எட்டுக்குள்ளே வாழ்க்கை இருக்கு ராமைய்யா

என் இனிய தமிழ் மக்களே,
இந்த எட்டு விளையாட்டு அண்மைக்காலமா வலைப்பதிவுகளில் காட்டுத்தீ போல பரவிகிட்டு வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். விளையாட்டுல அண்ணன் நாகை சிவாவும், அண்ணாத்த ஜிராவும் என்னை சேர்த்து விட்டுட்டாங்க. பல "எட்டு" பதிவுகளை பார்த்துட்டு நான் வெலவெலத்து போயிருந்தேன்க. ஆரம்பத்துல தன்னை பற்றிய ஏதாவது எட்டு விஷயங்களை கூற வேண்டும் என்றுதான் இது ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கிறேன்,ஆனால் இப்பொழுது பரவலாக எல்லோரும் தான் பெருமை படக்கூடிய 8 விஷயங்களை எழுத ஆரம்பித்து விட்டார்கள். நான் என்னை பற்றி பெருமைப்படுவதற்கு ஒரு விஷயம் கூட இல்லை இதில் 8 விஷயங்களை எங்கிருந்து எழுதுவது??? அதுவும் எனக்கு பொதுவாகவே என்னை பற்றி பெருமையாக பேசிக்கொள்வது பிடிக்காது
(பெருமையாக பேச ஒன்றுமே இல்லை என்பது வேறு விஷயம்!! :-P).

என்னுடைய கம்பெனியில வருஷா வருஷம் தன்னை பற்றி பேசுவதற்கும்,தான் செய்த பணியின் அருமை பற்றி விளக்குவதற்கும் ஒரு சந்தர்ப்பம் தருவார்கள். பவர் பாயிண்டு ஸ்லைடுகளை உருவாக்கி டேமேஜர் எதிரில் நம் சுய புராணத்தை எடுத்து கூற வேண்டும். இதன் அடிப்படையில் தான் டேமேஜர் என்னுடைய ஆப்புரைசலை பரிசீலனை செய்வார். நான் அங்கே கூட என்னை பற்றி கூறிக்கொள்ள விருப்பமில்லாமல் பேருக்கு ஏதோ படம் காட்டிவிட்டு வருவேன். நான் செய்யும் பணியை புரிந்துகொண்டு சம்பள உயர்வு வர வேண்டும் என்றால் வரட்டும்,இதற்காக எல்லாம் விளம்பரம் செய்து கோண்டிருக்க முடியாது என்று இருந்து விடுவேன்.அப்படிப்பட்ட மன நிலையில் நான் இருப்பதால் இந்த டேக் எழுதவே வேண்டாம் என்று தான் நான் முடிவு செய்திருந்தேன்.

ஆனால் ஜிரா அவர்களின் பதிவை பார்த்துவிட்டு,அட!! இதுபோல என்றால் நானும் எழுதலாமே என்று எனக்கு தோன்றியது. ஆனாலும் என்ன எழுதுவது என்று தெரியவில்லை,அதனால் அவரிடமே என்ன எழுதுவது என்று கேட்டேன். அதற்கு அவர் கொடுத்த பதில தான் இப்பொழுது இந்த பதிவாய்!!! :-))


1.) எளியவன் : இது எந்த அளவுக்கு உண்மை என்று நண்பர்கள் தான் சொல்ல வேண்டும். என்னை பற்றி கேட்கும் போது ஜிரா சொன்ன முதல் விஷயம் இது தான். ஒரு காலத்தில் மின் அஞ்சல் கையெழுத்தில் (Email signature) Simply,CVR என்று எழுத ஆரம்பித்து அதுவே ஒட்டிக்கொண்டு விட்டது.இதையே என் ஆர்குட் பெயராகவும்,என் ஆங்கில வலைப்பதிவின் பேராகவும் வைத்து விட்டேன். எனக்கு எப்பொழுதுமே வாழ்க்கையை "முடிந்த வரை" எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை. தேவை இல்லாத சிக்கல்கள் தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்று நினைப்பவன்.அதுவுமில்லாமல் எனக்கு தெரிந்த சிலரை போல இல்லாமல் நான் மிகவும் சாதாரணமானவன்,என்னிடம் பெரியதாக ஒன்றும் சிறப்பு கிடையாது என்பதால் இந்த Simply CVR எனக்கு நன்றாக பொருந்திய பெயர் ஆகி விட்டது.

2.)திரைப்படம் பார்ப்பது: நல்ல படங்களை தேர்ந்தெடுத்து பார்ப்பது சமீபத்திய பொழுது போக்காகி விட்டது. இங்கு ஆன் ஆர்பரில் என் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள நூலகத்தில் படங்களை இலவசமாக வாடகைக்கு எடுத்து கொள்ளலாம் என்பதால் வார இறுதிகளில் படங்களை தேர்ந்தெடுத்து வாடகைக்கு எடுப்பது பழக்கமாகி விட்டது.எனக்கு பொதுவாக வன்முறை நிறம்பிய படங்களோ,நெஞ்சை உருக்கும் சோகப்படங்களோ அறவே பிடிக்காது. டைட்டானிக் திரைப்படம் சோகம் ததும்பும் படம் என்பதாலேயே தான் அதை பார்க்கவில்லை. இதன் காரணமாகத்தான் வெயில்,பருத்தி வீரன்,300 போன்ற படங்களை கூட பார்க்காமல் தவிர்த்து விட்டேன்.வேட்டையாடு விளையாடு படத்தை தெரியாத்தனமாக பார்த்து தொலைத்து விட்டேன்!! :-(
எனக்கு பொதுவாக நகைச்சுவை,நல்ல கதையமைப்பு, படப்பிடிப்பு, ஊக்கமளிக்கும் மற்றும் தெம்பளிக்கும்(Inspiring and motivating) படங்கள் என்றால் பிடிக்கும்(Shawshank Redemption போன்றவை). பெரியதாக கதை இல்லாவிட்டாலும் நல்ல திரைக்கதை,இசையோடு ரசனையோடு தயாரிக்கப்பட்ட படமாக இருந்தாலும் அவ்வப்போது ஓகே தான். ஆனால் பொதுவாக மசாலா படங்களை பார்க்க அவ்வளவாக விருப்பமில்லை.

