நில் கவனி கேன்சர் - பாகம் 3

இந்த நோயை பற்றி ஏகத்துக்கு பயம் காட்டினது போதும்,இப்போ இதை எப்படி சரி பண்ணலாம்னு சொல்லு அப்படின்னு போன பகுதியோட கடைசியில நீங்க எல்லாம் கேட்டு இருந்தீங்க!!!
இது நோயை குணப்படுத்துவதுக்கு கொஞ்சம் மெனக்கெடனும் மக்களே!!
நோயின் தீவிரம்,இதை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிக்கப்பட்டது,நோயாளியின் வயது,சிகிச்சையை தாங்கிக்கொள்ளும் திறன் போன்ற பல விஷயங்களை பொருத்து இந்த நோய்க்கான சிகிச்சையும்,குணப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளும் மாறு படும்!! நீங்க யோசிச்சிட்டிருக்கறது போல எவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்கறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது!! கண்டுபிடிச்ச அப்புறம் நோயை குணப்படுத்த பல வழிமுறைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உபயோகப்படுத்துவாங்க ,ஆனா பரவலான சில வழிமுறைகளை இப்போ பாக்கலாம்.

கீமோதெரபி:
புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கவல்ல மருந்துகளை மாத்திரை வடிவில் கொடுத்து குணப்படுத்துவது தான் கீமோதெரபி எனப்படும்.குறிப்பாக உயிரணுக்களின் பல்கிப்பெரிகும் தன்மையை குலைப்பதே இந்த மருந்துகளின் முக்கிய பணி.மற்ற சிகிச்சை முறைகளை போல இந்த முறையிலும் புற்றுநோய் உயிரணுக்களுடன் சேர்த்து நல்ல உயிரணுக்களும் பாதிக்கப்படும்,ஆனால் சிகிச்சை முடிந்த பின் புற்றுநோய் அல்லாத உயிரணுக்கள்் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பி விடும்.
இரத்தப்புற்றுநோயை பொருத்த வரை கீமோதெரபியின் வீரியம் அதிகமாகும்பொழுது புற்றுநோய் உயிரணுக்களோடு சேர்த்து ஆரோக்கியமான உயிரணுக்களும் பெருமளவில் அழிந்துபோய் உடம்பில் எதிர்ப்பு சக்தியே முழுவதுமாக முடங்கிப்போகலாம்.அந்த மாதிரியான சமயத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை (Bone marrow transplant) எனப்படும் ஒரு சிகிச்சை அளிக்கப்படும். ஒருவரின் உடலில் ரத்தத்தின் உற்பத்தி எலும்பு மஜ்ஜையில் இருந்துதான் உருவாகிறது என்பதால் அதை புதிதாக பொருத்துவதன் மூலம் அழிந்துப்போன இரத்த உயிரணுக்களுக்கு பதிலாக புதிதான உயிரணுக்கள் உருவாக்கப்படுகின்றன.

அறுவைசிகிச்சை:
உடலில் ஒரு பகுதியில் கேன்சர் உருவாகியிருக்கும் போது அந்த பகுதியை மட்டும் அறுவைசிகிச்சை மூலமாக அகற்றுவது .இது புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது என்பதை பொருத்தே சாத்தியப்படும். நான் முன்பே கூறியிருந்தது போல புற்றுநோய் உயிரணுக்கள் கண்ட மேனிக்கு இங்கிட்டும் அங்கிட்டும் சுத்த ஆரம்பிக்கும் என்பதால் அவை அப்படி பரவும் முன்னரே அறுவைசிகிச்சை செய்தால் உண்டு. கட்டியை வெட்டி எடுத்த பிறகும் சில உயிரணுக்கள் ஒளிந்து கொண்டிருந்து பின்னொரு காலத்தில் தலை தூக்கலாம்.ஆனால் இந்த பிரச்சினை மற்ற சிகிச்சை முறையிலும் உண்டு.

கதிர்வீச்சு சிகிச்சை:
உடலில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் கதிரிவீச்சினை செலுத்தி பாதிக்கப்பட்ட உயிரணுக்களை கொல்வது இந்த வகையான சிகிச்சையில் செய்யப்படும் முறை.இப்படி கதிர்வீச்சு செலுத்தும்போது பாதிக்கப்பட்ட உயிரணுக்களோடு நல்ல உயிரணுக்களும் சேர்ந்தே தான் அழிந்து போகும் ஆனால் பாதிக்கப்படாத உயிரணுக்கள் திரும்பவும் தானே உருவாகிக்கொள்ளும். இந்த வகை சிகிச்சையில் கடுமையான பக்கவிளைவுகளும் உண்டு.

கேன்சரின் விளைவுகளுக்கான சிகிச்சை:
எல்லாவிதமான சிகிச்சையும் பலனளிக்காத போது,நோயை குணப்படுத்துவதற்கான நிலையை தாண்டிய பின், நோயினால் நோயாளிக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க சிகிச்சை அளிக்கப்படும்.இந்த சிகிச்சைக்கு Symptom control அல்லது Palliative treatment என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.பாதிக்கப்பட்டவருக்கு உண்டாகும் உடல்சோர்வு,வலி ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த சிகிச்சையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட முறைகள் தவிர வேறூ சிகிச்சை முறைகளும் கையாளப்படலாம்,ஆனால் முக்கியமான முறைகளை மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளேன்.
சரிபா!!நீ சொல்லுறது புரியுது! இந்த நோய் வந்துருச்சான்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு கேக்கறீங்களா??
திரும்பவும்,கேன்சரில் பல வகைகள் இருப்பதால் எல்லாவற்றிற்கும் ஒரே அறிகுறி கிடையாது,குத்துமதிப்பா சில அறிகுறிகளை கீழே காணலாம்.

அரிப்பு,சிறு கட்டிகள்இருமல்,எலும்பு முறிவு,ரத்தக்கசிவு போன்றவை.பாதிக்கப்பட்ட இடத்தில் வலி,ஆனால் புற்றுந்நோயின் ஆரம்ப காலத்தில் வலி அவ்வளவாக இருக்காது,நோய் சற்றே முற்றிய பின் தான் இந்த வலி தோன்ற ஆரம்பிக்கும்.உடல் எடை இழப்பு,உடல் சோர்வு,பசியின்மை ஆகியவையும் இந்த நோய்க்கான அறிகுறிகள்.
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் கேன்சருக்கு மற்றுமின்றி பிற்பல உடல் உபாதைகளுக்கும் வரலாம் என்பதை மறக்க வேண்டாம்.

இப்படி அறிகுறிகள் காட்டிக்கொடுத்தாலும் நோய் இருப்பதை அறிய ரத்தப்பரிசோதனை,Xray,CT scan மற்றும் Endoscopy ஆகிய முறைகளை பயன்படுத்துவார்கள்.இதன் மூலம் ஆறிந்துக்கொண்ட பின் பாதிக்கப்பட்ட உறுப்பிள் இருந்து மாதிரி திச்சுக்களை உடலில் இருந்து வெட்டியெடுத்து ஆய்வு செய்து உறுதிப்படுத்துகிறார்கள்
தாய்மார்கள் மார்பகப்புற்றுநோய்க்கு சுய பரிசோதனை செய்துக்கொள்வதற்கான வழிமுறையை இந்த சுட்டியில் சென்று பார்க்கலாம் .

இன்னைக்கு இது போதும்,அடுத்த பகுதியில இந்த நோயை தவிர்க்க நாம் என்னென்ன செய்யலாம் என்று பார்க்கலாம்!!!
வரட்டா? :-)

நில் கவனி கேன்சர் - பாகம் 1

நில் கவனி கேன்சர் - பாகம் 2

நில் கவனி கேன்சர் - பாகம் 4 (நிறைவு பாகம்)

16 comments:

துளசி கோபால் said...

நுரையீரல் புற்று இருந்தா இருமல் அதிகம் வரும். அந்த ஒரு வகை இருமலை வைத்தே அனுபவம் இருக்கற மருத்துவர்கள் நோயைக் கண்டுபிடிச்சுடராங்க.

ரெண்டு வருடத்துக்கு ஒரு முறை மார்பகப்புற்று நோய் இருக்கான்னு ஸ்கான் பண்ணிக்கணும். இங்கே நியூசியில் 50 வயசாச்சுன்னா, இலவசமா பரிசோதனை செஞ்சுக்கலாம்.

Dreamzz said...

மீண்டும் ஒரு உபயோகமான நல்ல விஷயம்... பதிவு! எப்படி தவிர்க்கலாம் என்பதையும் சொல்லிடுங்க :)

கோபிநாத் said...

ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொண்டு அதன் பலனை அனைவரும் அறியும் வண்ணம் தந்தமைக்கு நன்றியோ நன்றி ;)

பத்மா அர்விந்த் said...

நுரையீரல் புற்றுநோய் கண்டுபிட்க்கிறது ரொம்ப கஷ்டம். என்னதான் பிராங்கைடிஸ் இருந்தாலும், நுரையீரலின் கீழ்ப்பாகம் தவிர்த்து வேறெங்கயும் நரம்பு இல்லாததால வலியும் இருக்காது. கட்டி இல்லாட்டி X Ray யிலயும் தெரியாது. இப்ப CAT (spiral) மூலமா ஆரம்பத்தில கண்டுபிடிக்கலாம்னு அதை பயன்படுத்த அனுமதி கிடைச்சிருக்க்கு. சிகரெட் அதிகமா பிடிச்சா, வர்ர இருமல் ஆரம்ப கால நுரையீரல் வியாதி இல்லாட்டா COPD தான் கைகாட்டும்.

நிவிஷா..... said...

informative post!

நட்போடு
நிவிஷா

கப்பி | Kappi said...

பயனுள்ள தகவல்கள்! தொடருங்கள்!!

