வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5

என் இனிய தமிழ் மக்களே,
போன தடவை கருந்துளைகள் அப்படிங்கற வான்வெளியின் அதிசயத்தை பற்றி பார்த்தோம். இன்றைக்கு விண்வெளி ஆர்வலர்கள் அனைவரையும் கவரக்கூடிய ஒரு தலைப்பான "வேற்றுகிரக உயிர்" என்பதை பற்றி பார்க்கலாம்.

நிறைய பேருக்கு விண்வெளி மேல ஆர்வத்தை கிளப்பி விடுவதே இந்த வேற்றுகிரக மேட்டர் தான். என்னுடைய முதல் பகுதியிலேயே எனக்கு விண்வெளியின் மேல் ஆர்வத்தை கிளப்பிவிடக்காரணமான "Independendence Day" படத்தை பற்றி கூறி இருந்தேன். அது வேற்றுகிரகத்திலிருந்து உயிர்கள் வந்து இங்கே மனிதர்களை அழிக்க முயலும் கதை தான். இது போன்று தொன்று தொட்ட காலத்தில் இருந்தே மற்ற உலகங்களில் உள்ள உயிர்கள் குறித்தும் அங்கிருக்கும் விந்தையான ஜீவ ராசிகள் குறித்தும் மனிதனுக்கு குழப்பமும்,பயமும் கற்பனைகளும் இருந்திருக்கின்றன.

நம்ம கலாசாரத்திலேயே பார்த்தீர்கள் என்றால் நம் புராண கதைகளில் கூட சொர்க்கம்,நரகம்,தேவலோகம்,அசுரலோகம் போன்ற பற்பல உலகங்களும் அங்கு இருக்கக்கூடிய மனிதனில் இருந்து வித்தியாசப்படக்கூடிய பல உயிர்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆனால் இதை பற்றிய தெளிவான சிந்தனை இது வரையில் மனிதனிடம் இருந்ததில்லை. இந்த பேரண்டம் ஆனது எவ்வளவு பெரியது என்று கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு பரந்து விரிந்து உள்ளது. இதில் வேறெங்கேயும் இல்லாமல் இந்த பூமியில் மட்டுமே உயிர் உருவானது ஏன்??
இதற்கும் வல்லுனர்கள் இடையில் இருவேறு கருத்துகள் உண்டு. சிலர் உயிர் என்பது ஒரு இடத்தில் உருவாகி வெவ்வேறு இடத்திற்கு பிரிந்து சென்று அங்கு உள்ள நிலைகளுக்கு ஏற்றார்போல் மாற்றம் பெற்று பெருகியிருக்கும் என்றூ கூறுகிறார்கள். வேறு சிலரோ எல்லா இடத்திலேயும் உயிர் தனித்தனியாக உருவாகி வளர்ந்திருக்கும் என்று கூறுகிறார்கள்.
இதை பற்றி மேலும் யோசிக்க வேண்டும் என்றால் இந்த உலகத்தில் உயிர் எப்படி உருவாகியது என்று நமக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.ஆனால் அதிலேயே நமக்கு தெளிவு கிடையாது. பொதுவாக வல்லுனர்கள் எல்லோருமே தண்ணீரில் இருந்து முதன்முதலில் பாக்டீரியா போன்ற ஜீவராசிகள் தோன்றியது என்றும் பிறகு பரிணாம வளர்ச்சி மூலமாக அவை இப்பொழுது இருக்கும் நிலைக்கு உயர்ந்தன என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

உயிர் அமைவதற்கு தேவையான எல்லா சூழ்நிலைகளும் சரியாக அமைந்தும் பல கோடி வருடங்களுக்கு உலகில் உயிர் எதுவும் உருவாகாமல், திடீரென்று தோன்றியது போலவே தான் தெரிகிறது. இந்த திடீர் தோன்றலுக்கு காரணமாக சிலர், வேற்றுகிரகத்திலிருந்து வந்து நம் பூமியில் விழுந்த பொருளினால் உயிர் தோன்றியிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.வேறு சிலரோ எல்லாமே ஒரு குருட்டு அதிர்ஷ்டம் தான்,பல்வேறு வேதிப்பொருட்கள் பல முறை ஒன்று சேர்ந்து ஏதோ ஒரு முறைஅதிர்ஷ்டத்தில் (by chance) உயிர் தோன்றுவதற்கான சேர்க்கை (combination) அமைந்து விட்டது என்று கூறுகிறார்கள்.
இப்படி நம் பூமியிலேயே உயிர் எப்படி உருவாகியது என்று நமக்கு தெரியாமல் இருக்கையில் வேற்றுகிரகத்தை பற்றி எல்லாம் நாம் அனுமானிப்பது சிரமம்தான்!!! இருந்தாலும் மனிதன் சும்மா இருந்து விடுவானா?? அவனுக்கு தெரிந்தவரை இதை பற்றி சிந்தித்து பார்க்காமல் இல்லை.
இங்கு போன்று வேறெதாவது கிரகத்தில் உயிர் தோன்றியிருக்க சாத்தியமா என்றால் அது பல உட்கேள்விகளை கிளப்பி விடுகிறது.நம் உலகில் உயிர் ஆனது கார்பன் ஹைட்ரோஜென் எனப்படும் இரு வேதிப்பொருட்களினால் உருவானது. இது போன்ற வேதிப்பொருட்கள் எக்கச்சக்கமாய் பேரண்டம் முழுதும் பரவிக்கிடக்கிறது என்று விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் இவை மட்டும் இருந்தால் போதுமா???

"நிரின்றி அமையாது உலகு" எனும் முதுமொழிக்கு ஏற்ப உயிர் வளர்வதற்கு தண்ணீர் மிக அவசியம் என்று அறிவியல் உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. அதுவும் தண்ணீர் திரவ நிலையில் இருக்க வேண்டும். கிரகத்தில் தட்பவெட்பம் மிக அதிகமாக இருந்தால் தண்ணீர் எல்லம் கொதித்து ஆவியாகிடும்,ஒரே குளிர்ச்சியாக இருந்தால் தண்ணீர் உறைந்து போய் பனிக்கட்டி ஆகி விடும். அதனால் ஒரு கிரகத்தில் தண்ணீர் திரவநிலையில் இருக்க வேண்டும் என்றால் அது நட்சத்திரத்தை விட்டு தள்ளி இருக்கும் தூரம் மிக தொலைவாகவும் இருக்க கூடாது,மிக நெருக்கமாகவும் இருக்க கூடாது. அதனால் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அளவுக்கு ஏற்றார்போல் குத்துமதிப்பாய் ஒரு தூரத்தை நிர்ணயித்து அந்த ் தூரத்திற்குள் ஒரு கிரகம் இருந்தால் அதில் உயிர் இருப்பதற்கு சாத்தியம் உண்டு என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
நம் சூரிய குடும்பத்தையே எடுத்து கொண்டால் கூட நிறைய இடங்களில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்று ஒரு கருத்து உண்டு. குறிப்பாக நமது பக்கத்து கிரகமான செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான (இருந்ததற்கான) சான்றுகள் இருக்கின்றன் அதனால் அங்கே நுண்ணுயிர் கிருமிகள் போன்ற சிறிய உயிர்கள் இருக்கலாம் என்று வெகு நாட்களாகவே பேச்சு உண்டு. செவ்வாய் கிரகத்தை தவிர்த்து நம் சூரிய குடும்பத்தில் உள்ள வேறு சில இடங்களிலும் உயிர்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அவை எந்தெந்த இடங்கள் என்று பார்க்கலாமா??

யூரோப்பா (Europa) : இது வியாழன்(Jupiter) கிரகத்தின் நான்காவது பெரிய துணைக்கோள். இதன் மேல்பகுதி முழுவதும் பனிக்கட்டியால் உறைந்து போய் இருக்கிறது. ஆனால் அதன் அடியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது என்றும், அதில்் தண்ணீர் சார்ந்த உயிர்கள் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

வியாழன் கிரகம் (Jupiter) : என்னப்பா கதை அளக்கிறாய்!! வியாழன் என்பது ஒரு வாயு கிரகம். அதாவது பூமியை போல் திண்ம நிலையில் இல்லாமல் முழுக்க முழுக்க வாயுவினால் உருவானது!! இதில் தண்ணீரே கிடையாது. இதில் எங்கிருந்து உயிர் வந்தது என்று கேட்கிறீர்களா??
இந்த கிரகத்தில் ஒரு விதமான மிதக்கும் வகை உயிர்கள் இருக்கலாம் என்று ஒரு கருத்து உண்டு!! நமக்கு தண்ணீரைப்போல இவைகளுக்கு அம்மோனியா வாயு உயிரின் அடிப்படையாக இருக்குமாம்!! சுவாரஸ்யமான அனுமானம்!! அல்லவா?? :-))