3.)புகைபடக்கலையில் ஆர்வம் : சின்ன வயதில் ஒரு முறை என் சித்தப்பாவின் நிச்சயதார்த்தத்திற்கு படம் எடுக்க யாரும் இல்லாததால் என் கைக்கு வந்த கேமராவை கண்டவுடன் வந்தது காதல்,இன்று வரை பெருகிக்கொண்டே இருக்கிறது. ஆர்வம் நிறம்ப இருந்தும் வீட்டில் வெகு நாட்களாக கேமரா இல்லை. பின்பு மாமா ஒரு கேமரா பரிசளித்தார்,ஆனால் அது ஒரு சாதாரணமான ஃபிலிம் கேமரா என்பதால் அதில் பெரியதாக ஒன்றும் சுட்டு தீர்க்கவில்லை. ஆனால் இங்கே அமெரிக்கா வந்த பிறகு நான் வாங்கிய முதல் பொருள் ,ஒரு டிஜிட்டல் கேமரா. அது வாங்கிய உடன் எனக்கு தலைகால் புரிய வில்லை,வாங்கிய புதிதில் கன்னா பின்னா என்று படம் எடுத்து கொண்டிருந்தேன். இப்பொழுது முன்பிருந்ததை போல வேகம் இல்லாவிட்டாலும் நிறைய ஆர்வம் உண்டு. புகைப்படக்கலை என்பது ஒரு விதமான மாஜிக் என்று நம்புபவன் நான். நன்றாக எடுக்கப்பட்ட எந்த ஒரு படமும் அதிர்ஷ்டத்தால் வந்து விடுவதில்லை,அதன் நிறைய நுணுக்கமும்,திறமையும்,பொறுமையும் ஒளிந்திருக்கிறது. அதையெல்லாம் அடையும் பயணத்தின் முதல் படியை ஏற முயற்சி செய்து வருகிறேன்.

4.)எல்லாம் இறைவன் செயல் : என்னை பற்றி நன்றாக தெரிந்த நண்பர்கள் என்றால் கண்டிப்பாக இதை கவனித்திருப்பார்கள். பேச்சுவாக்கில் பல நூறு தடவை "எல்லாம் இறைவன் செயல்" என்று சொல்லிக்கொண்டிருப்பேன்.என்னை பொருத்த வரை இந்த உலகம்,வாழ்க்கை எல்லாமே நம் அறிவுக்கு எட்டாத விந்தைகள். நம்மை சுற்றி என்ன நடந்து கொண்டீருக்கிறது,நாம் எங்கிருந்து வந்தோம்,எங்கே போகப்போகிறோம்,எதற்காக இவையெல்லாம் நடக்கிறது இப்படி பல்லாயிரம் கேள்விகளுக்கு நமக்கு கிஞ்சித்து கூட விடை தெரியாது.ஏதோ எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் எல்லாம் செய்கிறோம்,நாளுக்கு நாள் நமக்கிருக்கும் ஆயிரம் பிரச்சினைகளில் ஆழ்ந்து போகிறோம். ஆனால் இந்த கூத்து எல்லாம் எதற்காக என்று சுத்தமாக தெரியாது. இருந்தும் நமக்குள் எத்தனை ஈகோ,குழப்பங்கள்,சண்டைகள்,திட்டங்கள்?? இந்த மாயையில் வீழ்ந்து விடாமல் இருப்பதற்காக அவ்வப்போது நான் "எல்லாம் இறைவன் செயல்" என்று நினைவு படுத்திக்கொள்வேன். இந்த பழக்கம் என்னை தேவையில்லா குழப்பங்களில் இருந்து மீட்டு நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை நான் அவ்வப்போது உணர்ந்து கொள்ள உதவுவதாக எண்ணுகிறேன். இதேபோல் ஆங்கிலத்தில் "Nothing stays" எனும் சொற்றொடரும் எனக்கு மிகவும் பிடித்தது. என் க்யூபிகிளில் நான் இந்த சொற்றொடரை தனி பேப்பரில் கொட்டை எழுத்தில் பதித்து ஒட்டி வைத்திருக்கிறேன்.
சுகம் , துக்கம்,ஆத்திரம்,பயம் என பல நேரங்களில் பல விதமான புரிதல்களை தரவல்ல வார்த்தைகள் இவை இரண்டும்.இதை பற்றி எழுத ஆரம்பித்தால் இந்த பதிவில் முடியாது,அதனால் அடுத்த தலைப்புக்கு போகலாம்

5.) அப்பா/அண்ணன் சென்டிமென்ட் : படங்களில் பொதுவாக அம்மா,தங்கை சென்டிமென்டுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் தருவார்கள். ஆண்பிள்ளைகளை அழ வைப்பதற்கு பதிலாக தாய்குலங்கள் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வரவைப்பது எளிது என்று நினைத்துக்கொண்டு இதை செய்கிறார்கள் என எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால் இவை எல்லாவற்றையும் விட எனக்கு அப்பா/அண்ணன் சென்டிமென்ட் உள்ள காட்சிகளில் நான் உருகி விடுவேன்.
அதுவுமில்லாமல் தமிழ்மணத்தில் எனக்கு கிடைத்த நண்பர்கள் எல்லோரையும் வாய் நிறைய அண்ணா என்று கூப்பிடுவதையும் நான் பெரிதும் விரும்புவேன். நான் மிகவும் சிறிய வயது இருக்கும்போது (சுமார் மூன்று வயது இருக்கும் போது) என்னுடைய அண்ணனை இழந்தேன் என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கு அப்பொழுது மிக சிறிய வயது என்பதால் எனக்கு என் தாய் தந்தை சொல்லி தான் எல்லா ஞாபகமும்,எனக்கு வேறு ஞாபகமோ வருத்தமோ இதனால் கிடையாது. இருந்தும் உள்மனதில் (Subconscious) இதனால் தான் எனக்கும் எல்லோரையும் அண்ணா என்று கூப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது என்று நினைக்கிறேன்.

6.)இசை: என் வாழ்வில் மிக முக்கியமான அங்கம் , இசை. தனிமை விரும்பியாக நான் இருந்தாலும் நான் எழுதும்போது சில சமயங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் இசை என்னுடைய உற்ற நண்பன். தமிழ்,ஹிந்தி,ஆங்கிலம்,கர்நாடக சங்கீதம் என பல இடங்களில் இருந்தும் இசையை ரசிப்பேன்.ஆனால் எதிலும் பெரியதாக தெரியாது,அவ்வப்போது நண்பர்கள் மூலம் கிடைக்கும் அறிமுகங்களின் மூலம் தெரிந்து கொள்வதுதான். எப்பொழுதும் ஏதாவது பாட்டு ஓடிக்கொண்டே இருக்க மற்ற வேலைகளை செய்வது தினமும் நடக்கும் விஷயம். அதிலும் மெலடி எனப்படும் மெல்லிய இசை வகை எனக்கு மிகவும் பிடிக்கும். குத்து பாட்டு அல்லது இரைச்சல் மிகுந்த பாடல்கள் எனக்கு அவ்வளவாக ஒத்து வராது. ஓவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான ரசனை. :-)
குறிப்பாக இளையராஜா இசை அமைப்பில் அமைந்த பல நல்ல பாடல்கள் 80-களில் வந்திருக்கும்,அதை நான் பெரிதும் விரும்பி கேட்பேன்.

7.)எழுத்து : பள்ளிக்கூட சமயத்தில் ஒரு சமயம் என்னிடம் ஆசிரியை ஒருவர் நீ நன்றாக எழுதுகிறாய்,உன் திறமையை வளர்த்துக்கொள் என்று சொல்லி இருந்தார். நான் அதை பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை. ஒரு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பு வரை எனக்கு எழுத்தின் மேல் இவ்வளவு பெரிய ஆர்வம் தொற்றிக்கொள்ளும் என்று நான் எண்ணிப்பார்த்து இல்லை. எதேச்சையாக ஒரு கதை எழுத போய் அது சற்றே வரவேற்ப்பை பெற அப்படியே தொடர்ந்து ஒரு 20 - 25 கதைகள் எழுதி தள்ளினேன்(ஆங்கிலத்தில்) ஒரு காலத்தில். பின் அமெரிக்கா வந்த பிறகு அது அறவே நின்று போனது
பல மாதங்களாக நேரம் எப்படி செலவிடுவது என்று தெரியாமல் ஆர்குட் வலைத்தளத்தில் நேரத்தை வீனடித்தேன். பின் ஒரு நாள் ஏதோ யோசித்துக்கொண்டிருந்த போது நாம் மூன்றாவது வரை தானே தமிழ் படித்திருக்கிறோம்,எழுத்துபிழையோடு இவ்வளவு மோசமாக எழுதுகிறோமே. ஆங்கிலத்தில் எல்லாம் பெரிய பிஸ்தா போல எழுதி விட்டு , நாம் பெரிதும் நேசிக்கும் தாய்மொழியில் இவ்வளவு கேவலமான நிலைமையில் உள்ளோமே என்று நினைத்த போது தோன்றியது தான் இந்த தமிழ் வலைப்பதிவு. அதற்கு பின் ஒன்றிரண்டு மொக்கை பதிவுகளுக்கு பின் வேறு சில தமிழ் பதிவுகள் ஏதாவது பார்க்கலாம் என்று விளையாட்டாக கூகிளில் தேட போய்,தமிழ்மணம்,தேன்கூடு எல்லாம் கண்டு,அவற்றில் எல்லாம் பதிவு செய்துகொண்டு,அன்பான பல நண்பர்கள் பெற்று,அப்பப்பா!!

நினைத்து பார்த்தாலே மலைப்பாக இருக்கிறது,எங்கிருந்து ஆரம்பித்து எங்கே வந்து நிற்கிறேன். ஆனால் என்னை சுற்றி உள்ள பதிவர்களை பார்த்தால் இன்னும் பயணத்தையே ஆரம்பிக்க வில்லையோ என்று தோன்றும் அளவுக்கு பின் தங்கி இருப்பதாக தோன்றுகிறது. நிறைய எழுத வேண்டும்,மேலும் சிறப்படைய வேண்டும் என்று ஊக்கம் மனதில் நிறம்புகிறது. எழுத்து என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான ஒரு அங்கமாகி விட்டது என்பது என்னை நன்றாக தெரிந்த யாராலும் மறுக்கு முடியாத உண்மை. எதனால் என்று தெரியாத பல விஷயங்களை போல் இதையும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு என்னுடைய ஒவ்வொரு நாளும் விடிந்துக்கொண்டு இருக்கிறது.

8.)தமிழ்மண நண்பர்கள் : இவர்களை பற்றி கூறியே ஆக வேண்டும். வாழ்க்கையில் நாம் பல பேரை சந்திக்கிறோம்,அதில் சிலர் மட்டுமே நண்பர்கள் ஆகிறார்கள். பள்ளிக்கூடம்,கல்லூரி,வேலை என பல இடங்களை நாம் கடந்து வந்த போதும் தமிழ்மணத்தில் கிடைத்தது போல நண்பர்கள் எனக்கு வேறு எங்கேயும் கிடைத்ததில்லை. எல்லா இடங்களிலும் நாம் மக்களோடு பழகி,அவர்களின் நல்ல/கெட்ட பழக்கங்களை தெரிந்து கொண்டு சிறிது சிறிதாக நட்பை வளர்த்துக்கொள்வோம்.ஆனால் இங்கே மிக குறைந்த நேரத்திலேயே என்னுடன் நெருக்கமான நட்பு எனக்கு சிலரோடு அமைந்து விட்டது. அவர்களின் நகைச்சுவை உணர்வு ,எழுத்து திறமை,சிந்தனை வளம், அறிவுத்திறன், எல்லாவற்றிற்கும் மேலாக இனிமையான நட்பு பாராட்டும் திறன் இவைகளால் என்னை இவர்கள் அசத்தி விட்டார்கள். தமிழ்மணத்தில் கிடைத்ததை போல் என்னோடு ஒத்துப்போகக்கூடிய நெருக்கமான நண்பர்கள் எனக்கு வேறு எங்கும் இவ்வளவு சீக்கிரமாக கிடைக்கவில்லை. இது எனக்கு மட்டும்தானா இல்லை எல்லோருக்கும் இப்படியா என்று தெரியவில்லை.மற்ற இடங்களில் எல்லாவற்றையும் விட இங்கு நாம் விரும்பும் விஷயங்களே அதிகமாக பேசிக்கொண்டு,விரும்பாத விஷயங்களை பேசாமல் விட்டு விடுகிறோமா??
இதை போன்ற பல விஷயங்களை தனி பதிவாகவே எழுதலாம்,இதை பற்றி முன்பே ஒரு கதை கூட எழுதி இருக்கிறேன்.
இந்த ஆராய்ச்சி எல்லாம் இப்போ எதுக்கு. என் வாழ்வில் இன்றைய தேதியில் பல தமிழ் பதிவர்களின் நட்பு ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. அவர்களுடன் தினம் செய்யும் அலம்பல்கள் மற்றும் அரட்டைகளினால் எனது நாள் கலகலப்பாகிறது எனபது உள்ளங்கை நெல்லிக்கனி. என் வாழ்க்கையை பற்றி ஒரு பதிவு போடும் போது இதை சொல்லாமல் இருக்க முடியுமா??? ;-))

என்னது?? கடைசி வரைக்கும் பொறுமையா படிச்சிட்டீங்களா?? உங்களுக்கு உண்மையாவே பொறுமை அதிகம்தாங்க!!! :-)

சரி, நான் இந்த விளையாட்டுல அறிமுகப்படுத்த போற எட்டு பேரு யார் யார் தெரியுமா??


1.) வெட்டிப்பயல்.
2.)ட்ரீம்ஸ்.
3.)சத்தியப்பிரியன்.
4.)கே.ஆர்.எஸ்.
5.)சீ.டீ.கே
6.)சிங்கம்லே ஏஸ்.
7.கார்த்தி
8.) துளசி டீச்சர்.


விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும

படங்கள் :

57 comments:

Anonymous said...

Super Thalaiva

Anonymous said...

Life Means More...

MyFriend said...

ஜூப்பர்!!! எழூதினதில் 8 பத்தலை போலிருக்கிறதே!

MyFriend said...

மென்மேலும் உங்க 8.. 16 ஆகி.. 32 ஆக வாழ்த்துக்கள்..

துளசி கோபால் said...

ராமைய்யா நல்லாவே சொல்லிட்டீரய்யா உம்ம எட்டை.

ஏற்கெனவே என்னைப் புடிச்சுட்டாங்கப்பா. பேசாம 'கள்ள ஓட்டு'மாதிரி
ரெண்டு இடத்துக்கும் சேர்த்து 'ஆஜர்' போட்டுறவா? :-)))))

எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் இறைவன் செயல்!

கதிர் said...

sentimenta pottu thakittinga! :)

good post

G.Ragavan said...

எல்லாம் சரி...யாரு இந்த ராமைய்யா? அவருக்கு மட்டுந்தான் இந்தப் பதிவா? :))))))))

நல்லா வந்திருக்கு பதிவு. நீ போடுற படங்களோட கலர்புல்லா வந்திருக்கு.

My days(Gops) said...

// நான் என்னை பற்றி பெருமைப்படுவதற்கு ஒரு விஷயம் கூட இல்லை இதில் 8 விஷயங்களை எங்கிருந்து எழுதுவது??? அதுவும் எனக்கு பொதுவாகவே என்னை பற்றி பெருமையாக பேசிக்கொள்வது பிடிக்காது
//

thambi ennapa solla vara.. seekiram sollidupaaa.....

//(பெருமையாக பேச ஒன்றுமே இல்லை என்பது வேறு விஷயம்!! :-P).//
thanadakkathuku ungalukku oru silai vaikanum nga.....

G3 said...

//நான் என்னை பற்றி பெருமைப்படுவதற்கு ஒரு விஷயம் கூட இல்லை //

தன்னடக்கம் கேள்விப்பட்டிருக்கேன்.. இது அதுக்கும் ஒரு படி மேல போல :-))

எப்பவும் போல அமைதியா அடக்கமா உங்கள பத்தி அருமையான 8 விஷயங்கள சொல்லிட்டீங்க.. அதெல்லாத்துக்கும் நீங்க செலக்ட் பண்ண போட்டோஸ் சூப்பர் :-)

ALIF AHAMED said...

good post

My days(Gops) said...

nalla irundhadhu unga padhivu...

edharthama, nerla pesu na maadhiri :)...

