நான் மாமாவிடம் மாட்டிக்கொண்ட கதை

என் இனிய தமிழ் மக்களே!!
அதாகப்பட்டது! வாழ்க்கையிலே காமெடிங்கறது அப்பப்போ இருந்தாதான் வாழ்க்கை தொய்வில்லாம போய்க்கிட்டு இருக்கும்.ஆனா வாழ்க்கையே காமெடியா போனா??

அப்படிப்பட்ட ஒரு வாலிபனின் வாழ்க்கை புத்தகத்தின் ஒரு பக்கத்தை தான் நாம இன்னிக்கு புரட்டி பார்க்கப்போறோம். எனக்கு சின்ன வயசுல இருந்து காரு-னா ரொம்ப ஆசைங்க. கையில எது கிடைச்சாலும் அதை உருட்டி விட்டு ஓட்டிட்டு இருப்பேன். ஒரு நாள் ஓட்டறதுக்கு எதுவும் கிடைக்கலைன்னு தூங்கிட்டு இருந்த என் பாட்டியை உருட்டி விட்டு ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்னா பாத்துக்கோங்களேன். இப்போ கூட எவனாவது மாட்டுனான்னா இரக்கமே இல்லாம ஓட்டி தள்ளிடுவேன். Gtalk-ல என் கிட்ட மாட்டி இருக்கற தமிழ்மண நண்பர்களே இதற்கு சாட்சி.

சரி!! இப்போ எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு? அப்படின்னு கேக்கறீங்களா?? எனக்கு வண்டி ஓட்டுறதுல இவ்வளவு ஆசை இருந்தும் நான் இந்தியாவுல இருந்த வரைக்கும் டிரைவர் சீட்டுல உட்கார்ந்தது கூட இல்லை!! நாம எல்லாம் காருல போறதே பெரிய விஷயம் இதுல எங்கிட்டு காரு ஓட்டுறது???

ஆனா இங்க வந்த அப்புறம் நிலைமையே வேற!!! இந்த ஊருல எங்க போகனும்னாலும் காரு வேணும்.ரோட்டுல நடந்து போனாலே எல்லோரும் ஒரு மாதிரி தான் பார்த்துட்டு போவாங்க!! நாம எங்க போனாலும் எவனுமே நம்மல மதிக்கறது கிடையாதுங்கறதுனால நாம இதெல்லாம் கண்டுக்கிட்டதே கிடையாது. ஆனா போக போக ஒரு லைசென்ஸ் வாங்கி வெச்சிக்கிட்டா நல்லது, அங்கங்க அடையாளம் காட்டுறதுக்காவது உபயோகமா இருக்கட்டும் அப்படின்னு முயற்சி பண்ணேன். ஒரு வழியா காரு ஓட்ட கத்துக்கிட்டு பரீட்சையிலும் தேறி லைசென்ஸ் வாங்கின அப்புறம் எனக்கு தல கால் தெரியலை. வரவன் போரவன் கிட்ட எல்லாம் லைசென்ஸ் காண்பிச்சுக்கிட்டு ஆட்டம் போட்டுகிட்டு இருந்தேன்.என் தொல்லை தாங்க முடியாம நண்பர்கள் எல்லாம் ஒரு திட்டம் போட்டாங்க!! வரியா ந்யூயார்க் வரைக்கும் காருலையே போய்ட்டு வரலாம்?? நீயும் புதுசா லைசென்ஸ் வாங்கி இருக்க,லாங்க் டிரைவ் போனா மாதிரியும் இருக்கும் அப்படின்னு உசுப்பேத்தி விட்டுட்டானுங்க!!

“துணிந்து செய்யனும் எதுவும், இல்லைனா கருமம் ஒட்டிகிச்சு பாரு அழுக்கு" அப்படின்னு நாம தமிழ் பேசும் நல்லுலகில் சொல்லி இருக்காங்க இல்லையா(மகனே நீ அடங்கவே மாட்டியா??) ,அதனால துணிஞ்சு "கழுதை ந்யூயார்க் தானே போயிட்டா போச்சு" அப்படின்னு ஒத்துக்கிட்டேன். போகும் போது சொல்லுறா மாதிரி ஒன்னும் இல்லை. ஓவரா பனி இருந்ததுனால ஒரு மண்ணும் கண்ணுக்கு தெரியலை. இந்த ஊருல ரொம்ப தூரம் போகனும்னா ஃப்ரீவே அப்படிங்கற ஒரு விதமான சாலைகளை உபயோகப்படுத்துவாங்க. அதுல மெதுவா எல்லாம் போக கூடாது,ஒரே வேகத்துல சீரா போய்க்கிட்டு இருக்கனும். ஆனா அன்னிக்கு ரொம்ப அதிகமான பனி இருந்ததுனால நாங்க இல்லாத லூட்டி எல்லாம் அடிச்சோம். கண்ணுல ஒரு போர்ட் எதுவும் சரியா தெரியலைன்னு போனதே ரொம்ப மெதுவா.அதுல அங்கங்க நின்னு,நல்லா அறிவிப்பு பலகை எல்லாம் உத்து பார்த்து,சில சமயம் ரிவர்ஸ் எல்லாம் வந்து அடாவடி தாங்கலை.

ஆனா பெரிய காமெடி திரும்ப வரும்போது தான். நம்ம கையில இவ்வளவு புதுசா பெருசா காரு கிடச்சதுனால என் கால் எதுவும் தரையிலையே இல்லை,ஆக்சிலேட்டருல தான் இருந்துச்சு (ஹி ஹி). அதுவும் இவ்வளவு சூப்பரான ரோடு எல்லாம் நாம எல்லாம் எங்க பாத்திருக்கோம் அதனால கண்ணு மண்ணு தெரியாம ஓட்டிகிட்டு வந்தேன். பக்கத்துல இருந்த நண்பர் வேற அவன சைட் வாங்கு,இவன சைட் வாங்கு அப்படி இப்படி ஏத்தி விட்டுக்கிட்டு இருந்தாரு. அப்போன்னு பார்த்து லைட்டா தூறல் வேற போட ஆரம்பிச்சசிடுச்சு,ஆனா நாம மெதுவாவே ஆக்கலை. நாம வர வேகத்தை பார்த்து எல்லா காரும் நமக்கு வழி விட ஆரம்பிச்சிடுச்சு. நமக்கு ஏதோ மரியாதைதான் தராங்க போல இருக்குன்னு நானும் விரட்டிக்கிட்டு போய்க்கிட்டு இருந்தேன்.
அப்போ திடீர்னு ரியர் வ்யூ மிரர்ல ஏதோ காரு முந்திக்கிட்டு வரா மாதிரி இருந்துச்சு. மகனே!! நம்மல விட எவன்டா வேகமா வர்ரது அப்படின்னு பார்த்தா அந்த காரு மேல திடிர்னு நீல கலரு சிங்கு சா,சிவப்பு கலரு சிங்கு சா அப்படின்னு விளக்கு எரிய ஆரம்பிச்சிடுச்சு!!

அதை பார்த்து பக்கத்துல இருந்த நம்ம நணபர் "காப் காப்!! ஓரம் கட்டு! சீக்கிரம் ஓரம் கட்டு" அப்படின்னு கத்த ஆரம்பிச்சிட்டாரு!!!
என்னது?? காப்பா??? ஆகா வெச்சிட்டாங்கையா ஆப்பு!!!அப்படின்னு வண்டியை ஓரம் கட்டுனேன்.
ஆகா!! நாம லைசென்ஸ் வாங்கின மொத ட்ரிப்புலையே மாட்டிகிட்டோமே அப்படின்னு நானும் குல தெய்வத்தை வேண்டலாம்னு பார்த்தா,அப்போன்னு பாத்து பயத்துல என்னுடைய குல தெய்வம் யாருங்கறதே எனக்கு மறந்து போச்சு. ரெண்டு நிமிஷத்துல வண்டியை எனக்கு பின்னாடி நிறுத்திட்டு நம்ம மாமா காரு கிட்ட வந்தாரு.

“வாங்க ஆபீஸர்!! எப்படி இருக்கீங்க ஆபீஸர்?? வீட்டுல அண்ணி கொழந்தைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா???”

“எலே!!! காருல நாந்தான் தொறத்திட்டு வந்தேன்னு தெரியுதுல்ல?? அப்புறம் ஏன்ல வண்டியை நிறுத்தல??”

“அது நீங்களா ஆபீஸர்?? நான் யாரோ என் கூட ஒடி பிடிச்சு விளையாடுறாங்கன்னு நினைச்சுட்டேன் ஆபீஸர்"

“எதுக்குலே இவ்வளவு வேகமா வண்டியை விரட்டிட்டு வந்த??? வண்டியில துப்பாக்கி குண்டு ஏதாவது வெச்சிருக்கியாலே??”

“இந்த ஊருக்கு வந்து நல்லா சாப்டு சாப்டு தூங்கிட்டு கொஞ்சம் குண்டாயிருக்கேன் ஆபீஸர்!! மத்தபடி வேற குண்டு எதுவும் இல்லை ஆபீஸர்"

“பின்னாடி யாருலே காருல?? அவிங்க கிட்ட ஏதாவது துப்பாக்கி இருக்கா??”

நானும் என் நண்பரும் பின்னாடி திரும்பி தூங்கிகிட்டு இருந்த என் நண்பர்களை எழுப்பினோம்.

“எவன் டா அவன் நான் நமீதா கூட டூயட் பாடிக்கிட்டு இருக்கும் போது எழுப்பறது"

“டேய் வெண்ணை!! மாமா வந்திருகாரு!! பெரியவங்கன்னு மரியாதை கூட இல்லாம அப்படி என்னடா தூக்கம்!! எந்திரிடா"

எழுந்துட்டு தூக்க கலக்கத்தோட எல்லோரும் சுட்டும் முட்டும் பாக்குறானுங்க!! அப்புறம் திடீர்னு மாமாவ பார்த்துட்டு!!
“வணக்கமுங்கன்னா!!! எங்கன்ன இந்த பக்கம்??”

“ஆங்!! இந்த மாசம் மாமூல் பாக்கியை வசூல் பண்ணலாம்னு வந்தேன்!! போடா வென்று!! எங்கலே இம்புட்டு வேகமா போய்கிட்டு இருக்கீங்க??"
அப்படின்னு ஆரம்பிச்சு "நீ எங்க இருந்து வந்த??”,”எவ்வளவு நாளா இங்க இருக்க??”,”எப்போ திரும்பி போவ??”,”சிவாஜி படம் எப்போ ரிலீஸ் ஆகும்??”,”மும்தாஜ் வீட்டு அட்ரெஸ் என்ன??" அப்படி இப்படின்னு சர மாறியா கேள்விக்கனைகளால தாக்குறாரு!!

“வேணாம் !! வேணாம்!!! வலிக்குது!! அழுதுடுவேன்!!”அப்படின்னு டயலாக் எல்லாம் விட்டு அவரு கேள்வியை நிறுத்த வேண்டியதா போச்சு.

“சரி நீங்க எல்லாம் இங்கயே இருங்க,நீ மட்டும் என் பின்னால என் காருக்கு வாலே" அப்படின்னு சொல்லிட்டு மாமா பாட்டுக்கு வீரு நடை போட்டுக்கிட்டு போக ஆரம்பிச்சாரு. நானும் நல்ல பிள்ளை மாதிரி "சொறிங்க ஆப்பீஸர்" அப்படின்னு அவரு பின்னாடி போய் அவரு காரு பின் சீட்டுல போய் உட்கார்ந்தேன்.

அங்க போய்ட்டு என் லைசென்ஸ் வாங்கிட்டு அவிங்க அக்காக்கு ஒரு போன் போட்டு என்னத்தையோ பேசுனாரு. அவிங்க போன்லையே நம்மல ஓவரா கலாய்ச்சாங்க!!
“என்ன பேரு இது!! இந்த புள்ள பேர எப்படி சொல்லுவ?? ரே.... மா...ன்யூ...”
அவிங்க சொல்லி முடிக்கறதுக்குல்ல இதான் சாக்குன்னு அவங்களுக்கு தெரிஞ்ச கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி பிராக்டீஸ் பண்ணிக்கிட்டாங்க. நான் காதை பொத்திக்கிட்டேன்.
“அண்ணா!! அது சாமி பேருனா!! அப்படி எல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொல்லுங்கன்னா!!” அப்படின்னு சொன்னேன்.

“சரி சரி நீ அழுவாதலே!! நான் அவிங்க கிட்ட சொல்லுதேன்" அப்படின்னு மாமா அக்காவை கட் பண்ணிட்டாரு.

அதுக்கு அப்புறமா ஒரு நோட்டு புஸ்தகத்தை எடுத்துக்கிட்டு
“இந்தாலே டிக்கெட்டு, இதுல போட்டிருக்கற தேதிக்குள்ள இதுல சொல்லியிருக்கற காசை கட்டிடனும்!! சரியா"அப்படின்னு சொல்லிக்கிட்டு ஏதோ எழுத ஆரம்பிச்சாரு.

“அண்ணா!! அதுக்குள்ள எனக்கு கொடுக்காதீங்கன்னா!! நான் என் வீட்டுக்கு ஒரே பையன்.நான் டிக்கெட்டு வாங்கிட்டு போயிட்டா என் குடும்பத்தை யாரு பார்த்துப்பா?? உங்கள பார்த்தா எனக்கு என் செத்து போன அண்ணா மாதிரியே இருக்கு" அப்படின்னு கண்ண கசக்க ஆரம்பிச்சேன்.

“எலே...இந்த நெலமையிலும் உனக்கு கிலுகிலுப்பு கேக்குதாலே!!இந்தா சீக்கிரமா காசை கட்டிட்டு லைசென்ஸ் வாங்கிக்கோ,இப்போ எடத்த காலி பண்ணு"அப்படின்னு சீட்டு கிழிச்சு கொடுத்தாரு.

பொதுவா வேகமா போன டிக்கெட்டு தருவாங்கலே தவிர லைசென்ஸ் எல்லாம் வாங்கி வெச்சுக்க மாட்டாங்க!! ஆனா நான் கேள்வி எதுவும் கேக்காம வாங்கிட்டு வந்துட்டேன்.
கொஞ்ச தூரம் போன அப்புறமா எனக்கு பதிலா என் நண்பர் வண்டியை ஓட்ட ஆரம்பிச்சிட்டாரு. அடுத்த நாள் கோர்ட்டுக்கு போன் பண்ணி எவ்வளவு காசு கட்டணும்,எந்த அட்ரெஸுக்கு அனுப்பனும்ங்கறது எல்லாம் கேட்டுக்கிட்டேன். என்னுடைய அபராதத்தொகயை கேட்டுக்கிட்டு எப்படிடா உனக்கு மட்டும் இவ்வளவு கம்மியா வந்திருக்குன்னு எல்லோரும் கேட்டாங்க. எல்லாம் என் பால் வடியும் (?!) முகத்தின் மகிமை அப்படின்னு நானும் சீன் போட்டுக்கிட்டேன். அப்புறமா கொஞ்ச நாள் கழிச்சு ஒழுங்கா மணி ஆர்டர் அனுப்பினேன்,அவங்களும் ஒழுங்கா aலைசென்ஸ் அனுப்பி வெச்சாங்க.

நான் இங்க நகைச்சுவையா எழுதனுமேங்கறதுக்காக ஏதாவது எழுதினேனே தவிர என்ன புடிச்ச போலீசும் சரி,கோர்ட்டுல பேசின ஆன்டியும் சரி ரொம்ப சாதாரணமா,மரியாதையா பேசினாங்க. எனக்கு என் தாய் நாடு ரொம்ப பிடிக்கும்னு இருந்தாலும் சில சமயங்களில் நம்ம ஊரு இந்த ஊரு மாதிரி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு நெனைச்சிருக்கேன். அது மாதிரி என்ன நினைக்க வைத்த நிகழ்வுகளில் இந்த நிகழ்வும் ஒன்னு.

45 comments:

ஷைலஜா said...

மாட்டிகிட்ட அனுபவம் அருமையா சிரிக்கவைக்குது! நம்ம ஊர்லயும் சில இடங்களில் இப்படியும் இருப்பாங்க..
ஆமா இதென்ன வ வா ச க்கு சமர்ப்பணமா?:)
ஷைலஜா

Dreamzz said...

ROFL! சரி காமெடி தலை! எப்படி இப்படி எல்லாம் மாட்டறீங்க!

Dreamzz said...

//எதுவும் கிடைக்கலைன்னு தூங்கிட்டு இருந்த என் பாட்டியை உருட்டி விட்டு ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்னா பாத்துக்கோங்களேன்//
ஹி ஹி! இருந்தாஅலும் ஓவர் ரவுசு!

Dreamzz said...

//எவன் டா அவன் நான் நமீதா கூட டூயட் பாடிக்கிட்டு இருக்கும் போது எழுப்பறது//

டூயட் பாட வேற நல்ல பொண்ணு கிடைக்கலயா! ;)

Anonymous said...

யாரோ சொன்னங்க.அவங்களுக்கு காமெடி எல்லாம் வராதுன்னு.ஆனால் இங்கே வந்து பார்த்தால் எல்லாம் தலை கீழாக இருக்கின்றது.சார் நீங்க ஏன் அதிகமாக பொய் சொல்லுகின்றீர்கள்

Anonymous said...

I enjoyed this post very much.I laughed so hard. Excellent sense of humor.

Selvi

CVR said...

@ஷைலஜா
ரொம்ப நாளாவே இதை எழுதனும்னு நினைத்துக்கொண்டு இருந்தேன்.
இப்போ வா வா சங்கத்தினால் எழுதுவதற்கு சாக்காக அமைந்தது!! :-)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

@Dreamzz
//டூயட் பாட வேற நல்ல பொண்ணு கிடைக்கலயா! ;) //
அது கனவு கண்டவனைதான் கேட்கனும். நானா இருந்தா அது நிச்சயமா நமிதாவா இருக்காது!! :-)

@துர்கா
//யாரோ சொன்னங்க.அவங்களுக்கு காமெடி எல்லாம் வராதுன்னு.ஆனால் இங்கே வந்து பார்த்தால் எல்லாம் தலை கீழாக இருக்கின்றது.சார் நீங்க ஏன் அதிகமாக பொய் சொல்லுகின்றீர்கள் //
சும்மா ஒரு முயற்சி தான் துர்கா அக்கா!! உங்களை மாதிரி பெரியவங்க சொன்னா மேலும் டெவெலப் பண்ணலாம்!! :-)

@செல்வி
//I enjoyed this post very much.I laughed so hard. Excellent sense of humor.
//
நன்றி செல்வி
பதிவுக்கு அடிக்கடி வருகை தாருங்கள்!! ;-)

துளசி கோபால் said...

:-))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கழுதை.. ந்யூயார்க் தானே போயிட்டா போச்சு//

CVR...பாருங்க,
நியூயார்க்கை இப்படி வையலாமா?
அதான் நீங்க ஆத்தா கோவத்துக்கு ஆளாயிட்டீங்க! :-)
காப்-அண்ண சாமியை ஒங்க பின்னால ஏவி வுட்டுட்டா!

நியூயார்க் பச்சைக் கண்ணகி ஆத்தா கோவத்த போக்கணும்னா, இன்னொரு தபா வாங்க! வந்து பொங்க(லு) வச்சிட்டு போங்க! முன்னாடியே ஆத்தாவின் சிஷ்யன் நம்ம கிட்ட சொன்னீங்கனா ஏற்பாடு பண்ணி வைக்கறேன்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எவனாவது மாட்டுனான்னா இரக்கமே இல்லாம ஓட்டி தள்ளிடுவேன். Gtalk-ல என் கிட்ட மாட்டி இருக்கற தமிழ்மண நண்பர்களே...//

ஆகா, ஜிடாக்ல உங்க கிட்டே பேசலாம்னு பாத்தேனே! :-)

வசனம் எல்லாம் பிச்சு உதற்ரீங்க! நல்லாச் சிரிச்ச்சேன் CVR! நன்றி!

Premma said...

Ore Comedy ponga...

Premma said...

ஏம்பா! இங்க கூட போலீஸ மாமான்னு தான் சொல்லனுமா. uncle ன்னு சொல்லுங்க.

CVR said...

@துளசி
நன்றி!! :-)

@கண்ணபிரான்
நீங்க சொல்லுறது உண்மைதான்,அதனால தான் லிபர்டி தீவூல கூழ் ஊற்றி,உங்களுக்கு மொட்டை போட்டு,எல்லிஸ் தீவு வரைக்கும் ஃபெரியிலேயே அங்க பிரதட்சணம் பண்ணனும்னு அப்பவே வேண்டிக்கிட்டேன். தெய்வ குத்தம் ஆகறதுகுள்ள வேண்டுதலை நிறைவேர்த்தனும்!! :-D

@பிரேமா
நன்றி பிரேமா, அடிக்கடி பதிவு பக்கம் வந்துட்டு போங்க!! :-)

Syam said...

நல்லா காமெடியா எழுதி இருக்கீங்க...வாழ்த்துக்கள் :-)

CVR said...

@Syam
நன்றி நாட்டாமை!!
மொத முறையா பதிவுக்கு வந்திருக்கீங்க!!

இனிமே தினமும் எங்களையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க!! :-)

Arunkumar said...

வ.வா சங்கத்துல இந்த பதிவ பாத்துட்டு வந்தேன்.

செம காமெடி.. நல்ல நக்கலா எழுதி கலக்கிட்டீங்க.

அந்த ரெண்டாவது படம் சூப்பர் :)

Arunkumar said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் CVR

எனக்கும் இதே மாதிரி நடந்துர்க்கு.
நானும் இதப்பத்தி ஒரு பதிவு போட்டுர்க்கேன்.. நேரம் கெடச்சா பாருங்க மக்கா

http://findarun.blogspot.com/2006/10/cincinnati.html

CVR said...

@அருண்
நன்றி அருண்
உங்க வலைப்பதிவுக்கு போய் பார்த்தேன்!! பதிவு எல்லாம் நல்லா ரசிக்கும்படியா இருக்கு!!
வாழ்த்துக்கள்!! :-)

காட்டாறு said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க! இந்த அனுபவும் வெளிநாட்டுக்கு போன அனேகம் பேருக்கு இருக்கும். அதுக்கு காரணம் வழ வழ ரோடும், அதுக்கேத்த ஸ்பீடும்ன்னு நெனைக்கிறேன்.

MyFriend said...

அண்ணா, கலக்கிட்டீங்க..

வ வா சங்க போட்டிக்கு இதை அனுப்புங்க.. :-)

Anonymous said...

Thambi...

I got 1 ticket in 3rd month of landing Paid around $300 and Caught above 100 M/H (6 cylinder..sports car...Convertable...California roads....Bachelor...Designated driver others donot have license).......

Same begging down me to $300 otherwise handcuff and jail a night.

I felt terrible on that day (including restless leg syndrome for an hour (Thodai nadungichu)but next become comedy (except the money)next day.

Sweat dreams sorry sweet dreams

Heeeee heeeee .heeeee
Your Senior and Still driving 90s with Radar detector

CVR said...

@காட்டாறு
//அதுக்கு காரணம் வழ வழ ரோடும், அதுக்கேத்த ஸ்பீடும்ன்னு நெனைக்கிறேன்.//

நீங்க சொல்லுறது சரிதான் தலைவா. இந்த ரோட்டை பார்த்து தான் மனசு கட்டுக்கடங்காத கெடா மாதிரி துள்ளி குதிச்சுடுது!! :-)

@மை ஃபிரண்ட்
//அண்ணா, கலக்கிட்டீங்க..

வ வா சங்க போட்டிக்கு இதை அனுப்புங்க.. :-)
//
எழுதுனதே அதுக்குதானே!! ஏற்கெனெவே அனுப்பியாச்சு மேடம்!! ;-)

@Anony
//I got 1 ticket in 3rd month of landing Paid around $300 and Caught above 100 M/H//
நான் கூட 108-ல போய்ட்டிருந்த போதுதான் கணக்கு பண்ணதா மாமா கூட சொன்னாரு.
இத்தனைக்கு நான் பிடிபட்டது ஒகாயோ மாநிலத்துல. அங்க வேக அளவு 65 MPH தான்!!
அதாவது வரையறுக்கப்பட்ட அளவோட 43 MPH அதிகமா ஓட்டி மாட்டியிருக்கேன்.
அன்னிக்கு என்னை லாடம் அடிக்காம விட்டதே பெருசுன்னு நினைக்கிறேன்!! :-D

மு.கார்த்திகேயன் said...

/ ஒரு நாள் ஓட்டறதுக்கு எதுவும் கிடைக்கலைன்னு தூங்கிட்டு இருந்த என் பாட்டியை உருட்டி விட்டு ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்னா பாத்துக்கோங்களேன்//

இங்கே ஆரம்பிக்கிற ரகளையான வார்த்தை விளையாடல் பதிவோட முற்றுபுள்ளிவரை இருக்கிறது CVR

மு.கார்த்திகேயன் said...

/ப்போன்னு பாத்து பயத்துல என்னுடைய குல தெய்வம் யாருங்கறதே எனக்கு மறந்து போச்சு. //

அல்டிமேட் CVR.. மேல படிச்சிட்டு வர்றேன்

மு.கார்த்திகேயன் said...

// அது மாதிரி என்ன நினைக்க வைத்த நிகழ்வுகளில் இந்த நிகழ்வும் ஒன்னு.
//

ரிப்பீட்டே! இந்த மாதிரி விஷயங்கள் எனக்கும் இங்கே பிடிச்சது தான் CVR

gils said...

:D :D idhey mari arun oru post potrunthar...maapu pinnadi copu vachitaanya aapunu...kalaichitrunthar.//anga pona ithelam automatica nadakum pola :D

gils said...

ada..arunum inga varara :Dantha posta thaan sonen..aana paatiya urutara materlam 2 muchunga..room poatu yosipeengalo :D

CVR said...

@கார்த்தி
//இங்கே ஆரம்பிக்கிற ரகளையான வார்த்தை விளையாடல் பதிவோட முற்றுபுள்ளிவரை இருக்கிறது CVR
//
நன்றி தலைவா


@கில்ஸ்!!
விதிதியாசமான பேரா இருக்கே தலைவா(வி??)

//aana paatiya urutara materlam 2 muchunga..room poatu yosipeengalo :D //
ஹி ஹி
சின்ன வயசுல எங்க அம்மா." அப்படி என்னடா எல்லாத்தையும் உருட்டுறதுன்னு பழக்கமோ,விட்டா யாராவது தூங்கிட்டிருந்தா அவங்களையும் உருட்டி வண்டி ஓட்ட ஆரம்பிச்சிருவ போல இருக்கே"
அப்படின்னு சொல்லுவாங்க!!
அதை நியாபகம் வந்துச்சு,அப்படி கபால்னு புடிச்சு பதிவு பண்ணியாச்சு!! :-)

SathyaPriyan said...

பாத்துங்க. மாமா கிட்ட ரொம்ப வச்சுக்க கூடாது. எங்க ஊருல 90 mph மேல போய் மாட்டிக்கிட்டா அது ஒரு criminal offence. ஒரு நாள் jail லே இருக்கனும். சங்கு தான் :-)

CVR said...

@சத்யப்ரியன்
வருகைக்கு நன்றி தலைவா!!
நல்ல காலம் நான் உங்க ஊருல மாட்டல,இல்லைனா நான் போன வேகத்துக்கு என்னை தூக்குலையே போட்டிருப்பாங்க!! :-D

SathyaPriyan said...

//
நல்ல காலம் நான் உங்க ஊருல மாட்டல,இல்லைனா நான் போன வேகத்துக்கு என்னை தூக்குலையே போட்டிருப்பாங்க!! :-D
//
அத்தோட இல்ல தலைவா! அப்புரம் நீங்க வேலை தேடும் போது, வேறு ஏதாவது லோன் அப்ளை பன்னும் போது,

Have you been convicted for any criminal offence?

அப்படீங்கர கேள்விக்கு "Yes" அப்படின்னு பதில் சொல்லி, History of the accident, Geography of the incident எல்லாம் சொல்லனும். தேவையா?

CVR said...

@சத்தியப்ரியன்
//அத்தோட இல்ல தலைவா! அப்புரம் நீங்க வேலை தேடும் போது, வேறு ஏதாவது லோன் அப்ளை பன்னும் போது,

Have you been convicted for any criminal offence?

அப்படீங்கர கேள்விக்கு "Yes" அப்படின்னு பதில் சொல்லி, History of the accident, Geography of the incident எல்லாம் சொல்லனும். தேவையா?
//

ஆகா!!
நல்ல காலம் நான் உங்க ஊருல மாட்டலை!!
இனிமே ஜாக்கிரதையா இருக்க வேண்டியது தான்!! :-)

வெட்டிப்பயல் said...

கலக்கல் போஸ்ட் தலைவா...

திரும்பவும் சொல்றேன்... ஓவர் தன்னடக்கம் உடம்புக்காகாது :-)

உங்களுக்கு இனிமே நகைச்சுவையா எழுத தெரியாதுனு சொன்னீங்கனா அடுத்த டெவில் ஷோ உங்களுக்கு தான் :-)

CVR said...

@வெட்டி
//உங்களுக்கு இனிமே நகைச்சுவையா எழுத தெரியாதுனு சொன்னீங்கனா அடுத்த டெவில் ஷோ உங்களுக்கு தான் :-) //

ஆகா!!
உண்மையை சொன்னாலும் ஒத்துக்க மாட்டேங்குறாங்கையா!! :D

மனதின் ஓசை said...

மிக அழகான நடை.. நகைச்சுவை ததும்பும் பதிவு. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்..

Anonymous said...

intha mokkai post ku 34 comment ah ... Vetti pasanga da Neenga

Arunkumar said...

கலக்கிட்டீங்க சீ.வி.ஆர் :)
உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

ஷைலஜா said...

பாத்தீங்களா அக்கா முதல் மடல் போட்டு ஆசிர்வாதம் செய்த பலன் பரிசு கிடைச்சாச்சு! வாழ்த்துகள் ப்ரதர்!

கண்மணி/kanmani said...

வாழ்த்துக்கள் இப்படி அடிக்கடி மாமாவிடம் மாட்டி போட்டிகளில் ஜெயிக்க வாழ்த்துக்கள்.

இராம்/Raam said...

கலக்கல் போஸ்ட் CVR....


முதலிலே படிச்சப்பவே கமெண்ட் போட்டு இருக்கனும்.. ஹி ஹி

கொஞ்சம் வேலை இருந்தானாலே முடியலை... :)

CVR said...

@மனதின் ஓசை
வாழ்த்துக்களுக்கு நன்றி தலைவா!! :-)

@மோனலிசா
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விஷயங்கள் பிடிச்சிருக்கும்!! என்ன பண்ணுறது!! :-)

@அருண்
நன்றி,உங்க பதிவையும் நான் ரொம்ப விரும்பி படிச்சேன். வாழ்த்துக்கள்!! :-)

@ஷைலஜா
உண்மைதான் அக்கா. இனிமே இதே மாதிரி ஒவ்வொரு பதிவுக்கும் மொதல்ல வந்து ஆசீர்வதிச்சிட்டு போங்க!! :-)

@கண்மனி
ஐயோ அக்கா!! உங்களுக்கு என் மேலே ஏன் இந்த கொலைவெறி?? ஒரு தடவை மாமா கிட்ட மாட்டிக்கிட்டது போதாதா?? :-)

@இராம்
நன்றி அண்ணாத்த!! :-)

cdk said...

இந்த incidentukku அப்புறம் ரோட்டுல தானாக்கார பாத்தாலே சடன் பிரேக் அடிச்சிருப்பீங்களே???

ALIF AHAMED said...

இரக்கமே இல்லாம ஓட்டி தள்ளிடுவேன். Gtalk-ல என் கிட்ட மாட்டி இருக்கற தமிழ்மண நண்பர்களே இதற்கு சாட்சி.
//

ஆஹா இது தெரியாம நான் வேற ஹாய் சொல்லி தொலைஞ்சிட்டேன்...:)

Santhosh said...

சூப்பரு தம்பீஈஈஈ... புதரகத்துல ஒரு சிஷ்யனை உருவாக்காம போறோமேன்னு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தேன்.. கலக்கிட்டே.. அண்ணோட பேரை காப்பாத்தா.. நீ இருக்கேங்கிற சந்தோசத்துல நான் ஊருக்கு நிம்மதியா போறேன்பா..

தமிழ் said...

//நம்ம கையில இவ்வளவு புதுசா பெருசா காரு கிடச்சதுனால என் கால் எதுவும் தரையிலையே இல்லை,ஆக்சிலேட்டருல தான் இருந்துச்சு (ஹி ஹி).//

புது காரா இருந்தாலும் சரி... பெரிய காரா இருந்தாலும் சரி.... பொம்ம கார தவிர எந்த கார்ல்லயும் கால தரையில வச்சு ஓட்டமாட்டாங்களே.... ;)))

ரொம்ப காலத்தாமதமா படிச்சிருக்கேன்.... ஆனா பயங்கர நகைச்சுவையா இருந்துச்சு.... நினச்சுப் பார்க்கவே பயங்கர சிரிப்பா வருது... இன்னிக்கு தூங்கனா மாரிதான்....;))

தலைப்ப படிச்சதும் நீங்க உங்க மாமா காரத்தான் மஃப்ட்டில ஓட்டிகினு போனீங்களோ ன்னு நினச்சேன்.... அப்புறந்தான் புரிஞ்சது... ;))

Related Posts Widget for Blogs by LinkWithin