பார்க்காத அதிசயங்கள் - பாகம் 1

போதும்!! பார்த்த வரைக்கும் போதும். இதுக்கு மேல வெளிநாட்டுல இருக்க வேண்டாம், நீ திரும்பி போகனும்னு சொன்ன போது எனக்கு அப்பாடான்னு இருந்தது. தினமும் களைச்சு போய் வீட்டுக்கு வந்துட்டு நாமலே சமைச்சு சாப்பிடறது மாதிரி கடுப்பு இந்த உலகத்துல வேற எதுவும் இல்லை. ஒரே பிரெட்டும் பன்னும் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்து போச்சு. முதல்ல வந்த போது நல்லா தான் இருந்துச்சு ஆனா போக போக வீட்டு நியாபகம் ரொம்ப வர ஆரம்பிச்சிடுச்சு. அதனால இந்தியா திரும்பி போகனும்னு சொன்ன போது ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

திரும்பி வறதுக்கு கொஞ்ச நாள் இருக்கும் போதுதான் விவேக்கோட அறிமுகம் கிடைச்சுது. ஜாவா பத்தி ஏதோ ஒரு சந்தேகம்னு ஒரு இணையதளத்துல கேள்வி கேட்டிருந்தான். என்னோட பிராஜெக்டுல சந்தேகம் வந்த போது எல்லாம் நானே அந்த இணையதளத்துல தான் கேள்வி கேட்டு தெளிஞ்சுக்குவேன். அவன் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரிஞ்சதால அதுக்கு பதில் சொல்லி இருந்தேன். நான் வழக்கமா இணையத்துல எல்லாம் என் நிஜ பேர உபயோகிக்கறது இல்லை. எல்லா இடத்துலையும் உபயோகிக்கற "சுட்டிப்பெண்" அப்படிங்கற பேருலதான் பதில் போட்டிருந்தேன்.

ஒன்னு இரண்டு நாட்களிலேயே இனையத்துல பல இடங்களில அவன் பேர பார்க்கற சந்தர்ப்பம் ஏற்பட்டுது. நான் எல்லா இடத்துலயும் சுட்டிப்பெண் அப்படிங்கற பேருலயே உலா வந்ததுனால எல்லா இடத்துலயும் அவன் என்னை சுலபமா அடையாளம் கண்டுபிடிச்சிட்டான்.என்னுடைய பதிவ வந்து படிச்சுட்டு கண்டமேனிக்கு பின்னுட்டம் போட்டான். என்னை போலவே அவனுக்கும் செஸ் விளையாட்டு ரொம்ப பிடிக்கும்னு தெரிய வந்தது. நான் அந்த சமயத்துல இந்தியா திரும்பி வந்து இருந்தேன். கொஞ்ச கொஞ்சமா எங்க நட்பு வளர்ந்து நிறைய மின் அஞ்சல் போக்குவரத்து நடக்க ஆரம்பிச்சுது. அப்புறம் திடீர்னு ஒரு நாள்ல இருந்து சாட்டிங் பண்ண ஆரம்பிச்சோம். பொதுவா செஸ் பத்தி,அதில் விளையாடின பெரிய பெரிய ஆட்டக்காரங்க பத்தி,கம்ப்யூட்ட்ர் விளையாடற செஸ் பத்தி அப்ப்டி இப்படினு தோனுறத பத்தி எல்லாம் பேசுவோம். போக போக எங்க சாட்டிங் மணி கணக்கா நடக்க ஆரம்பிச்சது. நான் ஆபீஸ்ல வேலைக்கும் நடுவுல சைட் பிசினஸ் மாதிரி இதையும் ஒரு பொழப்பாவே பண்ணிட்டு இருந்தேன். நம்மளுக்கு பகல் நேரம்னா அவனுக்கு இரவு நேரம் ஆச்சே,ராத்திரி எல்லாம் கண் முழிச்சிட்டு தூங்காம அவனும் என் கூட சாட் பண்ணிட்டு இருப்பான். அவன் கூட என்னத்த பேசறதுன்னு இல்லாம எதையாவது சும்மா பேசிட்டு இருப்பேன். என் நண்பர்கள் யார் கூடையும் இது மாதிரி பேச முடியாது,எல்லோரும் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் போர் அடிக்குதுன்னு போய்டுவாங்க,ஆனா இவன் என்ன மாதிரியே ஓயாமல் சாட் பண்ணிட்டு இருப்பான். எனக்கு அவன் கூட சாட் பண்ணறது ரொம்ப பிடிச்சிருந்தது. அப்படித்தான் ஒரு நாள் சும்மா கதை அடிச்சிட்டு இருந்த போது அவன் நண்பர்கள் எல்லாம் அவன கேலி பண்றதா சொன்னான்.

சுட்டிப்பெண் : எதுக்கு கேலி பண்றாங்க??

விவேக் : நான் இப்போ எல்லாம் ரொம்ப நேரமா சாட் பண்ணிக்கிட்டூ இருக்கேனாம்.

சுட்டிப்பெண் :ம்ம்ம்

விவேக் : உன் கூட....
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவனே தொடர்ந்து டைப் அடிச்சான்.

விவேக் : யார் அந்த பொண்ணு ,எப்ப பார்த்தாலும் சாட் பண்ணிட்டு இருக்க அப்படின்னு என் பிரண்டு கேக்கறான்.
எனக்கு திடீர்னு சரியான கோபம் வந்துச்சு

சுட்டிப்பெண் : நீ யார் கூட பேசினா அவனுக்கு என்னவாம்?? உன் பாட்டி கூட சாட் பண்றேன்னு சொல்லு.

விவேக் :ஹே!! நீ எதுக்கு இவ்வளவு கோப படற. இந்த பசங்க இப்படிதான் ,எல்லாத்துக்கும் கேலி பண்ணிட்டு இருப்பாங்க!! நீ டென்ஷன் ஆகாத


அதுக்கு அப்புறம் நான் அன்னிக்கு அவன் கூட ரொம்ப நேரம் பேசல.அவன் சும்மா எதேச்சையாதான் அவன் நண்பன் சொன்னத சொல்லியிருந்தா மாதிரி தான் இருந்துச்சு,ஆனா எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு.நான் எப்பயாச்சும் பிரவுஸிங் சென்டர் போரேன்னு சொன்னா என் அறைநண்பர்கள் ஏன் நமுட்டு சிரிப்பு சிரிப்பாங்கன்னு எனக்கு இப்போதான் உறைச்சுது.இந்த வயசுல நண்பர்கள் எல்லாம் சும்மாவாச்சும் பசங்களோட ஓட்டுரது சாதாரணமான விஷயம் தான்,இருந்தாலும் இவளுக என்ன இவன் கூட வெச்சு ஓட்டும் போது ரொம்ப எல்லாம் ஓட்ட மாட்டாங்க.ஏதோ நாங்க உண்மையாலுமே லவர்ஸ் மாதிரி கொஞ்சமா ஓட்டிட்டு விட்டிருவாங்க.

நான் விவேக்க ஒரு நண்பனை தவிர வேற எந்த கண்ணோட்டதுலையும் பார்த்தது கிடையாது. அவனுக்கும் எனக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப்போச்சு. எனக்கு வாழ்க்கை துணையா வரதுக்கான அத்தனை குணமும் அவன் கிட்ட இருந்துச்சு,இவன விட என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட வேற எவனாவது கிடைப்பானான்னு யோசிச்சு பார்த்தா ஒரு பதிலும் கிடைக்கலை.ஒரே குழப்பமா இருந்துச்சு.

அடுத்த தடவை சாட் பண்ணும்போது போன தடவை சாட் பண்ணும்போது பேசின பேச்சு எல்லாம் மறந்துட்டு எப்பவும் போல பேச ஆரம்பிச்சோம்.
இப்படியெ போய்ட்டு இருக்கும்போது ஒரு நாள் திடுதிப்புனு அவனும் இந்தியா வரப்போவதா சொன்னான். எனக்கு ப்ராஜெக்ட் முடிஞ்சு போச்சு,அடுத்த வாரமே இந்தியா வரப்போரேன்னு சொல்லிட்டு இருந்தான்.
“வாவ்!! சூப்பர். நீ இங்க வந்தனா ஒரு நாள் மீட் பண்ணலாம்" என்றேன்.
“ம்ம்ம் யா!! மீட் பண்னலாமே" அப்படின்னு பட்டும் படாத மாதிரி பதில் சொன்னான்.

வந்த உடனே அவனோட கைப்பேசி நம்பர எனக்கு கொடுப்பான்னு நினைச்சேன்,ஆனா அவன் அப்படி எல்லாம் ஒன்னும் செய்யலை. அவனே சொல்லுவான்னு நானும் கேக்காமயே இருந்தான். நம்மலே கேட்டா அலைஞ்சான் மாதிரி இருக்கும்னு எனக்கும் கேக்க தோனலை. வந்ததுக்கு அப்புறம் முன்ன இருந்ததை விட கம்மியான நேரமே தான் சாட் பண்ண முடிஞ்சுது.கேட்டா வேலை அதிகம்,வெளிநாட்டுலனா இருபத்துநாலு மணி நேரமும் கம்ப்யூட்டரே கதியா இருப்போம்,ஆனா இங்க அப்படி இல்லைனு சொன்னான்.
ஒரு நாள் சாட் பண்ணிட்டு இருக்கும்போது எதேச்சையா சொன்னான்.
“உன் கூட ஒரு நாள் செஸ் விளையாடி பார்க்கனும்"
“அதுக்கு மொதல்ல நாம மீட் பண்ணனும்" அப்படின்னு சொன்னேன்.
“பண்ணலாமே............என்னிக்காவது ஒரு நாள் கண்டிப்பா பண்ணலாம்"அப்படின்னு சொன்னான்.
"இந்த வீக்கென்ட் ஓகேவா??” அப்படின்னு கேட்டேன்.

-------தொடரும்

நடந்த இந்த கூத்துக்காகவாவது இந்த பதிவை எப்பவும் மறக்க மாட்டேன்! :-)

18 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உன் கூட ஒரு நாள் செஸ் விளையாடி பார்க்கனும்"
“அதுக்கு மொதல்ல நாம மீட் பண்ணனும்" அப்படின்னு சொன்னேன்//

ஏன்?
மீட் பண்ணாமலேயே, சாட் செய்து கொண்டே திரையிலேயே விளையாடலாமே! என்று மட்டும் விவேக் சொல்லியிருந்தா என்னவாகியிருக்கும்! :-)))

தொடருங்க CVR!

CVR said...

சொல்லி இருக்கலாம்!!
ஏதேது!! விட்டா முழு கதையையே சொல்ல வெச்சிருவீங்க போல இருக்கே!! :-))
நாளைக்கு கடைசி பகுதியை பார்த்துட்டு சொல்லுங்க தலைவரே!! :-)

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!! :-)

வடுவூர் குமார் said...

இப்போது வேறு கணினியில் பார்க்கிறேன்.சரியாக தெரிகிறது.
பிரச்சனை என் கணினியில் அல்லது இணைய தொடர்பில் இருக்கலாம்.

துளசி கோபால் said...

ம்ம்ம் அப்புறம்?

வடுவூர் குமார் said...

இது வரை ஒரு தடவை கூட நீங்கள் சொல்லியமாதிரி நிறைய நேரம் சாட் பண்ணதில்லை.
பார்ப்போம் அடுத்த பதிவில் எப்படி போகிறது என்று.

CVR said...

@வடுவூர் குமார்
எப்பொழுதும் போலத்தான் கருவிப்பட்டை மூலமாக த்ஹமிழ்மணத்துக்கு அனுப்பினேன். ஆனால் முகப்பில் என் பக்கம் ஏன் நிறைந்திருக்கிறது என்று தெரியவில்லை!!
என்ன்வோ போங்க! எல்லாம் இறைவன் செயல்!! :-)

@துளசி கோபால்
மீதியை நாளைக்கு சொல்கிறேன் துளசி அக்கா!! :-)

CVR said...

@வடுவூர் குமார்
எனக்கு தெரிந்து பல பேர் சதா சர்வகாலமும் இணையமே கதி என்று சாட் செய்து கொண்டிருப்பார்கள்(என்னை போல ஹி ஹி)!!
இதெல்லாம் இப்பொழுது இளைஞர்களிடையே சாதாரணம்!! :-)

Osai Chella said...

Hi you know when to stop for the next episode! Great going maan!

CVR said...

நன்றி செல்லா
உங்கள் ஆவலை ஏமாற்றாதது போல் கதை முடியும் என ஆசை படுகிறேன்!! :-)

மு.கார்த்திகேயன் said...

ம்ம்.. கதை நல்லா விறுவிறுப்பா போகுதே CVR..
சொந்த அனுபவமா..இல்லை..கதைக்காக எழுதுறீங்களா..
படிச்சா சொந்த அனுபவம் மாதிரி தான் தெரியுது..

மு.கார்த்திகேயன் said...

அடுத்த பகுதிக்கு, ரெடி நான், எப்போ போடுறீங்க CVR

CVR said...

//ம்ம்.. கதை நல்லா விறுவிறுப்பா போகுதே CVR..
சொந்த அனுபவமா..இல்லை..கதைக்காக எழுதுறீங்களா..
படிச்சா சொந்த அனுபவம் மாதிரி தான் தெரியுது..//

நான் என்ன சொல்லுறது! கதையை படிச்சு முடிச்சா உங்களுக்கே புரியும்னு நினைக்கிறேன்!! :-)


//அடுத்த பகுதிக்கு, ரெடி நான், எப்போ போடுறீங்க CVR //
இன்னைக்கு சாயந்தரம் EST!! :-)

Anonymous said...

ரொம்ப நல்லா எழுதறீங்க சிவிஆர். தொடர்ந்து இது போல பல தொடர்கள் எழுத வேண்டுகிறேன்.

கண்மணி

CVR said...

நன்றி கண்மணி!
போன தடவை உங்களை மாதிரி சில பேர் கொடுத்த ஊக்கத்தில் தான் இந்த கதையை பதிக்க தோன்றியது.
இந்த கதைக்கு வரவேற்பு இருந்தால் மேலும் கதைகளை பதிய வைப்பேன்!!
பார்க்கலாம்! எல்லாம் இறைவன் செயல்!! :-)

வெட்டிப்பயல் said...

ஓவர் தன்னடக்கம் உடம்புக்கு ஆகாது CVR...

மக்களே... இவர் அட்டகாசமாக கதை எழுத கூடியவர். இவரோட கதைகள் படித்த பாதிப்பில் தான் நானும் சில கதைகள் எழுதினேன்... ஆனா இவரோட கதை ரேஞ்சை டச் பண்ண முடியல...

இவர் பேட்டி எல்லாம் எங்க கம்பெனில போட்டிருக்காங்க... அங்க பெரிய ரசிகர் படையே இருக்கு. ஆனா அளவுக்கு அதிகமான தன்னடக்கம்...

CVR said...

:O

தலைவா!!
எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்!!
ஏன் இந்த கொலை வெறி??

இது உங்களுக்கே ஓவரா தெரியலையா?? :-D

Anonymous said...

கதை interesting ஆக போகுது.முடிவு எப்படி?எப்படி cvr எல்லா கதையும் உண்மை சம்பவம் போல இருக்கின்றது?

CVR said...

முடிவு எப்படி வந்திருக்குனு நீங்க தான் சொல்லனும் துர்கா!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin