் CVR,

உங்கள் தேவர்மகன் பதிவு என்னை ஈர்த்தது. அதில் வரும் வீடு எங்கள் அம்மா வீடு. உங்கள் பதிவை என்மடல் - தேர்த்திருவிழாக் கவிதைகளில் குறிப்பிட்டேன்.
http://nganesan.blogspot.com/2009/03/therottam.html

வாழ்க வளமுடன்!
நா. கணேசன்

CVR said...

நன்றி நண்பர்களே.
நிறைய பேருக்கு இந்த காட்சி பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி :)

@சரவணகுமரன்
இப்போ எனக்கு அந்த காட்சி நினைவில் இல்லை.இந்தக்காட்சி கூட அவ்வப்போது பார்த்து பார்த்துதான் என் நினைவில் தங்கிவிட்டது. :)

@வெட்டி
மாத்தியாச்சு அண்ணாச்சி

@ஒப்பாரி
That makes two of us :)

@ஆயில்யன்
”மாசறு பொன்னே” வருக மிக அழகான பாடல்.அற்புதமான கோரஸ் மற்றும் bass-ஓடு நொடிகளில் நம் மனதில் பரவிவிடும் இசை :)

@நாகை சிவா
நிச்சயமாக.. :)

CVR said...

@ச்சின்னப்பையன்
கண்டிப்பா..:)

@ஆ இதழ்கள்
இதை பல நாட்களாக பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.ஏனென்றால் பல சமயங்களில் இந்த காட்சியின் வசனங்களை மேற்கோள் காட்டவேண்டிய ஆசை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.அதனால் இணையத்தில் இது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.அதனால் சிரமமாக தெரியவில்லை :)

@ராஜ நடராஜன்
அட இந்த மாதிரி பதிவு எல்லாம் கூட சூடான இடுகையில வருதா!!
கவனித்து சொன்னதுக்கு நன்றி :)

@கோபிநாத்
//சூப்பர் காட்சி தல...எத்தனை முறை இந்த காட்சியை பார்த்திருப்பேன் ;)//
பார்க்க பார்க்க இதன் அருமை கூடிக்கொண்டே போகிறது இல்லையா :)

@ஜோ
//நடிப்புலக தலைவனும் அவர் வாரிசும்///
சரியாக சொன்னீர்கள்!! சிவாஜி மிகையாக நடிப்பதாக பல பேர் சொல்லி கேட்டிருக்கிறேன்,ஆனால் இந்த காட்சிக்கு வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

@நா.கணேசன்
மிக்க மகிழ்ச்சி!! தங்கள் பதிவில் தொடர்பளித்ததற்கு மிக்க நன்றி :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வரிக்கு வரி வசனத்தை எழுதியதுக்கு நன்றி..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தேவர்மகனில் பல காட்சிகள் சிறந்தவை...இது கூடச் சிறந்தது.
வசனத்துக்கு நன்றி!

பினாத்தல் சுரேஷ் said...

அருமையோ அருமையான காட்சி..

“தண்ணீ..வழுக்..” இந்த வசனத்தை தொடரும் பாருங்க ஒரு பிட்டு.. அங்க நிக்கறான் மொட்டை!

ராஜ நடராஜன் said...

காட்சியின் ஆழம் எழுத்திலேயும் தெரியுதுங்க.மனசுக்குள்ளேயே நல்ல சீன் பார்த்தாச்சு.

G.Ragavan said...

தம்பி.... ஒரு நல்ல காட்சியமைப்பு. பாக்குறப்போ நெஜமாவே கண்ணுல தண்ணி வந்துருச்சு. ஒன்னோட எண்ணவோட்டங்கள் எனக்குக் கொஞ்சம் தெரியுங்குறதால.... இந்தக் காட்சியைப் பாக்குறப்போ....ஏதோ ஒரு குத்த உணர்ச்சி குத்துது.

சுயநலமே பெருகிப் போய் வாழ்ந்துக்கிட்டிருக்கோமோன்னு ஒரு எண்ணம் வர்ரதத் தவிர்க்க முடியலை.

இந்தக் காட்சியமைப்புல பல சிறப்பம்சங்கள் உண்டு. சட்டுன்னு ஆத்திரத்துல மகனோட சட்டையப் பிடிக்கிற காட்சி....அப்பப்பா! நடிகர்திலகத்தைச் சரியாப் பயன்படுத்திக் கொள்ளாமப் போனதுல வருத்தந்தான்.

Anonymous said...

ARUMAIyana KAATCHI. I was taken back to my school days. Thanks for sharing.

SurveySan said...

CVR, thanks for the inspiration. dedicated to you, here is mu ultaa

http://surveysan.blogspot.com/2009/10/blog-post_15.html :)

happy waiting-to-get-married good days :)

SankarapandiThevar said...

Siradha thuli

Related Posts Widget for Blogs by LinkWithin