வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6

என் இனிய தமிழ் மக்களே,
போன பகுதியோட பின்னூட்டங்களிலே பாத்தோம்னா,அண்ணாத்த சிங்கலே ACE ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாரு.

//இந்த மாதிரி வேற்று கிரக உயிரினங்களை radio waves மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்வதாய் படித்த மாதிரி ஞாபகம்//

அப்படின்னு ஒரு நமக்குள்ள ஒரு கேள்வி எழுப்பி இருந்தாரு!! இதை பாத்த உடனே எனக்கு சொல்ல தோன்றிய விஷயங்கள் எல்லாவற்றையும் பின்னூட்டமாக இடுவதை விட பதிவாகவே போட்டு விடலாம் என்று தோன்றியது. ஏனென்றால் இது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான தலைப்பு.

வேற்று கிரக உயிர் என்ற பேச்சு வந்தாலே அவிங்க நம்ம கிட்ட தொடர்பு கொள்றாங்களா?? நாம அவங்க கிட்ட தொடர்பு கொள்ள முடியுமா?? இதுக்கு முன்னாடி ஏதாவது தொடர்பு ஏற்பட்டிருக்கிறதா?? என பல கேள்விகள் உண்டு. வேற்று கிரக் உயிர்களுடன் நமக்கு தொடர்புகள் ஏற்பட்டிருக்கா இல்லையா,அதற்கான சான்றுகள் உள்ளனவா என்பதையெல்லாம் பார்ப்பதற்கு முன் தொடர்பு கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விஞ்ஞானிகள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

இந்த விஷயத்தை பொருத்த வரை விஞ்ஞானிகளின் நிலைப்பாட்டை மூன்று விதமாக பிரிக்கலாம். ஒரு சாரார் இந்த அண்டத்தில் பூமியை தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை என்று உறுதியாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு பெரும்பாலும் அவர்களின் மத நம்பிக்கையே அடித்தளமாக அமைந்து விடுகிறது.இந்த நம்பிக்கைக்கு "Rare earth theory" என்று ஒரு பெயர் உண்டு. அதாவது அண்டத்தில் நம் பூமியில் இருப்பதை போன்ற அமைப்பு மிக மிக அபூர்வம் என்றும் இது போன்று அமைப்பு வேறு எங்கும் அமைய சாத்தியமே இல்லை என்பது இவர்கள் வாதம்.
அடுத்த வகையை சேர்ந்தவர்கள் வேற்று கிரகங்களில் உயிர்கள் இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் மனிதனை போன்ற அறிவில் வளர்ச்சி அடைந்த உயிரினங்களை காண்பது அரிது என்றும்,அவை நுண்ணுயிர் வகை போன்று சிறியதாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். இதனால் வேற்று கிரக உயிரினங்களோடு தொடர்பு கொள்ள முயற்சிப்பது வீண்் என்றும், அதற்கு செலவு செய்யும் பணத்தை வேறு ஆராய்ச்சிகளில் செலவு செய்யலாம் என்பது இவர்கள் வாதம்.

மூன்றாமவர்கள் அண்டத்தில் மனிதனை போல அறிவு பெற்ற உயிர் நிச்சயமாக உண்டு என்று நம்புபவர்கள். இவ்வளவு பெரீஈஈஈய அண்டத்தில் பூமியில் மட்டும் தான் உயிர் இருக்கிறது என்றால் நம்பும்படிய இருக்கிறது??? "இது என்ன சிறுபுள்ள தனமாக இருக்கு" என்பது இவர்கள் வாதம்.

ஹ்ம்ம்ம் நமக்கு எதுவும் பிடிபடலை,எல்லாமே இவங்களே கண்டு புடிச்சு சொன்னா சரிதான்!!
ஆனா, வேற்றுகிரகத்துல அறிவார்ந்த உயிர் இருக்குன்னு நம்பினாலும் கூட அவிங்க கூட தொடர்பு கொள்வது சாத்தியமா?? என்பது மிக சுவாரஸ்யமான கேள்வி. ஏன்னா அப்படி தொடர்பு கொள்வதற்கு நமக்கு இருக்கற தடங்கல்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை.

1.) தூரத்து இடி முழக்கம்: நான் பல முறை சொன்னது போல விண்வெளியில் இருக்கும் பொருட்கள் எல்லாம் ஒன்றும் பக்கத்தில் இல்லை,ஒவ்வொன்றும் பல ஒளி வருடங்கள் தள்ளி இருக்கு. அதனால தொடர்பு கொண்டாலும்,அதற்கு அவிங்க மறுமொழி அளித்தாலும் அது வந்து போற நேர காலம் கொஞ்ச நஞ்சம் இருக்காது. உதாரணத்திற்கு ஒரு ஆயிரம் ஒளி வருடம் தள்ளி ஒரு கிரகம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்,அதற்கு நாம் அனுப்பும் செய்தி 1000 வருடங்களுக்கு பின் போய் சேரும். அதற்கு அவர்கள் உடனடியாக மறுமொழி அனுப்பினாலேயே அது வந்து சேர இன்னொரு ஆயிரம் வருஷம் ஆகும்!!! 2000 வருஷத்துல நம்ம ஊருல என்ன என்ன மாற்றங்கள் வரும்னு கற்பனை பண்ண முடியுதா?? ஒரு அஞ்சு வருஷம் ஆட்சி மாறினாலேயே அவிங்க ஆரம்பிச்ச மேம்பாலத்தை இவிங்க முடிக்க மாட்றாங்க,இவிங்க ஆரம்பிச்ச மேம்பாலத்தை அவிங்க முடிக்க மாட்றாங்க!!! இதுல 2000 வருஷத்துல என்ன ஆகும்னு யாருக்கு தெரியும்??? அதுவும் நாம் விண்வெளியை கடந்து போகற அளவுக்கு சமிஞைகள் எல்லாம் சமீப காலமாதான் அனுப்பிக்கிட்டு இருக்கோம்.
இதெல்லாம் எப்போ வேற்றுகிரகத்துக்கு போய் சேர்ந்து,எப்போ அவிங்க அதை புரிஞ்சிகிட்டு,எப்போ அதுக்கு மறுமொழி அனுப்பி,அது எப்போ நம்மள வந்து சேருவது???
இது செல்லாது செல்லாது!!அப்படின்னு நாட்டாம்மை சொல்லுறா போல இருக்கா??
ஹ்ம்ம்ம்!!! சில மக்கள் அப்படிதான் சொல்றாய்ங்க.

2.)நேரம் காலம் கூடி வரனும்: இன்றைய தேதியில் வேற்று கிரகத்திலே இருந்து ஏதாவது செய்தி இருந்தால் அடிச்சு புடிச்சு என்ன மேட்டருன்னு கண்டு புடிச்சு ,அமெரிக்கா,ரஷ்யா,ஜப்பான் அப்படின்னு எல்லா நாடுகள் கிட்டையும் கலந்து பேசி ,ஐ.நா சபையில் அறிவித்து,உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து அல்லோல கல்லோல படுத்திருவோம்ல!!!
இதே ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்னாடி வந்திருந்தா??ஒரு 500 ஆண்டுகளுக்கு முன்னாடி வந்திருந்தா??? ஒரு 1500 ஆண்டுகளுக்கு முன்னாடி வந்திருந்தா??? ஒன்றரை லட்சம் வருடங்களுக்கு முன் வந்திருந்தால்???
நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதுல்ல??நாம அனுப்பர செய்தி சரியான சமயத்துல போய் சேரனும்!! அவங்க அறிவும் தொழில்நுட்பமும் அதுக்கு ஏத்தா மாதிரி வளர்ந்திருக்கனும். நம்ம ஊரு மாதிரி இடைத்தேர்தல்,உலக அழகி போட்டி அது மாதிரி முக்கியமான விஷயங்கள் எல்லாம் நடந்துட்டு இருந்தா நாம அனுப்பர செய்தியை அவிங்க கண்டுக்கவே மாட்டாங்க!! அதனால் அறிவில் வளர்ந்த உயிரினம் உள்ள ஒரு உலகத்தை நம் செய்தி சென்று சேர்ந்தாலும் அதற்கு கட்டாயமாக எல்லா சமயமும் மறுமொழி வரும் என்று கூற முடியாது. நாம் அனுப்பும் செய்தி சரியான நேரத்தில் போய் சேர வேண்டும். நம் அண்டம் எண்பது பல பல பில்லியன் வருடங்களாக இருந்து வருவதால் நாம் செய்தி வெளியிடும் சமயத்தில் வேற்றுகிரக உயிர்களும் அதை புரிந்து கொள்ளும் நிலையில் இருந்தால் அது மிக மிக அபூர்வமான விஷயம்.

3.)நம்ம காது கொஞ்சம் மந்தம்:நாம எவ்வளவுதான் அறிவியல்ல சூரப்புலின்னு நெனைச்சிகிட்டு இருந்தாலும் நாம் கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு தான். புற ஊதா கதிர்கள்,X கதிர்கள்,காமா கதிர்கள் போன்ற விஷயங்கள் எல்லாம் நாம் சில நூறு ஆண்டுகளாக தான் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறோம். இவைகளை அளக்கவும்,உணர்ந்துகொள்ளவும் இருக்கும் கருவிகளும் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவை என்று சொல்ல முடியாது. நம் கருவிகள் காதில் படாத அலைவரிசையிலோ அல்லது அவை உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு சக்தி குறைந்து சமிஞைகள் வரலாம். அதை போன்ற செய்திகள் இப்பொழுது கூட வந்துகொண்டு இருக்கலாம் ,அல்லது இதற்கு முன் வந்திருக்கலாம். அப்படி இருந்தால் நாம்் அவைகளை கேட்காமல் தவற விட்டிருப்போம். இல்லை என்றால் நமக்கு தெரியவே தெரியாத கதிர் இயக்க அலைகளை கொண்டு அவர்கள் நம்மை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்.
இதே போன்று நாம் அனுப்பும் செய்திகளும் அவர்களுக்கு தெரிந்த அலைகளில் இருந்தால் தான் அவர்களால் அதை உணர்ந்து கொள்ள முடியும்.

4.) விருப்பமேயில்லை : இது வரைக்கும் தொடர்பு கொள்ள முடியுமா என்று தானே பேசிக்கொண்டிருந்தோம் ஆனால் சில பேரின் கருத்து கொஞ்சம் வித்தியாசமானது. சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால் வேற்றுகிரக பிராணிகளால் நம்மை தொடர்பு கொள்ள முடிந்தாலும் அவர்கள் நம்மோடு தொடர்பு கொள்ளாமல் விட்டு வைத்திருக்கின்றார்கள் என்று சொல்கிறார்கள்.
அதாவது நாம் மிருக காட்சி சாலையில் மிருகங்களை தனியே அடைத்து வைத்திருப்பது போல நம்மை பூமியில் தனியே விட்டு விட்டு அறிவில் உயர்ந்த வேற்று கிரக உயிர்கள் நம்மை கண்கானிக்கின்றன என்பது இவர்களின் கூற்று. இதற்கு ஆங்கிலத்தில் "Zoo hypothesis" என்று பெயர் உண்டு.
இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு !! என்று தோன்றுகிறதா???
என்ன செய்வது?? தொழில்நுட்ப காரணங்களுக்கு அப்பாற்பட்டு மனிதன் விண்ணுயிர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமைக்கு,மக்களிடையே இப்படி ஒரு அனுமானமும் இருக்கிறது என்று காட்டுவதற்காகவே இதை நான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்.

5.) அவிங்க இங்கிட்டு தான்யா இருக்காய்ங்க!! : எல!!! வேற்றுகிரக மக்கள் எங்க இருக்காய்ங்கன்னு இங்கேயும் அங்கேயும் பாத்துகிட்டு இருக்க?? அவிங்க ஏற்கெனெவே நம்ம உலகத்துல வந்துட்டாய்ங்கப்பா!!
"Men in Black" படம் பாத்திருக்கீங்கல??? அது மாதிரி உலகத்தில் ஏற்கெனவே வேற்று கிரக மக்கள் இருக்கிறார்கள் என்றும் ,ஆனால் நமக்கு தான் தெரியவில்லை என்றும் ஒரு கருத்து உண்டு.
இதை பற்றி அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தும் மக்களிடையே இது மறைக்கப்பட்டிடுக்கிறது என்று ஒரு பிரிவினர் நம்பி வருகிறார்கள். ஆங்காங்கே வேற்று கிரகத்தினரால் கடத்தப்பட்டதாகவும் ,அவர்களால் தன் மேல் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதாக கூறுபவர்களும் உண்டு. இது தவிர பல இடங்களில் பறக்கும் தட்டுகளோ , அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்(UFO-Unidentified flying objects) கண்டதாக பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம்.

வேற்று கிரக உயிர் பற்றிய அறிமுகம் இந்த பதிவில் உங்களுக்கு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.இந்த அறிமுகத்தை வைத்துக்கொண்டு பல விஷயங்களை நாம் பின் வரும் பாகங்களில் காணலாம்.

வரட்டா?? ;-)

References:
http://en.wikipedia.org/wiki/Fermi_paradox

படங்கள்:
http://pwp.netcabo.pt/susana.ribeiro1/img_ogame/universe_lonleyplanet_1024.jpg
http://www.wvp-consulting.com/astronomy/images/andromgal.jpg
http://www.cheryllavender.com/Time%20and%20Space.jpg
http://en.wikipedia.org/wiki/Image:Terrestrial_Planet_Finder_PIA04499.jpg
http://www.jpl.nasa.gov/images/superhighway_square_browse.jpg
http://us.movies1.yimg.com/movies.yahoo.com/images/hv/photo/movie_pix/columbia_pictures/men_in_black/fakehead.jpg

வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)

23 comments:

துளசி கோபால் said...

நம்ம வீட்டுலேயும் வேற்றுகிரக ஆளுங்க வந்துட்டாங்க:-)

Anonymous said...

are we alone in this universe....?
hehe.nalla post nga thambi..ennakum adikadi santhegam varum..thambi neega alien illathaane :S

Anonymous said...

// "Zoo hypothesis" என்று பெயர் உண்டு.
இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு !! என்று தோன்றுகிறதா???
//
hehe..illaiye :D

ALIF AHAMED said...

patikkala appaala vaareen

களவாணி said...

//உதாரணத்திற்கு ஒரு ஆயிரம் ஒளி வருடம் தள்ளி ஒரு கிரகம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்,அதற்கு நாம் அனுப்பும் செய்தி 1000 வருடங்களுக்கு பின் போய் சேரும். அதற்கு அவர்கள் உடனடியாக மறுமொழி அனுப்பினாலேயே அது வந்து சேர இன்னொரு ஆயிரம் வருஷம் ஆகும்!!! //

அதுவும் நாம ஒளியின் வேகத்திற்கு நம்ம "sms"ஐ அவிங்களுக்கு அனுப்பினாத்தானே அந்த 1000 ஆண்டாவது ஆகும்.?

//மூன்றாமவர்கள் அண்டத்தில் மனிதனை போல அறிவு பெற்ற உயிர் நிச்சயமாக உண்டு என்று நம்புபவர்கள். இவ்வளவு பெரீஈஈஈய அண்டத்தில் பூமியில் மட்டும் தான் உயிர் இருக்கிறது என்றால் நம்பும்படிய இருக்கிறது??? "இது என்ன சிறுபுள்ள தனமாக இருக்கு" //

அதானே இதென்ன சின்னப் பிள்ளத் தனமால்ல இருக்கு.

//அவிங்க ஏற்கெனெவே நம்ம உலகத்துல வந்துட்டாய்ங்கப்பா!!//

ஆஹா இங்கனயும் வந்துட்டானுவளா? :0

இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரிஞ்சாலும், சில பேரப் பார்த்தாலே அப்படித்தான் தோணுது. (இது சும்மா சோக்கு... ) ; )

விண்வெளி, பல ரகசியங்களை தனக்குள் மூடி வைத்துக் கொண்டிருக்கும் ஒரு அதிசயம். சுவாரசியமான ஒரு விஷயத்தை ரசிக்கும் படியாக கொண்டு செல்கிறீர்கள். உங்களிடம் இருந்தும் நிறைய எதிர்ப்பார்கின்றேன்.

நன்றி

செந்தில்

Anonymous said...

//வேற்று கிரக உயிர் பற்றிய அறிமுகம் இந்த பதிவில் உங்களுக்கு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.இந்த அறிமுகத்தை வைத்துக்கொண்டு பல விஷயங்களை நாம் பின் வரும் பாகங்களில் காணலாம்.//
waiting for your next one...thodarattum
friend

Mani said...

Very interesting.

இரமேஷ் இராமலிங்கம் said...

நானும் சில நேரம் இதப்பத்தி யோசிப்பேன். எனக்கு என்னவோ வேற கிரகத்துல உயிர் இருக்கலாம். ஆனா மனிதன மாதிரியே இருக்க சான்ஸ் ரொம்ப கம்மினு தான் தோனுது. சரி அடுத்த பதிவு எப்போ(புகைப்படம் & வின்வெளி)?

இரமேஷ் இராமலிங்கம் said...

//அவிங்க இங்கிட்டு தான்யா இருக்காய்ங்க!!//
நல்லா கெளப்புரீங்கப்பா பீதிய!!!!

Raji said...

Attendance mattum CVR :)

CVR said...

@துளசி டீச்சர்
சூப்பரு!!
அப்போ நான் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதினது எல்லாம் வீணா?? :-))

@துர்கா அக்கா!!
//thambi neega alien illathaane :S //
பின்னூட்டங்கள் கிடையாது!!
அதாவது "no comments"னு சொல்ல வந்தேன்!!! :-P

@மின்னுது மின்னல்
பொறுமையா படிச்சு பாத்துட்டு சொல்லுங்க தல!! :-)

@செந்தில்
//அதுவும் நாம ஒளியின் வேகத்திற்கு நம்ம "sms"ஐ அவிங்களுக்கு அனுப்பினாத்தானே அந்த 1000 ஆண்டாவது ஆகும்.?
//
நான் அனுப்புவது எல்லாமே ஒரு விதமான மின்காந்த(electromagnetic) அலைகள் தானே!!
மின் காந்த அலைகள் எல்லாமே ஒளியின் வேகத்தில் தான் பயணிக்கும் என்று படித்த ஞாபகம்!! :-)

//அதுவும் நாம ஒளியின் வேகத்திற்கு நம்ம "sms"ஐ அவிங்களுக்கு அனுப்பினாத்தானே அந்த 1000 ஆண்டாவது ஆகும்.?
//
அண்ணாத்த!!
என்னிய வெச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே??? :-))

/சுவாரசியமான ஒரு விஷயத்தை ரசிக்கும் படியாக கொண்டு செல்கிறீர்கள். உங்களிடம் இருந்தும் நிறைய எதிர்ப்பார்கின்றேன்.
//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி செந்தில்!!
:-)

@அனானி ஃபிரண்ட்
நன்றி ஃபிரண்ட்!! :-)

@மணி
வாங்க மணி.
பதிவு உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி!! :-)

@இரமேஷ்
//ஆனா மனிதன மாதிரியே இருக்க சான்ஸ் ரொம்ப கம்மினு தான் தோனுது. //
தெரியலையே அண்ணாத்த!!
புரியாத புதிராக மனிதனை இந்த விஷயமும் தண்ணி காட்டிகிட்டு இருக்கு!! :-)

//சரி அடுத்த பதிவு எப்போ(புகைப்படம் & வின்வெளி)? //
இசை இன்பம்,இசையரசி ரெண்டுலையும் பதிவு எதுவும் போடல!!அங்கே ஏதாவது போட்டுட்டு தான் இங்கே போடுவேன்னு நினைக்கிறேன்.

பார்க்கலாம்!! :-)

@வாங்க ராஜி
கொஞ்ச நாளா அட்டென்டென்ஸ் மட்டும் தான் போடறீங்க!!
எப்பயாச்சும் வந்து முழு பதிவையும் படிச்சு பாருங்க!! :-)
வருகைக்கு மிக்க நன்றி!! :-)

Dreamzz said...

நல்ல டாபிக். அருமையான விளக்கங்கள்!

Dreamzz said...

//ஒரு அஞ்சு வருஷம் ஆட்சி மாறினாலேயே அவிங்க ஆரம்பிச்ச மேம்பாலத்தை இவிங்க முடிக்க மாட்றாங்க,இவிங்க ஆரம்பிச்ச மேம்பாலத்தை அவிங்க முடிக்க மாட்றாங்க!!! //

நல்லா சொன்னீங்க தல!! இது என்னமோ உண்மை தான்!

Dreamzz said...

//"Men in Black" படம் பாத்திருக்கீங்கல??? அது மாதிரி உலகத்தில் ஏற்கெனவே வேற்று கிரக மக்கள் இருக்கிறார்கள் என்றும் ,ஆனால் நமக்கு தான் தெரியவில்லை என்றும் ஒரு கருத்து உண்டு.
//
நான் இந்த கட்சி! ::))

CVR said...

@ட்ரீம்ஸ்!
வாங்க அண்ணாத்த!!
வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)

Raji said...

//@வாங்க ராஜி//
Vandhutoamula vandhutoamula :)

//கொஞ்ச நாளா அட்டென்டென்ஸ் மட்டும் தான் போடறீங்க!!//
Enna thalaiva pannuradhu aanigal palavidham ;)

//எப்பயாச்சும் வந்து முழு பதிவையும் படிச்சு பாருங்க!! :-)//
Padichutoamula padichutoamula..Summa superaa aarmichurukeenga as usual way of ur writingla ..Waitinig waiting nest partkku annathaey :)

//வருகைக்கு மிக்க நன்றி!! :-) //
Ur welcome:)

G.Ragavan said...

இந்த வேற்று விண்ணுயிர்களே ஒரு ஆச்சரியமான விஷயந்தான். நினைக்கவும் பேசவும் எழுதவும்.

zoo hypothesisனு சொன்னியே அதுதான் மதநம்பிக்கைகளுக்கெல்லாம் அடிப்படை. எங்கயோ உக்காந்துக்கிட்டு நம்மள வெச்சுப் பாத்துக்கிட்டிருக்காங்கன்னு நம்புறதுதானே பலப்பல வகையான கடவுள் நம்பிக்கை.

இப்ப அறிவியல்ல சிக்னல் அனுப்புறாங்க. அது சேந்துச்சா...சேரலையா...சேந்தும் பதில் சொல்லலையா..ஒன்னும் தெரியாது. அப்படி விண்ணுயிர்களோடு தொடர்பு வைக்க எவ்வளவு முயற்சி பண்றாங்க. வேண்டாம் விண்ணுயிர் ஒன்னுமே இல்லைன்னு ஒரு கூட்டம்.

அதே மாதிரி..கடவுள் எங்கையோ இருக்காருன்னு..அவரோடு தொடர்பு வெச்சுக்க என்னென்னவெல்லாம் பண்றோம். அது போச்சா...போகலையா...போயும் பதிலில்லையா..எதாவது தெரியுமா? அப்படியும் தொடர்பு வெச்சுக்கிற எவ்வளவு முயற்சி பண்றாங்க. அட..கடவுளே இல்லை...இதெல்லாம் பண்ணாதீங்கன்னும் சொல்றாங்களே...

பாத்தியா அறிவியலும் ஆன்மீகமும் எவ்வளவு ஒத்துமையா இருக்கு :)))))))))))

CVR said...

@ராஜி
வாங்க ராஜி!!
சொன்னா மாதிரியே கரீட்டா வந்து பதிவ படிச்சிட்டீங்க!!
நன்றி!! :-)

@ஜிரா
வாங்க அண்ணா!! :-)

//
பாத்தியா அறிவியலும் ஆன்மீகமும் எவ்வளவு ஒத்துமையா இருக்கு :)))))))))))//
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அண்ணா!! :-)
சுவாரஸ்யமான கண்ணோட்டமா இருக்குது அண்ணாத்த!!
கருத்துக்களுக்கு மிக்க நன்றி!! :-)

களவாணி said...

//zoo hypothesisனு சொன்னியே அதுதான் மதநம்பிக்கைகளுக்கெல்லாம் அடிப்படை. எங்கயோ உக்காந்துக்கிட்டு நம்மள வெச்சுப் பாத்துக்கிட்டிருக்காங்கன்னு நம்புறதுதானே பலப்பல வகையான கடவுள் நம்பிக்கை.

இப்ப அறிவியல்ல சிக்னல் அனுப்புறாங்க. அது சேந்துச்சா...சேரலையா...சேந்தும் பதில் சொல்லலையா..ஒன்னும் தெரியாது. அப்படி விண்ணுயிர்களோடு தொடர்பு வைக்க எவ்வளவு முயற்சி பண்றாங்க. வேண்டாம் விண்ணுயிர் ஒன்னுமே இல்லைன்னு ஒரு கூட்டம்.

அதே மாதிரி..கடவுள் எங்கையோ இருக்காருன்னு..அவரோடு தொடர்பு வெச்சுக்க என்னென்னவெல்லாம் பண்றோம். அது போச்சா...போகலையா...போயும் பதிலில்லையா..எதாவது தெரியுமா? அப்படியும் தொடர்பு வெச்சுக்கிற எவ்வளவு முயற்சி பண்றாங்க. அட..கடவுளே இல்லை...இதெல்லாம் பண்ணாதீங்கன்னும் சொல்றாங்களே...

பாத்தியா அறிவியலும் ஆன்மீகமும் எவ்வளவு ஒத்துமையா இருக்கு :))))))))))) //

ஆகா!!!, சூப்பர் தல...

ulagam sutrum valibi said...

கண்ணு,
1963ன்னு நினைக்கிறேன்,அமெரிக்க ஆராய்சிக்காரர் சொன்னாங்க
ஏதொ ஒரு கிரணத்திலிருந்து சிக்னல் வருவதாகவும் அதை அறிய முடியவில்லை என்று.
வேற்று கிரகணத்தில் உள்ள உயிரினம் நம்மை விட அறிவியலில் முதிர்திருந்தால் ஒளி வருடங்களுகளைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை.விரைவாக அனுப்பும் திறன் இருந்தால்....
இது என் தாழ்மையான கருத்து.

CVR said...

@உலகம் சுற்றும் வாலிபி
வாங்க பாட்டி!! என்ன ரொம்ப நாளா காணோம்????

நீங்க சொல்லுறதும் சரி தான் பாட்டி.
சமீபத்துல "k-Pax" அப்படின்னு ஒரு படம் பாத்தேன்!!
அதுல வர ஒரு பாத்திரம், தான் வேற்று கிரகத்தில் இருந்து ஒளியை விட பல மடங்கு வேகத்தோடு பயனித்து வந்ததாக கூறுவார்!! :-)

Anonymous said...

I came to know your site thru one of my friends. The posting on Software professionals was really good and very true. I can't comment on this post, as I'm not much aware of the things that you write about 'VEtru graham'. Anyway your posts are good and informative. Could I ask you something? Are you from Madurai or just making fun of the 'avainga, ivainga'. I'm from Madurai, its good anyway - UmaKrishna

CVR said...

@உமா கிருஷ்ணன்
வரவுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!!
உங்கள் நண்பருக்கும் என் நன்றியை சேர்த்துவிடுங்கள்!! :-)
//I can't comment on this post, as I'm not much aware of the things that you write about 'VEtru graham'. Anyway your posts are good and informative.//

விண்வெளி என்பது மிக சுவாரஸ்யமான ஒரு தலைப்பு, படிக்க ஆரம்பித்தால் உங்களுக்கும் மேலும் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக்கொண்டு விடும்!! :-)

//Could I ask you something? Are you from Madurai or just making fun of the 'avainga, ivainga'. I'm from Madurai, its good anyway //
நான் மதுரையை சேர்ந்தவன் அல்ல,பதிவு படிப்பத்ற்கு சுவையாக இருக்க வேண்டும் என்று அவ்வப்பொழுது மதுரை,தூத்துக்குடி உச்சரிப்பு வருமாறு எழுத முயற்சிப்பேன்!! :-)

தொடர்ந்து பதிவுக்கு வருகை தாருங்கள்!!
வாழ்த்துக்களுக்கு நன்றி!! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin