பார்க்காத அதிசயங்கள் - பாகம் 2 (கடைசி பாகம்)

இந்த கதையின் முதல் பகுதியை படிக்க இங்கே சுட்டவும்!!

கொஞ்ச நேரம் தயங்கி தயங்கி கடைசியா மீட் பண்ணலாம்னு ஒத்துக்கிட்டான். என் வீட்டு பக்கத்துல இருக்கற ஒரு பார்க்குல மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணோம். அவன் எங்க இருக்கான்னு என் கிட்ட சொல்லவே இல்லை.
“உன் மொபைல் நம்பர் குடு" நான் கேட்டேன்.
“நீ உன் நம்பர் குடு நான் மிஸ்டு கால் தரேன்" அப்படின்னு சொன்னான்.

சாட்லையே என் கைப்பேசி நம்பர டைப் அடிச்சேன். கொஞ்ச நேரம் கழிச்சு அவன் கிட்ட இருந்து ஒரு மிஸ்டு கால் கிடைச்சுது,என் கைப்பேசியில அதை பதிச்சு வெச்சுக்கிட்டேன்.

அந்த சனிக்கிழமை ஒரு 9 மணிக்கா எழுந்தேன். முந்தைய நாள் எங்க மீட்டிங் பத்தி அவன் கிட்ட நியாபகப்படுத்தி இருந்தேன்.ஏதோ மறந்து போனா மாதிரி "நாளைக்கு மீட் பண்லாம்னு ப்ளான் பண்ணி இருக்கோம்ல,ஆமாம்,ஆமாம்" அப்படின்னு மழுப்பி இருந்தான்.
எனக்கு ரொம்ப பிடிச்ச மெரூன் சூட்டிதார் போட்டுக்கிட்டேன். லைட்டா மேக் அப் போட்டுகிட்டு லிப்ஸ்டிக் போட்டுகிட்டேன். அவன கால் பண்ணலாம்னு நிறைய தடவை தோனிச்சு ஆனா ஒரு மாதிரி இருந்ததுன்னு பண்ணலை. அவனே கிளம்பறதுக்கு முன்னாடி கால் பண்ணுவான்னு நினைச்சேன்.அவன் கால் பண்ண அப்புறம்தான் கிளம்பனும் கூட நினச்சேன். ஆனா அவன் கால் பண்ணவே இல்லை. நான் அவன்கூட இது வரைக்கும் பேசினதே இல்லைங்கறதுனால கால் பண்றதுக்கு தயக்கமா இருந்தது. பண்ணி தான் பார்க்கலாமேன்னு அவன் நம்பர் டயல் பண்ணேன்,ஆனா லைன் கனெக்ட் ஆகறதுக்கு முன்னாடி கட் பண்ணிட்டேன். போலாமா வேண்டாமான்னு ஒரே குழப்பமா போயிருச்சு!! இருந்தாலும் ஏதோ ட்ரெஸ் எல்லாம் பண்ணிக்கிட்டோமே,போய்தான் பார்ப்போமேன்னு செருப்பை போட்டுக்கிட்டு கிளம்பிட்டேன்.

எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பூங்காவை ஒரு பூங்கான்னு சொல்றத விட ஒரு விளையாட்டு திடல்னு சொல்லலாம். சும்மா பேருக்கு அங்கங்க நாலஞ்சு மரங்கள் இருக்குமே தவிர அது ஒரு பெரிய மைதானம் மாதிரி தான். சுத்தி முள் கம்பி போட்டிருக்கும்,பசங்க எப்போ பாத்தாலும் கிரிக்கெட் விளையாடிட்டு இருப்பாங்க. மைதானத்தை சுத்தி காம்பவுண்ட் ஒட்டினா போல அங்கங்க பென்ச் எல்லாம் போட்டிருப்பாங்க.நான் அன்னிக்கு போன சமயத்துல கூட பசங்க இரண்டு மூனு கோஷ்டிகளா கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தாங்க.என் கிட்ட அவன் முன்னாடியே நான் நீல கலர் கோடு போட்ட சட்டையும்,வெளிர் நீல ஜீன்ஸும் போடுட்டு வருவேன்னு சொல்லி இருந்தான். நானும் அந்த டிரெஸ் போட்டுக்கிட்டு யாராவது இருக்கங்களான்னு பார்த்தேன்,அப்படி யாருமே இல்லை. பேசாம ஒரு பென்ச்ல போய்ட்டு உக்காந்துகிட்டு அவனுக்காக காத்திருக்க ஆரம்பிச்சேன். எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க!! என்னடா ஒரு பொண்ணு தனியா பென்ச்ல உக்காந்துக்கிட்டு இருக்காலேன்னு. எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. ,உடனே கைப்பேசியை எடுத்து அவன் நம்பருக்கு ஒரு கால் போட்டேன். மணி மட்டும் அடிச்சுட்டே இருந்துச்சு ஆனா அவன் எடுக்கவே இல்லை. எனக்கு ஒரே அவமானமா போய்டுச்சு , அழுதுகிட்டே வீட்டுக்கு திரும்பி வந்தேன். ஆனா யாருக்கும் காட்டிக்கல. ரூமுக்கு வந்த அப்புறம் நேர படுக்கையில போய்ட்டு விழுந்துட்டேன். நடுவுல அறை நண்பி ஒருத்தி என்ன ஆச்சுனு கேட்டா. அவ கிட்ட உடம்பு சரியில்லைனு பொய் சொல்லிட்டு கதவ மூடிக்கிட்டேன்.மத்தியாணம் சாப்பாட்டுக்கு கூட போகல.

சாயங்காலம் எழுந்து முகம் கழிவிட்டு ஒரு மாற்றமா இருக்கும்னு வெளியில கிளம்பினேன். என்னையும் அறியாமல் என் கால்கள் பிரவுசிங் சென்டர்தான் போச்சு. மொதல்ல மெசஞ்சர்ல அவன் இருக்கானான்னு தான் பார்த்தேன் ஆனா அவன் இல்லை.
மின் அஞ்சல் பெட்டியில் நிறைய மின் அஞ்சல்கள் வந்திருந்தது. அதுல ஒன்னு அவன் கிட்ட இருந்து வந்திருந்தது. அடிச்சு புடிச்சு அதை திறந்தேன்.

“ஹை!
நீ என் மேல ரொம்ப கோபமா இருப்பேன்னு தெரியும். எனக்கு என்ன தண்டனை தரலாம்னு நீ யோசிக்கறதுக்கு முன்னாடி நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு.
நான் இதுக்கு முன்னாடி நிறைய பேர்கூட நட்பா இருந்திருக்கேன். மொதல்ல சந்திக்கும் போது ரொம்ப அன்பா இருப்பாங்க. அப்புறம் நாளாக நாளாக நெருக்கம் கொறைஞ்சுக்கிட்டே வரும் கடைசியிலே என்னை பார்த்தாலே ஒதுங்கி போகற அளவுக்கு போய்டும். அது ஏன்னு எனக்கு தெரியாது ஆனா என்னை பொருத்த வரைக்கும் எப்பவுமே இப்படித்தான் நடக்குது. ஆரம்பத்துல ரொம்ப நட்பா இருக்கறவங்க எல்லாம் போக போக என்னை சந்திச்ச அப்புறம் என்னை விட்டு விலகி போக ஆரம்பிச்சுடுவாங்க. ஏதோ என்னை பார்த்த உடனே அவங்க மனசுல நினைச்சு வெச்சிருந்த உயர்ந்த இடத்துல இருந்து நான் விழுந்தா மாதிரி.இன்னி வரைக்கும் இப்படிதான் நடந்துட்டு வருது.
உனக்கே தெரியும் நானும் நீயும் தற்செயலா தான் சந்திச்சோம். ஆனா வேற யார்கிட்டேயும் இல்லாத அளவுக்கு எனக்கு உன்னை பிடிச்சிருந்தது. உன் கூட கதை அடிக்க பிடிச்சிருந்தது. நமகுள்ள இருக்கற கணிணி நட்பு எனக்கு சௌகரியமா இருந்தது.
நாம உலகத்துல பல பேர பார்க்கிரோம ஆனா எல்லாருமே நம்ம கூட நெருங்கிய நண்பர்கள் ஆகிடறது இல்லை. அதே போல எல்லோருமே எதிரிகளாவும் ஆகறது இல்லை. நம்ம விருப்பு வெறப்புக்களுக்கு ஏத்தா மாதிரி ஏதாவது தூரத்துல நம்ம நட்பு செட்டில் ஆகிடும். அந்த தூரத்துக்கு மேல நாம நெருங்க ஆசை பட்டோம்னா தொந்தரவுதான்.
நாம இருக்கற பூமி கூட சூரியனை விட்டு சரியான தூரத்துல இருக்கறதுனால தான் மரம்,செடி கொடியெல்லாம் உயிரோட இருக்கு. இப்போ இருக்கறதுக்கு கொஞ்சம் முன்ன பின்ன இருந்துச்சுனா உலகத்துல உயிர்களே இருக்க முடியாது.
எனக்கு என்னமோ நாம் இப்போ இருக்கற தூரம்தான் சரியான தூரமா படுது. இதை விட்டுட்டு நாம பேருக்காக மீட் பண்ணி நெருங்க ஆரம்பிச்சோம்னா நம்ம நட்புக்கு ஒத்துக்காது.

நம்ம மீட் பண்ணோம்னா முன்ன இருக்கறா மாதிரி எப்பவுமே இருக்க முடியாது. உனக்கு நான் குள்ளமா இருக்கறது பிடிக்காம போகலாம்,இல்ல என் குரல் பொம்பள குரல் மாதிரி இருக்கலாம்,எனக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனையா இருக்கலாம்,இப்படி ஆயிரம் விஷயங்கள் இருக்கலாம். இதனால முன்ன இருந்தா மாதிரி பிரமிப்போ மரியாதையோ இல்லாம போயிடும். எனக்கு உன் கூட இப்போ இருக்கற நட்பு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு,அதை நான் எந்த விதத்துலயும் இழக்க விரும்பல.
நான் சொல்றது எல்லாம் உனக்கு சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கலாம். ஆனா நீயே நான் சொல்றத கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு.உனக்கே நான் என்ன சொல்ல வரேன்னு புரிய ஆரம்பிக்கும்.நாம இதே மாதிரி நம்ம நட்பை தொடரலாமா இல்லையாங்கறது இப்போ உன் கையில தான் இருக்கு.
அன்புடன்,
விவேக்.
பி கு : பார்க்காத அதிசயங்கள் தான்,உண்மையாகவே அதிசயங்கள்.


நான் சித்த பிரமை பிடிச்சவ மாதிரி மானிடரையே கண் எடுக்காம பார்த்துட்டு இருந்தேன்.

------------------------------------------------------------------------------------------------

“சும்மா சொல்லக்கூடாது,நம்ம ப்ரொக்ராம் அப்படி ஒரு மெயில் அனுப்பும்னு நான் நினைச்சு கூட பார்க்கல"
உலகத்தின் தலைசிறந்த பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி பிரிவின் கேன்டீனில் ப்ரொஃபெஸர் ரிச்சர்டின் குரல் சற்று அதிகமாகவே எதிரொலித்தது.

“நம்பவே முடியலல?? எனக்கும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது. நம்ம செயற்கை நுண்ணறிவு நிரல் (Artificial intelligence program) மனிதனையே ஏமாற்றக்கூடியது தான்னு எனக்கு தெரியும். அதனால தான் அதை தைரியமா இணைய உலகத்துல பல பெயரோட உலவ விட ஒத்துக்கிட்டேன். இருந்தாலும் அது இவ்வளவு சாமர்த்தியமா செயல்படும்னு நான் யோசிச்சு கூட பார்க்கலை" டாக்டர் எட்வர்ட்ஸின் குரலில் இருந்த பெருமிதம் அவர் குடித்து கொண்டிருந்த காபியின் சர்க்கரையுடன் கலந்துகொண்டு மகிழ்ச்சியில் திளைத்தது.

“மொதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சுல, உண்மையாலுமே ஒரு மனிதன் மாதிரி ஆன்லைன் தோற்றங்கள உருவாக்கி,அங்கங்க யாராவது மாட்றாங்களான்னு தேடிக்கிட்டே இருந்துக்கிட்டு, அப்பப்போ தப்பான போன் நம்பர்கான ஏற்பாடு மாதிரியான டுபாக்கூர் வேலையெல்லாம் பண்ணி நம்ம கஷ்டப்பட்டு செஞ்ச பரிசோதனை முயற்சி ஒரு முழு வெற்றி. அந்த பொண்ணு உண்மைனு நம்பி நல்லா ஏமாந்துட்டா!! அந்த அளவுக்கு மனிதற்களே இது ஒரு ப்ரொக்ராம்தான்னு சந்தேகப்படாத அளவுக்கு அதோட அர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் வெகு சிறப்பா செயல் பட்டிருக்கு!!என்னாலயே நம்ப முடியலை" என்று சொல்லிட்டு ரிச்சர்ட் தன் கோப்பையில் இருந்து கொஞ்சம் காவியை உறிஞ்சிக்கொண்டார்.
பிறகு ஏதோ நியாபகம் வந்தவரை போல்"அந்த பொண்ணு இப்போ என்ன நினைச்சுக்கிட்டு இருப்பான்னு நினைக்கறிங்க??” என்று கேட்டார்.

“அவளா?? என்னடா இவன் லூசு மாதிரி ஒளர்ரானேன்னு நினைச்சுட்டு இருப்பா. இனிமே அவன் கூட அவ்வளவா பேச மாட்டா. கொஞ்ச நாளக்கு அப்புறம் மறந்துடுவா!! எதுவா இருந்தாலும் நமக்கு நல்லதுதான்!! நமக்கு என்னவோ நாம சோதனை வெற்றிகரமா முடிஞ்சிருச்சு. இனிமே என்ன ஆனா என்ன?? இவ்வளவு நாள் அவள ஏமாத்தின நம்ம ப்ரொக்ராம் இன்னும் கொஞ்சம் நாள் அவள ஏமாத்தாதா??” என்று சொல்லிக்கொண்டே எட்வர்ட்ஸ் சிரிக்க ஆரம்பித்தார்.

“அதுவும் சரிதான்" என்று சொல்லிக்கொண்டே ரிச்சர்டும் அவருடன் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.
------------------------------------------------------------------------------------------------

அதே நேரம் ஹாங் காங் நகரின் ஒரு மூலையில் இருபத்தி ஓரு வயதான எர்வின் தன் கீபோர்ட்டில் ரொம்ப யோசித்து யோசித்து ஏதோ தட்டிக்கொண்டிருந்தான்
“எலிஸா..........நான் உன்னை.....எனக்கு இதை எப்படி சொல்லுறதுன்னு தெரியல...............................நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன் ”

-முற்றும்

பி கு : இது Unseen Wonders எனப்படும் என் ஆங்கில கதையின் தமிழாக்கம்.
முன்னொரு தடவை நான் என் ஆங்கில கதை ஒன்றை தமிழாக்கம் செய்திருந்தேன். ஆனால் அது அவ்வளவாக சோபிக்க வில்லை. இந்த கதையின் தமிழாக்கம் எப்படி அமைந்திருக்கிறது என்ற உங்கள் மேலான கருத்தை தெரிவிக்க முடிந்தால் என் தமிழாக்கம் செய்யும் திறனை வளர்த்துக்கொள்ள வசதியாக இருக்கும்.
நன்றி!! :-)

16 comments:

Anonymous said...

நீங்க உண்மையில் மனுசன் தானே?இல்லை கொஞ்சம் சந்தேகமாக இருக்கின்றது

CVR said...

ஹா ஹா!!
இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை மேடம்!! :-)

ஜி said...

kalakirukeenga CVR...

attakaasamaana kathai.. appadiye Sujatha ariviyal kathai maathiri...

thodarnthu ungaloda english storiesa tamizakkam pannunga :)))

CVR said...

நன்றி ஜீ
உங்களை போல ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு இந்த கதை புரியவில்லை என்று தோன்றுகிறது!! :-)

நேற்று முதல் பகுதிக்கு வந்த பின்னூட்டங்களில் பாதி கூட அளவு கூட இதறகு வர வில்லை!! :-)

மு.கார்த்திகேயன் said...

அட்டகாசமான கதை! அருமையான டர்னிங் பாயிண்ட்..

CVR, உங்க தமிழாக்காம் அருமை.. எங்கேயுமே இது ஒரு மொழிமாற்ற கதைன்னு ஒத்துக்கவே முடியல.. ஆராய்ச்சி பண்ணிய புரபசர்களையும் இந்திய பெயரிலே உலவ விட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.. நல்ல முயற்சி.. அதில் வெற்றியும் கண்டுவிட்டீர்கள் CVR

மு.கார்த்திகேயன் said...

/நேற்று முதல் பகுதிக்கு வந்த பின்னூட்டங்களில் பாதி கூட அளவு கூட இதறகு வர வில்லை!! //

மக்கா, இதுகெல்லாம் கவலைப்படலாமா.. மக்கள் எல்லோரும் இந்தியாவுல லீவுல இருப்பாங்க.. அதனால பின்னூட்டம் கொஞ்சம் கம்மி.அவ்ளோ தான்

CVR said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கார்த்தி!! :-)

ஆராய்ச்சி பண்ணிய புரபசர்களையும் இந்திய பெயரிலே உலவ விட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது..//

எனக்கு தெரிந்து இந்திய பல்கலைகழகங்களில் இந்த பிரிவில் தீவிர ஆராய்ச்சி எதுவும் நடைபெறுவதாக கேள்வி பட்டது இல்லை,அதனால் வெளிநாட்டில் நடப்பது போல் காண்பித்தால் நம்பும்படியாக இருக்கும் என்று நினைத்தேன்.


//மக்கா, இதுகெல்லாம் கவலைப்படலாமா.. மக்கள் எல்லோரும் இந்தியாவுல லீவுல இருப்பாங்க.. அதனால பின்னூட்டம் கொஞ்சம் கம்மி.அவ்ளோ தான் //

ஆகா!!

அதானே!!
நான் இத பத்தி யோசிக்கவே இல்லை!! :-D
நியாபக படுத்தினதுக்கு நன்றி கார்த்தி!! :-)

Anonymous said...

மறுமொழிகளின் எண்ணிக்கையை வைத்து உங்கள் கதை புரியவில்லை,படிபவர்களுக்குப் போய் சேரவில்லை என்று சொல்ல முடியாது.கதை நன்றாக இருந்தது என்று தமிழ்மண புலிகளே வந்து சொல்லிட்டு போறாங்க பாருங்க ;)

Anonymous said...

cvr உங்க கதையைப் படிச்சதும் என் இணைய நண்பர்களை அனைவரையும் சந்தேக பட ஆரம்பிச்சுட்டேன்.எல்லாம் உங்களால் வந்தது.இனிமேல் இந்த மாதிரி திகில் கதை எல்லாம் எழுத வேண்டாம்.பயமாக இருக்கின்றது .ஹி ஹி

CVR said...

//கதை நன்றாக இருந்தது என்று தமிழ்மண புலிகளே வந்து சொல்லிட்டு போறாங்க பாருங்க ;)
//

அதானே!!
கார்த்தி தல ஒரு பின்னூட்டம் போட்டா அது நூறு பின்னூட்டத்துக்கு சமம் அப்படின்னு சொல்றீங்கலா துர்கா!! :-)

//cvr உங்க கதையைப் படிச்சதும் என் இணைய நண்பர்களை அனைவரையும் சந்தேக பட ஆரம்பிச்சுட்டேன்.எல்லாம் உங்களால் வந்தது.இனிமேல் இந்த மாதிரி திகில் கதை எல்லாம் எழுத வேண்டாம்.பயமாக இருக்கின்றது .ஹி ஹி //

ஆகா!!
அந்த அளவுக்கு இந்த கதை உங்கள பாதிச்சிருச்சா!! :-)

நல்லது நல்லது!! :-D

MyFriend said...

இந்த கதைஅயி படிக்கும்போது எங்கேயோ படிச்ச ஞாபகம் இருக்கே எனக்குன்னு நெனன்ச்சேன்.

மே பீ அந்த விவேக்கின் ப்லாக்ல படிச்சேனோ (ஹீஹீ) என்று நினைத்தேண்..

கடைசியில், அட.. நம்ம CVR-ஓட ப்லாக்லதான் படிச்சிருக்கேண். :-P

MyFriend said...

unseen wonder is a reat thing. :-)

i admit it. :-)

Marutham said...

Karpanaiku alavey ilaangradhu prove paniteenga! :)

English karan manasaatchi ilamal ipdi easy'a characters'a nogadipaan...
anaal neenga? :>

Nalla karpanai.. I Appreciate that!

Marutham said...

Pisiraandhayar :P idha padicharna nondhuduvaar!
Namala comedy panrangalonu dhaan :P

Boston Bala said...

The preparation for the moment is everything; the moment/experience itself is useless என்பார்கள்.

அதுபோல், சந்திக்கும் தருணத்திற்காக காத்திருத்தல் சுகம்.

யூ ஹாவ் காட் மெயில் போன்ற கதையோ அல்லது உல்டாவான Love Affair (1994) போல் நாயகனுக்கு விபத்தோ, என்றெல்லாம் யோசித்தாலும் நல்ல ட்விஸ்ட்.

கலக்குங்க

இலவசக்கொத்தனார் said...

இப்படி ஒரு பொண்ணு வாழ்க்கையில் விளையாடிட்டீங்களே. இந்தப் பாவம் உங்களை சும்மா விடாது!!

என்று எழுதலாம் என நினைத்தேன். ஏற்கனவே உஷாக்கா கிட்ட நல்லவன் அப்படின்னு பாராட்டு வாங்கினது இன்னும் ஜீரணம் ஆகவில்லை. அதனால்

சூப்பர் கதை. நல்லா எழுதி இருக்கீங்க.

அப்படின்னே சொல்லிக்கறேன். :))

Related Posts Widget for Blogs by LinkWithin