படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 3

ஹலோ மக்களே!
எல்லோரும் எப்படி இருக்கீங்க???

போன பகுதியை பாத்துட்டு நிறைய பேரு பின்னூட்டம் போட்டிருந்தீங்க. அவங்க எல்லோருக்கும் என் நன்றிகள்.
அந்த பின்னூட்டங்களில் தான் ஒரு நண்பர் ,என்னுடைய Flickr தளத்துக்கு போய் பார்த்துட்டு அதுல இருந்த ஒரு படம் பத்தி கேட்டிருந்தாரு. அதை பத்தி பல பேரு பல சமயங்களிலே கேட்டிருந்ததால அதையே ஒரு பதிவா போட்டுறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
நாம திரைபடங்களிலே இரட்டை வேட காட்சிகள் பலவற்றை பார்த்திருக்கோம்.முன்னாடி எல்லாம் சாதாரணமா ஓவ்வொரு பக்கம் நிக்கிறா மாதிரி வந்துகிட்டு இருந்தது,இப்போ ஜீன்ஸ் மாதிரி படங்களிலே பாத்தீங்கன்னா ரொம்பவே உண்மையா தெரியறா மாதிரி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க!!
போன வருஷம் வீட்டுல இணையத்துல சும்ம உலாவிட்டு இருக்கும் போது கண்ணுல இது மாதிரி படம் ஒன்னு பட்டுச்சு,உடனே கையில காமெராவை தூக்கிக்கிட்டு கிளம்பிட்டேன். அப்போ முயற்சி பண்ணபோது கிடைத்தது தான் நீங்கள் கீழே பார்க்கும் படங்கள் எல்லாம்.

என் கற்பனை அண்ணன்
With my imaginary brother

வாக்குவாதம்
argument

உயிர் நண்பன்
Friend for life

இந்த மாதிரி படம் எடுக்கறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லீங்க.
ஒரு இரட்டை வேட படத்துக்கு தேவையான தலைப்பு முதலில் முடிவு செய்துக்கொள்ளுங்கள். அதாவது இரண்டு பேர்கள் வாக்குவாதம் செய்வது போல்,இல்லை சண்டை போடுவது போல்,என்று ஏதாவது காட்சி அமைப்பை முதலில் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த காட்சிக்கு ஏற்றார்போல் பின்புறம் (background) அமையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்

முதலில் உங்க கேமராவை ஏதாவது கடினமான மற்றும் தட்டையான பரப்பில் வைத்துக்கொள்ளுங்கள் (Firm and flat base). உங்க கிட்ட ட்ரைபாட் இருந்திச்சுனா பாதி பிரச்சினை இல்லை.அதுல உங்க கேமராவை கெட்டியாக பொருத்திக்கொள்ளலாம். நான் ட்ரைபாட் இல்லாததுனால கேமராவை வைக்க இடம் கிடைக்காம தவியா தவிச்சேன். :-(

காமெராவை பொருத்திய பிறகு காமெராவை "self timer mode"-இல் செட் செய்து கொள்ளுங்கள். பின் கேமராஅவை ஆன் செய்து விட்டு ஓடி போய் ஒரு படம் எடுத்துக்கொள்ளுங்கள்.


இப்பொழுதுதான் இந்த வகை படங்கள் எடுப்பதில் முக்கியமான கட்டம். உங்கள் கேமராவின் இருப்பு நிலை (position) கொஞ்சம் கூட மாறாமல் உங்கள் கேமராவை திரும்பவும் self timer mode-க்கு மாற்றி விடுங்கள். என் கேமராவில் ஒவ்வொரு படத்திற்கும் இப்படி மாற்ற வேண்டும். உங்களுக்கு ஒரு முறை மாற்றினாலே போதும் என்றால் ரொம்ப நல்லது.
பிறகு உங்கள் காட்சியில் வேண்டிய இரண்டாவது பாத்திரத்தை படம் எடுத்துக்கொள்ளுங்கள்.




நான் முன்பே கூறியது போல இரண்டு படங்கள் எடுக்கும் போது உங்கள் கேமராவின் இருப்புநிலை (position) ஒரே மாதிரி
இருக்க வேண்டும். இரு படங்கள் எடுப்பதற்கு மத்தியில் "கொஞ்சம்" அசைந்தாலும் கூட இந்த காட்சி சரியாக வராது.
படங்கள் எடுக்கும் போது ஒளியின் அளவு பற்றி மிகவும் கவனம் செலுத்த வேண்டும். நம்மை பொருத்த வரை ஒளியின் அளவு காலை மதியம் மாலை என மூன்று நேரங்களை தவிர பெரிதாக மாறுவதாக தெரிவதில்லை அல்லவா. ஆனால் உண்மையாக சொல்லப்போனால் ஒளியின் அளவு நிமிடத்திற்கு நிமிடம் வேறு பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அதுவும் வானீல் மேகங்கள் இருந்தால் அவற்றின் மாறுதலுக்கு ஏற்ப ஒளியும் மாறுபட்டு போய் தொடர்ச்சியை(continuity) குலைத்துவிடும். (மேலே கொடுத்த மூன்று படங்களில் கடைசி படத்தில் இதன் உதாரணத்தை காணலாம்!! :-))
அதுவுமில்லாமல் வெளியில் படம் எடுக்கும் போது நிழல்கள் பற்றி நிறைய யோசிக்க வேண்டும். இரண்டு படங்களிலும் இருக்கும் நிழல்களும் கடைசியில் ஒரே காட்சியில் சரியாக வருமா என்று படம் எடுக்கும் போதே நீங்கள் யோசித்துக்கொள்ள வேண்டும்.இந்த தொல்லைகள் எல்லாம் வேண்டாம் என்றால் உங்கள் முயற்சியை நீங்கள் வீட்டின் உள்ளே(Indoors) வைத்துக்கொளவதே நல்லது.
சரி இரண்டு படமும் எடுத்தாகி விட்டது இப்பொழுது என்ன??
உங்கள் இரண்டு படங்களையும் கணிணியில் பதிவேற்றிக்கொள்ளுங்கள். பிறகு ஏதாவது Image editing மென்பொருளில் இதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்புறம் உங்கள் முதல் படத்தின் இடது பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து வெட்டிக்கொள்ளுங்கள். அதை அப்படியே உங்கள் இரண்டாவது படத்தின் மேல் இடதுபுறம் சரியாக ஒட்டி விடுங்கள். ஒட்டும் போது மேலே கீழே போகாமல் சரியாக பார்த்து ஒட்ட வேண்டும்!!
அவ்வளவுதான் உங்கள் இரட்டை வேட படம் தயார்!!


இந்த வெட்டி ஒட்டுதல் வேலை செய்வதற்கு பெருசா Photoshop அல்லது Gimp போன்ற மென்பொருட்கள் வேண்டும் என்று அவசியம் அல்ல. ஏதாவது சாதாரண மென்பொருள் போதும். நானே Microsoft Photo editor என்ற ஒரு சாதாரண மென்பொருளை தான் பயன் படுத்தினேன். நாம் பெரிதாக எதுவும் செய்ய போவதில்ல,சாதாரணமாக வெட்டி ஒட்ட போகிறோம்!அவ்வளவுதான்!!! அதனால என்னிடம் Photoshop எல்லாம் கிடையாது ,எனக்கு அதுல எல்லாம் வேலை செய்ய தெரியாது என்று நினைத்துக்கொள்ள்ள வேண்டாம்.

ஆனால் Photoshop அல்லது Gimp போன்ற மென்பொருட்களில் "Layers" என்றொரு வசதி உண்டு. அதை வைத்துக்கொண்டு இரு பாத்திரங்களும் கலந்து இருப்பது போன்ற(overlapping photos) காட்சிகளை உருவாக்கலாம் . கலந்திருக்கும் படங்கள் என்றால் ஒருவரை ஒருவர் கை கொடுத்துக்கொள்வது, தோள் மேல் கை போட்டுக்கொள்வது போன்ற படங்கள்!!

எனக்கு அந்த மென்பொருட்கள் எல்லாம் என் கணிணியில் இல்லை,அவற்றை உபயோகிக்கவும் தெரியாது!! அதனால் அப்படிப்பட்ட படங்களை முயற்சிக்க வில்லை. நம்ம சாதாரணமாக வெட்டி ஒட்டி செய்யும் இரட்டை வேட படங்களில் இரு பாத்திரங்களும் தனித்தனியே இருக்க வேண்டும,கலந்திருப்பது போல் செய்ய முடியாது்.

மேலே உதாரணத்திற்குக் நான் காட்டிய படத்தை நான் வேறு எங்கும் வெளியே காட்டியது இல்லை. படங்கள் அவ்வளவாக தெளிவாக வரவில்லை. அந்த சமயத்தில் நிறைய குளிர் இருந்ததால் நான் ஆர அமர எதுவும் செய்ய முடியவில்லை. அவசரத்திற்கு ஏதோ படம் எடுத்து விட்டு வீட்டிற்குள் ஓடி வந்து விட்டேன். நான் முன்பே சொன்னது போல் வெளியே சரியான சமபரப்பு வேறு கிடைக்கவில்லை!! :-(
அதுவுமில்லாமல் படத்தை உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் இடது பக்கம் இருக்கும் சீவீஆரின் நிழல் தெரியாது!!!!ஏனென்றால் வெட்டி ஒட்டும் போது வலது புற படம் அதை மறைத்து விட்டது. இதனால் இந்த படத்தை நான் வெளியேகாட்டியது இல்லை. ஆனால் உங்களுக்கு புரிய வைப்பதற்காகவே இதை பிரசுரித்திருக்கிறேன். (என்னா நல்ல மனசு!! :P)

நீங்களும் முடிஞ்சா இதை முயற்சித்து பாருங்கள். உங்கள் மேராவின் இருப்பு நிலையும்,ஒளியின் அளவும் தான் இந்த காட்சி அமைவதற்கு மூலம். இவை இரண்டையும் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொண்டால் நீங்களும் ரஜினி கமல் மாதிரி இரட்டை வேடத்தில் அசத்தலாம்!!!உங்கள் முயற்சிகள் பற்றி மறக்காம பின்னூட்டப்பெட்டியில் பதிச்சிட்டு போங்க!! சரியா?? :-)

சரி,அடுத்து வேறு ஒரு புகைப்படக்கலை சார்ந்த தலைப்போடு உங்களை பார்க்க வருகிறேன். அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது,உங்கள் அன்பு சீவீஆர்!!!
வரட்டா??!!!!! ;-)

படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 1(Rule of thirds)
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 2(Leading lines)
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 3(Double action pics)

31 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// நான் ட்ரைபாட் இல்லாததுனால கேமராவை வைக்க இடம் கிடைக்காம தவியா தவிச்சேன். :-(//

இன்னுமா அப்படி CVR? :-)

அழகாச் சொல்லிக் கொடுத்திருக்கீங்க...உங்க படங்களில் எல்லாம் உங்கள் CVR-க்கும் எங்கள் CVR-க்கும் கொஞ்சம் gap இருக்கு!

ரெண்டு பேரும் கை கொடுத்துக் கொள்வது போலவோ, இல்லை ஒரு CVR கன்னத்தில் இன்னொரு CVR பளார் என்று அறைவது போலவோ, எப்படி எடுக்க வேண்டும்? :-)

MGR படங்களில் இப்படி எல்லாம் வருமே! அதையும் கொஞ்சம் சொல்லித் தாருங்கள் CVR அண்ணா!

CVR said...

@கே.ஆர்.எஸ்
பாடத்தை ஒழுங்கா கவனிக்கலையா அண்ணா?? :-P

//ஆனால் Photoshop அல்லது Gimp போன்ற மென்பொருட்களில் "Layers" என்றொரு வசதி உண்டு. அதை வைத்துக்கொண்டு இரு பாத்திரங்களும் கலந்து இருப்பது போன்ற காட்சிகளை உருவாக்கலாம் .எனக்கு அந்த மென்பொருட்கள் எல்லாம் என் கணிணியில் இல்லை,அவற்றை உபயோகிக்கவும் தெரியாது!! அதனால் அப்படிப்பட்ட படங்களை முயற்சிக்க வில்லை. நம்ம சாதாரணமாக வெட்டி ஒட்டி செய்யும் இரட்டை வேட படங்களில் இரு பாத்திரங்களும் தனித்தனியே இருக்க வேண்டும,கலந்திருப்பது போல் செய்ய முடியாது்.//

நீங்க சொல்லுறா மாதிரி விஷயங்களை எல்லாம் Photoshop,GIMP போன்ற மென்பொருட்களில் உள்ள Layers என்ற சாமாசாரத்தை வைத்து செய்யலாம்.நான் சொன்னது சாதாரண வெட்டி ஒட்டுதல் மேட்டர் தான் !! :-)
Layers மேட்டர் எல்லாம் நானே இன்னும் கத்துக்கல,அதை கத்துக்கிட்டா கண்டிப்பா பதிவிடறேன்!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாடத்தை ஒழுங்கா கவனிக்கலையா அண்ணா?? :-P//

நாங்க எங்க பாடத்தைக் கவனிச்சோம்! உங்களை எப்படி "கவனிக்கலாம்" என்று தான் சதா சர்வ காலமும் எண்ணம்! :-)இல்லையா துர்கா?

Osai Chella said...

நன்றாக உள்ளது படங்கள். மேலும் நன்றாகவே எழுதுகிறீர்கள். எங்கள் photohraphy-in-tamil dot blogspot.com குழுவில் சேர விருப்பமா நண்பரே

Vijayakumar said...

சிவிஆர்

ரொம்ப அழகாக விளக்கம் சொல்லியிருக்கீங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. இப்போது தான் படித்தேன். விளக்கமா சிறிது கழித்து பின்னூட்டுகிறேன்.

SurveySan said...

Ada, romba nallaa technicaa irukke.

try panren!

வடுவூர் குமார் said...

CVR
இந்த லேயர் எல்லாம் புரிந்துகொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
Gimp அட்டகாசமாக இருக்கும்.உபயோகித்து பாருங்கள்.இந்த கட்டிங் வேலை வித்தியாசமாக செய்ய வேண்டும்.என்னுடைய சில படங்களை அப்படித்தான் செய்தேன்.

Vijayakumar said...

சி.வி.ஆர்

உங்கள் டபுள் ஆக்ட் ப்ளிக்கர் படங்களை பார்த்ததும் நானும் சில முறைகளை "இப்படியிருக்குமோ" என்று பரிசோதித்தேன். ஏறக்குறைய நீங்கள் சொல்லியிருக்கும் முறை போல தான். ஆனால் நான் பரிசோதித்த முறை கொஞ்சம் கேமிராவின் special feature -ம் நம்பியிருக்கிறது. அந்த feature கேமிராவில் இல்லாவிட்டால் எடுக்க முடியாது என்று இல்லை கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும்.

என்னுடைய canon கேமிராவை பயன்படுத்திய போது....

1. கேமிராவை photo stitch mode-ல் போடவும். இதனால் கேமிராவிலேயே panoramic படங்களை எடுக்க வசதி செய்துக்கொடுக்கிறது. முந்திய படத்தையும் அடுத்த படத்தையும் கேமிராவிலேயே ஒட்டி/ஒப்பிட்டு பார்த்துக் கொண்டு அடுத்த ஷாட்டை எடுக்கலாம்.

2. முதல் ஷாட்டில் ஓரிடத்தில் உங்களை கவர் செய்துக் கொள்ளவும்.

3. அதே photo stitch-ல் கேமிராவை திருப்பி இன்னொரு இடத்தில் உங்களை கவர் செய்துக் கொள்ளவும்.

மிக முக்கியமாக இரண்டு படங்களின் overlap பகுதியில் உங்களின் எந்த விதமான பகுதியும் cross over ஆகக் கூடாது.

canon கூடவே photostitch மென்பொருளையும் வழங்குகிறது. மேலெடுத்த இரண்டு படத்தையும் அதில் உள்ளிட்டால் சில நிமிடங்களில் இரண்டையும் இணைத்து ஒரு panoramic படம் ரெடி. தேவையானதை crop செய்துக் கொள்ள வேண்டியது தான். கேமிராவில் இன்னொரு வசதி focus மற்றும் exposure-ம் lock செய்துக் கொள்ளலாம். இதனால் முதல் படத்தில் இருக்கும் அதே exposure, focus இரண்டாம் படத்திலும் மாற்றாமல் வைத்து இரண்டு படத்துக்குரிய ஒளி வித்தியாசத்தை கொடுக்காது. என்னுடைய முயற்சி இதோ.... 15 நிமிடத்தில் மிக அவசரத்தில் முயற்சித்ததில்....

http://www.flickr.com/photos/njvijay/744617990/

உங்களின் கருத்து அறிய ஆவல்...

Anonymous said...

"அண்ணா" நான் வந்துவிட்டேன் :)

//நாங்க எங்க பாடத்தைக் கவனிச்சோம்! உங்களை எப்படி "கவனிக்கலாம்" என்று தான் சதா சர்வ காலமும் எண்ணம்! :-)இல்லையா துர்கா? //

ஹிஹி...இது எல்லாம் பொது இடத்தில் இப்படி போட்டு உடைக்கலமா?அது எல்லாம் இரகசியமாக deal பண்ண வேண்டிய மேட்டர் ;)

இந்த மாதிரி படத்தைப் போட்டு யாருக்கோ சிக்னல் கொடுக்குற மாதிரி இருக்கு.KRS அண்ணா இதை 'கவனிக்கவும்'

சிவிஆர் உங்களுக்கு ஆயுசு 100.அன்று நானும் கேட்கலாம் என்று நினைத்தேன்.எப்படி இந்த இரட்டை சிவிஆர் படம் எல்லாம் எடுத்தீர்கள் என்று ;)

பல போஸ் கொடுத்து கலக்குறீங்க.நடக்கட்டும் நடக்கட்டும்.நாங்களும் 'கவனிக்கின்றோம்' :))

Anonymous said...

//இல்லை ஒரு CVR கன்னத்தில் இன்னொரு CVR பளார் என்று அறைவது போலவோ, எப்படி எடுக்க வேண்டும்? :-)

//

krs அண்ணா பேசமால் நீங்களே அறைந்து விட்டு வந்து விடுங்கள்.என்ன ஒரு ஆசை.இப்பொழுது எனக்கும் அந்த ஆசை வந்து விட்டது.சிவிஆர் "அண்ணா" இந்த மாதிரி ஒரு படம் புடிச்சு போடுங்களேன்.எங்களின் நிறைவேறதா ஆசை எல்லாம் இப்படி படத்தில் பார்த்து மகிழ்ச்சி அடைவோம் :D

CVR said...

@கே.ஆர்.எஸ்
//நாங்க எங்க பாடத்தைக் கவனிச்சோம்! உங்களை எப்படி "கவனிக்கலாம்" என்று தான் சதா சர்வ காலமும் எண்ணம்! :-)இல்லையா துர்கா?//
நல்ல எண்ணம்!! !இந்த மாதிரி அண்ணா/அக்கா கிடைக்க என்ன தவம் செய்தேனோ!!! :P
நீங்க சொன்னதுக்கு அப்புறம் பதிவில் தெளிவாக புரிவது போல் மாற்றம் செய்து விட்டேன் அண்ணா!!
சுட்டி காட்டியதற்கு நன்றி!! :-)

@செல்லா
ஆஹா!! என்னால் உங்கள் ப்ளாக்கிற்கு பங்களிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா???
அழைப்புக்கு மிக்க நன்றி.சிறிது யோசித்துவிட்டு சொல்கிறேனே!! :-)

@அல்வாசிடி விஜய்
உங்க படத்தை பார்த்தேன் தலைவரே!!
படம் நல்லாத்தான் வந்திருக்கு! இன்னும் வெவ்வேறு நிலைகளில் (poses) முயற்சி செய்து பாருங்கள்!! ;-)

@Surverysan
முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க தலைவரே!! :-)

@வடுவூர் குமார்
நீங்கள் சொல்வது சரிதான் குமார்
நானும் லேயர்ஸ் பற்றி சிறிது நேரம் பார்த்துவிட்டு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
கருத்துக்களுக்கு மிக்க நன்றி தலைவா!! :-)

@துர்கா
//"அண்ணா" நான் வந்துவிட்டேன் :)//
உங்க குரல கேட்டாலே சும்ம உதறுதுல்ல!! :-ஸ்

//krs அண்ணா பேசமால் நீங்களே அறைந்து விட்டு வந்து விடுங்கள்.என்ன ஒரு ஆசை.இப்பொழுது எனக்கும் அந்த ஆசை வந்து விட்டது.சிவிஆர் "அண்ணா" இந்த மாதிரி ஒரு படம் புடிச்சு போடுங்களேன்.எங்களின் நிறைவேறதா ஆசை எல்லாம் இப்படி படத்தில் பார்த்து மகிழ்ச்சி அடைவோம் :D//
அக்கா!!
இப்படி அண்ணன் தம்பி இடையில் குழப்பத்தை விளைவிக்க எவ்வளவு நாளாக திட்டம்???
நல்லாவேஏஏஏஏஏஏ இருங்க!! :P

நாகை சிவா said...

அருமையான பதிவு....

இது வரை நான் இதை முயற்சித்தது இல்லை... இங்க கேமிரா பொட்டியே தூக்கவே பல தடவை யோசிக்க வேண்டியது இருக்கு.. அப்புறம் இங்குட்டு இருந்து ஆர்வம் வரும்... இருந்தாலும் முயற்சி செய்து பார்கிறேன் குரு...

Dreamzz said...

கலக்கிட்டீங்க!

Dreamzz said...

சூப்பரா இருக்கு உங்க ட்வின் அண்ணன் படம்!

அனுசுயா said...

கலகக்ல் சிவிஆர் நல்லா சுவாரசியமா எழுதறீங்க. உங்க மேகக்கூட்டம் ஓளி வித்தியாசம் பத்தி பார்க்கனும்னா அந்த பாறைலயே ரெண்டு பாதியும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. நல்ல விளக்கம். அடுத்த வகுப்பு எப்போ வெயிட்டிங்....

CVR said...

@நாகை சிவா
கேமராவை வெளியில் எடுங்க!!படம் எடுத்து பாத்துட்டு பின்னூட்டம் போடுங்க!! :-)

@ட்ரீம்ஸ்
//சூப்பரா இருக்கு உங்க ட்வின் அண்ணன் படம்!//
வாழ்த்துக்களுக்கு நன்றி தலைவரே!! :-)

@அனுசுயா
சரியா கண்டுபிடிசிருக்கீங்க மேடம்.
படம் எடுக்கும் போது அவ்வளவா ஒளி மாறினா மாதிரி தெரியல ஆனா வீட்டுக்குள்ள வந்து படத்த பதிவேற்றும்போது தான் கவனிக்க முடிந்தது.
அடிக்கடி பதிவுக்கு வந்து போங்க!!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)

Anonymous said...

ரொம்ப பொறுமையா, விளக்கமா சொல்லிக் கொடுத்தற்கு

ரொம்ப நன்றிங்க.

சிநேகிதன்.. said...

ரொம்ப அழகா , விவரமா சொல்லிக் கொடுத்திருக்கீங்க .. சூப்பர் ஐடியா..

CVR said...

@அனானி & சிநேகிதன்!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)

களவாணி said...

முயற்சி செஞ்சா சுலபமான விஷயம்தான். வெயில் இல்லாத இடங்களில் எடுத்தால் இன்னும் சுலபமாக இருக்கும் இல்லையா?.

நம்மள நாமே எடுக்குறத விட, இன்னொருத்தரை நிக்க வச்சி எடுக்கும் போது, படம் நல்லா வரும்னு நினைக்கிறேன். நான் ரஜினியா(கிங்) இருக்குறத விட பாலசந்தரா (கிங் மேக்கர்) இருக்குறதுல விரும்புறவன்... (என்னா தத்துவம்...) ஆனா ரெண்டையும் ஒன்னா பண்றதுக்கு தனித் திறமை அவசியம் (சி.வி.ஆர் மாதிரி... இது ஐஸ் கிடையாது நாமளே பதிவுல பார்த்துட்டுதானே இருக்கோம்)

கலக்கல் அண்ணாத்த, வழக்கம் போல அசத்திட்டீங்க...

நன்றி

செந்தில்

இரமேஷ் இராமலிங்கம் said...

அசத்துரீங்க போங்க!!! எனக்கும் இது மாதிரியெல்லாம் படம் பிடிக்க ஆசை தான்... ஆனா இருக்கரதோ ஒரு ஓட்டை கேமரா. பதிவ படிக்க படிக்க புதுசு வாங்கத்தூண்டுது(செலவு வக்கிரீங்களே தலைவா!!!).ம்ம்ம்... பாக்கலாம்...

CVR said...

@செந்தில்
//முயற்சி செஞ்சா சுலபமான விஷயம்தான். வெயில் இல்லாத இடங்களில் எடுத்தால் இன்னும் சுலபமாக இருக்கும் இல்லையா?.//

வெயில் நேரடியாக இல்லாவிட்டாலும் ,வெளியே எடுத்தாலே ஒளியின் அளவு மாறிக்கொண்டே தான் இருக்கும். ஒளியை பற்றி கவலை பட கூடாதென்றால் வீட்டின் உள்ளே எடுப்பது தான் ஒரே தீர்வு. :-)

//கலக்கல் அண்ணாத்த, வழக்கம் போல அசத்திட்டீங்க...//
வாழ்த்துக்களுக்கு நன்றி செந்தில்!! :-)

@இரமேஷ்
//பதிவ படிக்க படிக்க புதுசு வாங்கத்தூண்டுது(செலவு வக்கிரீங்களே தலைவா!!!).ம்ம்ம்... பாக்கலாம்... //
வாங்குங்க வாங்குங்க!!!
ஒரு நல்ல கேமரா வாங்குறதுக்கு எல்லாம் தயங்காம செலவு செய்யுங்க!!
ஆர்வம் இருந்துச்சுன்னா நிறைய மன நிறைவை தரக்கூடிய பழக்கம் இது!! :-)

துளசி கோபால் said...

ஹை........ டபுள் ஆக்ட்டு!!!! நல்லா இருக்கே.

நானும் முயற்சி செஞ்சுட்டுச் சொல்றேன்.

படம் எடுக்கத்தெரியலைன்னாலும் ட்ரைபாட்,
ஃபோட்டோ செண்டர் எல்லாம் வச்சுருக்கேன்:-))))))

தருமி said...

இதைத் திரைப்படங்களில் எப்படி செய்கிறார்கல் என்ற விளக்கம் கிடைக்குமா? ஜீன்ஸ் படத்தில் ரொம்பவே நேர்த்தியாக எடுக்கப் பட்டதாகத் தோன்றியது.

CVR said...

@துளசி டீச்சர்
வாங்க டீச்சர்!!
என்ன இவ்வளவு நேரமா காணோமேன்னு பாத்தேன்!! :-)
முயற்சி செஞ்சிட்டு சொல்லுங்க!! :-)

@தருமி
வாங்க தருமி அய்யா!!
நீங்க சொன்னது போல ஜீன்ஸ் படத்திலும் இந்தியன் படத்திலும் இரட்டை வேட காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும்.
அதிலும் இரு பாத்திரங்களும் ஒருவரை ஒருவர் கடந்து செல்வது போன்ற காட்சிகள் அமைப்பது எல்லாம் மிகவும் சிரமம் என்று கேள்வி பட்டிருக்கிறேன்!! :-)

திரைபடங்களில் எப்படி செய்தார்கள் என்பதெல்லாம் தொழில் ரகசியம் அல்லவா!! அந்த உத்திகளை கையாண்டவர்கள் அதை தெளிவாக விளக்கினால் தான் உண்டு!! :-)

Anonymous said...

cvr ithu satharanama ellorukkum (ennaipol aasami) theriyumanu theriyalai athanal irattai vedankalai eppadi edukirarkal entu azhagaka puriyavaithamaikku nanti - really it's good - thanks - friend

Anonymous said...

Nice, usable technique.

Did you not have another blog on leading lines in photographs? I remember entering a comment and was trying to follow up on that but couldnt find that post :(

may be I am looking in the wrong place????

- Maramandai

CVR said...

@அனானி ஃபிரண்ட்
வாங்க ஃபிரண்ட்!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

@மரமண்டை!!
வாங்க மரமண்டை!!
உங்களுக்காக போன பகுதியில மாற்றங்கள் கூட செஞ்சேனே பாக்கலையா??
அந்த பகுதியின் இணைப்பு கூட இந்த பதிவின் தொடக்கத்துலையே கொடுத்திருக்கேனே!! :-)

Marutham said...

Super! ;)

Someone is missing ANNA so much :D

Nice editing...
Super'a iruku!
GREAT JOB!
Ipdi innum neraya photo eduthu potuteengana..nameetha- britney'nu neraya peru kooda ungala namma dreamz maari kalasiruvanga :P

Anonymous said...

aaaaahaaaaaa.....
summaava peru vechaanga periyavanga - maramandai-nu?? Prove pannitenaney :-(

So nice of you to add those extra information in the previous post. Will definitely try those techniques and let you know how they came out...

thanks a bunch!! - maramandai

CVR said...

@மருதம்
சரிதான்!!
இதுக்கு பேருதான் சொந்த செலவுல சூன்யம் வெச்சுகறதுன்னு சொல்வாங்கலோ?? :-D

@மரமண்டை
Please do!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin