விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இந்தியா திட்டம் : ஒரு செய்தி விமர்சனம்

இன்னும் எட்டு ஆண்டுகளில் வெண்வெளிக்கு மனிதனை அனுப்ப போவதாக மே 9-ஆவது தேதியன்று இந்திய விண்வெளி கழகத்திடமிருந்து வந்த செய்தி இந்திய வெண்வெளி ஆர்வலரிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செய்தி நமது "சற்றுமுன்"வலைத்தளத்திலும் இடம் பெற்றது.

இந்திய வெண்வெளி கழகம் என்பது இந்தியர்கள் உலக அளவில் பெருமை பட்டுக்கொள்ளக்கூடிய விஞ்ஞான சாதனைகளில் ஒன்று என்றால் அதை மறுப்பதற்கில்லை. மோசமான பொருளாதார நிலைமையிலும் ஆர்வம் மற்றும் கடும் உழைப்பை மட்டுமே நம்பி நம் விஞ்ஞானிகள் இந்த அளவுக்கு இயங்கிக்கொண்டு இருப்பதே பாராட்டுக்குறிய விஷயம் தான். செயற்கை கோள்களை வேற்று நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து ஏவுவதில் இருந்து சுயமாக பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ஏவுகளங்களை ஏவுவது வரை வளர்ந்துவிட்ட நமது விண்வெளிக்கழகத்தின் வளர்ச்சி பெரிமிதத்திற்குறியது . இன்னிலையில் விண்வெளிக்கழகத்தின் இந்த அறிவிப்பையும் அதன் காரண காரியங்களை பற்றியும் சற்றே இந்த பதிவில் பார்ப்போம்.

விண்வெளிக்கு மனிதனை இது வரை மூன்று நாடுகள் மட்டுமே அனுப்பி வைத்திருக்கின்றன. முதன் முதலில் 1961-ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று ரஷ்யா மனிதனை விண்வெளிக்கு அனுப்பியது. பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த அந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் எல்லா துறைகளிலும் நேரடியாகவே போட்டி போட்டுக்கொண்டன. இதன் ஒரு பகுதியாக விண்வெளிக்கு மனிதனை முதலில் அனுப்புவது யார் என்ற போட்டியில் ரஷ்யா வெற்றி பெற்றது. ரஷ்யாவின் இந்த சாதனை முடிந்த 23 நாட்களிலேயே அமெரிக்கா தனது நாட்டவரை விண்வெளிக்கு அனுப்பி தாங்களும் விண்வெளிப்போரில் ஒன்றும் சோடை போகவில்லை என்று காட்டிக்கொண்டது. இருந்தாலும் ரஷ்யாவை வெண்வெளிக்கு முதன்முதலில் போக விட்டது அமெரிக்காவுக்கு ஒரு பெரும் அவமானமாக கருதப்பட்டது.இதனால் தான் 1969-இல் நிலவுக்கு மனிதனை அனுப்பி அது தன் அவமானத்திற்காக பழி தீர்த்துக்கொண்டது. அதன் பின் பல ஆண்டுகளாக எந்த நாடும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பவில்லை. ஆனால் அமெரிக்காவும் ரஷ்யாவும் மாற்றி மாற்றி விண்வெளிக்கு பல களங்களை அனுப்பிக்கொண்டுதான் இருந்தது. அதில் அவர்கள் நாட்டு வீரர்களை தவிர மற்ற நாட்டு வீரர்களையும் பயிற்சிக்காக ஏற்றி கொண்டு சென்றன. இதன் ஒரு பகுதியாகத்தான் இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா 1984ஆம் வருடம் Soyuz T-11 விண்களம் மூலமாக விண்வெளிக்கு பயனப்பட்டார். அதன் பிறகு மூன்றாவதாக 2003ஆம் வருடம் யாங் லிவெய் (Yang Liwei) என்பவரை சீனா வெண்வெளிக்கு அனுப்பியது.
சீனாவின் இந்த செயலினால் தான் இந்தியாவிற்கும் மனிதனை வெண்வெளிக்கு அனுப்பும் ஆசை தொற்றிக்கொண்டுள்ளது என கொள்ளலாம்.
1950 1960-களில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் நடந்த பனிப்போரை போன்று இன்று ஆசிய நிலப்பரப்பில் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையில் பல துறைகளில் போட்டா போட்டி இருந்து வருவது தெரிந்த விஷயம் தான். இந்த போட்டியில் வெற்றிபெருவதற்கான முயற்சி என்பதை தவிர இந்த விஷயத்தினால் வேறு என்ன பயன்கள் இருக்க முடியும் என கொஞ்சம் பார்க்கலாம்.

