எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.யேசுதாஸின் காந்தக்குரலுக்கு நான் அடிமையாகிப்போன பாடல்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது,அதில் ஒன்று இந்த பாடல்.
பாடலின் இசை மெட்டு,பாடப்பட்ட விதம்,வரிகள் இவை யாவும் எனக்கு மிகவும் பிடித்தமானது!!
இன்றைக்கு ஏதோ ஒன்றிற்காக இந்த பாடல் வரிகளை இணையத்தில் தேட சரியாக கிடைக்கவில்லை,அதனால் வழமை போல் நாமே பதிவிட்டுவிடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.
நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்!!உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்! :-)
Unnai Solli Kutram... |
பாடல் : சொர்க்கத்தின் வாசப்படி
படம் : உன்னை சொல்லி குற்றமில்லை
இசை : இளையராஜா
பாடகர்கள் : யேசுதாஸ்,சித்ரா
பாடசாசிரியர் : வாலி
(ஆண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு,வண்ணக்களஞ்சியமே
சின்ன மலர்க்கொடியே,நெஞ்சில் சிந்தும் பனித்துளியே
(பெண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
(ஆண்)
உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்,ஒன்றிரண்டு அல்லவே
(பெண்)
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே
(ஆண்)
சிற்றன்னவாசலின் ஓவியமே,சிந்தைக்குள் ஊரிய காவியமே
(பெண்)
எங்கே நீ அங்கேதான் நான் இருப்பேன்,எப்போதும் நீ ஆட தோள் கொடுப்பேன்
(ஆண்)
மோகத்தில் நான் படிக்கும் மாணிக்கவாசகமே,
நான் சொல்லும் பாடலெல்லாம்,நீ தந்த யாசகமே
(பெண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு,வண்ணக்களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே, நெஞ்சில் சேரும் இளங்கிளியே
(ஆண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
(பெண்)
உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
(ஆண்)
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்
(பெண்)
மின்சாரம் போல் எனை தாக்குகிறாய்,மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்
(ஆண்)
கண்ணே உன் கண் என்ன வேலினமோ,கை தொட்டால்,மெய் தோட்டால்,மீட்டிடுமோ
(பெண்)
கோட்டைக்குள் நீ புகுந்து,வேட்டைகள் ஆடுகிறாய்
நான் இங்கு தோர்த்துவிட்டேன்,நீ என்னை ஆளுகிறாய்
(ஆண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
(பெண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
(ஆண்)
பெண்ணல்ல நீ எனக்கு,வண்ணக்களஞ்சியமே
(பெண்)
சிந்தும் பனித்துளியே, என்னை சேரும் இளங்கிளியே
(ஆண்)
சொர்க்கத்தின் வாசற்படி,எண்ணக்கனவுகளில்
(பெண்)
சொர்க்கத்தின் வாசற்படி.......
பி.கு:பாடலை தேடித்தந்த ரசிகனுக்கும்,அதை பெற்றுத்தந்த துர்கா அக்காவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!! :-)
12 comments:
விஞ்ஞானி,
இது சூப்பர் பாடல். :-) தேன்கிண்ணதுல போடுறதுக்காக எழுதி வச்ச பாடல். ;-)
ஹீஹீ
super song yekku romba pidittha paattu.
அருமையான பாட்டு. நல்ல பாட்ட நினைவுபடுத்தியிருக்கீங்க. நன்றி. ஏசுதாஸ் அருமையாகப் பாடியிருக்கிறார்.
உன்னாலே நான் கண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்" இதுக்கு என்னங்க பொருள்
தல
இந்தப் பாட்டு சொர்க்கம்னு தனியா வேற நான் சொல்லணுமா?
பாட்டைக் கேட்கும் போதே யாரையாவது புடிச்சு இன்னொரு வாட்டி காதலிக்கத் தோன்றும் ;-)
@மை ஃபிரண்ட்
அடடா!! தெரியாம போச்சே!! இனிமே ஏதாச்சும் பாட்டு வேணும்னா நேரடியா உங்களையே கேட்டுடறேன்!! :-)
@D4Deepa
வாங்க அண்ணி!! உங்களுக்கும் இந்த பாட்டு பிடிக்குமா??
சூப்பரு!! :-D
@ஜிரா
வாங்க அண்ணாச்சி!!
யேசுதாஸ் பாட்டுனாலே அதுக்கு ஒரு தனி சிறப்பு வந்துருது ல?
@அனானி
அர்த்தங்கள் பல விதமா எடுத்துக்கலாம்.
ஒரு அர்த்தம் என்னன்னா
"காதலிக்க முன்னும் பின்னும் நீ என் நெஞ்சைக் காயப்படுத்தியதை நான் அறிவேன்"
அப்படின்னு எடுத்துக்கலாம்.
(விளக்கத்துக்கு நன்றி : கானா பிரபா அண்ணாச்சி)
@கானா பிரபா
///
பாட்டைக் கேட்கும் போதே யாரையாவது புடிச்சு இன்னொரு வாட்டி காதலிக்கத் தோன்றும் ;-)////
ஆஹா!!!
தானா உண்மை வெளியில வருதே!!! ;)
\\@கானா பிரபா
///
பாட்டைக் கேட்கும் போதே யாரையாவது புடிச்சு இன்னொரு வாட்டி காதலிக்கத் தோன்றும் ;-)////
ஆஹா!!!
தானா உண்மை வெளியில வருதே!!! ;)\\
:-)
இந்தப் பாட்டு சொர்க்கம்னு தனியா வேற நான் சொல்லணுமா?
பாட்டைக் கேட்கும் போதே யாரையாவது புடிச்சு இன்னொரு வாட்டி காதலிக்கத் தோன்றும் ;-)
நானும் வழிமொழிகிறேன். என் யேசுதாஸ் சென்டிமென்ட் படி பாத்தா ஏதோ நல்லது நடக்கப் போகுது.
மைஃபிரண்ட் ஹரிவராசனம் போட்டிருக்காங்க, இங்க இந்த பாட்டு.
இதெல்லாம் பார்த்து கேட்டு மனசு ஆனந்தப் பட்டுக் கிடக்குது.
நன்றி. அருமையான பாடல்.
//அருமையான பாட்டு. நல்ல பாட்ட நினைவுபடுத்தியிருக்கீங்க. நன்றி. ஏசுதாஸ் அருமையாகப் பாடியிருக்கிறார்./
ரிப்பீட்டு..
@அனானி
//உன்னாலே நான் கண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்" இதுக்கு என்னங்க பொருள்//
காதலை ஒப்புக்கொள்ளும் முன்னும் பெண் காயங்கள் செய்கிறாள்.. காதலிக்கும் போதும் காக்க வைத்து காய படுத்துகிறாள்... அப்படினு அர்த்தமோ ;)
இல்லனா காதலி ஓங்கி விட்ட அறைல, முன்ன கன்னத்துலயும் வலிச்சு.. அடிச்ச அடில பின்னால போய் தலை இடிச்ச்தில் பின்னந்தலையும் வலிக்கும்னு சொல்றாங்களோ :P
பாட்ட கேளுங்கப்பா... ஆராய்ச்சி எல்லாம் பன்னிகிட்டு... என்ன இது.. சின்ன பிள்ளை தனமா..
Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க எண்ணங்கள் are nice.
Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா
hey...i was just reading some of ur stories from your other blog..they r really nice...i never thought a guy could pick out the small emotions of girls...love the way u narrate it...:)
cheers
kavitha
Post a Comment