இது போதும் எனக்கு

இது போதும் எனக்கு
------------------
மாலை நேரம்,
கடற்கரை ஓரம்,
மடி தனில் அவள்,
ஒளிந்து கொள்ளும் நிலவு

இது போதும் எனக்கு


இருட்டிருந்தும் கண்களில் ஒளி,
மறைத்திருந்தும் மறக்காத மேனி,
அணைத்திருந்தும் அகலாத பிரிவு,
அனைத்திருந்தும் தீராத மோகம்.

இது போதும் எனக்கு


தனியாக ஒரு தீவு,
தண்ணீரில் விளையாடும் கால்கள்,
கரம் பிடிக்கும் மென்மை,
கண் எதிரே குளுமை

இது போதும் எனக்கு


வான் முழுதும் மேகம்,
வெளி முழுதும் மழை,
கையருகில் அவள் துணை,
ஜன்னல் வழி சிறு தூறல்

இது போதும் எனக்கு


வெளிநாட்டில் பிள்ளைகள்,
லேசாக மூட்டு வலி,
எனக்குத் துணை அவள்,
அவளுக்குத் துணை நான்

இது போதும் எனக்கு

29 comments:

MyFriend said...

//இது போதும் எனக்கு//

இது போதும் இது போதும்ன்னு சொல்றீங்க! இன்னும் நிறைய நீங்கள் ஆசை படலாம். கிடைக்கும்.. :-)

சுந்தர் / Sundar said...

இது போதும் எனக்கு -- கவிதை படித்த நிறைவு

SathyaPriyan said...

//
வெளிநாட்டில் பிள்ளைகள்,
லேசாக மூட்டு வலி,
எனக்குத் துணை அவள்,
அவளுக்குத் துணை நான்
//
அப்பா அம்மா நியாபகம் வந்துடுச்சு தலைவா.

யோசிப்பவர் said...

//ஒலிந்து கொள்ளும்//
//அனைதிருந்தும் தீராத //

வேண்டுமென்றே செய்யப்பட்ட பிழைகளா?;-)
(ஸ்மைலி போட்ருக்கிறதை கவனிங்க!!)

CVR said...

@மை ஃபிரண்ட்
வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்

@சுந்தர்
நன்றி தலைவரே

@சத்தியப்பிரியன்
நான் எதையோ நினைச்சுக்கிட்டு எழுதினா,உங்களுக்கு எதுவோ நியாபகம் வந்திருச்சே தலைவா!! ;-)

@யோசிப்பவர்
எழுத்து பிழைகளை சரி செய்து விட்டேன், சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. :-)

நாகை சிவா said...
This comment has been removed by the author.
நாகை சிவா said...

போதும் என்ற மனம் பொன் செய்யும் மருந்து என்பதை உணர ஆரம்பித்த மாதிரி இருக்கே, தூங்கி எழுந்துறீங்க.... சரியா போயிடும். புது தேவைகள் முன் வந்து நிற்கும்.

நாகை சிவா said...

//நான் எதையோ நினைச்சுக்கிட்டு எழுதினா,உங்களுக்கு எதுவோ நியாபகம் வந்திருச்சே தலைவா!! ;-)//

அதானே... நல்ல பாதி னு சொல்லி இருந்தா அவரு எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பார்.

இராம்/Raam said...

அடடா.... கவிதைகள் அழகாக போதும் போதும் என்கிற அளவுக்கு சிணுங்கிறது :)

Premma said...

ada ada ada enna feeling?
soooooper'a irukkunga...

கோபிநாத் said...

ம்ம்ம்.....கவிதையில் போதும்ன்னு சொல்லிட்டிங்க...நிஜத்தில் ? ;-)

Dreamzz said...

//தனியாக ஒரு தீவு,
தண்ணீரில் விளையாடும் கால்கள்,
கரம் பிடிக்கும் மென்மை,
கண் எதிரே குளுமை

இது போதும் எனக்கு//


அட்ரா அட்ரா! கவித கலக்கல்!

Dreamzz said...

//வெளிநாட்டில் பிள்ளைகள்,
லேசாக மூட்டு வலி,
எனக்குத் துணை அவள்,
அவளுக்குத் துணை நான்

இது போதும் எனக்கு //

எனக்கும் இது போதும் :)
ஆழமான கருத்து. நன்றி!

மு.கார்த்திகேயன் said...

/மடி தனில் அவள்,
ஒளிந்து கொள்ளும் நிலவு
//

அவள் இருப்பதால் பயந்து விட்டதோ நிலவு.. போட்டிக்கு ஒரு நிலவு, கறைகளேதும் இல்லாமல் என்று, CVR

மு.கார்த்திகேயன் said...

/வெளிநாட்டில் பிள்ளைகள்,
லேசாக மூட்டு வலி,
எனக்குத் துணை அவள்,
அவளுக்குத் துணை நான்
//

எனக்கும் இது போதும்..

நல்ல உணர்ச்சியான கவிதை CVR

மு.கார்த்திகேயன் said...

/கையருகில் அவள் துணை,
ஜன்னல் வழி சிறு தூரல்//

நல்லாத் தான்யா யோசிக்கிறீங்க

மு.கார்த்திகேயன் said...

சிம்பிளா இருந்தாலும் கலக்கல் கவிதை CVR

CVR said...

@புலி
எல்லாம் கனவுகள் தான்!! நம் ஆசைகள்,கனவுகள் இவைதான் ஒரு மனிதனை வாழ வைக்கிறது இல்லையா!! :-)

@இராம்
பாராட்டுக்களுக்கு நன்றி ராம்!! :-)


@பிரேமா
சும்மாதான் ஒரு காதல் கவிதை எழுதலாம்னு ஒரு சின்ன முயற்சி.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி !! :-)

@கோபிநாத்
போதும்னு சொல்லுறா மாதிரி வேணும்னு சொல்லியிருக்கேன்,புரிஞ்சுதா??? :-)

@ட்ரீம்ஸ்
//எனக்கும் இது போதும் :)
ஆழமான கருத்து. நன்றி! //
வாழ்க்கையில கிடைக்கற பல சின்ன விஷயங்கள் நமக்கும் போதுமானது,ஆனா நாமதான் தேவை இல்லாம இது வேனும் ,அது வேணும்னு நம்மளையே கஷ்டப்படுத்திக்கரோம்.
வாழ்த்துக்களுக்கு நன்றி தலைவா!! :-)

@கார்த்தி
//அவள் இருப்பதால் பயந்து விட்டதோ நிலவு.. போட்டிக்கு ஒரு நிலவு, கறைகளேதும் இல்லாமல் என்று, CVR //
இந்த கவிதையில் பல விஷயங்கள் மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கும்,அவரவர் அவரவரின் கற்பனைக்கேற்றவாரு அர்த்தங்களை அறிந்து கொள்ளலாம். இந்த வரியை பொருத்த வரை. மடி தனில் அவள் இருக்கிறாள், இங்கிதம் கருதி வெக்கப்பட்டுக்கொண்டு நிலா ஒளிந்து கொள்கிறது என்ற அர்த்தத்தில் நான் எழுதி இருந்தேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கார்த்தி!! :-)

Anonymous said...

அக்கா வந்துட்டேன்!தம்பிக்கு ரொம்ப நல்ல மனசு.எல்லாம் போதும் போதும் என்று சொல்கின்றீர்கள்.பலர் போதவில்லை என்று இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

//வெளிநாட்டில் பிள்ளைகள்,
லேசாக மூட்டு வலி,
எனக்குத் துணை அவள்,
அவளுக்குத் துணை நான்

இது போதும் எனக்கு ///

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ;-)

Anonymous said...

// நாகை சிவா said...
போதும் என்ற மனம் பொன் செய்யும் மருந்து என்பதை உணர ஆரம்பித்த மாதிரி இருக்கே, தூங்கி எழுந்துறீங்க.... சரியா போயிடும். புது தேவைகள் முன் வந்து நிற்கும். ///

ஒரு சிலர் பேச்சை எல்லாம் கேட்ககூடாது தம்பி.ஞாபகம் வைச்சுகோங்க ;-))))

Anonymous said...

உங்கள் இந்தக் கவிதை படிக்கும் போது.. எனக்கு
வைரமுத்துவின் கவிதையும் ஞாபகம் வந்தது..

".......

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஐன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்
இதுபோதும் எனக்கு..

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நான்...
இதுபோதும் எனக்கு..

......""

உங்கள் கவிதை கூட அழகாய் இருக்கிறது..


நேசமுடன்..
-நித்தியா

CVR said...

@நித்தியா
நன்றி நித்தியா !!!

"பெய்யென பெய்யும் மழை" கவிதை தொகுப்பில் நீங்கள் குறிப்பிட்ட வைரமுத்துவின் அந்த கவிதையின் சாயல் இதில் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் அந்த கவிதை நான் என் வாழ்க்கையில் மிகவும் ரசித்த கவிதைகளில் ஒன்று. என் மனதை பெறும் பாதிப்பை ஏற்படுத்தியதால் என்னையும் அறியாமல் இந்த கவிதை மூலம் அதன் நடையும் கருத்துக்களும் வெளி வந்து விட்டது!! :-)

நான் கவிதை எழுதியதற்கான சூழமைவு (context) இதோ :-)

Anonymous said...

Awsome dude....great words :-) nalla iruku....

துளசி கோபால் said...

////வெளிநாட்டில் பிள்ளைகள்,
லேசாக மூட்டு வலி,
எனக்குத் துணை அவள்,
அவளுக்குத் துணை நான்

இது போதும் எனக்கு //

இந்த அவன் எல்லாம் அவ(ர்)ன்.

நல்லா இருக்குக் கவிதை. இது போதும் எனக்கு.

ஜி said...

attakaasam CVR.... romba rasitchu padithen :)))

CVR said...

@துளசி அக்கா மற்றும் ஜி
வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)

இம்சை அரசி said...

இதை படிக்கும்போது பெய்யென பெய்யும் மழை ஞாபகம்...

ரொம்ப நல்லா இருக்குங்க CVR :)))

நளாயினி said...

nalla rasanai unkaluku.
vaalthukal.

Venkata Ramanan S said...

Wowww!!! Nice 1:) Kudos :)

Related Posts Widget for Blogs by LinkWithin