டொர்னாடோவாவது ரொனால்டோவாவது!!

இன்னைக்கு ஆபீசுல வழக்கம் போல ஆணி பிடுங்கறேன் பேர்வழின்னு நம் வலையுலக நண்பர் ஒருத்தரு கூட தொலைபேசியில் மொக்கைய போட்டுகிட்டு இருந்தேன் மக்கா!!

திடீர்னு ஒலிப்பெருக்கியில ஒருத்தன் மூச்சிறைக்க கத்துறான்!! "எலே எல்லோரும் எங்கியாச்சும் ஓடுங்கலே!!! டொர்னாடோ (Tornado) வருது!!! நம்ம வானிலை ஆராய்ச்சி நிலையத்துல சொல்லீருக்காய்ங்க!!! எல்லாம் ஒழுங்க பேஸ்மெண்ட்டுகுள்ள போய் புகுந்துக்கோங்க!!! அப்புறம் ஆணி புடுங்குனவன் அத்தோட அடிச்சிகிட்டு போனான்னு நாளைக்கு நூஸ்பேப்பருல செய்தி போட்டுருவாய்ங்க!!! சொன்ன பேச்ச ஒலுங்க கேளுங்கலே" னு டென்சன் ஆயிட்டான்!!!
நான் ஒடனே தொலைபேசியுல "அண்ணாச்சி!! என்னமோ ஆயிருச்சு,உயிரோட இருந்தா நான் உங்களுக்கு அப்புறமா போன் பண்ணுறேன்" அப்படின்னு காலை கட் பண்ணிட்டேன் (அவர் காலை இல்லைய்யா!! போன் கால!! ஆசை!! :-P)

போன வெச்சுட்டு சுட்டும் முட்டும் பாக்குறேன். நம்ம தேசி மக்கள் (அதாங்க,நம்ம இந்தியர்கள்) எல்லாம் திரு திருன்னு முழிச்சிகிட்டு இருக்காய்ங்க!! நான் ஒடனே ஒருத்தன் கிட்ட போய்ட்டு
"அண்ணே!! இப்ப என்ன ஆச்சுன்னு எல்லோரும் டென்சன் ஆகுறாய்ங்க அண்ணே" அப்படின்னு அப்பாவியா (?!) கேட்டேன்!!

அவரு ரெண்டு பக்கமும் பாத்துட்டு!!
"எலே வெளயாடுற வேளையால்லே இது???? புயல் வருதாம்லே!!அதுவும் சாதாரண் புயல் இல்ல,சூறாவளி புயலு. "Twister" படம் பாத்திருக்கியா?? அதுல வரும்ல!! அதான்"

"ஆகா!!! அப்போ நம்ம பார்க்கிங்கு எடத்துல இருக்கற காரு எல்லாம் அந்த படத்துல வரா மாதிரி பறக்குமா?? புயல்ல எறுமை மாடு எல்லாம் அடிச்சிட்டு வந்து சுத்தி சுத்தி பறக்குமா??" அப்படின்னு கண்கள் விரிய கேட்டேன்.

"எலே நெக்கலா??? விட்டா உன்னையே அடிச்சிட்டு போயிரும் தெரியும்லே" அப்படின்னு அண்ணாச்சியும் பீதியை கிளப்ப முயற்சி பண்ணிட்டு இருந்தாரு.

"அட சும்மா இருங்க அண்ணாச்சி,நான் இது வரைக்கும் ஒரு டொர்னாடோ கூட நேருல பாத்ததே கிடையாது.இன்னைக்காவது பாக்கலாம்னு பார்த்தேன்,விட மாட்டீங்க போல இருக்கே" என்று வருத்தப்பட்டேன்.

"ஏண்டா டேய்!!! இதென்ன ஷகீலா படமா??? கும்பலா உக்காந்து பாக்குறதுக்கு!!!!புயல் டா புயல்!! அது அடிச்சா ஒரு பயல் மிஞ்ச மாட்டான் தெரியுதா???" அப்படின்னு ஏறுராரு!!

"நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க அண்ணாச்சி!! இன்னைக்கு டொர்னாடோ பாத்துட்டு தான் மறு வேலை(?!)" அப்படின்னு சொல்லிட்டு விரு விருன்னு வெளியே கிளம்பிட்டேன்.

நான் போறத பாத்துட்டு மற்ற நம்ம ஊரு பசங்க சில பேரு நம்ம கூடவே வந்துட்டாய்ங்க!! எவனாவது ஏதாவது செஞ்சா யோசிக்காம பின்னாடி வரது தமிழனுக்கு புதுசா என்ன???

வெளியில வந்துட்டு பாத்தா ஒரே மேகமும் காத்துமா இருக்கு!! கொஞ்ச நேரம் கழிச்சு டொர்னாடோ பாக்குற ஆசையில் அண்ணாச்சியும் குடு குடுன்னு ஓடி வந்துட்டாரு!! எல்லோரும் காத்துல நிந்துக்கிட்டு ஒரு 15-20 நிமிஷம் சுத்தி சுத்தி பாத்தோம்!!!! டொர்னாடோவும் வரல்ல,ரொனால்டோவும் வரல்ல!!! :-(
இருந்தாலும் வெளியில போன தோஷத்துக்கு கைப்பேசியில் ஒரு 3-4 படங்களை சுட்டு தள்ளினேன்!!!அதை என் வலையுலக நண்பர்களாகிய உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று தோன்றியது!!
அதுக்கு தான் இவ்ளோ பில்ட் அப்பு!! :-D

படங்கள் எல்லாம் அலைப்பேசியில் எடுத்ததால் அவ்வளவாக குவாலிடி நல்லா இருக்காது (pixel wise),அதனால கண்டுக்காதீங்க!! :-)



ஆங்கிளு பாத்தீய்ங்கல்ல!!!! B-)

கொஞ்சம் திரும்பினா

இன்னும் கொஞ்சம் திரும்பினா


அட்ரா அட்ரா இதுக்கு பேருதான் ஒளி வட்டம்னு சொல்றாய்ங்களா??



என்ன வேணுமினாலும் சொல்லுங்க மக்கா. கறுப்பு வெள்ள படம்னாலே ஒரு தனி கலை தான்!! மொத படத்தையே கறுப்பு வெள்ளையா மாத்துனா எப்படி தூள் கெளப்புது பாத்தீகளா???

என்ன???
ஓவரு மொக்கையாயிருச்சா??
கோபம் கோபமா வருதா???? பின்னூட்ட பொட்டி தொறந்துதான் கெடக்கு!!
இதுக்கு மேல நான் ஒன்னும் சொல்லல!!

வரட்டா?? :-)

25 comments:

Anonymous said...

படமெல்லாம் நல்லா இருக்கு. போட்டிக்கு அனுப்பலாம்போல இருக்கு

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆணி பிடுங்கறேன் பேர்வழின்னு நம் வலையுலக நண்பர் ஒருத்தரு கூட தொலைபேசியில் மொக்கைய போட்டுகிட்டு இருந்தேன் மக்கா!!//

அந்தப் புண்ணியவான் அடியேன் தான்!

//அப்படின்னு காலை கட் பண்ணிட்டேன் (அவர் காலை இல்லைய்யா!!//

இது தான் இந்தப் பையனின் ரொம்ப நாள் ஆசை! மனசுக்குள்ள இருக்கிறது எப்படி வெளிய வந்துருச்சு பாத்தீங்களா?
என் கால்களைக் கட் பண்ணும் அளவுக்கு உங்களுக்கு நான் என்ன தப்பு செஞ்சிட்டேன் CVR? சொல்லுங்க CVR சொல்லுங்க!

இதைக் கேட்பார் எவருமே இல்லையா! :-(
ஏ Tornado...இதற்காக CVR ஊருக்குப் போய் அவருக்கு இடைஞ்சல் பண்ணாதே! என்னை அவர் என்ன செய்தாலும் பரவாயில்லை..அவரை விட்டு விடு!

ILA (a) இளா said...

என்னலே அல்லாருக்கும் வெளாட்டா போச்சா?உசுருக்கு பயந்துக்கிட்டு ஓடாம, படம் புடிக்கிரியாம்லே. நல்லா இருக்கியல அப்பு?அப்புறம் என்ன எப்படி வேணுமின்னாலும் படம் போடலாம். இல்லாட்டி நம்ம ஊர்ல கட்டம் கட்டி இருப்பாங்கள

ILA (a) இளா said...

நேத்து எங்க ஊர்ல பூமிக்கடியில இருந்து ஒரே பொகை. சரீ செல்லா பொகைப்பட போட்டிக்குதான் யாரோ பொகை போடுறாங்கன்னு நெனச்சா ஏதோ ஸ்டீம் பைப்பு புட்டுக்கிச்சாம். சரி நாமும் ஒரு பொகையை போட்டுக்கிட்டே ஆணி புடுங்க போயிட்டோம்ல, படமா போட்டோம்

G3 said...

aaha.. torondo kooda neenga andha areala irukkeenganu therinjadhum bayandhu odirucha? neenga imbuttu periyaalunnu enakku theriyaama pochey ;)

Photos asathal :)

CVR said...

@சின்ன அம்மணி
வாங்க அம்மணி.
//படமெல்லாம் நல்லா இருக்கு. போட்டிக்கு அனுப்பலாம்போல இருக்கு //
நம்ம "தமிழில் புகைப்படக்கலை" வலைப்பூவில் நடக்கும் போட்டி பத்தி சொல்றீங்களா??
நான் அந்த குழுமத்தில் ஒரு உறுப்பினர் என்பதாலும்,அந்த போட்டியின் ஒரு நடுவர் என்பதாலும் என்னால் கலந்துக்கொள்ள முடியாது அம்மணி! :-)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

@கே.ஆர்.எஸ்
//என் கால்களைக் கட் பண்ணும் அளவுக்கு உங்களுக்கு நான் என்ன தப்பு செஞ்சிட்டேன் CVR? சொல்லுங்க CVR சொல்லுங்க!//
டேமேஜ் பண்ணுறதுக்கு ஒரு சான்ஸ் கூட தவறவிடறது இல்ல போல!! :P

//ஏ Tornado...இதற்காக CVR ஊருக்குப் போய் அவருக்கு இடைஞ்சல் பண்ணாதே! என்னை அவர் என்ன செய்தாலும் பரவாயில்லை..அவரை விட்டு விடு!
//
என்ன பாசம் ,என்ன பாசம்!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்

@இளா
வாங்க விவசாயி
//சரீ செல்லா பொகைப்பட போட்டிக்குதான் யாரோ பொகை போடுறாங்கன்னு நெனச்சா ஏதோ ஸ்டீம் பைப்பு புட்டுக்கிச்சாம். சரி நாமும் ஒரு பொகையை போட்டுக்கிட்டே ஆணி புடுங்க போயிட்டோம்ல, படமா போட்டோம்
//
உங்க அளவுக்கு அறிவும் அனுபவமும் எங்களுக்கு இல்லையே தல!!!
இந்த மாதிரி அப்பப்போ அட்வைஸ் பண்ணினாதான் நாங்க கத்துக்க முடியும்!! :-)

@G3
//aaha.. torondo kooda neenga andha areala irukkeenganu therinjadhum bayandhu odirucha? neenga imbuttu periyaalunnu enakku theriyaama pochey ;)
//
இப்போ தெரிஞ்சிகிட்டீங்கல்ல!!
சந்தோஷம்!! :-D

//Photos asathal :) //
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி G3!! :-)

வெற்றி said...

CVR,
நல்ல நகைச்சுவையான பதிவு. பதிவைச் சிரித்துச் சிரித்துத்தான் வாசித்தேன். :-))

தமிழகத்தில் எப் பகுதியில் இப்படிப் பேசுவார்கள்?

துளசி கோபால் said...

படத்தை விடுய்யா. பதிவு..........சூப்பர் நகைச்சுவை.

அருமையா வந்துருக்கு.

ஆமாம்................. முதல் பாத்திரம் இந்தியா அடுத்தது வேற ஒரு
மக்கள் (அதிகம்) இல்லாத நாடா?

சிம்பாலிக்கா என்னவோ சொல்ல வர்றாப்லே இருக்கு!

ulagam sutrum valibi said...

கண்ணு,
பிரச்சனையை நகைச் சுவையுடன் கூறுவது அருமை.நகைத்துக் கொண்டே படித்தேன்.

Anonymous said...

//இதென்ன ஷகீலா படமா??? கும்பலா உக்காந்து பாக்குறதுக்கு!!!!

எவனாவது ஏதாவது செஞ்சா யோசிக்காம பின்னாடி வரது தமிழனுக்கு புதுசா என்ன???//

அருமையான வரிகள்!!!! - பாபு

Marutham said...

LOL!!!
Nalla sense of humour :)
// எவனாவது ஏதாவது செஞ்சா யோசிக்காம பின்னாடி வரது தமிழனுக்கு புதுசா என்ன???//
Idhu dhaan TOP! :P

But andha annachiyum vandharulla :P

வெட்டிப்பயல் said...

//"அண்ணாச்சி!! என்னமோ ஆயிருச்சு,உயிரோட இருந்த நான் உங்களுக்கு அப்புறமா போன் பண்ணுறேன்" அப்படின்னு காலை கட் பண்ணிட்டேன் (அவர் காலை இல்லைய்யா!! போன் கால!! ஆசை!! :-P)//

//
"ஏண்டா டேய்!!! இதென்ன ஷகீலா படமா??? கும்பலா உக்காந்து பாக்குறதுக்கு!!!!புயல் டா புயல்!! அது அடிச்சா ஒரு பயல் மிஞ்ச மாட்டான் தெரியுதா???"//

//எவனாவது ஏதாவது செஞ்சா யோசிக்காம பின்னாடி வரது தமிழனுக்கு புதுசா என்ன???//

இந்த டயலாக்ஸ் எல்லாம் சூப்பர்...

காமெடில கலக்க ஆரம்பிச்சிட்டீங்க...
எல்லாம் சத்குருவோட பயிற்சி போல ;)

இராம்/Raam said...

CVR அண்ணா,

கலக்குறீங்க..... எங்களுக்கும் இதேமாதிரி எழுதுறது எப்பிடின்னு கத்துக் கொடுங்க.... :)

இம்சை அரசி said...

CVR அண்ணாஆஆஆஆ... என்ன இது சின்னபுள்ளதனமா??? நான் கூட டொர்னாடோனு யாரொ புது ஹாலிவுட் ஹீரோ வந்திருப்பாங்க போலன்னு ஓடி வந்து பாத்தா.... என் நெனப்புல புயலடிச்சிடுச்சு ;)

CVR said...

@வெற்றி
வாங்க வெற்றி.
நீங்க ரசிச்சது இந்த பதிவுக்கு வெற்றி!!!
//தமிழகத்தில் எப் பகுதியில் இப்படிப் பேசுவார்கள்? //
எனக்கு தெரிந்த வரை வார்த்தைகளில் "லே" சேர்த்து பேசுவது தூத்துகுடியில் வழக்கம் என நினைக்கிறேன்.
பண்ணுவாய்ங்க,ஓடுவாய்ங்க என்று இப்படி "ய்ங்க" சேர்த்துக்கொள்வது மதுரையில் கேட்கலாம். இது தவிர சில இடங்களில் நெல்லை தமிழ் போன்று இருந்தது என்று நண்பர் ஒருவர் நேற்று சொன்னார்.
என் புரிதலில் தவறு இருந்தால் அன்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!! :-)

எதுவும் தெரிந்து எழுதுவதில்லை. நான் வளர்ந்தது முழுவதும் சென்னையிலே!! ஏதோ தோன்றியதை எழுதுகிறோம். ரசிக்கும்படியாக இருந்தால் சந்தோஷம்!! :-)

@துளசி டீச்சர்
//படத்தை விடுய்யா//
விட்டுட்டேன் டீச்சர்

//ஆமாம்................. முதல் பாத்திரம் இந்தியா அடுத்தது வேற ஒரு
மக்கள் (அதிகம்) இல்லாத நாடா? //

நீங்க பாலசந்தர் கிட்ட இணை இயக்குனரா பணியாற்றினீர்களா??

என்ன சொல்லுறீங்கன்னே புரியல!! :-(

இதுக்கு நான் ரூம் போட்டு யோசிச்சிட்டு பதில் சொல்றேன்!! :-D

//சிம்பாலிக்கா என்னவோ சொல்ல வர்றாப்லே இருக்கு! //
என்னமோ போங்க!! இத பாத்து ஊரே கை கொட்டி சிரிக்குது!! சிம்பாலிக்கா சொன்ன சிரிப்பா போகுது நம்ம பொழப்பு!! :-)))

@உலகம் சுற்றும் வாலிபி
//கண்ணு,
பிரச்சனையை நகைச் சுவையுடன் கூறுவது அருமை.நகைத்துக் கொண்டே படித்தேன். //
வாங்க பாட்டி!! :-)
உங்களுக்கு "நகை"ப்பு சேர்த்து அழகு பார்ப்பதுதான் இந்த எளியோனின் ஆசை!!
பதிவு உங்களுக்கு பிடித்தமையில் மகிழ்ச்சி!! :-)


@பாபு
//
அருமையான வரிகள்!!!! - பாபு //
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பாபு!! :-)

@மருதம்
வாங்க கானக்குயிலே!! :-)

//
But andha annachiyum vandharulla :P //
உண்மைய சொல்லனும்னா நான் அண்ணாச்சி கூடவும் பேசல,ஆச்சி கூடவும் பேசல!! டொர்னாடோ வருதுன்னு எல்லோரும் வெளில வந்துட்டோம். போட்டோவெல்லாம் போடறதுக்கு லைட்டா பிட்ட போட்டேன்.
அவ்ளோதான்!! :-)
வருகைக்கு நன்றி மருதம்!! :-)

@வெட்டி!!
வாங்க தல!!!
//காமெடில கலக்க ஆரம்பிச்சிட்டீங்க...
எல்லாம் சத்குருவோட பயிற்சி போல ;)
//
இந்த நெக்கலு,நையாண்டி,எடக்கு,மடக்கு எல்லாம் சத்குரு கிட்ட பழகுனாலே தானா ஒட்டிக்கும்னு சூசகமா சொல்லுறீங்களா தல????
தல சொன்னா சரிதான்!! :-D

@இராம்
//க்குறீங்க..... எங்களுக்கும் இதேமாதிரி எழுதுறது எப்பிடின்னு கத்துக் கொடுங்க.... :) //
இது உங்களுக்கே ஓவரா தெரிலையா அண்ணா??
நான் எங்கிட்டு உங்களுக்கு சொல்லி தரது?? நீங்க தான் நாங்க எல்லாம் வளர வழி காட்டனும்!! :-)

Dreamzz said...

//அவர் காலை இல்லைய்யா!! போன் கால!! ஆசை!! //

போனுக்கு கால் உண்டா தல?

Dreamzz said...

//ஏண்டா டேய்!!! இதென்ன ஷகீலா படமா??? கும்பலா உக்காந்து பாக்குறதுக்கு//

ஹிஹி! ஆபிஸ் நேரத்துல இது வேறயா!

Dreamzz said...

//எவனாவது ஏதாவது செஞ்சா யோசிக்காம பின்னாடி வரது தமிழனுக்கு புதுசா என்ன???//
ROFL!

Dreamzz said...

மொத்தத்துல புயல் பேர சொல்லி புரஸிய கிளப்பி விட்டுடாங்களா! சரி ப்ரீயா விடுங்க!

துளசி கோபால் said...

ஐ 'மீன்' உங்க 'வலை'யின் 'தலை'ப்பில் இருக்கும் பாத்திரம்:-))))

Anonymous said...

சிவிஆர் அண்ணாவிற்குள் இருந்த மிருகம் அடிக்கடி தலை காண்பிகின்றது.அதுதான் வால் அறுந்த குரங்கு...உங்க நகைச்சுவை பதிவு எல்லாம் படிக்கும் பொழுது கண்ணீர் வருகின்றது.எல்லாம் ஆனந்த கண்ணீர்.நம்ப serious சிவிஆர் இப்பொழுது serial சிவிஆர் ஆகிட்டார்.என்னம்மா எழுதுறீங்க...எல்லாமே நல்லா இருக்கு அண்ணா

காட்டாறு said...

காமெடி கலக்கல்ன்னு ஏதாச்சும் போட்டி இருக்குதாங்க அண்ணாச்சி! கலக்கி எடுத்திருக்கீங்க. படமும் கலக்கலா எடுத்திருக்கீங்க.

பின்குறிப்பு:
நான் 39 மாடி கட்டிடத்தில் 35 வது மாடியில் இருந்தேன். காற்றினால் கட்டிடம் ஸ்கிரீச் ஸ்கிர்ரீச் சத்தத்துடன் அசைய... ஒலிப் பெருக்கியில் சன்னல் பக்கமா நிற்க வேண்டாமின்னு அலற, காற்றினால் பனியா, மழையா எனத் தெரியாது மழை பெய்ய.... வீடியோ காமரா இல்லையேன்னு இருந்தது. சரி.. வீட்டுக்குப் போய் ஒரு பதிவைப் போடலாமின்னு பார்த்தா.. நம்ம CVR ரோட்டுல நின்னு படம் புடிச்சி பதிஞ்சிட்டார்ன்னு ஒலிப்பெருக்கில அலறிட்டாங்க. ;-)

CVR said...

@Dreamzz
////அவர் காலை இல்லைய்யா!! போன் கால!! ஆசை!! //

போனுக்கு கால் உண்டா தல?//

ஆஆஆஆ!!
தல!! உங்க கால் எங்கேன்னு மொதல்ல சொல்லுங்க!! :-)

@துளசி டீச்சர்
//ஐ 'மீன்' உங்க 'வலை'யின் 'தலை'ப்பில் இருக்கும் பாத்திரம்:-))))//
ஓஹோ!!!
நீங்க இதைத்தான் மீன் பண்ணீங்களா??
அதெல்லாம் யோசிச்சு போடல டீச்சர்!!
எல்லாம் இறைவன் செயல்!! :-P

@துர்கா அக்கா
//உங்க நகைச்சுவை பதிவு எல்லாம் படிக்கும் பொழுது கண்ணீர் வருகின்றது.எல்லாம் ஆனந்த கண்ணீர்.நம்ப serious சிவிஆர் இப்பொழுது serial சிவிஆர் ஆகிட்டார்.என்னம்மா எழுதுறீங்க...எல்லாமே நல்லா இருக்கு அண்ணா/
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!
எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்களோட ஆசி தான் அக்கா!! :-D

@காட்டாறு
//நான் 39 மாடி கட்டிடத்தில் 35 வது மாடியில் இருந்தேன். காற்றினால் கட்டிடம் ஸ்கிரீச் ஸ்கிர்ரீச் சத்தத்துடன் அசைய... ஒலிப் பெருக்கியில் சன்னல் பக்கமா நிற்க வேண்டாமின்னு அலற, காற்றினால் பனியா, மழையா எனத் தெரியாது மழை பெய்ய.... வீடியோ காமரா இல்லையேன்னு இருந்தது. சரி.. வீட்டுக்குப் போய் ஒரு பதிவைப் போடலாமின்னு பார்த்தா.. நம்ம CVR ரோட்டுல நின்னு படம் புடிச்சி பதிஞ்சிட்டார்ன்னு ஒலிப்பெருக்கில அலறிட்டாங்க. ;-)//

அட!!
உங்க ஊருலையுமா???
எங்க ஊருலையும் நீங்க சொன்னா மாதிரி எல்லாம் ஆச்சு!!! எறுமை மாடு பறக்கரா மாதிரி மேட்டரு தான் எதுவும் இல்ல!! :-(

Anonymous said...

Nalla comedya ezhuthirkeenga!! Photos m superra iruku!!!
seriously anda nimishathula ungaluku bayama irukkalaya?

CVR said...

We were more excited than afraid-னு தான் சொல்லனும்!!
நம்ம மக்கள்ஸ் எல்லாம் எதோ திருவிழா பாக்க போறா மாதிரி கிளம்பி வெளில வந்துட்டாங்களா!!
அதான் பயம் எதுவும் இல்ல!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin