என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் ஆங்கிலம் எனக்கு எப்பவுமே விருப்பமான பாடம்!! ஆங்கில வகுப்புகள் என்றாலே எனக்கு குஷியாகிவிடும்,அதுவிமில்லாமல் பனிரெண்டாவது வகுப்பு வரையிலும் எல்லா வகுப்பிலும் எனக்கு ஆங்கில ஆசிரியைகள் பிடித்தமான ஆசிரியைகளாக இருந்தனர்.நான் இப்பொழுதும் பசுமையாக நினைத்து பார்க்கும் ஆசிரியர்கள் என்றால் ஆங்கில வகுப்பு எடுத்த டீச்சர்கள் தான் கண் முன்னே வருகிறார்கள் (அதுவும் எமிலி வெர்கீஸ் டீச்சரின் பெயரை கண்டிப்பாக இங்கே சொல்லியே ஆக வேண்டும்).அப்படி ஒரு நாள் முன் எப்போதோ நடந்த ஆங்கில வகுப்பில் நான் கேட்ட விஷயங்கள் நான் பல முறை நினைத்து பார்த்து என்னை யோசிக்க வைத்த விஷயமாக இருந்திருக்கிறது். அப்படிப்பட்ட ஒரு தலைப்பை தான் இன்று பார்க்கப்போகிறோம்.
எப்பொழுதும் ஏதாவது விஷயத்தை எழுதுவதாக இருந்தால் இணையத்தில் அலசி நான்கு இடத்தில் தேடிப்பார்த்து அறிந்துக்கொண்டு எழுதுவேன்,ஆனால் இந்த பதிவில் நான் எழுதுபவை முழுக்க முழுக்க என் நினைவில் இருந்தே எழுதுபவை (அதனால் தப்பு இருந்தா என் கிட்ட சண்டைக்கு வராதீங்க ! :-))
ஆங்கிலம் உலகத்திலேயே அதிகம் பேசப்படுகிற மொழியாக இருந்தாலும் அதில் புகழ்பெற்ற காவியங்கள்னு பாத்தா என்னவோ இரண்டே இரண்டு காவியங்கள் தான். ஒன்று பேரடைஸ் லாஸ்ட்(Paradise lost),இன்னொன்று பேர்டஸ் ரீகெயிண்ட்(Paradise Regained). இது இரண்டையும் எழுதியவரின் பெயர் ஜான் மில்டன்(John Mil்ton). பேரடைஸ் லாஸ்ட் என்பது ஆதாமும்,ஏவாளும் எப்படி தங்கள் தவறினால் சொர்க்கத்தை இழந்தார்கள் என்று கூறும் கதை.அதனால் தான் அதன் பெயர் பேரடைஸ் லாஸ்ட(இழக்கப்பட்ட சொர்க்கம்)். பேரடைஸ் ரீகெயிண்ட் என்பது ஏசு கிருஸ்துவின் கதை. ஏசுவின் பிறப்பினால் மற்றும் இறப்பினால் எப்படி மனிதர்கள் சொர்க்கத்திற்கு செல்ல நேர்ந்தது என்பது பேரடைஸ் ரீகெயிண்ட(திரும்ப பெறப்பட்ட சொர்க்கம்)்.
இப்படி பக்திமயமான எழுத்துக்களை எழுதியிருந்தாலும் நம்ம ஜான் மில்டன் எப்பவுமே இப்படி இல்ல.சின்ன வயசுல எல்லாம் கன்னாபின்னான்னு அரசியல் பிரசுரங்கள் (political pamphlets) எல்லாம் எழுதிட்டு இருந்தாரு.அதுக்கு அப்புறம் வயசான பிறகு அவருக்கு கண் பார்வை போயுடுச்சு!! கண்கட்டின அப்புறம் சூரிய நமஸ்காரம் மாதிரி அவருக்கு அப்போதான் திடீர்னு ஞானோதயம் வந்திருக்கு!! அடடா!!! நம்ம திறமையெல்லாம் போயும் போயும் அரசியல் பிரசுரங்கள் எழுதவே வீனடிச்சுட்டோமே.மனுஷன் இன்னைக்கு இருப்பான் நாளைக்கு போவான்,ஆனால் ஆண்டவனை பற்றி எழுதாமல் நமக்கு இந்த திறமை கிடைத்து என்ன பிரயோஜனம் அப்படின்னு டென்ஷன் ஆகிட்டாரு!! அதுக்கு அப்புறம் எழுத ஆரம்பிச்சது தான் இந்த பேரடைஸ் லாஸ்ட் ,பேரடஸ் ரீகெயிண்ட். இதை அவரு சொல்லிக்கொண்டே போக அவரின் இரு பெண்கள் எழுதுவாங்களாம்.நம்ம ஆளூ திடீர் திடீர்னு மூட் வரும்போதெல்லாம் அவரோட பெண்களை தொந்தரவு பண்ணி எழுத சொல்லுவாராம்.அவங்களும் தூக்க கலக்கத்துல எல்லாம் கண்ணா பின்னா தப்பு தப்பா எழுதுவாங்களாம்.அப்படி எழுதியே அந்த காவியங்கள் ரொம்ப சிறப்பாக அமைந்தது என்று என் டீச்சர் சொல்லுவாங்க.