Anonymous said...

நன்றி. அடுத்த போஸ்டுக்கு வெயிட்ங்.

-அரசு

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல பதிவு. தொடருங்கள்.

புதுமை பித்தன் said...

தொடரட்டும் உங்கள் மேலான சேவை வாழ்த்துக்கள் , நன்றி

Iyappan Krishnan said...

டாக்டர் சீவீஆர் -- வாழ்க வாழ்க

delphine said...

Lung Cancer...
any cough that doesnt get cured after a course of antibiotics --- suspect Lung Ca.
நல்லா informative ஆக இருக்கு!

G.Ragavan said...

முருகா..படிக்கிறப்பவே பயமா இருக்கே. ஆண்டவா...எல்லாரும் உன் பிள்ளைங்கதானே....பாத்துக்கோப்பா.

இதத் தவிர எனக்கு வேற ஒன்னும் சொல்லத் தோணலை.

CVR said...

@துளசி டீச்சர்
//ரெண்டு வருடத்துக்கு ஒரு முறை மார்பகப்புற்று நோய் இருக்கான்னு ஸ்கான் பண்ணிக்கணும். இங்கே நியூசியில் 50 வயசாச்சுன்னா, இலவசமா பரிசோதனை செஞ்சுக்கலாம்.///
பரவாயில்லையே !! வளர்ந்த நாடுகளில் இந்த நோயை தடுப்பதற்கு நிறையவே முயற்சிகளை எடுத்து வருகின்றனர் என்பது தெம்பளிக்கும் விஷயம்!

@ட்ரீம்ஸ்
////மீண்டும் ஒரு உபயோகமான நல்ல விஷயம்... பதிவு! எப்படி தவிர்க்கலாம் என்பதையும் சொல்லிடுங்க :)//
போட்டுரலாம்!! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)

@கோபிநாத்
///ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொண்டு அதன் பலனை அனைவரும் அறியும் வண்ணம் தந்தமைக்கு நன்றியோ நன்றி ;)///
உங்களை போன்ற நண்பர்களின் ஆதரவு தான் எனக்கு இது போன்ற பதிவுகள் போட உந்துசக்தி!
மிக்க நன்றி தல!! :-)

@பத்மா அரவிந்த்
சூப்பரு!!
நிறைய மேலதிக தகவல்கள் அளித்திருக்கிறீர்கள்!! மிக்க நன்றி பத்மா மேடம்! :-)

@நிவிஷா
//informative post!

நட்போடு
நிவிஷா//
நன்றி நிவிஷா! :-)

CVR said...

@கப்பி பய
//பயனுள்ள தகவல்கள்! தொடருங்கள்!!//
நன்றி பா!!

@அரசு
//நன்றி. அடுத்த போஸ்டுக்கு வெயிட்ங்.

-அரசு///
வாங்க அரசு! சற்றே வேலை கூடி இருக்கிறது !! எப்பொழுது போட முடிகிறது என்று பார்க்கலாம்! :-)

@மதுரையம்பதி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)

@புதுமைப்பித்தன்
தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி புதுமைப்பித்தன்

@ஜீவ்ஸ்
அட நீங்க வேற!! ஏதோ இணையத்துல இருக்கறதை பார்த்து போடுறேன் அவ்வளவுதான்!! :-)

@டெல்ஃபின்
//Lung Cancer...
any cough that doesnt get cured after a course of antibiotics --- suspect Lung Ca.
நல்லா informative ஆக இருக்கு!///
உபயோகமான தகவல்!! மிக்க நன்றி டெல்ஃபின் மேடம்! :-)

@ஜிரா
//ஆண்டவா...எல்லாரும் உன் பிள்ளைங்கதானே....பாத்துக்கோப்பா.//
Amen!! :-)

SathyaPriyan said...

As usual good and informative.

Anonymous said...

EAT WISELY AND STAY HEALTHYCarrot + Ginger + Apple - Boost and cleanse our system.Apple + Cucumber + Celery - Prevent cancer, reduce cholesterol, and improve stomach upset and headache.Tomato + Carrot + Apple - Improve skin complexion and bad breath.Bitter gourd + Apple + Milk - Avoid bad breath and reduce internal body heat.Orange + Ginger + Cucumber - Improve Skin texture and moisture and reduce body heat.Pineapple + Apple + Watermelon - To dispel excess salts, nourishes the bladder and kidney.Apple + Cucumber + Kiwi - To improve skin complexion.Pear & Banana - regulates sugar content.Carrot + Apple + Pear + Mango - Clear body heat, counteracts toxicity, decreased blood pressure and fight oxidization .Honeydew + Grape + Watermelon + Milk - Rich in vitamin C + Vitamin B2 that increase cell activity and strengthen body immunity.Papaya + Pineapple + Milk - Rich in vitamin C, E, Iron. Improve skin complexion and metabolism.Banana + Pineapple + Milk - Rich in vitamin with nutritious and prevent constipation.

Related Posts Widget for Blogs by LinkWithin