நம்ம ராஸ்வெல் கதையை போன பகுதியில விட்ட இடத்துல இருந்து தொடரலாமா???
நம்ம ப்ரேசல்லு கொண்டு வந்த பொருட்களை எல்லாம் பாத்துட்டு அவருடைய பக்கத்து பண்ணைகாரரு லொரெட்டா ப்ராக்டர் செமத்தியா டென்சன் ஆகிட்டாரு.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான நம்ம தொழிலதிபர் கென்னெத் அர்னால்ட்டு ஏதோ பறக்கும் தட்டு பார்த்தேன்னு சொன்னாருல!! அதனால நீ பேசாம அதிகாரிகள் கிட்ட இதை ஒப்படைச்சிடு. இது பத்தி ஏதாவது தகவல் கொடுத்தா ஏதோ பரிசு தரேன்னு வேற சொன்னாங்க அப்படின்னு பிராக்டர் நம்ம ப்ரேசலை உசுப்பேத்தி விட்டுட்டாரு. சரி இவரு சொல்லுறதும் சரிதான் அப்படின்னு நம்ம ப்ரேசல் அடுத்த நாள் 6ஆம் தேதி ராஸ்வெல் நகரத்துக்கு பயணப்படுறாரு.
ராஸ்வெல் நகரத்துக்கு போய்ட்டு அங்கிட்டு அந்த ஊரோட ஷெரீஃப் (sherif - நம்ம ஊரு இன்ஸ்பெக்டரு மாதிரின்னு நெனைச்சுக்கோங்களேன்) ஜார்ஜ்.ஏ.வில்காக்ஸ் (George.A.Wilcox) கிட்ட இந்த மாதிரி மேட்டரு அப்படின்னு சொல்லுறாரு. கூடவே தான் கொண்டு வந்த விபத்தில் சிதைந்து போன பொருட்களையும் வில்காக்ஸ் கிட்ட காட்டுறாரு. இதை பாத்தவுடனே வில்காக்ஸ்கு இது சாதாரணமான வான ஊர்தி இல்லைன்னு தோணுது. அவருக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம தொழிலதிபர் கண்ட பறக்கும் தட்டுக்கள் பத்தி ஞாபகம் வந்துருச்சு.சரின்னு உடனே அந்த ஊரு விமான படை முகாம்னு தொடர்பு கொள்றாரு. அங்கு அந்த ஊருக்கான விமான படை
கமாண்டிங் ஆப்பீசர் கர்னல் வில்லியம் ப்ளான்கர்ட் (Colonel.William Blanchard) விஷயத்தை கேட்டுவிட்டு ஜெஸி மார்செல் (Jesse.A.Marcel) என்பவரை பார்வையிட பணிக்கிறார்.
இதையடுத்து மார்செல் நம்ம ப்ரேசல் கூட அவரோட ஊருக்கு அடுத்த நாள் போய்ட்டு சம்பவ இடத்தை பார்வையிடறாரு (அவரு கூட காவிட் (Cavitt) என்பவரும் போனதாக ஒரு கருத்து உண்டு,ஆனா இதில் சிறிது குழப்பம் இருக்கிறது). அங்கே போயிட்டு, அங்கிட்டு இருக்கற பொருட்களை எல்லாம் ராப்பகலா சேகரிக்கறாரு. இப்படி சேகரிச்ச பொருட்களை எல்லாம் எடுத்துகிட்டு ராஸ்வெல்க்கு திரும்பி வராரு. வீட்டுக்கு வரும் போது ராத்திரி இரண்டு மணி கிட்ட ஆகிடுது.இருந்தாலும் தூங்கிகிட்டு இருக்கற மனைவி குழந்தைகளை எல்லாம் எழுப்பி தான் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் காட்டுறாரு. பாத்தியா இது மாதிரி நாம எப்பயாச்சும் ஏதாவதும் பாத்திருக்கோமா??இது நிச்சயமா வேற்றுகிரகத்தில் இருந்து வந்த பொருட்கள் மாதிரி தான் இருக்குன்னு சொல்றாரு.
அடுத்த நாள் காலையில எழுந்து போய்ட்டு தன்னுடைய மேலதிகாரி ப்ளான்கர்ட்டை பார்த்து மார்செல்லு பேசறாரு. தான் கொண்டு வந்த பொருட்கள் எல்லாம் காண்பித்து தான் இது பற்றி என்ன நினைக்கிறேன் என்று விளக்குறாரு. இதை கேட்டுட்டு நம்ம ப்ளான்கர்ட்டு உடனே ஒரு ஆலோசனை கூட்டம் நடத்துறாரு.நடத்திட்டு உடனடியா டெக்ஸாசில் உள்ள தன்னுடைய மேலதிகாரி பிரிகேடியர் ஜெனெரல் ரோஜர் ராமி (Brig. Gen. Roger M. Ramey) என்பவரை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை சொல்லுறாரு.உடனடியா அந்த பொருட்கள் எல்லாத்தையும் எனக்கு அனுப்பி வை என்று பிரிகேடியர் அவருக்கு ஆணை போடறாரு. "சொறிங்க ஆப்பீஸர்" அப்படின்னு நம்ம மார்செல்ல இந்த பொருட்களை எல்லாம் எடுத்துட்டு டெக்சாஸ் போக சொல்லிடறாரு.
அவரு கிளம்பறதுக்கு ஆயுத்தம் பண்ணிட்டு இருக்கும் போதே உள்ளூர் செய்தியாளர்கள் கிட்ட "ஒரு பறக்கும் தட்டு நம்ம ஊருல விழுந்து நொறுங்கி இருக்குது,அத எங்க ஆளுங்க போய்ட்டு ஆராய்ஞ்சு ,அதன் சிதைந்த பொருட்களை எல்லாம் பொருக்கிட்டு வந்திருக்காய்ங்க" அப்படின்னு ஒரு செய்தியை வேற வெளியிடறாரு. அது அந்த ஊருல வெளி வரும் சாயங்கால பத்திரிக்கைல கூட வருது.
இதனிடையே நம்ம மார்செல் சிதைந்த பொருட்கள எல்லாம் ஒரு விமானத்துல போட்டுகிட்டு டெக்ஸாசுக்கு பயணப்படுறாரு . அங்கே போன உடனே ராமி அவரு கிட்ட இந்த பொருட்களை எல்லாம் எந்த இடத்துல கண்டுபிடிச்சன்னு எனக்கு மேப்ல காட்டு அப்படின்னு தனியா ஒரு ரூமுக்குள்ள கூட்டிக்கிட்டு போயிடறாரு. போய்ட்டு திரும்பி வந்து பாத்தா நம்ம மார்செல்லு ராஸ்வெல்ல இருந்து எடுத்திட்டு வந்த பொருட்கள் எல்லாம் காணல்ல!!! அதுக்கு பதிலா ஏது பிஞ்சு போன வானிலை பலூனின் சிதைவுகள் தான் இருக்கு. மார்செல் திரு திரு-னு முழிக்க அதுக்குள்ள பத்திரிக்கையாளர் சந்திப்பு ஆரம்பம் ஆகிடுது.
அதுல நம்ம ராமி "விழுந்து நொறுங்கினது வெறும் சாதாரண வானிலை பலூன் தாம்பா!! அது ஒன்னும் பறக்கும் தட்டும் கிடையாது,தாம்பாலமும் கிடையாது!!! நம்ம ப்ளான்கர்ட்டு ஏதோ 'மனபிராந்தியில' குழம்பிப்போய் செய்தி வெளியிட்டுட்டாரு். இந்த புள்ள கென்னத்து அர்னால்ட்டு (தொழிலதிபர்) சொன்னதுல இருந்து எல்லாம் பைத்தியம் பிடிச்சிக்கிட்டு அலையுதுங்க! லூசாப்பா நீங்க எல்லாம்?? எல்லாம் போய்ட்டு ஒழுங்க வேலையை பாருங்க பா!! எலே மார்செல்லு!! இந்த பொருட்களை எல்லாம் பொறுக்கி போட்டுகிட்டு ஓஹயோவுல(Ohio) இருக்கற நம்ம விமானப்படை ஆராய்ச்சி முகாம்ல ஒழுங்கா போய்ட்டு சேத்துரு!! சரியா??"
அப்படின்னு டோட்டல்லா ப்ளேட்டையே மாத்திட்டாரு.
அதுக்கு அப்புறமா அந்த சிதைந்த பாலுன் பொருட்களை எல்லாம் எடுத்துக்கிட்டு நம்ம மார்செல்லு ஒஹாயோ போய்ட்டாரு. போய்ட்டு வந்த அப்புறமா வேற்றாவது கிரகமாவது,அய்யா வாயையே திறக்கலை.யாரு என்ன சொன்னாங்களோ தெரியல. அரசாங்கத்துல இருந்து நிறைய பேரு அதுக்கு அப்புறமா ராஸ்வெல் வந்தாங்க. வந்துட்டு ஊருல இதுக்கு சம்பந்தமான ஆளுங்கலை எல்லாம் புடிச்சு "எலே!! இங்கிட்டு பறக்கும் தட்டும் வரலை,பறக்காத தட்டும் வரலை!! சரியா??ஏதாவது ஏடாகூடமா சொல்லிட்டு திரிஞ்சனா அப்புறமா பேசறதுக்கு வாய் இருக்காது!! சொல்லிட்டேன்" அப்படின்னு எல்லோரையும் மெரட்டி உருட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்களாம். பறக்கும் தட்டு பத்தி வந்த பத்திரிக்கையை கூட எல்லா இடத்துல இருந்தும் சேகரிக்க ஆரம்பிச்சாங்களாம்.அப்புறமா கொஞ்ச நாளைக்கு மக்கள் இது பத்தி மறந்தே போய்ட்டாங்க.
ஆனா கதை இதோட முடியல!!!
சுமார் 30 வருடங்களுக்கு அப்புறமா இந்த மாதிரி வேற்று கிரக மேட்டர் எல்லாம் ஆராய்ச்சி பண்ணுற ஸ்டாண்டன்.டி.ஃப்ரீட்மான் (Stanton.T.Friedman) என்பவர் இந்த ராஸ்வெல் மேட்டர பத்தி ஆராய்ச்சி பண்ணுறேன்னு கிளம்புனாரு. அப்போ நம்ம மார்செல்லு கிட்டேயும் இதை பத்தி பேட்டி எடுத்தாரு. அப்போ நம்ம மார்செல்லு "இதுல ஏதோ மர்மம் இருக்குதய்யா!! எனக்கு தெரிஞ்சு அரசாங்கம் இதை பத்தி ஏதோ மறைக்கறாய்ங்க!! அப்போ என் வேலைக்கு ஆப்பு வெச்சுருவாங்கன்னு நானும் பேசாம இருந்துட்டேன்.ஆனா மக்கள் கிட்ட அரசாங்கம் முழு உண்மையை ஒன்னும் சொல்லல" அப்படின்னு கொளுத்தி போட்டுட்டாரு!! கிணறு வெட்ட பூதம் கிளம்பினாப்போல இந்த விஷயம் பத்தி திரும்பவும் மக்கள் ஓவரா சவுண்டு குடுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க!! அதுக்கு அப்புறம் எவ்வளவு புத்தகங்கள்,டி.வியில் செய்தி தொகுப்புகள் அப்படி இப்படின்னு அல்லோல கல்லோலப்பட ஆரம்பிச்சிடுச்சு.
இதையெல்லாம் பாத்துட்டு அரசாங்கம் கடைசியா 1997-ல ஒரு அறிக்கை வெளியிட்டாங்க!! அதுல "நாங்க அந்த சமயத்துல 'பிராஜெக்ட் மொகல்' (project Mogul) அப்படின்னு ஒரு உளவுத்துறை திட்டம் ஒன்னு பண்ணிக்கிட்டு இருந்தோம்.அதுல பலூன்ல ரேடார் எல்லாம் கட்டி விட்டு ரஷ்யாவின் அனு சோதனைகளை கண்காணிப்பது போன்ற தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தோம்.அன்னிக்கு ராஸ்வெல்ல விழுந்து நொறுங்கினது அது மாதிரியான ஒரு பலூன் தான். அதெல்லாம் அப்போ சொல்ல முடியாதுங்கறதுனால தான் வானிலை பலூன் அப்படின்னு கப்சா விட்டோம்" அப்படின்னு சொல்லியிருந்தாங்க.
ஹ்ம்ம்!!
இது இப்படி இருக்க,இன்னொரு செய்தி ஒன்னு சொல்லுறேன் கேளுங்க.பறக்கும் தட்டுகள்தான் ராஸ்வெல்லில் நொறுங்கி விழுந்திருக்கின்றன என்று செய்தி நிறுவனங்களுக்கு நம்ம ப்ளான்கர்ட் செய்தி வெளியிட்டார் அல்லவா?? அந்த சமயத்தில் மக்கள் உறவு அலுவலராக (Public relations Officer) இருந்தவர் லெஃப்டினெண்ட் வால்டர் ஹாட் (Lieutenant Walter Haut). அவர் சமீபத்தில் தான் உயிர் இழந்தார். அவர் இறப்பதற்கு முன் தான் இறந்த பின் தான் பிரிக்க வேண்டும் என்று சொல்லி ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் அவர,் நடந்தது ஒரு பொய் பிரசாரம் என்றும் ஊண்மையை அரசாங்கம் மறைக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அது தவிர நான் அந்த சிதைந்த பொருட்களை பார்த்திருக்கிறேன்,அது ஒன்றும் வானிலை பலூன் எல்லாம் கிடையாது ,அதுவுமில்லாமல் அந்த விண்ணுர்தியில் சில வேற்று கிரக மனிதர்களை கூட நான் பார்த்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது என்ன புது கதையா இருக்கு!! வேற்று கிரக மனிதர்களா?? அப்படின்னு கேக்கறிங்களா??
அட!! இதை நான் சொல்ல மறந்துட்டேனே!! இந்த ராஸ்வெல் விபத்தில் சில வேற்று கிரக சடலங்கள் கூட மீட்கப்பட்டன என்று ஒரு கருத்து வெகு நாளாகவே நிலவி வருகிறது. இந்த சடலங்களை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்றும், பிறகு பிடிக்கப்பட்ட சில வேற்று கிரக மனிதர்களிடம் பேட்டிகள் கூட எடுக்கப்பட்டிருக்கின்றன என்று எல்லாம் சொல்கிறார்கள் தெரியுமா??
அதை பற்றியும் இந்த ராஸ்வல் நிகழ்வை பற்றிய அரசாங்க தரப்பு வாதங்களையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்!! :-)
வரட்டா??
References:
http://www.crystalinks.com/roswell.html
http://ufo.whipnet.org/roswell/timeline/index.html
http://ufo.whipnet.org/roswell/cover-up/index.html
http://www.roswellproof.com/
http://www.news.com.au/story/0,23599,21994224-2,00.html
படங்கள்:
http://www.ufo.se/ufofiles/images1/friedman/marcel.jpg
http://www.ufo.se/ufofiles/images1/friedman/blanchad.jpg
http://muller.lbl.gov/teaching/Physics10/Roswell/RoswellDailyRecord.jpg
http://www.v-j-enterprises.com/ufoart/gramey.jpg
http://www.ufoarea.com/pictures/haut.jpg
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 1 (பிரபஞ்சம் உருவானது எப்படி)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2(Big bang theory)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 3(Light years)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4(Black holes)
வானத்தில் விரியும் அதிசயங்கள் - பாகம் 5(Extra terrestrial life)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 6(Alien communication)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 7(UFOs)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8(Roswell - part 1)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 9(Roswell - part 2)
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 8
Labels:
ஆராய்ச்சி,
கட்டுரை,
வானுக்குள் விரியும் அதிசயங்கள்,
விண்வெளி
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
கிரக மனிதர்களிடம் பேட்டிகள் கூட எடுக்கப்பட்டிருக்கின்றன
In english??
@வடுவூர் குமார்
அடுத்த பகுதிக்கு கொஞ்சம் காத்திருங்களேன் குமார்!! :-)
காத்திருக்கின்றேன்:-)
கண்ணு,
சொல்லுர விதம் கதை போல இருக்கு,
"CVR மாமா சொன்ன கதை" அப்படின்னு BOOK PUBLISH பன்னலாம்.
//எலே!! இங்கிட்டு பறக்கும் தட்டும் வரலை,பறக்காத தட்டும் வரலை!! சரியா??ஏதாவது ஏடாகூடமா சொல்லிட்டு திரிஞ்சனா அப்புறமா பேசறதுக்கு வாய் இருக்காது//
ஏது நம்ப ஊர் அரசியல் வாதி மிரட்டல் மாதிரி ,படு ஜோக்கு போ!!
தல சுத்துடா சாமி!!! இருந்தாலும் நல்லா இருக்கு. ம்ம்ம்.. இதெல்லாம் ஒரு முடிவே இல்லாத விசயமுங்க... ஆனா இந்த பேட்டியெல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர்.
//பிடிக்கப்பட்ட சில வேற்று கிரக மனிதர்களிடம் பேட்டிகள் கூட எடுக்கப்பட்டிருக்கின்றன என்று எல்லாம் சொல்கிறார்கள்//
அடாடா அப்படியா செதி!!அடுத்த பதிவை சட்டுனு போடுபா ரொம்ப சுவாரஸ்யம்மா இருக்கு.
ஆஹா, உங்க படைப்பு ரொம்ப சூப்பரா போயிட்டு இருக்கு தல... நடத்துங்க.
//கண்ணு,
சொல்லுர விதம் கதை போல இருக்கு,
"CVR மாமா சொன்ன கதை" அப்படின்னு BOOK PUBLISH பன்னலாம். //
பாட்டி நீங்களுமா, என்னைலருந்து? :) ரிப்பீட்டு...
துளசி டீச்சர்
பொறுமைக்கு நன்றி! :-)
@உலகம் சுற்றும் வாலிபி
வாங்க பாட்டி!! :-)
//கண்ணு,
சொல்லுர விதம் கதை போல இருக்கு,//
எல்லோருக்கும் அலுப்பு தட்டாம கேக்கனும்ல!! அதான்!!
//ஏது நம்ப ஊர் அரசியல் வாதி மிரட்டல் மாதிரி ,படு ஜோக்கு போ!! //
எங்க போனாலும் அரசியல்னாலே இப்படிதான் போல இருக்கு!! :-)
@இரமேஷ்
//ஆனா இந்த பேட்டியெல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர். //
அடுத்த பகுதியை பாத்துட்டு என்ன தோனுதுன்னு சொல்லுங்க!! :-)
@செந்தில்
//ஆஹா, உங்க படைப்பு ரொம்ப சூப்பரா போயிட்டு இருக்கு தல... நடத்துங்க.//
வாழ்த்துக்களுக்கு நன்றி செந்தில். உங்களை போன்றோரின் ஊக்கம்தான் என்னை எழுத வைக்கிறது!! :-)
Good going...Suspence Thaanga mudiyala..Seekaram adhutha post podunga CVR...
வணக்கம்
வணக்கம்
நீங்க எந்த ஊர்ல இருந்து வர்ரீங்க?
டிம்பிக்கோ டிம்மாலோல இருந்து வர்ரோம்
எதுக்கு வந்திருக்கீங்க?
மனிதர்கள் "வெட்டி"ப்பொழுது போக்குறாங்களாம். அது எப்படீன்னு பாக்க வந்திருக்கோம்
அப்படியா. சரி. என்ன சாப்புடுவீங்க
எது கெடைச்சாலும் சாப்புடுவோம்
எது கெடைச்சாலும்னா?
இப்ப நீங்க கூட இருக்கீங்க...சப்பப்...களக்..சப்பப்...கிளுக்..
அசத்தறீங்க! செம இன் டரிஸ்டிங்கா இருக்கு!!
சீக்கிரம் தொடர் போடுங்க.
இத கண்டுபிடிச்சு போட்டமைக்கு ஒரு நன்றி!
cvr uncle romba nallave kathai viduringa..sorry solluringa
@கமல்
இன்னைக்கு சாயந்திரம் போட்டு விடுகிறேன் கமல்! :-)
@ஜிரா
ஹ ஹ ஹா!!!
இதையே ஒரு கதையா எழுதுங்களேன் ஜிரா!! :-)
@ட்ரீம்ஸ்
வாங்க தல!! வாழ்த்துக்களுக்கு நன்றி
@அனானி!!
நன்றி!! :P
உங்களின் பதிவிற்கு இதுதான் முதல்முறையாக வருகிறேன். தற்செயலாகவே காண நேர்ந்தது!
'வானுக்குள் விரியும் அதிசயங்கள்' மிக எளிமையாக எழுதியுள்ளீர்கள்! இதைபோன்ற ஒன்றை எழுதும் ஆவலை எனக்குள் ஏற்படுத்துகிறது :)
மிக அருமை CVR!
Post a Comment