நில் கவனி கேன்சர் - பாகம் 2

நம் உடலில் உள்ள உயிரணுக்களில் இருந்து மாறுபட்டு வித்தியாசமாக உருவாகுபவை தான் இந்த கேன்சர் உயிரணுக்கள் என்று போன பகுதியில் பார்த்தோம்.கூடவே இந்த வகை உயிரணுக்கள் மேலும் தன்னை போன்ற மற்ற உயிரணுக்களை உற்பத்தி செய்து தள்ளிக்கொண்டு இருக்கும் என்று போன பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.இருந்தா இருந்துட்டு போகட்டும்,அதனால என்ன,இதனால என்ன பிரச்சினை அப்படின்னு நீங்க கேக்கறீங்க!!

என்ன மாதிரி நீங்களும் பாசக்கார பயலுவ தானே,அதுவும் வந்தாரை வாழ வைக்கும் இனத்துல வேற பொறந்துட்டோம், அதான் என்னை மாதிரி உங்களுக்கும் இந்த கேள்வி தோனுது.ஆனா பாருங்க இந்த வித்தியாசமான உயிரணுக்கள் சும்மா இருக்கறது இல்லை ,சாதுவாக தான் உண்டு தன் கடமை உண்டுன்னு சுத்திட்டு இருக்கற மத்த உயிரணுக்களை இது தாக்கி அழிக்க ஆரம்பிக்குது,அதுமில்லாமல் உடலில் தன்னுடைய இடத்தை விட்டு வேறு ஒரு உறுப்புக்கு ஏல்லாம் போக ஆரம்பிக்குது.ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான உயிரணுக்கள் உண்டு அப்படின்னு போன பகுதியில சொல்லியிருந்தேன் ஞாபகம் இருக்கா?? இது பாட்டுக்கு இஷ்டத்துக்கு சுத்திக்கிட்டு இருந்தா என்னத்துக்கு ஆகறது?? அதாவது ஒரு டாக்டரு மருத்துவமனைக்கு போய் வேலை செய்யனும்,என்னை மாதிரி மென்பொருள் வல்லுனர்கள் ஆபீசுக்கு போய் வேலை(?!) செய்யனும். எங்களை ஏதாச்சும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ஆணி பிடுங்க சொன்னா காமெடி தான்!!

ஒரு 100 பேரு சுறுசுறுப்பா சீரா வேலை செய்யும் ஒரு தொழிற்சாலையை கற்பனை செய்துக்கொள்ளுங்கள்,அதில் ஒரு பத்து தொழிலாளிகள் வேலையும் செய்யாமல்,மற்ற தொழிலாளிகளையும் தன்னை போல மாற்றிக்கொண்டு தங்கள் வேலை செய்யும் வட்டத்தை விட்டு மத்த வட்டங்களுக்கும் சென்று பிரச்சினை செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்,அப்பொழுது தொழிற்சாலை என்னத்துக்கு ஆகறது?? சீக்கிரமே திவாலாகி போக வேண்டியதுதான். இப்படிப்பட்ட நிலைமை தான் கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலுக்கும் ஏற்படுகிறது.
ஒழுங்கா சொன்ன பேச்சை கேட்டுக்கிட்டு இருக்கற உயிரணுக்களில் எப்படி திடீர்னு இந்த கேன்சர் உயிரணுக்ளாக உருவாக ஆரம்பிக்கின்றன????

ஒழுங்காக இருக்கும் உயிரணுக்களில் இந்த மாதிரியான மாறுந்தன்மை(mutation) வருவதற்கு ஒரு வித நச்சுப்பொருளே காரணம்.இந்த நச்சுப்பொருள் உருவாக்கும் காரணிகளை carcinogens என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.புகையிலை,கதிர்வீச்சு மற்றும் நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் பொருட்கள்,சில கொடிய தொற்றுநோய் கிறுமிகள் போன்றவற்றை இந்த carcinogens பட்டியலில் சேர்க்கலாம். இந்த நச்சுப்பொருள்களை ஒரே அளவு உட்கொண்ட இரு வேறு நபர்களில் ஒருவருக்கு கேன்சர் வரலாம்,ஒருவருக்கு வராமல் போகலாம்.அது அவரவரின் மரபணு,உடல் நிலை,வயது,உடம்பில் உள்ள DNA-க்களுடன் இந்த carcinogen-களின் செயல்பாடு இப்படி பல விஷயங்களை பொருத்தது. புகையிலை ஒரு முக்கியமான carcinogen என்பதால் தான் புகை பிடிப்பது,புகையிலை போடுவது ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுருத்துவதற்கு முக்கியமான காரணம்.(சாம் தாத்தா,இது உங்களுக்கு தான்!! :-))

இப்படியாக உருமாறும் உயிரணுக்களால் மற்ற உயிரனுக்களிடம் பரவி கேன்சர் ஒருவரின் உடலை அரிக்கத்தொடங்கி விடுகிறது.உடலில் உள்ள எந்த பகுதியில் உள்ள உறுப்பிலும் இந்த கேன்சர் வரலாம் என்றாலும் முக்கியமாக மக்களை பாதிக்கும் சில கேன்சர் வகைகளை கீழே பார்க்கலாம்.

1.)Prostate Cancer (prostate என்பதற்கு தமிழ்ல என்ன வார்த்தைனு தெரியல மக்கா,இது ஆண்களிடையே முதன்மையாக காணப்படும் புற்றுநோய்)
2.)நுரையீரல் புற்றுநோய்
3.)Colorectal cancer(Colon-க்கு தமிழ்ல என்னபா??அங்கிட்டு வர புற்றுநோயாம் இது)
4.)சிறுநீரகப்பை புற்றுநோய்(Bladder cancer)
5.)மார்பகப்புற்றுநோய் (இது பெண்களிடம் முதன்மையாக காணப்படும் புற்றுநோய்)
6.)இரத்தப்புற்றுநோய்(Leukemia or blood cancer,இது இளைஞர்களிடையே அதிகமாக காணப்படும் புற்றுநோய்)
7.)சிறுநீரக புற்றுநோய் (nephroblastoma /wilms tumour) மற்றும் நரம்பு மண்டல புற்றுநோய்(neuroblastoma-CNS central Nervous system tumour) - இது குழந்தைகள் இடையே அதிகமாக தோன்றும் புற்றுநோய்
8.)Cervical cancer (இது பெண்களிடையே அதிகமாக தோன்றும் மற்றுமொரு புற்றுநோய்)


மேற்குறிப்பிட்ட வகைகள் எல்லாம் பரவலாக காணப்படும் புற்றுநோய்கள்,ஆனால் உடம்பில் பல பாகங்களிலும் இந்த புற்றுநோய்கள் வர வாய்ப்புண்டு. வயதாக ஆகத்தான் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும் இந்த நோய் எல்லா வயதினருக்கும் வரலாம்.கருவில் உள்ள சிசுவுக்கு கூட இந்த நோய் வரலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
உலக அளவில் உயிரிழப்புகளில் 13 சதவிகிதம் கேன்சரினால் ஏற்படுகிறது.2007-இல் மட்டும் உலகளவில் 76 லட்சம் பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 25% சாவுகள் கேன்சரால் ஏற்படுகிறது. அதாவது நாலு பேரில் ஒருவர் கேன்சரால் உயிரிழக்கிறார்....
சரி சரி!!
போதும் நிறுத்து!! நீ என்ன சொல்ல வரேன்னு தெரியுது!! இப்போ இந்த நோய்க்கு எப்படி சிகிச்சை தருவாங்க?? இந்த நோயை முழுமையா குணப்படுத்த முடியுமா??
அப்படின்னு கேக்கறீங்களா??

அடுத்த பகுதியில சொல்லுறேன் !! கொஞ்சம் பொறுங்க!!
வரட்டா??? :-)

References :

http://en.wikipedia.org/wiki/Cancer

படங்கள்:
http://cache.eb.com/eb/image?id=67715&rendTypeId=4


நில் கவனி கேன்சர் - பாகம் 1

நில் கவனி கேன்சர் - பாகம் 3

நில் கவனி கேன்சர் - பாகம் 4 (நிறைவு பாகம்)

22 comments:

கானா பிரபா said...

இரண்டாவது பகுதி படிச்சிட்டேன், இனிமே தான் முதல் பகுதியை படிக்கணும், ரொம்பவே உபயோகமான தகவல்கள். ஆங்கிலத்தை தமிழ்ப்படுத்துவதற்கு அதிக நேரம் மெனக்கடாதீங்க. தமிழாக்கும் போது இன்னும் புரியக் கஷ்டமாயிடும். எனவே தமிழ் வார்த்தை தெரியாவிட்டால் சாமி கண்ணக் குத்தாது ;-)

கோபிநாத் said...

மிக கவனத்துடன் எழுதியிருக்கிங்க...உங்கள் உழைப்புக்கு என்னோட பாராட்டுகள் ;)))

கப்பி | Kappi said...

//மிக கவனத்துடன் எழுதியிருக்கிங்க...உங்கள் உழைப்புக்கு என்னோட பாராட்டுகள் ;)))//

ரிப்பீட்ட்ட்டு!! கலக்குங்க அண்ணாத்த!!

cheena (சீனா) said...

சீவியார் - கவலைப் பட வேண்டாம் - தமிழ் தமிழ் என தமிழ்ப் படுத்தி குழப்ப வேண்டாம். தெரிந்த தமிழ்ச் சொற்களையும் புரிந்த ஆங்கிலச் சொற்களியும் கலந்து எழுதுவது தவறில்லை. பயனுள்ள பதிவு. மிகக் கவனத்துடன் எழுதும் பதிவு. தொடர்க - வாழ்த்துகள்.

Sanjai Gandhi said...

கேன்சர் பற்றிய அடிப்படை தகவல்களை அற்புதமா புரியற மாதிரி சொல்லி இருக்கிங்க. நானும் கானா கட்சி தான். முதல் பகுதியை இனி தான் படிக்கனும். :) அடுத்த பகுதியை சீக்கிரமே எழுதுங்க. ஆவலோட வெய்ட்டிங். :P

Divya said...

தெளிவான தகவல்கள், நல்ல முயற்சி சிவிஆர்!
அதிக சிரத்தையெடுத்து பதிவை எழுதியிருக்கிறீங்க, பாராட்டுக்கள் சார்!!

துளசி கோபால் said...

ஆங்கிலச் சொல்லுக்காக மெனெக்கெட வேணாம். இதுவே புரியும்படித்தான் இருக்கு.

புத்து எங்கே வேணுமுன்னாலும் வரும் என்பது ரொம்பச்சரி.

நண்பர் ஒருவரை மருத்துவமனையில் போய்ப் பார்த்தப்ப, அங்கே அவருடைய ந்ண்பர் ஒருவரும் விஸிட் வந்திருந்தார். அவர் இங்கே தனிப்பட்ட க்ளப் களில் ஹாக்கி விளையாடுபவர். எப்பவும் சுறுசுறுப்பா தேகப்பயிற்சி, விளையாட்டுன்னு உடம்பைக் கச்சிதமா வச்சிருந்தார்.

போனவாரம் கிடைச்ச செய்தி, அவருக்குத் தலைவலின்னு மருத்துவர்கிட்டே போனப்ப, ஒரு சந்தேகம் வந்து பரிசோதிச்சவுடன், மூளையில் புற்று நோயாம். மறுநாள் அதிகாலையில் மரணம். நோய் என்று தெரிஞ்ச 12 மணி நேரத்தில் போயிட்டார்.
ப்ச்....

Dreamzz said...

ubayagomana pathivu.
keep writing!

Dreamzz said...

//தமிழாக்கும் போது இன்னும் புரியக் கஷ்டமாயிடும். எனவே தமிழ் வார்த்தை தெரியாவிட்டால் சாமி கண்ணக் குத்தாது ;-)
//
repeatu!

CVR said...

@கானா பிரபா
வாங்க அண்ணாச்சி!!
//ஆங்கிலத்தை தமிழ்ப்படுத்துவதற்கு அதிக நேரம் மெனக்கடாதீங்க.///
நீங்க சொல்லுறது சரிதான் அண்ணாச்சி!!மக்களுக்கு புரியறா மாதிரி இருந்தா சரி!

@கோபிநாத்
ரொம்ப ரொம்ப நன்றி தல!! :-)

@கப்பி பய
டாங்க்ஸு பா!! B-)

@சீனா
//தெரிந்த தமிழ்ச் சொற்களையும் புரிந்த ஆங்கிலச் சொற்களியும் கலந்து எழுதுவது தவறில்லை.///
ஆமாம் சீனா,எனக்கும் தவிர்க்க முடியாத பட்சத்தில் ஆங்கில வார்த்தைகள் போட ஆட்சேபனையில்லை!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

@சஞ்சய்
//முதல் பகுதியை இனி தான் படிக்கனும். :) அடுத்த பகுதியை சீக்கிரமே எழுதுங்க. ஆவலோட வெய்ட்டிங். :P//
நன்றி சஞ்சய்,நேரம் கிடைக்கும் போது முதல் பகுதியை பாருங்கள்!! :-)

@திவ்யா
///அதிக சிரத்தையெடுத்து பதிவை எழுதியிருக்கிறீங்க, பாராட்டுக்கள் சார்!!////
மிக்க நன்றி மேடம்!! :-)

@துளசி டீச்சர்
//
போனவாரம் கிடைச்ச செய்தி, அவருக்குத் தலைவலின்னு மருத்துவர்கிட்டே போனப்ப, ஒரு சந்தேகம் வந்து பரிசோதிச்சவுடன், மூளையில் புற்று நோயாம். மறுநாள் அதிகாலையில் மரணம். நோய் என்று தெரிஞ்ச 12 மணி நேரத்தில் போயிட்டார்.////
என்ன கொடுமை இது!! :-(

@ட்ரீம்ஸ்
வாப்பா!! :)

////தமிழாக்கும் போது இன்னும் புரியக் கஷ்டமாயிடும். எனவே தமிழ் வார்த்தை தெரியாவிட்டால் சாமி கண்ணக் குத்தாது ;-)
//
repeatu! /////
புரியுது பா!!நானும் எல்லோருக்கும் புரியும்படியும் ரசிக்கும் படியும் எழுத்துக்கள் அமைய வேண்டும் என்று விரும்புவேன்!!
:-)

Anonymous said...

Side-effect இல்லாததனால் புற்றுநோய் நமக்கு வந்துள்ளது என்பதை ஆரம்பகாலத்தில் அறிவது மிக கடினம் என்று மருத்துவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அறிந்துகொண்டேன். அறிய நேரும்பொழுது அது இரண்டாவது அல்லது மூன்றாவது stageக்கு போயிருக்கும். அதிகம் பேர் இறப்பது இதனால்தான். துளசி அவர்களுடைய நண்பருக்கும் இதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

பலரும் சொன்ன மாதிரி உங்கள் உழைப்புக்கு என்னோட பாராட்டுகள்.

-அரசு

Anonymous said...

அண்ணா சத்தியமா நீங்க பெரிய ஆளுங்க,எவ்ளவு பெரிய விசயத்த எவ்வளவு சாதரனமா எனக்கு விளக்கிட்டீங்க. அதிக நாள் காக்க வைக்காம இரண்டாம் பதிப்ப வெளியிட்டமைக்கு நன்றி.

ஷாலினி said...

very useful information..

romba hardwork panni irukeenga nu theriyuthu..

well done!! :)

SathyaPriyan said...

//
ஒரு டாக்டரு மருத்துவமனைக்கு போய் வேலை செய்யனும்,என்னை மாதிரி மென்பொருள் வல்லுனர்கள் ஆபீசுக்கு போய் வேலை(?!) செய்யனும். எங்களை ஏதாச்சும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ஆணி பிடுங்க சொன்னா காமெடி தான்!!
//
இதை விட எளிமையாக அனைவருக்கும் புரியும்படி இவ்வளவு சிக்கலான செய்தியை கூற முடியாது.

அருமை.

நிவிஷா..... said...

nice post
informative

natpodu
nivisha

Anonymous said...

எனது தகபனாருக்கு இருன்தது எனகும் வருமா cancer ?

CVR said...

@அரசு
உண்மைதான் அரசு!!
கேன்சருக்கென்று தனியாக பெரிதாக அறிகுறிகள் இல்லாதது இந்த நோயை விரைவில் அறிந்துக்கொள்ள முடியாமல் செய்து விடுகிறது.

@புதுமைப்பித்தன்
//அதிக நாள் காக்க வைக்காம இரண்டாம் பதிப்ப வெளியிட்டமைக்கு நன்றி.///
அடுத்த பகுதியும் போட்டாச்சு பாருங்க! :-)

@ஷாலினி
ரொம்ப நன்றிங்க மேடம்! :-)

@சத்தியப்பிரியன்
வாங்க அண்ணாச்சி!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

@நிவிஷா
Thanks Nivisha! :-)

@அனானி
//எனது தகபனாருக்கு இருன்தது எனகும் வருமா cancer ?///
எனக்கு தெரிந்த வரை,
இந்த நோய் மரபணு சார்ந்தது என்றாலும் தந்தைக்கு வந்தால் அவரின் பிள்ளைக்கும் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்பதே உண்மை!!இதை பற்றி வல்லுனர்கள் ஏதாவது பதில் த்ருகிறார்களா என்று பார்ப்போம்! :-)

பத்மா அர்விந்த் said...

நல்லா எளிமையா இருக்கு. அதிகமா பான்பராக் மெல்லுவதுகூட வாயில் புற்றுநோய் வரக் காரணமாகக் கூடும்.

delphine said...

Highly informative! Good job!!

CVR said...

@பத்மா அரவிந்த்
வாங்க மேடம்!! நீங்கள் சொல்வது சரி!!
கேன்சரின் அபாயங்களை அறியாமல் இத்தனை பேர் புகையிலைக்கு அடிகையாகியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.

@Delphine
//delphine said...

Highly informative! Good job!!///
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி டெல்ஃபின் மேடம்!! :-)
அனானியின் கேள்விக்கு என்னுடைய பதில் சரிதானா??

Unknown said...

அன்பு CVR,

நான் கேன்சர் பற்றி தேடிய போது, உங்களின் பதிவு கிடைத்தது. மிக நன்றாகவும் எளிதாகவும் விலக்கிவுள்ளீர்கள்.

தமிழ்மனத்துடன் இனைக்கலாமே?

நன்றியுடன்
--மஸ்தான்

தமிழ் said...

prostate- இந்த வார்த்தைக்கு எனக்கும் தமிழ்ல்ல என்னான்னு தெரியாது... மன்னிக்கவும்!

ஆனா, அத பத்தி கொஞ்சூன்ன்ன்டு தெரியும்... அது ஒரு நாளமுள்ள சுரப்பி(exocrine gland). இந்த சுரப்பி ஆண்களுக்கு மட்டும் தான் உண்டு. இது சுரக்கிற திரவத்தால விந்தணுக்களின் நகரும் தன்மை, வாழ்நாள் எல்லாம் அதிகரிக்கப்படுது.

ஆண்களில் இந்த சுரப்பி சிறுநீர்ப்பைக்கும், சிறுநீர்ப்புறவழிக்கும் இடையில் உள்ளது. விந்தணுக்கள் இவ்வழியே வரும்போது இச்சுரப்பியின் திரவத்தில் கலந்து நீள் ஆயுள் பெறுகிறது. பெண்களுக்கு இந்த சுரப்பி கிடையாது.

அப்புறம் colorectal - அப்படின்னா, உணவு மண்டலத்தில் ஒரு பகுதி பெருகுடல். இந்த பெருங்குடல மூணு பகுதியா பிரிச்சு சொல்லுவாங்க! அதாவது,
1. cecum
2. colon
3. rectum

கடைசியா இருக்க அந்த கோலன், இரெக்டம் இந்த ரெண்டு பகுதியவும் சேர்த்து தான் colon+rectum - colorectal ஆனது. தமிழ்ல்ல சொன்னா பெருங்குடல்ல வர்ர புற்றுநோய்ன்னு சொல்லலாம்.

Related Posts Widget for Blogs by LinkWithin