வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9

போன பகுதியில வேற்று கிரக ஊர்தி மட்டும் இல்லாம வேற்று கிரக மனிதர்களும் ராஸ்வெல் சம்பவத்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்டாங்க என்று சொல்லியிருந்தேன். இதை பத்தி பார்க்கனும்னா நாம ராஸ்வெல் சம்பவத்தின் உபகதைகள் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கனும்.க்ளென் டென்னிஸ் (Glenn Dennis) என்பவர் ராஸ்வெல்லில் சம்பவம் நடந்த சமயத்தில் பிரேத உடல் பதனப்படுத்தும் நிபுணராக ் (mortician) பணியாற்றி வந்தார். 1989-ஆம் ஆண்டு திடீரென்று, அவர் ராஸ்வெல் சம்பவம் நடந்த சமயத்தில் நடந்ததாக சில விஷயங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் கூற்றுப்படி ஜூலை 1947-இல்,ராஸ்வெல் சம்பவம் நடந்துகொண்டிருந்த சமயம் அவருக்கு ராஸ்வெல்லின் விமானப்படை தளத்தில் இருந்து இரண்டு தொலைப்பேசி அழைப்புகள் வந்தனவாம். முதல் அழைப்பில், சராசரிக்கும் சிறியதான அளவில் பிரேதங்களை பதனப்படுத்த பெட்டிகள் வேண்டும் என்று கேட்கப்பட்டது என்றும்,இரண்டாவது அழைப்பில் பாலைவனப்பகுதியில் பல நாட்கள் கிடந்த பிரேதங்களை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது என்றும் கூறினார்.பிறகு வேறு ஏதோ வேலையாக வெளியே சென்ற போது ப்ரேசலின் பண்ணை வழியாக செல்லவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது என்றும்.

அப்பொழுது தனக்கு அறிமுகமான ஒரு நர்ஸை அங்கு பார்த்ததாகவும். அந்த நர்ஸ், விபத்துக்குள்ளான இடத்தில் வேற்றுகிரக மனிதர்களின் சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டன என்று சொன்னதாகவும்,அவற்றின் மேல் பிரேத பரிசோதனை கூட செய்யப்பட்டது என்றும் கூறுகிறார். சம்பவம் நடந்த கொஞ்ச நாட்களிலேயே அந்த நர்ஸ் காணாமல் போய்விட்டதாகவும்,தான் எவ்வளவு தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் கூறுகிறார் அந்த நர்ஸ் வரைந்து கொடுத்ததாக சொல்லிக்கொண்டு சில வரைபடங்களை கூட காட்டினார்.
அவரின் பேச்சை கேட்டுக்கொண்டு சிலர் ஆராய்ச்சி செய்து பார்த்ததில்,அவர் சொன்ன பெயரில் எந்த ஒரு்ரு நர்ஸும் ராணுவத்தில் வேலை செய்ததாக சான்று இல்லை.அரசாங்கம் தான் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக எல்லா தடயங்களையும் அழித்து விட்டது என்கிறார் இவர். வயதாகிவிட்டது அல்லவா??அதனால் பாவம் புத்தி மழுங்கி போய் விட்டது என்கின்றனர்,இவற்றை நம்பாதவர்கள்!!
இப்படி இந்த ராஸ்வெல் சம்பவத்தை ஒத்தி பல உபகதைகள். பல்வேறு நேரில் கண்ட சாட்சியங்கள் மற்றும் கதைகளின் பிரகாரம், இந்த சம்பவத்தின் போது சில வேற்று கிரக வாசிகள் மீட்டெடுக்கப்பட்டனர் என்றும். அந்த உடல்களின் மீது பிரேதப்பரிசோதனையும் செய்யப்பட்டன என்று ஒரு கருத்து முன்னமே இருந்து வந்தது.

1995-ஆம் ஆண்டு ரே சாண்டில்லி (Ray Santilli) எனும் படத்தயாரிப்பாளர் , வேற்று கிரக மனிதர்களின் மேல் செய்யப்பட்ட பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட படம் என்று ஒரு குறும்படத்தை வெளியிட்டார்!! இது வேற்று கிரக ஆர்வலர்கள் இடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதை அவர் வேற்று கிரக ஆராய்ச்சியாளர்களிடையே போட்டு காண்பித்தார். இப்படியே இது ஒரு 30 நாடுகளில இந்த படம்் போட்டு காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த சில பேர் இதை சுத்த ஏமாற்றுவேலை என்று முதலில் இருந்தே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதனையடுத்து 2006-ஆம் ஆண்டு,ரே சாண்ட்டில்லி இந்த படம் முழுவதுமாக உண்மை கிடையாது,இதில் சில காட்சிகள் மட்டுமே உண்மையில் நடந்த பிரேதப்பரிசோதனையின் போது நடந்தது என்றும் ,மீதி தான் முன்பு பார்த்ததை வைத்து ரீமேக் செய்யப்பட்டது என்றும் ஒத்துக்கொண்டார். படம் பார்ப்பதற்கு சற்றே களேபரமாக இருக்கும் என்பதாலும் , இது உண்மையான படம் அல்ல என்று பரவலாக கருதப்படுவதாலும் அதை நான் இந்த பதிவில் வெளியிடவில்லை. "Alien autopsy" என்று யூட்யூபில் தேடினால் உடனே உங்களுக்கு கிடைக்கும்.

ராஸ்வெல் சம்பவம் நடைபெற்றதில் இருந்துதான் மனிதனுக்கு வேற்று கிரக உயிர்களுக்கும் முதன் முதலில் தொடர்பு ஏற்பட்டது என்றும் அதற்கு பின் பல சமயங்களில் வேற்று கிரகத்தினர் வந்து சென்று கொண்டு இருக்கின்றனர் என்றும் பரவலாக வேற்று கிரக ஆர்வலர்கள் நம்பி வருகிறார்கள். இப்படி வேற்று கிரக உயிர்களை வைத்திருக்கவும் ,அவர்களிடம் ஆராய்ச்சி செய்யவும் நெவாடா(Nevada) எனும் மாநிலத்தில் உள்ள ஏரியா 51 (Area 51) எனும் ராணுவ தளம் பயன்படுத்தப்படுகிறது என்று நம்பப்படுகிறது. இந்த ஏரியா 51-இல் வைக்கப்பட்ட வேற்று கிரக உயிர்களிடத்தில் எடுக்கப்பட்ட பேட்டி என்று சொல்லிக்கொண்டு ஒரு நிகழ்படம் இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கிறது தெரியுமா??
இந்த நிகழ்படம் பற்றியும் பொதுவாக ஏரியா 51 பற்றியும் ,அங்கு நடப்பதாக கூறப்படும் ஆராய்ச்சிகள் பற்றியும் இந்த நிகழ்படத்தில் விலாவாரியாக கூறியிருக்கிறார்கள். பொறுமையும் ஆர்வமும் இருந்தால் பாருங்கள்.
இது உண்மையா பொய்யா என்று நான் சான்றளிக்கப்போவதில்லை!! உங்கள் சுய புத்தியை கொண்டு முடிவு செய்து கொள்ளுங்கள்!! :-)போன பகுதியோட பின்னூட்டத்துல மக்கள் எல்லாம் இந்த பேட்டி எந்த மொழியில நடந்தது என்று கேட்டிருந்தாங்க!!! வேற்று கிரக மனிதர்களோடு நாம தொடர்பு கொள்வதற்கு உளவுரையாடல் மற்றும் சொல்லோவிய உரையாடல்களை (Telepathy,Mind reading and pictography) பயன் படுத்துகிறார்களாம்

இந்த விஷயத்தில் அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட சில முயற்சிகளை கொஞ்சம் பார்க்கலாமா?? 1940-களில் எவன பார்த்தாலும் பறக்கும் தட்டு பார்த்தேன்னு சொல்லிட்டு திரிஞ்சிக்கிட்டு இருந்ததாலையும்,1947-ல் ராஸ்வெல் சபவம் போன்ற சம்பவங்களினால் மக்களிடையே இது பற்றி பல கேள்விகள் இருந்ததாலும் ,1952-இல் அமெரிக்க அரசாங்கம் "Project Bluebook" என்ற ஒரு ஆராய்ச்சி கழகத்தை நிறுவியது. இவிங்க கொஞ்சம் வருஷம் இந்த மாதிரி வேற்று கிரக சம்பந்தப்பட்ட செய்தியெல்லாத்தையும் விசாரணை பண்ணாங்க. பண்ணிட்டு கடைசியில இதுல இதுக்கு மேல ஆராய்ச்சி எல்லாம் பண்ணா நம்ம நேரம் தான் வீணாகும். இவனுங்க எல்லாம் சொல்லுறாப்போல அடையாளம் காண முடியாத பறக்கும் விண்களங்கள்னு எதுவும் கிடையாது. இவங்க பாத்து ஏமாறுனது எல்லாம் பொதுவா ஒளி விளையாட்டு தான்,ஒளியின் பிரதிபலிப்புகள்,பூமியில் இருந்து வெளியாகும் புகை,வானவெளியில் பளிச்சென்று தெரியும் நட்சத்திரங்கள் மற்றும் வெள்ளி கிரகம் போன்ற வான்வெளிப்பொருட்கள் என்று சொல்கிறார்கள். அப்போ இத்தனை பேர் பாத்ததா சொல்லுற பறக்கும் தட்டு எல்லாம் என்னது??
எல்லாம் பொய் தான் !! அப்படின்னு சாதிக்குது அரசாங்கம்.அதுக்கு அவங்க சொல்லுற விளக்கம் இதான்.

1.) மக்கள்க்கு ஒரு விதமான "கூட்டு பைத்தியக்காரத்தனம்" (Mass hysteria). ஒருத்தர் ஏதாவது சொன்னா ,தானும் அதை பாத்ததா சொல்லுறது மனித இயல்பு. அதான் தானும் இது மாதிரி பாத்ததா சொல்லுறாங்க.
2.)சில பேருக்கு இது மாதிரி ஏதாவது புரளி கிளப்பி விட்டு பிரபலமாகலாம்னு நப்பாசை.
3.)சில பேரு மனநிலை பாதிக்கப்பட்டவங்களா இருக்காங்க,அதனால அவங்களையும் அறியாம ஏதோ பாத்ததா தப்பா நம்பிட்டு இருக்காங்க!
4.)நான் முன்னமே சொன்னா போல ஒளி விளையாட்டில் ஏமாந்து போவது.

இது மாதிரி முடிவு கட்டிட்டு 1969-70 களில் இவர்கள் கடையை கட்டி விட்டார்கள்!!
இந்த அமைப்பே ஒரு கண் துடைப்பு என்றும், வேற்று கிரக வாசிகளின் இருப்பை மறைப்பதற்காகவே இது உருவாக்கப்பட்டது என்று வேற்று கிரக உயிர்கள் இருப்பதாக நம்புபவர்கள் கூறுவார்கள். அதுவும் பேருக்கு மூடினாப்போல காட்டிட்டு, வேற்று கிரக உயிர்களிடம் ஆராய்ச்சிக்கு, அரசாங்கம் ப்ராஜெக்ட் செர்போ (Project Serpo) எனும் ரகசிய அமைப்பை நடத்தி வருவதாகவும் கூறுவார்கள்.

வேற்று கிரக மனிதர்களின் வகைகள்,அவர்களால் கடத்தப்பட்டதாக கூறிக்கொண்டு சில கதைகள்,அவர்களின் இருப்பு பற்றி மறுக்க முடியாத சான்று என்று கூறிக்கொள்ளும் படங்கள்,நிகழ்படங்கள் இப்படி இணையத்தில் இது பற்றி பக்கங்கள் ஏராளம்.இது பற்றி ஏழுத வேண்டும் என்று திட்டமிட்ட பின் சனி ஞாயிறு இரண்டு நாட்கள் இதிலேயே மூழ்கி இருந்தேன். இதை பற்றி படித்தது பார்த்தது எல்லவற்றையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தால் எப்பொழுது முடிப்பேன் என்று சொல்ல முடியாது,அவ்வளவு நிறைய இருக்கிறது. விண்வெளி என்று சொல்லும் போது பறக்கும் தட்டுகள்,வேற்று கிரக உயிர்கள் என்பது மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான தலைப்பு என்பதால், ஒரு அறிமுகம் இருக்கட்டுமே என்று தொடருக்குள் தொடராக இதை எழுத ஆரம்பித்தேன்.
பறக்கும் தட்டுகள் பற்றி நம்புபவர்களில் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் விஞ்ஞானிகள்,அறிஞர்கள்,விமானிகள்,விண்வெளி வீரர்கள் (Astronauts), ராணுவ அதிகாரிகள் போன்றவர்களும் இருப்பதால் தான் எனக்கு இதை முற்றிலுமாக பைத்தியக்காரத்தானம் என்று ஒதுக்கி விட முடியவில்லை.

"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்............."என்ற பாட்டு தான் ஞாபகம் வருகிறது!! அட இசையரசி பதிவுக்கு ஒரு தலைப்பு கிடைத்து விட்டதே!! :-))

சரி!!! கடந்த இரண்டு மூன்று பகுதிகளாக இந்த தலைப்பை பற்றியே மாவாக அரைத்து போர் அடித்து விட்டேன்,கொஞ்சம் இளைப்பாற நிலவு வரை சென்று வரலாமா??
நிலவுக்கு தான் மனிதன் 1969-ஆம் ஆண்டே கால் பதித்து விட்டானே என்கிறீர்களா????

மனிதன் ஒன்றும் நிலவுக்கு எல்லாம் போகவில்லை, அமெரிக்க அரசாங்கம் பூமியிலேயே ஒரு செட் போட்டு படம் காட்டி ஏமாற்றிவிட்டது என்று சில பேர் சொல்கிறார்கள் தெரியுமா???
அதை பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்!!!!
வரட்டா?? :-)References:
http://en.wikipedia.org/wiki/Glenn_Dennis
http://en.wikipedia.org/wiki/Alien_autopsy#The_Santilli_film
http://en.wikipedia.org/wiki/Project_Blue_Book

படங்கள்:
http://en.wikipedia.org/wiki/Image:Glenn_Dennis.gif
http://roswellproof.homestead.com/files/aliens.gif
http://en.wikipedia.org/wiki/Image:Alien_autopsy.jpg
http://www.skeptic.com/eskeptic/04-11-19images/UFOalienphotographer.gif
http://www.mysticalblaze.com/2aliens.jpg

References for all three parts:
http://hubpages.com/hub/Roswell_What_Really_Happened
http://www.roswellproof.com/
http://www.watchtheskycampaign.com/
http://ufo.whipnet.org/roswell/timeline/index.html
http://ufo.whipnet.org/roswell/cover-up/index.html
http://ufo.whipnet.org/roswell/
http://www.news.com.au/story/0,23599,21994224-2,00.html
http://www.conspiracynews.org.uk/roswell.php
http://www.ufoevidence.org/welcome.asp
http://www.crystalinks.com/roswell.html
http://video.google.com/videoplay?docid=5952399139521551437

and some more.....

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

16 comments:

துளசி கோபால் said...

சுவாரசியமான தகவல்கள்தான்.

Anonymous said...

மனிதன் ஒன்றும் நிலவுக்கு எல்லாம் போகவில்லை, அமெரிக்க அரசாங்கம் பூமியிலேயே ஒரு செட் போட்டு படம் காட்டி ஏமாற்றிவிட்டது என்று சில பேர் சொல்கிறார்கள் தெரியுமா???

andha mail enaku kooda wandhuchu konja warushanghaluku munnadi...

வடுவூர் குமார் said...

யூ டியுபில் உள்ள ஏலியன் பிரேதப்படம் பார்த்தேன்,நீங்கள் சொன்ன மாதிரி எப்படி நம்புவது என்று தெரியவில்லை.
"சோ" கூட இந்த நிலவு ட்ரிப் புருடாவாக இருக்கக்கூடும் என்று சொல்லியதாக ஞாபகம்.
அடுத்து வரப்போகிற பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

//மனிதன் ஒன்றும் நிலவுக்கு எல்லாம் போகவில்லை, அமெரிக்க அரசாங்கம் பூமியிலேயே ஒரு செட் போட்டு படம் காட்டி ஏமாற்றிவிட்டது என்று சில பேர் சொல்கிறார்கள் தெரியுமா???//

I think there is a documentary film (Conspiracy theory: Did we go to moon?) with substantial claim regarding this issue. Waving flag, lighting and shadows, floating dust etc.. are those discrepancies raised by Russian scientist. If you think laws of physics are universally applicable, then after watching this film you would say "Niel Armstorm is a cartoon character in the film taken in A-51"

Babu

Anonymous said...

Ctd.. So, after watching that documentary you might have conluded that "Moon landing was just hoax". But if you finish reading http://www.clavius.org/index.html
this, you would say "aha, excellently refuted all allegations and now I believe in the name of God that we landed on Moon"

I hope CVR will give clear view reg. this rather diplomatic.
Babu

Anonymous said...

நிறைய ஹோம் ஒர்க் செய்து அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள்...

நாங்கல்லாம் சும்மா மொக்கை போட்டு ஒரு பதிவை வலை ஏற்றும்போது, இவ்வளவு தகவல்களை படிச்சு, நம் மக்கள் தெரிஞ்சுக்கட்டும் என்று நேரத்தை ஒதுக்கி எழுதுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...!!!

தொடருங்க காத்திருக்கேன்...

CVR said...

@துளசி டீச்சர்
வாங்க டீச்சர்!!
அதிலென்ன சந்தேகம்?? நாம பேசறது விண்வெளி ஆச்சே!! கண்டிப்பா சுவாரஸ்யமாத்தான் இருக்கும் :-)

@அனானி
//andha mail enaku kooda wandhuchu konja warushanghaluku munnadi... //
நானும் பாத்திருக்கேன்,இது சம்பந்தமா ஒரு நிகழ்படம் கோட பாத்திருக்கேன்!!
அதை பத்தி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி மேலதிக தகவல்களோட எழுதலாம்னு திட்டம்!! :-)

@வடுவூர் குமார்
//யூ டியுபில் உள்ள ஏலியன் பிரேதப்படம் பார்த்தேன்,நீங்கள் சொன்ன மாதிரி எப்படி நம்புவது என்று தெரியவில்லை.//
எனக்கு தெரிந்த பல பேருக்கு இந்த நிலைமை தான் குமார்!! :-)

@பாபு
வாங்க பாபு!! இணைப்புக்கும் மிக்க நன்றி. இதை பற்றி எழுத இந்த இணைப்பு உபயோகமாக இருக்கும்!! பதிவு போட்ட பிறகு படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்!! :-)

@செந்தழல் ரவி
உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி!!
உங்களின் கொரியா பற்றிய பதிவை சமீபத்தில் படித்தேன். அதில் நீங்களும் நிறைய தகவல்களை அளித்திருந்தீர்கள்!!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)

Dreamzz said...

மீண்டும் ஒரு ஆறிவுப்பூர்வமான ஆராய்ச்சிபூர்வமான பதிவு!

Informational!

hehe! Moon landing conspiracy pathi seekiram sollunga!

வடுவூர் குமார் said...

ஏதாவது Wormholes போன்ற workarounds வருங்காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம்.
அப்ப, வரும் பதிவுகளில் இதையும் எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்கள்.

G.Ragavan said...

ம்ம்ம்ம்....நம்புவது நம்பாமை பேதமை நம்புவது அஞ்சலறிவார் தொழில்னு நம்ம தெருவள்ளுவர் சொல்லீருக்காரு. ஆகையால நானும் அப்படியே இருந்துக்கிறேன். :)

CVR said...

@Dreamzz
வாழ்த்துக்களுக்கு நன்றி ட்ரீம்ஸ்

@வடுவூர் குமார்
பார்க்கலாம் குமார்,அதுவும் ஒரு சுவாரஸ்யமான தலைப்பு தான். ஆனால் அதை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும். பதிவு எழுதும் அளவுக்கு தகவல்கள் முழுமையாக அதில் இப்போதைக்கு தெரியாது!! :)

@ஜிரா
வாங்க அண்ணா!!
என்னை ஏன் இப்படி திட்டுறீங்க தல?? :(
அந்த குரலுக்கு அர்த்தத்தையும் கொஞ்சம் தாங்களேன் அண்ணா!! :)

Anonymous said...

சில தினங்களுக்கு முன்பு, வின்வெளி தொடர்புடைய பத்திரிக்கை செய்தி ஒன்றை படித்தேன். அதை பத்திரமாக கத்தரித்து வைத்திருக்கிறேன். உங்களுக்கு scane செய்து அனுப்பி விடட்டுமா? என் பதிவில் ஒரு வரி பதில் கொடுங்கள் நண்பரே.

இவான் said...

மிக அருமையான பதிவுகள். அனைத்து பாகங்களையும் தொடர்ச்சியாக படித்து முடித்துவிட்டேன் . எழுத்துக்களும் மிக சுவாரஸ்யமாக இருந்தது. தொடருங்கள்.

சிவக்குமரன் said...

ஒரே மூச்சில் ஒன்பது பாகங்களையும் படித்து முடித்தேன், நம்புகிறோமோ இல்லையோ படிப்பதற்கும் பேசுவதற்கும் மிக சுவாரசியமாக இருக்கிறது.

மகரன் said...

மிகவும் நல்ல பதிவு...இதற்கான முழு விபரங்களையும் எடுத்து பதிந்துள்ளீர்கள்..பாராட்டுக்கள்..
அண்மையில் நான் அணுகிய "வளாகம்" எனும் வலைப்பூவில் வேற்று கிரக மனிதர்கள் உண்மையில் வேற்று கிரகத்தை சேர்ந்தவர்களில்லை..நாம் தான்..! அதாவது எதிர்காலத்திலிருந்து வந்த மனிதர்களே என்று பிரசுரமாயிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டேன்..! இருக்கலாம்...ஏனெனில் எழுத்தாளர் "சுஜாதா"வின் கட்டுரை ஒன்றில் (ஏன் எதற்கு எப்படி) மனிதன் வேகத்தில் பயணிக்கும் போது வேகம் கூடக்கூட அவன் பயணிக்கும் திசையில் கொஞ்சம் சுருங்குகின்றான்..! என்று விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறியதாக கூறியுள்ளார்..! நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் உண்மை..! அத்துடன் வேகத்தில் பயணிக்கும் மனிதனின் கைக்கடிகாரம் ஓய்விலுள்ள மனிதனின் கைக்கடிகாரத்தை விட கொஞ்சம் மெதுவாக ஓடுகிறது..! என்றும் ஐன்ஸ்டீன் கூறியுள்ளாராம்..! இதனடிப்படையில் பார்த்தால் "அவர்கள்..!" குள்ளமானவர்கள் என்ற கருதுகோளும் வெற்றுக்கண்ணுக்கு தென்படமாட்டார்கள் என்ற கருதுகோளும் (காரணம்...ஒளிப்போட்டோன்களை நம்மால் பார்க்க முடியவில்லை அல்லவா..?) ஏற்கத்தக்கதாகின்றன அல்லவா..? அவர்கள் எம்மைப் போல் நான்கு பரிமாண ஆட்களில்லை..அவர்கள் எத்தனை பரிமாண ஆட்களோ...? சிந்திக்கவும்..!

CVR said...

@கஜேன்
நீங்கள் சொல்வது சரிதான்!! வேற்றுகிரக மனிதர்கள் என்று நாம் என்னுவோர் கடந்தகாலத்திற்கு பயணித்து வந்திருக்கும் எதிர்கால மனிதர்கள் தான் என்று ஒரு கருத்தும் உண்டு.
தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி :)

Related Posts Widget for Blogs by LinkWithin