வந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது!! வெற்றிகரமாக இரண்டாவது வாரமாக அலுவலகத்திற்கும் சென்று வந்துக்கொண்டிருக்கிறேன்.ஆன் ஆர்பரில் 15 நிமிடங்கள் காரில் பயணம் செய்தால் அலுவலகம் வந்து விடும்,இங்கு 1:30- 2:00 மணி நேரம் பயணம் செய்து அலுவலகம் செல்வது புது அனுபவமாக இருக்கிறது! அதுவும் பைக்கில்,ரயிலில்,பின்பு ஆப்பீஸ் ஷட்டில் என்று பலவிதமான ஊர்திகளில் தாவித்தாவி செல்வது புதிதாக இருக்கிறது!என்னை விட தொலைவில் இருந்து வருபவர்களைக்கண்டு பரிதாபப்படாமல் இருக்கு முடியவில்லை.
சென்னையில் திரும்ப வண்டி ஓட்டுவது பழக நான் நினைத்ததை விட சொற்ப நேரமே தான் பிடித்தது.ஆனாலும் அவ்வப்போது முக்கிய ரோட்டினுள் வேகத்தைக்குறைக்காமல் திடீரென நுழையும் அறிவுஜீவிகளாலும்,ரோட்டை கடக்கும்போது ரோட்டில் யாராவது வருகிறார்களா என்று பார்க்காமலேயே கடந்து செல்லும் பாதசாரிகளாலும் அவ்வப்போது உயிர் போய் வருகிறது.
கூடவே ரோட்டில் உள்ள நெரிசலும்,அதிலும் மக்கள் செல்லும் வேகமும் அவசரமும் வாழ்க்கையை ஜேம்ஸ் பாண்ட் படம் போல் விறுவிறுப்புடன் எடுத்துச்செல்ல உதவுகிறது.இதில் நான் வழக்கமாக இரயில் நிலையம் அருகில் வண்டியை நிறுத்தும் இடத்திலும் வண்டிகளின் நெருக்கம் மலைக்க வைக்கிறது.மாலையில் திரும்பி வந்த வுடன் எனது வண்டியை எடுப்பதற்கு சற்றே மெனக்கெட வேண்டியுள்ளது! இதில் முந்தாநாள் எனது தலைக்கவசத்தின் முன் உள்ள கண்ணாடியை வேறு உடைத்து வைத்து விட்டார்கள். கண்ணாடி இல்லாத தலைக்கவசத்தை போட்டுக்கொண்டு,அரவிந்த்சாமி போல் இருந்த நான் அடுப்புல வெந்த சாமி ரேஞ்சுக்கு வளம் வருவது அந்தோ பரிதாபம்.
இரயிலில் 2 - 3 மூன்று நாட்களாக பாடல்கள் கேட்டுக்கொண்டு வர ஆரம்பித்துவிட்டேன்!! இரயிலின் இறைச்சலினூடே அதிக ஒலியைவைத்துக்கொண்டு கேட்பது அவ்வளவாக பிடிக்கவில்லை ஆனால்,இசையை வேண்டம் என்று என்னால் என்றைக்குமே சொல்ல முடிந்ததில்லை.
அதுவும் இன்றைக்கு வரும்போது கேளடி கண்மனி படப்பாடல்களை வெகு நாட்களுக்கு பிறகு இரசித்துக்கேட்டுகொண்டு வந்தேன்!
அந்தப்படத்தில் வரும் "கற்பூர பொம்மை ஒன்று எனும் பாடலை பற்றி ஏற்கெனவே இசையரசி பதிவில் சிலாகித்திருக்கிறேன்.அடுத்து "மண்ணில் இந்தக்காதல் இன்றி" பாடலில் அழகாக அடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளின் அணிவகுப்பை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை.
"முத்துமனி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா............."
அட்ரா அட்ரா!!!
இதை எழுதியிருப்பது பாவலர் வரதராஜன் என்று கப்பி நிலவர் மூலம் அறிந்துக்கொண்டேன். அதிகமாக கேள்விப்படாத கவிஞர்!!ஆனால் அசத்தியிருக்கிறார்.
அண்ணாச்சி!! காலைக்காட்டுங்க!!
அப்புறம் அடுத்து "நீ பாதி நான் பாதி கண்ணே" பாட்டு,என்னமா ரொமாண்டிகா எழுதியிருக்காங்க..
"இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட, இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சொர்கம் எதற்கு
என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா
இந்த மனம் தான்
என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம்தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்..."
இப்படி எந்தன் மனம் கவர் பாடகர் யேசுதாஸ் உமா ரமணனுடன் உருகிப்பாட,நானும் கூடவே உருகிவிட்டேன்....
இப்படியே ரயில் பயணம் நேரம் போவதே தெரியவில்லை....
தாம்பரம் முடிச்சூர் சாலையில், வல்லக்கோட்டை போகும் வழியில் நடுவில் ஒரு திருப்பம் எடுத்து சிறிது தூரம் சென்றால் எறையூர் என்று ஒரு ஊர் வரும் . அங்கிருக்கும் சமூக சேவை ஸ்தாபனம்தான் "The New Life charitable trust".இங்கு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வாழ்வதற்கு காப்பகம் நடத்தி வருகிறார்கள்.தவிர உள்ளூரில் உள்ள மக்களின் மேம்பாட்டுக்காகவும் உதவிகள் புரிந்துக்கொண்டு வருகிறார்கள்.இங்கு நான் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு முறை சென்று பார்த்திருக்கிறேன்.அவர்கள் செயல்படும் விதம் மற்றும் மேலாண்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அதற்குப்பின் அவ்வப்போது என் நண்பர் மூலமாக பொருளுதவி செய்வது தவிர அவர்களுடன் எனக்கு தொடர்பில்லை.இன்னிலையில் சமீபத்தில் அவர்களின் சமையலறை கூறை வேயும் பணிக்காக காசு தேவைப்படுகிறது என்று செய்தி கிடைத்தது.அதற்காக அவர்களின் இடத்திற்கு சென்று படங்கள் சில பிடித்து பதிவு ஒன்று போட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன்.அதற்கு கூட வருவதற்கு யாரேனும் கிடைப்பார்களா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.கடைசியில் யாரும் கிடைக்காமல் ,எனது உடன் பிறந்த வெட்கம்/தயக்கம் காரணமாக போன வாரம் போக முடியவில்லை.
அவர்களின் த்ற்போதைய தேவைக்கு பொருளுதவி அளிக்க விரும்புவோர் காசோலை,கேட்புக்காசோலை அல்லது மணி ஆர்டர் மூலமாக உதவலாம். இல்லையென்றால் அவர்களின் வங்கி கணக்கிற்கு இணையம் மூலமாகவும் பணம் அனுப்பலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் பணம் அனுப்புவதற்கும் அவர்களின் இணைய தளத்தில் வழிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் விபரங்கள் அறிய அவர்களின் இணைய தளத்தையோ அல்லது அவர்களின் அலுவலக தொலைபேசியையோ தொடர்பு கொள்ளலாம்.
கண்பார்வையற்றோருக்கு தேர்வெழுத எழுத்தராக செல்வதற்கான கோரிக்கைகளை ஒன்றிரண்டு வருடங்களாகவே பார்த்துவந்திருக்கிறேன். ஆனால் எனக்கோ தற்போது எனது பெயரை எழுதினாலேயே கை வலிக்க ஆரம்பித்து விடுகிறது.அதுவும் விசைப்பலகையிலேயே மொழிபழகி இப்பொழுதெல்லாம் எழுதுவதென்றாலே மலைப்பாக இருக்கிறது! தவிர கையெழுத்தும் கேவலமாகிப்போய்விட்டது!! ஆங்கிலமே இப்படியென்றால் தமிழ் பற்றி கேட்கவே வேண்டாம்!!! இதை வைத்துக்கொண்டு ஒருவருக்கு பரிட்சை எழுதப்போகும் அளவிற்கும் மனதில் தில் இல்லை!!
சமீபத்தில் இணையத்தில் கிடைத்த ஒரு நண்பர் இந்த வாரக்கடைசியில் ஒரு கண்பார்வையற்றோருக்கான பள்ளிக்குச்செல்ல என்னை அழைத்திருக்கிறார். அவர் அவர்களுக்கு வெகு காலமாகவே படிப்பதற்கு சார்ட் செய்து கொடுப்பது,படித்துக்காட்டுவது,தேர்வில் கேள்விகளை படித்துக்காட்டி அவர்களின் விடைகளை விடைத்தாளில் எழுதுவது உள்ளிட்ட பல உதவிகளை செய்துக்கொண்டு வருபவர்!! அவரோடு இந்தப்பள்ளிக்குச்சென்று அவரின் செயல்பாடுகளைப்பார்த்து முடிந்தால் சில படங்கள் பிடித்துக்கொண்டு வந்து ,அதை பற்றி என் பதிவில் எழுதலாம் என்று எண்ணம்!!
எப்படி போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!!
இன்னும் சிறியதும் பெரியதுமாக சிதறல்கள்,தற்போதைய வாழ்வில்!! முழுவதும் சொல்ல பதிவுகள் போதாது,அதனால் இத்தோடு விடை பெறுகிறேன்!!
அப்புறமா பாக்கலாம்!!
வரட்டா?? ;)
தினசரிப்பயணமும் மற்றும் சில செய்திகளும்
Labels:
நிகழ்வு
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
//அரவிந்த்சாமி போல் இருந்த நான் அடுப்புள வெந்த சாமி ரேஞ்சுக்கு வளம் வருவது அந்தோ பரிதாபம்.//
இதைப் படிச்சதுக்கு அப்புறம் கிழே எழுதி இருப்பதைப் படிக்க முடியவில்லை :((
இப்படி எல்லாம் பொய் சொல்லி எழுதுனீங்க நானே தனி போஸ்ட் போட வேண்டி இருக்கும்..இப்போ மூட் ஆவுட்..வீட்டுக்கு போய் பொறுமையா படிக்கிறேன்..;)
கா.கவிஞரே
இந்தத் தகவல் தவறானது. அதுக்காக கப்பியை குத்தம் சொல்லல. பாடல் இசைத்தட்டிலும் கூட பாவலர் வரதராஜன் அப்படித்தான் போட்டிருக்கும், அவர் இளையராஜாவின் மூத்த சகோதரன். இந்தப் பாடலை உண்மையில் எழுதியது கங்கை அமரன் தான். சில ஆண்டுக்கு முன் இங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலு இதைச் சொல்ல ஆமோதித்தார் கங்கை அமரன். தன் அண்ணன் மீதான கெளரவத்திலேயே அவர் பெயர் போட்டதாக சொன்னார். கங்கை அமரன் இதே மாதிரி கொஞ்சம் வருவது போல் இன்னொரு பாட்டு எழுதியிருக்கிறார். தந்தன தந்தன தாளம் வரும்.....
பாவலர் வரதராஜனின் ஒரு பாட்டு மோகன் நடித்த படமொன்றில் வந்திருக்கு. யாராச்சும் கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்.
பாலவர் வரதராஜன் மகன் இளையகங்கை கூட ஒரு இசையமைப்பாளர்.
மத்த விஷயங்கள் பற்றி அப்புறம் க்கிறென்...;-)
ம். நல்ல பதிவு.
மத்த எல்லாரும் சொன்ன மாதிரி... கொஞ்சம்.. கதை விட்டுஇருக்க.
மத்தபடி... welcome Back to Chennai.
கல்ச்சுரல் ஷாக் ஒண்ணும் ஆகலையா?:-))))
சென்னை எப்படி இருக்கு? விட்டுட்டு வந்தமாதிரியேவா?
\\ கானா பிரபா said...
கா.கவிஞரே
இந்தத் தகவல் தவறானது. அதுக்காக கப்பியை குத்தம் சொல்லல. பாடல் இசைத்தட்டிலும் கூட பாவலர் வரதராஜன் அப்படித்தான் போட்டிருக்கும், அவர் இளையராஜாவின் மூத்த சகோதரன். இந்தப் பாடலை உண்மையில் எழுதியது கங்கை அமரன் தான். சில ஆண்டுக்கு முன் இங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலு இதைச் சொல்ல ஆமோதித்தார் கங்கை அமரன். தன் அண்ணன் மீதான கெளரவத்திலேயே அவர் பெயர் போட்டதாக சொன்னார்.\\
தல
சொல்வது உண்மை....பல பேட்டிகளிலும் இதை சொல்லியிருக்கிறார்.
\\இன்னும் சிறியதும் பெரியதுமாக சிதறல்கள்,தற்போதைய வாழ்வில்!! முழுவதும் சொல்ல பதிவுகள் போதாது,அதனால் இத்தோடு விடை பெறுகிறேன்!!
அப்புறமா பாக்கலாம்!!
வரட்டா?? ;)\\\
கவுஜ...மாதிரியே இருக்கு சிவி ;))
சீக்கிரம் முடிச்சிட சொல்லுங்க வீட்டுல ;))
அருமையா இருக்கு பதிவு....
//அரவிந்த்சாமி போல் இருந்த நான் அடுப்புள வெந்த சாமி ரேஞ்சுக்கு வளம் வருவது அந்தோ பரிதாபம்.//
இதுதான் காமெடி....... எங்கள பார்த்தா பாவமா தெரியல இப்படியா பொய் சொல்லுவாங்க,,,,,
\\பாவலர் வரதராஜனின் ஒரு பாட்டு மோகன் நடித்த படமொன்றில் வந்திருக்கு. யாராச்சும் கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்.\\
தலைவா
படம் - இதயக்கோவில்
பாட்டு - வானுயர்ந்த சோலையிலே...
சரியா!! ? ;)
// கோபிநாத் said...
தலைவா
படம் - இதயக்கோவில்
பாட்டு - வானுயர்ந்த சோலையிலே..//.
தல
என் வாயைப் புடுங்கி விடை கேட்டு, என் கிட்டயே செக் பண்ண சொல்றீங்களா, கொடும கொடும, கொடுமையிலும் கொடும
\\கானா பிரபா said...
// கோபிநாத் said...
தலைவா
படம் - இதயக்கோவில்
பாட்டு - வானுயர்ந்த சோலையிலே..//.
தல
என் வாயைப் புடுங்கி விடை கேட்டு, என் கிட்டயே செக் பண்ண சொல்றீங்களா, கொடும கொடும, கொடுமையிலும் கொடும\\
ஆகா...வெற்றி...வெற்றி..வெற்றி ;)
தல
உங்க தொண்டன் இல்லையா நான்..அப்புறம் இந்த பாடல் கண்டுபிடிக்க உதவி செய்தவுங்க நம்ம பதிவர் ஜி3 ;))
அவருக்கும் என்னோட நன்றிகள் ;))
சீவீஆர்,
நீங்க இந்தியா வந்ததை கே.ஆர்.எஸ் மூலம் அறிந்தாலும் இன்றுதான் இந்தப்பக்கம் வர முடிந்தது. அனுபவத்தை நல்லா எழுதியிருக்கீங்க....
@துர்கா
ரொம்ப டென்சன் ஆகாதீங்க யக்கோவ்!!
ஓவர் எமோஷன் ஒடம்புக்கு ஆகாது!! :P
@கானா பிரபா
//கா.கவிஞரே
இந்தத் தகவல் தவறானது. ////
எல்லா ரிவிட்டும் ஒருவன்(கப்பி) ஒருவனுக்கே..
@பீவீ
//மத்த எல்லாரும் சொன்ன மாதிரி... கொஞ்சம்.. கதை விட்டுஇருக்க.//
நான் விடலை அண்ணாச்சி!!அதான் மக்களே வெவரமா வெளக்கியிருகாங்களே.. ;)
@துளசி டீச்சர்
//கல்ச்சுரல் ஷாக் ஒண்ணும் ஆகலையா?:-))))///
வருவதற்கு முன்னமே இதை பத்தி யோசிச்சு வெச்சதால சீக்கிரமே பழகிட்டேன் டீச்சர்! :-)
///
சென்னை எப்படி இருக்கு? விட்டுட்டு வந்தமாதிரியேவா?///
அதை ஏன் கேக்கறீங்க!! நிறைய கட்டிடங்கள் மேமபாலங்கள் அப்படின்னு மாற்றங்கள் ஆங்காங்கே தெரியுது!! ;)
@கோபிநாத்
//தல
சொல்வது உண்மை....பல பேட்டிகளிலும் இதை சொல்லியிருக்கிறார்.///
எல்லா ரிவிட்டும் கப்பிக்கே...
@எழில்பாரதி
//இதுதான் காமெடி....... எங்கள பார்த்தா பாவமா தெரியல இப்படியா பொய் சொல்லுவாங்க,,,,,///
மன்னிக்கனும் எழில்பாரதி!! நான் அடுப்புள வெந்த சாமி மாதிரி எல்லாம் ஆகல!! சும்ம தான் கதை அடிச்சேண்!! :P
@மதுரையம்பதி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மதுரையம்பதி!! :-)
சந்தடி சாக்கில் அரவிந்த சாமியா :))
ம் ..
யாருக்கும் பரிச்சை எழுத தில்ல் இல்லன்னு சொன்னது உண்மைதான்..கையால் தமிழ் எழுதினால் கோழிக்கிறுக்கல் போல இருக்கிறது இப்போதெல்லாம்..
கண்ணாடி இல்லாத தலைக்கவசத்தை போட்டுக்கொண்டு,அரவிந்த்சாமி போல் இருந்த நான் அடுப்புள வெந்த சாமி ரேஞ்சுக்கு வளம் வருவது அந்தோ பரிதாபம்
//
ஓன்னும் சொல்றதுக்கு இல்ல!
makes me miss India :(((((((
\\அவரோடு இந்தப்பள்ளிக்குச்சென்று அவரின் செயல்பாடுகளைப்பார்த்து முடிந்தால் சில படங்கள் பிடித்துக்கொண்டு வந்து ,அதை பற்றி என் பதிவில் எழுதலாம் என்று எண்ணம்!!\\
Good thought:)
Looking fwd for that post.
பைக் படத்தை இங்கிட்டு போடலையா? :)))
அண்ணாச்சி பாடல் பத்தின விவரம் எங்கே எடுத்தேன்னு அப்பவே சொன்னேன்..இப்ப ரிவீட்டை எனக்கு திருப்பிவிட்டா என்ன அர்த்தம்..அவ்வ்வ்வ் :))))
நல்லா எழுதி இருக்கீங்க.
:-) very good..
@முத்துலெட்சுமி அக்கா
//சந்தடி சாக்கில் அரவிந்த சாமியா :))
ம் .. ///
இப்படி சைக்கிள் கேப்புல நாமலே சொல்லிக்கிட்டா தான் உண்டு!! :-D
@ட்ரீம்ஸ்
//makes me miss India :(((((((///
Mission accomplished!! :P
@திவ்யா
///
Good thought:)
Looking fwd for that post.////
Me too!!
@கப்பி அறிவுஜீவி
//அண்ணாச்சி பாடல் பத்தின விவரம் எங்கே எடுத்தேன்னு அப்பவே சொன்னேன்..இப்ப ரிவீட்டை எனக்கு திருப்பிவிட்டா என்ன அர்த்தம்..அவ்வ்வ்வ் :))))////
அப்போ ரிவீட்டை அந்தப்பக்கம் திருப்பி விடுடே!!!
சாப்ட்வேர் கம்பெனியில இருந்துகிட்டு இது கூட தெரியாம இருந்தா எப்படி???
எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றவருடையது,அதற்கடுத்த நாள் வேறொருவருடைது அப்படிங்கற கீதையின் தத்துவம் மறந்து போச்சா??? :P
இதுக்கு எல்லாம் நோ சில்லி பீலிங்க்ஸ்....
@நிஜமா நல்லவன்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நல்லவரே!! :-)
@யாத்திரீகன்!
வாங்க அண்ணாச்சி!!
நெம்ப டாங்க்ஸு!! :-)
பதிவு சீராக உங்கள் வாழ்வின் மாற்றங்களை எடுத்துரைத்தது.
வாழ்வின் மாற்றங்களை நேர்மறையாக எடுத்துக் கொள்கிறீர்கள். உங்களிடமிருந்து நான் கற்க வேண்டியது இன்னும் பல இருக்கின்றன.
வாழ்த்துக்கள்.
ரொம்ப கஷ்டப்படுரிங்க போல...
நல்ல பதிவு. இதே போன்று சமூகம் சார்ந்த விஷயங்கள் இன்னும் எழுதுங்கள்.
:)
IBCD?
@சத்தியப்பிரியன்
//ாழ்வின் மாற்றங்களை நேர்மறையாக எடுத்துக் கொள்கிறீர்கள். உங்களிடமிருந்து நான் கற்க வேண்டியது இன்னும் பல இருக்கின்றன.////
அட!
என்ன அண்ணாச்சி பெரிய வார்த்தை எல்லாம் பேசரீங்க!! ஏதோ வாழ்வின் நடப்புகளை கொஞ்சம் காமெடியா பாக்கலாம்னு!! அந்த அணுகுமுறை வந்துவிட்டால்,வாழ்க்கையை ஏற்றுக்கொள்வது சற்றே சுலபமாகிவிடுகிறது!! :-)
@விக்னேஷவரன்!
பெருசா ஒன்னும் கஷ்டம் இல்லை அண்ணாச்சி!! கொஞ்ச நாளைக்கு தான் இது வித்தியாசமா தெரியும்,அப்புறம் பழகிடும்..
23 வருடங்களாக இப்படித்தானே இருந்தேன்... ;)
@சஞ்சை!
நன்றி அண்ணாச்சி! கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்...
:-)
@இளா
//:)
IBCD?///
அதே! அதே...
:-)
சென்னை traffic'கே இவ்ளோ மொசமா பொயிடுச்சா! கொஞ்சம் பெங்களூரூ போய் பாருங்க :))
:)))
Nice job... Continue the good work....
Post a Comment