உலக அரங்கில் விண்வெளித்துறையில் இந்தியா என்ற பெயர் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் கூட அது செயற்கைகோள் அனுப்புவதோடு நின்று விடுகிறது. சமீபத்தில் உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து சர்வதேச விண்வெளி மையம் (International space station) அமைக்க ஆயுத்தங்கள் நடைபெற்ற போது இதில் இந்தியாவின் பங்களிப்பு ஒன்றுமே இல்லாதது ஏமாற்றம் அளிக்க கூடிய விஷயம். உலக அரங்கில் வெண்வெளித்துறையில் இந்தியாவை ஒரு பெறும் சக்தியாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதை மாற்றி உலக அளவில் மனித இனம் விண்வெளியில் செய்யும் ஆராய்ச்சிகளில் பங்கு கொள்ள இந்த முயற்சி பெரும் பங்கு வகிக்கும்.

விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதால் இதை போன்ற அரசியல் சார்ந்த விஷயங்களை தவிர விஞ்ஞான ரீதியாக வேறு என்ன பயன் என்று பார்க்கலாமா??
சந்திர மண்டலத்தில் ஆய்வு என்பது அமெரிக்கா போன்ற நாடுகள் பெரும் உற்சாகத்துடன் ஈடுபடும் ஆராய்ச்சி தலைப்பு. சந்திர மண்டலத்தில் கிடைக்கும் கற்கள்,பாறைகள் போன்றவை வைத்து நம் சூரிய குடும்பத்தை பற்றியும் அண்டத்தின் உருவாக்கத்தை பற்றியும் பல விஷயங்களை அறியும் முயற்சி நடை பெற்று வருகிறது. இது தவிர செவ்வாய் கிரகத்துக்கு செல்வதற்கான முயற்சிகளிலும் உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன. இந்த முயற்சிகளில் நிலவை ஒரு நடுநிலை ஏவு மையமாக உபயோகித்துக்கொள்வதின் பங்கு இன்றியமையாதது. இதையும் தவிர நிலவை, ஆராய்ச்சி மையம் அமைத்துக்கொள்வதற்கோ அல்லது வருங்காலத்தில் குடி பெயர்ந்து செல்லவும் உபயோகித்துக்கொள்ளலாம் என்ற கருத்துக்களும் உண்டு.
நிலவில் விலை மதிப்பற்ற கணிமங்கள் பல புதைந்திருப்பதாகவும் இதை எல்லாம் வருங்காலத்தில் மனிதன் உபயோகிக்க போட்டா போட்டி நிலவலாம் என்று கூறப்படுகிறது. இதையும் தவிர நிலவில் இருந்து சூரிய ஒளியை தேக்கி எரிபொருளாகவும் உபயோகித்துக்கொள்ளலாம். இப்படி பலவிதங்களிலும் நிலவில் மனிதன் செய்வதற்கு ஆராய்ச்சிகள் கொட்டிக்கிடக்கின்றன.
இவையெல்லாவற்றிற்கும் விண்வெளியில் மனிதன் வாழ்ந்து பயிற்சி பெறுவது இன்றியமையாதது. நிலவையும் செவ்வாய் கிரகத்தையும் தாண்டி விண்வெளியில் பல தரப்பட்ட ஆராய்ச்சிகளை செயவதற்கும் விண்வெளியில் மனிதனில் இருப்பு அவசியம். இப்பொழுதெல்லாம் இயந்திர மனிதர்கள் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் சாதாரணமாக ஒரு ஸ்க்ரூவை முடிக்கிவிட தர வேண்டிய கட்டளைகளை தருவதற்குள் ஒரு மனிதன் அதே செயலை சத்தமே இல்லமல் திறம்பட செய்து முடிப்பான். அதையும் தவிர வெண்வெளியில் அதிமாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் அடங்கிய ஆராய்ச்சிகள் நடத்தும் போது அங்கே மனிதனின் இருப்பு அவசியமாகி விடுகிறது.

இந்தியா போன்ற ஏழை நாட்டில் இவ்வளவு செலவு செய்து இவ்வளவு பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையா என்று கேள்விகள் எழுந்தாலும்,நாட்டின் முழுமையான வளர்ச்சிக்கும்,உலக அளவில் வல்லரசாக இந்தியா முன்னேறும் முயற்சிக்கு இது போன்ற விஷயங்கள் தேவை என்றே தோன்றுகிறது.


பி.கு: இந்த கட்டுரை சற்றுமுன் போட்டிக்காக எழுதப்பட்டது.

References :
http://www.atimes.com/atimes/South_Asia/HK07Df01.html
http://www.dnaindia.com/report.asp?NewsID=1095669
http://news.bbc.co.uk/1/hi/sci/tech/137462.stm
http://en.wikipedia.org/wiki/International_space_station
http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/3192330.stm
மற்றும் சில

14 comments:

MyFriend said...

cvr,

இது உண்மையிலேயே ஒரு சூப்பர் கட்டுரை. வெற்றிபெற வாழ்த்துக்கள். :-)

MyFriend said...

இதைப்பற்றி கருத்து சொல்ல எனக்கொன்றும் தோணவில்லை.. நான் சொல்ல நினைத்ததையும் சேர்த்து நீங்களே அருமையாக சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.. :-D

சந்திப்பு said...

நல்ல தகவல்கள். மனித குலத்தின் தொடர் வெற்றிக்கு அடிப்படையே விஞ்ஞான ஆராய்ச்சிகள்தான். அதே சமயம் இந்த ஆராய்ச்சிகள் மனித குலம் முழுமைக்கும் பயன்பட வேண்டும். பொதுவாக விஞ்ஞான ஆராய்சிகள் மூலம் கிடைக்கும் பயனை பெரு முதலாளிகளே அனுபவிக்கும் நிலைதான் உள்ளது. சுரண்டல் வர்க்கத்தின் கைகளிலேயே விஞ்ஞான ஆராய்ச்சிகள் முடங்கியுள்ளது. விஞ்ஞானத்தை இவர்களது கைகளில் இருந்து மீட்டெக்க வேண்டும்.

ஜி said...

nalla katturai.. muzusum padikala... ;)))))

vetri pera vaazththukkal :)

Anonymous said...

//இந்தியா போன்ற ஏழை நாட்டில் இவ்வளவு செலவு செய்து இவ்வளவு பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையா என்று கேள்விகள் எழுந்தாலும்,நாட்டின் முழுமையான வளர்ச்சிக்கும்,உலக அளவில் வல்லரசாக இந்தியா முன்னேறும் முயற்சிக்கு இது போன்ற விஷயங்கள் தேவை என்றே தோன்றுகிறது.//

உண்மையில் இதற்கு பதில் நல்ல குடிநீர், எல்லோருக்கும் உணவு கிடைக்க செய்தால் நல்லது என்பது என் கருத்து. பல அய்ரோப்பிய நாடுகளில் வாழ்க்கை தரம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நாடுகளை விட உயர்ந்த நிலையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

ulagam sutrum valibi said...

அருமையான பதிவு எளிதில் புரியும் நடை
வெற்றி பெற என் நல் வாழ்த்துக்கள் பல.!!

CVR said...

@மை ஃபிரண்ட்
எப்பவும் போல நீங்க தான் ஃபர்ஸ்ட்!! வாழ்த்துக்களுக்கு நன்றி.

@சந்திப்பு
விண்வெளி ஆராய்ச்சி என்பது வருங்காலத்தில் எல்லா மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விஷயம் என்பது போலத்தான் தோன்றுகிறது. விஞ்ஞான வளர்ச்சியும் கண்டுபிடிப்புகளும் மக்களுக்கு பயன் அளிக்கும் படி இருக்க முடிந்த வரை முயற்சிகள் செய்வோம்.

@ஜி
படிக்கவே இல்ல,ஆனா நல்லா இருக்குனு சொல்றீங்களே தலைவா!!!
நீங்க கோயம்முத்தூர் பக்கமா??? :-)

@நேர்மை
மக்களுக்கு உணவு அளிக்கவும் வசதிகளை பெருக்கவும் திட்டங்கள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. விண்வெளி திட்டங்களுக்கு செலவிடப்படும் தொகையை நிறுத்தினால் மட்டும் நாட்டில் பசி பஞ்சம் மறைந்துவிடாது. அது அது தனி தனியாக நடக்கட்டும்.
எல்லா துறைகளிலும் வளர்ச்சி பெற்று நம் நாடு வல்லரசாகி வீரு நடை போடட்டும். :-)

@உலகம் சுற்றும் வாலிபி
வாங்க பாட்டி (நான் அப்படி கூப்பிடலாமா?? :-))
பதிவு உங்களுக்கு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

Dreamzz said...

சற்றுமுன் போட்டியில் வெல்ல என் வாழ்த்துக்கள்!

தல, உரை அழகா வந்தி இருக்கு! தகவல்களுக்கு நன்றி!

//இந்தியா போன்ற ஏழை நாட்டில் இவ்வளவு செலவு செய்து இவ்வளவு பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையா என்று கேள்விகள் எழுந்தாலும்,//
தன்னோட நாட்டுல நடந்த காட்டரீனாக்கே ஒழுங்கா நிவர்த்தனம் செய்யாத அமெரிக்கா, தேவையில்லாம்ம யுத்தம்ம் செய்வத விட ஒன்னும் தப்பில்ல!

No Pain.. No gain!

SathyaPriyan said...

//மோசமான பொருளாதார நிலைமையிலும் //
India is the 12th largest economy in the world. We joined the elite Trillian Dollar Economy hub last month.

மத்தபடி கட்டுரை வழக்கம் போல பல புதிய தகவல்களுடன் அருமையாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

எங்காவது சென்று ஓட்டு போட வேண்டுமா? இல்லை நடுவர் குழு தேர்ந்து எடுக்குமா?

Anonymous said...

பதிவு நல்லா இருக்கு. போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

-பிரபு

ulagam sutrum valibi said...

//அன்பிற்க்கு உண்டோ அடைய்க்கும் தாழ்// அன்பாய் என்ன உறவு சொல்லி நீ
கூப்பிட்டாலும் எனக்கு பிடிக்கும்.

ஷைலஜா said...

எனக்கென்னவோ இந்தியா மாதிரி ஏழை நாடுகள் இதில் பணத்தைக்கொட்டவேண்டாம் என்றே தோன்றுகிறது..ஆனால் விஞ்ஞான வளர்ச்சியை தடை செய்யவும் மனம் வரவில்லை(என்னவோ நான் சொல்லி
கேட்டுடறமாதிரி?:) கட்டுரை தகவல் அருமை ப்ரதர்.

CVR said...

@ட்ரீம்ஸ்
வாங்க தலைவா!! கொஞ்சம் வெளியூர் போயிருந்தேன்,அதான் பதில் சொல்ல நேரம் ஆகிவிட்டது!!!
வருகைக்கு மிக்க நன்றி

@பிரபு
வாங்க பிரபு. பதிவு உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவுக்கு வந்துட்டு போங்க!! :-)

@சத்தியப்பிரியன்
வாங்க தலைவா!! ஓட்டு எல்லாம் போட வேண்டாம் தல!!எல்லாம் அவங்களே முடிவு பண்ணுவாங்க! பதிவுல அந்த போட்டியோட சுட்டியை கொடுத்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்.

@உலகம் சுற்றும் வாலிபி
ஆஹா!! நெஞ்ச தொட்டுட்டீங்க போங்க!! நன்றி பாட்டி!! :-)

@ஷைலஜா
சத்தியப்பிரியனோட பின்னூட்டத்தை பார்த்தீங்களா அக்கா?? இந்தியா ஒன்னும் அவ்வளவு ஏழை நாடு கிடையாது. தனது வளங்களை பயன் படுத்த தெரியாமல் மக்களை ஏமாற்றும் சுயநலவாதிகளை அரசியல்வாதிகளாக கொண்ட நாடு என்று வேண்டுமானால் சொல்லலாம். எல்லா துறையிலும் இந்தியா கவனம் செலுத்தினால் தான் வல்லரசாகும் நம் திட்டம் முழுமை பெறும்.
இத்தான் என் கருத்து!! :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா!! :-)

Anonymous said...

eppadi unkalukku vin veliyai parti ya oru eedupadu vanthathu - nalla visayam thaane - ok. neenkalum padithu, enkalukkum eliya muraiyil vilanka vaika mudikirathe - nanti -niraya eluthunkal - padikirom - friend

Related Posts Widget for Blogs by LinkWithin