பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 3

இந்த தொடர்கதையின் முதல் இரண்டு பாகங்களை கீழே உள்ள இணைப்புகளை சொடுக்கி பார்த்துக்கொள்ளலாம்.

பாகம் 1
பாகம் 2

பாகம் 3

ட்யூஷன் முடித்து விட்டு தோழிகளோடு வெளியே வரும்போது தான் வினோத்தை முதன் முறையாக பார்த்தாள். மற்ற பசங்க சிரித்து பேசி அரட்டை அடித்து கொண்டு வெளியே வந்து கொண்டிருக்க இவன் புத்தகத்தினுள் எதையோ தேடிக்கொண்டு மிதிவண்டி நிறுத்துமிடம் நோக்கி நடந்து கொண்டு இருந்தான்.


அவன் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் வசீகரமாக இல்லை என்றாலும் அவன் முகத்தில் படிப்பின் வேகத்தையும் தாண்டி ஒரு வித தெளிவு இருந்தது. ஆள் சற்றே சராசரிக்கு அதிகமான உயரம்,ஒடிசலான உடம்பு. கத்தினாலே நடுங்கி விடக்கூடிய முகத்தோற்றத்துடன் இருந்தாலும்,அவனிடம் வேறு யாரிடமும் இல்லாத சக்தியும் நம்பிக்கையும் இருப்பதாக அவளுக்கு பட்டது.
அவள் அவனை சற்றே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த போது தோழிகளிடமிருந்து சிரிப்பொலி கேட்டு திரும்பினாள்.

"என்னங்கடி சிரிக்கிறீங்க???"

"அதோ போகுதே! அது சரியான லூசு!! பொன்னுங்கள திரும்பி கூட பாக்காது!!! எப்போ பாத்தாலும் குனிஞ்ச தலை நிமிராம பொஸ்தகத்து குள்ளேயே தலைய மூடிக்கிட்டு போகும். உனக்கு ஏத்த கேசுன்னு பேசிக்கிட்டு இருந்தோம்" என்றாள் தோழி ஒருத்தி.

ஏதோ சொல்ல நினைத்த காவேரி,ஆர்வம் மேலிட்டு வினோத் போகும் திசையை திரும்பி பார்த்தாள். அவனும் அவளை திரும்பி பார்த்துக்கொண்டு சென்றுக்கொண்டு இருப்பது தெரிந்தது. அவன் அவளை தான் திரும்பிபார்த்தானா இல்லை தன்னை பற்றி சில பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து பார்த்தானா என்று அவளால் முடிவு செய்ய முடியவில்லை. உடனே முகத்தை திருப்பி கொண்டாள்.

"ஒருத்தன் ஒழுங்கா இருப்பது உங்களுக்கு எல்லாம் பிடிக்காதே. அவன் ஒருத்தனாச்சும் ஒழுங்கா இருக்க விடுங்களேண்டி"என்றாள்.

"அடிப்பாவி!! அவன சொன்னா உனக்கு ஏண்டி கோபம வருது?? சரி இனிமே உன் ஆள பத்தி நாங்க ஒன்னுமே சொல்லல. போதுமா??" என்று சொல்லிவிட்டு அவள் தோழிகள் எல்லோரும் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.


அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. பொதுவாகவே இந்த நகரத்து பெண்களின் போக்கு அவளுக்கு பிடிக்க வில்லை. அவள் பத்தாவது வரை படித்த கிராமத்திலெல்லாம் பெண்கள் இப்படி கிடையாது. இங்கு தான் எப்பொழுது பார்த்தாலும் எந்த பையன் நல்லா பேசுவான்,எந்த பையன் ஜொள்ளு விடுவான் என்பதை பற்றியே பேச்சு. எப்போ பார்த்தாலும் ஏதாவது ஜோடி சேர்ப்பதே இவர்களுக்கு பொழப்பு.
அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் வகுப்பறைக்குள் நுழைந்தாள்.சிறிது நேரத்தில் அவள் கவனம் பாடத்தில் சென்று விட்டது.


அன்று மாலை தனியாக வீட்டிற்கு வரும்பொழுது அவள் மனத்தில் அவனின் முகம் தோன்றி மறைந்தது.
காவேரியை பொருத்த பொருத்த வரையில் அவளுக்கு அவளேதான் உற்ற தோழி. அவள் தந்தை வயதான காலத்தில் அவளை பெற்றெடுத்ததால்,அவளின் வயதை ஒத்த உறவுக்கார பிள்ளைகள் யாரும் அவளுக்கு கிடையாது. உறவினர்கள் விஷேங்களுக்கு சென்றால் கூட அவள் கூட விளையாடுவதற்கு யாரும் கிடையாது. அவளுக்கு பள்ளியில் வாய்த்த தோழிகள் கூட அவளின் அறிவுத்திறனுக்கும் மன நிலைக்கும் ஒத்தவர்கள் அல்ல. அதனால் குழந்தைப்பருவத்தில் இருந்தே அவள் தனிமையுடன் வாழ பழகி விட்டிருந்தாள். இருந்தாலும் அவள் பருவத்தை அடைந்த பிறகு தனக்காக யாருமே இல்லையே என்ற ஏக்கம் பெரியதாகி விட்டிருந்தது. அந்த வயதிற்கே உண்டான குழப்பமும்,பயமும்,வலியும்,வேதனைகளையும் பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாமல் பல முறை அழுதிருக்கிறாள். தந்தை எவ்வளவுதான் பாச மழை பொழிந்தாலும் பருவப்பெண்ணிற்கு ஒரு அம்மாவை போல வருமா?? ஏதாவது சந்தேகம் பயம் என்றால் கூட யாரை போய் கேட்பது?? அதுவும் அப்பாவோ வயதானவர், அவரின் அன்பு ஒரு தாத்தாவின் பரிவை போன்று இருந்ததே அவள் வேண்டிய ஒரு தந்தையின் அரவணைப்பு அவளுக்கு இருந்தது இல்லை.


இதில் பட்டணத்திற்கு போய் படிக்கற பொறுப்பு வேறு. புது இடம்,புது நண்பர்கள் இப்படி வாழ்க்கையே ஒரு புரியாத ஓட்டப்பந்தையம் போல ஓடிக்கொண்டிருந்தது அவளுக்கு.
அன்று விட்டிற்கு வந்தவுடன் வீட்டு வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்தாள்,என்றாலும் மனதில் ஒரு விதமான அலுப்பு நிறம்பிக்கிடந்தது.
சாப்பிடப்போகும்து அப்பா கேட்டார்.

"என்னமா ஒரு மாதிரி இருக்க?? க்ளாஸ்ல டீச்சரு ஏதாவது சொன்னாங்களா??".

"இல்லப்பா!! கொஞ்சம் அசதியா இருக்கு அவ்வளவுதான்" என்றாள் காவேரி .

"சரி சீக்கிரமா சாப்டுட்டு தூங்க போ,நாளைக்கு சரி ஆகிடும்"

"இல்லப்பா நாளைக்கு ஒரு பரீட்சை இருக்கு,கொஞ்சம் படிக்கனும்"

பொன்னுச்சாமி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தன் பெண்ணை ஏறிட்டு பார்த்தார்.

"கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சிரு கண்ணு.இந்த ரெண்டு வருஷம்தான் வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியம். இப்போ கஷ்டப்பட்டுடா அப்புறமா சமாளிச்சுக்கலாம்"என்றார்.

இதையே பல்லாயிரக்கணக்கான முறை அவள் கேட்டிருந்ததால்.
"இதையே எத்தனை தடவைப்பா சொல்லுவீங்க!! நான் பாத்துக்கறேன் விடுங்க"என்றாள்.
தன் பெண் தன் பேச்சை கேட்காமல் அவ்வப்போது கோபப்படுகிறாள் என்று பொன்னுச்சாமி உணர்ந்திருந்தாலும்,இது அவளின் வயதுக்கே உரித்தான பிரச்சினை என்று அவருக்கு தெரிந்திருந்தது.தான் இரண்டாவதாக திருமணம் செய்ய முயற்சி செய்யாதது சரியான முடிவுதானா என்று அவர் பல முறை யோசித்திருக்கிறார்.

"என்னமோ மா,நீ நல்லா இருக்கனும்!! அதுதான் எனக்கு வேணும். உங்க அம்மா மட்டும் இப்போ உயிரோடு இருந்தா உன்னை இப்படி கஷ்டப்பட விடுவாளா??" என்றார்.

காவேரி இதை கேட்டு கேட்டு அவள் காது புளித்து போயிருந்தது.
"அய்யோ அப்பா!!! நீங்க மொதல்ல சாப்டுட்டு தூங்கற வழிய பாருங்க" என்றாள் சற்றே எரிச்சலுடன்.


அதன் பிறகு அவர்கள் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சாப்பிட்டு விட்டு வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு கணக்கு புத்தகத்தை திறக்கும் போது நெஞ்சில் வினோத்தின் முகம் அவளையும் அறியாமல் தோன்றி மறந்தது. அவளை போலவே அவனின் மனதிலும் ஒரு வெறுமை,தனிமை இருப்பது போல் அவளுக்கு திடீரென்று தோன்றியது.
அந்த எண்ணத்தை மனதில் இருந்து ஒதுக்கிவிட்டு சைன் டீட்டாவையும் காஸ் டீட்டாவையும் கவனிக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரம் கழித்து அவ்வளவாக படிப்பில் மனம் செல்லாததால் அவள் தூங்கியே போனால். அடுத்த நாளே அவள் வாழ்வின் அதி முக்கியமான நட்பின் ஆரம்பம் அமையப்போகிறது என்று அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

(நியாபகங்கள் தொடரும்)

==================-oOo-==================
நண்பர்களேஇந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி. இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும். இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும். இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும். ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

நான்காவது அத்தியாயத்தை எழுத அன்பு நண்பர் ஜி அவர்களை அழைக்கிறேன்.

17 comments:

✪சிந்தாநதி said...

சுவாரசியமாக நேர்ப்பாதையில் போகுது கதை. ஜி என்ன சொல்றார் பார்ப்போம்.

✪சிந்தாநதி said...

புதிதாக படிப்பவர்கள் முந்திய அத்தியாயத்தை படிக்க பாகம் 2ன் சுட்டியை துவக்கத்தில் கொடுப்பது நல்லது.

ஜி said...

கதையோட்டம் அருமை... அடுத்தப் பகுதிய நான் போடணுமா?? இது வரை கதை வந்த அளவு இல்லைனாலும் இயன்ற அளவில் முயறசி செய்கிறேன் :))

வெட்டிப்பயல் said...

தெய்வமே,
சூப்பரோ சூப்பர்...
சான்ஸே இல்லை... அவ்வளவு அழகான வர்ணனை.

அடுத்து ஜியா??? கலக்கல் தான் ;)

ulagam sutrum valibi said...

// தந்தை எவ்வளவுதான் பாச மழை பொழிந்தாலும் பருவப்பெண்ணிற்கு ஒரு அம்மாவை போல வருமா?? ஏதாவது சந்தேகம் பயம் என்றால் கூட
யாரை போய் கேட்பது//
கண்ணு
பெரிய அனுபவசாலி மாதிரி சொல்லுர!!ஒவ்வொரு பதுவிலும் உன் உள்ளுணர்வு தெரியுது.மாறாதே இப்படியே இரு.

CVR said...

@சிந்தாநதி
இணைப்புகளை கொடுத்து விட்டேன்!!
வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)

@ஜி
நான் உங்கள் கதைகளை விரும்பிப்படிக்கும் விசிறி.என்னை போல் பலர் இருப்பார்கள் என்பதில் இரு கருத்துகள் இருக்க முடியாது. தங்களின் எழுத்துக்களால் கதை மேலும் மெருக்கேறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
கலக்குங்க!! :-)

@வெட்டி
நன்றி வெட்டி!! ஏதோ நீங்க ஆரம்பிச்சு வெச்ச வேகம்தான்!!

இராம்/Raam said...

ஐயா தன்னடக்க செம்மலே,

கதை இப்பிடியெல்லாம் சூப்பரா எழுதிட்டு அப்புறம் எனக்கு சரியெல்லாம் எழுத வராதுன்னு சொல்லிட்டு திரியுறது...

நல்லா இருங்கய்யா இந்த பாகத்து கதை :))

பூட்ஸ் போட்ட பூனை,

அடுத்த பாகம் எப்போ??

CVR said...

@உலகம் சுற்றும் வாலிபி
ஒரு தாய் இல்லாத பெண் எப்படி யோசிப்பாள் என்று கொஞ்சமா கற்பனை பண்ணி பாத்தேன் பாட்டி!! :-)
யோசிக்க யோசிக்க நிறைய எழுத வேண்டும் என்று தோன்றியது,ஆனால் கதைக்காக சுருக்கி விட்டேன்!! :-)

@இராம்
ரொம்ப நன்றி தல!! உங்க கிராமத்து கதையை பார்த்தேன். பாரதிராஜா லெவெலுக்கு கலக்கி இருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!! :-))

MyFriend said...

இது உங்களுக்கு அனியாயமா தெரியலை? இப்படியெல்லாம் சூப்பரா எழுதுனா நாங்க எந்த சுவரை முட்டி எழுதுறது?

நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா.. .:: மை ஃபிரண்ட் ::. எஸ்கேப்!!!!

:-)))))))

SathyaPriyan said...

//
அவள் தந்தை வயதான காலத்தில் அவளை பெற்றெடுத்ததால்,அவளின் வயதை ஒத்த உறவுக்கார பிள்ளைகள் யாரும் அவளுக்கு கிடையாது. உறவினர்கள் விஷேங்களுக்கு சென்றால் கூட அவள் கூட விளையாடுவதற்கு யாரும் கிடையாது. அவளுக்கு பள்ளியில் வாய்த்த தோழிகள் கூட அவளின் அறிவுத்திறனுக்கும் மன நிலைக்கும் ஒத்தவர்கள் அல்ல. அதனால் குழந்தைப்பருவத்தில் இருந்தே அவள் தனிமையுடன் வாழ பழகி விட்டிருந்தாள்.
//
எப்படி தல வேறொருவர் உருவாக்கிய கதா பாத்திரத்தின் மன நிலையை யோசித்து அழகாக கொண்டு வர முடிந்தது.

சூப்பர்..........

G.Ragavan said...

அடடே! அருமையான முயற்சி. பள்ளிகொண்ட பேரழகரின் இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள். அடுத்தது ஜியா? வாப்பா ஜி. காத்திருக்கிறோம்.

G.Ragavan said...

அப்புறம் இன்னொரு விஷயம்...நம்ம இம்சையரசியை அடுத்து உள்ள இழுத்து விடுங்க. அருமையா கதை எழுதுவாங்க.

Anonymous said...

எழுத்து புயல் சிவிஆரின் கதை சூப்பர் :-)

பூனை எப்படி கதை ஆரம்பித்து முடிக்கின்றார் என்று பார்ப்போம் :-)

CVR said...

@மை ஃபிரண்ட்
வாங்க மை ஃபிரண்ட். இப்படியெல்லாம் சொல்லிபுட்டா எப்படி?? சும்மா முயற்சி பண்ணுங்க,எல்லாம் தானா வரும்!! நாங்க எல்லாம் தெரிஞ்சா எழுதறோம்?? :-)

@சத்தியப்பிரியன்
வாங்க தல!! சும்மா ஒரு முயற்சி தான்,ஒழுங்கா வந்திருந்தா சந்தோஷம் தான் வாழ்த்துக்களுக்கு நன்றி.


@ஜிரா
வாங்க ஜிரா. இம்சை அரசியின் எழுத்துக்கள் தான் அச்சுப்பொறி கண்ட எழுத்துக்கள் ஆச்சே. அவங்க நல்லா எழுதுவாங்கறதுதான் உலகரிஞ்ச விஷயம் ஆச்சே!! :-) நிச்சயமா அவங்க இல்லாமையா?? :-)

கதை எப்படி போகுதுன்னு ஒன்னும் சொல்லலையே தல! நீங்க ஒன்னுமே சொல்லாதது வெச்சே உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சிக்கிட்டேன்!! ;-D

@துர்கா
வாங்க அக்கா!!
இப்போ எல்லோர் பார்வையும் பூட்ஸ் போட்ட பூனையின் மேல்!! :-)

கோபிநாத் said...

தலைவா

இப்பதான் கதையை படிச்சேன்...கலக்கியிருக்கிங்க...எழுத்து நடையும் அருமை ;))

Raji said...

Kadha superaa kondu poirukkeenga CVR...

CVR said...

@கோபிநாத்
வாங்க கோபி!! வாழ்த்துக்களுக்கு நன்றி

@ராஜி
வாங்க ராஜி
ஜி-யோட பதிவுக்கு போய் பாருங்க,அவரும் நல்லா கதையை கொண்டு போய்க்கிட்டு இருக்காரு!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin