படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 2



என் இனிய தமிழ் மக்களே,
போன பகுதியில சொல்லிக்கொடுத்த மேட்டர வெச்சு ஏதாவது படம் எடுத்து பாத்தீங்ளா?? இல்லனா எடுத்த படத்துலையே இந்த முப்பகுதி கோட்பாட்டிற்கு ஏற்றால் போல் வெட்டி (Crop) விட்டு ஏதாவது முயற்சி பண்ணீங்களா?? உங்க முயற்சி அனுபவங்கள் எல்லாம் பின்னூட்டத்துல சொல்லுங்க!!
இன்னைக்கு நாம பாக்க போற தலைப்பு "வழிநடத்தும் கோடுகள்". ஆங்கிலத்துல இதை "Leading lines" அப்படின்னு சொல்வாங்க!!
அப்படின்னா??
அதாவது ஒரு படத்துல ஏதாவது கோடு இருந்துச்சுனா,நம்ம கண்ணு அந்த கோட்டை பின்பற்றியே தான் செல்லுமாம்!! அதாவது நம் படத்தில் இருக்கும் கோடு நம் படத்தின் கருப்பொருள் (Subject)-ஐ சென்று சேருகிறார் போல் பார்த்துக்கொண்டால் நம் படம் பார்ப்பதற்கு அழகாக தெரியுமாம். அதே போல் நம் படத்தில் இருக்கும் கோடுகள் நம் படத்தின் கருப்பொருளை நீங்கி செல்வது போலவோ அல்லது படத்தை விட்டு வெளியே செல்வது போலவோ இருந்தால் படம் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருக்குமாம்.

நல்லா இருக்கு!! இதுக்காக நான் எங்கே இருந்து கோடுகளை தேடி போவது??? நானே படங்களுக்கு ஸ்கேல் வெச்சுகிட்டு கோடு வரையணுமா?? அப்படின்னு எல்லாம் டென்ஷன் ஆகாதீங்க!!!
கோடுகள் என்றால் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டிடங்கள்,ரோடுகள்,வேலிகள், வானம்,கடல்,நிலப்பரப்பு என எதுவாக இருந்தாலும் கோடுகளாகத்தானே தெரிகிறது. அந்த கோடுகளை எல்லாம் நமக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டியது தான்!! :-))

ஹ்ம்ம்!! புரியறாப்போல இருக்கு ஆனா புரியலை!! இருக்கு ஆனா இல்லை அப்படின்னு சொல்றீங்களா???
சரி இருங்க!! ஒரு சில படங்கள் கீழே இருக்கு!! அதை பாருங்க!! உங்களுக்கே தெளிவாத்தெரியும்!! :-)




என்ன துரு துரு கண்கள், குறும்பும் அப்பவித்தனமும் நிறைந்த அழகிய முகம். குழந்தைகள் என்றாலே அழகுதான்!! ஆனால் இந்த அழகிய முகத்தை நோக்கி போகும் கோடுகளை கவனித்தீர்களா?? ஜன்னல் கம்பிகள் எப்படி இந்த அழகிய முகத்தை நோக்கி செல்கின்றன பார்த்தீர்களா?? இந்த கோடுகளை பின்பற்றி போய் தான் நம் பார்வை இந்த குழந்தையின் அழகு முகத்தில் போய் முடிகிறது.


நீங்க இங்க பார்த்துக்கொண்டிருப்பது ந்யூயார்க்கின் ப்ரூக்களின பாலம். இந்த படத்தில் பாலத்தின் கோடுகளை எவ்வளவு அழகாக பயன்படுத்தி நம் பார்வையை ந்யூயார்க் நகரினுள் எடுத்து செல்கிறார் பாருங்கள் புகைபடக்காரர். இதைப்போல் நாம் எந்த புகைப்படம் எடுத்தாலும் காட்சியில் இருக்கும் கோடுகளை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு காட்சி யை அமைத்துக்கொள்ளலாம்.
இந்த படம் முப்பகுதி பரிமாணத்திற்கும் ஒரு அற்புதமான உதாரணமாக விளங்குவதை காணலாம்




படத்தில் அமையும் கோடுகள் நேர்கோடுகளாக இருக்க வேண்டும் என்று கூட கட்டாயம் இல்லை என்பதை காட்டுவதற்காகத்தான் இந்த உதாரணம். அதுமில்லாமல் படத்தில் கருப்பொருள் ஒன்றும் இல்லாவிட்டால் "எங்கே செல்லும் இந்த பாதை" என்பதை போல கோடுகள் எங்கேயாவது உள்நோக்கி சென்றுகொண்டிருந்தால் அதுவும் படத்திற்கு அழகாக இருக்கும். எப்படி இருந்தாலும் கோடுகள் படத்தை விட்டு வெளிநோக்கி செல்லக்கூடாது, அதுதான் முக்கியம்.


என்ன மக்களே?? "வழிநடத்தும் கோடுகள்" மேட்டர் என்னன்னு புரிங்சுதா??
புரிஞ்சதோ புரியலையோ ,பின்னூட்டத்துல சொன்னீங்கன்னா தொடரை வழிநடத்திச்செல்ல உதவியா இருக்கும். அடுத்த முறை அடுத்த புகைப்படக்கலை சம்பந்தமான விஷயத்தோட உங்களை சந்திக்கிறேன்!!

வரட்டா?? ;-)

பி.கு: மனிதர்களாகிய நாம் வழக்கமா இடது பக்கத்துல இருந்து பார்க்க ஆரம்பிச்சு வலது பக்கமா முடிப்போம். அதே மாதிரி கீழிருந்து ஆரம்பித்து பார்வை மேலே போய் முடியும்!! அதனால உங்க வழிநடத்தும் கோடுகளின் தொடக்கமும் முடிவும் இதை அடிப்படையா வெச்சு தான் இருக்கும்!! :-)



அனானி நண்பர் கேட்டுக்கொண்டதற்கினங்க பின் சேர்க்கை:



நான் முன்பே சொன்னது போல் இந்த நுணுக்கங்கள் எல்லாமே ஒரு வழிகாட்டுதலுக்கு மட்டும் தானே தவிர இவை எல்லாம் பயன் படுத்தியே ஆக வேண்டும் கட்டயம் இல்லை. இந்த நுணுக்கங்களை சாராத படங்கள் கூட நமக்கு அழகாக தெரியலாம்,அது அவரவர் ரசனையை பொருத்தது.



இந்த "வழிநடத்தும் கோடுகள்" கோட்பாட்டை சாராத படங்களை இணையத்தில் தேடி பார்த்தால் ஒன்றும் கிடைக்கவில்லை. எல்லோரும் தான் எடுத்த நல்ல படங்களை தான் வெளியிட விரும்பிவார்களே தவிர,நன்றாக இல்லாத படங்களை வெளியிட மாட்டார்கள். இதனால் நான் எடுத்த படங்களில் ஒன்றை எடுத்து வழிநடத்தும் கோடுகள் சாராத ஒரு படத்திற்கான உதாரணமாக கீழே கொடுத்துள்ளேன்.


இப்போ நீங்க மேலே பாத்துக்கிட்டு இருக்கற படம் ஆன் அர்பர்ல குளிர்காலத்துல எடுத்தது. ஒரு நாள் அலுவலகத்துல இருந்து வெளியே வந்தபோது இப்படி எல்லாமே உறைந்திருப்பதை கண்டு அதிசயித்து சும்மா என் கேமரா போனில் சுட்டது.

படத்தை பார்த்தீர்கள் என்றால் கிளைகள் வடிவில் இருக்கும் கோடுகள் படத்தை விட்டு நம் பார்வை இட்டு செல்வதாக அமைந்திருக்கின்றன. இதனால் உறைந்திருக்கும் பழங்களின் நம் ஒட்டுமொத்த கவனம் செல்லாமல்,படம் அவ்வளவாக சுவாரஸ்யம் இல்லாமல் போய் விடுகிறது.

இதனால் தான் படத்திற்கு வெளியே இட்டு செல்வது போலவோ ,அல்லது கருப்பொருளை விட்டு செல்வது போல் கோடுகள் அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

படங்கள்:
http://www.cnn.com/interactive/travel/0507/gallery.vacation.photos/02.super.leadinglines.jpg http://photoinf.com/General/Gao_Mu/slide0004_image016.jpg
http://www.tipsfromthetopfloor.com/library/lib/exe/fetch.php/image_composition:road_leadingline.jpg


படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 1(Rule of thirds)
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 2(Leading lines)
படம் புடிக்கலாம் வாங்க - பாகம் 3(Double action pics)

19 comments:

வடுவூர் குமார் said...

கோடெல்லாம் சரி தான்,அந்த ரெட்டை கோபுரத்தை பார்க்கும் போது மனம் கணக்கிறது.

CVR said...

ஹ்ம்ம்ம்!!
என்ன செய்வது!!
கோடுகள்,கட்டங்கள் என் எது போட்டாலும் நம் கண்கள் சில விஷயங்களை கவனிக்காமல் விடாது போல!!
:-)

G3 said...

ஆஹா.. போட்டோல இவ்ளோ சமாச்சாரம் இருக்கா? நல்லா இருக்கு இந்த பாடம்.. போட்டோல்லாம் சூப்பர்... அதுலயும் அந்த குழந்தையோட கண்ணு கொள்ளை அழகு :-))

G3 said...

//மனிதர்களாகிய நாம் வழக்கமா இடது பக்கத்துல இருந்து பார்க்க ஆரம்பிச்சு வலது பக்கமா முடிப்போம். அதே மாதிரி கீழிருந்து ஆரம்பித்து பார்வை மேலே போய் முடியும்!! //

அப்படியா?? இப்போ தான் நான் கேள்விபடறேன்.

ACE !! said...

//எப்படி இருந்தாலும் கோடுகள் படத்தை விட்டு வெளிநோக்கி செல்லக்கூடாது, அதுதான் முக்கியம்.//

இது மேட்டரு.. இதெல்லாம் முயற்சி செஞ்சுட்டு, படம் நல்லா வந்தா சொல்றேன் :D

அடுத்து ஒளியின் கோணங்கள் / உபயோகங்கள்லாம் எழுதுங்க..

Anonymous said...

ரொம்ப நன்றி cvr

Anonymous said...

CVR,
Can you also include a couple of photos that shows how a photo should NOT be? This will help maramandais like us identify our mistakes.

Like for example, in this post you mentioned that the lines should not lead AWAY from the photo. How do you define a line leading away? I can still consider the winding road as something that leads me away from the photograph.

- Maramandai

CVR said...

@G3
வாங்க அக்கா!!
வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)

@Ace
படம் புடிச்சிட்டு எப்படி வந்திருக்குன்னு சொல்லுங்க தல!! :-))

@அனானி
நன்றி அனானி அண்ணா/அக்கா!!

@மரமண்டை!!
அட என்ன போல நிறைய மரமண்டைகள் உலகத்துல இருக்காங்க போல . கவலை படாதீங்க அண்ணாத்த! நானும் உங்களை மாதிரி தான்!!
படத்தை விட்டு விலகி போகறதுக்கு உதாரணங்கள் தரலாம்னு பார்த்தேன்,ஆனால் இணையத்துல அதை பற்றி அவ்வளவா படங்கள் கிடைக்கவில்லை,இன்றைக்கு சாயந்திரம் கொஞ்சம் மேய்ந்து பார்த்து பதிவில் சேர்த்து விடுகிறேன்!! :-)

"வளைந்து நெலிந்து போகும் பாதை" படத்தை விட்டு வெளியே போகவில்லையே அண்ணா,படத்தின் மத்திய பகுதியேலேயே போய் ஐக்கியமாகி விடுகிறதே!!!
கோடுகள் எப்பொழுதும் இடப்புறம்,கீழே இருந்து ஆரம்பிக்கும் என்பதை மறக்க வேண்டாம்!! :-))

இதுக்கு மேலே சந்தேகம் இருந்தால் மின்னஞ்சல் அனுப்புங்கள்!! :-)

ALIF AHAMED said...

பி.கு: மனிதர்களாகிய நாம் வழக்கமா இடது பக்கத்துல இருந்து பார்க்க ஆரம்பிச்சு வலது பக்கமா முடிப்போம். அதே மாதிரி கீழிருந்து ஆரம்பித்து பார்வை மேலே போய் முடியும்!!
//

இத படிச்சிதான் சிபி அங்க கவிதை புரியலனு சொன்னதற்கு வலது பக்கமா நின்னு படிங்கனு சொன்னாரோ.... :)

//pithatralgal.blogspot.com/2007/06/233.html

களவாணி said...

கோடு போட்டு ரோடு போடணும்,

கோடு ரோடு ரெண்டையும் வச்சு ஃபோட்டோ போடணும்.

இதத்தானே சொல்ல வர்றீங்க. :)

கலக்கல் இன்றைக்கும் நிறைய கத்துக்கிட்டேன் உங்க மூலமா.

இதே மாதிரி சிறிய தவறுகளைக் கொண்ட படங்களையும் இணைத்து பதிவில் போட்டால் பொதுவாக ஏற்படும் தவறுகளைப் புரிந்து கொள்ள முடியும்.

நன்றி

செந்தில்...

Anonymous said...

CVR

ரொம்ப கலக்கலான தொடரா கொண்டுபோறீங்க. முதலில் என் வாழ்த்துக்கள். எனக்கு பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு படம் பிடிப்பது. வெகு வெகு அண்மையில் தான் ஆரம்பித்தேன்.இணையத்தில் படம்பிடிப்பதை பற்றி நிறைய மேய்வதுண்டு. ஆனாலும் தமிழில் படிப்பது ஒரு தனி இன்பம் தான்.

உங்க ப்ளிக்கர் ஆல்பம் பார்த்தேன். அதில் டபுள் ஆக்ட் செய்து ஒரு படம் இருந்ததே. எப்படி செய்தீர்கள்? photo stitch செய்தீர்களா? அருமை.

நம்ம ப்ளிக்கர் ஆல்பம் இங்கே.

சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல.
http://www.flickr.com/photos/njvijay

இருந்தாலும் உங்க expert கம்மெண்ட் வரவேற்கப்படுகிறது.

MyFriend said...

//என்ன மக்களே?? "வழிநடத்தும் கோடுகள்" மேட்டர் என்னன்னு புரிங்சுதா??
//

புரிஞ்சது புரிஞ்சது! ;-))

Dreamzz said...

வாவ்! போன முறையோட இந்த முறை எளிதாக புரிந்தது!

Dreamzz said...

இந்த கோடி விஷயம் இதுக்கு முன்னாடி யோசிச்சதே இல்ல! நல்ல மேட்டர்!

G.Ragavan said...

நல்ல அழகிய எளிய பாடம். புரிகிறது. இதை முயற்சி செய்து பார்க்கிறேன்.

CVR said...

@மின்னுது மின்னல்
இதை நீங்க அவரு கிட்ட தான் கேக்கனும் மின்னல்!! :-)

@செந்தில்
நல்லது செந்தில். பதிவு உங்களுக்கு உபயோகமா இருந்ததில் சந்தோஷம்!! :-)

@அல்வாசிடி விஜய்
நீங்கள் சொல்லும் அந்த டபுள் ஆக்டு படம் ஒரு சப்பை மேட்டர் தான் அதை பற்றி ஒரு பதிவு கண்டிப்பாக போடுகிறேன்.
உங்கள் Flickr பதிவை பார்த்தேன்.மலர்களின் புகைப்படங்கள் மிக அழகாக அமைந்துள்ளன.
வாழ்த்துக்கள்!!! :-)

//இருந்தாலும் உங்க expert கம்மெண்ட் வரவேற்கப்படுகிறது. //
ஆஹா!!! நான் இன்னும் expert எல்லாம் ஆக வில்லை நண்பரே!! நானும் உங்களை போல ஒரு சக மாணவன் தான்!! :-))

@மை ஃபிரண்ட்
///என்ன மக்களே?? "வழிநடத்தும் கோடுகள்" மேட்டர் என்னன்னு புரிங்சுதா??
//

புரிஞ்சது புரிஞ்சது! ;-)) //
நன்றி மை ஃபிரண்ட்!! :-))

@ட்ரீம்ஸ்
//Dreamzz said...
இந்த கோடி விஷயம் இதுக்கு முன்னாடி யோசிச்சதே இல்ல! நல்ல மேட்டர்!
//

கோடி ரூபா கிடைத்தால் அது நல்ல மேட்டர் தான்!!! இப்போவாவது யோசிக்க ஆரம்பித்தீர்களே!! :-P

@ஜிரா
முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க அண்ணாத்த!! :-)

@அனானி (மரமண்டை)
நீங்கள் கேட்டுக்கொண்டது போல் பதிவில் சில விஷயங்களை சேர்த்துள்ளேன்.
உபயோகமாக இருந்ததா என்று சொல்லுங்கள்!
நன்றி!! :-))

சிநேகிதன்.. said...

வணக்கம் cvr ..வாழ்த்துக்கள்.. என் போட்டோ ப்ளாக்ற்கும் வந்து கொஞ்சம் கருத்து சொல்லுங்க தலை..

CVR said...

@கலாபாரதி!!
வாங்க அண்ணாத்த!!!
நீங்களே போட்டோகிராபர்,உங்களுக்கு நான் என்ன கருத்து சொல்லுறது?? நீங்கதான் எனக்கு சொல்லனும்!! :-)))
உங்க போட்டோ பதிவு எங்கே இருக்கிறது என்று சொல்லவே இல்லையே!!! :-))

Vijayakumar said...

//நீங்கள் சொல்லும் அந்த டபுள் ஆக்டு படம் ஒரு சப்பை மேட்டர் தான் அதை பற்றி ஒரு பதிவு கண்டிப்பாக போடுகிறேன்.//

என் கேமிராவில் இருக்கும் photostitch வசதியை பயன்படுத்தி முயற்சித்தேன். ஒரளவு டபுள் ஆக்டிங் நன்றாகவே வந்தது. பயிற்சிக்காக/முயற்சிக்காக உங்க டேபிள் போஸ் மாதிரியே முயற்சித்தேன். கட்டாயம் பதிவு எழுதுங்கள். நீங்கள் பயன்படுத்தும் டெக்னிக் தெரிந்துக் கொள்ள ஆசை.

Related Posts Widget for Blogs by LinkWithin