அவரு கண்ணு போன அப்புறம் எழுதின ஒரு கவிதை தான் இந்த "On his blindness". ஆங்கிலத்தில் பதினான்கு வரிகள் கொண்ட கவிதையை சொன்னெட் (Sonnet) என்று சொல்லுவார்கள்.அப்படி சொன்னெட் வகையை சேர்ந்த ஒரு கவிதை தான் இந்த "On his blindness".இதுல மில்டன் தான் குருடாகி போகறதுக்கு ரொம்ப பீல் பண்ணுறாரு,கண் பார்வை இருந்த போது எல்லாம் நம்ம திறமையை வீனாக்கிட்டோமே அப்படின்னு புலம்பறாரு. ஆனா கடைசியில தன்னுடைய புலம்பலுக்கு தானே சமாதானம் சொல்லிகிறாரு,அதுக்கு அவரு தர உதாரணம் எனக்கு ரொம்ப பிடித்தமானது.
அதாவது,சொர்க்கத்துல பாத்தீங்கன்னா கடவுளின் ஆணையை நிறைவேற்ற பல தேவதைகள் காத்துகிட்டு இருப்பாங்களாம்.கடவுள் ஏதாச்சும் வேலை ஆகனும்னா ஏதாவது ஒரு தேவதைக்கு வேலை குடுப்பாராம்.அவரு வேலை குடுக்கற வரைக்கும் மத்த தேவதைகள் எல்லாம் சும்மா ஒரு வேலையும் செய்யாம தான் இருப்பாங்க.ஆனா அவங்க எல்லாம் வெட்டியா இருக்காங்கன்னு அர்த்தம் கிடையாது!! அப்படி காத்துக்கிட்டு இருக்கறதும் வேலை தான். அதே மாதிரி நான் கடவுளை பத்தி எழுதாவிட்டாலும் என் வழியில் எனக்குண்டான கடமையை செய்துக்கொண்டிருந்து தான் இருந்தேன். அப்படின்னு சமாதானம் சொல்லிக்கிறாரு.
When I consider how my light is spent Ere half my days in this dark world and wide, And that one Talent which is death to hide Lodged with me useless, though my soul more bent To serve therewith my Maker, and present My true account, lest He returning chide, "Doth God exact day-labour, light denied?" I fondly ask. But Patience, to prevent That murmur, soon replies, "God doth not need Either man's work or his own gifts. Who best Bear his mild yoke, they serve him best. His state Is kingly: thousands at his bidding speed, And post o'er land and ocean without rest; They also serve who only stand and wait.
இதை பற்றி நான் பல சமயங்களில் யோசித்து பார்த்திருக்கிறேன்.இப்படி யோசிக்கும் போது என்னுள்ளே பல அர்த்தங்கள் எனக்கு புலப்பட்டிருக்கின்றன.இவர் சொல்லுவது மாதிரி நாம எல்லோருமே உலகத்துல ஏதாவது வேலை பண்ணுறோம்.எந்த ஒரு வேலை இருந்தாலும் அதில் உயர்வு தாழ்வு எதுவும் கிடையாது. எல்லோருமே தங்களால் இயன்ற வரையில் இந்த சமுதாயத்திற்கு ்தரம்ததா தரம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி வகுப்பில் 90% எடுப்பவர் மட்டும் தான் படிக்கிறார்கள் என்று கிடையாது ,மிக முக்கியமான வேலை செய்பவர்தான் உழைக்கிறார் என்றில்லை,எல்லோர் வேலையிலும் அர்த்தம் உண்டு.
நல்ல தலைவர்களை போலவே நல்ல தொண்டனாக இருப்பதும் நாம் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை,நல்ல மேலாளர்கள் மட்டுமில்லாமல் நல்ல தொழிலாளர்கள் இருப்பதும் இந்த உலகில் மேன்மை பெருக மிக முக்கியம்.
we all have a role to play.
அதே போல நாம எல்லோரும் புத்தர்,காந்தி மாதிரி முழுக்க முழுக்க சத்தியம் அஹிம்சைன்னு இருந்தாதான் சமுதாயத்தை மாற்ற முடியும் என்று இல்லை.நம்மால் முடிந்த வரை உண்மையை கடைபிடிக்கலாம்,சமுதாய அவலங்களை எதிர்க்கலாம்,மனிதனின் வாழ்வு வளம்பெற முயற்சி செய்யலாம். சிக்னல்ல பச்சை விளக்கு எரியற வரைக்கும் காத்துக்கிட்டு இருக்க முடிஞ்சா இருங்க.பின்னாடி யாரு என்ன கத்தினால கண்டுக்காம இருக்க முடிஞ்சா சந்தோஷம்,முடியலன உங்களால ஆன வரை 5 நொடிகளோ,10 நொடிகளோ நிந்துட்டு போங்க!!
Just because you cant do everything doesnt mean you dont have to do anything.Just do whatever little you can do.Every bit counts!
நம் கடமை/capacity என்ன என்பதை புரிந்துக்கொண்டு அதன் முக்கியத்துவத்தை அறிந்துக்கொண்டு நம் மனசாட்சிக்கு உண்மையாக நம் வேலையை நாம் செய்ய பழகிக்கொண்டாலே பூமியில் பல நல்ல மாறுதல்கள் ஏற்படும் என்றெல்லாம் கன்னா பின்னாவென்று யோசித்துக்கொண்டிருப்பேன்.
நண்பர்கள் பலரிடம் Roles பற்றியும், அவர்கள் தாங்கள் செய்யும் வேலை பற்றியும்,அதில் முக்கியத்துவமே இல்லாதது போல் தோன்றுவது பற்றியும் சலிப்படையும் போது எனக்கு இந்த சொன்னெட் பற்றி சொல்லத்தோன்றூம்.
நிறைய பேரிடம் இது பற்றி பேசியிருப்பதாலும் ,இனிமேலும் நிறைய பேரிடம் இதை சொல்லக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என்று தோன்றியதாலும் பதிவாகவே வடிக்க முடிவெடுத்தேன்!
இந்த பதிவு உங்கள் எண்ண ஓட்டத்திற்கு தீனியாக இருந்தால் சந்தோஷம்!
வரட்டா?? :-)
பி.கு: எங்கேயோ எழுத ஆரம்பிச்சு எப்படி எப்படியோ போய் அநியாயத்துக்கு மொக்கையாகிடுச்சுன்னு நெனைக்கறேன் அதனால இந்த பதிவை கப்பி பயலின் இந்த tag-க்கு காணிக்கையாக்குகிறேன்!!
இதையாவது ஒத்துக்கோ ராசா!! :-P
கவிதை வரி பெறப்பட்ட தளம்:
http://www.sonnets.org/milton.htm#002
37 comments:
மீ த first?
//அதே மாதிரி நான் கடவுளை பத்தி எழுதாவிட்டாலும் என் வழியில் எனக்குண்டான கடமையை செய்துக்கொண்டிருந்து தான் இருந்தேன். அப்படின்னு சமாதானம் சொல்லிக்கிறாரு.//
ஹாஹா! நல்லா தான் சொல்ல்லி இருக்காரு! எனக்கும் இத படிச்சது லேசா நியாபகம் வருது:))
//Just because you cant do everything doesnt mean you dont have to do nothing.Just do whatever little you can do.Every bit counts!//
நச்சுனு சொன்னீங்க!
//Just because you cant do everything doesnt mean you dont have to do nothing.Just do whatever little you can do.Every bit counts!//
இதெல்லாம் மொக்கையா? அப்ப நான் எழுதுறது! என்ன கொடுமைடா இது?
இவ்ளோ கருத்து சொல்லிட்டு மொக்கைனு சொல்லறீங்க ;)
உங்க டெம்ப்ளேட் பிரமாதம் :)
we all have a role to play.- இது தான் சாரம்.
புரிந்துகொள்பவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
//ஆங்கிலம் உலகத்திலேயே அதிகம் பேசப்படுகிற மொழியாக இருந்தாலும் அதில் புகழ்பெற்ற காவியங்கள்னு பாத்தா என்னவோ இரண்டே இரண்டு காவியங்கள் தான். ஒன்று பேரடைஸ் லாஸ்ட்(Paradise lost),இன்னொன்று பேர்டஸ் ரீகெயிண்ட்(Paradise Regained).//
Is it? நெறைய இருக்கேப்பா. எதுன்னுதான் தெரியல. ஷேக்ஸ்பியர் எழுதுனதெல்லாம் கணக்குல வராதா?
வரிகள போடாம வீட்டுட்டீங்களே?
இதன் கடைசி வரி ப்ரமாதம் -> 'They also serve who only stand and wait'
அதே மாதிரி மில்டன், தன் மனைவி மறைந்ததப் பத்தி ஒரு போயம் எழுதினதுல, கடைசி சில வரிகள் அருமை.
And such as yet once more I trust to have
Full sight of her in Heaven without restraint,
Came vested all in white, pure as her mind.
Her face was veiled; yet to my fancied sight
Love, sweetness, goodness, in her person shined
So clear as in no face with more delight.
But, oh! as to embrace me she inclined,
I waked, she fled, and day brought back my night
@Dreamzz
////Just do whatever little you can do.Every bit counts!//
நச்சுனு சொன்னீங்க////
ஒரு இரண்டு வருடங்கள் முன்னால் எங்கள் நிறுவனத்தின் ஒரு போட்டிக்காக ஒரு ஆங்கில குறும்படம் எடுத்தோம்,அந்த படத்தின் கருத்து கூட இதுதான்.
@வடுவூர் குமார்
//we all have a role to play.- இது தான் சாரம்.
புரிந்துகொள்பவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்///
சரியா சொன்னீங்க!!
ஆனா அந்த பக்குவம் வருவது கொஞ்சம் கஷ்டம் தான்!! :-)
@சர்வேசன்
///Is it? நெறைய இருக்கேப்பா. எதுன்னுதான் தெரியல. ஷேக்ஸ்பியர் எழுதுனதெல்லாம் கணக்குல வராதா?///
நிறைய இருக்கு ஆனா புகழ் பெற்றது இது ரெண்டுதான் (அப்படிதான் என் டீச்சர் சொன்னாங்க,அதான் மொதல்லயே டிஸ்கி போட்டுட்டோம்ல!! :-D)
ஷேக்ஸ்பியர் எழுதினது எல்லாம் நாடக வகையில சேர்ந்துடும் அண்ணாச்சி.They are not epics!
//வரிகள போடாம வீட்டுட்டீங்களே?
இதன் கடைசி வரி ப்ரமாதம் -> 'They also serve who only stand and wait'////
நான் கரெக்டா வரியை சேர்த்தவுடன் இந்த பின்னூட்டம் வருகிறது! :-)
இப்போதான் சேர்த்தேன் அண்ணாச்சி! :)
//அதே மாதிரி மில்டன், தன் மனைவி மறைந்ததப் பத்தி ஒரு போயம் எழுதினதுல, கடைசி சில வரிகள் அருமை.////
அவரோட இரண்டாவது மனைவி மூலம் பிறந்த மகள் இறக்கும் போதும் ஒரு உருக்கமான கவிதை எழுதியிருக்கிறார் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.
நமக்கு இலக்கிய ஞானம் ரொம்ப ரொம்ப கம்மி அண்ணாச்சி!
பகிர்வுக்கு மிக்க நன்றி!! :-)
அருமையான பதிவு!
எனக்கு ஒரு சந்தேகம்! மில்டன் கல்யாணம் செஞ்சுகிட்டவுடனே பேரடைஸ் லாஸ்ட் யையும், அவர் பொஞ்ஜாதி இறந்தவுடனே பேரடைஸ் ரீகெயிண்டையும் எழுதினாருன்னு கேள்வி பட்டிருக்கேன்! இதை பத்தி ஏதாவது மேட்டர் கீதா??
we all have a role to play.
நிதர்சனமான உண்மை
சிக்னல்ல பச்சை விளக்கு எரியற வரைக்கும் காத்துக்கிட்டு இருக்க முடிஞ்சா இருங்க.பின்னாடி யாரு என்ன கத்தினால கண்டுக்காம இருக்க முடிஞ்சா சந்தோஷம்,முடியலன உங்களால ஆன வரை 5 நொடிகளோ,10 நொடிகளோ நிந்துட்டு போங்க!!
இதை நான் செஞ்சுருக்கேன்! பச்சை பச்சையா திட்டினாலும், பச்சை விளக்கு எரிஞ்ச பிறகு தான் போவேன்னு ஒரு கொள்கை முடிவே எடுத்திருக்கேன்!!
//சின்ன வயசுல எல்லாம் கன்னாபின்னான்னு அரசியல் பிரசுரங்கள் (religious pamphlets) எல்லாம் எழுதிட்டு இருந்தாரு.//
??
They also serve who only stand and wait.
(பதிவில் waite என்றிருக்கிறது) எனக்கு மிகமிகப் பிடித்த வரிகளில் ஒன்று. இந்தக் கவிதையின் இந்த வரி மட்டும் மனதிலேயே...... தங்கிவிட்டது. சிலசமயங்களில் என்னத்தப் பண்ணிக் கிழிச்சோம் என்று நமக்கு நம் மீதே எரிச்சல் வரும்போது அல்லது யாரும் நம் மீது அப்படி எரிச்சல்படும்போது இந்த வரி மனதுக்கு ஆறுதல் தரும்.
அதேபோல் என் மனதில் நீங்கா இடம் பிடித்த இன்னொரு ஆங்கிலக் கவிதை வரி: Home They Brought Her Warrior Dead என்ற கவிதையின் கடைசி வரி - Sweet My Child, I live for Thee. கண்ணீர் வரவழைக்கும் வரி.
//ஷேக்ஸ்பியர் எழுதினது எல்லாம் நாடக வகையில சேர்ந்துடும் அண்ணாச்சி.They are not epics!//
இந்த epics அப்படின்னு சொல்லறீங்களே அதுக்கு என்னய்யா definition?
\\Just because you cant do everything doesnt mean you dont have to do anything.Just do whatever little you can do.Every bit counts!\\
Well said CVR!
Enjoyed reading the post,
[ithellam mokkai list la serka mudiyathu]
!
!
!
;))
இது மொக்கையா...இது மொக்கையான்னு கேக்குறேன். அறிவாளிங்களையெல்லாம் மொக்கை பதிவுக்குக் கூப்புட்ட கப்பியைச் சொல்லனும்.
பாரடைஸ் லாஸ்ட் ரீகெய்ண்டுன்னு பழைய கதையப் பத்தியெல்லாம் பேசுறீங்களே...சமீபத்துல 1956ல் பொறந்தவங்களோ நீங்க ;)
@CDK!
///பச்சை பச்சையா திட்டினாலும், பச்சை விளக்கு எரிஞ்ச பிறகு தான் போவேன்னு ஒரு கொள்கை முடிவே எடுத்திருக்கேன்!!////
அடா அடா!! இது அல்லவோ கொள்கை!!
சூப்பரு பா!! இதே மாதிரி நம் மக்களில் 20% இருந்தா போதும்!! :-)
@கொத்தனார்
அவரு தன்னுடைய இள வயதில் அரசியில் எழுத்துக்கள் எழுதிட்டு இருந்ததுக்காக வருத்தப்பட்டாரு அப்படின்னு தான் எங்க டீச்சர் சொல்லியிருக்காங்க!
இது முழுக்க முழுக்க என் நினைவிலிருந்து எழுதியவை.நான் வழக்கமாக ஏதாவது எழுதினால் நாலு இடத்தில் சரி பார்த்து எழுதுவேன்,ஆனால் அப்படி எழுதினால் இந்த கவிதை பற்றிய எனது எண்ணங்களில் கலப்படம் வந்தூ விடும் என்று எண்ணியதால் இந்த பதிவுக்கு எங்கும் சரி பார்க்கவில்லை.
////ஷேக்ஸ்பியர் எழுதினது எல்லாம் நாடக வகையில சேர்ந்துடும் அண்ணாச்சி.They are not epics!//
இந்த epics அப்படின்னு சொல்லறீங்களே அதுக்கு என்னய்யா definition?/////
டிஸ்கி போட்டாலும் விட மாட்டீங்க போல! :-)
இது என் டீச்சர் எனக்கு சொன்ன மேட்டரு தலைவா!1
எனக்கு தெரிந்த வரை காவியங்கள் என்பது கவிதைகளாலேயே புனையப்பட்ட பெறும் கதைகள்.
நம்ம இராமாயணம் ,மாகாபாரதம் மாதிரி.
ஷேக்ஸ்பியர் கவிதை நடையில எழுதலன்னு நெனைக்கறேன்.எனக்கும் இலக்கியத்துக்கு ரொம்ப தூரம்!!!ஏதாச்சும் தப்பாச்சுனா சண்டை போடாதீங்க பா!! :-)
@சேதுக்கரசி
//They also serve who only stand and wait.
(பதிவில் waite என்றிருக்கிறது) ////
நான் வெட்டி ஒட்டிய இணைய தளத்தில் waite என்று தான் இருந்தது!!
அது சரியா தவறா என்று தெரியவில்லை,அதான் அப்படியே போட்டு விட்டேன்
//அதேபோல் என் மனதில் நீங்கா இடம் பிடித்த இன்னொரு ஆங்கிலக் கவிதை வரி: Home They Brought Her Warrior Dead என்ற கவிதையின் கடைசி வரி - Sweet My Child, I live for Thee. கண்ணீர் வரவழைக்கும் வரி.///
எந்த கவிதை என்று எனக்கு தெரியவில்லை!! எப்பொழுதாவது பார்த்துக்கொள்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சேதுக்கரசி!! :-)
@திவ்யா
//
Well said CVR!
Enjoyed reading the post,
//
உங்களுக்கு பிடித்திருந்ததில் சந்தோஷம் திவ்யா
//
[ithellam mokkai list la serka mudiyathu]//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-((
@கோபிநாத்
:-)
என்ன சொல்ல வரீங்க அண்ணாச்சி?? :-)
@ஜிரா
பாரடைஸ் லாஸ்ட் ரீகெய்ண்டுன்னு பழைய கதையப் பத்தியெல்லாம் பேசுறீங்களே...சமீபத்துல 1956ல் பொறந்தவங்களோ நீங்க ;)////
அதெல்லாம் பரவாயில்லை அண்ணாச்சி!!
நீங்க என்னடான்னா அருண்கிரிநாதர்,சங்கத்தமிழ்னு பிச்சு உதர்ரீங்க!!!
கிட்டத்த்ட்ட சமீபத்துல கி.மு 3ஆம் நூற்றாண்டுல நீங்க பிறந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!! ;)
எங்க ஊர்ல ஒரு பள்ளியின் பெயர் மில்டன். அந்த பள்ளி முதல்வரின் மகனுக்கும் மில்டன் என்றே பெயர் வைத்தார். எங்க வீட்டுக்கு அடையாளம் சொல்றதும் மில்டன் ஸ்கூல் பக்கத்துலன்னுதான் சொல்வேன். கண் பார்வை இழந்த அற்புதமான கவிஞர்னுதான் எனக்கு அறிமுகபடுத்தினார் அவர். அவர்கிட்ட மில்டன் எழுதிய புத்தகங்கள் இருக்கு.
ஆனா நமக்குதான் இங்கிலிசுன்னாவே ரெண்டு ஸ்டெப் பேக் அடிக்கற வழக்கம்.
They also serve who only stand and wait
Home They Brought Her Warrior Dead - இது Alfred Lord Tennyson கவிதை.
// @ஜிரா
பாரடைஸ் லாஸ்ட் ரீகெய்ண்டுன்னு பழைய கதையப் பத்தியெல்லாம் பேசுறீங்களே...சமீபத்துல 1956ல் பொறந்தவங்களோ நீங்க ;)////
அதெல்லாம் பரவாயில்லை அண்ணாச்சி!!
நீங்க என்னடான்னா அருண்கிரிநாதர்,சங்கத்தமிழ்னு பிச்சு உதர்ரீங்க!!!
கிட்டத்த்ட்ட சமீபத்துல கி.மு 3ஆம் நூற்றாண்டுல நீங்க பிறந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!! ;) //
அதெப்படி? அருணகிரி 15ம் நூற்றாண்டு. சங்கத்தமிழ் ஒத்துக்கிறேன். ஆனா ஆதாம் ஏவாளு உலகம் தோன்றுனப்பல்ல....அப்பயிருந்தே நீங்க இருக்கீங்க போல. ஒருவேளை ஏவாளுக்கு ஆப்பிள் பழத்தைச் சாப்பிடச் சொன்னதே....அல்லது சாப்பிடக் கூடாதுன்னு சொன்னது....நீங்கதானா :P
@துர்கா
:)
@தம்பி
நான் கூட தனியா இதெல்லாம் படிச்சிருப்பனான்னு தெரியல!! எல்லாம் எங்க டீச்சர் சொல்லி கொடுத்த விதம்தான் காரணம்!! :-)
@சேதுக்கரசி
சுட்டிகளுக்கு நன்றி!
நீங்கள் கொடுத்த சுட்டியில் இருந்த கவிதையையே பதிவில் போட்டுவிடுகிறேன்!! :-)
@ஜிரா
நான் ஆதாமையும் ஏவாளையும் பத்தி எழுதல அண்ணாச்சி,அவங்களை பத்தி எழுதின ஒரு கவிஞரை பற்றி சொன்னேன்!!
நீங்க என்னடான்னா பண்டைய காலத்து மக்கள் பத்தி புனைவு எழுதறீங்க! இராமாயணம் காலத்து கதையும் எழுதறீங்க,மகாபாரத காலத்து கதையை பத்தியும் எழுதறீங்க!!
அதுவும் இதுவும் ஒன்னா??? :-P
நிறைய யோசிக்கறீங்க :))
சரி. ஆங்கிலத்த இவ்ளோ ஆர்வமா படிச்ச உங்களுக்கு தமிழ் மேல ஏன் இவ்வளவு கோவம்? தமிழ தப்பு தப்பா படிச்சிட்டு வந்து இந்த பதிவையெல்லாம் மொக்கை பதிவுன்னு சொல்றீங்க???
மொக்கை என்னும் சொல்லுக்கு அர்த்தம் அறியாத சிவீஆருக்கு என் கண்டனங்களை மிக தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் :P
@G3
வாங்க யக்கோவ்!!
வள வளன்னு போர் அடிக்கறா மாதிரி இருந்துச்சுன்னா மொக்கைன்னு சொல்லுவாங்க இல்லையா!! அதான் இதுவும் மொக்கையா இருக்கும்னு நெனைச்சு சொல்லிட்டேன் அக்கா! :-ஸ்
//நல்ல தலைவர்களை போலவே நல்ல தொண்டனாக இருப்பதும் நாம் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை,நல்ல மேலாளர்கள் மட்டுமில்லாமல் நல்ல தொழிலாளர்கள் இருப்பதும் இந்த உலகில் மேன்மை பெருக மிக முக்கியம்.
we all have a role to play.//
பதிவில் நான் ரசித்த வரிகள்.. உண்மை பொதிந்தவை.
//எங்கேயோ எழுத ஆரம்பிச்சு எப்படி எப்படியோ போய் அநியாயத்துக்கு மொக்கையாகிடுச்சுன்னு நெனைக்கறேன்//
அநியாயத்துக்கு உங்களுக்கு தன்னடக்கம்.. முன்ன மாறி மொக்கை போடாம இது மாறியே எழுதுங்க.ஹி ஹி
நல்ல கருத்து! :)
indha post padichi enakku engayo padicha indha statement thaan nyabagam varudhu...
"Milton wrote Paradise Lost, then his wife died, and then he wrote Paradise Regained."
LOL
நிஜம்மாவே நான் கொஞ்சம் மனம் சோர்ந்திருந்தேன் இன்னைக்கு ... இதை படிச்சு கொஞ்சம் தேறினாப்பல தான் இருக்கு நன்றிப்பா..
நல்ல பதிவு வலையுலக சாக்ரட்டீஸே!! !
இதையெல்லாம் மொக்கைன்னு ஒத்துக்கிட்டா சாக்ரட்டீஸ் கனவுல வந்து கண்ணை குத்திடுவாரு :))
//எல்லா வகுப்பிலும் எனக்கு ஆங்கில ஆசிரியைகள் பிடித்தமான ஆசிரியைகளாக இருந்தனர்//
இதுக்கு ஒரு ரிப்பீட்ட்டோ ரிப்பீட்டு :)))
@தேவ்
////நல்ல தலைவர்களை போலவே நல்ல தொண்டனாக இருப்பதும் நாம் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை,நல்ல மேலாளர்கள் மட்டுமில்லாமல் நல்ல தொழிலாளர்கள் இருப்பதும் இந்த உலகில் மேன்மை பெருக மிக முக்கியம்.
we all have a role to play.//
பதிவில் நான் ரசித்த வரிகள்.. உண்மை பொதிந்தவை.////
நன்றி அண்ணாச்சி!
உங்களிடம் இது பற்றி ஒரு நாள் உரையாடிக்கொண்டிருந்த போது தான் இதை பதிவாக போட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது! அதனால் உங்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்! :-)
@ஷாலினி
//முன்ன மாறி மொக்கை போடாம இது மாறியே எழுதுங்க.ஹி ஹி
/////
முன்ன எப்போ மொக்கை போட்டேன் என்று சுட்டிக்காட்டினீர்கள் என்றால் அதே தவறை தொரும்ப செய்யாமல் இருப்பேன்!! :-P
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :)
@அருண்குமார்
//"Milton wrote Paradise Lost, then his wife died, and then he wrote Paradise Regained."
LOL////
LOLOL! :-D
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணாச்சி!! :-)
@முத்துலெட்சுமி
////நிஜம்மாவே நான் கொஞ்சம் மனம் சோர்ந்திருந்தேன் இன்னைக்கு ... இதை படிச்சு கொஞ்சம் தேறினாப்பல தான் இருக்கு நன்றிப்பா.////
ரொம்ப சந்தோஷம் அக்கா!! :-)
இது பாத்தவுடன் இந்த பதிவு எழுதியதற்கான நோக்கம் நிறைவேறின திருப்தி!! :-)
மிக்க நன்றி!! :-D
@கப்பி
//
இதையெல்லாம் மொக்கைன்னு ஒத்துக்கிட்டா சாக்ரட்டீஸ் கனவுல வந்து கண்ணை குத்திடுவாரு :))////
அவ்வ்வ்வ்வ்வ்வ்!! :-(((
////எல்லா வகுப்பிலும் எனக்கு ஆங்கில ஆசிரியைகள் பிடித்தமான ஆசிரியைகளாக இருந்தனர்//
இதுக்கு ஒரு ரிப்பீட்ட்டோ ரிப்பீட்டு :)))/////
நீ இவ்வளவு உற்சாகமா ரிப்பீட்டு போடுறது பாத்தா சரியில்லையே!!
உனக்கும் ஆங்கில பாடம் பிடிக்கும் என்பதுனால தானே ஆசிரியைகள் பிடிக்கும்னு சொல்ற???? :-P
"சீவியார்(CVR)" நிசமாவே நல்ல் பதிவுடா செல்லம்.
இவ்ளோத்த் வச்சிகிட்டா இத்தினி நாள் எங்களுக்கு பூச்சாண்டி காட்டிட்டு இருந்தே...?]
இந்த MILTON கவிதையை
COPY பண்ணி என் BLOG-ல போடப் போறேன்.
இதைக் காண்பிச்சுக் குடுத்ததுக்கு உனக்கு என் நன்றிகள்.
இப்ப உனக்கு தாத்தா "அறிவுச்சீவியார்" (அறிவுஜீவியார் என்பதன் தூயத் தமிழ் உச்சரிப்பு)
என்கிற பட்டத்தை வழங்குகிறேன்.
எல்லாரும் ஜோரா ஒரு தடவை கைத்தட்டுங்கப்பா.
வாழ்க...! வளர்க...! அறிவுச்சீவியாரின் எழுத்துத் திறன்.
அறிவுச்சீவி=
அறிவுஜீவி
(தூய தமிழ்ல)
pleasure in the mind and joy in the heart thanks
expecting more
thanks
sridhar
@சாம் தாத்தா
//இப்ப உனக்கு தாத்தா "அறிவுச்சீவியார்" (அறிவுஜீவியார் என்பதன் தூயத் தமிழ் உச்சரிப்பு)
என்கிற பட்டத்தை வழங்குகிறேன்.///
ஆகா!!
வாழ்த்துக்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி தாத்தா.இந்தப்பட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கோன்னு தோனுது,ஆனா உங்க கிட்ட இருந்து இந்த வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!! :-)
@ஸ்ரீதர்
//pleasure in the mind and joy in the heart thanks///
இந்த பதிவினால் உங்களின் மனதில் அமைதி் ஏற்பட்டதில் மிக்க மகிழ்ச்சி!! :-)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! :-)
//Just do whatever little you can do.Every bit counts!//
மிகச் சரி !! நம்மை முதலில் மாற்றுவோம் . பிறகு உலகத்தை மாற்ற முயற்சிக்கலாம் :)
//நம் கடமை/capacity என்ன என்பதை புரிந்துக்கொண்டு அதன் முக்கியத்துவத்தை அறிந்துக்கொண்டு நம் மனசாட்சிக்கு உண்மையாக நம் வேலையை நாம் செய்ய பழகிக்கொண்டாலே பூமியில் பல நல்ல மாறுதல்கள் ஏற்படும் என்றெல்லாம் கன்னா பின்னாவென்று யோசித்துக்கொண்டிருப்பேன்.//
மீ த லாஸ்ட்?கொஞ்சம் லேட்டுதாங்க!! ஆனாலும் சொல்லியே ஆக வேண்டும்....கன்னாபின்னான்னு இல்லப்பா ரொம்ப நல்லா யோசிக்கிறே!!!
அன்புடன் அருணா
//we all have a role to play.
Just because you cant do everything doesnt mean you dont have to do anything.
Just do whatever little you can do.Every bit counts!//
Very very true! and thought provoking,I believe in this philosphy if I can change one life I have done a difference to that life.
Kalakiteenga ponga
Post a Comment