புரிதல் இன்றி, உலகை கண்டு
பரிவு இல்லா, தனலில் வெந்து
எதற்கு பிறந்தோம்,எதனால் உழன்றோம்,
எதற்கு சிரித்து, எங்கு வீழ்ந்தோம்
எதையும் அறியும் ஆற்றல் இன்றி
உலக வாழ்வில் தினமும் ஓட்டம்
பிறவித்தேடல் தனியே தேடி
விடையே இன்றி குழப்பம் மூடி
விழுந்து புரண்டு நிமிர்ந்து பார்த்தால்
உலகம் உருண்டு தொலைவிலிருக்கும்
தனிமை இனிமை,பழகிப்பார்த்து
வெறுமை கொடுமை,சகித்துப்பார்த்து
விழிகள் மூடி,ஒளிந்து ஓடி
விலக நினைத்து,துவண்டு வாடி
கேள்வி கேட்டு,பரிதவித்து
முடிக்க நினைத்து,முயன்றும் கூட
முடிவு ஒன்று,பிறக்கும் வரையில்
முடிய மறுக்கும் நெடிய பயணம்
வாழ்க்கை
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
வாழ்க்கையின் சூட்சுமங்களை விளக்கமுயலும் உங்கள் கவிதை அருமை
ஆம் ரைட்டு அடுத்த ஆளு
:))
\\விழுந்து புரண்டு நிமிர்ந்து பார்த்தால்
உலகம் உருண்டு தொலைவிலிருக்கும்
தனிமை இனிமை,பழகிப்பார்த்து
வெறுமை கொடுமை,சகித்துப்பார்த்து
முடிவு ஒன்று,பிறக்கும் வரையில்
முடிய மறுக்கும் நெடிய பயணம்
\\
:))
கவிதை எதார்த்தம்
//எதற்கு பிறந்தோம்,எதனால் உழன்றோம்,
எதற்கு சிரித்து, எங்கு வீழ்ந்தோம்
எதையும் அறியும் ஆற்றல் இன்றி
உலக வாழ்வில் தினமும் ஓட்டம்//
ரொம்பவே நிதர்சனமான வரிகள் சீவீயார் அண்ணா... :-)
அருமையான கருத்து.. :)
//மங்களூர் சிவா said...
ஆம் ரைட்டு அடுத்த ஆளு
:))
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
டெஸ்டிங்க்
//முடிவு ஒன்று,பிறக்கும் வரையில்
முடிய மறுக்கும் நெடிய பயணம்//
முடிவு என்று இறக்கும் வரையில்
முடிய மறுக்கும் நெடிய பயணம்!
:(
அருமையான கவிதை! :)
/விழுந்து புரண்டு நிமிர்ந்து பார்த்தால்
உலகம் உருண்டு தொலைவிலிருக்கும்
தனிமை இனிமை,பழகிப்பார்த்து
வெறுமை கொடுமை,சகித்துப்பார்த்து
விழிகள் மூடி,ஒளிந்து ஓடி
விலக நினைத்து,துவண்டு வாடி
கேள்வி கேட்டு,பரிதவித்து
முடிக்க நினைத்து,முயன்றும் கூட
முடிவு ஒன்று,பிறக்கும் வரையில்
முடிய மறுக்கும் நெடிய பயணம்/
அருமையான வரிகள்
அருமை ;)
Post a Comment