படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 1

என் இனிய தமிழ் மக்களே,
எல்லோரும் எப்படி இருக்கீங்க??
மனிதர்களாகிய நாம் காட்சிப்பிரியர்கள். உன் பதிவுக்கு பத்து பேரு வந்தாய்ங்க,ஆறு பேரு துப்பிட்டு போய்ட்டாய்ங்க,நாலு பேரு இந்த மொக்கைய கூட மெனக்கெட்டு படிச்சாய்ங்க,ரெண்டு பேரு கும்மி அடிச்சாய்ங்க, அப்படிங்கற சொத்த மேட்டர கூட சும்மா சொல்லாமா படம் போட்டு காட்டுனா ஆஆஆ-னு வாயை பொளந்து பாத்துகிட்டு இருப்போம். அதனால தான் கதை கவுஜை இது எல்லாத்தையும் விட படங்கள்னா மக்கள விரும்பி பாக்கறாங்க!!!்
எல்லோர் கிட்டேயும் இருக்கற கேமராதான் நம்ம கிட்டையும் இருக்கு,எல்லோரையும் போல தான் நாமளும் க்ளிக்கிட்டு இருக்கோம்,ஆனா சில பேரு மட்டும் எப்படிய்யா பாத்தா பாத்துக்கிட்டே இருக்கறா மாதிரி படம் எடுக்குறாய்ங்க அப்படின்னு நான் பல சமயம் யோசிச்சிருக்கேன். அட!! அவனுங்க எல்லாம் லட்ச கணக்குல பணத்தை கொட்டி கேமரா வாங்கி இருக்காங்கையா!! நாம எல்லாம் அது மாதிரியா அப்படின்னு சொல்றீங்களா???அதென்னமோ நானும் அது மாதிரி தாங்க நெனைச்சிட்டு இருந்தேன்,ஆனா கொஞ்சம் கொஞ்சமா எடுக்க எடுக்க இதுல நாம எல்லாம் கூட சுலபமா தெரிஞ்சுக்கறா மாதிரி சில நுணுக்கங்கள் இருக்குன்னு தெரிஞ்சுது!!! அதான் உங்க கிட்ட அப்பப்போ இதை பத்தி கொஞ்சம் கதை அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். இதெல்லாம் நாம தெரிஞ்சுக்கிட்டு உபயோகப்படுத்தியே ஆகனும்னு அர்த்தம் இல்லீங்கன்னா. ஒரு காட்சி நல்லா இருக்கும்னு உங்க மனக்கண்ணுல தோனிச்சுன்னா டப்புனு அதை ஒரு படம் புடிச்சுறனும்!! அங்க போய்ட்டு நம்ம நுணுக்கம் எல்லாம் யோசிச்சிட்டு இருக்க முடியாது தான்.ஆனா இந்த மேட்டரு எல்லாம் காதுல போட்டு வெச்சா நம்மல அறியாமையே அதெல்லாம் நம்ம யோசனையில ஊறி படம் எடுக்கும்போது தானா தோனாதா??சும்மா கேட்டு தான் வெச்சுக்கலாமே்!! என்ன நான் சொல்லுறது???

மூன்றுக்குள்ளே காட்சி இருக்கு ராமைய்யா

நம்ம தலைவரு என்னடான்னா எட்டுக்குள்ளே வாழ்க்கையே இருக்குன்னு சொல்லிட்டு போயிருக்காரு. ஆனா இந்த புகைப்படக்கலையில் இருக்கற தலைங்க எல்லாம் என்ன சொல்றாங்கன்னா ,ஒரு காட்சியை மூனா பிரிச்சு குறுக்கையும் நெடுக்கையும் கோடு போட்டோம்னு வெச்சுக்கோங்க ,அந்த கோடுகள் ஒடுற பகுதிகளும் ,அவை ஒன்றுக்கொன்ரு குறுக்கிட்டுக்கொள்ளும் பகுதிகளும் தான் மனிதனின் பார்வை இயற்கையாக விழும் பகுதிகள் அப்படின்னு சொல்றாய்ங்க. அதாவது எந்த படத்தை நீங்க எடுத்துக்கிட்டாலும் உங்க பார்வை இயற்கையாக நாம கோடு போட்ட பகுதிகளை தான் முக்கியமா கவனிக்குமாம். எந்த ஒரு படம் பாத்தாலும் அதுல ஏதாவது ஃபிகரு தேறுமா அப்படின்னுதான் என் கண்ணு போகுதுன்னு என்று எல்லாம் யோசித்துக்கொண்டு இங்க போட்டு குழப்பிக்காதீங்க!!
அது உங்கள சொல்லி குத்தம் இல்லை!!! உங்க வயசு அப்படி!!! அதுக்கும் புகைப்பட கலைக்கும் ஒன்னும் சம்பந்தம் கிடையாது.
அதாவது நீங்க எந்த ஒரு படம் எடுத்தாலும் படத்தோட முக்கியமான பொருள் இந்த கோடுகளிலோ அல்லது கோடுகள் தொட்டுக்கொள்ளும் புள்ளிகளிலோ இருக்கிறார்போல் பார்த்துக்கொண்டால் பார்வையாளர்களுக்கு படம் அழகாக தெரியும் என்று சொல்கிறார்கள்.இதற்கு ஆங்கிலத்தில் "Rule of the thirds" என்று பெயர். தமிழிலே இதற்கு உங்களுக்கு சௌகரியமான பெயரை நீங்களே சூட்டிக்கொள்ளுங்கள்!!முப்பகுதி கோட்பாடு என்று வேணும்னா கூப்டுக்கலாமா??

சரி சரி!!! சாதாரணமாவே நான் எழுதினா ஒன்னும் புரியாது அதுலையும் பெரிய கோட்பாடு எல்லாம் சொன்னால் புரியுமா?? இருங்க ஒரு உதாரணத்தோடு இந்த நுணுக்கத்தை தெளிவா பாக்கலாம்.
இப்போ நீங்க வலது பக்கத்துல இருக்கற படத்தையே எடுத்துக்கோங்களேன்,எவ்ளோ சீரா அழகா இருக்கு. படத்தோட முக்கியமான பகுதின்னு பாத்தீங்கன்னா அது வானமும் தண்ணீரும் சேருகிற தொடுவானப்பகுதி. அது எப்படி சரியா மேலிருந்து போடப்பட்ட இரண்டாவது கோடுடன் இணைந்து இருக்கு பாருங்க. அதுவும் இல்லாம படத்தின் ஒரு முக்கிய பொருளான மரமும் கூட இரண்டாவது கோடுகள் சேரும் புள்ளியில் இருப்பதால் படத்துக்கு அது பாந்தமாக இருக்கு. படத்தின் இன்னொரு முக்கியமான விஷயமாக இருக்கும் வானில் தோன்றும் ஒளித்திட்டு பகுதி சரியா புள்ளிக்கு மேல இல்லாட்டாலும் கொஞ்சம் பக்கத்துல இருக்கறதுனால பரவாயில்லை.

(இந்த படத்தை இந்த சுட்டியில் சென்று பார்த்தால் அசைவூட்டத்துடன் தெளிவாக இருக்கும்.)

அப்போ இனிமே படம் எடுக்க போனா ஸ்கேல்,டேப்பு எல்லாம் எடுத்துட்டு போய் புள்ளி வெச்சு கோடு போட்டு தான் படம் எடுக்கனுமா??? அப்படின்னு கேக்கறிங்களா???
நான் முன்னமே சொன்னா மாதிரி இதுப்படி எடுக்கும் படங்கள் தான் அழகாக இருக்கும் என்று ஒன்னும் சட்டம் அல்ல. எடுத்த படங்கள் எதனால் நன்றாக வரவில்லை என்று குழப்பம் இருந்தாலோ மற்றும் நம் படம் எடுக்கும் திறனை பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும் என்றாலோ இந்த நுணுக்கங்களை எல்லாம் கருத்தில் கொள்ளலாம். ஏதாவது ஒரு காட்சி அழகாக உங்களுக்கு தோன்றினால் உடனே எதை பற்றியும் யோசிக்காமல் படம் எடுத்து விடுங்கள்!! இந்த நுணுக்கங்கள் எல்லாம் வெறும் வாழிகாட்டுதலுக்காக மட்டும்தானே தவிர செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

அதுவுமில்லாமால் நீங்கள் இந்த கோட்பாட்டை போட்டோ எடுக்கும்போது தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று இல்லை. ஏற்கெனெவே எடுத்த படத்தில் கூட இந்த கோட்பாட்டிற்கு ஏற்றார்போல் கொஞ்சம் வெட்டி (crop) செய்து கூட போட்டோக்களை மெருகேற்றலாம். அதற்கான உதாரணத்தை கீழே பார்க்கலாம்!! :-)
வேறு ஒரு புகைப்படக்கலை சார்ந்த தலைப்போடு அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கிறேன். அது வரை இந்த முப்பகுதி மகத்துவத்தை புரிஞ்சிக்கறா மாதிரி சில படங்களை விட்டு செல்கிறேன்.
பார்த்து விட்டு போங்க!!

வரட்டா??? :-)









References:
http://en.wikipedia.org/wiki/Rule_of_thirds

படங்கள்:
http://digital-photography-school.com/blog/rule-of-thirds/
http://www.silverlight.co.uk/tutorials/compose_expose/thirds.html
http://www.allensphotoblog.com/blog1/images/WolfRuleThirds.jpg
http://www.asme.org/Jobs/Entrepreneurs/Blogging_Way_Business_Success.cfm
http://www.digicamhelp.com/learn/shoot-pro/rule.php

படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 1(Rule of thirds)
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 2(Leading lines)
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 3(Double action pics)

25 comments:

அனுசுயா said...

நானும் பல பேர பாத்து கேட்டிருக்கேன். தில்லானா மோகனாம்பாள் மனோரமா மாதிரி "உங்க கேமராலதான் இப்டி படம் வருதா? இல்ல எல்லா கேமராவுலயும் வருமா?". பாக்கலாம் நல்ல அருமையான கட்டுரைங்க. ஏதோ இதையெல்லாம் படிச்சாவது நல்ல படமா எடுக்கறனானு. :)

வடுவூர் குமார் said...

இந்த புகைப்பட பெட்டி கைக்குள் வர பல வருடங்கள் பிடித்தது.
இவ்வளவு நாள் எடுத்த சில படங்களே நான் எதிர்பார்த்த மாதிரி வந்தது.
அந்த காலத்துல பிரிண்ட் போடுகிற விலையை கேட்டாலே புகைப்படம் எடுக்கும் ஆசை போய்விடும்.
இந்த கலைக்கு கொஞ்சம் வெளிச்சம் விழும் நிலை தெரிந்திருக்க வேண்டியது மிக முக்கியம்.

வெட்டிப்பயல் said...

kalakal thala...

intha maathiri post thaan ethir paarhen :-)

Anonymous said...

இப்பல்லாம் பிரிண்ட் போடுற தேவை குறைந்துகொண்டே வருவது போலத் தான் தெரிகிறது. சமீபத்தில் ஒரு LIVE PHOTO HOLDER பார்த்தேன். அதாவது, ஒரு கலர் LCD with small chip to enable and control the timing of picture in LCD screen. அதில் ஒரு மெமரி கார்டும் உண்டு. இப்ப நீங்க செய்யவேண்டியது எல்லாம், மெமரி கார்டில் படத்தை காப்பி செய்து அந்த photo holder-ல் சொருகி விட வேண்டியதுதான். LCD-ஸ்கிரீனில் படம் என்ன சைஸில் தெரியவேண்டுமோ அந்த அளவில் தெரியும். படத்தைத் தொடர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம். அதனால் விரைவில் விலை குறையப்போகும் இந்த LCD-ஸ்கிரீன் வந்தால் போட்டோ கழுவும் கடைகள் எல்லாம் கிராமத்துத் திருவிழாக்களுக்குப் போக வேண்டியதுதான்.

CVR said...

@அனுசுயா
வாழ்த்துக்களுக்கு நன்றி அனுசுயா!!
சீக்கிரமே நல்ல நல்ல படங்கள் எடுத்து தள்ள வாழ்த்துக்கள்.

@வடுவூர் குமார்
புகைப்படக்கலையை பொருத்த வரை வெளிச்சம் தான் எல்லாமே!! அதை பற்றி ஒரு தனி படிவு போடலாம் என்று எண்ணம்!! :-)

@வெட்டி
வாங்க தல!! வாழ்த்துக்கு மிக்க நன்றி!! :-)

@அனானி
நான் சமீபத்தில் சென்றிருந்த ஒரு இடத்தில் நீங்கள் சொல்வது போல்தான் ஒரு தொரை இருந்தது. படங்கள் எல்லாம் அதில் பளிச் பளிச்!! பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது!!
வருங்காலத்தில் இவை போன்ற திரைகளில் தான் நாம் புகைப்படங்களை கண்டு களிப்போம் என்று எனக்கும் தோன்றுகிறது!! :-)

SurveySan said...

தொடரட்டும் தொடரட்டும்!

ulagam sutrum valibi said...

கண்ணு,
கற்க கற்க கவிங்கனாவான்.
பாட பாட பாடகனாவானு,பெரியவங்க சொல்லுவாங்க.இந்த புகைப் பட கலையும் அப்படித்தான்.
படங்கள் நீ எடுத்ததா? அருமையா இருக்கு.

ulagam sutrum valibi said...

இந்த மாதிரி பதிவுகளும் ,அதைச் சார்ந்த References சும் பயனுள்ளது.

CVR said...

@surveysan
வாங்க சர்வேசன்!!
வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)

@உலகம் சுற்றும் வாலிபி
இது எல்லாம் நான் எடுத்த படங்கள் இல்லை பாட்டி!! படங்கள் எந்த இணைய தளத்துல இருந்து எடுத்தேன்னு அதான் தனியா போட்டிருக்கேனே!! :-)

ACE !! said...

அலோ.. புது காமெரா பொட்டி வாங்கிட்டோமில்ல.. இனிமே இந்த சேஷ்டை எல்லாம் செஞ்சிட வேண்டியது தான்.. :D :D

மிக்க நன்றி :D

நாகை சிவா said...

நல்ல முயற்சி....

தொடருங்கள்...

அப்படியே நீங்க பிடிச்ச படத்தையும் ஒரு பதிவா போடுங்க.... ஏற்கனவே போட்டு இருந்தால் சுட்டு கொடுங்க...

நாகை சிவா said...

புதுவை படங்கள் பார்த்தேன் அருமை... பாண்டியில் படத்தை தெளிவா பிடித்து இருப்பதை பார்த்தால் நல்லா தெளியுற அளவுக்கு ஏதும் இல்ல போல... ;-)

துளசி கோபால் said...

ஹை...........கேமெரா வகுப்பா? நானும் சேர்ந்துக்கறேனே ப்ளீஸ்.

அட்டகாசமாப் படம் எடுக்கணுமுன்னு ஆசைதான். அதுக்கு அமையறதில்லைன்னு குறை இருக்கு.
மூணே கோடுதானா? ஆஹா..............

நல்லவேளை டிஜிடல் வந்தது நல்லதாப்போச்சு. ஃப்லிம் ரோல் & பிரிண்ட் போட்ட காலத்துலே அழுத
தண்டம் சொன்னாலே துக்கம்தான்(-:

CVR said...

@சிங்கம்லே ACE
அட!! கலக்குங்க அண்ணாத்த!!
வாழ்த்துக்கள். சரியான சமயத்துல தான் தொடரை ஆரம்பிச்சிருக்கேன் போல!! :-)

@நாகை சிவா
//அப்படியே நீங்க பிடிச்ச படத்தையும் ஒரு பதிவா போடுங்க.... ஏற்கனவே போட்டு இருந்தால் சுட்டு கொடுங்க..//
நான் எடுத்த படங்கள் எல்லாம் www.flickr.com/photos/seeveeaar என்கிற சுட்டியில் சென்று பார்க்கலாம் தலைவா!! இதே படங்கள் என் பதிவின் இடது பக்கத்தில் flickr badge-ஆக காட்சி அளிக்கும்.அதை சொடுக்கியும் என் flickr போட்டோ பதிவுக்கு போகலாம்!! :-)

//பாண்டியில் படத்தை தெளிவா பிடித்து இருப்பதை பார்த்தால் நல்லா தெளியுற அளவுக்கு ஏதும் இல்ல போல... ;-)//
சத்தியமா நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியல அண்ணாத்த!! :-((

@துளசி கோபால்
//ஹை...........கேமெரா வகுப்பா? நானும் சேர்ந்துக்கறேனே ப்ளீஸ்.//
திருனெல்வேலிக்கே அல்வாவா??
திருப்பதிக்கே லட்டா??
டீச்சருக்கே வகுப்பா??? :O

//நல்லவேளை டிஜிடல் வந்தது நல்லதாப்போச்சு. ஃப்லிம் ரோல் & பிரிண்ட் போட்ட காலத்துலே அழுத
தண்டம் சொன்னாலே துக்கம்தான்(-://
அமாம் டீச்சர் .இந்த டிஜிட்டல் கேமராக்களினால் எவ்வளவு வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளலாம். அதுவும் இல்லாமல் படம் எடுத்தவுடனே அது நன்றாக வந்துருக்கிறதா என ஓரளவுக்கேனும் சரி பார்க்கலாம் !! :-)

நாகை சிவா said...

பாண்டி சொன்ன பிறகு புரியலனு சொன்ன என்ன அர்த்தம் தலைவா

CVR said...

@நாக சிவா
நீங்க பாண்டின்னு சொன்னதுனால ஏதோ புரியறா மாதிரி இருக்கு தல!! :-D

ஜி said...

நானும் ஃபோட்டோகிராஃபர்தான்னு இனி கேமராவ தூக்கிக்கிட்டு கெளம்பிட வேண்டியதுதான் :))

Dreamzz said...

Ahaa! photography pathiya? naan innum padikkala. padichitu commentaren.. ok a?

CVR said...

@ஜி
//நானும் ஃபோட்டோகிராஃபர்தான்னு இனி கேமராவ தூக்கிக்கிட்டு கெளம்பிட வேண்டியதுதான் :))
//
கிளம்புங்க பிர்தர்!!! சித்திரமும் கைப்பழக்கம்!! :-P

@Dreamzz
//Ahaa! photography pathiya? naan innum padikkala. padichitu commentaren.. ok a? //
பொருமையா படிச்சுட்டு வந்து கமன்டுங்க தல!! :-)

களவாணி said...

//நானும் ஃபோட்டோகிராஃபர்தான்னு இனி கேமராவ தூக்கிக்கிட்டு கெளம்பிட வேண்டியதுதான் :)) //

naan eppavo kelambitten. aana CVR punniyaththula inimethaan kaththukkanum. roomla pasangala appati nilraa ippadi nilraannu photo sessionthaan inime.

photographerkalukku thannai yaarum photo etuthaa putikkirathillai en thala?

naan ninaikkiren thaan ninaikkira maathiri thannai veru yaarum etukkamutiyaathunnu ninaikkirathunaalayaa?

enakkum ennai vera yaaraavathu photo etuththa pitikkaathu, enakku photo putikkanumnaa automatic-lathaan mostly putichirukkurathu

:-)

kalakkal pathivu CVR,

inime pathiva neenga potunga naanga athukku ooooooo poturom :)

nanri.

CVR said...

@செந்தில்
வாங்க செந்தில்!!
எனக்கும் என் போட்டோக்களை நானே எடுத்தால் தான் பிடிக்கும். அது ஏனோ அப்படியே அமைந்து விட்டது!!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)

Anonymous said...

லேட்டா வந்தாலும் latest ஆக வந்துவிட்டேன் :)
உங்கள் கட்டுரை எல்லாம் படித்தாலும் எனக்குப் படம் பிடிக்க வராது ஏனென்றால் காமிரா இல்லையே :D
அப்படியே எனக்கு ஒரு காமிரா வாங்கி கொடுத்தால் நானும் இப்படி எல்லாம் வகை வகையாக படம் பிடிப்பேன் இல்லையா?
நல்ல கட்டுரை...சிவிஆர் கலக்குறீங்க போங்க :)

MyFriend said...

கலக்கிப்புட்டீங்கண்ணா..

என்ன ஒரு கலக்கலான போஸ்ட்.. நல்ல நல்ல விஷயங்கலையெல்லாம் சொல்லி தர்றீங்களே.. நானும் கத்துக்க்ணும்.. இந்த தொடரை வாரம் ஒன்னு போடுவீங்களா? இல்லை நாளுக்கு ஒன்னு போடுவீங்களா?

CVR said...

@துர்கா
வாங்க!! எங்கே காணோம்னு பாத்தேன்!!

//அப்படியே எனக்கு ஒரு காமிரா வாங்கி கொடுத்தால் நானும் இப்படி எல்லாம் வகை வகையாக படம் பிடிப்பேன் இல்லையா?//

ஆன் ஆர்பருக்கு வாங்க கேமரா கடையே வாங்கி தரேன்!! :-D

//நல்ல கட்டுரை...சிவிஆர் கலக்குறீங்க போங்க :)//
வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அக்கா!! ;-)

@மை ஃபிரண்ட்
//கலக்கிப்புட்டீங்கண்ணா..

என்ன ஒரு கலக்கலான போஸ்ட்.. நல்ல நல்ல விஷயங்கலையெல்லாம் சொல்லி தர்றீங்களே.. நானும் கத்துக்க்ணும்.. இந்த தொடரை வாரம் ஒன்னு போடுவீங்களா? இல்லை நாளுக்கு ஒன்னு போடுவீங்களா?//

வாரத்திற்கு ஒன்று போடலாம் என்று எண்ணம். என்னை சுற்றி நிறைய தொடர்கள் ஆரம்பித்து வைத்துக்கொண்டு விட்டால் போல் ஒரு நெருடல். எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும்!! :-)

சகாதேவன் said...

சி.வி.ஆர், நானும் கோடக் ப்ரொளனி பாக்ஸ் கேமரா காலத்திலிருந்து போட்டோ எடுத்து வருகிறேன்.உங்கள் இரட்டை வேட போட்டோ முயற்சி செய்து அனுப்புகிறேன். நன்றி .

சகாதேவன்

Related Posts Widget for Blogs by LinkWithin