CVR said...

@அனானி
வாழ்த்துக்களுக்கு நன்றி அனானி நண்பரே!! :-)

@ஜோசெஃப்
நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியல தலைவா!!
வாழ்க்கையில நிறைய விஷயங்கள் இருக்கும் போது இதுதான் கெடைச்சுதா எழுதறத்துக்கு?? அப்படின்னு கேக்கறீங்களா???
ஏதோ தோனினத எழுதினேன்!! :-))

@மை ஃப்ரண்ட்
வாங்க மை ஃபிரண்ட்!!
//மென்மேலும் உங்க 8.. 16 ஆகி.. 32 ஆக வாழ்த்துக்கள்..//
ஏதோ உள்குத்து இருக்குன்னு தெரியுது!ஆனா என்னன்னு தெரியல!! ;-P
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!!! :-)

@துளசி டீச்சர்
//எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் இறைவன் செயல்!//
அதே அதே!! :-D

@தம்பி
வாங்க தம்பி அண்ணா!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-))

@ஜிரா
வாங்க அண்ணாத்த
//யாரு இந்த ராமைய்யா? அவருக்கு மட்டுந்தான் இந்தப் பதிவா? :))))))))//
ராகவன் என்பது ராமரின் பெயர் தானே!!
இதெல்லாம் உங்களுக்கு தானே எழுதினேன் அண்ணாத்த. இப்படி கேட்டுபுட்டீங்க!! :-(

@கோப்ஸ்
வாங்க அண்ணாத்த!!
//thambi ennapa solla vara.. seekiram sollidupaaa.....
//
இன்னைக்கு உங்களுக்கு கலாசரதுக்கு வேற ஆளே கிடைக்களையா?? :-P

//edharthama, nerla pesu na maadhiri :)...//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா!! :-))

@மின்னல்
//good post//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா!! :-))

SurveySan said...

///ஈகோ,குழப்பங்கள்,சண்டைகள்,திட்டங்கள்?? இந்த மாயையில் வீழ்ந்து விடாமல் இருப்பதற்காக அவ்வப்போது நான் "எல்லாம் இறைவன் செயல்" என்று நினைவு படுத்திக்கொள்வேன்/////

நல்லது. :)
என் எட்டு படிக்கும்போதும் மனசுல சொல்லியிருப்பீங்கன்னு நெனைக்கறேன் :)

Dreamzz said...

ஆகா! மறுபடியுமா!

Dreamzz said...

அண்ணாத்த.. அந்த "Simply CVR" matter thaan ungakittu enakku romba pidichathu! alattal illama kalakareenga!

Dreamzz said...

3rd varai tamil padiche ippadi kalakareengale! chancea illa!
IT is reaally a gr8 achievement!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குத்து பாட்டு அல்லது இரைச்சல் மிகுந்த பாடல்கள் எனக்கு அவ்வளவாக ஒத்து வராது//

போச்சுடா...இதையே profileஇல் வேறு போட்டு வைத்துள்ளீர்கள்!

உங்களை இசை இன்பம் வலைப்பூவில் குத்துப் பாட்டின் குத்து மதிப்பு என்ன? என்று ஒரு "ஆராய்ச்சிக்" கட்டுரை எழுதச் சொல்ல வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை...எழுதுவீர்களா அண்ணா?

CVR said...

@Surveysan
நிமிஷத்துக்கு நிமிஷம் சொல்லுவேன்,உங்க பதிவை படிக்கும்போது கண்டிப்பா தோனிச்சு!! :-))

@ட்ரீம்ஸ்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணாத்த!!
சீக்கிரமா எட்டு போட்டுட்டு சொல்லுங்க

@கே.ஆர்.எஸ்
அண்ணா
இதெல்லாம் என்னா??
மண்டை காய வெக்கறீங்களே மன்னா
உங்க குறும்புக்கு அளவில்லையா கண்ணா??
:-D

இலவசக்கொத்தனார் said...

குட் ஒன் (எட்டு?!) !!! :))

Anonymous said...

hi cvr unka (8)pathivu padithen - your simplicity - i like it - unkalidathil pidithathu "NaaN" konjam kurachal - nallathu- picture eduthikitta (1) Kaiviralkalin pinnalkalidaiyae oru camera - eatho oru malaraanathu malarnthu dhan ithalkalidaiyea kowvi kondathaippol.
antha camera, thannai pattiyulla viralkalin azhakai paarkamal ponathenna - (2) Kulanthaiyin paarvaiyum, athan kannangalum, pose umm nice.
(3)kuvintha kaikalin oodae light - athan rays azhaku
4) vanmurai, soka padankal pidikathu - enakkum
5) nothing stays - pidithirunthathu
friend...

கப்பி | Kappi said...

Sooper!

நாகை சிவா said...

//தன்னடக்கம் கேள்விப்பட்டிருக்கேன்.. இது அதுக்கும் ஒரு படி மேல போல :-))//

ஒரு படி கீழனு சொல்லனும்.... தன்னடக்கம் என்று வார்த்தைக்கு கீழே போயிடுவார் நம்ம சி.வி.ஆர்...

நாகை சிவா said...

அண்ணன் செண்டிமெண்ட் போட்டு கவுக்குறீங்களே தலைவா. இருந்தாலும் அண்ணன் என்று கூப்பிட்டு நம்மள வச்சி காமெடி பண்ணுறீங்களோ என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

//(பெருமையாக பேச ஒன்றுமே இல்லை என்பது வேறு விஷயம்!! :-P).//

இதுவே ஒரு பெருமை தான்.... நாமளே எடுத்துக்குனும்... என்ன பாருங்க.. புரியும்

நாகை சிவா said...

1, தற்பெருமை அடிக்க தெரியாது என்பதை எவ்வளவு தற்பெருமையா சொல்லுறார் பாருங்க....

2, ஆக உங்களுக்கு சத்தியமா எந்த தமிழ் படமும் பிடிக்காது, அப்படி தானே....

3, சேம் பின்ச்.... வந்து சிஷ்யனா ஜாயிண்ட் பண்ணிக்கோ.... இல்ல நான் வந்து ஜாயிண்ட் பண்ணிக்குறேன்... ஆனா ஒரு பெரிய லெவல்ல வரோம்...

4, அவன் இன்றி அணுவும் அசையாது, அவன் இருக்க பயம் ஏன்....

Do your best you can
God do the rest.

5, செண்டிமெண்டா தாக்குறீயேப்பா....

6, ராசா ராசா தான்...

7, நாம எல்லாம் இதுல இன்னும் தவழும் குழந்தை தான். அதுனால வேணாம் விடு....

8, பாசக்கார பயப்புள்ளைங்க... அம்புட்டு தான்

நம்ம அழைப்பை ஏற்று பதிவு போட்டதற்கு நன்றிப்பா...

Raji said...

Annathae paeriya postaa poturukeenga..Atendance mattum potukoonga...
Simply CVR mattum padichaen...Good...

இரமேஷ் இராமலிங்கம் said...

என்னங்க ஒன்னு கூட இல்லீன்னுட்டு. 8 மேலயே போகும் போல. ம்ம்ம்... நல்லா எழுதரீங்களே. keep it up

CVR said...

@இலவசகொத்தனார்
:-)))
நன்றி கொத்தனாரே!! ;-)

@அனானி!!
பதிவை ரசித்து படித்திருக்கிறீர்கள் போல??
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!! :-))

@கப்பி பய
நன்றி கப்பி! :-)

@நாகை சிவா!!
ஆகா!! இவ்வளவு சிரத்தை எடுத்து பின்னூட்டம் இட்டிருக்கின்றீர்களே!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

நா தழுதழுக்க என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்!! :-)

@ராஜி
ரொம்ப பெருசு ஒன்னும் இல்லை மேடம்!! படிக்க ஆரம்பித்தால் நிமிடத்தில் முடித்து விடலாம்!!
பொறுமையாக படித்து விட்டு கருத்து கூறுங்கள்!!
மி த வெயிட்டிங்!! :-))

@இரமேஷ்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி இரமேஷ்!! :-)

Anonymous said...

Very interesting and suber post CVR.I thorougly enjoyed reading your post.

Rumya

Anonymous said...

Dear cvr,
Neenda naatkal munbu, edherchaiyaga unga blog ai parka nerndhadhu.Pinnalil, ungal blog ai miss panni vitten.

Ippodhu dhan unga blog id kedaithadhu.

Neengal Ungalai Simple cvr enru solli kondalum. Ungaluku therindhadhu and adhai sollum vidhathil Neengal GREAT cvr dhan.

Vaanukul Viriyum Adhisayangal - padithu varugiren.Indha katturai ungalai Great cvr enru solla vaikiradhu..

Neengal Nalla Science Teacher aga irukalam.... Solvadhai miga elimaiyaga, SIMPLE aga solgireergal.(Engae simple thevaiyo angae kattugireergal cvr...)

with Love,
Usha Sankar.

CVR said...

@Rumya
வாங்க ரம்யா!!
பதிவு உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி!! :-)

@உஷா
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)
எனக்கு பிடித்த விஷயத்தை முடிந்த வரை சுவையாக சொல்ல ஆசைபடுகிறேன்.
ஏனென்றால் விண்வெளி மிகவும் சுவாரஸ்யமான தலைப்பு மற்றும் நமக்கு பணிவும் ஆச்சரியத்தையும் அள்ளித்தரக்கூடிய ஒரு அறிவியல் பிரிவு.
யான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறவேண்டும் என்ற சிறு ஆசை!! :-)

Raji said...

//ரொம்ப பெருசு ஒன்னும் இல்லை மேடம்!! படிக்க ஆரம்பித்தால் நிமிடத்தில் முடித்து விடலாம்!!
பொறுமையாக படித்து விட்டு கருத்து கூறுங்கள்!!
மி த வெயிட்டிங்!! :-))//

Idho padichuttu vaaraen nga CVr :)

Raji said...

1.Simply Cvr
2.Padamae selecting laam panni dhaan paarpeengalaaaaaa...
3.Unga post ellam unga aarvathai velikaatukiradhu :)
4.Me too used to say Eswara always :-)
5.Appa/annan sentiments pudusa naanum kaetkuraen anna ...
6.Yup melodies kaetkittu thaniya velai seyura inbamae inbam dhaanga..
7.Super ezhuthu thiramai ungalukku irukkudhu adhai sollavae vaendam...aana 3rd varaikum tamil padichadhukkae indha poda aachariyama irunduchunga CVR ...
8.Even i got so many friends through this tamil blog world.. :)

Apada padichu mudichutaen..Neenga sonna maadhiri padikka aarmicha vudanae tappunu mudinja maadhiri dhaan irundhuchu ;)

CVR said...

@ராஜி
பதிவை பொறுமையா படிச்சு இவ்வளவு விளக்கமா பின்னூட்டம் போட்டிருக்கீங்களே!!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ராஜி!! :-)

சுந்தர் / Sundar said...

mmm ... hmmm

Anonymous said...

Unga movie rasanai super! Mudincha neenga parkaatha padangal intha varisaila iruntha parunga..pidikumnu ninanikiren!

1. Life is beautiful (Sogam thaan anaalum nalla motivation childrena eppadi valarkanumnnu)
2. Silence of the lambs (Best thriller that I have ever seen)
3. Pursuit of Happyness (Kandippa ungalukku pidikum)
4. March of the penguins
5. Green Mile
6. Schindlers list
7. Inconvenient truth
8. Babel
9. Pulp fiction (ippadiyum kooda screenplay vaikalama?)
10. The illusionist
Paarunga pidicha blogungo - Babu

CVR said...

@பாபு
கருத்துக்குகளுக்கு மிக்க நன்றி!! :-)


நீங்கள் கொடுத்த பட்டியலை கொஞ்சம் பார்ப்போம்.

1. Life is beautiful (Sogam thaan anaalum nalla motivation childrena eppadi valarkanumnnu)
பார்த்தாச்சு!!

2. Silence of the lambs (Best thriller that I have ever seen)
பார்க்கனும்!! (I hope it aint too gory)

3. Pursuit of Happyness (Kandippa ungalukku pidikum)
பார்த்தாச்சு!!

4. March of the penguins
பார்த்தாச்சு!!

5. Green Mile
பாக்கனும்!

6. Schindlers list
Heard it was too sad!! Thnk i will give it a miss!

7. Inconvenient truth
பாக்கனும்

8. Babel
பாக்கனும்

9. Pulp fiction (ippadiyum kooda screenplay vaikalama?)
பார்த்தாச்சு

10. The illusionist
Paarunga pidicha blogungo - Babu
பாக்கனும்!

ஜிரா அண்ணா சொல்லி Roman holiday மற்றும் Sing in the rain ஆகிய படங்களை வாடகைக்கு எடுத்துள்ளேன்!!
பார்க்கலாம்!!

அடிக்கடி பதிவு பக்கம் வந்துட்டு போங்க!! :-))

CVR said...

@சுந்தர்
என்ன தலைவா பெருமூச்சு விடறீங்க!!
பதிவு பிடிக்கலையா?? :-)

cdk said...

எழுதிட்டா போச்சு!! வெகு விரைவில் பதிவை போட்டு விடுகின்றேன்

கோபிநாத் said...

8 விஷயமும் சூப்பர் தலைவா ;))

Marutham said...

Arumayaana 8! :)

Ovondrum arumai....
Isai - thiraipadam... anaithum arumayana seidhi.
Nalla padangal meedhu mattumey ulla naatam acharyamaga uladhu.
Enakkum adhai pondre... Vetayadu vilayadu padam avvalavu vara verpai petradhu EN endru innum enaku puriyavillai. Ethanayo nanbargaludan adi dhadi alavirku poi ulladhu indha padathai vimarsanam seidhamaiku- ayinum irudhi varai ADHU ORU KUPPAI enbadhil eLLalavum ayamillai.

Marutham said...

//மூன்றாவது வரை தானே தமிழ் படித்திருக்கிறோம்//
That really is AMAZING.
En annaar adikadi pulambum vishayam...IT industry vandhu tamil medhu ulla patru kuraya villai -anaal ezhudhi padika mudiya vilaye!

Unmayagave idhu periya vishayam!

Marutham said...

//என்னது?? கடைசி வரைக்கும் பொறுமையா படிச்சிட்டீங்களா?? உங்களுக்கு உண்மையாவே பொறுமை அதிகம்தாங்க!!! :-)//
At somepoint in life every human would be/have been patient :P sonen ilaa

Anonymous said...

like gambling? love las vegas? pillaging the all untrodden [url=http://www.casinolasvegass.com]casino[/url] las vegas at www.casinolasvegass.com with beyond 75 … la proprieties act [url=http://www.casinolasvegass.com]online casino[/url] games like slots, roulette, baccarat, craps and more and moved existent coins with our $400 cost-free bonus.
we be uninterrupted rhythmical perspicacious b wealthier games then the superannuated online [url=http://www.place-a-bet.net/]casino[/url] www.place-a-bet.net!

Anonymous said...

Witam doszedlem do wniosku ze ta strona jest najlepsza jezeli chodzi o [url=http://www.youtube.com/user/kredytstudencki]kredyt studencki[/url].

http://identi.ca/kredytstudencki

Anonymous said...

[COLOR="Red"][B]Click on the pictures to view in full size[/B][/COLOR]

[URL=http://www.wallpaperhungama.in/details.php?image_id=12779][IMG]http://www.wallpaperhungama.in/data/media/32/Asin-80.jpg[/IMG][/URL]

[URL=http://www.wallpaperhungama.in/details.php?image_id=7237][IMG]http://www.wallpaperhungama.in/data/media/32/Asin-71.jpg[/IMG][/URL]


[url=http://www.wallpaperhungama.in/cat-Asin-32.htm][b]Asin Hot Wallpapers[/b][/url]

Photo gallery at t WallpaperHungama.in is dedicated to Asin Pictures. Click on the thumbnails for enlarged Asin pictures, intimate photographs and exclusive photos. Also check out other Pictures Gallery for Turbulent quality and Superior Resolution image scans, silver screen captures, moving picture promos, wallpapers, hollywood & bollywood pictures, photos of actresses and celebrities

Anonymous said...

Exceptional site!

Nearly everyone wants to get insurance at one time or another, whether it is
auto insurance, life insurance, health insurance, or homeowners insurance.
These days it is more simplified than ever to get free insurance quotations from various
businesses in order to find the optimal bargain. You can also learn how to save
a lot of money in free petrol when you obtain your insurance cost quotations.

[url=http://freeinsurancequoteshq.com]Insurance price quotes[/url]
http://freeinsurancequoteshq.com

[url=http://www.weddingringsforever.com/]Tungsten Wedding Rings[/url]

http://familytreesoftware.org/

Anonymous said...

mexican pharmacy no prescription phenterminedrugs like valium

[url=http://www.bebo.com/buylevitraonline1]buy levitra online viagra[/url]

Anonymous said...

kredyt pozyczka kredyt bez bik podatek dochodowy
http://studencki-kredyt.pl/kredytn/ http://studencki-kredyt.pl/kredyto/mapa.html http://studencki-kredyt.pl/kredytp/ http://studencki-kredyt.pl/kredytr/mapa.html http://studencki-kredyt.pl/kredyts/ http://studencki-kredyt.pl/kredytt/mapa.html cialis http://studencki-kredyt.pl/akcje/mapa.html http://studencki-kredyt.pl/inwestycje/mapa.html http://studencki-kredyt.pl/karta-kredytowa/mapa.html http://studencki-kredyt.pl/lokata/mapa.html http://studencki-kredyt.pl/notowania/mapa.html http://studencki-kredyt.pl/oprocentowanie/mapa.html http://studencki-kredyt.pl/pozyczka/mapa.html

Anonymous said...

check out the new free [url=http://www.casinolasvegass.com]online casino games[/url] at the all new www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casinos[/url] on the web! enjoy our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and win money.
you can also check other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos[/url] and [url=http://www.bayareacorkboard.com/]poker room[/url] at this [url=http://www.buy-cheap-computers.info/]casino[/url] sites with 100's of [url=http://www.place-a-bet.net/]free casino games[/url]. for new gamblers you can visit this [url=http://www.2010-world-cup.info]online casino[/url].

Anonymous said...

You should visit [url=http://www.eroticwebcams.net]www.EroticWebCams.net[/url] if you want to view the best adult webcams.

Anonymous said...

Instantly translate entire web pages, blogs or documents in a single click using our miraculous online translation software. Our incredible translator tool supports 75 languages including English, Spanish, French, Korean, Japanese, Hebrew (Yiddish), Swedish, Dutch, German, Italian, Croation, Chinese (Simplified), Chinese (Traditional), Portugese, Russian, Serbian, Turkish and more! It also comes loaded with a leading dictionary, spelling and definition package. Use our simple and intuitive translation software to translate words, webpages or document formats such as Word, PDF and text. Download our amazing translation software for free and start translating now!

You can download it here:
[URL=http://fishbabel.notlong.com]Babel Fish[/URL]

Anonymous said...

Intimately, the post is in reality the sweetest on this notable topic. I concur with your conclusions and will thirstily look forward to your approaching updates. Just saying thanks will not just be sufficient, for the wonderful lucidity in your writing. I will directly grab your rss feed to stay informed of any updates. Admirable [url=http://pspgo.info/favorites.html]lottery[/url] work and much success in your business efforts!

Anonymous said...

[url=http://www.bollywood-latest.com/]Bollywood Blog[/url]

[url=http://www.bollywood-latest.com/]Bollywood News[/url]

[url=http://www.bollywood-latest.com/]Bollywood Gossip[/url]

[url=http://www.bollywood-latest.com/]Bollywood Actress[/url]

Anonymous said...

Hi folks,

What online zines do you read and would recommend?

For all you punk folks out there I recommend The Enough Fanzine. It is one of the first punk zines on the www.

They have throusands of reviews from the most independent bands all over the world. Check them out online: [url=http://www.enoughfanzine.com]Enough Fanzine[/url]. Best of it all, they are 100% non-profit and just helping the scene!

Looking forward to your recommendations.

Regards!

Anonymous said...

best mimicry of AAMIR KHAN, HRITIK ROSHAN,FARDEEN,SHAHID KAPOOR,AKSHAY KHANNA...i saw this and HAD to share with you guys!!!

[url=http://www.mydesizone.com/video/wOjcyunSGAc/BEST-BOLLYWOOD-MIMICRY.html]BEST BOLLYWOOD MIMICRY[/url]

Anonymous said...

Traditional banking has always been a brick and mortar building where you go to deposit or withdraw money.

With the popularity of the Internet and the power it gives people to take control of their lives, many traditional banks have created banking Internet web pages where customers could transfer money, set up bill payments recurring or otherwise, quickly check items that have cleared, and many other functions that can be accessed 24 hours per day 7 days a week.

This is the truest form of banking Internet simply because these banks only exist online.

When you utilize banking Internet options you are able to access your account, move money, pay bills, and any number of things from any computer with Internet access worldwide.
[url=http://pcinternetbanking.com]Internet Banking[/url]
Historically banks were institutions that held your money under lock and key.

Customers now have the freedom to securely perform their banking 24 hours a day 7 days a week, where they can pay bills and set up recurring savings or payments, monitor check clearances and perform other tasks like transfers and balance enquiries through an internet connection.

The purest form on online banking is the virtual bank, where the only place they exist is in cyberspace.
[url=http://pcinternetbanking.com]Internet Banking[/url]
Internet banking has revolutionalized banking with immediate global access to your bank accounts using a secure internet connection.

Anonymous said...

So I took the plunge -- bought myself a [url=http://www.ordio.com.au/products/Fatman-iTube-452-with-ValveDock.html]Fatman iTube 452[/url] and I am very happy to say that I am extremely pleased. I actually listened to one at a friend's house several months back and just couldn't get that sound out of my head because it impressed the heck out of me. I searched online everywhere I could think of for a great deal and finally found it at [url=http://www.ordio.com.au]Ordio[/url] in Westfield Bondi Junction. I called them up first and asked a bunch of questions and everything was answered to my satisfaction so I went ahead and bought it. Dispatch was very fast. Everything was as it should be. I'm pretty darn happy and I'm playing it right now. Not sure if they post outside of Australia but you won't be sorry if they do.

Outstanding...

Michael

Related Posts Widget for Blogs by LinkWithin