கனிமீட் (Ganymede) : இது வியாழன் கிரகத்தின் மிகப்பெரிய துணைக்கோள். சொல்லப்போனால் நம் சூரியக்குடும்பத்திலேயே இதுதான் மிகப்பெரிய துணைக்கோள். இந்த துணைக்கோளிலும் யூரோப்பாவில் இருப்பதை போல் நிலத்தடி நீரும்,அதில் உயிர்களும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

கலிஸ்டோ (Callisto) : கிட்டத்தட்ட மெர்குரி கிரகம் அளவுள்ள வியாழன் கிரகத்தின் மூன்றாவது பெரிய துணைக்கோள். இதிலும் யூரோப்பாவை போன்ற உயிரப்பற்றிய கணிப்புகள் தான்!! :-)

சனி கிரகம் (saturn): இந்த கிரகத்திலும் வியாழன் கிரகம் போன்ற மிதக்கும் உயிர்கள் இருக்கலாம் என்ற அனுமானம்தான்!!

என்சிலாடஸ் (Enceladus) : இது சனி கிரகத்தின் ஆறாவது பெரிய துணைக்கோள். இதிலும் உறைய வைக்கும் பனி தான் எங்கேயும் இருக்கிறது. ஆனால் இந்த துணைக்கோளின் தென் துருவத்தின் (இங்கு தான் இருக்கறதிலேயே சூடான தட்பவெட்பமாக ~-112C) கீழே நடைபெரும் சில மாறுதல்களினால் ஏற்படும் வெப்பமானது நிலப்பரப்பின் கீழ் உள்ள பனிக்கட்டியை உருக்கி அதில் உயிர் இருக்கலாம் என்று ஒரு கனிப்பு உண்டு!!!

டைடன் (Titan) : சனி கிரகத்தின் மிகப்பெரிய துணைக்கண்டம்.நம் பூமியைப்போல் பரந்து விரிந்து இல்லாவிட்டாலும இதில்் ஆங்காங்கே ஒரு விதமான ஹைட்ரோ கார்பன் திரவ குட்டைகள் இருப்பதாக அறியப்படுகிறது. பூமியில் இருப்பது போன்று ஒரு விதமான் வாயுமண்டலம் இந்த துணைகிரகத்தை சுற்றி இருப்பதால் இங்கேயும் உயிர் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இப்படி சுவாரஸ்யமான விஷயங்கள் நம் சுரியக்குடும்பத்திலேயே இருக்கிறது. இதற்கு மேல் ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் நான் முன்னமே சொன்ன "சரியான நட்சத்திர தூரத்தில் "தோன்றக்கூடிய Gliese 581C ஒரு கிரகம் Gliese 581 எனும் நட்சத்திரத்தை சுற்றி வருவதை கண்டு பிடித்திருக்கிறார்கள். (கிரகத்தின் பேருக்கும் நட்சத்திரத்தின் பேருக்கும் ஒரு C தான் வித்தியாசம்) இந்த நட்சத்திரம் நம்மை தள்ளி 20.4 ஒளி வருடங்கள் தொலைவில் உள்ளது,இதை பற்றி அவ்வளவாக தகவல்கள் இல்லாவிட்டாலும் ,இது ஒரு திண்ம நிலையில் உள்ள கிரகம் என்றும்,இதில் திரவ நிலையில் தண்ணீர் இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது.திரவ நிலையில் தண்ணீர் ஒரு கிரகத்தில் இருந்தாலே அங்கு உயிர் இருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உண்டு என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இப்படி அண்டத்தில் பரவி இருக்கும் உயிர்கள் நம்மை தொடர்பு கொள்கின்றனவா என்று பார்ப்பதற்கும், வேற்றுகிரக உயிர்களை தொடர்பு கொள்ளுவதற்கான ஆரய்ச்சிகளை செய்வதற்கென்றே SETI (Search for Extraterrestrial Intelligence) எனும் ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பை சேர்ந்த கார்ல் சேகன் (Carl Sagan) என்பவரால் எழுதப்பட்ட Contact எனும் நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. வேற்றுகிரக உயிர் பற்றிய ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.

மன்னிக்கனும் மக்கா, எழுத ஆரம்பிச்சு வுடனே எவ்வளவோ சொல்லனும்னு மனசுல எண்ணங்கள் அலைமோத எங்கெங்கேயோ போய் பதிவு கொஞ்சம் பெருசா போயிருச்சு. இப்போ கூட நிறைய சொல்லனும்னு தோணினாலும் , ரொம்ப மொக்க போட்டா திரும்ப வர மாட்டீங்களோன்ற பயத்துனால அவசரம் அவசரமா முடிக்கறேன்!! :-) இந்த வேற்றுகிரக மேட்டரை பத்தின நிறைய சுவாரஸ்யமான விஷயங்களும் கதைகளும் இருக்கு. அப்படிப்பட்ட ஒரு விஷயத்தோட உங்களை அடுத்த முறை சந்திக்கறேன்!!

வரட்டா!! :-)

References :

http://www.discoveringfossils.co.uk/Earth%20Development.jpg
http://en.wikipedia.org/wiki/Extraterrestrial_life
http://www.quantumconsciousness.org/penrose-hameroff/cambrian_files/camfig_1.gif
http://www.fas.org/irp/imint/docs/rst/Sect19/Sect19_2a.html
http://en.wikipedia.org/wiki/Image:Glieseupdated.jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/9/94/Habitable_zone-en.svg
http://en.wikipedia.org/wiki/Image:EuropaInterior1.jpg
http://en.wikipedia.org/wiki/Europa_%28moon%29
http://en.wikipedia.org/wiki/Ganymede_%28moon%29
http://en.wikipedia.org/wiki/Callisto_%28moon%29
http://en.wikipedia.org/wiki/Enceladus_%28moon%29
http://www.pbs.org/wgbh/nova/titan/porco.html

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

27 comments:

வடுவூர் குமார் said...

முடிவில்லா ஆராய்ச்சி செய்யும் ஒரே இடம் விண்வெளியாகத்தான் இருக்கும்.

துளசி கோபால் said...

யப்பா.............. படிக்கப்படிக்கத் தலை அப்படியே 'விண்'னுன்னு சுத்துது.
புரிஞ்சுக்க முடியாத ஆச்சரியமுன்னு சொன்னால் விண்வெளிதான்,இல்லை!!!

ulagam sutrum valibi said...

கண்ணு,
உன்னுடைய பதிவுகளை ஒருமுறைக்கு இருமுறை படிப்போன் மிக சுவாரசியமாய் இருக்கும்,மேலும் கடவுளிள் கைவண்ணத்தை கண்டு வியக்கச் செய்யும்.வேதத்தில் இருக்கும் உண்மைகளை உணரமுடிகிறது.இது போன்ற நல்ல கருத்துக்களை எழுத இறைவனின் அருள் நீ பெற வாழ்துகிறேன்.

CVR said...

@வடுவூர் குமார்
சரியா சொன்னீங்க குமார்!! எவ்வளவு கண்டுபிடித்தாலும் மேலும் மேலும் கேள்விகளை கிளப்பிவிடும் அட்சய பாத்திரம் இந்த விண்வெளி!! :-)

@துளசி
ஆமாம் டீச்சர்!! விண்வெளியில் விரிந்து கிடக்கும் ஆச்சரியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!! :-)

@உலகம் சுற்றும் வாலிபி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பாட்டி!!
உங்கள மாதிரி பெரியவங்க ஆசி இருக்கறதே சந்தோஷம்!! :-)

வருகைக்கும் பின்னுட்டத்துக்கும் மிக்க நன்றி! ;-)

ambi said...

//பதிவு கொஞ்சம் பெருசா போயிருச்சு. //


யப்பா! இப்பவாவது புரிஞ்சதே! :)

//இப்போ கூட நிறைய சொல்லனும்னு தோணினாலும் , ரொம்ப மொக்க போட்டா திரும்ப வர மாட்டீங்களோ//

அப்ப, வேலை மெனக்கெட்டு வந்தவங்க...

on a serious note, நல்ல எழுதி இருக்கீங்க. :)

CVR said...

@அம்பி
வாங்க அம்பி!!
எப்படி இருக்கீங்க?? :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி!! ;-))

Dreamzz said...

வாவ்! சூப்பர்! இந்த தொடர் கலக்குது!

Dreamzz said...

//தோன்றக்கூடிய Gliese 581C ஒரு கிரகம் Gliese 581 எனும் நட்சத்திரத்தை சுற்றி வருவதை கண்டு பிடித்திருக்கிறார்கள். (//

ithu thaana ippo recenta kandupidichathu?

CVR said...

@Dreamzz
"The discovery of the planet by the team of Stéphane Udry of the Geneva Observatory in Switzerland was announced on April 24, 2007."

http://en.wikipedia.org/wiki/Gliese_581_c

:-))

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

இரமேஷ் இராமலிங்கம் said...

சூப்பர்!!! ரொம்ப நல்ல எழுதுரீங்க. அடுத்த பதிவு எப்போ?

ALIF AHAMED said...

மன்னிக்கனும் மக்கா, எழுத ஆரம்பிச்சு வுடனே எவ்வளவோ சொல்லனும்னு மனசுல எண்ணங்கள் அலைமோத எங்கெங்கேயோ போய் பதிவு கொஞ்சம் பெருசா போயிருச்சு.
//
இதே மாதிரி மன்னிக்கனும் மக்கா கும்மில எல்லாத்தையும் மறந்துடுரேன்

:)

இராம்/Raam said...

CVR,

அட்டகாசமா எழுதுறீங்க..... கொஞ்சம் பெரிய பதிவுனாலும் படிக்க சுவராசியமா தான் இருந்தது....

நன்றி.. :)

CVR said...

@இரமேஷ்
வாழ்த்துக்களுக்கு நன்றி இரமேஷ்!!
வேறு சில தொடர்கள் எழுதிக்கொண்டிருப்பதால் வாரத்திற்கு ஒரு இடுகை போடலாம் என்று எண்ணம்!! :-))

@மின்னுது மின்னல்
நீங்க பதிவுக்கு வந்து படிச்சதே (படிச்சீங்கல???) சந்தோஷம் தல!! :-)
நன்றி

@இராம்
வாங்க அண்ணா!!
உங்க மாதிரி கவுஜ எழுத முடியாட்டாலும் ஏதோ உங்க ஆசினால இந்த தொடர் போய்ட்டு இருக்கு.
வருகைக்கும் வழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ராம் அண்ணா!! :-))

ALIF AHAMED said...

@மின்னுது மின்னல்
நீங்க பதிவுக்கு வந்து படிச்சதே (படிச்சீங்கல???) சந்தோஷம் தல!! :-)
நன்றி
//

இது என்ன ராம் எழுதுன கவிதையா
படிக்காம பின்னுட்டம் போடுவதற்கு...

:)

Anonymous said...

////பதிவு கொஞ்சம் பெருசா போயிருச்சு. //

தெரியுது இல்ல.இதை இந்த வாரம் படிச்சு முடிக்க முடியாது போல் இருக்கே.ஆகவே நம்ப கார்த்திக் style இல்.....இது attendance comment only.
அப்புறம் படிச்சு நான் அடிக்கிறேன்..உங்களை இல்லை.கும்மி அடிக்கின்றேன் ன்னு சொல்ல வந்தேன்

Anonymous said...

Hi,
Compared the matter you are writting, It is not not a big "pathivu". Instead it is very small. Please make your "pathivu" longer and comprehensive.

It is really intersting and you are a best writter in science.
Keep it up.

-Raj

Karthikeyan Rajasekaran said...

simply superb..... :)

CVR said...

@துர்கா
//அப்புறம் படிச்சு நான் அடிக்கிறேன்..உங்களை இல்லை.கும்மி அடிக்கின்றேன் ன்னு சொல்ல வந்தேன்//
இதை படிக்கும்போதே கலக்கமா இருக்கே!!
என்னென்ன ரணகளம் ஆகப்போகுதோ!! :-S

@Raj
//Instead it is very small. Please make your "pathivu" longer and comprehensive. //
எடுத்த தலைப்பை பற்றி ஒரு முழுமையான கட்டுரை தரத்தான் முயற்சி செய்கிறேன் ராஜ்,ஆனால் பதிவு பெரியதாக இருந்தால் பலர் பெரியதாக இருப்பதை பார்த்து விட்டு படிக்காமையே போய் விடுவதால் ஒரு அளவோடு நிறுத்த வேண்டி உள்ளது.
ஒரு சமநிலையை அடைவதற்கு அடுத்த முறை முயல்கிறேன்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே!! :-)

@கார்த்தி
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தலைவா!! :-)

ACE !! said...

அருமையான கட்டுரை.. வாழ்த்துக்கள்..
இந்த மாதிரி வேற்று கிரக உயிரினங்களை radio waves மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்வதாய் படித்த மாதிரி ஞாபகம். (சரியாக தெரியவில்லை.. )

CVR said...

@சிங்கம்லே ACE
வருகைக்கு நன்றி.

வேற்று கிரகத்தில் உயிர்கள் பற்றியும் அவர்கள் நம்மை தொடர்பு கொள்வார்களா/கொள்கிறார்களா?? அவர்கள் தொடர்பு கொண்டால் நம்மால் உணர முடியுமா,உணர்ந்து கொண்டால் கூட புரிந்துகொள்ள முடியுமா??
இப்படி ஆயிரம் உபகேள்விகள் உண்டு. சுவாரஸ்யமான தலைப்பு ,நிறைய எழுதலாம், முடிந்தால் தனி பதிவாகவே போட்டு விடுகிறேன்!! :-))

G.Ragavan said...

ம்ம்ம்ம்....எங்கெங்க என்னென்ன இருக்கோ...அட நம்ம கண்ணு முன்னாடியே நூறு உயிர்கள் காத்துல மெதக்குதாம். அதுவே தெரிய மாட்டேங்குது. இதுல எங்கயோ இருக்குற உயிர்கள நம்ம கண்டுபிடிச்சா..அது பெரிய வெற்றிதான். ஆனா மடியில பூனையக் கட்டிக்கிட்டு வரப் போறமா....பொதையலைக் கட்டிக்கிட்டு வரப்போறமான்னுதான் தெரியலை.

நல்ல சுவாரசியமான தொடர். நீங்கள் நிறையப் படிக்கின்றீர்கள் என்று தெரிகிறது. அப்படி நீங்கள் படித்த தகவலை எங்களோடு பகிர்ந்து கொள்ளும் உங்களது மனப்பாங்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்களுக்கு எனது நன்றி. :)

CVR said...

//நீங்கள் நிறையப் படிக்கின்றீர்கள் என்று தெரிகிறது. அப்படி நீங்கள் படித்த தகவலை எங்களோடு பகிர்ந்து கொள்ளும் உங்களது மனப்பாங்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்களுக்கு எனது நன்றி. :)//

ஏதாவது கோபம்னா நேரடியாவே திட்டிருங்களேன் தலைவா!!
ஏன் இப்படி வாங்க போங்கன்னு எல்லம் சொல்லி இன்ஸல்ட் பண்ணுறீங்க!! :-(

CVR said...

பதிவு உங்களுக்கு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணாத்த!! :-)

Raji said...

CVR Soopernga...Naan indha pathivula pudhu vishyangala therinju kittaen..Awaiting for the next part ...

Raji said...

Neenga paeriya pathivunu sonathukku apuram dhaan I realied that thing..
Ennaku ennavoo tappunu mudinja maadhiri dhaan irundhuchu nga..
Good writing..Intterestin things!!

CVR said...

@ராஜி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!
மிக பெரியதாக இருந்தால் சிலர் படிக்காமலேயே சென்று விடுவதால் முடிக்க வேண்டி இருந்தது!!
அடுத்த பகுதியில் விட்ட இடத்தில் இருந்து சரியாக தொடருகிறேன்!!

சரியா?? :-))

களவாணி said...

பெருசாப் போட்டாத்தாங்க அது பதிவு, சிறுசாப் போட்டா அது பின்னூட்டம். : )

கலக்கல் பதிவு. ம்ம்ம்,. நடத்துங்க.

நன்றி

Related Posts Widget for Blogs by LinkWithin